பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, September 24, 2020

நபியின் மாமனார் திருமண விருந்து கொடுத்தார்களா?

பெண்களுக்கான நபிவழி சட்டங்கள்மார்க்க கேள்வி பதில்

நபியின் மாமனார் திருமண விருந்து கொடுத்தார்களா?

வரதட்சனை வாங்குவது எவ்வாறு மார்க்கத்திற்கு முரணான காரியமோ அது போன்று பெண்வீட்டு விருந்தும் மார்க்கத்திற்கு முரணாண காரியமாகும்.

ஆண் பெண்ணுக்கு மனக்கொடை கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகின்றது. பெண்ணிடமிருந்து எதையும் வாங்கக் கூடாது என்ற தடை இந்த உத்தரவில் அடங்கியிருக்கின்றது.

இதே போன்று திருமணத்துக்கென்று வலீமா என்ற விருந்தை ஆண் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகின்றது. பெண் வீட்டு விருந்து கூடாது என்ற தடை இந்த உத்தரவில் அடங்கியிருக்கின்றது.

திருமணத்தில் பெண் வீட்டார் மீது எந்தச் செலவையும் இஸ்லாம் சுமத்தவில்லை. ஆனால் இன்றைக்கு சமுதாயத்தில் பெண்வீட்டார் மீது தேவையற்ற சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தச் சுமைகளை தங்களுடைய கடமைகளாக எண்ணிக் கொண்டு பெண் வீட்டினர் செய்து வருகின்றனர். இவற்றைச் செய்யாவிட்டால் சமுதாயத்தில் அது அவமானம் என்றோ மாப்பிள்ளை வீட்டார் கோபப்படுவார்கள் என்றோ கருதி சிரமத்துடன் செய்பவர்களும் இருக்கின்றார்கள். பெண்வீட்டு விருந்து என்பது இந்தச் சுமைகளில் ஒன்றாகும்.

மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரை விருந்தளிக்குமாறு நிர்பந்திக்காவிட்டாலும் பெண்வீட்டார் தாங்களாக விரும்பி விருந்தளிப்பதும் கூடாது. திருமணத்துக்காக பெண் வீட்டார் செலவு செய்வது நடைமுறையில் கட்டாயமாகி விட்டதால் தான் இவர்கள் இவ்விருந்தை விரும்பியோ விரும்பாமலோ நடத்துகிறார்கள்.

பொதுவாக எந்தப் பெண்வீட்டாரும் விரும்பி விருந்தளிக்க முன்வருவதில்லை.  இது போன்று கொடுக்காவிட்டால் தங்களது பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டில் உரிய மரியாதை கிடைக்காமல் போய்விடுமோ என்ற உள்ளச்சமே இவர்களைக் கொடுப்பதற்குத் தூண்டுகின்றது. இதில் ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம்.

இது போன்று விதிவிலக்காக ஒரு சிலர் விரும்பிக் கொடுப்பது பல தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்துவதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

வரதட்சணை வாங்காமல் திருமணம் முடிப்பதாகக் கூறிக் கொண்டு, இது போன்று தானே வரும் பெண்வீட்டு விருந்தை எண்ணத்தில் வைத்து, வசதியான பெண்களை மட்டுமே மணம் முடிக்கும் அவல நிலை உள்ளது.  சில ஊர்களில் வீடு, வாகனங்கள் என மறைமுக வரதட்சணையாக பெண் வீட்டார் கொடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தமும் உள்ளது. 

வசதி படைத்த பெண் வீட்டார் விரும்பிக் கொடுப்பதாகக் கூறி, டி.வி., பிரிட்ஜ், பைக் திருமண விருந்து என்று அள்ளி வழங்கி விடுகின்றார்கள்.  இது வசதியில்லாத பெண்களுக்கு ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்துவதையும் மறுக்க முடியாது.

உதாரணமாக ஒரே வீட்டில் ஒரு வசதியான பெண்ணும் ஏழைப் பெண்ணும் மணமுடிக்கப்பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம்.  வசதியான பெண் சீர் வரிசைகளைக் கொடுக்கும் போது ஏழைப்பெண்ணுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகின்றது.  அவளும் தன் வீட்டாரை நிர்பந்தித்து வட்டிக்கு வாங்கி சீர் வரிசைகளைச் செய்கிறாள்.

இது ஏதோ கற்பனையாகக் கூறப்பட்டதல்ல.  பல இடங்களில் இந்த நிலை இருப்பதைக் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.  இது போன்ற பல சங்கடங்கள் ஏற்படுவதால் பெண் வீட்டார் விரும்பி சீர் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

பெண்வீட்டு விருந்து என்ற தீய கலாச்சாரம் சமுதாயத்தில் நுழைந்து விட்டதால் இவ்விஷயத்தில் சுயவிருப்பத்தை பார்க்காமல் இந்த அநாச்சாரத்தை ஒழிப்பதற்காக இதைப் பெண்வீட்டார் கைவிட வேண்டும்.

இதை பொருட்படுத்தாமல் பெண் வீட்டு விருந்தை ஏற்படுத்தினால் சமுதாயத்தில் நுழைந்துவிட்ட இந்த பாவத்துக்கு உடந்தையான குற்றம்  ஏற்படும்.

இதே வாதத்தை வைத்து வரதட்சணையையும் நியாயப்படுத்ட முடியும். மாமனார் விரும்பி தருகிறார் என்ற காரணத்தைக் சொல்லித் தான் வரதட்சனையை இன்றும் சிலர் நியாயப்படுத்தி வருகின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்ப நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை

. அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி).

நூல் : அபூதாவுத் (3512)

பெண் வீட்டார் இத்தீமையைச் செய்யும் போது அதைக் கண்டித்து தடுத்து நிறுத்துவது மாப்பிள்ளையின் கடமையாகும். இதை அவர் கண்டிக்கத் தவறினால் அத்தீமையில் அவருக்கும் பங்குள்ளது என்ற அடிப்படையில் அத்திருமணத்தை நாம் புறக்கணித்தே ஆக வேண்டும்.

“உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். 

அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி).

நூல்: முஸ்லிம் 70

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் உம்மு ஹபீபா (ரலி) அவர்களுக்கும் திருமணம் நடந்த போது அபிசீனிய நாட்டு மன்னர் நஜ்ஜாஷி வலீமா விருந்து அளித்ததாக ஒரு செய்தி சில ஹதீஸ் நூற்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி ஹாகிம் தலாயிலுன் நுபுவ்வா மற்றும் தபகாத்துல் குப்பரா ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்தச் செய்தியை உம்மு ஹபீபா (ரலி) கூறியதாக இஸ்மாயீல் பின் அம்ர் என்பவர் அறிவிக்கின்றார். இவர் ஹிஜ்ரீ 130ல் மரணிக்கின்றார். உம்மு ஹபீபா (ரலி) ஹிஜ்ரீ42 ல் மரணிக்கின்றார்கள். எனவே இவர் உம்மு ஹபீபா (ரலி) அவர்களை இவர் சந்தித்திருக்க வாய்ப்பில்லை. இவ்விருவருக்கும் இடையே அறிவிப்பாளர் யாரோ விடுபட்டுள்ளார். விடுபட்ட அந்த நபர் யார்? அவர் நம்பகமானவரா? என்பது உறுதி செய்யவிடவில்லை.

மேலும் இந்தச் செய்தியில் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஸுஹைர் என்பவர் இடம் பெறுகின்றார். இவர் நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இதன் காரணத்தால் இந்த செய்தி பலவீனமானதாகும்.

இத்துடன் பெண்வீட்டு விருந்து கொடுப்பதற்கு இந்த செய்தி  எந்த வகையிலும் ஆதாரமாகது

நஜ்ஜாஷி மன்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சார்பில் உம்மு ஹபீபா (ரலி) அவர்களுக்கு நானூறு தீனார்களை மஹராக கொடுத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுக்க வேண்டிய வலீமாவை அவர்கள் சார்பில் நஜ்ஜாஷி கொடுத்தார் என்றே இந்த செய்தி கூறுகின்றது.

எனவே இந்தச் செய்தியின் மூலம் மணமகன் சார்பில் மணமகனுடைய நண்பர் வலீமா கொடுக்கலாம் என்று தான் கூற முடியும். நஜ்ஜாஷி மன்னருக்கும் உம்மு ஹபீபா (ரலி) அவர்களுக்கும் இடையே எந்த இரத்த பந்த உறவும் கிடையாது. எனவே இதை வைத்து பெண்வீட்டு விருந்து கொடுக்கலாம் என்று 
வாதிட முடியாது .            

ஏகத்துவம்.

Wednesday, September 23, 2020

ஷைத்தானின் சூழ்ச்சிகள்

ஷைத்தானின் சூழ்ச்சிகளை அறிந்துக் கொள்வோம்

ஷைத்தானின் சூழ்ச்சிகள்

இரு உலகத்தில் கண்களுக்கு தெரிந்த, தெரியாத அனைத்து படைப்புகளையும் அல்லாஹ் படைத்துள்ளான். நீர், தாவரம், வானம், பூமி, விலங்கு, சூரியன், சந்திரன், நெருப்பு, மலக்கு, மனிதன், ஜின், ஷைத்தான் அனைத்துயும் படைத்துள்ளான். அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

அனைத்தையும் படைத்தான்.

அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். அவன் ஒவ்வொரு பொருளுக்கும் பொறுப்பாளன்.

(அல்குர்ஆன் (39:62)

அனைத்தையும் படைத்து விட்டு மனிதனை சிறப்பித்துள்ளான்.

மனிதனை சிறப்பித்தான்.

நீர், தாவரம், வானம், பூமி, விலங்கு, சூரியன், சந்திரன், நெருப்பு, மலக்கு, மனிதன், ஜின், ஷைத்தான் அனைத்து படைப்பையும் படைத்து அதில் மனிதனை மட்டும் சிறப்பித்துள்ளான். விலங்குகள் மனிதனை விட பலத்தாலும். வேகத்தாலும் சிறந்ததாக இருந்தாலும் மனிதனை சிறப்பித்துள்ளான். மலக்குமார்கள் அல்லாஹ்வுடைய அனைத்து பணிகளையும் செய்தாலும் அவர்களை விட மனிதர்களை அல்லாஹ் சிறப்பித்துள்ளான்.

ஜின்கள் பலத்தால் சிறந்ததாக இருந்தாலும் மனிதர்களை சிறப்பித்துள்ளான். அதே போன்று தான் ஷைத்தான் மலக்குமார்களுக்கே தலைவராக இருந்தாலும் அந்த இனத்தை விட மனிதர்களை அல்லாஹ் சிறப்பித்துள்ளான். முதல் மனிதராகிய ஆதமை இறைவன் படைத்தவுடன் அவரது திறமையை வெளிப்படுத்திக் காட்டி அவருக்கு “ஸஜ்தா’ செய்யுமாறு வானவர்களுக்கு கட்டளையிட்டான்.

“”ஆதமுக்குப் பணியுங்கள்!” என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான்.

(அல்குர்ஆன் (2:34)

ஷைத்தான் பெருமையடித்தான், நெருப்பால் படைத்தாய்

ஆதமை படைத்து அவருக்கு பணியும் மாறு மலக்குமார்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்ட போது மலக்குமார்களின் தலைவனான ஷைத்தான் அல்லாஹ்விடத்தில் தன்னை நீ நெருப்பால் படைத்தாய் இந்த ஆதமை கருப்பு களிமண்ணால் படைத்து இருக்கிறாய். நான் அவனை விட சிறந்தவன் நான் எப்படி அவனுக்கு சிறை வணக்கம் செய்வோன் என்று பெருமையடித்தான்.

“”நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்” என்று அவன் கூறினான்.

(அல்குர்ஆன் (38:76)

“”சேற்றிலிருந்த கருப்புக் களிமண்ணால் வடிவமைக்கப்பட்டு நீ படைத்த மனிதனுக்கு நான் பணிபவனாக இல்லை” என்று அவன் கூறினான்.

(அல்குர்ஆன் (15:33)

விரட்டி அடிக்கப்பட்டான்

ஷைத்தான் அல்லாஹ்விற்கு எதிராக பெருமையடித்த காரணத்தினால் கண்ணியமிக்க இடத்தை விட்டும் இழிவு ஏற்பட்டவனாகவும், விரட்டியடிக்கப்பட்டவானகவும் வெளியேற்றப் பட்டான். மறுமையிலும் இழிந்தவனாக அல்லாஹ் கொண்டுவருவான்.

“”இங்கிருந்து நீ இறங்கி விடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு! நீ சிறுமையடைந்த வனாவாய்” என்று (இறைவன்) கூறினான்.

அல்குர்ஆன் (7:13)

“”இங்கிருந்து இழிவு படுத்தப்பட்ட வனாகவும், விரட்டப்பட்டவனாகவும் வெளியேறி விடு! (மனிதர்களாகிய) அவர்களிலும் (ஜின்களாகிய) உங்களிலும் உன்னைப் பின் பற்றுவோர் அனைவரையும் போட்டு நரகத்தை நிரப்புவேன்” என்று (இறைவன்) கூறினான்.(அல்குர்ஆன் (7:18)

அவகாசம் கேட்டான்

ஷைத்தானை கண்ணியமிக்க இடத்திலிருந்து வெளியேற்றி போது மறுமை நாள் வரை என்னை அழிக்க கூடாது என்று அல்லாஹ்விடத்தில் தன்னுடைய ஆணவத்தை அடக்கிக் கொண்டு அவகாசம் கேட்கிறான்.

“”அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!” என்று அவன் கேட்டான்.

அல்குர்ஆன் (7:14)

அவகாசம் கொடுக்கப்பட்டது

அல்லாஹ் தஆலா ஷைத்தானின் அடிப்படிதலை கண்டு அவனுடைய கூட்டாத்திற்கு உயிர் பிச்சை தருகிறான். மறுமையை நாள் வரை உன்னையும் உனது கூட்டாத்தாரையும் அழிக்க மாட்டோன் என்று உத்திர வாதம் தந்துள்ளான். இதுவரை ஷைத்தானின் இனம் அழியப்படவில்லை.

“நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய்” என்று (இறைவன்) கூறினான்.

(அல்குர்ஆன் (7:15)

வழிகெடுப்பேன்

இப்லீஸ் என்பது ஷைத்தான்களின் தந்தைப் பெயராகும். இவன் நெருப்பால் படைக்கப்பட்டான். ஜின் இனத்தை சார்ந்தவன். இப்லீசுக்கு சந்ததிகளும், சேனைகளும் உண்டு. மனித இனத்தை கண்ணுக்குத் தெரியாமல் இருந்து கொண்டு வழிகெடுப்பதே இவர்களின் முக்கிய பணியாகும்.

இப்லீஸின் சிம்மாசனம் நீரில் உண்டு. அவன் தன் படைகளை அனுப்பி, மனிதர்களை குழப்படையச் செய்கிறான். இப்பணியில் முன்னணியில் இருக்கும் ஷைத்தான்களுக்கே இப்லீஸிம் முதல் தர மரியாதை கிடைக்கும். அல்லாஹ் அவகாசம் அளித்த பிறகு நீ கருப்பு களிமண்ணால் படைத்த இந்த மனிதர்களில் சிலரை வழிக்கெடுப்பேன் என்று அல்லாஹ்விடத்தில் சவால் விட்டான்.

“”நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்”என்று கூறினான். “”பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்” (என்றும் கூறினான்).

(அல்குர்ஆன் (7:16,17)

ஒவ்வொரு மனிதனுடனும் ஷைத்தான் இருப்பான்

ஒவ்வொரு மனிதனுக்கும் வானவர் ஒருவரும் ஷைத்தான் ஒருவனும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வானவர் நல்லதையே எண்ணுமாறும் நல்லதையே செய்யுமாறும் மனிதனுக்குக் கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஷைத்தான் கெட்டதையே எண்ணுமாறும் கெட்டதையே செய்யுமாறும் மனிதனைத் தூண்டிக்கொண்டிருக்கிறான்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “”ஜின் இனத்தைச் சேர்ந்த கூட்டாளியொருவன் (ஷைத்தான்) தம்முடன் நியமனம் செய்யப்படாமல் உங்களில் எவரும் இல்லை” என்று கூறி னார்கள்.

அப்போது, “”தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?” என்று மக்கள் கேட்டனர்.

அதற்கு அவர்கள், “”என்னுடனும் தான். ஆயினும் அல்லாஹ், அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்துவிட்டான். ஆகவே, எனக்கு அவன் நல்லதையே கூறுவான்” என்று சொன்னார்கள்.

நூல் :முஸ்லிம் 5421

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம் தங்கியிருந்த நாளில்) ஓர் இரவில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் மீது எனக்கு ரோஷம் ஏற்பட்டது.

பிறகு அவர்கள் (திரும்பி)வந்து என் நடவடிக்கையைக் கண்டபோது, “”ஆயிஷா! உனக்கு என்ன நேர்ந்தது? ரோஷம் கொண்டு விட்டாயா?” என்று கேட்டார்கள்.

அதற்கு நான், “”என்னைப் போன்ற ஒருத்தி (பல துணைவியர் உள்ள) தங்களைப் போன்ற ஒருவர் மீது ரோஷம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?” என்று சொன்னேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “”உன் ஷைத்தான் உன்னிடம் வந்து விட்டானா?” என்று கேட்டார்கள்.

நான், “”அல்லாஹ்வின் தூதரே! என்னுடனும் ஷைத்தான் உள்ளானா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “ஆம்’ என்றார்கள். “”ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தான்) உள்ளானா?” என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் “ஆம்’ என்றார்கள்.

நான், “”தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “”ஆம். ஆயினும், என் இறைவன் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்துவிட்டான்” என்று சொன்னார்கள்.

நூல் : முஸ்லிம் 5422

ரத்தம் நாளங்களில் ஒடுகிறான்

ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசரில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “”அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!” என்றார்கள்.

என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர்.

நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, “”இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!” எனக் கூறினார்கள்.

அவ்விருவரும் “”சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “”நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்; உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள்.

நூல் : புகாரி : 2038

நல்லவர்களை வழிகெடுக்க முடியாது

அல்லாஹ் ஷைத்தானை வெளியேற்றிய பிறகு அல்லாஹ்விடத்தில் மனிதர்களை நான் வழிகெடுப்பேன் என்று சவால் விடுகிறான். ஆனால் இறை நம்பிக்கையாளர்களை என்னால் வழிகெடுக்க முடியாது என்று தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு சவால் விடுகிறான்.

“”என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார் களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்”என்று கூறினான்

அல்குர்ஆன் (15:39,40)

கொள்கை விட்டும் தடுப்பான்

ஷைத்தான் மனிதர்களை வழிகெடுப்பதெல்லாம் அடிப்படையான கொள்கை விஷயத்தில் தான். ஏனென்றால் கொள்கையை ஏற்றுக் கொண்டால் அந்த மனிதர் சொர்க்கம் சென்று விடுவார். முதலில் கொள்கையில் வழிகெடுக்க முயற்சிப்பான் அதில் தோல்வியடைந்தால் மற்ற விஷயத்தில் முயற்சி செய்வான், அடிப்படையான கொள்கை விஷயத்தில் மனிதனை வழிகெடுத்து விட்டால் அந்த மனிதன் சொர்க்கம் செல்ல மாட்டான்.

அதற்காக கொள்கை விஷயத்தில் வழிகெடுக்க முயற்சிப்பான். மனிதரிடத்தில் படைப்பினங்களை பற்றி சிந்தனை ஊட்டுவான், இந்த பைக், செல்போன், அழகிய கார், இது போன்ற பொருட்களை யார் படைத்தான் என்று சிந்தனை ஊட்டுவான், சிந்தனையை ஏற்படுத்திய பிறகு இவை அனைத்தும் மனிதன் தான் உருவாக்கினான் என்று சிந்தனையை ஏற்படுத்துவான்.

பிறகு இந்த இயற்கை, செடி, மரம், விலங்கினங்கள், மனிதனை யார் படைத்தான் என்று சிந்தனை ஏற்படுத்துவான். இந்த சிந்தனையை ஏற்படுத்திய பிறகு இவை அனைத்தையும் அல்லாஹ் தான் படைத்தான் என்று நம்புவான். அதை நம்பிய பிறகு அல்லாஹ்வை யார் படைத்து இருப்பார்கள் என்று சிந்தனையை ஏற்படுத்துவான் இப்படிப்பட்ட மோசமான சிந்தனை ஏற்படுத்தும் போது விரட்டி அடிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு தேட வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, “”இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?” என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், “”உன் இறைவனைப் படைத்தவர் யார்?”என்று கேட்கின்றான்.

இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் அடையும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) விலகிக்கொள்ளட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி : 3276

தொழுகையை விட்டு தடுப்பான்

நம்மிடத்தில் கொள்கை விஷயத்தில் ஷைத்தான் தோற்று விட்டால் பிறகு தொழுகை விஷயத்தில் நம்மை வழிகெடுக்க வழிவகுப்பான். இஸ்லாம் என்பது அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொண்ட பிறகு தொழுகையை கடைபிடிக்க வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் கூறியிருக்கிறார்கள். தொழுகையை கடைபிடித்தால் நம்முடைய சிறிய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். அதனால் தொழுகை வீணாக்குவதற்குகாக அதிகமான முயற்சிகளை செய்வான். தொழுகையை தடுப்பதற்கு என்ன என்ன தீமையான விஷயங்கள் இருக்கிறதே அவை அனைத்தையும் மனிதர்களிடத்தில் அழகாக அழங்கரித்து காட்டுவான். இதை நம்பி நல்ல அமல்களை விட்டு விடுகிறார்கள்.

மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?

அல்குர்ஆன் (5:91)

தூக்கத்தின் மூலம்

பஜருடைய பாங்கு சப்தத்தை நாம் கேட்கும் போது தூக்கத்திலிருந்து எழுந்திருக்காமல் சோம்பேறி தனமாக இருந்து கொண்டு பஜர் தொழுகைக்கு நாம் வரமால் தூக்கி விடுகிறோம். இப்படி தூக்கத்தை ஏற்படுத்தி நன்மையை செய்ய விடாமல் ஷைத்தான் நாடுகிறான். ஆனால் ஷைத்தானுக்கு நாம் கட்டுபடாமல் தூக்கத்திலிருந்து நாம் எழுந்திருத்து துஆவை ஒதி, உளு செய்து, தொழுதால் அன்றைய தினம் சுறுசுறுப்பவனாக அடைகிறான். ஆனால் நாம் பஜர் தொழுகையில் தொழாமல் இருந்தால் அன்றைய தினத்தில் சோம்போறிவுடையவனாக அடைகிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் உறங்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டுவிடுகிறான். ஒவ்வொரு முடிச்சின்போதும் “இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுக்க எஞ்சி) இருக்கிறது. ஆகவே, நீ உறங்கு’என்று கூறி (உங்களை விழிக்கவிடாமல் உறங்க வைத்து)விடுகிறான்.

நீங்கள் (அவனது கூற்றை ஏற்காமல்) கண்விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. நீங்கள் தொழுது விட்டால் முடிச்சுகள் முழுவதும் அவிழ்ந்துவிடுகிறது. நீங்கள் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் காலைப் பொழுதை அடைவீர்கள். இல்லையெனில் மனக்குழப்பத்துடனும், சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவீர்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் : புகாரி : 1142

காதில் சிறுநீர் விடுகிறான்

பஜருடைய பாங்கு சப்தத்தை கேட்கும் போது இன்னும் சிறிது நேரம் தூக்கலாம், இன்னும் சிறிது நேரம் தூக்கலாம் என்று ஷைத்தான் நமக்கு ஆசை வார்த்தைகளை நினைவு கூறும் போது அவன் ஓரே அடியாக தூக்கிவிடுகிறான். பஜர் தொழுகையை விட்டுவிடுகிறான். இப்படி ஆசை வார்த்தைக்கு கட்டுபடாமல் பாங்கு சப்தத்தை கேட்டவுடன் உடனே எழுந்தெரித்து பஜர் தொழுகையில் கலந்துக் கொள்ள வேண்டும்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் பொழுது விடியும் வரை (தொழுகைக்கு எழாமல்) உறங்கிக் கொண்டேயிருப்பது பற்றிக் கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “”அவரது காதில் ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்” என்று கூறினார்கள்.

நூல் : புகாரி : 1144

தொழுகையில் நிற்கும் போது

ஷைத்தான் தூக்கத்தின் மூலமாக நம்மை வழிக்கெடுக்க முயற்சிக்கும் போது அந்த செயலை நாம் முறியடித்து விட்டால் அவனுடைய முயற்சி வீணாகி விடுகிறது. பிறகு வேற வழிமுறைகளை கையாளுவான். அல்லாஹ்வின் அடியார்கள் தொழுகைக்கு வரும் போது தொழுகை முறியடிப்பதற்காக சில வழிமுறைகளை கடைபிடிப்பான். அடியார்கள் தொழுகைக்காக தக்பீர் கட்டும் போது பல சிந்தனைகளை நினைவு படுத்துவான்.

தொழுகையில் நிற்கும் போது இவரிடத்தில் இவ்வளவு ரூபாய் பணம் கொடுத்தேன் அதற்குறிய வட்டியை அவன் தருவானா இல்லையா என்று நினைத்து பார்ப்பான். ஆனால் தொழுகையில் கவனத்தை செலுத்தாமல் விட்டுவிடுகிறான். அல்லது நம்முடைய கடையில் வியபாரம் என்ன ஆகுமே என்று நினைத்து பார்ப்பான் இப்படி பல சிந்தனைகளை ஏற்படுத்தி நம்முடைய தொழுகையை வீணாக்க முயற்சி செய்வான். இப்படிப்பட்ட சிந்தனை நமக்கு வரும் போது உடனே சுதாரித்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமரிருப்பதற்காக ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடிவிடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பிவருகிறான்; இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான்.

இகாமத் முடிந்ததும் மீண்டும் வந்து தொழுபவரின் உள்ளத்தில் ஊடுருவி, “”இதை இதையெல்லாம் நினைத்துப்பார்” எனக் கூறி, அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டி அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை மறக்கடித்துவிடுகிறான். உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்கள் மூன்றா அல்லது நான்கா என்று தெரியாவிட்டால் (கடைசி) இருப்பில் இரண்டு சஜ்தாச் செய்துகொள்ளட்டும்.’’

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி : 1231

தொழுகையின் நடுவில் குறுக்கிடுதல்

தொழுகையில் இருக்கும் போது ஷைத்தான் பல சிந்தனைகளை ஏற்படுத்தும் போது அதனை நாம் முறியடித்தால் ஷைத்தானின் முயற்சி வீணாகி விடுகிறது. இந்த விஷயத்திலும் அவன் தோல்வியடையும் போது வேற வழிமுறைகளை கையாளுவான். நாம் தொழுகும் போது சிலர் குறுக்கே செல்வதின் மூலமாக நம்முடைய தொழுகை வீணாக்க முயற்சி செய்வான். குறுக்கே செல்லும் போது அவன் செல்ல விடாமல் அவர்களை தடுக்க வேண்டும், இப்படி செய்யும் போது அவனுடைய முயற்சிகள் வீணாகி விடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவன் தான் ஷைத்தான்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல் : புகாரி : 3274

தொழுகையில் திரும்பி பார்த்தல்

நமது தொழுகையில் திரும்பி பார்ப்பதின் மூலமாக நம்முடைய தொழுகையை வீணாக்குவதற்கு ஷைத்தான் சில வித்தைகளை கையாளுகிறான். நாம் தொழுதுக் கொண்டிருக்கும் போது நமக்கு முன்னால் சிலர் பேசிக்கொண்டும், விளையான்டு கொண்டும் இருப்பார்கள். அவர்களின் செயல்களை பார்ப்பதின் மூலமாக நம்முடைய தொழுகை வீணாகி விடுகிறது. நாம் தொழுவும் போது நமக்கு முன்னால் என்ன நடந்தாலும் அந்த செயல்களை கண்டுக்கொள்ளாமல் தொழ வேண்டும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் தொழுகையில் ஒருவர் திரும்பிப் பார்ப்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ”அது (திரும்பிப் பார்க்கும் அந்த நேரம்) உங்கள் தொழுகையிலிருந்து ஷைத்தான் திருட்டுத்தனமாகப் பறித்துக் கொள்வதாகும்” என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி : 3291

அல்லாஹ்வின் நினைவை மறக்க செய்வான்

தொழுகையில் அவனால் வழிகெடுக்க முடியவில்லையென்றால் தொழுகைக்கு வெளியே நல்ல அமல் செய்ய விடாமல் வழிகெடுக்க முயற்சிப்பான். தொழுகை முடித்த பிறகு சில திக்ருகளை ஓதும்மாறு கற்றுதந்துள்ளார்கள். ஆனால் நாம் தொழுகையை முடித்த பிறகு திக்ருகள் செய்யும் போது நம்மிடத்தில் சிலர் திக்ருகளை செய்ய விடாமல் பேசிக் கொண்டும், விளையாண்டு கொண்டும் இருப்பார்கள். ஏனென்றால் தொழுகைக்கு பின்னால் நாம் திக்ருகள் ஓதினால் நம்முடைய சிறிய பாவங்கள் கடல் நுறையளவு இருந்தாலும் அல்லாஹ் மன்னித்து விடுவான். அல்லாஹ் மனிதனை மன்னிப்பது ஷைத்தானுக்கு பிடிக்காமல் நல்ல அமல்களை செய்ய விடாமல் தடுப்பான். அந்த நேரத்தில் இந்த செயல் ஷைத்தானின் ஊசலாட்டம் என்று நினைத்து சுதாரித்துக் கொள்ள வேண்டும்.

மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?

அல்குர்ஆன் (5:91)

ஷைத்தான் அவர்களை மிகைத்து விட்டான். அல்லாஹ்வின் நினைவை அவர்களுக்கு மறக்கச் செய்தான். அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! ஷைத்தானின் கூட்டத்தினரே நஷ்டமடைந்தவர்கள்.

அல்குர்ஆன் (58: 19)

உபதேசத்தை கேட்பதை தடுப்பான்

நல்ல விஷயங்களை கேட்க விடாமல் நம்மை தடுப்பான். எத்தனையே ஊர்களில் இஸ்லாத்தை பற்றி அறிவதற்காக சில மார்க்க பிரசாரங்களை நடத்துகிறார்கள். பிரச்சாரத்தை கேட்காமல் சிலர் பேசிகொண்டு இருப்பார்கள். இப்படி உபதேசத்தை கேட்காமல் ஷைத்தான் அவர்களை தடுக்கிறான். அல்லது ஜீம்ஆ நாளில் இமாம் உரை நிகழ்த்தும் போது கையில் எதையாவது வைத்து விளையாண்டு கொண்டும், பிறரிடத்தில் பேசிக் கொண்டும் இருப்பார்கள்.

இவை அனைத்தும் ஷைத்தானின் வீர விளையாட்டுகளாகும். ஜீம்ஆவில் பேசாமல் இருந்தால் நம்முடைய சிறிய பாவங்கள் மன்னிக்கப்படும். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதை ஷைத்தான் விரும்ப மாட்டான். அதை நாம் முறியடித்தோம் என்றால் அவனுடைய முயற்சி வீணாகிவிடும். இமாம் ஜீம்ஆவில் உரை நிகழ்த்தும் போது நாம் யாரிடமும் பேசாமலும், விணான விளையாட்டில் ஈடுபடாமலும் இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஜுமுஆ நாளில் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிரிப்பவரிடம் நீ “மௌனமாக இரு!’ என்று கூறினாலும் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்.

அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி :934

அபூவாக்கித் (அல்ஹாரிஸ் பின் மாரிக் அல்லைஸீ(ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசரில் அமர்ந்துகொண்டிருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் (அலட்சியப்படுத்திவிட்டுச்) சென்றுவிட்டார். (பள்ளிக்குள் வந்த) அவ்விருவரும் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீற்றிருந்த அவை) முன்னால் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்த அவையில் ஒரு இடைவெளியைக் கண்ட போது அதில் அமர்ந்துகொண்டார்.

மற்றவரோ அவையினருக்குப் பின்னால் அமர்ந்துகொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பேச்சை) முடித்ததும் கூறினார்கள்:  இம்மூன்று பேர்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் (அருளின்) பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக் கொண்டான். மற்றவரோ வெட்கப்பட்டு(க்கொண்டு கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டுக்கொண்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றுவிட்டார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்திவிட்டான்.

நூல் : புகாரி : 66

பகைமையை ஏற்படுத்துவான்

நல்ல நண்பர்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்துவதற்காக பல முயற்சிகளை செய்வான். அதாவது நல்ல நண்பர்களுக்கு மத்தயில் ஒருவரோடு ஒருவரை மோதிவிட்டு வேடிக்கை பார்ப்பவன் தான் ஷைத்தான். ஏனென்றால் அல்லாஹ்வுக்காக ஒன்று சேர்ந்து அவனுக்காக பிரிந்த இரு நல்ல நண்பர்களை மறுமை நாளில் தன்னுடைய அர்ஷின் நிழலை தருகிறான். மறுமை நாளில் நிழல் கிடைக்க கூடாது என்பதற்காக இவ்வுலகத்தில் நல்ல நண்பர்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்தி, அல்லாஹ்வுக்காக நேசிக்க விடாமல் தடுத்து விடுகிறான்.

மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?

அல்குர்ஆன் (5:91)

(முஹம்மதே!) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.

அல்குர்ஆன் 17: 53

சுலைமான் பின் சுரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:  நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் (கோபத்தால்) சிவந்து விட்டது. அவருடைய தொண்டை நரம்பு புடைத்துக் கொண்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், “”எனக்கு ஒரு (பிரார்த் தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய் விடும்,

“ஷைத்தானிட மிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய் விடும்” என்று கூறினார்கள். ஆகவே, மக்கள் அந்த மனிதரிடம், “”நபி (ஸல்) அவர்கள், “ஷைத்தானிடமிருந்துஅல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரு’ என்று கூறினார்கள்” எனத் தெரிவித்தார்கள் அதற்கு அவர், “”எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டார்.

நூல் : புகாரி 3282

ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோருவது பைத்தியத்தைத் தெளியவைக்கத் தான் என்று தவறாக அவர் புரிந்து கொண்டதாலேயே இவ்வாறு கேட்டார். உண்மையில் கோபமும் ஷைத்தானின் தூண்டுதலாலேயே உண்டாகிறது. கோபத்திலிருந்து விடுபட, ஷைத்தானின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோர வேண்டும்.

தீய எண்ணத்தை ஏற்படுத்துவான்

ஸஃபிய்யா பின்த்து ஹுயை (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களிடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசி விட்டு திரும்பிச் செல்ல எழுந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னைத் திருப்பியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். உஸாமா பின் சைத் (ரலி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது (என அறிவிப்பாளர் கூறுகிறார்.)

அப்போது அன்சாரிகளில் இருவர் அந்த வழியாகச் சென்றார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், “”நிதானமாகச் செல்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான்” என்று சொன்னார்கள். இதைக் கேட்ட அவ்விருவரும், “”அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்?)” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “”ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான் …அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான்… என்று நான் அஞ்சினேன்” என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி : 3281

நபி ஸல் அவர்கள் யாரோ அன்னியப் பெண்ணைச் சந்திக்கிறார்கள் என்ற சந்தகேத்தை ஷைத்தான் உங்கள் உள்ளங்களில் ஏற்படுத்தி விடக் கூடாதே என்பதற்காகவே நான் அப்படிக் கூறினேன் என்று நபி ஸல் அவர்கள் விளக்கினார்கள்.

கொட்டாவி

கொட்டாவி என்னும் நெட்டுயிர்ப்பு சோம்பலக்கும் களைப்புக்கும் அடையாளமாகும். இப்படி மனிதன் உற்சாகம் குன்றி விடும் போது நல்ல காரியங்கள் பல தடைபடும். அளவுக்கு அதிகமாக உண்பது பருகுவதாலேயே இந்த தேக்க நிலை உருவாகிறது. எனவே இது ஷைத்தானின் தூண்டுதலால் நேரும் சோதனையாகும். அதிலும் அடக்கமின்றி ஹா என்று நெட்டுயிர்ப்பு போது மனிதன் தன் வலையில் சிக்கிவிட்டான் என ஆனந்தத்தில் சிரித்து மகிழ்கின்றான். எனவே கொட்டாவியை இயன்றவரை அடக்கிவிட வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவி விட்டால் தம்மால் முடிந்த வரை அவர் அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் “ஹா’ என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கின்றான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி : 3289

வறுமையை காட்டுகிறான், வெட்கக் கேடானதை தூண்டுவான்

நம்மிடத்தில் அதிகமான செல்வங்கள் இருந்து அதனை தர்மம் செய்யும் போது நாம் ஏழையாகிவிடுவோம் என்று ஷைத்தான் நமக்கு பயமுறுத்துவான். அந்த நேரத்தில் இந்த எண்ணத்தை ஷைத்தான் தான் ஏற்படுத்துகிறான் என்று எண்ணவேண்டும்.
இன்னும் வெட்ககோடான தீய எண்ணத்தையும் நமது உள்ளத்தில் ஏற்படுத்துவான். அரைகுறை ஆடையை உடுத்த வேண்டும் என்று ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்துவான்.

ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் (2:268)

இரவு நேரத்தில் ஷைத்தான் பரவுகிறான்

பகல் வெளிச்சம் முடிந்து இரவின் இருட்டு படரத் தொடங்கும் போது ஷைத்தான்களின் நடமாட்டம் அதிமகாகும். பரபரப்பாக அவர்கள் இயங்கத் தொடங்குவர். இந்த நேரத்தில் ஷைத்தான்களின் தீங்குகளிலிருந்து பாதுகாப்புத் தேடப் பயன்படுகின்ற குர்ஆன் வசனங்கள், மற்றும் துஆக்கள் வேண்டுதல்களை அறிந்தராத சிறுவர்கள் வெளியே திரிந்து கொண்டிருந்தால் ஷைத்தான்களால் அவர்களுக்குத் தீங்கு நேரலாம். அவரவர் போக வேண்டிய இடங்களுக்கு ஷைத்தான்கள் போய்ச் சேர்ந்த பிறகு அதாவது இரவில் சிறிது நேரம் கழிந்த பிறகு இந்த ஆபத்து நீங்கி விடும் என்பதால் அப்போது குழந்தைகளை வெளியே விடுவதால் பிரச்சினை இல்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “”இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் உங்கள் குழந்தைகளை (வெளியே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும்) பரவி விடுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (வெளியே செல்ல) விட்டு விடுங்கள்.

மேலும், (இரவு நேரத்தில்) உன் கதவை மூடிவிடு. (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல். (உறங்கச் செல்கையில்) உனது விளக்கை அணைத்து விடு.(அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் தண்ணீர்ப் பையைச் சுருக்கிட்டு மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உனது பாத்திரத்தை மூடி வை. (அதை முழுவதும் மூட இயலா விட்டாலும்) அதன் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்.

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நூல் : புகாரி 3280

கெட்ட கணவு

ஷைத்தான் பகலில் வழிகெடுப்பதை போன்று இரவிலும் வழிகெடுக்கிறான். பகலில் மனிதன் அதிகமான நன்மைகளை செய்கிறான். ஆனால் இரவில் அதிக நன்மை செய்யாமல் உரங்குகிறான். அந்த நேரத்திலும் அவர்களை வழிகெடுக்க வேண்டும் என்று ஷைத்தான் நினைக்கிறான். தூக்கும் போது நம்மை பயம் முறுத்தும் அளவுக்கு கெட்ட கணவை ஏற்படுத்துவான். இரவில் ஷைத்தானின் ஊதசலாதட்தை ஏற்படுத்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேட வேண்டும். தனது வலது புறத்தில் எச்சில் துப்ப வேண்டும்.

நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (அச்சுறுத்தும்) கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவனவாகும். உங்களில் எவரேனும் அச்சுறுத்தும் தீய கனவைக் கண்டால் அவர் தன் இடப் பக்கத்தில் எச்சில் துப்பட்டும்; அல்லாஹ் விடம் அக்கனவின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோரட்டும். ஏனெனில், (இப்படிச் செய்தால்) அது அவருக்குத் தீங்கு செய்ய முடியாது.

இதை கதாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 3292

இறையச்சமுடையவர்கள் சுதாரித்து கொள்வார்கள்

ஷைத்தானின் நம்முடைய நன்மைகளை அழிப்பதற்காக பல வழிகளை கையாலுவான். மனித இனத்தையே நரகத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று கங்கடம் கண்டிக் கொண்டு இருக்கிறான். ஆனால் மனித இனத்தின் அனைவரையும் வழிகெடுக்க முயற்சிக்கும் போது நல்லயடியார்கள் சுதாரித்துக்கொள்ளவார்கள். இந்த தீயச் செயல் ஷைத்தானின் ஏற்பாடாகும். இவைகளை விட்டு தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

(இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது அவர்கள் விழித்துக் கொள்வார்கள்.

அல்குர்ஆன் (7:201)

ஊசலாட்டம்

ஷைத்தான் இது போன்ற தீய காரியங்களை ஏற்படுத்தி தீமையை செய்யுமாறு நமக்கு ஏவுகிறான். நம்முடைய உள்ளத்தில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துவான். ஷைத்தான் ஊசலாட்டத்தை ஏற்படுத்தும் போது அந்தசெயல்களை நம்முடைய வாழ்க்கையில் கொண்டு வராத வரை அல்லாஹ் நம்மை தண்டிக்க மாட்டான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உம்மத்தினரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதன் படி செயல்படாதவரை அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாதவரை எனக்காக அல்லாஹ் மன்னித்து விட்டான்.

இதை அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல் : புகாரி : 2528

பாதுகாப்பு வழிமுறை

பகல் நேரத்தில் அதிகமான நன்மைகளை செய்கிறான். அதிகமான நன்மைகளை செய்வதை ஷைத்தான் விரும்ப மாட்டான். பகல் நேரத்தில் ஷைத்தானின் தீண்டல் அதிகமாக இருக்கும். அதனால் காலையிலிருந்து மாலைவரை ஷைத்தான் நம்மை தீண்டாமல் இருக்க வேண்டுமென்றால் நபி ஸல் அவர்கள் சிறிய துஆக்களை கற்றுத்தத்துள்ளார்கள். அந்த துஆவை நாம் ஒதினால் காலையிருந்து மாலை வரை ஷைத்தான் நம்மை தீண்டமுடியாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “”வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன்  லா இலாஹ இல்லல் லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல்- ஷய்இன் கதீர் என்று எவர் ஒரு நாளில் நூறு முறை சொல்கிறாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் பெற்றுக் கொடுப் பதா)கும்.

மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரது கணக்கி -ருந்து (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும், அவருடைய அந்த நாளில் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக அது அவருக்கிருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது; ஒருவர் இதை விட அதிகமான (தடவைகள் இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர.

அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி : 3293

பகல் நேரத்தில் ஷைத்தானின் தீண்டல் இருப்பதைப் போன்று இரவில் நேரத்திலும் ஷைத்தான் தீண்டுவான். இரவில் தூங்கும் போது ஷைத்தான் கெட்ட கணவை ஏற்படுத்தி பயமுறுத்துகிறான். இரவு நேரத்திலும் ஷைத்தானின் தீண்டல் இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் நபி ஸல் அவர்கள் சில ஆயத்துகளை கற்றுத்துள்ளார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ரமளானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே, நான் அவனைப் பிடித்துக் கொண்டேன்; “”உன்னை அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்” என்று கூறினேன்.

(அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சி யையும் விபரமாகச் சொல்கிறார்.) இறுதியில் அவன், “”நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள்.(அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்” என்று என்னிடம் சொன்னான். (இதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்ன போது,) “”அவன் பொய்யனாயிருந்தும், உங்களிடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான் தான்” என்று கூறினார்கள்.

நூல் : புகாரி : 3275

ஷைத்தானின் தீண்டலிருந்து நம்மை பாதுகாத்து மறுமையில் அனைவரும் வெற்றி பெற வேண்டும்.

பெண்கள் வெளியில் செல்லும் போது பேண வேண்டிய ஒழுங்குமுறைகள்

பெண்களுக்கான

நபிவழி சட்டங்கள்

பெண்கள் வெளியில் செல்லும் போது பேண வேண்டிய ஒழுங்குமுறைகள்

தேவைகளுக்காகப் பெண்கள் வெளியில் சென்றாலும் மார்க்கம் போதிக்கிற ஒழுங்கு முறைகளைப் பேணித்தான் செல்ல முடியும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதைப் பற்றி நபியவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள். ஆடையணிந்தும் நிர்வாணமாக இருக்கும் பெண்களைப் பற்றி நபியவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். இதைப் பல வகையில் இன்று பார்க்கிறோம். இருப்பினும் இதை மூன்றாகப் பிரித்து விளங்கலாம்.

மெல்லிய ஆடைகள், அதாவது உடல் முழுவதும் மறைத்து இருந்தாலும் காட்சியாக்கப்படும் நிலையில் உள்ள ஆடைகள், அரைகுறையாக மறைப்பது, அதாவது முன் கை, முகம், கால் பாதம் தவிர மறைய வேண்டிய மற்ற பகுதிகளில் சிலதை மறைத்து சிலதை வெளியில் தெரிகிற மாதிரி அணிகின்ற சேலை, குட்டைப் பாவாடை போன்ற ஆடைகள், இறுக்கமான ஆடைகளை அணிவது, அதாவது உடல் முழுவதும் கணத்த துணியால் மூடினாலும் இறுக்கமாக இருக்கும் பட்சத்தில் உடல் உறுப்புக்கள் தெரியும் அளவில் அணியப்படுகிற ஆடைகள். இவைகள் அனைத்தும் அந்நிய ஆண்களை ஈர்க்க்கும் தடைசெய்யப்பட்ட ஆடை முறைகளாகும்.

அதே போன்று வெளியில் செல்லும் போது பெண்களின் நடை பிறரை ஈர்க்கின்ற வகையில் இருக்கவே கூடாது. பிறரை ஈர்க்கும் வகையில் சாய்ந்து நெழிந்து நடப்பது தவறானது. அதனைத் தமிழில் தளுக்கி, மினுக்கி நடப்பது என்பார்கள். இதுபோன்ற நிலையில் பெண்கள் வெளியில் செல்வது கூடாது. இவற்றையெல்லாம் நபியவர்கள் கண்டிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: 

இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அவ்விரு பிரிவினரை நான் பார்த்ததில்லை. (முதலாம் பிரிவினர்) பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக் கொண்டு மக்களை அடி(த்து இம்சி)க்கும் கூட்டத்தார்.

(இரண்டாம் பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்தபடி (தளுக்கி குலுக்கி கர்வத்துடன்) நடந்து (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தம் பக்கம் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களின் தலை (முடி) சரிந்து நடக்கக்கூடிய கழுத்து நீண்ட ஒட்டகத்தைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) அதன் வாடையைக்கூட நுகரமாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு தொலைவிலிருந்து வீசிக் கொண்டிருக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5487

அதே போன்று வெளியில் செல்லும் போது பெண்களின் பேச்சுக்கள் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்பது போன்று இருக்க வேண்டும். பேச்சில் ஒரு மிரட்டல் தொணி இருக்க வேண்டும். கொஞ்சல், குழைவுத் தன்மை இருக்கவே கூடாது. பேச்சில் இழுவை இருக்கக் கூடாது. ஒரு பெண்ணின் பேச்சை பிற அந்நிய ஆண்கள் வெறுக்கத்தக்க வகையில் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ரசிக்கத்தக்க வகையில் இல்லாதிருக்க வேண்டும்.

நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்

(அல்குர்ஆன் 33:32)

ஏகத்துவம்.

பெண் குழந்தைகளை வெறுக்கக்கூடாது.

பெண்களுக்கான

நபிவழி சட்டங்கள்

பெண் குழந்தைகளை வெறுக்கக்கூடாது.

பொதுவாக பெண் குழந்தை பிறப்பதை அதிகமானவர்கள் வெறுக்கிறார்கள். சில ஊர்களில் பெண் குழந்தைகளை பிறந்த உடனே கொலை செய்துவிடுகிறார்கள். இறைவன் கொடுத்தது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வது தான் இறைநம்பிக்கையாளரின் பண்பு. இறைநிராகரிப்பாளர்கள் தான் பெண் குழந்தைகளை இழிவாகக் கருதிவந்தார்கள்.

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப்பட்டவனாக ஆகிவிடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.

அல்குர்ஆன் (16 : 58)

பெண் குழந்தைகளை கொலை செய்தவர்களுக்கு எதிரான சாட்சியாக மறுமை நாளில் அக்குழந்தைகள் இறைவனிடம் முறையிடும்.

என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது,

அல்குர்ஆன் (81 : 8)

பெண் குழந்தைகளை பெற்றவர்கள் பின்வரும் ஹதீஸ்களை மனதில் நிறுத்திக்கொண்டால் பெண் குழந்தையை பெற்றதற்காக ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும்வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்”என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : முஸ்லிம் (5127)

ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், “”இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்’‘ எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (1418)

“யார் இந்தப் பெண் குழந்தைகளில் ஒன்றுக்குப் பொறுப்பேற்று நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள்’‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (5995)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கு பருவமடையாத மூன்று குழந்தைகள் மரணித்துவிட்டால் அவர் அக்குழந்தைகளின் மீது காட்டிய இரக்கத்தின் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்.’
அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி 1381

ஏகத்துவம்.

பெண்கள் வெளியூர் பயணம் செய்தல்!

பெண்களுக்கான

நபிவழி சட்டம்கள்

பெண்கள் வெளியூர் பயணம் செய்தல்!

கணவனுடனோ, அல்லது மஹ்ரமான உறவினர் துணையுடனோ இல்லாமல் பெண்கள் பயணம் செய்யலாமா?

செய்யலாம் என்றால் அதற்கான எல்லை எது?

இதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.

காரணம் இது குறித்த அறிவிப்புக்கள் முரண்பட்டவைகளாக உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாக) மூன்று நாட்களுக்கான பயணம் மேற்கொள்ள வேண்டாம்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 1086, 1087

யாருடைய துணையும் இல்லாமல் பெண்கள் மூன்று நாட்கள் தனியாகப் பயணம் செய்யலாம் என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன.

அபூசயீத் (ரலி) கூறியதாவது:

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான்கு விஷயங்களைச் செவியுற்றேன். அவை எனக்கு மிகவும் விருப்பமானவை. (அவை:) கணவனோ, மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவினரோ இல்லாமல் இரண்டு நாட்கள் தொலைவுக்கு ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது! நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது! அஸ்ருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரையிலும், சுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரையிலும் எந்தத் தொழுகையும் தொழக் கூடாது! மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளிவாசல் (மஸ்ஜிதந் நபவீ), மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு பள்ளிவாசல்களுக்கு (அதிக நன்மையை நாடி)ப் பயணம் செய்யக் கூடாது!

நூல் : புகாரி 1864

இரண்டு நாட்களுக்குக் குறைவாக பயணம் செய்வதாக இருந்தால் ஒரு பெண் தனியாக யாருடைய துணையும் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாகப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஒரு நாள் மட்டும் தான் ஒரு பெண் தனியாகப் பயணம் செய்யலாம்; அதற்கு மேல் பயணம் செய்யக் கூடாது என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

மேற்கண்ட மூன்று ஹதீஸ்களும் ஒன்றுக்கொன்று நேர் முரணான கருத்தைக் கூறுகின்றன.

இம்மூன்றில் ஒவ்வொன்றும் மற்ற இரண்டு ஹதீஸ்களை மறுக்கும் வகையில் உள்ளன.

இது போல் முரண்பாடாக செய்திகள் கிடைக்கும் போது அவற்றை எவ்வாறு அணுகுவது?

இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹதீஸ்களுக்கு மத்தியில் முரண்பாடு காணப்பட்டால் எல்லா ஹதீஸ்களும் சமமான தரத்தில் உள்ளவையா என்று பார்க்க வேண்டும்.

அவற்றில் ஒரு ஹதீஸ் மிக உயர்ந்த தரத்திலும் மற்றவை குறைந்த தரத்திலும் இருந்தால் தரம் குறைந்ததை விட்டுவிட்டு தரம் உயர்ந்ததை எடுத்துக் கொள்ள வேண்டும். இது முதலாவது அணுகுமுறை.

இந்த ஹதீஸைப் பொருத்தவரை மூன்று ஹதீஸ்களும் நம்பகத் தன்மையில் சமமாக உள்ளதால் எந்த ஒன்றுக்கும் முன்னுரிமை அளிக்க முடியாது.

இப்படிச் செய்ய வழி இல்லாவிட்டால் ஒரு ஹதீஸ் ஆரம்ப காலத்திலும், இன்னொரு ஹதீஸ் பிற்காலத்திலும் சொல்லப்பட்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்,. இதற்கு ஆதாரம் கிடைத்தால் முன்னர் சொன்னதை விட்டு விட்டு பின்னர் சொன்னதை எடுத்துக் கொள்ள வேண்டும். முன்னர் சொன்னதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்னர் மாற்றி விட்டனர் என்று முடிவு செய்தால் முரண்பாடு இல்லாமல் முடிவு காண முடியும்.

ஆனால் மேற்கண்ட மூன்று ஹதீஸ்களில் எது முதலில் சொல்லப்பட்டது? எது பின்னர் சொல்லப்பட்டது என்பதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்பதால் அந்த முடிவுக்கும் வர முடியாது.

இந்த இரண்டு வழிகளும் இல்லாவிட்டால் மூன்று ஹதீஸ்களையும் இணைத்து மூன்றுக்கும் இணக்கமான ஒரு கருத்துக்கு வர வேண்டும். இந்த ஹதீஸ்களீல் அப்படி இணைத்து பொதுக் கருத்துக்கு வருவதற்கு இடமில்லாமல் உள்ளது.

இதில் உள்ள முரண்பாடு நீங்குவதற்கு வழி இல்லாவிட்டால் வஹியில் முரண்பாடு இருக்காது என்ற அடிப்படையில் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள் என்று கருதி மூன்றையும் விட்டு விட வேண்டும்.

இப்போது பெண்கள் ஒரு நாள் பயணம் செய்யலாம் என்பதற்கும், இரண்டு நாட்கள் பயணம் செய்யலாம் என்பதற்கும், மூன்று நாட்கள் பயணம் செய்யலாம் என்பத்ற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்ற முடிவுக்கு வந்து வேறு ஆதாரங்களைத் தேடவேண்டும்.

ஆதாரப்பூரவமான மற்றொரு ஹதீஸ் இந்தப் பிரச்சனையில் தெளிவான முடிவு எடுக்க உதவும் வகையில் அமைந்துள்ளது.

அந்த ஹதீஸ் இது தான்:

எந்த ஒரு பெண்ணும் மஹ்ரம் துணை இல்லாமல் ஒரு பரீத் அதாவது 12 மைல் தூரத்துக்குப் பயணம் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா

நூல்: ஹாகிம் 2526

இதன் அடிப்படையில் பெண்கள் 12 மைல் தொலைவு உள்ள தூரத்துக்கு தனியாகப் பயணம் செய்ய அனுமதி உள்ளது. அதற்கு மேல் தனியாகப் பயணம் செய்ய அனுமதி இல்லை என்பதே சரியான கருத்தாகும்.

மேலும் ஒரு நாள், அல்லது இரண்டு நாட்கள், அல்லது மூன்று நாட்கள் பயணம் செய்யலாம் என்ற கருத்தும் ஏற்புடையதாக இல்லை. இந்தக் காலகட்டத்தில் எது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு உள்ளது. இஸ்லாம் எதற்காக தனித்து பயணம் செய்வதைத் தடுக்கிறதோ அதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுகிறது. 12 மைல் என்பது குறைந்த தூரமாக உள்ளதால் இது ஏற்புடையதாகவும் உள்ளது.

ஏகத்துவம்.

பெண்கள் கடைத்தெருக்களுக்குச்செல்லலாமா?

பெண்களுக்கான
 
நபிவழி சட்டங்கள்
 

பெண்கள் கடைத்தெருக்களுக்குச்செல்லலாமா?

    எந்தத் தேவையும் இல்லாமல் பெண்கள் கடைத்தெருக்களில் சுற்றித்திரியக்கூடாது. 

உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்!

முந்தைய அறியாமைக் காலத்தில்வெளிப்படுத்தித் திரிந்தது போல்திரியாதீர்கள்!

தொழுகையை நிலை நாட்டுங்கள்!

ஸகாத்தைக் கொடுங்கள்!

அல்லாஹ்வுக்கும், அவனதுதூதருக்கும் கட்டுப்படுங்கள்!

இவ்வீட்டினராகிய உங்களை விட்டுஅசுத்தத்தை நீக்கவும், உங்களைமுழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமேஅல்லாஹ் நாடுகிறான். 

அல்குர்ஆன் (33 : 33)

    அறியாமைக்காலத்தில் வெளியில்சுற்றித்திரிந்ததைப் போல்சுற்றித்திரியக்கூடாது என்று நான்உன்னிடத்தில் உறுதிப்பிரமாணம்வாங்கிக்கொள்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் உமைமா பின்த் ருகைகா (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.  

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)

நூல் : அஹ்மத் (6554)

    பெண் மறைக்கப்பட வேண்டியவள். அவள் வெளியே சென்றால்(வழிகெடுப்பதற்காக) ஷைத்தான்அவளை நோக்கிவந்துவிடுகிறான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல் : திர்மிதி (1093)

மார்க்க விளக்கப் பொதுகூட்டங்கள் திருமணங்கள் உரிமையை மீட்டெடுப்பதற்கு உதவும் போராட்டங்கள் போன்ற நல்ல காரியங்களுக்காகவும் தேவையான விஷயங்களுக்காகவும் செல்வதில் தவறில்லை. அவ்வாறு செல்லும் போது பர்தாவை முழுமையாக கடைபிடித்துச் செல்ல வேண்டும். 

    நபி (ஸல்) அவர்களின் காலத்தில்பெண்கள் போர்க்களத்திற்கு வந்துகாயம்பட்ட போர்வீரர்களுக்குமருத்துவம் செய்யும் பணியைசெய்திருக்கிறார்கள். பெருநாள்திடலுக்கு வந்து நன்மையானகாரியத்தில் கலந்துகொண்டார்கள்.

(பெண்களாகிய) நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த போர்கüல் காயமுற்றவர்களுக்கு மருந்திடுவோம்; நோயாüகளைக் கவனித்தோம்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் “எங்களில்ஒரு பெண்ணுக்கு மேலங்கிஇல்லாவிட்டால் (பெருநாள்தொழுகைக்குச்) செல்லாமல்(வீட்டிலேயே இருப்பது) குற்றமா?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(ஒருபெண்ணிடம் மேலங்கிஇல்லாவிட்டால்) அவளுடைய தோழிதனது மேலங்கிகறில் ஒன்றைஅவளுக்கு அணியக் கொடுக்கட்டும்! அவள் நன்மையான காரியங்களிலும்இறைநம்பிக்கையாளர்களின்பிரசாரங்கüலும் கலந்துகொள்ளட்டும்!” என்று சொன்னார்கள். 

அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி)

நூல்: புகாரி (324)  

பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி நபி (ஸல்) அவர்களின் துணைவியாரானன சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் வெளியே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள்.

அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவர்களை அப்போது, உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் பார்த்துவிட்டு “சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீஙகள் யார் என்று எங்களுக்குத்தெரியாம–ல்இல்லை நீங்கள் (யார் என்றுஅடையாளம் தெரிகின்ற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள்பாருங்கள்!” என்று சொன்னார்கள்.

சவ்தா (ரலி) அவர்கள் உடனே அங்கிருந்து திரும்பி விட்டார்கள். சவ்தா (ரலி) அவர்கள் வீட்டினுள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் என்தேவை ஒன்றிற்காக வெளியேசென்றேன். உமர் (ரலி) அவர்கள்என்னிடம் இவ்வாறெல்லாம்சொன்னார்கள்” என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு “வஹீ‘ (வேதவெளிப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களை விட்டு நீக்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் “நீங்கள்உங்கள் தேவைக்காக வெளியேசெல்லலாம் என்று உங்களுக்குஅனுமதிக்கப்பட்டுள்ளது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (4795)

ஏகத்துவம்.

அந்நியப் ஆண்களிடமும் பெண்களுடன் பேசலாமா

#அந்நியப் ஆண்களிடமும் பெண்களுடன் பேசலாமா ?

ஒரு ஆண் அந்நியப் பெண்களிடம் எந்தவிதமான பேச்சுக்களையும் பேசக்கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் தவறான நோக்கமின்றி தேவை ஏற்படும் போது அந்நியப் பெண்களிடம் பேசியுள்ளார்கள். இதற்கு ஹதீஸ்களில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

பெண்களிடம் ஆண்கள் அறவே பேசக் கூடாது என்று மார்க்கத்தில் தடுப்பதாக இருந்தால் இத்தா இருக்கும் பெண்கள் விஷயத்தில் அல்லாஹ் தடுத்திருப்பான். ஏனெனில் இத்தா காலத்தில் அந்தப் பெண்கள் திருமணம் செய்வதற்கு தடுக்கப்பட்டுள்ளனர். அப்படி இருந்தும் இத்தாவில் இருக்கும் பெண்களிடம் கூட அந்நிய ஆண்கள் பேசுவதை அல்லாஹ் பின் வரும் வசன்ங்களில் அனுமதிக்கிறான்.

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர் ஆன் 2:234,235

இத்தாவில் இருக்கும் பெண்களிடம் அந்நிய ஆண்கள் திருமணம் குறித்து நேரடியாகப் பேசாமல் சாடைமாடையாக பேசலாம் என்பதையும், மற்ற நல்ல பேச்சுக்களைப் பேசலாம் என்பதையும் இவ்வசனங்கள் அனுமதிக்கின்றன. இத்தாவில் உள்ள பெண்களிடம் பேசலாம் என்றால் மற்ற பெண்களிடம் பேசுவதற்குத் தடை இல்லை என்பது உறுதி.

வேலை தொடர்பாக பெண்களிடம் பேசுவது குற்றமல்ல. அதே நேரத்தில் இந்தப் பேச்சுக்கள் ஒரு எல்லைக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும். வேலை தொடர்பான பேச்சுக்களைத் தாண்டி பெண்களுடன் கொஞ்சிக் குலாவுவதும் குழைந்து பேசுவதும் கூடாது.

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

(அல்குர்ஆன் 33:32,33)

மேலும் அந்நியப் பெண்ணுடன் தனித்திருப்பதும் கூடாது. ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம். (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போதே தவிர. ஒரு பெண் மணமுடிக்கத் தகாத நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்: முஸ்லிம் 2611)

உங்களில் எவரும் (அந்நியப்) பெண்ணுடன் தனித்து இருக்க வேண்டாம்! ஏனெனில் ஷைத்தான் உங்களில் இருவரில் மூன்றாம் நபராக இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்: அஹ்மத் 109)

எனவே இந்த ஒழுங்குமுறைகளுடன் பெண்களிடம் பேசலாம்.

அந்நியப் பெண்களுடன் பேசலாமா?

பெண்களுக்கான

நபிவழி சட்டங்கள்

அந்நியப் பெண்களுடன் பேசலாமா?

நான் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிகிறேன். அங்கே பெரும்பாலும் பெண்களே பணிபுரிகின்றனர். அவர்களுடன் நான் பேசலாமா

ஒரு ஆண் அந்நியப் பெண்களிடம் எந்தவிதமான பேச்சுக்களையும் பேசக்கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் தவறான நோக்கமின்றி தேவை ஏற்படும் போது அந்நியப் பெண்களிடம் பேசியுள்ளார்கள். இதற்கு ஹதீஸ்களில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

பெண்களிடம் ஆண்கள் அறவே பேசக் கூடாது என்று மார்க்கத்தில் தடுப்பதாக இருந்தால் இத்தா இருக்கும் பெண்கள் விஷயத்தில் அல்லாஹ் தடுத்திருப்பான். ஏனெனில் இத்தா காலத்தில் அந்தப் பெண்கள் திருமணம் செய்வதற்கு தடுக்கப்பட்டுள்ளனர். அப்படி இருந்தும் இத்தாவில் இருக்கும் பெண்களிடம் கூட அந்நிய ஆண்கள் பேசுவதை அல்லாஹ் பின் வரும் வசன்ங்களில் அனுமதிக்கிறான்.

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர் ஆன் 2:234,235

இத்தாவில் இருக்கும் பெண்களிடம் அந்நிய ஆண்கள் திருமணம் குறித்து நேரடியாகப் பேசாமல் சாடைமாடையாக பேசலாம் என்பதையும், மற்ற நல்ல பேச்சுக்களைப் பேசலாம் என்பதையும் இவ்வசனங்கள் அனுமதிக்கின்றன. இத்தாவில் உள்ள பெண்களிடம் பேசலாம் என்றால் மற்ற பெண்களிடம் பேசுவதற்குத் தடை இல்லை என்பது உறுதி.

வேலை தொடர்பாக பெண்களிடம் பேசுவது குற்றமல்ல. அதே நேரத்தில் இந்தப் பேச்சுக்கள் ஒரு எல்லைக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும். வேலை தொடர்பான பேச்சுக்களைத் தாண்டி பெண்களுடன் கொஞ்சிக் குலாவுவதும் குழைந்து பேசுவதும் கூடாது.

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

(அல்குர்ஆன் 33:32,33)

மேலும் அந்நியப் பெண்ணுடன் தனித்திருப்பதும் கூடாது. ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம். (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போதே தவிர. ஒரு பெண் மணமுடிக்கத் தகாத நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்: முஸ்லிம் 2611)

உங்களில் எவரும் (அந்நியப்) பெண்ணுடன் தனித்து இருக்க வேண்டாம்! ஏனெனில் ஷைத்தான் உங்களில் இருவரில் மூன்றாம் நபராக இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்: அஹ்மத் 109)

எனவே இந்த ஒழுங்குமுறைகளுடன் பெண்களிடம் பேசலாம்.

ஏகத்துவம்

பெண்கள் வேலைக்குச்செல்லலாமா?

பெண்களுக்கான

நபிவழி சட்டங்கள்

பெண்கள் வேலைக்குச்செல்லலாமா?

பெண்கள் வேலைக்காக வெளியே செல்லும் போது அன்னிய ஆண்களுடன் தனித்திருக்க வேண்டிய நிலையும் அவர்களுடன் பழக வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இதை இஸ்லாம் தடுத்திருக்கிறது. 

ஆண்களால் பெண்கள் அதிகமாக ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.

யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக ஒரிடத்திற்குச் செல்லும்போது அவளது கற்புக்கு பாதுகாப்பற்றுப் போய்விடுகிறது. இதையெல்லாம் கவனித்தில்வைத்துப் பார்க்கும் போதுவெளியிடங்களுக்கு வேலைக்குச்செல்லாமல் இருப்பதே சிறந்ததுஎன்று தெரிகிறது. 

    தான் வேலைக்குச்செல்லக்கூடிய இடம் மார்க்கத்தின்வரம்புகளை மீறுவதற்கானசூழ்நிலைகள் அற்ற இடமாகவும்தன் கற்புக்கு பாதுகாப்பானஇடமாகவும் இருந்தால் மேலும்அவ்வாறு வேலைக்குச் செல்வதுமிக அவசியமானதாகவும்இருந்தால் வேலைக்குச்செல்வதில் தவறில்லை. 

    பெண்கள் வெளியில் செல்லாமல் வீடுகளிலே இருந்து வேலை செய்து சம்பாரிப்பதில் தவறில்லை. இது தான் அவர்களுக்கு சிறந்ததாகவும் உள்ளது. 

மேலதிகமான விபரங்களை அறிய பெண்கள் வெளியில்செல்லலாமா என்ற தலைப்பின்கீழ் சொல்லப்பட்ட செய்திகளைபடித்துத் தெரிந்து கொள்க.

ஏகத்துவம்.

ஆண்களுடன் தனித்திருக்கக்கூடாது

.
பெண்களுக்கான

நபிவழி சட்டங்கள்

ஆண்களுடன் தனித்திருக்கக்கூடாது

மேற்கண்ட (24 : 31) வசனத்தில் சொல்லப்பட்டவர்களைத் தவிர்த்து மற்றவர்களிடத்தில் பெண்கள் பர்தாவை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பெரும்பாலான பெண்கள் கணவனுடைய அண்ணன் தம்பிமார்களின் முன்பு சர்வசாதாரணமாக பர்தா இல்லாமல் வந்து செல்கிறார்கள். அவர்களுடன் தனித்திருப்பதை பெரிய குற்றமாக இவர்கள் கருதுவதில்லை. இது தவறாகும். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அந்நியப்) பெண்கள்இருக்குமிடத்திற்குச் செல்லவேண்டாம் என உங்களை நான்எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர்,

“அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன்போன்ற) உறவினர்கள் (அவள்இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்னகூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “கணவருடைய(சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்குநிகரானவர்கள்” என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : உக்பது பின் ஆமிர் (ரலி)

நூல் : புகாரி (5232)

“ஒரு பெண்ணுடன் எந்த(அன்னிய) ஆடவனும்தனிமையில் இருக்கலாகாது; (மணமுடிக்கத் தகாத) நெருங்கியஉறவினருடன் (அவள்) இருக்கும்போது தவிர!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி (5233)

ஏகத்துவம்.

பெண்கள் பள்ளிவாசலுக்குச்செல்லலாமா?

.
பெண்களுக்கான
நபிவழி சட்டங்கள்

பெண்கள் பள்ளிவாசலுக்குச்செல்லலாமா?

    பெண்கள் பள்ளிவாசலிற்கு செல்லக்கூடாது என்று முஸ்லிம்களில் பலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் பெண்கள் பள்ளிக்கு வருவதை தடைசெய்கிறார்கள்.

ஆனால் ஆண்களும் பெண்களும் சந்திக்கும் சபைகளுக்கும் கடைத்தெருக்களுக்கும் செல்ல அனுமதிக்கிறார்கள். 

    நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் தாராளமாக பள்ளிக்கு வந்து தொழுதுள்ளார்கள். அதை நபி (ஸல்) அவர்களும் அங்கீகரித்துள்ளார்கள். இதை ஏராளமான நபிமொழிகளில் நம்மால் காணமுடியும். 

நம்பிக்கையுள்ள (மூமினான) பெண்கள் தங்களது கம்பளிஆடைகளால் போர்த்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர்தொழுகையில்பங்கெடுப்பவர்களாக இருந்தனர்.

தொழுகையை முடித்துக்கொண்டு தமது இல்லங்களுக்குதிரும்பிச் செல்வார்கள் .இருட்டின்காரணமாக அவர்களை யாரும்(ஆணா பெண்ணா என்று) அறிந்துகொள்ள முடியாது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (578)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீண்ட நேரம் தொழுவிக்கும். எண்ணத்துடன் நான் தொழுகையில் நிற்பேன். அப்போது (பின்னால்தொழுதுகொண்டிருக்கும்பெண்களின்) குழந்தை அழுவதைநான் கேட்பேன். அந்தக்குழந்தையின் தாய்க்குசிரமமளிக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுவேன்.

அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி)

நூல் : புகாரி (707)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் (தொழுத இடத்திலேயே) வீற்றிருப்பார்கள். (இதன் அறிவிப்பாளர்கüல் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகையில்,

“அல்லாஹ் நன்கறிந்தவன்! தொழுகை முடித்து திரும்பும்ஆண்கள் பெண்கüடம் வருவதற்குமுன் பெண்கள் (அங்கிருந்து) புறப்பட்டுச் சென்றுவிடவேண்டும்என்பதற்காகவே நபி (ஸல்) அவ்வாறு வீற்றிருந்தார்கள்என்றே நான் கருதுகிறேன்” என்றார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி) 

நூல் : புகாரி (837)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்எனக்) கூறுதல்ஆண்களுக்குரியதும்கைதட்டுதல்பெண்களுக்குரியதுமாகும். 

 அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)

நூல் : புகாரி (1203)

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாதி இரவு வரை) இஷாத் தொழுகையைப் பிற்படுத்தினார்கள். உமர் (ரலி) அவர்கள் அவர்களை அழைத்து,

“(தொழுகைக்கு வந்திருந்த) பெண்களும் சிறுவர்களும்உறங்கிவிட்டனர்” என்று கூறியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது அறையிலிருந்து) புறப்பட்டு வந்து,

“பூமியில் வசிப்போரில்உங்களைத் தவிர வேறுயாரும்இந்தத் தொழுகையைத்தொழவில்லை” என்று கூறினார்கள்.    

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (862)

உமர் (ரலி) அவர்கüன் மனைவியரில் (ஆத்திகா எனும்) ஒருவர் சுப்ஹு, இஷா ஆகியத் தொழுகையைப் பள்üயில் ஜமாஅத்தில் தொழச் செல்வார்.

அவரிடம், “(உங்கள் கணவர்) உமர்(ரலிலி) அவர்கள் இ(வ்வாறுசெல்வ)தை வெறுக்கிறார்கள்; ரோஷப்படுகிறார்கள் என்றுதாங்கள் அறிந்திருந்தும் நீங்கள்ஏன் (பள்üக்குச்) செல்கிறீர்கள்?”

என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “(என்னைப் பள்ளிக்குச் செல்லவேண்டாமென்று கூறவிடாமல்) அவரை எது தடுக்கிறது?” என்று கேட்க, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பெண்கள்பள்ளிவாசல்களுக்குச்செல்வதைத் தடுக்காதீர்கள்என்று கூறியதே உமர் (ரலி) அவர்களைத் தடுக்கிறது”

என்று பதில் வந்தது.

    அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி (900) 

    காஃப் வல்குர்ஆன் மஜீத் என்றுதொடங்கும் அத்தியாயத்தை நபி(ஸல்) அவர்களின் வாயிலிருந்து(மனனமாக) நான் எடுத்துக்கொண்டேன். அதை அவர்கள்ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்மிம்பரில் ஓதுவார்கள். 

அறிவிப்பவர் : அம்ரா (ரலி) அவர்களின் சகோதரி

நூல் : முஸ்லிம் (1442)

ஏகத்துவம்.

பெண்கள் மண்ணறைகளுக்குச்செல்லலாமா?

பெண்களுக்கான
நபிவழி சட்டங்கள்

பெண்கள் மண்ணறைகளுக்குச்செல்லலாமா?

மரண பயத்தையும் மறுமை சிந்தனைûயும் வரவழைத்துக் கொள்வதற்காக பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்வதற்கு அனுமதியுள்ளது.

மண்ணறைகளுக்குச் செல்பவர்கள் ஓத வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். 

நான் “அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில்இருப்ப)வர்களுக்காக நான் என்னசொல்ல வேண்டும்?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “அஸ்ஸலாமுஅலா அஹ்லிலித் தியாரி மினல்முஃமினீன வல் முஸ்லிலிமீன். வயர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீனமின்னா வல் முஸ்தஃகிரீன். வஇன்னா இன்ஷா அல்லாஹுபி(க்)கும் ல லாஹிகூன்” என்று சொல்” என்றார்கள்.

(பொருள்: அடக்கத் தலங்களில்உள்ளஇறைநம்பிக்கையாளர்களுக்கும்முஸ்லிலிம்களுக்கும் சாந்திபொழியட்டும்! நம்மில் முந்திச்சென்றுவிட்டவர்களுக்கும் பிந்திவருபவர்களுக்கும் அல்லாஹ்கருணை புரிவானாக! நாம்அல்லாஹ் நாடினால்உங்களுக்குப் பின்னால் வந்துசேரக்கூடியவர்களாக உள்ளோம்.)

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் (1774)

அடக்கத் தலங்களைச்சந்தியுங்கள். ஏனெனில், அவைமரணத்தை நினைவூட்டும்!’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் (1777)

அடக்கத்தலங்களை சந்திப்பதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன்.

முஹம்மதுவிற்கு அவரின்தாயாருடைய அடக்கத்தலத்தைசந்திப்பதற்கு அனுமதிதரப்பட்டுவிட்டது. எனவே நீங்கள்மண்ணறைகளை சந்தியுங்கள். அவை உங்களுக்கு மறுமையைநினைவூட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

நூல் : திர்மிதி (974)

மண்ணறைகளை ஜியாரத்செய்கிறோம் என்றுகூறிக்கொண்டு சில பெண்கள்தர்ஹாக்களுக்குச்செல்கிறார்கள். தர்ஹாக்களில்இணைவைப்புஅறங்கேற்றப்படுவதாலும்மார்க்கம் தடை செய்த ஏராளமானஅம்சங்கள் அங்குநடைபெறுவதாலும் அங்குஆண்களாக இருந்தாலும்பெண்களாக இருந்தாலும்செல்வது கூடாது. பொதுமையவாடிகளு
 க்குச்செல்லலாம்.

ஏகத்துவம்.

தக்க ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா?

பெண்களுக்கான நபிவழி சட்டங்கள்

தக்க ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா?

அறிஞர்களுக்கு மத்தியில் இது தொடர்பாக இரு கருத்துக்கள் நிலவுகின்றன.

ஹஜ் செய்யும் அளவுக்கு சக்தி இருந்தால் ஆண்களுக்கு ஹஜ் கடமையாகி விடும். ஆனால் பெண்களைப் பொருத்தவரை கணவன், திருமணம் செய்ய தடுக்கப்பட்ட உறவினர் துணை இருந்தால் தான் ஹஜ் கடமையாகும். இல்லாவிட்டால் கடமையாகாது என்று அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர்.

மற்ற பயணங்களுக்குத் தான் பெண்களுக்குத் தக்க ஆண் துணை அவ்சியம். ஹஜ் பயணம் பாதுகாப்பாக இருந்தால் ஆண் துணை இல்லாவிட்டாலும் பெண்கள் ஹஜ் செய்யலாம் என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்.

முதல் சாரார் முன்வைக்கும் வாதங்கள்!

ஒரு பெண் மஹ்ரமுடனே தவிர பயணம் செய்யக் கூடாது என்ற நபிமொழி பெண்களுக்கு ஒரு கட்டுப்பாட்டை, நிபந்தனையை விதித்து விடுகின்றது.

‘திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்கள் ஒரு பெண்மணி பயணம் மேற்கொள்ளக் கூடாது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1086, 1087

ஹஜ் பயணம் என்பது மூன்று நாட்களுக்கு மேற்பட்ட பயணம் என்பதால் இந்த ஹதீஸின் படி ஒரு பெண் ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாது என்பது இவர்களது வாதம்.

‘எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் தனித்திருக்க வேண்டாம். திருமணம் செய்யத் தகாத ஆண் உறவினருடன் தவிர எந்தவொரு பெண்ணும் பயணம் மேற்கொள்ள வேண்டாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்ட போது ஒரு மனிதர் எழுந்து ‘அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்ய நாடுகிறார்; நான் இன்னின்ன போர்களில் பங்கெடுக்க நாடுகிறேன்’ என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘நீர் புறப்பட்டுச் சென்று உம் மனைவியுடன் ஹஜ் செய்வீராக’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1862, 3006, 3061, 5233

ஒரு பெண் தனது கணவன் அல்லது மஹ்ரமான ஆண் துணையின்றி ஹஜ் செய்யக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவே உணர்த்தி விடுகிறார்கள்.

இவையே முதல் சாராரின் வாதங்களாகும்.

பெண்கள் துணையின்றி ஹஜ் செய்யலாம் என்று கூறும் இரண்டாவது சாராரின் ஆதாரங்களைப் பார்ப்போம்.

(கஅபா எனும்) அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை.

திருக்குர்ஆன் 3:97

இந்த வசனம் ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவாகவே ஹஜ்ஜைக் கடமையாக்குகின்றது.

மஹ்ரமான துணை அல்லது கணவனுடன் தான் ஹஜ் செய்ய வேண்டும் என்ற கருத்தில் முதல் சாரார் எடுத்து வைக்கும் ஹதீஸ்களுக்கு இவர்களின் பதில் வருமாறு:

பெண்கள் மஹ்ரமானவருடன் பயணிக்க வேண்டும் என்ற ஹதீஸ்கள் பொதுவான பயணத்தையே குறிக்கின்றன. அந்த ஹதீஸ்களுக்கு 3:97 வசனம் ஒரு விதிவிலக்கை ஏற்படுத்தி விடுகின்றது. அதாவது ஹஜ் பயணத்தைத் தவிர மற்ற பயணங்களில் மஹ்ரமானவர் அல்லது கணவர் இல்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது என்று தான் விளங்க வேண்டும் என்ற வாதத்தை இவர்கள் முன் வைக்கின்றனர்.

இதற்குச் சான்றாகப் பின்வரும் ஹதீஸையும் சமர்ப்பிக்கின்றனர்.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து வறுமை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘அதீயே! நீ ஹீராவைப் பார்த்ததுண்டா?’ என்று கேட்டார்கள். ‘நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால் அதைப் பற்றி எனக்குச் சொல்லப்பட்டு இருக்கின்றது’ என்று பதிலளித்தேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘நீ நீண்ட நாட்கள் வாழ்ந்தால் நீ நிச்சயம் பார்ப்பாய்!

ஒட்டகச் சிவிகையில் அமர்ந்து இருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்து ஹீராவில் இருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்ச மாட்டாள்’ என்று சொன்னார்கள். ‘அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட தய்யி குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?’ என்று நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன்.

அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ (பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதைப் பார்ப்பாய்’ என்று சொன்னார்கள். நான், ‘(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா (வெற்றி கொள்ளப்படுவார்)?’ என்று கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘கிஸ்ரா பின் ஹுர்முஸ் தான்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி)

நூல் : புகாரி 3595

இந்த ஹதீஸ் கூறுவது என்ன?

ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வழிப்பறி கொள்ளையைப் பற்றிக் கேட்கின்றார். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ தம்முடைய ஆட்சிக் காலத்திலும், தமக்குப் பின்னால் ஆட்சி செய்யவிருக்கும் அபூபக்ர், உமர் ஆகியோரின் ஆட்சிக் காலத்திலும் தலைநகராகத் திகழும் மதீனாவை நோக்கி ஒரு பெண் வருவாள் என்று குறிப்பிடவில்லை. இந்த இடத்தில் மதீனாவைக் குறிப்பிடுவதற்குத் தான் அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் வந்தவர் வழிப்பறி பற்றிக் கேட்கிறார். ‘அதற்குத் தீர்வு இஸ்லாம் தான்; இஸ்லாம் உலகெங்கும் பரவும்; அப்போது வழிப்பறி போய் விடும்; எனவே அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை’ இது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பதிலின் நோக்கம்.

அதற்கு அவர்கள் மதீனாவைக் கூட உதாரணமாகக் கூறத் தேவையில்லை. புகாரியின் 3612வது அறிவிப்பில் கூறுவது போல், ‘ஒருவர் ஸன்ஆவிலிருந்து ஹள்ர மவ்த் வரை பயணம் செய்து செல்வார். அல்லாஹ்வைத் தவிர அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார்’ என்று கூறியது போன்ற பதிலைச் சொல்லியிருக்கலாம். அல்லது ஒரு பெண் என்று சொல்லாமல் ஒருவர் என்று சொல்லி இருக்கலாம். அப்படிச் சொல்லாமல் ஒரு பெண் தன்னந்தனியாக ஹஜ் செய்ய வருவாள் என்று கூறுகிறார்கள்.

மதீனாவுக்கு வருவாள எனக் கூறாமல் கஅபாவுக்கு வருவாள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்தும்,

பொருள்களைச் சுமந்து வரும் வாணிபக் கூட்டத்தை உதாரணமாகக் காட்டாமல் ஒரு பெண்ணை உதாரணமாகக் காட்டி, அவள் கஅபாவை வலம் வருவாள் என்று கூறுவதிலிருந்தும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் ஒரு முன்னறிவிப்பை மட்டும் செய்யவில்லை; ஹஜ் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான சட்டத்தையும் சமுதாயத்திற்கு முன் வைக்கின்றார்கள்.

அது தான், ‘ஒரு பெண் தனியாக ஹஜ்ஜுக்குச் செல்லலாம்’ என்பதாகும்.

கஅபாவிற்கு வந்து தவாஃப் செய்யும் அந்தப் பெண், அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுவதன் மூலம், அப்பெண் சாதாரணமாக சுற்றுலா வருகின்ற ஓர் உல்லாசப் பயணி அல்ல; மாறாக அல்லாஹ்வை மிகவும் அஞ்சுகின்ற இறையச்சமிக்க பெண்மணி என்று நாம் விளங்கிக் கொள்கிறோம்.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தது போலவே, ‘ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவதற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) நான் பார்த்தேன்’ என்று அதீ பின் ஹாதிம் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நூல் : புகாரி 3595

எனவே ஒரு பெண் தன்னந்தனியாக ஹஜ்ஜுக்குச் செல்வது இகழுக்குரிய செயல் அல்ல; மாறாக புகழுக்குரிய செயல் தான் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

தடை செய்யப்பட்ட ஒரு காரியத்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறப்பித்து பாராட்டிச் சொல்ல மாட்டார்கள். இது ஒரு நல்ல காரியம் என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைச் சிறப்பித்துக் கூறுகின்றார்கள்.

எனவே இரண்டாவது சாராரின் ‘ஒரு பெண் மஹ்ரமான உறவினர் அல்லது கணவன் இல்லாமல் தனியாக ஹஜ் செய்யலாம்’ என்ற வாதம் ஏற்புடையதாக உள்ளது.

ஒரு சட்டம் சம்பந்தமாக இரண்டு மாறுபட்ட ஹதீஸ்கள் இருக்கும் போது இரண்டையும் இணைத்து ஓர் இணக்கமான கருத்தைக் காண்பதும் அதன்படி அமல் செய்வதும் ஹதீஸ்கலை அறிஞர்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஏகோபித்த முடிவாகும்.

உதாரணமாக, நின்று கொண்டு தண்ணீர் அருந்துவது தொடர்பாக மாறுபட்ட இரண்டு செய்திகள் உள்ளன.

நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

(நூல்: முஸ்லிம் 3771)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு தண்ணீர் அருந்தியதை நான் பார்த்தேன்என்று அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(நூல்: புகாரி 5615, 5616)

இப்படி மாறுபட்ட இரண்டு செய்திகள் வரும் போது, நின்று கொண்டு தண்ணீர் அருந்துவது கூடாது; அதே சமயம் உட்கார முடியாத கட்டத்தில் நின்று கொண்டு தண்ணீர் அருந்தினால் தவறில்லை என்று இரண்டு ஹதீஸ்களையும் இணைத்து ஒரு முடிவுக்கு வருகிறோம்.

இதே போல் பெண்கள் தனியாக ஹஜ் செய்வது தொடர்பான இந்த இரு ஹதீஸ்களையும் இணைத்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

ஒரு பெண் தனியாக ஹஜ் செய்யச் செல்லலாமா? என்றால் புகாரி 3595 ஹதீஸின் அடிப்படையில் செல்லலாம்; மார்க்கத்தில் இதற்கு அனுமதி உள்ளது; தடையில்லை; அதே சமயம் புகாரி 3006 ஹதீஸ் அடிப்படையில் ஒரு பெண் தன் கணவருடன் அல்லது மஹ்ரமான துணையுடன் ஹஜ் செய்யச் செல்வது சிறந்ததாகும்.

இப்படி ஒரு முடிவுக்கு வரும் போது இரண்டு விதமான ஹதீஸ்களில் எதையும் புறக்கணிக்கும் நிலை ஏற்படவில்லை; நாம் இரண்டு ஹதீஸ்களையும் செயல்படுத்தி விடுகின்றோம்.

ஒருவருக்கு ஹஜ் செய்வதற்கான பொருளாதாரம், உடல் வலிமை போன்றவை வந்து விடும் போது ஹஜ் கடமையாகின்றது என்று பார்த்தோம். பெண்களும் இதே நிபந்தனைகளை அடைந்து விட்டால் ஹஜ் செய்ய வேண்டும்.

எனினும் கணவனோ, அல்லது மஹ்ரமான துணையோ இல்லாமல் ஹஜ் செய்வது பாதுகாப்பானதில்லை என்று ஒரு பெண் கருதினால் அவர்களுக்குக் கடமையில்லை.

ஒரு பெண் தனியாகவே ஹஜ் செய்து வர முடியும்; தனக்குத் துணை எதுவும் தேவையில்லை என்று கருதினால் அதற்கு மார்க்கத்தில் தடையில்லை.

இந்த விஷயத்தில் தங்கள் பயணம் பாதுகாப்பானதா? என்பதை சம்பந்தப்பட்ட பெண் தான் இறையச்சத்திற்கு உட்பட்டு முடிவு செய்ய வேண்டும்.

ஏகத்துவம்.

திருமணம் செய்ய தடைசெய்யப்பட்டவர்களுடன் இருக்கும் போது…(ஹிஜாப்)

பெண்களுக்கான நபிவழி சட்டங்கள்

திருமணம் செய்ய தடைசெய்யப்பட்டவர்களுடன் இருக்கும் போது…(ஹிஜாப்)

திருமணம் செய்யதடைசெய்யப்பட்டவர்களுடன்இருக்கும் போது…

    பெண்கள் அண்ணிய ஆண்களிடம் முழுமையாக உடலை மறைக்க  வேண்டியதைப் போன்று திருமணம் செய்வதற்கு தடை செய்யப்பட்ட நெருங்கிய உறவினர்களிடம் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை பின் வரும் நபி மொழிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளுமாறும் தமதுகற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கைகொண்ட பெண்களுக்குக்கூறுவீராக! அவர்கள் தமதுஅலங்காரத்தில் வெளியேதெரிபவை தவிர மற்றவற்றைவெளிப்படுத்த வேண்டாம். தமதுமுக்காடுகளை மார்பின் மேல்போட்டுக் கொள்ளட்டும்.

தமது கணவர்கள், தமதுதந்தையர், தமதுகணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமதுகணவர்களின் புதல்வர்கள், தமதுசகோதரர்கள், தமதுசகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச்சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின்காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களைஅறிந்து கொள்ளாத குழந்தைகள்தவிர மற்றவர்களிடம் தமதுஅலங்காரத்தை அவர்கள்வெளிப்படுத்த வேண்டாம்.

அல்குர்ஆன் (24 : 31)

    நபி (ஸல்) அவர்கள் பாத்திமா (ரலி) அவர்களுக்கு ஒரு அடிமையை அன்பளிப்பாக கொடுத்தார்கள். பாத்திமா (ரலி) அவர்கள் மீது (சிறிய) ஆடை ஒன்று இருந்தது. அந்த ஆடை மூலம் அவர்கள் தலையை மூடினால் கால் வெளியே தெரிந்தது. காலைமூடினால் தலை தெரிந்தது. இதைநபி (ஸல்) அவர்கள் கவனித்தபோது  உன்னிடத்தில் உனதுதந்தையும் அடிமையும் தான்இருக்கிறார்கள். அதனால் உன்மீது குற்றம் இல்லை என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல்: அபூதாவூத் (3582) 

மற்ற பெண்களோடு நடந்துகொள்ளும் முறை

மஹ்ரமான ( அதாவது திருமணம்செய்வதற்கு தடை செய்யப்பட்ட) ஆண்கள் முன்னால் பெண்கள்முழுமையான பர்தாவைப் பேணவேண்டிய அவசியம் இல்லை. இவர்களுக்கு முன்னால் காட்சித்தருவதைப் போன்றே மற்றபெண்களுக்கு முன்னாலும்சாதாரணமான ஆடையில்பெண்கள் வருவது தவறுகிடையாது. 

தமது பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளுமாறும் தமதுகற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கைகொண்ட பெண்களுக்குக்கூறுவீராக! அவர்கள் தமதுஅலங்காரத்தில் வெளியேதெரிபவை தவிர மற்றவற்றைவெளிப்படுத்த வேண்டாம். தமதுமுக்காடுகளை மார்பின் மேல்போட்டுக் கொள்ளட்டும்.

தமது கணவர்கள், தமதுதந்தையர், தமதுகணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமதுகணவர்களின் புதல்வர்கள், தமதுசகோதரர்கள், தமதுசகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச்சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின்காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களைஅறிந்து கொள்ளாத குழந்தைகள்தவிர மற்றவர்களிடம் தமதுஅலங்காரத்தை அவர்கள்வெளிப்படுத்த வேண்டாம்.

அல்குர்ஆன் (24 : 31)

என்றாலும் அந்தரங்க உறுப்புக்களை பெண்கள் மற்ற பெண்களிடம் காட்டுவது கூடாது. இவளது மர்ம உறுப்பை பார்க்கும் உரிமை அவளது கணவனுக்குத் தவிர வேறு யாருக்கும் இல்லை. இதை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ளலம். 

எங்கள் மறை உறுப்புகளில் எதை மறைக்க வேண்டும் எவற்றை மறைக்காமல் இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன் அதற்கு நபி (ஸல்) அவர்கள் உன் மனைவிஉன் அடிமை பெண்களிடம் தவிரமற்றவர்களிடம் உன் மறைஉறுப்புக்களை பாதுகாத்து கொள்என்று விடையளித்தார்கள் ஒருஆண் இன்னொரு ஆணுடன்இருக்கும் போது மறை உறுப்பைகாத்து கொள்ள வேண்டுமா? என்று கேட்டேன் அதற்கு நபி (ஸல்) அவர்கள் எவரும் பார்க்க முடியாதவாறு உம்மால் மறைத்துக்கொள்ள முடியுமானால் மறைத்துக்கொள் என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் ; முஆவியா பின் ஹைதா (ரலி)

நூல் : திர்மிதி (2693)

ஒரு ஆண் மற்ற ஆண்களிடத்தில்மறை உறுப்பைவெளிப்படுத்துவதைதடுக்கப்பட்டுள்ளது. இதேச் சட்டம்பெண்களுக்கும் உரியதாகும். 

ஒரு ஆண் மற்றொரு ஆணுடையமறை உறுப்பை பார்க்க வேண்டாம்ஒரு பெண் மற்றொருபெண்ணுடைய மறும உறுப்பைபார்க்க வேண்டாம் ஒரு ஆன்மற்றொரு ஆணுடன் ஒருஆடைக்குள் படுக்க வேண்டாம்ஒரு பெண் மற்றொருபெண்ணோடு ஒரு ஆடைக்குள்படுக்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 512

ஒரே ஆடைக்குள் இரு பெண்கள் படுப்பது தவறு என்றும் மேலுள்ள ஹதீஸ் உணர்த்துகிறது.

ஏகத்துவம்.

காதலிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

பெண்களுக்கான நபிவழி சட்டங்கள், மார்க்க கேள்வி பதில்

காதலிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

காதல் என்பதற்கு ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புதல் என்றோ அல்லது ஒரு பெண் ஒரு ஆணை விரும்புதல் என்றோ பொருள் கொண்டால் அதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. இன்னும் சொல்லப் போனால் விரும்பித் தான் திருமணமே செய்ய வேண்டும். அதைதாண்டி காதல் என்ற பெயரில் தற்போது நடக்கும் செயல்களுக்கு அனுமதியில்லை.

இதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. வலிமையான ஒரே ஒரு ஆதாரத்தை மட்டும் இங்கே எடுத்துக் காட்டுகிறோம்.

காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்

!

திருக்குர்ஆன் 2:235

கணவனை இழந்த பெண்கள் மற்ற பெண்களை விட அதிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டவர்கள். அவர்கள் அலங்காரம் செய்யக்கூட அவர்களுக்கு அனுமதி இல்லை. கனவனை இழந்து இத்தாவில் இருக்கும் போது அவர்களைத் திருமணம் செய்து கொள்வதாக அவர்களிடம் ஆண்கள் வாக்களிக்கக் கூடாது; ஆனாலும் சாடைமாடையாக் பேசலாம் என்று அல்லாஹ் கூறுகிறான். இத்தாவில் இல்லாத மற்ற பெண்களிடம் ஆண்கள் பேசலாம் என்பதும் தந்து விருப்பத்தை அவர்களிடம் தெரிவிக்கலாம் என்பதும், திருமணம் செய்து கொள்வதாக வாக்களிக்கலாம் என்பது இந்த வசனத்தில் அடங்கியுள்ளது.

இது தான் அனுமதிக்கப்பட்ட காதல் என்பது.

இதைக் கடந்து திரும்ணத்துக்கு முன் ஒரு பெண்ணுடன் தனித்திருப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புஹாரி 3006

திருமணம் செய்யத் தடை செய்யப்பட்ட உறவினரின் முன்னிலையில் இல்லாமல் ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம் என்பதும் நபி மொழி

நூல்: புஹாரி 5233

இந்த நபிமொழி காதலுக்கு உரிய சரியான் எல்லைக் கோடாக அமைந்துள்ளது. தொலைபேசியில் இருவரும் தனியாகப் பேசுவதும் இதில் அடங்கும். ஏனெனில் நேரில் தனியாக இருக்கும் போது பேசும் எல்லாப் பேசுக்களையும் பேச வழிவகுக்கும். எனவே தன்னுடன் மற்றொருவரை வைத்துக் கொண்டே தவிர எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் பேசக் கூடாது. திருமணாம் செய்யத் தடை செய்யப்பட்ட உறவினரை அருகில் வைத்துக் கொள்ளச் சொல்வதற்குக் காரணம் எந்த வகையிலும் வரம்பு மீறிவிடக் கூடாது என்பதற்காகத் தான்.

இந்த வரம்பை மீறி சேர்ந்து ஊர் சுற்றுவது தனிமையில் இருப்பது, கணவன் மனைவிக்கிடையே மட்டும் பேசத்தக்கவைகளைப் பேசிக் கொள்வதற்கு அனுமதி இல்லை.

இதனால் பாரதூரமான் விளைவுகள் ஏற்படுவதையும் இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருமணத்துக்கு முன்பே எல்லை மீறிவிட்டால் ஆண்களுக்கு இயல்பாகவே ஈடுபாடு குறைந்து விடும். இதனால் திருமணம் நின்று போய்விடும். அப்போது பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

அவர்கள் உடலால் நெருங்காமல் தனியாக இருந்து பின்னர் திருமணம் தடை பட்டாலும் அதுவும் பெண்களைப் பாதிக்கும். ஏனெனில் எல்லாம் நடந்திருக்கும் என்று தான் மற்றவர்கள் நினைப்பார்கள்.

அல்லது மனதார விரும்பிய பெண் ஒழுக்கம் கெட்டவள் என்று தெரிய வரும் போது அவன் அப்பெண்ணை மறுக்கலாம். ஆனால் தனிமையில் இருவரும் இருந்ததைப் பயன்படுத்தி அப்பெண் மிரட்டலாம். இதனால் அவளை வலுக்கட்டாயமாக திரும்ணம் செய்யும் நிலை ஏற்படும். ஆனால் மற்றவர்கள் முன்னிலையில் தவிர எந்தச் சந்திப்பும் நடக்கவில்லை என்றால் இது போன்ற ஆபத்துகள் ஆண்களுக்கு ஏற்படாது.

பாலியல் பலாதகாரம் என்று கூறப்படும் பெரும்பாலானவை இந்த வகையைச் சேர்ந்தது தான். விரும்பி ஒருவனுடன் ஊர் சுற்றி விட்டு அவன் மணமுடிக்க மறுத்தால் இந்தப் புகாரை ஒரு ஆயுதமாகப் பெண்கள் பயன்படுத்துகிறார்கள்.

எனவே வரம்பு மீறிய காதல் என்பது மறுமையில் மட்டுமின்றி இவ்வுலகிலும் கேடாகவே முடியும்.

ஏகத்துவம்.

பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா?

பெண்களுக்கான நபிவழி சட்டம். மார்க்க கேள்வி பதில்

பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா?

அந்நியப் பெண்களை அழைத்துச் செல்வது கூடாது என்பது தெளிவானதாகும்.

மனைவி, தாய், மகள், சகோதரி போன்ற பெண்களாக இருந்தால் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வது குற்றமில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இரு சக்கர வாகனம் இருந்த்தில்லை. ஆனால் அவர்கள் காலத்தில் வழக்கத்தில் இருந்த ஒட்டகம் என்ற வாகனத்தில் தமது மனைவியை பின்னால் அமர வைத்து அழைத்துச் சென்றுள்ளதற்கு ஆதாரம் உள்ளது. இது டூ வீலருக்கும் பொருந்தும்.

5968 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபரிலிருந்து (மதீனாவை) நோக்கிப் புறப்பட்டோம். அபூதல்ஹா (ரலி) அவர்கள் சென்று கொண்டிருக்க, அவர்களுக்குப் பின்னால் நான் (வாகனத்தில்) அமர்ந்து கொண்டிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களுடைய ஒட்டகத்தில்) அவர்களின் துணைவியரில் ஒருவர் (ஸஃபிய்யா) அமர்ந்து கொண்டிருந்தார். அந்த ஒட்டகம் இடறிவிழுந்தது. நான் (அந்த ஒட்டகத்தில்) பெண் இருக்கிறாரே! என்று சொன்னேன்.

பிறகு நான் (என் வாகனத்திலிருந்து) இறங்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவர் உங்கள் அன்னை என்று சொனனார்கள். பிறகு, நான் சேணத்தைக் கட்டினேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஏறிக் கொண்டு) பயணம் செய்யலானார்கள்.

மதீனாவை நெருங்கிய போது பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாகவும் (நாங்கள் திரும்பிக் கொண்டிருக்கிறோம்) என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 5968

 ஏகத்துவம்.

பருவம் அடைந்த உடன் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கலாமா?

பெண்களுக்கான நபிவழி சட்டங்கள். மார்க்க கேள்வி பதில்

பருவம் அடைந்த உடன் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கலாமா?

பெண்கள் பத்து வயது முதல் 16 வயதுக்குள் பருவம் அடைவார்கள். இந்த வயதில் குடும்பத்தை நிர்வகிக்க முடியுமா? மன வளர்ச்சி அவர்களுக்கு இருக்குமா? பருவம் அடைந்த உடன் திருமணம் செய்து வைக்கலாம் என்ற அனுமதி சரியா?

பருவ வயது அடைந்து விட்டால் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்று இஸ்லாம் அனுமதித்துள்ளது. பதினெட்டு வயதில் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பல நாடுகளில் சட்டம் போடப்பட்டாலும் இஸ்லாம் இவ்வாறு கூறவில்லை.

சிறு வயதுப் பெண்ணுக்கு குடும்பத்தை நிர்வகிக்க முடியுமா? என்று கேட்டுள்ளீர்கள். குடும்ப நிர்வாகத்துக்காகத் தான் திருமணம் என்பது அடிப்படையில் தவறாகும். உடல் தேவைக்காகத் தான் திருமணம்.

எத்தனை வயதில் திருமணம் நடந்தாலும் அடுத்த நாளே பெண்களிடம் குடும்ப நிர்வாகத்தை எந்தக் குடும்பத்திலும் கொடுக்க மாட்டார்கள். 20 வயதில் திருமணம் நடந்தாலும் கூட உடனடியாக பொறுப்பைக் கொடுக்க மாட்டார்கள். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தான் நிர்வாகத்தை நடத்துவார்கள். பல வருட அனுபவத்துக்குப் பின்னர் தான் பெண்களுக்கு குடும்பப் பொறுப்பு வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் சொன்ன காரணம் ஏற்கத்தக்கது அல்ல.

ஆண்களை விட பெண்கள் உடலுறவுக்கு சீக்கிரம் தயாராகி விடுகிறார்கள் என்பது தான் அறிவியல் உண்மையாகும். மாதவிடாயின் அர்த்தமே இது தான்.

பருவம் அடையும் போது பெண்களிடம் மாதம் தோறும் சினைமுட்டைகள் உருவாகின்றன. அத்துடன் குழந்தை உருவானால் அக்குழந்தைக்கு சொகுசாக இருக்கும் வகையில் கருவறையின் உட்சுவற்றில் மென்மையாய ஒரு படலம் உருவாகின்றது. ஆணுடைய உயிரணுவுக்காக காத்திருக்கும் சினை முட்டை ஏமாற்றமடையும் போது கருவறையின் உட்சுவரில் ஏற்படுத்தப்பட்ட மெத்தை போன்ற படலம் கரைந்து மாதவிடாயாக வெளியேறுகிறது. ஒவ்வொரு மாதமும் குழந்தை உருவாவதை எதிர்பார்த்து கருவறை ஏமாற்றமடைவது தான் மாதவிடாய் எனப்படுகிறது.

ஊரும், உலகமும் என்ன சொன்னாலும் பெண்களின் உடற்கூறு சொல்லும் உண்மை இது தான். எனக்கு எப்போது ஒரு ஆண் துணை கிடைக்கும் என்று உடல் ஏங்கும் போது அதை இல்லை என மறுப்பது மடமை என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் பருவமடைந்து ஓரிரு வருடங்களில் சில பெண்கள் காதல் வயப்பட்டு ஓட்டம் பிடிக்கின்றனர்? மைனர் பெண் கடத்தல் என்று இதற்கு பொய்முலாம் பூசப்பட்டாலும் அந்தப் பெண் தனது உடல் தேவை காரணமாக அவளாகத்தான் ஓட்டம் பிடிக்கிறாள் என்பது கண் முன்னே தெரிகிறது. இந்த உண்மைக்கு மாற்றமாக 18 வயதில் தான் அவள் தயாராவாள் என்று கூறுவது அறியாமை அல்லவா?

தாமதமாக திருமணம் செய்வதால் கருவறையின் ஆற்றல் குறைந்து விடும் என்று ஒரு பக்கம் அறிவியலாளர்கள் சொல்லிக் கொண்டிருக்க அறிவாளிகள் என்ற போர்வையில் சிலர் 22 வயதுக்கு மேல் திருமணம் செய்யுங்கள் என்று உளறிக் கொண்டு இருக்கின்றனர்.

உடலாலும், மனதாலும் பெண்கள் திருமணத்துக்குத் தயாராகி விடுவதன் அடையாளமே பருவமடைதல் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாத காரணத்தால் பெண்களுக்கு கொடுமைதான் இழைக்கின்றனர்.

ஆண்கள் 60 வயதுகளிலும் கூட உடலுறவு கொள்ள முடியும். ஆனால் பெண்கள் மாதவிடாய் நின்றவுடன் அதற்கான தகுதியை இழந்து விடுகின்றனர். அதாவது 25 வயதில் அவர்களுக்கு திருமணம் செய்தால் 45 வயதோடு எல்லாம் முடிந்து விடும். 15 வயதில் திருமணம் செய்தால் முப்பது ஆண்டுகள் அவர்களுக்கு இல்லறத்தின் பயன் கிடைக்கும். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆணுக்கும், பெண்ணுக்கும் சம உரிமை கோரும் அறிவாளிகள் ஆணுக்குச் சமமாக பெண்களுக்கு இல்லற சுகம் கிடைக்க தடையாக உள்ளனர். ஆண்களுக்கு 35 வருட இல்லற சுகம், பெண்களுக்கு 15 வருட இல்லற சுகம் என்பது சமநீதியாகவும் இல்லை.

இயற்கையை எதிர்த்து நிற்கக் கூடாது. மரங்களை வெட்டக் கூடாது என்றெல்லாம் கூப்பாடு போடும் அறிவு ஜீவிகள் பெண்கள் விஷயத்தில் மட்டும் இயற்கையை எதிர்த்து நின்று பெண்களுக்கு கேடு விளைவிக்கின்றனர்.

இருபது வயதுக்குள் குழந்தை பெற்றால் தான் அது பெண்ணின் உடல் நலத்துக்கும் ஏற்றது. அந்தக் குழந்தை வளர்ந்து தாயைக் கவனிக்கும் நிலை ஏற்படும். இதையும் கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏகத்துவம்.

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மறுக்கலாமா?

பெண்களுக்கான நபிவழி சட்டங்கள். மார்க்க கேள்வி பதில்

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மறுக்கலாமா?

என் விருப்பமின்றி பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். எனக்கு இஸ்லாத்தில் உள்ள உரிமை என்ன?

தனக்குப் பிடித்தவரைக் கணவனாக தேர்வு செய்ய பெண்ணிற்கு இஸ்லாத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண்ணுடைய விருப்பமில்லாமல் நடத்தப்படும் திருமணம் செல்லாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

கன்னி கழிந்த பெண்ணை, அவளது உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடமும் அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (சல்) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதரே! கன்னியின் அனுமதி எப்படி? என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவளது மௌனமே (சம்மதம்) என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 5136

கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு இதில் விருப்பமில்லை. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அத்திருமணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.

அறிவிப்பவர் : கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா (ரலி)

நூல் : புகாரி 5138

எனவே உங்கள் வீட்டார் கூறுகின்ற மாப்பிள்ளையைத் தேர்வு செய்வதற்கும், மறுப்பதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு.

உங்கள் பெற்றோர்கள் நிர்பந்தப்படுத்தினால் இத்திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என அவர்களிடம் நீங்கள் நேரடியாகவே கூறலாம். அல்லது உங்கள் பகுதியில் உள்ள ஜமாஅத்தார்களிடம் முறையிடலாம்.

ஏகத்துவம்.

திருமணம் கட்டாயமா? மணமுடிக்க உரிய சக்தி எது?

பெண்களுக்கான நபிவழி சட்டங்கள். மார்க்க கேள்வி-பதில்

திருமணம் கட்டாயமா? மணமுடிக்க உரிய சக்தி எது?

திருமணம் செய்வதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. திருமணம் செய்து கொள்ளுமாறு வாலிபர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்:

உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் (24 : 32)

 

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்:

நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் “இளைஞர்களே! திருமணம் செய்துகொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்”என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (5066)

மேலும் திருணம் செய்துகொள்வது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும். தனக்கு திருமணம் செய்துகொள்ள சக்தியிருந்தும் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் அவர் தன்னைச் சார்ந்தவர் இல்லை என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

அனஸ்  பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), “முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர்.

அவர்களில் ஒருவர், “(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்”என்றார்.

இன்னொருவர், “நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்” என்று கூறினார்.

மூன்றாம் நபர் “நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்” என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, “இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்”என்று சொன்னார்கள்.

திருமணம் செய்வது நபி (ஸல்) அவர்களின் வழி மட்டுமல்ல. அனைத்து நபிமார்களின் வழிமுறையாகும்.

 

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும்,மக்களையும் ஏற்படுத்தினோம்.

அல்குர்ஆன் (13 : 38)

திருமணம் செய்ய சக்தி இருந்தும் அதை செய்து கொள்ளாதவன் துறவறத்தை மேற்கொள்பவனாவான். இவனால் ஒழுக்கமாக வாழ முடியாது என்று அல்லாஹ் கூறுகிறான். இந்த துறவறத்தை நபி (ஸல்) அவர்களும் தடைசெய்தார்கள்.

 

தாமாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். அதைக் கூட பேண வேண்டிய விதத்தில் பேணவில்லை. அல்லாஹ்வின் திருப்தியைத் தேடுவதைத் தவிர (வேறெதையும்) அவர்கள் மீது நாம் விதியாக்கவில்லை. அவர்களில் நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களின் கூலியைக் கொடுத்தோம். அவர்களில் அதிகமானோர் குற்றவாளிகள்.

அல்குர்ஆன் (57 : 27)

 

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் துறவறம் மேற்கொள்ள (விரும்பி அனுமதி கேட்ட போது) நபி (ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள். அவருக்கு (மட்டும்) நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம்.

நூல்: புகாரி (5073)

எனவே திருமணம் என்பது நாம் ஒவ்வொருவரும் செய்துகொள்ள வேண்டிய கடமையாகும்.

 

நஸாயீ கிரந்தத்தில் இடம் பெற்றுள்ள ஒரு அறிவிப்பில் உங்களில் வசதி படைத்தவர் திருமணம் முடித்துக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் திருமணம் முடிக்க இயலாதவர்கள் நோன்பு நோற்கட்டும், ஏனென்றால் அது அவருடைய ஆசையை கட்டுப்படுத்தும் என்று ஹதீஸில் கூறப்படுகிறது.

அதாவது திருமணம் முடிக்க இயலாத போது பாலுணர்வை அடக்க நோன்பு வைக்க வேண்டும்.  ஹதீஸில் சொல்லப்படும் திருமணத்துக்கான சக்தி என்பதற்கு ”பொருளாதாரம் மற்றும் உடல்ரீதியான தகுதி ஆகிய இரண்டும் அடங்கும்”.

அதனால்தான் நபி (ஸல்) அவர்கள், ”அவ்வாறு நோன்பு நோற்பது உங்களது இச்சையைகட்டுப்படுத்தும்” என்று கூறிக் காட்டியுள்ளார்கள்.

”இச்சையைக் கட்டுப்படுத்தும்” என்கின்ற வார்த்தை பிரயோகத்திலிருந்தே, உடலுறவு கொள்ள சக்தி பெற்றவர்கள் தான் திருமணம் முடிக்க வேண்டும் என்ற கட்டளையும் மறைமுகமாக அதில் அடங்கிவிடுகின்றது.
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன் 30:21)

மேற்கண்ட வசனத்திலும் அமைதி பெற துணைகளை ஏற்படுத்தியிருப்பதாக இறைவன் கூறிக்காட்டுகின்றான். உடல்ரீதியான இன்பத்தை கணவன் மனைவி இருவரும் பரிமாரிக்கொள்ளவில்லை என்றால் அமைதியில்லாத வாழ்க்கையாக அது மாறிவிடும். இதனால் திருமணத்தின் நோக்கமே சிதைந்து விடுகின்றது. இந்தவசனத்தின் அடிப்படையிலும் உடல்ரீதியான தகுதி இன்றியமையாததாக ஆகிவிடுகின்றது.

திருமணம் என்பதே ஒரு கடுமையான உடன்படிக்கை என்று இஸ்லாம் சொல்லிக்காட்டுகின்றது. உடல்ரீதியான இன்பத்தை கணவன் மனைவி இருவரும் இருவருக்கும் வழங்கிக்கொள்வோம் என்பதும் இந்த உடன்படிக்கையில் பிரதானமாகும். அப்படி இருக்கையில், உடல்ரீதியான தகுதி தனக்கு இல்லை என்று ஒரு ஆண் தனக்கு தெரிந்த நிலையிலும், அதை மறைத்து ஒரு பெண்ணை மணம் முடிப்பானேயானால்  அது மிகப்பெரிய நம்பிக்கை மோசடியாக கருதப்படும். மேற்கண்ட காரணங்களாலும் திருமணத்திற்குரிய சக்தி என்பதில் அதற்கு தேவையான பொருளாதாரம் மற்றும் உடற்கூறு ரீதியான இரண்டு தகுதிகளையும் தான் நபி(ஸல்) அவர்கள் கூறிக்காட்டியுள்ளார்கள் என்பதை சந்தேகமற விளங்கிக்கொள்ளலம்.

ஏகத்துவம்.