Wednesday, July 3, 2019

நன்மைகளை - 42

_*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*_

_*✍🏼...நன்மைகளை வாரி*_
                          ⤵
         _*வழங்கும் தொழுகை*_

         _*✍🏼...தொடர் [ 42 ]*_

*☄ஜமாஅத்தாகத்*
          *தொழுவதன்*
                      *சிறப்புகள் { 12 }*

*☄முதல் வரிசையின்*
            *சிறப்புகளும்,*
                     *நன்மைகளும் [ 04 ]*

*☄வரிசையின் வலது புறம்*
            *நிற்பது சிறந்ததா❓☄*

*🏮🍂தொழுகை வரிசையின் வலது புறத்தைச் சிறப்பித்து வரக்கூடிய அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவையாகவே உள்ளன.*

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வும், மலக்குமார்களும் (தொழுகை) வரிசைகளில் வலதுபுறத்தார்கள் மீது ஸலவாத்துக் கூறுகின்றனர்*_

*🎙அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)*

*📚நூல்: அபூதாவூத் (578)📚*

*🏮🍂இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் "உஸாமா பின் ஸைத்' என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் ஆவார்.*

*☄''இவர் ஒரு பொருட்டாக மதிக்கத் தக்கவர் அல்ல'' என இமாம் அஹ்மத் விமர்சித்துள்ளார்கள்.*

*☄யஹ்யா பின் ஸயீத் அவர்கள் இவரைப் பலவீனமாக்கியுள்ளார்கள்.*

*☄''இவருடைய ஹதீஸ்கள் எழுதிக் கொள்ளப்படும். இவரை ஆதாரமாகக் கொள்ளப்படாது'' என இமாம் அபூ ஹாதிம் விமர்சித்துள்ளார்கள்*

*☄''இவர் உறுதியானவராக இல்லை'' என இமாம் நஸாயீ கூறுகிறார்.*

*☄''இமாம் முஸ்லிம் இவரை ஆதாரமாகக் கொள்ளவில்லை. இவருடைய ஹதீஸ்களை துணைச் சான்றாகவே பதிவு செய்துள்ளார்கள்'' என இப்துல் கத்தான் அல்ஃபாஸி கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 1 பக்கம் 183)*

*☄மேலும் மேற்கண்ட அறிவிப்பாளர் தொடரில் ''முஆவியா இப்னு ஹிஸாம்'' என்றொரு அறிவிப்பாளரும் இடம்பெறுகிறார். இவரையும் இமாம்கள் குறைகூறியுள்ளனர். எனவே இவரும் பலவீனமானவர் ஆவார்.*

*🏮🍂வரிசைகளில் வலது புறத்தைச் சிறப்பித்து வரக்கூடிய அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவையாக இருப்பதால் வலது புறத்தில் நிற்பதும், இடது புறத்தில் நிற்பதும் சமமே.*

*ஆனால் இமாமுடன் தொழுபவர் ஒருவராக மட்டும் இருந்தால் அவர் இமாமின் வலது புறத்தில் தான் நிற்க வேண்டும்.*

_*🍃இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் ஓர் இரவில் தங்கினேன். (அன்றிரவு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில்) இஷாத் தொழுகை தொழுதுவிட்டு (வீட்டிற்கு) வந்து நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து (இரவுத் தொழுகைக்காக) நின்றார்கள். நான் சென்று (அவர்களுடன்) அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்று கொண்டேன். அவர்கள் (தொழுது கொண்டிருந்த) என்னை (இழுத்து) தமது வலப் பக்கத்தில் நிறுத்திவிட்டு ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். ....*_

*📚நூல்: புகாரி (697)📚*

_*🍃அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கும் என் தாயாருக்கும், அல்லது என் சிறிய தாயாருக்கும் (தலைமை தாங்கித்) தொழுகை நடத்தினார்கள். அப்போது என்னைத் தமக்கு வலப் பக்கத்திலும் பெண்ணை எங்களுக்குப் பின்னாலும் நிறுத்தினார்கள்.*_

