Wednesday, July 3, 2019

நன்மைகளை - 34

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*✍🏼...நன்மைகளை வாரி*
                          ⤵
         *வழங்கும் தொழுகை*

         *✍🏼...தொடர் [ 34 ]*

*☄ஜமாஅத்தாகத்*
          *தொழுவதன்*
                      *சிறப்புகள் { 05 }*

*☄இஷா, ஃபஜ்ரை*
          *ஜமாஅத்தாகத்*
             *தொழுவதன் சிறப்பு [ 02 ]*

*☄சுபுஹ் தொழுதவர்*
      *அல்லாஹ்வின் பொறுப்பில்☄*

*عَنْ جُنْدُبِ نِ الْقَسْرِيِّ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ صَلَّي صَلاَةَ الصُّبْحِ فَهُوَ فِي ذِمَّةِ اللهِ فَلاَ يَطْلُبَنَّكُمُ اللهُ مِنْ ذِمَّتِهِ بِشَيْيءٍ فَإِنَّهُ مَنْ يَطْلُبْهُ مِنْ ذِمَّتِهِ بِشَيْءٍ يُدْرِكْهُ ثُمَّ يَكُبَّهُ عَلَي وَجْهِهِ فِي نَارِ جَهَنَّمَ.*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுப்ஹு தொழுதவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். இவ்வாறு அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள ஒன்றின் விஷயத்தில் (நீங்கள் வரம்பு மீறி நடந்து, அது குறித்து) அல்லாஹ் உங்களிடம் விசாரணை செய்து, அதை உங்களிடம் கண்டு கொண்டதால் உங்களை நரக நெருப்பில் குப்புறத் தள்ளும் நிலை உங்களுக்கு ஏற்பட்டுவிட வேண்டாம்.*_

*🎙அறிவிப்பவர்: ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி)*

*📚நூல்:  முஸ்லிம் (1163)📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄வானவர்கள் ஒன்று கூடும்*
            *ஃபஜ்ர் தொழுகை☄*

ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ اﻟﻴﻤﺎﻥ، ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ ﺷﻌﻴﺐ، ﻋﻦ اﻟﺰﻫﺮﻱ، ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﻲ ﺳﻌﻴﺪ ﺑﻦ اﻟﻤﺴﻴﺐ، ﻭﺃﺑﻮ ﺳﻠﻤﺔ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ، *ﺃﻥ ﺃﺑﺎ ﻫﺮﻳﺮﺓ، ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ: «ﺗﻔﻀﻞ ﺻﻼﺓ اﻟﺠﻤﻴﻊ ﺻﻼﺓ ﺃﺣﺪﻛﻢ ﻭﺣﺪﻩ، ﺑﺨﻤﺲ ﻭﻋﺸﺮﻳﻦ ﺟﺰءا، ﻭﺗﺠﺘﻤﻊ ﻣﻼﺋﻜﺔ اﻟﻠﻴﻞ ﻭﻣﻼﺋﻜﺔ اﻟﻨﻬﺎﺭ ﻓﻲ ﺻﻼﺓ اﻟﻔﺠﺮ» ﺛﻢ ﻳﻘﻮﻝ ﺃﺑﻮ ﻫﺮﻳﺮﺓ: ﻓﺎﻗﺮءﻭا ﺇﻥ ﺷﺌﺘﻢ: {ﺇﻥ ﻗﺮﺁﻥ اﻟﻔﺠﺮ ﻛﺎﻥ ﻣﺸﻬﻮﺩا} [اﻹﺳﺮاء: 78]*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதைவிட (ஜமாஅத்துடன்) கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும். ஃபஜ்ர் தொழுகையில் இரவு நேரத்து வானவர்களும், பகல் நேரத்து வானவர்களும் ஒன்று சேர்கிறார்கள்.*_

_*இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், நீங்கள் விரும்பினால் "அதிகாலையில் ஓதுவது (வானவர்களால்) சாட்சியம் சொல்லப்படக் கூடியதாகும்'' எனும் (17:78) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என்றார்கள்.*_

*📚நூல்: புகாரி (648)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment