Friday, December 29, 2017

வீட்டில் கிளி வளர்க்கலாமா

🐧🐧

வீட்டில் கிளி வளர்க்கலாமா?வளர்த்தால் மலக்குகள் வரமாட்டார்கள் என்று சொல்வது உண்மையா?

🌹பதில்:🌹

வீட்டில் கிளி,குருவி,பூனை.. போன்ற செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்க்கு இஸ்லாத்தில் எந்த விதத் தடையும் கிடையாது, ஆனால் அதை எந்த விதத்திலும் சிரமப்படுத்தக் கூடாது, நாங்களும் செல்லப்பிராணி வளர்த்துகின்றோம் என்ற முறையில் அதனை முறையாக பராமரிக்காமல் விட்டால் குற்றமாகும்.

செல்லப் பிராணியாக நாய் வளர்ப்பதற்க்கு மட்டும்தான் நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்., கிளி,குருவி,பூனை.. போன்ற செல்ல பிராணிகள் வளர்த்தால் மலக்குமார்கள் வரமாட்டார்கள் என்பதற்க்கு எந்த வித ஆதாரமும் கிடையாது(நாயைத் தவிர).,

🍁ஆதாரங்கள்:🍁

🍁6129. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் எங்களுடன் (இனிமையாகப்) பழகுவார்கள். எந்த அளவிற்கென்றால், சிறுவனாக இருந்த என் தம்பியிடம் 'அபூ உமைரே! பகுதி உன்னுடைய சின்னக் குருவி (புள்புள்) என்ன ஆயிற்று?' என்று கூடக் கேட்பார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்

🍁 நபிமொழி அறிவோம் – 3227. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.  ஜிப்ரீல், நபி(ஸல்) அவர்களிடம் (அவர்களின் வீட்டிற்கு தாம் வருகை தருவதாக) வாக்களித்திருந்தார். (ஆனால், வரவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அது பற்றிக் கேட்ட போது) “உருவப் படமுள்ள வீட்டிலும் நாய் உள்ள வீட்டிலும் (வானவர்களாகிய) நாங்கள் நுழைவதில்லை” என்றார்.
ஸஹீஹ் புகாரி
அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்

🍁 நபிமொழி அறிவோம் – 2365. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  (முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது அல்லாஹ்வே மிக அறிந்தவன் – “நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை” என்று அல்லாஹ் கூறினான்.  என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி

🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵

🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵

No comments:

Post a Comment