Wednesday, February 21, 2018

இஹ்ராம்_அணிந்த_பின்_தொழ_வேண்டுமா

#ஹஜ்_உம்ரா

#இஹ்ராம்_அணிந்த_பின்_தொழ_வேண்டுமா?

#இல்லை

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது எந்தத் தொழுகையும் தொழவில்லை. ஆனால் அவர்களின் கடமையான தொழுகை இஹ்ராமுக்குப் பின்னால் அமைந்தது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (“விடைபெறும்’ ஹஜ்ஜுக்காகச் சென்றபோது) “துல்ஹுலைஃபா’வில் லுஹ்ர் தொழுகை தொழுதுவிட்டுத் தமது பலி ஒட்டகத்தைக் கொண்டுவரச் சொல்லி, அதன் வலப் பக்கத் திமில் பகுதியில் கீறி அடையாளமிட்டார்கள்; இரத்தத்தை அதிலிருந்து துடைத்தார்கள்; இரு செருப்புகளை (அதன் கழுத்தில் அடையாளத்திற்காக) தொங்கவிட்டார்கள். பின்னர் தமது வாகன ஒட்டகத்தில் ஏறி அமர்ந்து, “பைதாஉ’ எனும் குன்றில் அது நேராக நின்றதும் ஹஜ்ஜுக்காகத் தல்பியாச் சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம் 2184

இதுபோன்று தொழுகை நேரங்களுக்குப் பிறகு நம்முடைய இஹ்ராம் யதார்த்தமாக அமைந்து கொண்டால் அவ்வாறு தொழுது கொள்ளலாம். ஆனால் அதே சமயம் இப்படி தொழுகை நேரத்திற்குப் பின்னர் தான் அமைக்க வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment