பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, December 23, 2010

தொப்பி அணிந்து தொழும் நன்மைகள் யாவை


தொப்பி அணிந்து தொழும் நன்மைகள் யாவை
தொப்பி அணிந்து தொழுவதற்கும் அணியாமல் தொழுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன? சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவதற்கும் உப்பு போடாமல் சாப்பிடுவதற்கும் உள்ள வேறுபாடு என்று மாலிக் இமாம் கூறியுள்ளது சரியா?
தொப்பி அணிந்து தொழுவது உப்புள்ள உணவை சாப்பிடுவதைப் போன்றது. தொப்பி அணியாமல் தொழுவது உப்பில்லாத உணவை உண்பதைப் போன்றது என்று இமாம் மாலிக் கூறினார் என்று சொல்பவர்கள் அவர் எந்த நூலில் கூறியுள்ளார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
மாலிக் இமாம் வாழ்ந்த காலத்தில் அவரது பகுதியில் சோறு சாப்பிடும் பழக்கமே இல்லை என்பதே இதன் தரத்தை உங்களுக்குக் கூறி விடும்.
இமாம் மாலிக் அவர்கள் உண்மையில் அப்படி கூறியிருந்தாலும் அதை நாம் ஏற்க முடியாது. ஏனென்றால் குர்ஆன் ஹதீஸ்களை வைத்து மட்டுமே மார்க்கப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். மனிதர்களின் சுய அபிப்பிராயங்கள் ஒருக்காலும் மார்க்கத்திற்குத் தீர்வாக முடியாது.
குர்ஆன் ஹதீஸை ஆய்வு செய்யும் போது தொப்பிக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைத் தெளிவாக உணர முடிகின்றது.
இஸ்லாமியர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு தொப்பியும் தலைப்பாகையும் இன்று நடைமுறையில் இருந்து வருகிறது. தொப்பியே இஸ்லாத்தின் அடையாளம் என்றும் பெரும்பாலான முஸ்லிம்கள் நம்பி செயல்படுத்தி வருகின்றனர். இஸ்லாத்தின் ஏனைய கடமைகளை விட  தொப்பி முஸ்லிம்களிடம் முதலிடம் பெற்று வருகிறது.
குறிப்பாக தொழுகை நேரங்களில் ஒருவரிடம் தொப்பி இல்லையென்றால் அவர் தொழுவதற்குத் தகுதியற்றவர் என்று எண்ணுகின்றனர். இதில் ஆலிம்களும் அடக்கம். எனவே பல பள்ளிவாசல்களில் "தொப்பி அணியாமல் தொழக் கூடாது!' என்ற கடுமையான வாசகம் பள்ளிவாசலின் முகப்பில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த தாடி வைக்காதவர்கள் பள்ளியில் தொழக் கூடாது என்று இவர்கள் எழுதுவதில்லை.
மேலும் சில பள்ளிவாசல்களில் ரெடிமேட் தொப்பிகள் வாங்கி வைத்துள்ளனர். இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் தொப்பிக்கு நபி (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்களா? இதற்கு ஆதாரங்கள் உண்டா? என்பதைக் காண்போம்.
தொப்பி அணிய வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் தொப்பி இல்லாமல் வெறும் தலையுடன் இருந்துள்ளனர் என்பதற்குப் பல சான்றுகள் நபிமொழித் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன. அவற்றைக் காண்போம்.
