Sunday, July 18, 2010

மிஃராஜ் இரவு பற்றி தங்கள் கருத்து என்ன?

? மிஃராஜ் இரவு பற்றி தங்கள் கருத்து என்ன? அந்த இரவில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக தஸ்பீஹ் தொழுகை, திக்ரு முதலியன செய்வது தவறா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவின் சிறிது நேரத்திற்குள் பைத்துல் முகத்தஸ் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து வானுலகம் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கே இறைவனின் எண்ணற்ற அத்தாட்சிகளைக் கண்டார்கள். இறைவனுடன் உரையாடினார்கள். இதுவே மிஃராஜ் எனப்படும்.

 இது பற்றி திருக் குர்ஆனிலும் நபிமொழிகளிலும் கூறப் படுவதால் இதை ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும். ஆனால் இது எந்த மாதம் எந்த நாளில் நடந்தது என்பதற்கு ஏற்கத்தக்க எந்த ஆதாரமும் இல்லை. ரஜப் மாதம் இரவில் நடந்தது என்று கூறுவது ஆதாரமற்ற கற்பனையாகும்.

 எந்த நாளில் நடந்தது என்பதே நமக்குத் தெரியாது எனும் போது அந்த நாளில் சிறப்பு வணக்கங்கள் உண்டா என்ற கேள்விக்கே இடமில்லை. மேலும் அந்த நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறப்பான நோன்பு, தொழுகை போன்ற வற்றை ஏற்பாடு செய்திருந்தால் அது நமக்கு அறிவிக்கப்பட்டிருக்கும். அந்த நாள் எது என்பதும் நமக்குத் தெரிந் திருக்கும். அப்படி எந்த அறிவிப்பும் நபிகள் நாயகம் அவர்களால் செய்யப்படவில்லை.

No comments:

Post a Comment