Thursday, September 25, 2025

நமது_பிரார்த்தனை_ஏற்கப்பட_வேண்டுமா

#நமது_பிரார்த்தனை_ஏற்கப்பட_வேண்டுமா?

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُلُوا۟ مِن طَيِّبَـٰتِ مَا رَزَقْنَـٰكُمْ وَٱشْكُرُوا۟ لِلَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ⭘ 

இறைநம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு அளித்திருப்பவற்றில் தூய்மையானவற்றை உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குபவர்களாக இருந்தால் அவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

அல் குர்ஆன் -   2 : 172

நமது பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு, மார்க்கம் அனுமதித்த வழியில் சம்பாதிப்பதும், மார்க்கம் அனுமதித்தவற்றை மட்டும் உண்பதும் முக்கியமான அடிப்படை என்பதைப் பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்கு இட்ட ஆணைகளையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் இட்டுள்ளான்” என்று கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை) ஓதிக் காட்டினார்கள்: “தூதர்களே! நல்லவற்றை உண்ணுங்கள்! நற்செயல் செய்யுங்கள்! நீங்கள் செய்வதை நான் நன்கறிபவன்” (23:51), “இறைநம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு அளித்திருப்பவற்றில் தூய்மையானவற்றை உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குபவர்களாக இருந்தால் அவனுக்கு நன்றி செலுத்துங்கள்” (2:172)
பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். “அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற் கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி “என் இறைவா, என் இறைவா’ என்று பிரார்த்திக்கிறார். ஆனால், அவர் உண்ணும் உணவு தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; தடை செய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: முஸ்லிம் (1844), திர்மிதீ (2446)

No comments:

Post a Comment