பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Friday, December 6, 2019

ஸியாரத் ஒரு நபிவழியல்லவா❓

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத் செய்யுமாறு கூறியுள்ளனர். அந்த அடிப்படையில் நல்லடியார்களின் அடக்கத்தலம் சென்று ஸியாரத் செய்வதும், அவர்களது துஆக்களை வேண்டுவதும் எப்படித் தவறாகும் என்று சிலர் கேட்கின்றனர்.

இந்த வாதத்திலும் பல தவறுகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலம் வரை அல்லாஹ்விடம் தங்களுக்காகச் துஆச் செய்யுமாறு நபித்தோழர்கள் கேட்டதுண்டு. இதற்கு ஆதாரங்கள் உள்ளன.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின்பு அவர்களது அடக்கத்தலம் வந்து நபித்தோழர்கள் யாரும் எங்களுக்காக துஆச் செய்யுங்கள் என்று கேட்டதில்லை. அடக்கத்தலம் வராமல் இருந்த இடத்திலிருந்தும் இவ்வாறு கேட்டதில்லை.

எனவே ஸியாரத் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்தால் அதை மற்றொரு செயலைச் செய்வதற்கு ஆதாரமாகக் காட்டக் கூடாது.

இனி ஸியாரத் விஷயத்திற்கு வருவோம்.

அடக்கத்தலங்களை ஸியாரத் செய்வதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். அறிந்து கொள்க! இனிமேல் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யுங்கள்! ஏனெனில் அது மறுமையை நினைவு படுத்தும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: திர்மிதி 974

இது தான் ஸியாரத் பற்றி பல்வேறு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸாகும்.

ஆரம்ப காலத்தில் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்வது தடை செய்யப்பட்டிருந்தது. பின்னர் தான் இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அனுமதி வழங்கினார்கள்.

இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்காமல் ஆழமாக ஆய்வு செய்தால் இந்த ஹதீஸ் அடக்கத்தலங்களில் பிரார்த்தனை செய்வதற்கு எதிரானதாக அமைந்துள்ளதைக் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத்தை அனுமதிக்கும் போது அனுமதி அளிப்பதற்குரிய காரணத்தையும் சேர்த்துக் கூறியுள்ளனர். இது முதலில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

மறுமையை நினைவுபடுத்தும் என்பது தான் அவர்கள் கூறிய காரணம். வேறு சில அறிவிப்புகளில் மரணத்தை நினைவு படுத்தும் என்றும் மற்றும் சில அறிவிப்புகளில் உலகப் பற்றைக் குறைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அடக்கத் தலங்களுக்கு நாம் செல்லும் போது ‘இவர்களைப் போல் நாமும் ஒரு நாள் மரணிக்க வேண்டி வரும்’ என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்வது தான் ஸியாரத் அனுமதிக்கப்பட்டதற்கான ஒரே காரணம்.

அடக்கம் செய்யப்பட்டவர்கள் மகான்கள் என்பதற்காகவோ, அல்லது அவர்களின் ஆசியை வேண்டுவதற்காகவோ இந்த அனுமதி அளிக்கப்படவில்லை.

இன்னும் தெளிவாகக் கூறுவதென்றால் நல்லடியார்களின் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யுங்கள் எனக் கூறாமல் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யுங்கள் என்று பொதுவாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே இந்த அனுமதி பொதுமக்கள் அடக்கப்பட்டுள்ள பொது அடக்கத்தலத்தையே குறிக்கிறது.

ஸியாரத் என்ற இந்த நபிவழியை நடை முறைப்படுத்துவதற்காக எந்த வெளியூருக்கும் போகத் தேவையில்லை. எந்த ஊராக இருந்தாலும் அங்கே நிச்சயம் அடக்கத்தலம் இருக்கத் தான் செய்யும். அங்கே போய் வந்தால் ஸியாரத் செய்த நன்மையைப் பெற்று விடலாம்.

இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் தர்காக்களுக்குச் செல்வதால் நபிகள் நாயகம் (ஸல்) கூறிய நோக்கம் நிறைவேறாது என்று கூற முடியும்.

ஏனெனில் அங்கே நடக்கும் காரியங்கள் மறுமையின் நினைவை மறக்கச் செய்வதாகவே உள்ளன. ஆடம்பரமான கட்டடங்கள் நறுமணப் புகை, ஆண்களும் பெண்களும் ஒட்டி உரசிக் கொள்வது, சிறப்பான நாட்களில் நடக்கும் ஆடல் பாடல் ஆபாசக் கூத்துக்கள் யாவும் மறுமையின் சிந்தனையை மறக்கடிக்கச் செய்வதாகவே உள்ளன.

எந்த நோக்கத்துக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத் செய்ய அனுமதித்தார்களோ அந்த நோக்கத்தை தர்காக்கள் நாசப்படுத்துகின்றன என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது.

நல்லடியார்களின் அடக்கத்தலம் செல்வது தான் ஸியாரத் என்று நினைப்பது முற்றிலும் தவறானது என்பதற்கு மற்றொரு நபிமொழியும் சான்றாகவுள்ளது.

என் தாயாருக்கு பாவ மன்னிப்புத் தேட அல்லாஹ்விடம் நான் அனுமதி கேட்டேன். அவன் அனுமதிக்க மறுத்து விட்டான். என் தாயாரின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்ய அனுமதி கேட்டேன். அல்லாஹ் அனுமதித்தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1621, 1622

எந்த ஒரு முஸ்லிமுடைய பாவத்துக்காகவும் பாவ மன்னிப்புத் தேடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாதவர்களுக்காக மட்டுமே பாவ மன்னிப்புத் தேடுவது தடுக்கப்பட்டுள்ளது.

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.

(அல்குர்ஆன் 9:113)

நபிகள் நாயகத்தின் தாயாருக்காக பாவ மன்னிப்புத் தேட அல்லாஹ் அனுமதி மறுக்கிறான் என்பதிலிருந்து அவர்கள் முஸ்லிமாக இருக்கவில்லை என விளங்கலாம். முஸ்லிமாக இல்லாத தாயாரின் அடக்கத் தலத்தை ஸியாரத் செய்வதற்கு அல்லாஹ் அனுமதி அளித்துள்ளதிலிருந்து ஸியாரத்தின் நோக்கத்தை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஸியாரத் நல்லடியார்கள் என்பதற்காக நடத்தப்பட வேண்டிய காரியமல்ல. மாறாக மரணத்தை நினைவுபடுத்தும் காரியமே. முஸ்லிமல்லாதவர்களின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்தும் கூட இந்த நோக்கத்தை அடைந்து கொள்ளலாம் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தர்காக்கள் குறித்து கடுமையான எச்சரிக்கை செய்துள்ளனர். தர்காக்கள் இருக்கவே கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். அவ்வாறிருக்க இடிக்க வேண்டிய ஒன்றை ஸியாரத் செய்யுங்கள் என்று கூறியிருப்பார்களா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

கப்ருகள் கட்டப்படுவதையும், கப்ருகள் பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1610,

தங்கள் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816,

அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 427, 434, 1341, 3873,

இறைவா! எனது அடக்கத் தலத்தை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: முஸ்னத் அல் ஹுமைதி

என்றெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) எதைத் தடை செய்தார்களோ அதைத் தேடிச் செல்வதை வணக்கமாகக் கருதுவது தகுமா? என்று சிந்திக்க வேண்டும்.

எனவே ஸியாரத்துக்கும் அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் போய் பிரார்த்தனை செய்வதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

இஸ்லாத்தின் அடிப்படைகள்

*⚔🛡பத்ரு தோழர்கள் Q & A வழங்கும்*🛡⚔


*🕋🕋🕋இஸ்லாத்தின் அடிப்படைகள்🕋🕋🕋*

இஸ்லாத்தின் அடிப்படைகள்

 *நாம் எதைப் பின்பற்ற வேண்டும்?* 

நாம் அல்லாஹ்விடமிருந்து வந்த இறைச் செய்திகளை மட்டும்தான் பின்பற்ற வேண்டும்.

 

تَّبِعُوا مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ قَلِيلًا مَا تَذَكَّرُونَ} ளالأعراف: 3
 
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!

 *(அல்குர்ஆன் 7:3)* 

திருமறைக்குர்ஆனும், மார்க்கமாக நபியவர்கள் வழிகாட்டியவைகளும் இறைச் செய்திகள் ஆகும்.

 

நபியவர்கள் மார்க்கமாகப் போதித்தவை இறைச் செய்தி என்பதற்கு ஆதாரம் என்ன?

 

وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى (3) إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى } ளالنجم: 3، 4
 
அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை

 *(அல்குர்ஆன் 53:3,4)* 

 

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ شَيْءٌ مِنْ أَمْرِ دُنْيَاكُمْ فَأَنْتُمْ أَعْلَمُ بِهِ فَإِذَا كَانَ مِنْ أَمْرِ دِينِكُمْ فَإِلَيَّ
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்கள் உலக காரியங்களில் ஏதேனும் ஒரு காரியமாக இருக்குமென்றால் நீங்கள்தான் அதனை மிகவும் அறிந்தவர்கள். உங்கள் மார்க்க விஷயமாக இருந்தால் என்னிடம்தான் கேட்க வேண்டும்.

 *அறிவிப்பவர்:அனஸ் (ர­)  நூல்:அஹ்மத் (12086)* 

 

مَا قُلْتُ لَكُمْ قَالَ اللَّهُ فَلَنْ أَكْذِبَ عَلَى اللَّهِ
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நான் அல்லாஹ் கூறியதாக உங்களுக்கு கூறுபவற்றை (பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.) ஏனெனில் நான் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறவே மாட்டேன்.

 *அறிவிப்பவர்:தல்ஹா பின் உபைதில்லாஹ் (ர­) நூல்:இப்னு மாஜா(2461)* 

 

 *ஹதீஸ் என்றால் என்ன?* 

நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றைப் பற்றி அறிவிக்கப்படும செய்திகளே ஹதீஸ் எனப்படும். இதுவே நாம் மார்க்கமாகப் பின்பற்ற வேண்டியதற்குப் போதுமானதாகும். நபியவர்களின் உடல் தோற்றம் பற்றிய வர்ணணைகளையும் ஹதீஸ் என்று கூறுவார்கள்.

 

 *நாம் குர்ஆன், ஹதீஸை மட்டும்தான் பின்பற்ற வேண்டும் என்பதற்கு ஆதாரம் என்ன?* 

அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட இந்த இஸ்லாமிய மார்க்கத்தை அல்லாஹ், தன் வேதமான திருக்குர்ஆன் மூலமும் அவனது தூதர் நபி (ஸல்) அவர்கள் மூலமும் காட்டித்தந்துள்ளான்.

இந்த இரண்டும்தான் இஸ்லாத்தின் அடிப்படையாகும். இந்த இரண்டை மட்டும்தான் முஸ்­ம்கள் பின்பற்றவேண்டும். இவ்வாறு அல்லாஹ் திருக்குர்ஆனில் ஏராளமான வசனங்களில் குறிப்பிட்டுள்ளான்.

 

وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِنْ كُنتُمْ مُؤْمِنِينَ(1) سورة الأنفال
 
நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! 

 *(அல்குர்ஆன் 8:1)* 

 

وَمَنْ يُطِعْ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ(13) سورة النساء
 
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.   
                         *(அல்குர்ஆன் 4:13)* 


 *அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படாதவனுடைய நிலை என்ன?* 

இஸ்லாத்தின் அடிப்படையாக உள்ள,  இறைவனின் வாக்கான திருக்குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளை பின்பற்றாதவனை திருக்குர்ஆன் கடுமையாக எச்சரிக்கிறது.

 

وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ(14) سورة النساء
 
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.     

                            *(அல்குர்ஆன் 4:14)* 

 

وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ لَهُ نَارَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أَبَدًا(23) سورة الجن
 
அல்லாஹ்விடமிருந்தும், அவன் தூதுச் செய்திகளி­ருந்தும் எடுத்துச் சொல்வதைத் தவிர (வேறு இல்லை). அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்வோருக்கு நரக நெருப்பு உள்ளது. அதில் என்றென்றும் அவர் நிரந்தரமாக இருப்பார். 

 *(அல்குர்ஆன் 72:23)* 

 

 *முன்னோர்களின் நடைமுறைகளை மார்க்கமாகப் பின்பற்றலாமா?* 

அல்லாஹ்வின் வஹிச் செய்தியான திருமறைக்குர்ஆன் மற்றும் நபியவர்களின் வழிமுறை ஆகிய இரண்டை மற்றுமே நாம் பின்பற்ற வேண்டும். இவ்விரண்டிற்கு மாற்றமாக முன்னோர்களின் வழிமுறைகளை மார்க்கமாகக் கருதி பின்பற்றுவது கூடாது.

 

 

وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ(104) سورة المائدة
 
”அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டால் ”எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்” என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?        
                         *(அல்குர்ஆன் 5:104)* 

 

يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَالَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَ(66)وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَ(67)رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنْ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا(68) سورة الأحزاب
 
அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ”நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுவார்கள். ”எங்கள் இறைவா! எங்கள் தலை வர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்” எனவும் கூறுவார்கள். ”எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!” எனவும் கூறுவார்கள்.                 

 *(அல்குர்ஆன் 33:66…68)* 

 

 *பெரும்பான்மை மக்கள் ஒரு காரியத்தைச் செய்தால் அதனை மார்க்கமாகப் பின்பற்றலாமா?* 

குர்ஆன், ஹதீஸ் ஆதாரமில்லாமல் உலகமே சேர்ந்து ஒரு காரியத்தைச் செய்தாலும் அதனை மார்க்கமாகப் பின்பற்றுவது கூடாது. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் சொன்னவை மட்டுமே மார்க்கமாகும்.

 

وَإِنْ تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ(116) سورة الأنعام
 
பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையி­ருந்து வழி கெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை.

 *(அல்குர்ஆன் 6 : 116)* 


 *முஸ்­ம்களுக்கு மத்தியில் பிரச்சினைகள் ஏற்பட்டால் எதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டும்.?* 

நமக்கு மத்தியில் பிரச்சனைகள் ஏற்படும்போது திருக்குர்ஆனையும் நபிமொழியையும் வைத்தே எக்கருத்து சரியானது என்பதை முடிவு செய்யவேண்டும். இவ்வாறே திருக்குர்ஆன் வழிகாட்டுகிறது.

 

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُوْلِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا(59) سورة النساء
 
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.    
                                      *(அல்குர்ஆன் 4:59)* 

 

 *அல்லாஹ் இஸ்லாமிய மார்க்கத்தை முழுமைப் படுத்திவிட்டானா? இல்லையா?* 

 

மார்க்கம் என்பது நாயகம்(ஸல்) அவர்களோடு முழுமைப்படுத்தப்பட்டு விட்டது. இனி இம்மார்க்கத்தில் ஒன்றைக் கூட்டுவதற்கோ குறைப்பதற்கோ யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது.

 

 

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا … (3) سورة  المائدة
 
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.                              

 *(அல்குர்ஆன் 5:3)* 

            நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான  ( தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள்.

அறிவிப்பவர் :  இர்பாள் பின் ஸாரியா(ர­)

 *நூல் : அஹ்மத் (16519)* 

 

 *அல்லாஹ் அல்லாதவர்களின் கருத்தை மார்க்கச் சட்டமாக்குவது இணைவைத்தலா?* 

ஆம்! அல்லாஹ் அல்லாதவர்களின் கருத்தை மார்க்கச் சட்டமாக்குவது இணைவைத்தலாகும்.

 

 

أَمْ لَهُمْ شُرَكَاءُ شَرَعُوا لَهُمْ مِنَ الدِّينِ مَا لَمْ يَأْذَنْ بِهِ اللَّهُ وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِيَ بَيْنَهُمْ وَإِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ  ளالشورى/21
 
            அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது


 *(அல்குர்ஆன் 42 ் 21)* 

 

 *பித்அத் என்றால் என்ன?* 

அல்லாஹ்வாலும், அல்லாஹ்வின் தூதராலும் மார்க்கமாக வழிகாட்டப்படாமல், நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் மார்க்கம் என்ற பெயரில் புதிதாக உருவாக்கப்பட்ட விசயங்களே பித்அத் எனப்படும்.

நாயகம்(ஸல்) அவர்கள் பித்அத்தான காரியங்களை விட்டும் எச்சரிக்கை செய்கிறார்கள்.

நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

 *அறிவிப்பவர் : ஜாபிர் (ர­)  நூல் : நஸயீ (1560)* 



 *பித்அத்தான காரியங்களைச் செய்தால் அது அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படுமா?* 

முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கமான இஸ்லாத்தில் இல்லாத காரியங்களை மார்க்கம் என்று கருதி செய்தால் அது அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படாது.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படவேண்டியதே!

 *அறிவிப்பவர்  : ஆயிஷா(ர­)   நூல் : புகாரீ (2697)* 

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : நம் கட்டளையில்லாத  காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும். 

 *அறிவிப்பவர்  : ஆயிஷா(ர­)  நூல் : முஸ்­ம் (3243)* 

 

 *இன்றைக்கு இஸ்லாமிய சமுதாயத்தில் காணப்படக்கூடிய சில பித்அத்தான காரியங்களை கூறுக.* 

இன்று நம் சமுதாயத்தில் குர்ஆனுக்கும் நபி வழிக்கும் மாற்றமான எத்தனையோ புதுமையான நடைமுறைகள் காணப்படுகின்றன அவற்றில் சிலவற்றைக் காண்போம் :    

பாங்குக்கு முன் ஸலவாத் கூறுவது  ஜுமுஆவில் இரண்டு பாங்கு கூறுதல் தொழுகைக்கு பின் கூட்டு துஆ ஓதுதல்,  ஷஅபான் பிறை *15,ரஜப் பிறை 27* இரவுகளில் நின்று வணங்கி பக­ல் நோன்பு நோற்றல்   *இறந்தவருக்கு 40* நாட்கள் தொடர்ந்து ஃபாத்திஹா ஓதுதல் வருடாந்திர *ஃபாத்திஹா ஓதுதல்,* *மவ்லீது ஓதுதல், மீலாது விழா கொண்டாடுதல்,* *ஸலாத்துன்னாரிய்யா* ஓதுதல் இதைப்போன்று எத்தனையோ செயல்கள் மார்க்கத்தின் பெயரால் நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவற்றிக்கும் நன்மை கிடைக்காது என்போதோடு தண்டனையும் உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 *அது மட்டுமல்ல, மத்ஹபு ரீதியாகவும் சமுதாயம் பிரிந்து கிடக்கின்றனர். ஷாஃபி, ஹனஃபி, ஹன்ப­, மா­கி என்று பல பிரிவுகளாகப் பிரிந்து மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களை மார்க்கம் என்ற பெயரில் செய்கின்றனர்.* 

நான்கு மத்ஹபில் உள்ள எத்தனையோ சட்டங்கள் குர்ஆனுக்கும் நபிவழிக்கும் மாற்றமாக இருந்தாலும் குர்ஆன் சுன்னாவை தூக்கி எறிந்து விட்டு மத்ஹபுகளைப் பின்பற்றக்கூடிய அவல நிலையையும் காண்கிறோம்.

அல்குர்ஆனும் நபிவழியும் மார்க்கம் என்பதை அறியாததினால்தான் இந்நிலை காணப்படுகிறது. நாம் நம்முடைய வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் குர்ஆனையும் நபிவழியையும் மட்டுமே பின்பற்றி நடக்கவேண்டும்.

 

 *குர்ஆனுடன் நபிவழியும் அவசியமா?* 

 

وَأَنْزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ ளالنحل/44
 
மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

 *(அல்குர்ஆன் 16:44)* 

முஹம்மதே! உமக்கு வேதத்தை அளித்தது, நீர் விளக்குவதற்காகவும், அவர்கள் சிந்திப்பதற்காகவும் தான் என்று இவ்வசனம் மிகத் தெளிவாகக் கூறுகிறது. எனவே நபிகள் நாயகத்தின் விளக்கம் இல்லாமல் நாம் திருக்குர்ஆனை விளங்கிக் கொள்ள முடியாது. எனவே திருக்குர்ஆனுடன் நபிகள் நாயகத்தின் வழிமுறையும் அவசியமானதாகும். மேலும்

 

لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا ளالأحزاب/21
 
 

அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.

 *(அல்குர்ஆன் 33:21)* 

உஸ்வத் லி முன்மாதிரி என்றால் ஒருவரது செயலை நடவடிக்கைகளைப் பார்த்து அவரை அப்படியே பின்பற்றி நடப்பதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய முன்மாதிரியான வாழ்க்கை ஹதீஸ்களில் தான் கிடைக்கும். எனவே குர்ஆனுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் அவசியத்திலும் அவசியம் . நபியவர்களின் வழிகாட்டுதல் வேண்டாம். குர்ஆன் மட்டும் போதும் என்று கூறும் ”அஹ்லுல் குர்ஆன்” கொள்கையினர் குர்ஆனை மறுக்கும் காஃபிர்கள் ஆவர்.

 

 *நபித்தோழர்களாகிய ஸஹாபாக்களை நாம் எவ்வாறு மதிக்க வேண்டும்?* 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலகட்டத்தில் வாழ்ந்த ஸஹாபாக்கள் சமுதாயம் இவ்வுலகில் கியாமத் நாள் வரை தோன்றவிருக்கும் சமுதாயங்களிலே மிகச் சிறந்தவர்கள் என்று நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

 

قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُكُمْ قَرْنِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்.

 *அறிவிப்பவர்:இம்ரான் பின் ஹுஸைன் (ர­)  நூல்:புகாரி (2651)* 


 *ஸஹாபாக்களின் சொந்தக் கருத்துக்களை நாம் மார்க்கமாகப் பின்பற்றுவது அவசியமா?* 

அல்லாஹ்விடம் இருந்து இறக்கிய அருளப்பெற்ற வஹி என்ற இறைச் செய்தி மட்டும்தான் இஸ்லாம் ஆகும். இதைத் தவிர வேறு யாருடைய கருத்துக்களையும் நாம் இஸ்லாம் என்று கருவது கூடாது.

 

تَّبِعُوا مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ قَلِيلًا مَا تَذَكَّرُونَ} ளالأعراف: 3ன
 
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!

 *(அல்குர்ஆன் 7:3)* 

 நபித்தோழர்களாகிய ஸஹாபாக்களுக்கு அல்லாஹ்விடம் இருந்து இறைச்செய்திகள் அருளப்படவில்லை. எனவே ஸஹாபாக்களின் சொந்தக் கருத்துக்களை நாம் மார்க்கமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

 *குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஸஹாபாக்களும் அவர்களுக்குப் பின்வந்த நல்லறிஞர்களும் மார்க்கத் தீர்ப்புகளை வழங்கியிருந்தால் அதனை நாம் ஏற்றுக் கொள்ளலாம். மாற்றமாக இருந்தால் குர்ஆன், ஹதீஸிற்கே முக்கியத்துவம் வழங்க வேண்டும்.* 

 

 *அல்லாஹ் எத்தகைய ஸஹாபாக்களை பொருந்திக் கொண்டதாக திருமறைக் குர்ஆனில் கூறுகிறான்.?* 

 

وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ ளالتوبة/100
 
ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

 *(அல்குர்ஆன் 9:100)* 

ஆரம்ப காலத்தில் ஹிஜ்ரத் செய்வதில் யார் முந்திக் கொண்டார்களோ அவர்கள், அவர்களுக்கு உதவி செய்தவர்கள் மட்டுமின்றி அவர்களைப் பின்பற்றி ஹிஜ்ரத் செய்தவர்களும் இறை திருப்திக்கு உரியவர்கள். அது போன்று மேற்குறிப்பிடப்பட்ட ஸஹாபாக்கள் எவ்வாறு நபிவழியை உறுதியாகப் பின்பாற்றினார்களோ, இஸ்லாத்திற்காக உதவி செய்தார்களோ அது போன்று அவர்களுக்கு பின்வந்தவர்கள் நற்காரியங்களைச் செய்தாலும் அவர்களுக்கும் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் உரித்தாகும்.

அல்லாஹூவே மிகவும் அறிந்தவன்


 *ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

கண் திருஷ்டி சூனியம் உண்டா❓*

*⚔🛡பத்ரு தோழர்கள் Q & A வழங்கும்*🛡⚔


*கண் திருஷ்டி சூனியம் உண்டா❓* 

 *இதை இஸ்லாமியர்கள் நம்பலாமா❓* 

 *கண்திருஷ்டி சூனியம் இல்லை என்றால் குர்ஆன் வசனங்களில் சூனியம் பற்றிய செய்திகளும் 114* *வசனத்தில் சொல்லப்பட்ட செய்திகளும் இடம்பெற்றுள்ளதே முழுமையான விளக்ககம் தரவும்* 

       சூனியம் என்பது மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு விஷயமாகவே உள்ளது.,
முதலில் சூனியம் என்றால் என்ன? என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.,
சூனியம் என்பது ஒருவரிடம் உள்ள பகையின் காரணமாக அவர்களை அழிக்க,கெடுக்க கையாளும் ஒரு கண் கட்டி வித்தையாகும்,.
நன்றாக பகுத்தறிவுள்ளவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம் ஆக்கலும், அழித்தலும் ஏக இறைவனுக்கு மட்டுமே உள்ள ஆற்றல் ஆகும்.,இந்த சக்தி ஒரு மனிதனுக்கு இருக்கும் என நம்பினால் அவர் நிச்சயமாக இணை வைத்தவர்களில் ஒருவராகி விடுவார்.,
சூனியம் பற்றி குரானிலும்,ஹதீஸ்களிலும் பல இடங்களில் வருகிறது,பின் வரும் ஹதீஸிலும் சூனியம் பெரும் பாவங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது,
இதன் விளக்கம் என்னவென்றால், கற்சிலைகளை வணங்குவது(இணை வைப்பு) பற்றி பல இடங்களில் அல்லாஹ் வன்மையாக கண்டித்திருக்கிறானல்லவா? ஆனால் கற்சிலைகளுக்கு ஒரு சக்தியும் இல்லை என நாம் விளங்கிக் கொள்கிறோம் அல்லவா? அது போல் தான் சூனியம் என்ற இல்லாத விஷயத்தை செய்யும் சூனியக்காரர்களைப் பற்றியும்,சூனியத்தை பற்றியும் அல்லாஹ் கூறியிருக்கிறான்,.

மூஸா(அலை) நபி கைத்தடியை கீழே போட்டு அது பாம்பாக மாரிய பொழுது அனைத்து சூனியக்காரர்களும் சஜ்தாவில் விழுந்தனர்,ஏனெனில் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் மனிதனால் இதை செய்ய முடியாது என்று.,இது இறைவனின் செயல் தான் என்று.,
இதில் ஒரு சிலர் அல்லாஹ்வின் நாட்டப்படி சூனியம் பலிக்கும் என்று வாதிடுகின்றனர்,இது எப்படி சாத்தியப்படும்., அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமான ஒரு ஆற்றலை அல்லாஹ் எப்படி மனிதர்களுக்கு நாடுவான்?சிந்தித்து பார்க்கவேண்டும்.,
சூனியம் என்று செய்யப்பட்டு வரும் வித்தைகள் எல்லாம் தந்திர செயல்தானே தவிர மந்திரச் செயல் அல்ல,

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக சில ஹதீஸ்கள் உள்ளன,இது அல்லாஹ்வின் வேதத்திற்கு முரணாக உள்ளதால்,அதை எடுத்துக் கொள்ளக் கூடாது,.உதாரணமாக முஸ்லிம் ஒரு செய்தி உள்ளது, அதில் அல்லாஹ் பூமியை 7 நாட்களில் படைத்ததாக உள்ளது,ஆனால் குரானில் வானம் பூமியை 6 நாட்களில் படைத்துள்ளான் என உள்ளது,எனவே அந்த செய்தியை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது,குரானைத்தான் நம்ப வேண்டும்,அது போல் குரானுக்கு முரணாக வரும் சூனியம் பற்றிய செய்திகளை புறந்தள்ளி விட வேண்டும்.,
மேலும் நபி(ஸல்) அவர்கள் எந்த வித மனக்கோளாறுக் கொண்டவர் அல்லர் என குரானில் அல்லாஹ் பல இடங்களில் கூறியுள்ளான்,அப்பொழுது எப்படி நபி(ஸல்) அவர்கள் பிரம்மை பிடித்து 6 மாத காலம் இருந்திருக்க முடியும்?

மேலும் ஒரு ஹதீஸ் உள்ளது, அதில் அஜ்வா பேரீச்சை ஏழு சாப்பிட்டால் எந்த வித விஷமோ,சூனியமோ சாப்பிட்டவர்கள் மீது தாக்கப்படாது என்று, இதை நாம் உண்மை என்று எடுத்துக் கொண்டு விஷத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அஜ்வா பேரீச்சையை கொடுத்தால் அவர் காப்பாற்றப் படுவாரா? நன்றாக சிந்தித்து பாருங்கள், இதிலிருந்து இந்த செய்தி பொய்யானது என தெளிவாகத் தெரிகிறதல்லவா❓

மேலும் பொறாமையால் ஏற்படும் கண் திருஷ்டி என்பதும்,நம்பக் கூடாத விஷயம்,.ஒருவர் பார்க்கும் பார்வையால் யார்க்கும் எந்த தீங்கும் செய்து விட முடியாது,குரானில் அல்லாஹ் பொறாமைக்காரர்களிடம் பாதுகாப்பு தேட சொல்வது,அவர்கள் கைகளாலோ, சொற்களாலோ நமக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி,.

நபி(ஸல்) உண்மையில்  ஒரு விஷயத்தை சொன்னால் அந்த செய்தியை கேட்கும்போது நம் உடல் நடுங்கும்,மயிர் கூச்செரிக்கும்,
இது போன்ற சந்தேகத்திற்குரிய அல்லாஹ்விற்கு இணையான ஒரு காரியத்தை ஒரு மனிதன் செய்வான் என்று ஒரு போதும் கூறியிருக்க வாய்ப்பில்லை,
எனவே சூனியத்தையும்,கண் திருஷ்டியையும் நம்பி இணைவைப்பவர்களில் ஒருவராக ஆகி விடாமல் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

 *குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்கள் 👇👇👇👇👇👇*


قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ  ﴿9:51﴾
9:51. “ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!

இன்று ஒரு குர்ஆன் வசனம் – فَذَكِّرْ فَمَا أَنتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍ وَلَا مَجْنُونٍ  ﴿52:29﴾
52:29. எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர்; பைத்தியக்காரருமல்லர்.

இன்று ஒரு குர்ஆன் வசனம் – مَا أَنتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍ  ﴿68:2﴾
68:2. உம்முடைய இறைவன் அருட்கொடையால், நீர் பைத்தியக்காரர் அல்லர்.

இன்று ஒரு குர்ஆன் வசனம் – وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ ۖ وَيَوْمَ يَقُولُ كُن فَيَكُونُ ۚ قَوْلُهُ الْحَقُّ ۚ وَلَهُ الْمُلْكُ يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ ۚ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ ۚ وَهُوَ الْحَكِيمُ الْخَبِيرُ  ﴿6:73﴾
6:73. அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் “ஆகுக!” என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது; எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன்.

இன்று ஒரு குர்ஆன் வசனம் – هُوَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ ۖ فَإِذَا قَضَىٰ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُن فَيَكُونُ  ﴿40:68﴾
40:68. அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான். ஆகவே அவன் ஒரு காரியத்தை(ச் செய்ய)த் தீர்மானித்தால்: “ஆகுக!” என்று அதற்குக் கூறுகிறான். உடன் அது ஆகிவிடுகிறது.  

இன்று ஒரு குர்ஆன் வசனம் – قَالَ مُوسَىٰ أَتَقُولُونَ لِلْحَقِّ لَمَّا جَاءَكُمْ ۖ أَسِحْرٌ هَٰذَا وَلَا يُفْلِحُ السَّاحِرُونَ  ﴿10:77﴾
10:77. அதற்கு மூஸா:  “உங்களிடம் சத்தியமே வந்த போது, அதைப்பற்றியா நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? இதுவா சூனியம்? சூனியக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்” என்று கூறினார்.

நபிமொழி அறிவோம் – 2766. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  ”அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “இறைத்தூதர் அவர்களே! அவை எவை?“ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று (பதில்) கூறினார்கள்.
 *ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 55. மரண சாசனங்கள்* 

இன்று ஒரு குர்ஆன் வசனம் – أَلَمْ تَرَ إِلَى الَّذِي حَاجَّ إِبْرَاهِيمَ فِي رَبِّهِ أَنْ آتَاهُ اللَّهُ الْمُلْكَ إِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ قَالَ أَنَا أُحْيِي وَأُمِيتُ ۖ قَالَ إِبْرَاهِيمُ فَإِنَّ اللَّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِي كَفَرَ ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ  ﴿2:258﴾
2:258. அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.

நபிமொழி அறிவோம் – 5445. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  தினந்தோறும் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு “அஜ்வா“ (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகிறவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது. என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
 *ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 70. உணவு வகைகள்* 

5469. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார்  மக்காவில் (என் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைரை நான் கருவுற்றேன். கர்ப்ப காலம் முழுமையடைந்துவிட்ட நிலையில் புறப்பட்டு நான் மதீனா சென்றேன். (வழியில்) “குபா“வில்ழூழூ தங்கினேன். குபாவிலேயே எனக்குப் பிரசவமாம்விட்டது. பிறகு குழந்தையை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்று அவர்களின் மடியில் வைத்தேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தைக் கொண்டு வரச்சொல்லி அதை மென்று குழந்தையின் வாயில் உமிழ்ந்தார்கள். அப்துல்லாஹ்வின் வயிற்றுக்குள் சென்ற முதல் (உணவுப்) பொருள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் உமிழ் நீராகத்தான் இருந்தது. பிறகு, அவர்கள் பேரீச்சம் பழத்தை மென்று அப்துல்லாஹ்வின் வாயில் அதை இட்டார்கள். பின்னர், அப்துல்லாஹ்வுக்கு சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தனை செய்தார்கள். (என் புதல்வர்) அப்துல்லாஹ்தான் இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தையாவார். எனவே, முஸ்லிம்கள் அவர் பிறந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். ஏனெனில், அவர்களிடம், “யூதர்கள் உங்களுக்கு சூனியம் வைத்துவிட்டார்கள். எனவே, உங்களுக்கு (இனி) குழந்தை பிறக்காது“ எனக் கூறப்பட்டுவந்தது.
 *ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 71. அகீகா* 

 *குறிப்பு👇👇👇👇👇*

புகாரி முஸ்லிமில் பதிவு
செய்யப்பட்ட அனைத்து ஹதீஸ்களும்
 *ஆதாரப்பூர்வமானதா❓* 

புகாரியில் பதிவு செய்யப்பட்ட
ஹதீஸ்கள் அனைத்தும் சரியானவை
என்று இன்றைக்குப் பெரும்பாலான
மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறாரகள்.

மத்ரஸாக்களில் படித்த மார்க்க
அறிஞர்களும் இவர்களைப் போன்றே
நினைக்கிறார்கள்.
இதனால் தான் புகாரி முஸ்லிமில்
இடம் பெற்ற ஹதீஸ்களை நாம்
விமர்சிக்கும் போது சொல்லப்படுகின்ற
விமர்சனம் *சரியா தவறா❓* 
என்று
பார்க்காமல் புகாரியில் பதிவு
செய்யப்பட்டு விட்டாலே அதை
விமர்சிக்கக் கூடாது என்கிறார்கள்.

புகாரி முஸ்லிமில் உள்ள
ஹதீஸ்களைப் பற்றிய முழுமையான
அறிவுள்ளவர்கள் யாரும் இவ்வாறு கூற
மாட்டார்கள். மாபெரும் அறிஞரான
இமாம் தாரகுத்னீ அவர்கள் புகாரி இமாம்
பதிவு செய்த பல ஹதீஸ்களை விமர்சனம்
செய்துள்ளார்கள்.
புகாரிக்கு விரிவுரை எழுதிய
இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இந்த
விமர்சனங்களுக்கு சரியான பதிலைக்
கூறினாலும் சில இடங்களில்
சொல்லப்பட்ட குறையை ஏற்றுக்
கொள்கிறார். அந்தக் குறைகளுக்கு
பதில் இல்லை என்றும் ஒத்துக்
கொள்கிறார்.

சில நேரத்தில் புகாரியில் பதிவு
செய்யப்பட்ட ஒரு அறிவிப்பாளரை
அறிஞர்கள் விமர்சனம் செய்யும் போது
அந்த விமர்சனத்திற்கு முறையான பதில்
ஏதும் இப்னு ஹஜர் அவர்களால் சொல்ல
முடிவதில்லை. இந்த இடத்தில் இவரிடம்
இமாம் புகாரி அவர்கள் குறைவாகத்
தான் ஹதீஸ்களைப் பதிவு
செய்துள்ளார்கள் என்பதை மட்டும் தான்
இப்னு ஹஜர் பதிலாகக் கூறுகிறார்.
புகாரிக்கு மாபெரும் தொண்டாற்றிய
மாபெரும் மேதை இப்னு ஹஜர்
அவர்களே புகாரியில் உள்ள அனைத்தும்
ஆதாரப்பூர்வமானது என்று ஒத்துக்
கொள்ளாத போது இவர்கள் புகாரியில்
உள்ள அனைத்தும் சரி என்று இவர்கள்
வாதிடுவது தான் நமக்கு ஆச்சரியமாக
இருக்கிறது.

 *இப்னு ஹஜரின் விளக்கம்* 

இப்னு ஹஜர் அவர்கள் புகாரிக்கு
எழுதிய விரிவுரையின்
முன்னுரையை முறையாகப்
படித்தவர்கள் புகாரியில் உள்ள
அனைத்துச் செய்தியும் சரியானது
என்றக் கருத்தை ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள்.

ﻓﺘﺢ ﺍﻟﺒﺎﺭﻱ – ﺍﺑﻦ ﺣﺠﺮ ﺟﺰﺀ 1 – ﺻﻔﺤﺔ 346
ﻭﻗﻮﻟﻪ ﻓﻲ ﺷﺮﺡ ﻣﺴﻠﻢ ﻭﻗﺪ ﺃﺟﻴﺐ ﻋﻦ ﺫﻟﻚ ﺃﻭ ﺃﻛﺜﺮﻩ ﻫﻮ ﺍﻟﺼﻮﺍﺏ ﻓﺈﻥ
ﻣﻨﻬﺎ ﻣﺎ ﺍﻟﺠﻮﺍﺏ ﻋﻨﻪ ﻏﻴﺮ ﻣﻨﺘﻬﺾ

இமாம் இப்னு ஹஜர் கூறுகிறார் :
புகாரியில் சொல்லப்பட்ட
விமர்சனங்களில் அதிகமானவைகளுக்க
ு பதில் தரப்பட்டு விட்டது என்று
முஸ்லிமுடைய விரிவுரையில்
முஹ்யித்தீன் என்பவர் கூறியது தான்
சரியானதாகும்.

ஏனென்றால் இந்த
விமர்சனங்களில் சிலவற்றிற்கு பதில்
(இன்னும்) கிடைக்கவில்லை.
 *நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 1 பக்கம் : 346* 

ﻓﺘﺢ ﺍﻟﺒﺎﺭﻱ – ﺍﺑﻦ ﺣﺠﺮ ﺟﺰﺀ 1 – ﺻﻔﺤﺔ 385
ﻭﻗﺪ ﺗﺸﺘﺪ ﺍﻟﻤﺨﺎﻟﻔﺔ ﺃﻭ ﻳﻀﻌﻒ ﺍﻟﺤﻔﻆ ﻓﻴﺤﻜﻢ ﻋﻠﻰ ﻣﺎ ﻳﺨﺎﻟﻒ ﻓﻴﻪ ﺑﻜﻮﻧﻪ
ﻣﻨﻜﺮﺍ ﻭﻫﺬﺍ ﻟﻴﺲ ﻓﻲ ﺍﻟﺼﺤﻴﺢ ﻣﻨﻪ ﺍﻻ ﻧﺰﺭ ﻳﺴﻴﺮ

இப்னு ஹஜர் கூறுகிறார் : சில வேளை
அறிவிப்பாளர்கள் மிகவும் மோசமாக
முரண்பட்டு அறிவிப்பார்கள். அ;ல்லது
(அவர்களின்) மனனத்தன்மை பலவீனமாகி
விடும். இந்நேரத்தில் (தன்னை விட
வலிமையானவர்களுக்கு) மாற்றமாக
அறிவிக்கப்படும் செய்திக்கு முன்கர்
(மறுக்கப்பட வேண்டியது) என்று
முடிவு கட்டப்படும். இது போன்ற
செய்தி புகாரியில் குறைவாக தவிர
(அதிகமாக) இல்லை.
 *நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 1 பக்கம் : 385* 

ﻓﺘﺢ ﺍﻟﺒﺎﺭﻱ – ﺍﺑﻦ ﺣﺠﺮ ﺟﺰﺀ 1 – ﺻﻔﺤﺔ 346
ﻭﻗﺪ ﺗﻌﺮﺽ ﻟﺬﻟﻚ ﺑﻦ ﺍﻟﺼﻼﺡ ﻓﻲ ﻗﻮﻟﻪ ﺇﻻ ﻣﻮﺍﺿﻊ ﻳﺴﻴﺮﺓ ﺍﻧﺘﻘﺪﻫﺎ ﻋﻠﻴﻪ
ﺍﻟﺪﺍﺭﻗﻄﻨﻲ ﻭﻏﻴﺮﻩ ﻭﻗﺎﻝ ﻓﻲ ﻣﻘﺪﻣﺔ ﺷﺮﺡ ﻣﺴﻠﻢ ﻟﻪ ﻣﺎ ﺃﺧﺬ ﻋﻠﻴﻬﻤﺎ ﻳﻌﻨﻲ
ﻋﻠﻰ ﺍﻟﺒﺨﺎﺭﻱ ﻭﻣﺴﻠﻢ ﻭﻗﺪﺡ ﻓﻴﻪ ﻣﻌﺘﻤﺪ ﻣﻦ ﺍﻟﺤﻔﺎﻅ ﻓﻬﻮ ﻣﺴﺘﺜﻨﻰ ﻣﻤﺎ
ﺫﻛﺮﻧﺎﻩ ﻟﻌﺪﻡ ﺍﻹﺟﻤﺎﻉ ﻋﻠﻰ ﺗﻠﻘﻴﻪ ﺑﺎﻟﻘﺒﻮﻝ ﺍﻧﺘﻬﻰ ﻭﻫﻮ ﺍﺣﺘﺮﺍﺯ ﺣﺴﻦ

தாரகுத்னீ (புகாரியில்) விமர்சனம்
செய்த சில இடங்களைத் தவிர (மற்ற
செய்திகள் அனைத்திற்கும் அங்கீகாரம்
உண்டு) என்ற கருத்தையே
இப்னுஸ்ஸலாஹ் ஏற்றுள்ளார். அவர்
முஸ்லிமுடைய விரிவுரையின்
முன்னுரையில் இவ்வாறு
கூறுகிறார் : புகாரி மற்றும்
முஸ்லிமில் நம்பத் தகுந்த அறிஞர்
ஒருவர் குறை கூறினால் (அனைத்து
சமூகத்தின் அங்கீகாரமும் புகாரிக்கு
உண்டு என்று நாம் முன்பு)
கூறியதிலிருந்து (குறைகூறப்பட்ட)
இந்தச் செய்தி விதிவிலக்கானதாகும்.
ஏனெனன்றால் இந்த விமர்சிக்கப்பட்ட
ஹதீஸில் அங்கீகாரம் இல்லாமல்
போய்விட்டது.
இப்னு ஹஜர் கூறுகிறார் : இவ்வாறு
விதிவிலக்கு கொடுப்பது
அழகானதாகும்.
 *நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 1 பக்கம் : 346* 

ﻓﺘﺢ ﺍﻟﺒﺎﺭﻱ – ﺍﺑﻦ ﺣﺠﺮ ﺟﺰﺀ 1 – ﺻﻔﺤﺔ 383
ﻭﻟﻴﺴﺖ ﻛﻠﻬﺎ ﻗﺎﺩﺣﺔ ﺑﻞ ﺃﻛﺜﺮﻫﺎ ﺍﻟﺠﻮﺍﺏ ﻋﻨﻪ ﻇﺎﻫﺮ ﻭﺍﻟﻘﺪﺡ ﻓﻴﻪ ﻣﻨﺪﻓﻊ
ﻭﺑﻌﻀﻬﺎ ﺍﻟﺠﻮﺍﺏ ﻋﻨﻪ ﻣﺤﺘﻤﻞ ﻭﺍﻟﻴﺴﻴﺮ ﻣﻨﻪ ﻓﻲ ﺍﻟﺠﻮﺍﺏ ﻋﻨﻪ ﺗﻌﺴﻒ

இப்னு ஹஜர் கூறுகிறார் : புகாரியில்
சொல்லப்பட்ட அனைத்து விமர்சனங்களும்
(புகாரியில்) குறை ஏற்படுத்தக்
கூடியதாக இல்லை. மாறாக இந்த
விமர்சனங்களில் அதிகமானவைகளுக்கு தெளிவாக பதில் உள்ளது. அந்த
விமர்சனத்தில் குறை சொல்ல
முடியாது. சில விமர்சனங்களுக்கு தெளிவற்ற விதத்தில் பதில் உள்ளது.

