Friday, November 17, 2017

துஆவில்_கைகளை_உயர்த்தலாமா

#தொழுகை

#துஆவில்_கைகளை_உயர்த்தலாமா?

தொழுகைக்குப் பின் கையை உயர்த்தி பிரார்த்தனை செய்வதற்கு ஆதாரம் இல்லை என்று சிலர் (சலஃபிகள்) சொல்கிறார்கள். இது சரியா?

#ஷபீக்

#பதில் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின் கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்ததாக நேரடியாக எந்த ஆதரமும் இல்லை. இதனால் தான் இவ்வாறு செய்வது கூடாது என்று சிலர் கூறுகின்றனர்.

ஆனால் இப்பிரச்சனை தொடர்பாக மார்க்க ஆதாரங்களை ஒன்று திரட்டி ஆய்வு செய்யும் போது தொழுகைக்குப் பின் கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது என்பதை அறியமுடிகிறது.

தொழுகைக்குப் பின் பிரார்த்தனை செய்ய மார்க்கத்தில் அனுமதியுள்ளதா என்பதை முதலில் காண்போம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின் பிரார்த்தனை செய்ததாக பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.

1159و حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ أَخْبَرَنَا ابْنُ أَبِي زَائِدَةَ عَنْ مِسْعَرٍ عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ عَنْ ابْنِ الْبَرَاءِ عَنْ الْبَرَاءِ قَالَ كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْبَبْنَا أَنْ نَكُونَ عَنْ يَمِينِهِ يُقْبِلُ عَلَيْنَا بِوَجْهِهِ قَالَ فَسَمِعْتُهُ يَقُولُ رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ أَوْ تَجْمَعُ عِبَادَكَ و حَدَّثَنَاه أَبُو كُرَيْبٍ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ مِسْعَرٍ بِهَذَا الْإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ يُقْبِلُ عَلَيْنَا بِوَجْهِهِ رواه مسلم

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழும்போது அவர்களுக்கு வலப் பக்கம் இருப்பதையே விரும்புவோம். அவர்கள் (தொழுது முடித்ததும்) எங்களை நோக்கித் திரும்புவார்கள். அப்போது, “ரப்பீ கினீ அதாபக யவ்ம தப்அஸு (அல்லது “தஜ்மஉ’) இபாதக்க’ (இறைவா! உன் அடியார்களை “உயிர் கொடுத்து எழுப்பும்’ (அல்லது ஒன்று திரட்டும்) நாளில் உன் வேதனையிலிருந்து என்னைக் காப்பாயாக!) என்று அவர்கள் பிரார்த்திப்பதை நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர் : பரா பின் ஆஸிப் (ரலி)

நூல் : முஸ்லிம் 1280

மேற்கண்ட ஹதீஸ் தொழுகைக்குப் பின்னால் பிரார்த்தனை செய்வதற்கு ஆதாரமாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னிலையில் நபித்தோழர் ஒருவர் தொழுகைக்குப் பின் பிரார்த்தனை செய்துள்ளார். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுக்கவில்லை. இதைப் பின்வரும் ஹதீஸில் அறியலாம்.

137حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ وَسَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ دَخَلَ أَعْرَابِيٌّ الْمَسْجِدَ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ فَصَلَّى فَلَمَّا فَرَغَ قَالَ اللَّهُمَّ ارْحَمْنِي وَمُحَمَّدًا وَلَا تَرْحَمْ مَعَنَا أَحَدًا فَالْتَفَتَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَقَدْ تَحَجَّرْتَ وَاسِعًاَ رواه الترمذي

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த போது ஒரு கிராமவாசி பள்ளிக்குள் நுழைந்தார். அவர் தொழுது முடித்தவுடன் இறைவா எனக்கும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அருள்புரிவாயாக. எங்களுடன் சேர்த்து வேறு யாருக்கும் அருள் புரிந்துவிடாதே என்று கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை நோக்கி நீ (அல்லாஹ்வின்) விசாலமான அருளை (நம் இருவருக்காக மட்டும்) சுருக்கிவிட்டாயே என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : திர்மிதி

ஒரு கிராமவாசி தொழுகைக்குப் பின் பிரார்த்தனை செய்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சேபிக்கவில்லை. வேறு யாருக்கும் அல்லாஹ்வின் அருள் கிடைக்கக்கூடாது என்று அவர் தவறாகப் பிரார்த்தனை செய்ததைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள். எனவே தொழுகைக்குப் பின் பிரார்த்தனை செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது என்பதை இவ்விரு ஹதீஸ்களின் மூலம் அறிய முடிகிறது.

அடுத்து கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்வதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரங்களாக அமைந்துள்ளன..

932 حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَنَسٍ وَعَنْ يُونُسَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ بَيْنَمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ إِذْ قَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكَ الْكُرَاعُ وَهَلَكَ الشَّاءُ فَادْعُ اللَّهَ أَنْ يَسْقِيَنَا فَمَدَّ يَدَيْهِ وَدَعَا رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு மனிதர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! குதிரைகள் அழிந்துவிட்டன; ஆடுகளும் அழிந்துவிட்டன. ஆகவே, எங்களுக்கு மழை பொழிய அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கைகளை ஏந்திப் பிரார்த்தனை புரிந்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 932

2597 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ اسْتَعْمَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مِنْ الْأَزْدِ يُقَالُ لَهُ ابْنُ الْأُتْبِيَّةِ عَلَى الصَّدَقَةِ فَلَمَّا قَدِمَ قَالَ هَذَا لَكُمْ وَهَذَا أُهْدِيَ لِي قَالَ فَهَلَّا جَلَسَ فِي بَيْتِ أَبِيهِ أَوْ بَيْتِ أُمِّهِ فَيَنْظُرَ يُهْدَى لَهُ أَمْ لَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يَأْخُذُ أَحَدٌ مِنْهُ شَيْئًا إِلَّا جَاءَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ يَحْمِلُهُ عَلَى رَقَبَتِهِ إِنْ كَانَ بَعِيرًا لَهُ رُغَاءٌ أَوْ بَقَرَةً لَهَا خُوَارٌ أَوْ شَاةً تَيْعَرُ ثُمَّ رَفَعَ بِيَدِهِ حَتَّى رَأَيْنَا عُفْرَةَ إِبْطَيْهِ اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ ثَلَاثًا رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அஸ்த்’ என்னும் குலத்தைச் சேர்ந்த இப்னுல்லுத்பியா என்ற மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் ஸக்காத் வசூலித்துக் கொண்டு வந்தபோது, “இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்புக் கிடைக்கிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! என் உயிரைத் தனது கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் ஸகாத் பொருளில் இருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும்; பசுவாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்” என்று கூறினார்கள். பிறகு, அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி, “இறைவா!நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா?” என்று மும்முறை கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுமைத் அஸ்ஸாயிதீ (ரலி)

