Saturday, July 24, 2010

கர்ப்பிணிப் பெண்களும் பாலூட்டும் தாய்மாரும் ரமளானில் விடுபட்ட நோன்பை ??

? கர்ப்பிணிப் பெண்களும் பாலூட்டும் தாய்மாரும் ரமளானில் விடுபட்ட நோன்பைப் பிறகு நோற்க வேண்டும் என்று கூறி வருகின்றீர்கள். ஆனால் தாரகுத்னீயில், ''கர்ப்பிணிப் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மாருக்கும் நோன்பு நோற்பதில் இருந்து நபி (ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள்; அவர்கள் நோன்பை விட்டு விடலாம்; களாச் செய்ய வேண்டியதில்லை'' என்று ஹதீஸ் உள்ளதே! இதை ஏன் ஆதாரமாகக் கொள்ளவில்லை?



கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் பெண்களும் நோன்பை விட்டு விடலாம்; களாச் செய்ய வேண்டியதில்லை என்ற கருத்தில் தப்ரானி, பாகம்: 2, பக்கம்: 207 மற்றும் பாகம்: 4, பக்கம்: 141 ஆகிய இடங்களில் பதிவாகியுள்ளது.

ஆனால் இந்தச் செய்திகள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெறவில்லை. இப்னு அப்பாஸ் (ரலி) அல்லது இப்னு உமர் (ரலி) அவர்களின் சொந்தக் கருத்தாகத் தான் இடம் பெற்றுள்ளது.

இதே கருத்தில் இடம் பெறும் எல்லா ஹதீஸ்களின் நிலையும் இது தான்.

நபி (ஸல்) அவர்கள் கூறாமல், நபித்தோழர்கள் சுயமாகக் கூறும் கருத்துக்கள் மார்க்க ஆதாரங்களாக ஆகாது.

--> Q/A Ehathuvam Jan 07

No comments:

Post a Comment