Wednesday, July 3, 2019

நன்மைகளை - 35

💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*✍🏼...நன்மைகளை வாரி*
                          ⤵
         *வழங்கும் தொழுகை*

         *✍🏼...தொடர் [ 35 ]*

*☄ஜமாஅத்தாகத்*
          *தொழுவதன்*
                      *சிறப்புகள் { 06 }*

*☄இஷா, ஃபஜ்ரை*
          *ஜமாஅத்தாகத்*
             *தொழுவதன் சிறப்பு [ 03 ]*

*☄வானவர்கள் சாட்சி கூறும்*
            *ஃபஜ்ரும் அஸ்ரும்☄*

ﺣﺪﺛﻨﺎ ﻗﺘﻴﺒﺔ ﺑﻦ ﺳﻌﻴﺪ، ﻋﻦ ﻣﺎﻟﻚ، ﻋﻦ ﺃﺑﻲ اﻟﺰﻧﺎﺩ، ﻋﻦ اﻷﻋﺮﺝ، *ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ: ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻗﺎﻝ: " ﻳﺘﻌﺎﻗﺒﻮﻥ ﻓﻴﻜﻢ ﻣﻼﺋﻜﺔ ﺑﺎﻟﻠﻴﻞ ﻭﻣﻼﺋﻜﺔ ﺑﺎﻟﻨﻬﺎﺭ، ﻭﻳﺠﺘﻤﻌﻮﻥ ﻓﻲ ﺻﻼﺓ اﻟﻌﺼﺮ ﻭﺻﻼﺓ اﻟﻔﺠﺮ، ﺛﻢ ﻳﻌﺮﺝ اﻟﺬﻳﻦ ﺑﺎﺗﻮا ﻓﻴﻜﻢ، ﻓﻴﺴﺄﻟﻬﻢ ﻭﻫﻮ ﺃﻋﻠﻢ ﺑﻬﻢ: ﻛﻴﻒ ﺗﺮﻛﺘﻢ ﻋﺒﺎﺩﻱ؟ ﻓﻴﻘﻮﻟﻮﻥ: ﺗﺮﻛﻨﺎﻫﻢ ﻭﻫﻢ ﻳﺼﻠﻮﻥ، ﻭﺃﺗﻴﻨﺎﻫﻢ ﻭﻫﻢ ﻳﺼﻠﻮﻥ*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவில் சில வானவர்களும் பகலில் சில வானவர்களும் உங்களிடையே அடுத்தடுத்து வருகிறார்கள். அவர்கள் அஸ்ர் தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலும் ஒன்று சேர்கிறார்கள். பிறகு உங்களிடையே இரவு தங்கியிருந்தவர்கள் வானத்திற்கு ஏறிச் செல்வார்கள். அங்கு அவர்களிடம் அல்லாஹ், "என் அடியார்களை எந்த நிலையில் விட்டுவிட்டு வந்தீர்கள்❓'' என்று -அவர்களைப் பற்றி அவன் நன்கறித்த நிலையிலேயே- கேட்பான். அதற்கு வானவர்கள், "அவர்கள் தொழுது கொண்டிருந்த நிலையில் அவர்களை விட்டுவிட்டு வந்தோம். அவர்கள் தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் சென்றோம்'' என்று பதிலளிப்பார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
                 *அபூஹுரைரா (ரலி),*

*📚 நூல்: புகாரி (7486)📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄நரகத்திலிருந்து காக்கும்*
              *ஃபஜ்ரும் அஸ்ரும்☄*

