பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Monday, September 1, 2025

பாவங்களின் பரிகாரம் தொழுகை*

*பாவங்களின் பரிகாரம் தொழுகை*

وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَنُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّـَٔاتِهِمْ وَلَنَجْزِيَنَّهُمْ أَحْسَنَ ٱلَّذِى كَانُوا۟ يَعْمَلُونَ⭘ 

இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்வோரை விட்டும் அவர்களின் தீமைகளை அழிப்போம். அவர்கள் செய்து கொண்டிருந்த அழகிய செயல்களுக்கான கூலியை அவர்களுக்கு வழங்குவோம்.

அல் குர்ஆன் -   29 : 7

اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ‌ؕ

தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும்.

(அல்குர்ஆன்: 29:45)

*உடலிலுள்ள அழுக்கை தண்ணீர் கழுவுவது போல, தொழுகை நமது பாவங்களை கழுவிவிடும்*

أَرَأَيْتُمْ لَوْ أَنَّ نَهَرًا بِبَابِ أَحَدِكُمْ يَغْتَسِلُ فِيهِ كُلَّ يَوْمٍ خَمْسًا، مَا تَقُولُ: ذَلِكَ يُبْقِي مِنْ دَرَنِهِ ” قَالُوا: لاَ يُبْقِي مِنْ دَرَنِهِ شَيْئًا، قَالَ: «فَذَلِكَ مِثْلُ الصَّلَوَاتِ الخَمْسِ، يَمْحُو اللَّهُ بِهِ الخَطَايَا

‘உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உடலிலுள்ள) அழுக்குகளில் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘

அவரது அழுக்குகளில் எதையும் தங்க விடாது’ என்று மக்கள் பதிலளித்தார்கள். ‘இது தான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும் இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்கள்: (புகாரி: 528) ➚ , முஸ்லிம் (1185)

*நஃபிலான தொழுகையில் ஆர்வம்*

مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لاَ يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

‘யார் எனது (இந்த) உளுவைப் போன்று உளுச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல்: (புகாரி: 159) ➚

No comments:

Post a Comment