பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, May 30, 2020

தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை இல்லை

தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை இல்லை

தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா? ‎என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. ‎ஆயினும் தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை ‎நடத்தக் கூடாது என்பதே சரியான கருத்தாகும்.‎

صحيح مسلم

‎2309 - ‎حَدَّثَنَا عَوْنُ بْنُ سَلاَّمٍ الْكُوفِىُّ أَخْبَرَنَا زُهَيْرٌ عَنْ سِمَاكٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ أُتِىَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- بِرَجُلٍ قَتَلَ نَفْسَهُ ‏بِمَشَاقِصَ فَلَمْ يُصَلِّ عَلَيْهِ‎.‎

ஈட்டியால் தற்கொலை செய்து கொண்ட ஒருவர் நபிகள் ‎நாயகத்திடம் கொண்டு வரப்பட்டார். அவருக்கு நபிகள் நாயகம் ‎‎(ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தவில்லை.‎

அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)‎

நூல்: முஸ்லிம் 1624‎

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தாவிட்டாலும் ‎மற்றவர்கள் தொழுகை நடத்தக் கூடாது என்று கூறவில்லை ‎என்று காரணம் கூறி இந்த நபிவழியை சிலர் நிராகரிக்கின்றனர்.‎

யாரேனும் கடன்பட்டிருந்தால் அவருக்கு ஜனாஸா தொழுகை ‎நடத்தாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  உங்கள் தோழருக்கு ‎நீங்கள் ஜனாஸா தொழுகை நடத்துங்கள்  என்று கூறுவதை ‎வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்கொலை ‎செய்தவருக்கு இப்படிக் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் ஒருவருக்குத் தொழுகை நடத்தவில்லை என்றால் ‎அதை மீறி நபித்தோழர்கள் தொழுகை நடத்தியிருக்க மாட்டார்கள் ‎என்பதை ஏனோ இந்த அறிஞர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.‎

மேலும் ஜனாஸா தொழுகை என்பது இறந்தவருக்காகப் ‎பாவமன்னிப்புத் தேடுவதும், மறுமைப் பயன்களை அவருக்காக ‎வேண்டுவதுமாகும்.‎

தற்கொலை செய்தவருக்கு நிரந்தர நரகம் என்ற கருத்தில் ‎ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. யாருக்கு நிரந்தர நரகம் என்று ‎அல்லாஹ் முடிவு எடுத்து விட்டானோ அவர்களுக்குப் ‎பாவமன்னிப்புத் தேடுவது இறைவனின் தீர்ப்பை எதிர்ப்பதற்குச் ‎சமமாகும்.‎

صحيح البخاري

‎1364 - ‎وَقَالَ حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنِ الحَسَنِ، حَدَّثَنَا جُنْدَبٌ رَضِيَ اللَّهُ عَنْهُ - فِي هَذَا المَسْجِدِ فَمَا ‏نَسِينَا وَمَا نَخَافُ أَنْ يَكْذِبَ جُنْدَبٌ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ: " كَانَ بِرَجُلٍ جِرَاحٌ، فَقَتَلَ نَفْسَهُ، فَقَالَ اللَّهُ: ‏بَدَرَنِي عَبْدِي بِنَفْسِهِ حَرَّمْتُ عَلَيْهِ الجَنَّةَ‎ "‎

ஒரு மனிதருக்குக் காயம் ஏற்பட்டது. (அதன் வேதனை தாங்க ‎முடியாமல்) தற்கொலை செய்து கொண்டார். என் அடியான் தன் ‎விஷயத்தில் அவசரப்பட்டு விட்டான். எனவே அவனுக்குச் ‎சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன்  என்று அல்லாஹ் ‎கூறி விட்டான்  என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி)‎

நூல்: புகாரி 1364‎

صحيح البخاري

‎5778 - ‎حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ ذَكْوَانَ، ‏يُحَدِّثُ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: « مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ، فَهُوَ فِي ‏نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ، فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا ‏فِيهَا أَبَدًا، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ، فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا‎»‎

‎ யாரேனும் மலையிலிருந்து உருண்டு தற்கொலை செய்து ‎கொண்டால் அவன் நரகத்தில் உருண்டு கொண்டே நரகத்தில் ‎என்றென்றும் நிரந்தரமாக இருப்பான். யாரேனும் விஷம் அருந்தி ‎தற்கொலை செய்து கொண்டால் விஷத்தைக் குடித்துக் ‎கொண்டே நரகில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பான். ‎யாரேனும் இரும்பின் மூலம் தற்கொலை செய்தால் தன் கையில் ‎அந்த இரும்பை வைத்துக் கொண்டு வயிற்றில் குத்திக் கொண்டு ‎நரகத்தில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பான்  என்று நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)‎

நூல்: புகாரி 5778‎

தற்கொலை செய்தவனுக்கு நிரந்தர நரகம் என்று தீர்மானமாகி ‎விட்ட பின் அவருக்காக மறுமைப் பயன் கோருவது இறைவனின் ‎கட்டளையை அப்பட்டமாக மீறுவதாகும். எனவே தற்கொலை ‎செய்தவருக்காக ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது.‎
[30/05, 10:06 PM] +966 54 129 6770: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்பிற்கினிய குழு உறுப்பினர்களே 
உங்கள் மகளை திருமணம் முடித்துக்கொடுக்கும் பொழுது 
மாப்பிளையின்  ஈமானை, கல்வியை ,அவரின் வேலையை  பாருங்கள். அவரால் உங்கள் மகளை கண்ணியமாக ஈறுதிவரை வாழவைக்க முடியுமா என்று பாருங்கள் மாறாக அவரின் குடும்ப சொத்தை பார்காதீர்கள் 

காரணம் அவரின் சொத்து ஒரு பொழுதும் மறுமையில் பயன்படப்போவதில்லை மாறாக அவரின் அமல்களும் அவரின் நற்செயல்களும் மட்டுமே அவருக்கு பயன்படப்போகின்றன ஆதலால் செல்வங்களை பார்க்காமல் அவர்களின் நல்ல குணங்களை வைத்து உங்கள் மகள்களுக்கு திருமணம் முடித்து வையுங்கள் ....


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

No comments:

Post a Comment