Monday, July 26, 2010

பள்ளி வாசல்களுக்குச் சந்தா ??

?நாங்கள் வசிக்கும் பகுதியில் மூன்று பள்ளிவாசல்கள் உள்ளன. சுன்னத் வல் ஜமாஅத்தினரால் நடத்தப்படும் இந்தப் பள்ளி வாசல்களுக்குச் சந்தா மற்றும் இமாமுக்கு ஒரு நாள் சாப்பாட்டுச் செலவுக்கு என்று வசூல் செய்கிறார்கள். இது தர்மம், நன்மையான காரியத்தில் சேருமா? அல்லாஹ்வுடைய பள்ளி என்ற அடிப்படையில் அங்கு போய் தொழுகிறோம்; பள்ளி கட்டடத்திற்கு நிதி உதவி செய்கிறோம். இது சரியா? விளக்கவும்.


நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே! அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.
அல்குர்ஆன் 2:265

அல்லாஹ்வின் திருப்தியை நாடி நாம் எதைச் செலவிட்டாலும் நம்முடைய எண்ணத்திற்காக அல்லாஹ் கூலி வழங்குவான். எனவே பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை என்ற அடிப்படையில் அதன் கட்டுமானப் பணிகளுக்காகவோ, அல்லது நிர்வாகப் பணிகளுக் காகவோ நிதி உதவி வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை. அது போன்று இமாமுக்கு உணவு வழங்குவதும் தர்மம் என்ற அடிப்படையில் அமைந்தது தான்.

எனினும் நாம் வழங்கும் இந்த உதவிகளைக் கொண்டு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மவ்லிதுகள், கந்தூரி விழாக்கள் போன்றவற்றுக்குச் செலவிடுகிறார்கள் என்று தெரிந்தால், ''பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!'' எனும் (5:2) வசனத்தின் அடிப்படையில் அதற்கு உதவுதல் கூடாது.

--> Q/A Ehathuvam Aug 2007

No comments:

Post a Comment