சில விமர்சனங்களுக்கு பதில் சொல்வது
கடினம்.
மேற்கண்ட வாசகங்களையெல்லாம் நன்கு
கவனிக்க வேண்டும்.

புகாரியில்
விமர்சிக்கப்பட்ட ஹதீஸ்களுக்கு
பதிலைத் தரும் முயற்சியில் இறங்கிய
கல்வி மேதை இப்னு ஹஜர் அவர்களே
சில விமர்சனங்களுக்குப் பதில்
சொல்லமுடியவில்லை என்று ஒத்துக்
கொண்டு அதைத் தன் நூலில்
எழுதியிருக்கும் போது புகாரியில்
உள்ள அனைத்துச் செய்தியும்
சரியானது தான் என்று
அறிவுள்ளவர்கள் எப்படிக் கூறுவார்கள்?

புகாரியில் நபி (ஸல்) அவர்களுடைய
கூற்றுக்கள் மட்டும் பதிவு
செய்யப்படவில்லை. நபித்தோழர்களின்
கூற்று நபித்தோழர்களுக்குப் பின்னால்
வந்தவர்களின் கூற்றுக்களும் பதிவு
செய்யப்பட்டுள்ளன. இதற்கு உதாரணமாக
பின்வரும் சம்பவத்தை எடுத்துக்
கொள்ளலாம்.

 *அம்ர் பின் மைமூன் என்பார்கூறியதாவது :* 

அறியாமைக்
காலத்தில் விபச்சாரம் புரிந்த பெண்
குரங்கொன்றைக் குரங்குகள் பல
சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து
தண்டிப்பதை நான் கண்டேன். நானும்
அவற்றுடன் சேர்ந்து கொண்டு
கல்லெறிந்தேன்.
அறிவிப்பவர் : அமர் பின் மைமூன்
 *நூல் : புகாரி (3849)* 

இது போன்ற சம்பவம் நடந்தது என்று
அறிவுள்ளவர்கள் யாரும் கூற
மாட்டார்கள்.
குரங்குகளுக்கு திருமணம் உட்பட எந்த
பந்தமும் கிடையாது. மனிதர்களுக்கு
சொல்லப்பட்ட வாழ்க்கை ஒழுங்கு
நெறிகளைக் கடைப்பிடிக்குமாறு
மிருகங்களுக்கு அல்லாஹ்
கட்டளையிடவும் இல்லை.

மனிதனுக்குச் சொல்லப்பட்ட சட்டத்தை
குரங்குகள் நடைமுறைப்படுத்தியது
என்பதை நியாயவான்கள் ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள்.
தெளிவாகப் பொய் என்று தெரியும்
இந்தச் சம்வத்தை இமாம் புகாரி அவர்கள்
பதிவு செய்தார்கள் என்பதற்காக நாம்
 *ஏற்றுக் கொள்ள முடியுமா❓* 

ஹதீஸ் தொகுப்பு நூற்களில் சிறந்த
நூற்கள் என்று முதலாவதாக
புகாரியையும் இரண்டாவதாக
முஸ்லிமையும் கூறலாமே தவிர
குர்ஆனைப் போன்று ஒரு தவறும்
இல்லாத நூல் என்ற சிறப்பை
இவைகளுக்குத் தர முடியாது.
இச்சிறப்பை இறைவன் தன் வேதத்திற்கும்
மட்டும உரியதாக்கியுள்ளான்.

புகாரி மற்றும் முஸ்லிமில்
பலவீனமான அறிவிப்பாளர்களும்
அறியப்படாதவர்களும் மிகக் குறைவாக
இருக்கிறார்கள். மற்ற புத்தகங்களில்
இருப்பதைப் போல் மோசமான கருத்தைக்
கொண்ட செய்தியும் இவற்றில்
குறைவாக இடம்பெற்றுள்ளது.

எனவே மற்ற புத்தகங்களில் இடம்பெற்ற
செய்திகளை ஹதீஸ் கலைக்கு உட்பட்டு
அனுகுவதைப் போல் புகாரி
முஸ்லிமில் உள்ள செய்திகளையும்
ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

புகாரி இமாம் பதிவு செய்த
ஹதீஸ்களை பல அறிஞர்கள் ஆய்வுக்கு
எடுத்துக் கொண்டு *அது சரியானதா❓* 
 *தவறானதா❓* என்பதைத்
தெளிவுபடுத்தியுள்ளார்கள். 

அல்லாஹூவே மிகவும் அறிந்தவன் 

 *ஜஸாகல்லாஹ் ஹைரன்*

Friday, October 25, 2019

மூன்று நேரங்களில் ஏன் தொழக்கூடாது?

*மூன்று நேரங்களில் ஏன் தொழக்கூடாது?*

நல்ல நேரம் கேட்ட நேரம் பார்க்காத முஸ்லிம்கள் சூரியன் உதிக்கும் போதும், உச்சியில் இருக்கும் போதும், மறையும் போதும் தொழக் கூடாது என்று கூறுவது ஏன்?

பதில்:

சூரியன் உதிக்கும் போதும், உச்சிக்கு வரும் போதும், மறையும் போதும் ஆகிய மூன்று நேரங்களில் தொழக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தொழுகையைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்!'' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "சுப்ஹுத் தொழுகையைத் தொழுங்கள். பிறகு சூரியன் உதயமாகி உயரும்வரை தொழுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், அது உதயமாகும் போது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதயமாகிறது. அப்போது தான் அதற்கு இறைமறுப்பாளர்கள் சிரம் பணிகின்றனர். அதன் பிறகு தொழுங்கள்! அந்த நேரத்தில் தொழும் தொழுகை (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படக் கூடியதும் (வானவர்கள்) வருகை தரக்கூடியதுமாகும். அப்போது முதல் ஈட்டியின் நிழல் கிழக்கிலோ, மேற்கிலோ சாயாமல் அதன்மீதே விழும் வரை (நண்பகல் வரை) தொழுங்கள்! பிறகு தொழுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், அப்போது நரகம் எரிக்கப்படுகிறது. பிறகு நிழல் (கிழக்கே) சாய்ந்துவிட்டால் தொழுங்கள். அந்நேரத் தொழுகைக்கு (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படுகிறது. அவர்கள் அதில் பங்கேற்கின்றனர். பிறகு அஸ்ர் வரை தொழுங்கள். பிறகு சூரியன் மறையும் வரை தொழுவதை நிறுத்திவிடுங்கள்! ஏனெனில், அது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே தான் மறைகிறது. இந்த நேரத்தில் அதற்கு இறை மறுப்பாளர்கள் சிரம் பணிகின்றனர்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அம்ர் பின் அபசா (ரலி)
நூல் : முஸ்லிம் 1512

இறைமறுப்பாளர்கள் இந்த நேரங்களில் சூரியனுக்கு சஜ்தாச் செய்யும் நடைமுறை உள்ளது. இந்த நேரத்தில் நாம் தொழுதால் நாமும் சூரியனுக்கு சஜ்தா செய்வதைப் போன்ற தோற்றம் ஏற்படும். இறைமறுப்பாளர்களுக்கு மாறு செய்ய வேண்டும் என்ற காரணத்துக்காகவே இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

குறிப்பிட்ட இந்த மூன்று நேரங்களில் தொழுவதை மட்டுமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இந்த நேரங்களில் திருமணம் போன்ற நல்ல காரியங்களைச் செய்ய எந்தத் தடையுமில்லை.
எனவே  இந்தச் செய்தியில் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்க்கலாம் என்ற கருத்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூறப்படவில்லை.

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
_என்றும் இறைப்பணியில்..._
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
www.onlinetntj.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

Monday, October 21, 2019

பொறுமையின் எல்லை என்ன

*பண்பாடுகள்*

*பொறுமையின் எல்லை என்ன?*

*இஸ்லாத்தில் எந்த அளவு பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்?*

*பதில்*

*பொறுமை என்பது இரு வகைப்படும்.*

*ஒன்று அல்லாஹ் நமக்குத் தரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது. நூறு சதவிகிதம் இதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். துன்பத்தை முறையிட்டாலும் அழுதாலும் அல்லாஹவை விமர்சிக்காமல் இருந்தால் நாம் பொறுமையைக் கடைபிடித்தவர்களாவோம்.*

*நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அழுதுள்ளனர்.*

*ஆனால் மனிதர்கள் நமக்கு அநியாயம் செய்யும் போது பொறுமை காக்க வேண்டுமென்பது கட்டாயம் அல்ல.*

*நாம் விரும்பினால் பதில் நடவடிக்கையில் இறங்கலாம். விரும்பினால் மன்னிக்கலாம். மன்னிப்பதே சிறந்தது.*

*பினவரும் வசனங்களை வாசிக்கவும்*

*உங்களிடம் வரம்பு மீறியோரிடம் அவர்கள் வரம்பு மீறியது போன்ற அதே அளவு நீங்களும் வரம்பு மீறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (தன்னை) அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!*

*திருக்குர்ஆன் 2:194*

*போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்” என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன்.*

*திருக்குர்ஆன்22:39*

*இதுவே (அல்லாஹ்வின் கட்டளை.) யாரேனும் தாம் துன்புறுத்தப்பட்டது போல் (அதற்குக் காரணமானவர்களைத்) துன்புறுத்தும் போது அதற்காக அவர் மீது மீண்டும் அநீதி இழைக்கப்பட்டால் அல்லாஹ் அவருக்கு உதவுவான். அல்லாஹ் மன்னிப்பவன்; பிழை பொறுப்பவன்.*

*திருக்குர்ஆன்22:60*

*அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கிறான்.*

*திருக்குர்ஆன்4:148*

*தீமையின் கூலி அது போன்ற தீமையே. மன்னித்து சமாதானமாகச் செல்வோருக்கு அவரது கூலி அல்லாஹ்விடம் உள்ளது. அவன் அநீதி இழைத்தோரை விரும்ப மாட்டான்.. தமக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர் யார் உதவி பெறுகிறாரோ அவருக்கு எதிராக எந்த வழியும் இல்லை.மக்களுக்கு அநீதி இழைத்து நியாயமின்றி பூமியில் வரம்பு மீறுவோருக்கு எதிராகவே குற்றம் பிடிக்க வழி உண்டு. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. யார் பொறுமையை மேற்கொண்டு மன்னிக்கிறாரோ அது உறுதிமிக்க காரியங்களில் ஒன்றாகும்.*

*திருக்குர்ஆன்42:40-43*

*உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்” என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். “அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்” என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.*

*திருக்குர்ஆன்24:22*


Thursday, October 17, 2019

ஜமாஅத் தொழுகையில் கடைசி வரிசை பூர்த்தியான பின்

*ஜமாஅத் தொழுகையில் கடைசி வரிசை பூர்த்தியான பின் வருபவர் தனித்துத் தொழ வேண்டுமா? அல்லது வரிசையில் உள்ளவரை இழுத்து அருகில் நிறுத்திக் கொள்ள வேண்டுமா?*

பதில் :

வரிசையில் சேராமல் தனியாகத் தொழுவது செல்லாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

ஒரு மனிதர் வரிசைக்குப் பின்னால் தொழுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டபோது தொழுகையை மீண்டும் தொழுமாறு அவருக்குக் கட்டளையிட்டனர்.

நூல் : திர்மிதி 213

இன்னும் பல நூல்களிலும் இது பதிவாகியுள்ளது.

இந்த ஹதீஸின் நம்பகத் தன்மையில் அறிஞர்கள் சந்தேகம் கொள்ளவில்லை. ஆயினும் இதை எப்படிப் புரிந்து கொள்வது என்பதில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.

வரிசையில் சேராமல் தனியாகத் தொழுதால் தொழுகை செல்லாது என்று இந்த ஹதீஸில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

முன் வரிசையில் இடம் இருக்கும் போது அதில் சேராமல் தனித்து நிற்பவரை இது குறிக்குமா?

அல்லது இடமிருந்தாலும் இடமில்லாவிட்டாலும் தனித்து நிற்பதைக் குறிக்குமா?

இதை நாம் முதலில் முடிவு செய்ய வேண்டும். இதைப் புரிந்து கொள்ள பின்வரும் ஹதீஸ் நமக்கு உதவுகிறது.

صحيح البخاري

380 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَتْهُ لَهُ، فَأَكَلَ مِنْهُ، ثُمَّ قَالَ: «قُومُوا فَلِأُصَلِّ لَكُمْ» قَالَ أَنَسٌ: فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا، قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ، فَنَضَحْتُهُ بِمَاءٍ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَفَفْتُ وَاليَتِيمَ وَرَاءَهُ، وَالعَجُوزُ مِنْ وَرَائِنَا، فَصَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ، ثُمَّ انْصَرَفَ

என் பாட்டி முலைக்கா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக உணவு சமைத்து அவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதில் சிறிதைச் சாப்பிட்டுவிட்டுப் பின்னர், எழுங்கள்! உங்களுக்காக நான் தொழுவிக்கிறேன் என்று கூறினார்கள். நீண்ட நாட்கள் விரித்ததனால் கருப்படித்து இருந்த எங்களின் பாயை  எடுத்தேன். அதில் தண்ணீரைத் தெளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றார்கள். உடனே நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அந்த மூதாட்டி எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்று கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவித்துவிட்டு திரும்பிச் சென்றார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் புகாரி 380

அனஸ் (ரலி) அவர்களின் தாயார் பெண் என்பதால் அவர்கள் ஆண்களுடன் சேரவில்லை. தனியாகத் தான் நின்றார்கள். அதாவது வரிசையில் சேர்வதற்கு வாய்ப்பு இல்லாத போது அவர்கள் தனியாக நின்றார்கள். தனியாக நிற்பவரின் தொழுகை செல்லாது என்றால் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்து இருக்க மாட்டார்கள்.

எனவே இதற்கு முரணில்லாத வகையில் மேற்கண்ட புரிந்து கொள்வது அவசியம்.

வரிசையில் காலி இடம் உள்ள போது வரிசையில் சேர்வதை வெறுத்தோ, அல்லது அந்த விஷயத்தில் அலட்சியம் காட்டியோ வரிசையில் சேராமல் ஒருவர் தனியாகத் தொழுதால் அவர் ஒழுங்கைக் கெடுத்தவராகிறார். இது போல் செய்தவரின் தொழுகை செல்லாது என்பதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி இருக்க வேண்டும். இப்படிப் புரிந்து கொண்டால் தான் மேற்கண்ட ஹதீஸுடன் ஒத்துப் போகும்.

நின்று தொழ வேண்டும் என்று கட்டளை இருக்கிறது. நிற்க முடியாதவருக்கு இந்தக் கட்டளை பொருந்தாது என்று நாம் புரிந்து கொள்கிறோம். இஸ்லாத்தின் எல்லாக் கட்டளைகளுமே இப்படித் தான் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

அதாவது எந்தக் கட்டளையானாலும் இயலும் போது தான் அதைக் கடைப்பிடிக்க .வேண்டும்.

இப்படிப் புரிந்து கொள்ளாமல் வரிசை முடிந்து விட்டாலும் தனியாகத் தொழக் கூடாது என்று கூறினால் மேற்கண்ட ஹதீஸுக்கு அது முரண்படுவதுடன் மேலும் பல குழப்பங்களையும் ஏற்படுத்தும்.

கடைசியில் ஒருவர் வருகிறார். அவருக்கு வரிசையில் இடம் இல்லை. இவருடன் துணைக்குச் சேர யாருமே வரவில்லை என்றால் இவர் ஜமாஅத்தில் சேர முடியாது. ஜமாஅத் முடியும் வரை காத்திருந்து தனியாகத் தான் தொழவேண்டிய நிலை ஏற்படும். இதனால் ஜமாஅத் தொழுகையின் நன்மையை அவர் இழக்கும் நிலை ஏற்படும்.

அல்லது முன் வரிசையில் உள்ளவரை இழுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

முதல் வரிசையின் நன்மையை நாடி முன் கூட்டியே வந்தவரை இழுத்து அவருக்கு முதல் வரிசையின் நன்மையை இல்லாமல் ஆக்குவது மாபெரும் அநீதியாகும். மேலும் வரிசையைச் சீர்குலைப்பதுமாகும்.

எனவே முன் வரிசையில் இடம் இல்லாவிட்டால் தனியாக நிற்கலாம்.

