Monday, September 15, 2025

நபி ﷺ தமது தாய்தந்தையை அல்லாஹ்விடம் வேண்டி ???????


#வரும்_ஆனா_வராது😃
*************************
எப்போதும் ஸுபிகள் தங்களது  கொள்கைக்கு பலயீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையுமே முன்வைப்பதும் அதனை நாம் மக்கள் மயப்படுத்தி மக்களும் வயிறு குலுங்கச் சிரித்து காமெடி பண்ணியவுடன் தங்களது கொள்கை நாளுக்கு நாள் பலவீனப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் வேறு வழியின்றி அந்த செய்திகளை ஸஹீஹாக்க படாத பாடு படுவதையும் தொடராக பார்த்து வருகின்றோம்.

உஸ்மானியின் இந்த கட்டிங் மக்களிடம் பாரிய கேள்விகளை எழுப்பி மக்களும் இவர்களை தோழுரிக்க வேறு வழியின்றி ஹதீஸ்கலை அடிப்படை கூடத் தெரியாத பாதுபி ஒருவர் எழுதிக்கொடுத்த உப்புச்சப்பில்லாத பதிவை கொண்டுவந்து இதிலையும் தான் மாட்டப்போவது தெரியாமல் தம்பி மனாஸ் சமாலிபிகேசன் ஒன்டுக்கு ட்ரை பண்ணிருக்கார் பாவம்😄 

முதலில் இந்த செய்தி இடம்பெற்றுள்ள கிதாபுகள் அதிகம் பலயீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் உள்ளடங்கியுள்ள அறிஞர்கள் பெருமளவு ஏற்றுக்கொள்ளாத கிதாபுகளாகும். அதனால்தான் இந்த செய்தி பிரபல்யமான எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் கிடையாது.

➡️ “நபி ﷺ தமது தாய்தந்தையை அல்லாஹ்விடம் வேண்டி உயிரோடு எழுப்பி, அவர்கள் ஈமான் கொண்டு, பிறகு மீண்டும் மரணித்தார்கள்” என்ற செய்தி ஹதீஸ் அறிஞர்களின் ஒருமித்த கருத்துப்படி பொய்யானது (موضوع / இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்).

📌 அறிஞர்களின் கருத்துக்கள்

01- இப்னு அல்-ஜவ்ஸி رحمه الله அவர்கள் தனது அல்-மவ்லூஆத் என்ற கிரந்தத்ததில் (3/224) 
இந்த ஹதீஸ் மவ்லூஃ (இட்டுக்கட்டப்பட்டது) எனத் தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளார்.

காரணம்: காஃபிராக இறந்தவருக்கு, உயிர்த்தெழுந்த பிறகு ஈமான் பயனளிக்காது.
குர்ஆன் சான்று:
﴿وَمَن يَكْفُرْ بِهِ مِنَ ٱلۡأَحۡزَابِ فَٱلنَّارُ مَوۡعِدُهُ﴾ (ஹூத்: 17)
﴿وَلَا ٱلَّذِينَ يَمُوتُونَ وَهُمۡ كُفَّارٞ﴾ (நிசா: 18)

02- இப்னு கத்தீர் رحمه الله அவர்கள் தனது அல்பிதாயா வன்நிஹாயா என்ற நூலில் (2/261)
இதை முன்கர் ஜித்தன் (மிகவும் பலவீனமானதும் ஏற்க முடியாததும்) எனக் கூறியுள்ளார்.

“இது அல்லாஹ்வின் சக்தியில் சாத்தியமானது என்றாலும், ஸஹீஹ் ஹதீஸ் இதை மறுக்கிறது” என்றார்.
(அல்-பிதாயா வன்-நிஹாயா 2/261)

03- முல்லா அலி அல்-காரி رحمه الله 
இதை “மவ்லூஃ” (இட்டக்கட்டப்பட்டது) என்று தீர்ப்பளித்துள்ளார்.

“இந்த விஷயத்தில் நான் தனியாக ஒரு ரிஸாலா (புத்தகம்) எழுதியுள்ளேன்” என்றும் கூறியுள்ளார்.
(அல்அஸ்ரார் அல்-மர்ஃபூஆ, பக்கம் 83)

04- இப்னு தைமிய்யா رحمه الله
“இது குறித்து எந்த ஹதீஸ் அறிஞரிடமும் நம்பகமான சான்றில்லை. அறிஞர்கள் எல்லோரும் இது பொய்யானது என்று ஒத்துக் கொண்டுள்ளனர்.”
“இது ஸஹீஹ் புத்தகங்களிலும், சுனன், மசானித், மாகாசி, தஃப்ஸீர் போன்ற நம்பத்தகுந்த நூல்களிலும் எங்கும் இல்லை.”
(மஜ்மூஃ அல்-பதாவா 4/325)

05- இமாம் சுயூதி 
அவர் இதை الحاوي للفتاوي (2/440) அல்ஹாவி லில் பதாவாவில், “فيه مجاهيل” (இந்த செய்தியின் இஸ்னாதில் அறியப்படாதவர்கள் மஜ்ஹுல்கள் உள்ளனர்) என்று கூறியுள்ளார்.

6.இப்னு திஹ்யா 
அவர் இதை மவ்ழூஃ என்று  தீர்ப்பளித்துள்ளார், அதை முல்லா அலி அல்-காரி உறுதிப்படுத்தியுமுள்ளார்.
📖 التنوير في مولد البشير النذير (ص 250)

7.இமாம் ஷௌகானி இந்த ஹதீஸை “لا يصح” (சரியானது அல்ல) என்றும், “موضوع” இட்டுக்கட்டப்பட்டது  என்றும் கூறியுள்ளார்.
📖 الفوائد المجموعة في الأحاديث الموضوعة (ص 395)

8.இமாம் அல்பானி  (இயற்கால ஹதீஸ்கலை அறிஞர்)
அவர் இதை மவ்ழூஃ இட்டுக்கட்டப்பட்டது எனத் தீர்ப்பளித்துள்ளார்.
📖 سلسلة الأحاديث الضعيفة والموضوعة (رقم 13)

இதுபோல் இன்னும் பல அறிஞர்கள் இதனை மறுத்து இட்டுக்கட்டப்பட்டது என தீர்பளித்துள்ளனர்.

மேலும்நபி ﷺ அவர்களிடமிருந்து வந்த ஸஹீஹ்ஹான  ஹதீஸை மறுப்பதாக இந்த இட்டுக்கட்டப்பட்ட செய்தி அமைந்துள்ளது.

(மறுக்கும் சான்று):
01- நபி ﷺ சொன்னார்கள்:
“நான் என் தாய்க்கு மன்னிப்பு கேட்க அல்லாஹ்விடம் அனுமதி கேட்டேன், ஆனால் அவன் அனுமதி அளிக்கவில்லை.”
(ஸஹீஹ் முஸ்லிம், ஹதீஸ் 976)

02- தனது தந்தையைப் பற்றி கேட்ட ஸஹாபியிடம் உன் தந்தையும் என் தந்தையும் நரகத்திலே என்றார்கள்.

இவ்வளவு தரவுகளையும் விட்டுவிட்டு ஹதீஸ் கலை அடிப்படை அறிவு கூட இல்லாமல் ஸஹீகாக்க முயன்றுள்ளார் நிஸ்வர்.

ஆனால் கடைசி பந்தியில் இந்த ஹதீஸில் சிக்கல் உண்டு, விமர்சனங்கள் இல்லாமலில்லை இது பலயீனம்தான் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.😃

இதுதான் உங்களது கொள்கையின் பலயீனம்😄🤦‍♂️

No comments:

Post a Comment