حدثنا عبد الله بن محمد قال حدثنا عثمان بن عمر قال أخبرنا يونس عن الزهري عن أبي سلمة عن أبي هريرة قال أقيمت الصلاة وعدلت الصفوف قياما فخرج إلينا رسول الله صلى الله عليه وسلم فلما قام في مصلاه ذكر أنه جنب فقال لنا مكانكم ثم رجع فاغتسل ثم خرج إلينا ورأسه يقطر فكبر فصلينا معه تابعه عبد الأعلى عن معمر عن الزهري ورواه الأوزاعي عن الزهري
(ஒரு நாள்) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. வரிசைகள் சரி செய்யப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். தொழுகைக்காக அவர்களுடைய இடத்தில் போய் நின்றதும் தனக்கு குளிப்பு கடமையானது நினைவுக்கு வந்ததால் எங்களைப் பார்த்து "உங்களுடைய இடத்தில் நில்லுங்கள்'' என்று சொல்லி விட்டு (வீட்டிற்குள்) சென்றார்கள். பின்னர் அவர்கள் குளித்து விட்டுத் தலையில் ஈரம் சொட்டச் சொட்ட வந்தார்கள். தக்பீர் சொல்லி தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுடன் தொழுதோம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 275
புகாரியின் 571ஆவது அறிவிப்பில்
حدثنا محمود يعني ابن غيلان قال أخبرنا عبد الرزاق قال أخبرني ابن جريج قال أخبرني نافع قال حدثنا عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم شغل عنها ليلة فأخرها حتى رقدنا في المسجد ثم استيقظنا ثم رقدنا ثم استيقظنا ثم خرج علينا النبي صلى الله عليه وسلم ثم قال ليس أحد من أهل الأرض ينتظر الصلاة غيركم وكان ابن عمر لا يبالي أقدمها أم أخرها إذا كان لا يخشى أن يغلبه النوم عن وقتها وكان يرقد قبلها قال ابن جريج قلت لعطاء وقال سمعت ابن عباس يقول أعتم رسول الله صلى الله عليه وسلم ليلة بالعشاء حتى رقد الناس واستيقظوا ورقدوا واستيقظوا فقام عمر بن الخطاب فقال الصلاة قال عطاء قال ابن عباس فخرج نبي الله صلى الله عليه وسلم كأني أنظر إليه الآن يقطر رأسه ماء واضعا يده على رأسه فقال لولا أن أشق على أمتي لأمرتهم أن يصلوها هكذا فاستثبت عطاء كيف وضع النبي صلى الله عليه وسلم على رأسه يده كما أنبأه ابن عباس فبدد لي عطاء بين أصابعه شيئا من تبديد ثم وضع أطراف أصابعه على قرن الرأس ثم ضمها يمرها كذلك على الرأس حتى مست إبهامه طرف الأذن مما يلي الوجه على الصدغ وناحية اللحية لا يقصر ولا يبطش إلا كذلك وقال لولا أن أشق على أمتي لأمرتهم أن يصلوا هكذا
"நபி (ஸல்) அவர்கள் நீர் சொட்ட, தம் கையைத் தலையில் வைத்தவர்களாகப் புறப்பட்டதை இன்று பார்ப்பது போல் உள்ளது'' என்று இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் வீட்டில் குளித்துவிட்டு வரும் போது அவர்களின் தலையில் நீர் சொட்டிக் கொண்டிருந்தது. மேலும் அவர்களின் கையை தலையில் வைத்தவர்களாகவும் வந்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தால் நபி (ஸல்) அவர்கள் தம் கையை தொப்பியின் மீது வைத்துக் கொண்டு வந்தார்கள் என்று நபித்தோழர் குறிப்பிட்டிருப்பார்கள். அவ்வாறு கூறாததால் நபி (ஸல்) அவர்கள் வெறும் தலையுடன் தான் வந்து தொழுவித்துள்ளார்கள் என்பதை அறியலாம். மேலும் யாரும் தலையில் நீர் வடிய தொப்பியணிந்து கொண்டு வர மாட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்க!
நபி (ஸல்) அவர்கள் தலை திறந்த நிலையில் தான் பெரும்பாலும் இருந்துள்ளர்கள் என்பதைப் பின்வரும் நபிமொழிகள் நமக்கு உணர்த்தும்.
أخبرنا يعقوب بن إبراهيم قال حدثنا هشيم قال حدثنا شعبة عن أبي إسحق عن البراء قال رأيت النبي صلى الله عليه وسلم وعليه حلة حمراء مترجلا لم أر قبله ولا بعده أحدا هو أجمل منه
நபி (ஸல்) அவர்கள் தலை வாரியவர்களாக இரண்டு சிவப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தார்கள். அப்போது அவர்களை விட அழகான ஒருவரை அதற்கு முன்பும் பின்பும் நான் பார்த்ததில்லை.
அறிவிப்பவர்: பரா (ரலி) நூல்: நஸயீ 5219
நபி (ஸல்) அவர்கள் எப்போதும் தொப்பி அணிந்திருந்தால் அவர்கள் தலை வாரி இருக்கிறார்களா? இல்லையா? என்பதை அறிய முடியாது. நபி (ஸல்) அவர்கள் தலை வாரி இருந்தார்கள் என்ற வாசகம் நபி (ஸல்) அவர்களின் தலை திறந்த நிலையில் இருந்தது என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
حدثنا شيبان بن فروخ حدثنا جرير بن حازم حدثنا قتادة قال قلت لأنس بن مالك كيف كان شعر رسول الله صلى الله عليه وسلم قال كان شعرا رجلا ليس بالجعد ولا السبط بين أذنيه وعاتقه
நான் அனஸ் (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்களின் தலைமுடி எப்படி இருந்தது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவர்களது தலைமுடி அலையலையானதாக இருந்தது. சுருள் முடியாகவும் இல்லை; படிந்த முடியாகவும் இல்லை. அது அவர்களது காது மடல்களுக்கும் தோள்களுக்கும் இடையே தொங்கிக் கொண்டிருந்தது'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: கதாதா நூல்: முஸ்லிம் 4666
நபி (ஸல்) அவர்கள் தலைமுடி அலையலையானதாகவும் இருந்தது; சுருள் முடியாகவும் இல்லை, படிந்த முடியாகவும் இல்லை என்று கூற வேண்டுமானால் தலை திறந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதை யாரும் அறிய முடியும்
و حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا عبيد الله عن إسرائيل عن سماك أنه سمع جابر بن سمرة يقول كان رسول الله صلى الله عليه وسلم قد شمط مقدم رأسه ولحيته وكان إذا ادهن لم يتبين وإذا شعث رأسه تبين وكان كثير شعر اللحية فقال رجل وجهه مثل السيف قال لا بل كان مثل الشمس والقمر وكان مستديرا ورأيت الخاتم عند كتفه مثل بيضة الحمامة يشبه جسده
ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் நரை முடி பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "நபியவர்கள் தமது தலையில் எண்ணெய் தேய்த்திருந்தால் அவர்களது தலையிலிருந்து ஒரு சில நரை முடி கூடத் தென்படாது; அவர்கள் எண்ணெய் தேய்த்திருக்கா விட்டால் சில நரைமுடிகள் தென்படும்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஸிமாக் பின் ஹர்ப் நூல்: முஸ்லிம் 4680
حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك بن أنس عن ربيعة بن أبي عبد الرحمن عن أنس بن مالك رضي الله عنه أنه سمعه يقول كان رسول الله صلى الله عليه وسلم ليس بالطويل البائن ولا بالقصير ولا بالأبيض الأمهق وليس بالآدم وليس بالجعد القطط ولا بالسبط بعثه الله على رأس أربعين سنة فأقام بمكة عشر سنين وبالمدينة عشر سنين فتوفاه الله وليس في رأسه ولحيته عشرون شعرة بيضاء
நபி (ஸல்) அவர்களுடைய தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள் கூட இல்லாத நிலையில் அல்லாஹ் அவர்களை இறக்கச் செய்தான்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 3548
حدثنا يحيى بن بكير حدثنا الليث عن يونس عن ابن شهاب قال أخبرني عبيد الله بن عبد الله عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يسدل شعره وكان المشركون يفرقون رءوسهم فكان أهل الكتاب يسدلون رءوسهم وكان رسول الله صلى الله عليه وسلم يحب موافقة أهل الكتاب فيما لم يؤمر فيه بشيء ثم فرق رسول الله صلى الله عليه وسلم رأسه
நபி (ஸல்) அவர்கள் தம் முடியை (தமது நெற்றியின் மீது) தொங்க விட்டு வந்தார்கள். இணை வைப்பாளர்கள் தங்கள் தலை முடியைப் பிரித்து (நெற்றியில் விழ விடாமல் இரு பக்கமும்) தொங்க விட்டு வந்தனர். நபி (ஸல்) அவர்கள் எந்த விஷயங்களில் தமக்கு இறைக் கட்டளை எதுவும் இடப்படவில்லையோ, அந்த விஷயங்களில் வேதக்காரர்களுடன் ஒத்துப்போக விரும்பி வந்தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் தம் (தலை) முடியை (இரு பக்கங்களிலும்) பிரித்து (வகிடெடுத்துக்) கொண்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 3558
நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனை நரை முடிகள் இருந்தன? எப்படி வகிடு எடுத்தார்கள்? என்றெல்லாம் அறிவிக்க வேண்டுமானால் திறந்த நிலையில் அவர்களின் தலை இருந்திருக்க வேண்டும் என்பதைச் சாதாரணமாக நாம் அறிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் மட்டுமல்லாமல் நபித் தோழர்களும் கூட தலையை மறைக்காதவர்களாகப் பெரும்பாலும் காட்சியளித்துள்ளார்கள் என்பதற்கும் சான்றுகள் உள்ளன.
أخبرنا أحمد بن حرب قال حدثنا قاسم قال حدثنا سفيان عن عاصم بن كليب عن أبيه عن وائل بن حجر قال أتيت النبي صلى الله عليه وسلم ولي جمة قال ذباب وظننت أنه يعنيني فانطلقت فأخذت من شعري فقال إني لم أعنك وهذا أحسن
நான் நீண்ட முடியுடையவனாக நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது ஆட்சேபணை செய்வது போன்ற ஒரு சொல்லைக் கூறினார்கள். உடனே நான்  சென்று என் முடியைக் கத்தரித்து விட்டு சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "நான் உன்னைச் சொல்லவில்லை என்றாலும் இது (முன்பை விட) அழகாக உள்ளது'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) நூல்கள்: நஸயீ 4980, அபூதாவூத் 3658
أخبرنا علي بن خشرم قال أنبأنا عيسى عن الأوزاعي عن حسان بن عطية عن محمد بن المنكدر عن جابر بن عبد الله أنه قال أتانا النبي صلى الله عليه وسلم فرأى رجلا ثائر الرأس فقال أما يجد هذا ما يسكن به شعره
தலைவிரி கோலத்துடன் ஒரு மனிதரை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது, "இவர் தம் முடியைப் படிய வைக்கும் ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ளவில்லையா?'' என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்கள்: நஸயீ 5141, அபூதாவூத் 3540
و حدثني أبو الطاهر أخبرنا عبد الله بن وهب عن ابن جريج عن أبي الزبير عن جابر بن عبد الله قال أتي بأبي قحافة يوم فتح مكة ورأسه ولحيته كالثغامة بياضا فقال رسول الله صلى الله عليه وسلم غيروا هذا بشيء واجتنبوا السواد
மக்கா வெற்றி நாளில் (அபூபக்ரின் தந்தை) அபூகுஹாஃபா, (நபி (ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரது தலைமுடியும் தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெள்ளை நிறத்தில் இருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், "இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள். கறுப்பு நிறத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 4270
தலைவிரி கோலமாக வந்தது, தலை வாராமல் வந்தது, வெள்ளை முடியுடன் வந்தது என்று பல நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்கள் அவர்கள் முன்னால் காட்சியளித்த போது எண்ணெய் தேய்த்து தலைவாரச் சொன்னார்களே தவிர, தலைக்குத் தொப்பி அணியுமாறு கூறவில்லை என்பதைக் கவனியுங்கள்.
தொப்பி அணிய வேண்டும் என்போரின் ஆதாரங்கள்
தொப்பி அணிவது சுன்னத் என்று சொல்பவர்கள் சில செய்திகளை ஆதாரமாகக் காட்டுகின்றனர். அவற்றின் தரத்தையும் அதன் கருத்தையும் முதலில் காண்போம்.
حدثنا قتيبة حدثنا ابن لهيعة عن عطاء بن دينار عن أبي يزيد الخولاني أنه سمع فضالة بن عبيد يقول سمعت عمر بن الخطاب يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الشهداء أربعة رجل مؤمن جيد الإيمان لقي العدو فصدق الله حتى قتل فذلك الذي يرفع الناس إليه أعينهم يوم القيامة هكذا ورفع رأسه حتى وقعت قلنسوته قال فما أدري أقلنسوة عمر أراد أم قلنسوة النبي صلى الله عليه وسلم قال ورجل مؤمن جيد الإيمان لقي العدو فكأنما ضرب جلده بشوك طلح من الجبن أتاه سهم غرب فقتله فهو في الدرجة الثانية ورجل مؤمن خلط عملا صالحا وآخر سيئا لقي العدو فصدق الله حتى قتل فذلك في الدرجة الثالثة ورجل مؤمن أسرف على نفسه لقي العدو فصدق الله حتى قتل فذلك في الدرجة الرابعة قال أبو عيسى هذا حديث حسن غريب لا نعرفه إلا من حديث عطاء بن دينار قال سمعت محمدا يقول قد روى سعيد بن أبي أيوب هذا الحديث عن عطاء بن دينار وقال عن أشياخ من خولان ولم يذكر فيه عن أبي يزيد و قال عطاء بن دينار ليس به بأس
"...மறுமை நாளில் மக்கள் இவ்வாறு தான் தங்கள் கண்களை உயர்த்திப் பார்ப்பார்கள்' என்று கூறிவிட்டுத் தமது தலையை உயர்த்தினார்கள். அவர்களின் தொப்பி கீழே விழுந்தது. இது உமர் (ரலி) அவர்களின் தொப்பியா? அல்லது நபி (ஸல்) அவர்களின் தொப்பியா? என்று எனக்குத் தெரியாது.
அறிவிப்பவர்: ஃபுலாலா பின் உபைத் நூல்கள்: திர்மிதீ 1568, அஹ்மத் 145
நபி (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்துள்ளார்கள் என்பதற்குச் சான்றாக இந்தச் செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
8449- أبو يزيد الخولاني المصري مجهول من الرابعة ت
تقريب التهذيب : ابن حجر [2 /684]
இந்தச் செய்தியில் இடம் பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் அபூயஸீத் அல்கவ்லானீ என்பவர் யாரென அறியப்படாதவர். (தக்ரீபுத் தஹ்தீப், பாகம்: 1, பக்கம்: 684)
இவர் யார்? இவரின் தகுதிகள் என்பன போன்ற விவரங்கள் கிடையாது. எனவே இது போன்ற முகவரியற்றவர்களின் அறிவிப்புகளை ஹதீஸ்கலை அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. 
மேலும் இதன் ஐந்தாவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் லஹீஆ என்பவரும் பலவீனமானவர்.
346 - عبد الله بن لهيعة بن عقبة أبو عبد الرحمن البصري ضعيف
الضعفاء والمتروكين - النسائي [ص 64]
 (நூல்: அல்லுஃபாவுல் மத்ரூகீன்-நஸயீ, பாகம்: 1, பக்கம்: 64)
எனவே ஆதாரமற்ற இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்துச் சட்டம் இயற்ற முடியாது; இயற்றக் கூடாது.
حدثنا قتيبة حدثنا محمد بن ربيعة عن أبي الحسن العسقلاني عن أبي جعفر بن محمد بن ركانة عن أبيه أن ركانة صارع النبي صلى الله عليه وسلم فصرعه النبي صلى الله عليه وسلم قال ركانة سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن فرق ما بيننا وبين المشركين العمائم على القلانس قال أبو عيسى هذا حديث غريب وإسناده ليس بالقائم ولا نعرف أبا الحسن العسقلاني ولا ابن ركانة
"நமக்கு இணை வைப்பவர்களுக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு, தொப்பிகளின் மீது தலைபாகைகளை அணிவதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ருக்கானா (ரலி) நூல்கள்: திர்மிதீ 1706, அபூதாவூத் 3556
இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம்களில் ஒருவரான திர்மிதீ அவர்கள் இந்தச் செய்தியின் தரத்தை அதன் கீழே இவ்வாறு பதிவு செய்துள்ளார்கள்: "இதன் அறிவிப்பாளர் தொடர் வலிமையானது இல்லை. (இதில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர்) அபுல் ஹஸன் அல்அஸ்கலானீ என்பவரையும் (இரண்டாவது அறிவிப்பாளர் முஹம்மத் பின் ருக்கானா என்ற) ருக்கானாவின் மகனையும் நாம் யாரென அறிய மாட்டோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
முகவரியற்ற இரண்டு அறிவிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளதால் இந்தச் செய்தி பலவீனமானது என்று இமாம் திர்மிதீ அவர்களே தெளிவுபடுத்தி விட்டதால் இந்தச் செய்தியையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.
மேலும் இந்தச் செய்தியை ஆதாரமாகக் காட்டுபவர்கள், இதை முழுமையாகவும் செயல்படுத்துவதில்லை. இந்தச் செய்தியின்படி தொப்பி அணிந்து அதன் மேல் தலைப்பாகையும் அணிய வேண்டும். இது தான் இந்த ஹதீஸின்படி முஸ்லிம்களின் அடையாளம். இதை யாரும் செயல்படுத்துவதில்லை. வெறும் தொப்பி மட்டும் அணிந்தால் போதும் என்றே கூறுகின்றனர். இனி மேல் இந்தச் செய்தியை ஆதாரம் காட்டுபவர்கள், பள்ளிவாசலில் ரெடிமேட் தொப்பியுடன் தலைப்பாகையும் சேர்த்து வைக்கட்டும்.
كانت له عمامة تسمى : السحاب كساها عليا وكان يلبسها ويلبس تحتها القلنسوة وكان يلبس القلنسوة بغير عمامة ويلبس العمامة بغير قلنسوة
زاد المعاد [1 /130]
நபி (ஸல்) அவர்கள் தொப்பிக்கு மேல் தலைப்பாகை அணிவார்கள். (சில நேரங்களில்) தலைப்பாகை இல்லாமல் தொப்பி மட்டும் அணிவார்கள். (சில நேரங்களில்) தொப்பி இல்லாமல் தலைப்பாகை மட்டும் அணிவார்கள்.