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
தூய இஸ்லாத்தை அறிந்திட..
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
www.onlinetntj.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

ஜும்மா முபாரக்

*🌹மறு பதிவு🌹*

*👉👉👉ஜும்மா நினைவுட்டள்👈👈👈*

📣📣📣📣📣📣📣📣📣📣

*ஏன் " ஜும்மா முபாரக் " எனக் கூறக்கூடாது?*

*வெள்ளிக்கிழமைகளில் "ஜும்மா முபாரக் " என்ற ஒரு வாசகத்தை நம்மில் சிலர் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்கிறார்கள்.*

*பெரும்பாலானவர்கள் இந்த வார்த்தை மார்க்கத்தில் உள்ளதாக நினைத்துக் கொண்டுதான் சொல்கினறார்கள்.*

*உண்மையில்*
*வெள்ளிக்கிழமையில்* *‘ஜும்மா முபாரக்”*
*என்ற வாசகத்தை* *சொல்வதற்கு குர்ஆனிலோ,*
*ஆதாரப்பூர்வமான*
*ஹதீஸ்களிலோ எவ்வித ஆதாரமும்*
*கிடையாது.*

*மார்க்கத்தில் எந்தவொரு செயலையாவது நாம் செய்தால் அதற்கு நபியவர்களின் வழிகாட்டுதல் (சுன்னா)  இருக்க வேண்டும்.*

*அப்படியில்லாத பட்சத்தில் அது மார்க்கமாக அங்கீகரிக்கப்படாது.*

*இதோ :- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை பாருங்கள் :*
😡😡😡😡😡😡😡😡😡😡
❌❌❌❌❌❌❌❌❌❌

*இம்மார்க்கத்தில்  இல்லாத ஒன்றையாரேனும் உருவாக்கினால் அது ரத்துசெய்யப்படும்.(புகாரி # 2697)*

*என் கட்டளை இன்றி யார் செய்யும் எந்த செயலும் ( அமலும்) நிராகரிக்கப்படும்!( முஸ்லிம் # 3243 )*

*யார் பிறமத கலாச்சாரத்திற்கு ஒப்ப நடக்கிறார்களோbஅவர்கள் அந்த மதத்தை சேர்ந்தவரே!( அஹ்மது # 4868)*

*A.செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வின் வேதம் ஆகும்!*
*B.நடைமுறையில் மிகவும் சிறந்தது நபிகளாரின் " சுன்னா " ஆகும்!*
*C.காரியங்களில் மிகவும் தீயது மார்க்கம் என்ற பெயரால் புதிதாக உருவானவைகள் ஆகும்!*
*D.புதிதாக உருவானவைகள் அனைத்தும் " பித்அத்கள் " ஆகும்!*
*E.ஒவ்வொரு " பித்அத் "தும் வழிகேடாகும்!*
*F.ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும்!*
*நஸயீ # 1560*
*ஜாபிர் ரலி.*

*ஆக மார்க்கத்தில் இல்லாத எந்தவொரு  செயலை யார் செய்தாலும் அது மார்க்கமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது!*

*"ஜும்மா முபாரக்" என்ற ஒரு வார்த்தையை வெள்ளிக்கிழமையில் சொல்வது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட "பித்அத்" ஆகும்.*

*இதற்கு நன்மையையும், கிடைக்காது, மாறாக "பித்அத்" ஐ உருவாக்கிய குற்றம் கிடைத்து விடும் .*

*அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!*

*குர்ஆன் சொல்படி வாழ்வோம்!*
*கோமான்நபி வழி நடப்போம்!!*

*தொகுப்பு :*
*இஸ்லாமிய மகளிர் தாவா குழு*

🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋
📖📖📖📖📖📖📖📖📖📖

நகத்தை வெட்டி மண்ணில் புதைக்க வேண்டுமா❓

*🌈🌈மீள் பதிவு🌈🌈*

*🕋🕋இஸ்லாமிய சட்டங்கள்🕋🕋*

*🌐⚫🌎நகத்தை வெட்டி மண்ணில் புதைக்க வேண்டுமா❓🌎⚫🌐*

*👉👉👉நகத்தை வெட்டி மண்ணில் புதைக்க வேண்டுமா👈👈👈*

*👉👉👉இது தொடர்பாக ஒரு நபிமொழி இடம் பெற்றுள்ளது.👇👇👇*

*✍✍✍முடி, நகம் இவற்றை புதைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.✍✍✍*

*அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி), நூல்கள் : தப்ரானீ-கபீர், பாகம் : 15, பக்கம் : 408,ஷுஅபுன் ஈமான்-பைஹகீ, பாகம் : 8, பக்கம் : 44, முஸன்னஃப் அபீ ஷைபா, பாகம் : 8, பக்கம் : 47, லுஃபாவுல் உகைலீ, பாகம் : 4, பக்கம் : 332, அல்காமில்-இப்னு அதீ, பாகம் : 4, பக்கம் :201.*

📕📕📕இந்நூல்களில் லுஃபாவுல் உகைலீ, அல்காமில் ஆகிய நூல்களில் இடம்பெற்றிரும் செய்தியில் *அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் பின் அபீ ரவ்வாத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.* *அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் அபீ ரவ்வாத் என்பவர் பொய்யான செய்திகளை அறிவிப்பவர்* என்ற இப்னுல் ஜனீத் கூறுகிறார். 📕📕📕

*(ஆதாரம் : தன்ஸீஹு ஷரீஅத்துல் மர்ஃபூஆ, பாகம் : 1, பக்கம் : 73)*

*✍✍✍அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் அபீ ரவ்வாத் உடைய ஹதீஸ்களை நான் உற்று நோக்கினேன். இவருடைய செய்திகளில் மறுக்கப்பட வேண்டிய செய்திகளைக் கண்டேன். எனவே இவருடைய செய்திகளை நான் எழுதிக் கொள்வதில்லை. இவர் என்னிடத்தில் உண் மையாளர் இல்லை என்று அபூஹாத்திம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.✍✍✍*

*(ஆதாரம் : அல்ஜர்ஹு வத்தஃதீல், பாகம் : 5, பக்கம் : 104)*

📘📘📘அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் அபீ ரவ்வாத் இவர் தம் தந்தை வழியாக மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவித்துள்ளார். *(இந்த செய்தியும் அவர் தந்தை வழியாகவே இடம்பெற்றுள்ளது)* இச்செய்திகள் நம்பகமானவை அல்ல! உறுதியான செய்திகளில் உள்ள வையும் அல்ல! என்று உகைலீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.📘📘📘

*(ஆதாரம் : லுஅஃபாவுல் உகைலீ, பாகம் : 2, பக்கம் : 279)*

*✍✍✍அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் அபீ ரவ்வாத் உடைய செய்தி களைப் போன்று எவரும் அறிவித்ததில்லை என்று இப்னுல் அதீ அவர் கள் குறிப்பிட்டுள்ளார்கள்.✍✍✍*

*ஆதாரம் : அல்காமில்-இப்னு அதீ, பாகம் : 4, பக்கம் : 201)*

📗📗📗அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் அபீ ரவ்வாத் உடைய செய்தி கள் எந்த மதிப்பும் அற்றது என்று இப்னுல் ஜனீத் குறிப்பிட்டுள்ளார்கள்.📗📗📗

*(ஆதாரம் : லிஸானுல் மீஸான், பாகம் :4, பக்கம் : 516)*

*✍✍✍இதே கருத்தில் வேறு அறிவிப்பாளர்கள் வழியாக இப்னு அதீ அவர்கள் அல்காமில் என்ற நூலில் (பாகம் : 6, பக்கம் : 457) ல் பதிவு செய்துள்ளார்கள்.*
*இந்த அறிவிப்பாளர் தொடரும் பலவீனமானதாகும். இதில் இடம் பெறும் ஈஸா பின் அப்துல்லாஹ் பின் சுலைமான் அல்குறைஷீ என்பவர் பலவீனமா னவர்.✍✍✍*

📙📙📙இவரைப்பற்றி இதை பதிவு செய்த இமாம் இப்னு அதீ அவர்களே இவர் பலவீனமானவர் ஹதீஸை திருடுபவர் என்று குற்றம் சுமத்தியுள்ளார்கள்.📙📙📙

*(அல்காமில், பாகம் : 6, பக்கம் : 454)*

*✍✍✍அல்காமில், லுஅஃபாவுல் உகைலீ ஆகிய நூல்கள் அல்லாவற்றில் இடம் பெற்றிருக்கும் செய்தியில் மூன்று குறைகள் இடம்பெற்றுள்ளனர்* .
*முதலாவது: அதன் அறிவிப்பாளர் வரிசை துண்டிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெறும் அப்துல் ஜப்பார் பின் வாயில் என்பவர் தம் தந்தை வழியாக அறிவித்துளார்கள். ஆனால் அவர் தம் தந்தையிடமிருந்து எதையும் செவி யுற்றதில்லை.✍✍✍*

📒📒📒இரண்டாவது : இதில் இடம்பெறும் இன்னொரு அறிவிப்பாளர் கைஸ் பின் ரபீவு என்பவர் நினைவாற்றல் கோளறின் காரணமாக இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள்.📒📒📒

*✍✍✍மூன்றாவது : முஹம்மத் பின் ஹஸன் என்பவர் இடம் பெற்றிருக்கிறார். இவரிடம் பலவீனம் உள்ளது என்று ஹாபிழ் இப்னு ஹஜர் குறிப்பிட்டுள் ளார்கள்.✍✍✍*

📓📓📓இது தொடர்பாக வரும் அனைத்துச் செய்திகளும் பலவீனமானதாகும்.📓📓📓

அல்லாஹூவே மிகவும் அறிந்தவன்

*ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*