وَحَدَّثَنَا  أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَاقُ بْنُ  إِبْرَاهِيمَ جَمِيعًا عَنْ وَكِيعٍ، - قَالَ أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا  وَكِيعٌ، - عَنِ ابْنِ أَبِي خَالِدٍ، وَمِسْعَرٍ، وَالْبَخْتَرِيِّ بْنِ  الْمُخْتَارِ، *سَمِعُوهُ مِنْ أَبِي بَكْرِ بْنِ عُمَارَةَ بْنِ  رُؤَيْبَةَ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه  وسلم يَقُولُ ‏"‏ لَنْ يَلِجَ النَّارَ أَحَدٌ صَلَّى قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا ‏" .يَعْنِي الْفَجْرَ وَالْعَصْرَ ‏.‏ فَقَالَ لَهُ رَجُلٌ مِنْ أَهْلِ  الْبَصْرَةِ آنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم  قَالَ نَعَمْ ‏.‏ قَالَ الرَّجُلُ وَأَنَا أَشْهَدُ أَنِّي سَمِعْتُهُ  مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَمِعَتْهُ أُذُنَاىَ وَوَعَاهُ  قَلْبِي*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சூரியன் உதயமாவதற்கு முன்னரும் சூரியன் மறைவதற்கு முன்னரும் தொழுதவர் -அதாவது ஃபஜ்ர் மற்றும் அஸ்ர் தொழுதவர் - எவரும் ஒருபோதும் நரக நெருப்பில் நுழையமாட்டார்'' என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன் என (என் தந்தை) உமாரா பின் ருஐபா (ரலி) அவர்கள்  கூறினார்கள். அப்போது அவர்களிடம் பஸ்ராவாசிகளில் ஒருவர், "இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா❓'' என்று கேட்டார். அதற்கு உமாரா (ரலி) அவர்கள் "ஆம்' என்றார்கள். அந்த மனிதர் "நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இவ்வாறு செவியுற்றேன் என உறுதி அளிக்கிறேன். அதை என்னிரு காதுகளும் செவிமடுத்தன; என் மனம் அதை மனனமிட்டுக் கொண்டது'' என்று கூறினார்.*_

*🎙அறிவிப்பவர்:  அபூபக்ர் பின்  உமாரா பின் ருஐபா*

*📚நூல்: முஸ்லிம் (1115)📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄இறைவனைக்*
             *காணும் பாக்கியம்☄*

ﺣﺪﺛﻨﺎ اﻟﺤﻤﻴﺪﻱ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻣﺮﻭاﻥ ﺑﻦ ﻣﻌﺎﻭﻳﺔ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺇﺳﻤﺎﻋﻴﻞ، ﻋﻦ ﻗﻴﺲ، *ﻋﻦ ﺟﺮﻳﺮ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ، ﻗﺎﻝ: ﻛﻨﺎ ﻋﻨﺪ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻓﻨﻈﺮ ﺇﻟﻰ اﻟﻘﻤﺮ ﻟﻴﻠﺔ - ﻳﻌﻨﻲ اﻟﺒﺪﺭ - ﻓﻘﺎﻝ: «ﺇﻧﻜﻢ ﺳﺘﺮﻭﻥ ﺭﺑﻜﻢ، ﻛﻤﺎ ﺗﺮﻭﻥ ﻫﺬا اﻟﻘﻤﺮ، ﻻ ﺗﻀﺎﻣﻮﻥ ﻓﻲ ﺭﺅﻳﺘﻪ، ﻓﺈﻥ اﺳﺘﻄﻌﺘﻢ ﺃﻥ ﻻ ﺗﻐﻠﺒﻮا ﻋﻠﻰ ﺻﻼﺓ ﻗﺒﻞ ﻃﻠﻮﻉ اﻟﺸﻤﺲ ﻭﻗﺒﻞ ﻏﺮﻭﺑﻬﺎ ﻓﺎﻓﻌﻠﻮا» ﺛﻢ ﻗﺮﺃ: {ﻭﺳﺒﺢ ﺑﺤﻤﺪ ﺭﺑﻚ ﻗﺒﻞ ﻃﻠﻮﻉ اﻟﺸﻤﺲ ﻭﻗﺒﻞ اﻟﻐﺮﻭﺏ} [ﻗ: 39]، ﻗﺎﻝ ﺇﺳﻤﺎﻋﻴﻞ: «اﻓﻌﻠﻮا ﻻ ﺗﻔﻮﺗﻨﻜﻢ*

_*🍃(முழு நிலவுள்ள ஓர் இரவில்) நபி (ஸல்) அவர்களுடன் (அமர்ந்து கொண்டு) இருந்தோம். அப்போது அவர்கள் முழுநிலவைக் கூர்ந்து பார்த்தபடி, "இந்த நிலவை நீங்கள் நெரிசல் இல்லாமல் காண்பது போன்று உங்கள் இறைவனையும் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் வெளிவேலைகள் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்'' என்று கூறிவிட்டு, "சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள்'' எனும் (50:39ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
    *ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)*

*📚நூல்: புகாரி (554)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment