Wednesday, July 10, 2019

நன்மைகளை - 47

_*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*_

_*✍🏼...நன்மைகளை வாரி*_
                          ⤵
         _*வழங்கும் தொழுகை*_

         _*✍🏼...தொடர் [ 47 ]*_

*🍃தொழுயைின்*
           *ஆரம்ப துஆக்கள் [ 03 ]🍃*

*🍃இரவுத் தொழுகையில்*
               *ஓதும் ஆரம்ப துஆ🍃*

_*🍃நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் பின்வருமாறு பிரார்த்திப்பார்கள்:*_

_*அல்லாஹும்ம! லக்கல் ஹம்து. அன்த்த கய்யிமுஸ் ஸமாவாத்தி, வல்அர்ளி, வமன் ஃபீஹின்ன. வலக்கல் ஹம்து. லக்க முல்க்குஸ் ஸமாவாத்தி, வல்அர்ளி, வமன் ஃபீஹின்ன. வலக்கல் ஹம்து. அன்த்த நூருஸ் ஸமாவாத்தி வல்அர்ள். வலக்கல் ஹம்து. அன்த்த முல்க்குஸ் ஸமாவாத்தி வல்அர்ள். வலக்கல் ஹம்து. அன்த்தல் ஹக்கு. வ வஅதுக்கல் ஹக்கு. வ லிஆஉக்க ஹக்குன். வ கவ்லுக்க ஹக்குன். வல்ஜன்னத்து ஹக்குன். வந்நாரு ஹக்குன். வந் நபிய்யூன ஹக்குன். வ முஹம்மதுன் ஹக்குன். வஸ்ஸலாத்து ஹக்குன். அல்லாஹும்ம! லக்க அஸ்லம்த்து, வ பிக்க ஆமன்த்து, வ அலைக்க தவக்கல்த்து, வ இலைக்க அனப்து, வ பிக்க காஸம்த்து, வ இலைக்க ஹாகம்த்து. ஃபக்பிர்லீ மா கத்தம்த்து, வ மா அக்கர்த்து, வ மா அஸ்ரர்த்து, வமா அஃலன்த்து. அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு. லா இலாஹ இல்லா அன்த்த வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்*_

*🎙அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)*

*📚நூல்: புகாரி (1120)📚*

_*📚பொருள்: இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி அவற்றில் உள்ளவை அனைத்தையும் நிர்வகிப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி அவற்றில் உள்ளவை அனைத்துக்கும் உரிமையாளன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒளி நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமிக்கு அரசன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். நீ உண்மை. உன் வாக்குறுதி உண்மை. உனது தரிசனம் உண்மை. உனது கூற்று உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் உண்மை. முஹம்மத் உண்மை. மறுமை உண்மை. இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன் மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன்னிடமே வழக்காடுவேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னிப்பாயாக! நீயே முற்படுத்துபவன். பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகவோ நன்மை புரியும் ஆற்றலோ இல்லை.*_

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*🍃இரவுத் தொழுகையின் மற்றொரு ஆரம்ப துஆ🍃*

*நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையைத் துவக்கியதும்  பின்வரும் துஆவை ஓதுவார்கள்.*

_*🍃"அல்லாஹும்ம ரப்ப ஜிப்ராயீல வ மீக்காயீல வ இஸ்ராஃபீல, ஃபாத்திரஸ் ஸமாவாத்தி வல்அர்ளி, ஆலிமல் ஃகைபி வஷ்ஷஹாதத்தி, அன்த தஹ்குமு பய்ன இபாதிக ஃபீமா கானூ ஃபீஹி யக்தலிஃபூன். இஹ்தினீ லிமக்துலிஃப ஃபீஹி மினல் ஹக்கி பி இத்னிக, இன்னக தஹ்தீ மன் தஷாஉ இலா ஸிராதிம் முஸ்தகீம்''*_

*🎙அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)*

*📚நூல்: முஸ்லிம் (1418)📚*

_*🍃பொருள்: இறைவா! (வானவர்களாகிய) ஜிப்ராயீல், மீக்காயீல், இஸ்ராஃபீல் ஆகியோரின் அதிபதியே! வானங்கள் மற்றும் பூமியை முன்மாதிரியின்றிப் படைத்தவனே! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவனே! நீ உன் அடியார்களிடையே அவர்கள் கொண்டிருந்த கருத்துவேறுபாடுகள் குறித்து (மறுமையில்) தீர்ப்பு வழங்குவாய். (இறைவா) கருத்து வேறுபாடுடைய விசயங்களில் சத்தியத்தின் பக்கம் உன் நாட்டப்படி எனக்கு வழிகாட்டுவாயாக! நீ நாடியவர்களை நேரான வழியில் நீயே செலுத்துகிறாய்!*_வ

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                            ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment