Thursday, July 22, 2010

இந்துக்களின் கோயில்களுக்கு, பிற வணக்கத்தலங்களுக்கு ஆட்கள் சேர்த்து..??

? நாங்கள் டூர்ஸ் அன்ட் டிராவல்ஸ் நடத்தி வருகின்றோம். இந்துக்களின் கோயில்களுக்கு, பிற வணக்கத்தலங்களுக்கு ஆட்கள் சேர்த்து, அவர்களிடம் வசூலித்து, பஸ் பிடித்து அனுப்பி வைக்கலாமா?




பிற மதங்களின் வணக்கத் தலங்களுக்குச் செல்வதும், அங்கு நடைபெறும் வணக்க வழிபாடுகளும் இஸ்லாத்தின் பார்வையில் பாவ காரியம் என்பதில் சந்தேகமில்லை. அதிலும் இறைவனுக்கு இணை வைக்கும் மிகப் பெரும் பாவங்கள் இதில் அடங்கி உள்ளன.

கோயிலுக்குச் செல்வதற்காக ஆட்களைத் திரட்டி, பணம் வசூலித்து, பஸ் பிடித்து அனுப்பி வைப்பதாக இருந்தால் அதற்கு ஆட்களைத் திரட்டுவதற்காக கேன்வாஸ் செய்ய வேண்டும். மேற்படி கோயிலுக்கு அழைத்துச் செல்வதற்காக புனித யாத்திரை என்ற பெயரில் விளம்பரங்கள் செய்ய வேண்டும்.

உங்களிடம் வந்து ஒருவர் இன்ன கோயிலுக்குப் போக வேண்டும் என்று வாடகைக் கார் கேட்பதைப் போன்றதல்ல இந்தக் காரியம். நீங்களே அழைப்பு விடுத்து அந்தப் பாவத்தைச் செய்வதற்குத் தூண்டுகோலாக இருக்கின்றீர்கள். இறைவனுக்கு இணை வைத்தல் பெரும் பாவம் என்று சொல்ல வேண்டிய நீங்கள், அந்த இணை வைத்தலுக்காக அழைப்பு விடுத்து, ஆள் பிடிக்கும் நிலை இந்தப் புனித யாத்திரை சர்வீஸ் நடத்தும் போது ஏற்படுகின்றது.

அழகிய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. தீய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. அல்லாஹ் அனைத்துப் பொருட் களையும் கண்காணிப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:85)

பாவத்திற்குப் பரிந்துரை செய்தால் அதற்கான பங்கு உண்டு என்று இந்த வசனம் கூறுகின்றது. எனவே இது போன்ற பாவ காரியங்களுக்கு அழைப்பு விடுப்பதும், ஆள் திரட்டுவதும் கூடாது.

-> Q/A Ehathuvam Sep 06

No comments:

Post a Comment