நூல் : புகாரி 2597

4339 حَدَّثَنِي مَحْمُودٌ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ ح و حَدَّثَنِي نُعَيْمٌ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ قَالَ بَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالِدَ بْنَ الْوَلِيدِ إِلَى بَنِي جَذِيمَةَ فَدَعَاهُمْ إِلَى الْإِسْلَامِ فَلَمْ يُحْسِنُوا أَنْ يَقُولُوا أَسْلَمْنَا فَجَعَلُوا يَقُولُونَ صَبَأْنَا صَبَأْنَا فَجَعَلَ خَالِدٌ يَقْتُلُ مِنْهُمْ وَيَأْسِرُ وَدَفَعَ إِلَى كُلِّ رَجُلٍ مِنَّا أَسِيرَهُ حَتَّى إِذَا كَانَ يَوْمٌ أَمَرَ خَالِدٌ أَنْ يَقْتُلَ كُلُّ رَجُلٍ مِنَّا أَسِيرَهُ فَقُلْتُ وَاللَّهِ لَا أَقْتُلُ أَسِيرِي وَلَا يَقْتُلُ رَجُلٌ مِنْ أَصْحَابِي أَسِيرَهُ حَتَّى قَدِمْنَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْنَاهُ فَرَفَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ فَقَالَ اللَّهُمَّ إِنِّي أَبْرَأُ إِلَيْكَ مِمَّا صَنَعَ خَالِدٌ مَرَّتَيْنِ رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், காலித் பின் வலீத் (ரலி) அவர்களை பனூ ஜதீமா குலத்தாரிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அவர் இஸ்லாத்தை ஏற்கும்படி அழைப்புக் கொடுத்தார். அவர்களுக்கு “அஸ்லம்னா – நாங்கள் இஸ்லாத்தை ஏற்றோம்’ என்று திருத்தமாகச் சொல்ல வரவில்லை. ஆகவே, அவர்கள் (தங்களுடைய வழக்குப்படி)” “ஸபஃனா, ஸபஃனா’ – நாங்கள் மதம் மாறி விட்டோம், மதம் மாறிவிட்டோம்” என்று சொல்லலானார்கள். உடனே காலித் (ரலி) அவர்கள், அவர்களில் சிலரைக் கொல்லவும், சிலரைச் சிறைப்பிடிக்கவும் தொடங்கினார். அவர் (தம்முடன் வந்திருந்த) எங்களில் ஒவ்வொருவரிடமும் அவரவருடைய கைதியை ஒப்படைத்தார். ஒரு நாள் காலித், எங்களில் ஒவ்வொருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்ல வேண்டுமென உத்தரவிட்டார். நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடமுள்ள கைதியை நான் கொல்ல மாட்டேன்; மேலும், என் சகாக்களில் ஒருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்லமாட்டார்” என்று சொன்னேன். இறுதியில், நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, விஷயத்தைச் சொன்னோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் கரங்களை உயர்த்தி, “இறைவா! “காலித் செய்த தவறுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை’ என்று உன்னிடம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இருமுறை சொன்னார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி 4339

6383 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى قَالَ دَعَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَاءٍ فَتَوَضَّأَ بِهِ ثُمَّ رَفَعَ يَدَيْهِ فَقَالَ اللَّهُمَّ اغْفِرْ لِعُبَيْدٍ أَبِي عَامِرٍ وَرَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ فَقَالَ اللَّهُمَّ اجْعَلْهُ يَوْمَ الْقِيَامَةِ فَوْقَ كَثِيرٍ مِنْ خَلْقِكَ مِنْ النَّاسِ رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி உளூச் செய்தார்கள். பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி, “இறைவா! அபூஆமிர் உபைதை நீ மன்னிபாயாக! மறுமை நாளில் மனிதர்களில் பலரையும் விட (அந்தஸ்தில்) உயர்ந்தவராக அவரை ஆக்கிடுவாயாக” என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்களுடைய அக்குள்கள் இரண்டின் வெண்மையையும் நான் பார்த்தேன்.

அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி)

நூல் : புகாரி 6383

கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்வதற்கு இன்னும் ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே தொழுகைக்குப் பின் பிரார்ததனை செய்ய அனுமதி என்றால் அந்தப் பிரார்த்தனையை கைகளை உயர்த்தி செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது.

குறிப்பிட்ட நேரங்களில் தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை. ஒருவர் தான் விரும்பும் நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் பிரார்த்தனை செய்து கொள்ளலாம். இந்த அடிப்படையில் தொழுகைக்குப் பிறகும் பிரார்த்தனை செய்வதும் கூடும்.

தொழுகைக்குப் பிறகு மட்டும் கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்வது கூடாதென்றால் அவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இதற்கு எந்தத் தடையும் விதிக்காமல் இருக்கும் போது இது கூடாது என்று கூறுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.

No comments:

Post a Comment