*📚நூல்: முஸ்லிம் (1171)📚*

*🏮🍂இமாமுடன் ஒருவர் மட்டும் நின்று தொழும் போது தான் அவர் இமாமிற்கு வலது புறம் நிற்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வந்துவிட்டால் இமாம் முன்னால் சென்று விடுவார். பின்னர் வலதும், இடதும் சமமாகத் தான் இருக்க வேண்டும். இதுவும் வரிசையை சீராக ஆக்குவதில் உள்ளதாகும். பின்வரும் ஹதீஸில் ஒரு ஸஹாபி மட்டும் நபி (ஸல்) அவர்களுடன் தொழும் போது வலது புறம் நின்றார்கள். பின்னர் அதிகமான மக்கள் வந்ததும் அவர்கள் நபிகள் நாயகத்திற்கு பின்னால் வந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.*

_*🍃அனஸ் ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தொழுவார்கள். (ஒரு நாள்) நான் சென்று அவர்களுக்கு விலாப் பக்கத்தில் நின்று கொண்டேன். இன்னொரு மனிதர் வந்து அவரும் நின்றுகொண்டார். இறுதியில் நாங்கள் ஒரு கூட்டமாகவே ஆகிவிட்டோம். தமக்குப் பின்னால் நாங்கள் நிற்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்ததும் தொழுகையைச் சுருக்கலானார்கள்.*_

*📚நூல்: முஸ்லிம் (2014)📚*

*🏮🍂வலது புறத்தில் நிற்பதை மிகவும் சிறப்பாக மக்கள் விளங்கி இருப்பதன் காரணத்தினால் சில பள்ளிகளில் இடது புறத்தை அப்படியே விட்டுவிட்டு வலது புறத்தில் மட்டும் நிற்கின்றனர். இது வரிசைகளுக்குரிய ஒழுங்கு முறை கிடையாது. எனவே வரிசை சீராக அமையும் பொருட்டு வலது புறத்தையும், இடது புறத்தையும் சமமாக நிரப்புவதே சிறந்ததாகும்.*

*🏮🍂நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தி முடித்ததும் வலது புறம் உள்ளவர்களை நோக்கித் திரும்புவார்கள். இதன் காரணத்தினால் நபி (ஸல்) அவர்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக ஸஹாபாக்கள் வலது புறம் நிற்பதை விரும்பியுள்ளார்கள்.*

_*🍃பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழும்போது அவர்களுக்கு வலப் பக்கம் இருப்பதையே விரும்புவோம். அவர்கள் (தொழுது முடித்ததும்) எங்களை நோக்கித் திரும்புவார்கள். அப்போது, "ரப்பீ கினீ அதாபக யவ்ம தப்அஸு (அல்லது "தஜ்மஉ') இபாதக்க' (இறைவா! உன் அடியார்களை "உயிர் கொடுத்து எழுப்பும்' (அல்லது ஒன்றுதிரட்டும்) நாளில் உன் வேதனையிலிருந்து என்னைக் காப்பாயாக!) என்று அவர்கள் பிரார்த்திப்பதை நான் கேட்டுள்ளேன்.*_

*📚நூல்: முஸ்லிம் (1280)📚*

*🏮🍂மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகத்தின் மீதுள்ள பாசத்தினாலும், அவர்கள் செய்கின்ற துஆவிற்காகவும் ஸஹாபாக்கள் வலது புறம் நிற்பதை விரும்பியுள்ளார்கள்.* இன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிரோடு இல்லாத காரணத்தினாலும், வலது புறம் நிற்பது தொழுகையின் அம்சமாகச் கூறப்படாத காரணத்தினாலும் *மேற்கண்ட செய்தியின் அடிப்படையில் வலது புறம் நிற்பது சிறப்பானது என்ற கருதமுடியாது.*

*எனவே வலது புறமும், இடது புறமும் சீராக தொழுகை வரிசையை அமைத்துக் கொள்வதே சரியான செயல்முறையாகும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                            ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment