Monday, August 25, 2025

ஒரு ஆதாரம் போதுமானது. - மீலாது


இமாம்  ஷாஃபி (ரஹீமஹுல்லாஹ்) அவர்களின் பிரபல்யமான கூற்றை இங்கு பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் 

"சத்தியத்தை  தேடும் ஒருவனுக்கு ஒரு ஆதாரம் போதுமானது. ஆனால் மனோ இச்சையை  பின்பற்றுகிறவனுக்கு ஆயிரம் ஆதாரங்களும் போதுமாகாது. அறியாதவனை கற்பிக்கலாம், ஆனால் மனோ இச்சையை பின்பற்றுபவனை   எங்களால்  வழிநடத்த முடியாது."

விளக்கம் 
உண்மையை மனப்பூர்வமாகத் தேடும் ஒருவருக்கு அவரை வழிநடத்த.ஒரு நேர்மையான ஆதாரம் போதுமானது 
ஆனால் மனோ இச்சையை  பின்பற்றுகிறவனுக்கு, அவர் உண்மையைஅறிய முற்படாததால் , ஆயிரம் ஆதாரங்களை  முன் வைத்தாலும் பயனில்லை.
அறியாதவனை கற்பிக்கலாம், ஏனெனில் அவனுக்கு அறிவில்லை.
ஆனால் மனோ இச்சைக்கு அடிமையானவனை   கற்பிக்க முடியாது, ஏனெனில் அவன் உண்மையை அறிந்தும் திட்டமிட்டே அதை விட்டு விலகுகிறான்.

சத்தியத்தை சத்தியமாக அறிந்து அதை பின்பற்றுவதற்கும் அசத்தியத்தை அசத்தியமாக அறிந்து அதை விட்டு விலகுவதற்கும் நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

s.யாஸிர் ஃபிர்தௌஸி 
ஜம்இய்யத்து தஃவா, அல் - ஜுபைல்

No comments:

Post a Comment