Friday, November 17, 2017

குளிப்பு_கடமையானவர்_ஜனாசாவைக்_குளிப்பாட்டலாமா

#தொழுகை_ஜனாஸா

#குளிப்பு_கடமையானவர்_ஜனாசாவைக்_குளிப்பாட்டலாமா?

#பதில்_குளிப்பாட்டலாம்.

குளிப்பு கடமையானவர் என்ன செய்யக் கூடாது என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் விளக்கியுள்ளனர். அவர்கள் தொழக்கூடாது; பள்ளிவாசலில் நுழையக்கூடாது; தவாப் செய்யக் கூடாது என்று தான் கூறப்பட்டுள்ளதே தவிர ஜனாஸாவைக் குளிப்பாட்டக் கூடாது என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லவில்லை.

குளிப்பு கடமையானவர்களும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும், உளூ இல்லாதவர்களும் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் ஜனாஸாவைக் குளிப்பாட்டலாம். தொடலாம்.

எனினும், அடக்கம் செய்பவர் நேற்றிறவு இல்லறத்தில் ஈடுபடாதவர் இருந்தால், முக்கியத்துவம் தரலாம்.  ஜனாசாவை குளிக்குள் இறக்கி வைப்பதற்காக யாரும் இறங்கலாம், ஆனால் நபிகளார் அதற்கு நிபந்தனையாக அன்றைய இரவு குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாதவரை தேர்வு செய்தார்கள் என்பதை பார்க்கமுடிகின்றது,

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபிகளாரின் மகள் உம்மு குல்சூம் (றழி) அவர்களின் ஜனாசாவில் கலந்துகொண்டோம், நபியவர்கள் கப்ரின் மீது அமர்ந்திருந்தார்கள், , அவர்களது கண்களிள் கண்ணீர் வடிவதை நான் பார்த்தேன், அப்பொது நபியவர்கள்: ‘நேற்றிரவு குடும்ப வாழ்வில் ஈடுபடாத யாரும் உங்களில் இருக்கின்றார?’ என்று கேட்க, அபூ தல்ஹா (ரலி) அவர்கள் நான் இருக்கின்றேன், என்று கூற, நபியவர்கள் அவர்களை கப்ருக்குள் இறங்குமாறு ஏவ, அவர்கள் கப்ருக்குள் இறங்கினார்கள். (புஹாரி, அஹ்மத்)

No comments:

Post a Comment