Friday, July 12, 2019

நன்மைகளை - 50

_*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*_

_*✍🏼...நன்மைகளை வாரி*_
                          ⤵
         _*வழங்கும் தொழுகை*_

         _*✍🏼...தொடர் [ 50 ]*_

*☄சூரத்துல் ஃபாத்திஹா*
           *ஓதுவதன் சிறப்புகள் [ 03 ]*

*🍃தொழுகை என்பதே*
            *அல்ஹம்து*
                  *அத்தியாயம் தான்*

*🏮🍂ஹஜ் என்பது பல்வேறு காரியங்களை உள்ளடக்கியக்கியதாகும். அவற்றில் ஒன்று தான் அரஃபாவில் தங்குதலாகும். என்றாலும் நபியவர்கள் அரஃபாவில் தங்குவதின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக "ஹஜ் என்பதே அரஃபா தான்'' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.*

*அது போன்று தான் தொழுகையில் பல்வேறு நிலைகளும், துஆக்களும் உள்ளன. என்றாலும் அல்லாஹுத்தஆலா அல்ஹம்து சூராவை ஓதுவதை மட்டும் தொழுகை என்று குறிப்பிடுகிறான்.*

*☄அல்ஹம்து சூராவை அல்லாஹ் இரு பகுதிகளாக்கியுள்ளான். அதன் முதல் பகுதி அல்லாஹ்வைப் புகழ்ந்து பெருமைப்படுத்துவதாகும்.*

*☄இரண்டாவது பகுதி நம்முடைய தேவைகளை அல்லாஹ்விடம் கேட்பதாகும்.*

*☄அல்ஹம்து அத்தியாயத்தை இரு பகுதிகளாகப் பிரித்திருப்பதை அல்லாஹ் தொழுகையையே இருபகுதிகளாகப் பிரித்திருப்பதாக் கூறிக்காட்டுகிறான்.*

*☄தொழுகையில் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதுவது எவ்வளவு பாக்கியம் நிறைந்தது என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.*

பின்வரும் நபிமொழி இதற்குச் சான்றாகத் திகழ்கிறது.

وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ  إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ  الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، _*عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى  الله عليه وسلم قَالَ ‏"‏ مَنْ صَلَّى صَلاَةً لَمْ يَقْرَأْ فِيهَا  بِأُمِّ الْقُرْآنِ فَهْىَ خِدَاجٌ - ثَلاَثًا - غَيْرُ تَمَامٍ ‏"‏ ‏.‏  فَقِيلَ لأَبِي هُرَيْرَةَ إِنَّا نَكُونُ وَرَاءَ الإِمَامِ ‏.‏ فَقَالَ  اقْرَأْ بِهَا فِي نَفْسِكَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله  عليه وسلم يَقُولُ ‏"‏ قَالَ اللَّهُ تَعَالَى قَسَمْتُ الصَّلاَةَ بَيْنِي  وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ وَلِعَبْدِي مَا سَأَلَ فَإِذَا قَالَ  الْعَبْدُ ‏{‏ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ‏}‏ ‏.‏ قَالَ اللَّهُ تَعَالَى حَمِدَنِي عَبْدِي وَإِذَا قَالَ ‏{‏ الرَّحْمَنِ الرَّحِيمِ‏}‏ ‏.‏ قَالَ اللَّهُ تَعَالَى أَثْنَى عَلَىَّ عَبْدِي ‏.‏ وَإِذَا قَالَ ‏{‏ مَالِكِ يَوْمِ الدِّينِ‏}‏ ‏.‏ قَالَ مَجَّدَنِي عَبْدِي - وَقَالَ مَرَّةً فَوَّضَ إِلَىَّ عَبْدِي - فَإِذَا قَالَ ‏{‏ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ‏}‏ ‏.‏ قَالَ هَذَا بَيْنِي وَبَيْنَ عَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ ‏.‏ فَإِذَا قَالَ ‏{‏  اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ * صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ  عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ‏}‏  ‏.‏ قَالَ هَذَا لِعَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ ‏"‏ ‏.‏ قَالَ  سُفْيَانُ حَدَّثَنِي بِهِ الْعَلاَءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ  يَعْقُوبَ دَخَلْتُ عَلَيْهِ وَهُوَ مَرِيضٌ فِي بَيْتِهِ فَسَأَلْتُهُ  أَنَا عَنْهُ ‏.‏*_

_*அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*_

_*🍃தொழுகையை எனக்கும் என் அடியானுக்குமிடையே இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும்.  அடியான் "அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்' (அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ்,  "என் அடியான் என்னைப் புகழ்ந்துவிட்டான்' என்று கூறுவான்.  அடியான் "அர்ரஹ்மானிர் ரஹீம்'  (அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், "என் அடியான் என்னைத் துதித்துவிட்டான்' என்று கூறுவான்.  அடியான் "மாலிக்கி யவ்மித்தீன்' (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், "என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்தி விட்டான்' என்று கூறுவான். (நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் "என் அடியான் தன் காரியங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டான்' என்றும்  கூறியுள்ளார்கள்.) மேலும், அடியான் "இய்யாக்க நஅபுது வ இய்யாக்க நஸ்தஈன்' (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று சொன்னால்,  அல்லாஹ், "இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்' என்று கூறுவான்.  அடியான் "இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன்' (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்கள் வழியுமல்ல; வழிதவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் "இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்'  என்று கூறுவான்.*_

*🎙அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)*

*📚நூல்: முஸ்லிம் 655📚*

*🏮🍂தொழுகையில் ஓதும் அல்ஹம்து அத்தியாயத்திற்குத் தான் இத்தகைய பாக்கியங்களை அல்லாஹ் வாரி வழங்குகிறான்.*

*🏮🍂தொழுகையாளிகளுக்கு அவர்களின் தொழுகை எப்பெரும் பாக்கியங்களை வாரி வழங்குகிறது என்பதற்கு இது மிகச் சிறந்த சான்றாகும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment