Monday, July 19, 2010

மரணித்தவரின் வீட்டுக்குப் போய் விட்டு வரும் போது ??

மரணித்தவரின் வீட்டுக்குப் போய் விட்டு வரும் போது எந்த ஒரு பொருளும் (இறைச்சி மீன்) வாங்கிக் கொண்டு வரக் கூடாது என்று சொல்கிறார்கள். இது கூடுமா? கூடாதா?

! எந்தப் பொருளையும் தாராளமாக வாங்கிக் கொண்டு வரலாம். திருக்குர் ஆனிலோ, நபிவழியிலோ இதற்கு எந்தத் தடையும் கிடையாது.

முஸ்லிமல்லாத மக்களிடம் காணப்படும் மூட நம்பிக்கையின் பாதிப்பால் மார்க்கம் அறியாத முஸ்லிம்களும் இது போன்ற மூடநம்பிக்கையில் வீழ்ந்து கிடக்கிறார்கள். இந்த நம்பிக்கையை விட்டொழிக்க வேண்டியது அவசியம்.

யார் பிற கலாச்சாரங்களுக்கு ஏற்ப நடக்கிறாரோ அவர் அவர்களைச் சேர்ந்தவரே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளனர்.

(பார்க்க : அபூ தாவூத் 3512)

No comments:

Post a Comment