பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, December 23, 2010

வின் வெளிப்பயணத்தில் கிப்லாவை எப்படி நோக்குவது

வின் வெளிப்பயணத்தில் கிப்லாவை எப்படி நோக்குவது ?

கிப்லாவை முன்னோக்குவது தொழுகையின் முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று என்றாலும் அதில் விதிவிலக்குகளும் உள்ளன. 
நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை மஸ்ஜிதுல் ஹரம் (கஃபா) நோக்கித் திருப்புங்கள். 
(அல்குர்ஆன் 2:144) 
]என்று குறிப்பிடும் இறைவன் நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கேயும் அல்லாஹ்வின் திருமுகம் உண்டு
(அல்குர்ஆன் 2:115) எனவும் கூறுகிறான். 
யாவற்றையும் அறிந்த இறைவனுக்கு, கிப்லாவை நோக்க இயலாத சந்தர்பபங்களும் ஏற்படும் என்பது நிச்சயமாகத் தெரியும். இது போன்ற சந்தர்ப்பங்களைக் கருத்தில் கொண்டே எங்கே திரும்பினாலும் அங்கே அவனது திருமுகம் உண்டு என்ற வசனமும் அருளப்பட்டது. 
و حدثني عبيد الله بن عمر القواريري حدثنا يحيى بن سعيد عن عبد الملك بن أبي سليمان قال حدثنا سعيد بن جبير عن ابن عمر قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي وهو مقبل من مكة إلى المدينة على راحلته حيث كان وجهه قال وفيه نزلت فأينما تولوا فثم وجه الله و حدثناه أبو كريب أخبرنا ابن المبارك وابن أبي زائدة ح و حدثنا ابن نمير حدثنا أبي كلهم عن عبد الملك بهذا الإسناد نحوه وفي حديث ابن مبارك وابن أبي زائدة ثم تلا ابن عمر فأينما تولوا فثم وجه الله وقال في هذا نزلت
நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி வரும் போது வாகனத்தின் மீதமர்ந்து அது எந்தப் பக்கம் செல்கிறதோ அந்தத் திசையில் (அதாவது கஃபாவுக்கு எதிர்த் திசையில்) தொழுதார்கள். அப்போது மேற்கண்ட 2:116 வசனம் இறங்கியது என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 1131
இந்த ஹதீஸ் அஹ்மத், திர்மிதீ ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது. 
حدثنا عبد الله بن يوسف حدثنا مالك عن نافع أن عبد الله بن عمر رضي الله عنهما كان إذا سئل عن صلاة الخوف قال يتقدم الإمام وطائفة من الناس فيصلي بهم الإمام ركعة وتكون طائفة منهم بينهم وبين العدو لم يصلوا فإذا صلى الذين معه ركعة استأخروا مكان الذين لم يصلوا ولا يسلمون ويتقدم الذين لم يصلوا فيصلون معه ركعة ثم ينصرف الإمام وقد صلى ركعتين فيقوم كل واحد من الطائفتين فيصلون لأنفسهم ركعة بعد أن ينصرف الإمام فيكون كل واحد من الطائفتين قد صلى ركعتين فإن كان خوف هو أشد من ذلك صلوا رجالا قياما على أقدامهم أو ركبانا مستقبلي القبلة أو غير مستقبليها قال مالك قال نافع لا أرى عبد الله بن عمر ذكر ذلك إلا عن رسول الله صلى الله عليه وسلم
எதிரிகளின் அச்சம் மிகவும் கடுமையாக இருந்தால் நின்று கொண்டோ, நடந்து கொண்டோ வாகனத்தின் மீதோ, கிப்லாவை நோக்கியோ, அதை முன்னோக்காமலோ தொழலாம் என்று இப்னு உமர் (ரலி) கூறியதாக ராபிவு அவர்கள் அறிவித்து விட்டு இதை நபி (ஸல்) அவர்கள் வழியாகவே இப்னு உமர் (ரலி) அறிவித்ததாக நான் கருதுகிறேன் எனவும் குறிப்பிட்டார்கள்.
இந்தச் செய்தி புகாரியில் (4535) இடம் பெற்றுள்ளது. 
எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி இறைவன் நிர்பந்தப்படுத்துவதில்லை. (அல்குர்அன் 2:286) என்றும் இறைவன் கூறுகிறான்.
6:152, 6:42, 23:62, 65:7, 2:233, 4:84 வசனங்களையும் பார்க்க.
எனவே விண்வெளிப் பயணமோ அல்லது வேறு சந்தர்ப்பங்களிலோ கிப்லாவை முன்னோக்க இயலாவிட்டால் எந்தத் திசையை நோக்கியும் தொழலாம்.

No comments:

Post a Comment