Wednesday, July 3, 2019

நன்மைகளை - 39

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*✍🏼...நன்மைகளை வாரி*
                          ⤵
         *வழங்கும் தொழுகை*

         *✍🏼...தொடர் [ 39 ]*

*☄ஜமாஅத்தாகத்*
          *தொழுவதன்*
                      *சிறப்புகள் { 09 }*

*☄முதல் வரிசையின்*
            *சிறப்புகளும்,*
                     *நன்மைகளும் [ 01 ]*

*☄முதல் வரிசையில்*
             *இடம் பிடிக்கப் போட்டி☄*

_🏮🍂முதல் வரிசையில் நின்று தொழுபவர்களுக்கு அல்லாஹ் மாபெரும் பாக்கியங்களை வாரிவழங்குகிறான்.  அல்லாஹ் இதற்காக வாரி வழங்கும் நன்மைகள் நம்முடைய கண்களுக்குத் தெரிவதில்லை. அப்படி அல்லாஹ் நமக்கு அதனை அறிய வைத்தான் என்றால் அந்த நன்மைகளை அடைவதற்காகப் போட்டி ஏற்பட்டு, சீட்டு குலுக்கி முன்வரிசையில் நிற்பதற்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படிப்பட்ட மாபெரும் பாக்கியத்தை அல்லாஹ் முன்வரிசையில் நின்று தொழுபவர்களுக்கு வாரிவழங்குகிறான்._

حَدَّثَنَا  يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ سُمَىٍّ،  مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، *_عَنْ أَبِي  هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ لَوْ يَعْلَمُ النَّاسُ مَا  فِي النِّدَاءِ وَالصَّفِّ الأَوَّلِ ثُمَّ لَمْ يَجِدُوا إِلاَّ أَنْ  يَسْتَهِمُوا عَلَيْهِ لاَسْتَهَمُوا وَلَوْ يَعْلَمُونَ مَا فِي  التَّهْجِيرِ لاَسْتَبَقُوا إِلَيْهِ وَلَوْ يَعْلَمُونَ مَا فِي  الْعَتَمَةِ وَالصُّبْحِ لأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا ‏"_*

_*🍃அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  பாங்கு சொல்வதிலும், (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்து கொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
               *அபூஹுரைரா (ரலி)*

*📕நூல்: புகாரி (615),*
                 *முஸ்லிம் (746)📕*

_*🏮🍂இத்தகைய மாபெரும் நன்மைகளை அடையும் விஷயத்தில் இன்றைக்கு நாம் எவ்வளவு பொடும்போக்காக இருக்கின்றோம் என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.* *இன்றைக்குப் பல பள்ளிகளில் தொழுகை ஆரம்பிக்கும் போது இரண்டு மூன்று நபர்களைத் தவிர வேறு யாரும் இருப்பதில்லை. பலர் தாமதமாகத் தான் தொழுகையில் வந்து இணைகின்றனர்.* நம்முடைய கவனமின்மையினால் நாம் எத்தகைய பாக்கியத்தை இழக்கின்றோம் என்பதைக் கவனத்தில் கொண்டு இது போன்ற நன்மைகளை அடைவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்._

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄அல்லாஹ் மற்றும்*
      *மலக்குமார்களின் ஸலவாத்☄*

_🏮🍂முன்வரிசைகளில் நின்று தொழுபவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிகின்றான். இன்னும் மலக்குமார்களும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டுகிறார்கள்._

_*🍃பரா பின் ஆசிப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபியவர்கள் வரிசையின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதி வரை சென்று (தொழுகைக்காக அணிவகுத்து நிற்பவர்களின்) நெஞ்சுகளையும், தோள் புஜங்களையும் (நேராக இருக்குமாறு) சரி செய்வார்கள். மேலும் "(முன்பின்னாக) வேறுபட்டு நிற்காதீர்கள்; அப்படி (வேறுபட்டு) நின்றால், உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுவிடும்'' என்று கூறுவார்கள். மேலும் "அல்லாஹ்வும், மலக்குமார்களும் முன்வரிசைகளில் உள்ளவர்கள் மீது ஸலாவாத்துக் கூறுகின்றனர்'' என்றும் கூறுபவர்களாக இருந்தனர்.*_

*📚நூல்: அஹ்மத் (18539)📚*

_🏮🍂அல்லாஹ் ஸலவாத்து கூறுகிறான் என்றால் முன்வரிசைகளில் நின்று தொழுபவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிகின்றான் என்பதாகும். மலக்குமார்கள் ஸலவாத்து கூறுகிறார்கள் என்றால் முன்வரிசைகளில் நின்று தொழுபவர்களுக்கு அல்லாஹ்விடம் அருள்புரியுமாறு பிரார்த்தனை செய்கின்றனர் என்பதாகும்._

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment