பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, March 1, 2018

ஹரமில்_தொழுவதன்_சிறப்பு_என்ன

#ஹஜ்_உம்ரா

#ஹரமில்_தொழுவதன்_சிறப்பு_என்ன?

#பதில் #இலட்சம்_மடங்கு_சிறந்தது.

”(மற்ற பள்ளிகளிலும் தொழும் நன்மையை விட) மஸ்­ஜிதுல் ஹராமில் தொழு­வது ஒரு இலட்சம் மடங்கு சிறந்தது. எனது பள்­ளியில் (மஸ்­ஜி­துன்ந­பவியில்) தொழு­வது 1000 மடங்­காகும். பைதுல் மக்­திஸில் தொழு­வது 500 மடங்கு சிறந்தது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்( ரலி) நூல்: பைஹகீ)

عن أبي الدرداء:قال عليه الصلاة والسلام: «فضل الصلاة في المسجد الحرام على غيره مائة ألف صلاة وفي مسجدي ألف صلاة وفي مسجد بيت المقدس خمسمائة صلاة» أخرجه البزار- (4142)

(4) وعن أبي الدرداء وجابر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: «فضل الصلاة في المسجد الحرام على غيره مائة ألف صلاة، وفي مسجدي هذا ألف صلاة وفي مسجد بيت المقدس خمسمائة صلاة» أخرجه البيهقي في السنن الصغرى رقم (1821)

மதீனாவின் மஸ்ஜிதுந் நபவியில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறந்தது.

1190 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ زَيْدِ بْنِ رَبَاحٍ وَعُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர.

அற்விப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 1190

No comments:

Post a Comment