நூல்: ஸாதுல் மஆத், பாகம்: 1, பக்கம்: 130
இந்தச் செய்திக்கு எந்த ஆதாரத்தையும் இந்நூல் ஆசிரியர் இப்னுல் கையூம் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. இவர் நபித்தோழர் கிடையாது. ஹிஜ்ரி 691-751 ஆண்டில் வாழ்ந்தவர்.
இவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்ததைத் தெரிவிக்க வேண்டுமானால் நபிமொழித் தொகுப்பிலிருந்து ஆதாரம் காட்ட வேண்டும். அதைச் செய்யாத காரணத்தால் இக்கருத்தை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.
حدثنا آدم قال حدثنا ابن أبي ذئب عن نافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم وعن الزهري عن سالم عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم أن رجلا سأله ما يلبس المحرم فقال لا يلبس القميص ولا العمامة ولا السراويل ولا البرنس ولا ثوبا مسه الورس أو الزعفران فإن لم يجد النعلين فليلبس الخفين وليقطعهما حتى يكونا تحت الكعبين
"அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "இஹ்ராம் கட்டியவர் சட்டை அணிய மாட்டார்; முழுக்கால் சட்டை அணிய மாட்டார். புர்னுஸ் அணிய மாட்டார். அவருக்குக் காலணிகள் கிடைக்காவிட்டால் அவர் காலுறைகளைக் கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி அணிந்து கொள்ளட்டும்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 134, 5794
இந்தச் செய்தியில் இடம் பெறும் "புர்னுஸ்' என்ற சொல்லுக்கு தொப்பி என்று மொழி பெயர்த்து, இந்த ஹதீஸ் தொப்பி அணிவதற்கு ஆதாரம் என்று கூறுகின்றனர். அதாவது "இஹ்ராம் கட்டியவர் தொப்பியை அணியக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து இஹ்ராம் கட்டாதவர் தொப்பி அணியலாம் என்பதையும், நபி (ஸல்) அவர்கள் காலத்தில் தொப்பி இருந்துள்ளதையும் விளங்கலாம்' என்று கூறுகின்றனர்.
முதலில் "புர்னுஸ்' என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பதைப் பார்க்கலாம்.
( برنس ) البُرْنُس كل ثوب رأْسه منه مُلْتَزِقٌ به دُرَّاعَةً كان أَو مِمْطَراً أَو جُبَّة وفي حديث عمر رضي اللَّه عنه سقط البُرْنُسُ عن رأْسي هو من ذلك الجوهري البُرْنُسُ قَلَنْسُوَة طويلة وكان النُّسَّاكُ يلبسونها في صدر الإِسلام
لسان العرب [6 /26]
1. தலையை மறைத்து உடல் முழுவதும் போர்த்திக் கொள்ளும் ஆடை 2. நீண்ட தொப்பி. இதை இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஹஜ் செய்பவர்கள் அணிந்திருந்தனர். (நூல்: லிஸானுல் அரப், பாகம்: 6, பக்கம்: 26)
அரபி மொழி அகராதியில் மிகச் சிறந்த நூலாகக் கருதப்படும் லிஸானுல் அரப் என்ற நூலில் இந்த இரண்டு பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
புகாரியில் இடம் பெறும் புர்னுஸ் என்ற வார்த்தைக்கு நீண்ட தொப்பி என்று பொருள் கொண்டாலும் இவர்கள் அணியும் இந்தத் தொப்பியை அது குறிக்காது. ஏனெனில் தற்போது அணியும் தொப்பி நீண்ட வகை தொப்பி கிடையாது. மிக மிக சிறிய வகை தொப்பியையே அணிகின்றனர்.
மேலும் புகாரியின் இந்த ஹதீஸை வைத்து தொப்பி அணிவது சுன்னத் என்று சொன்னால் அந்த ஹதீஸில் உள்ள மற்ற எல்லாவற்றை அணிவதும் சுன்னத் என்று சொல்ல வேண்டும். சட்டை, முழுக்கால் சட்டை (பேண்ட்) செருப்பு, காலுறை (சாக்ஸ்) இவற்றையெல்லாம் அணிவது சுன்னத் என்று சொல்வார்களா? இல்லையென்றால் இதையும் சுன்னத் என்று சொல்லக் கூடாது.
மேலும் அன்றைய காலத்தில் இருந்த தொப்பி (புர்னுஸ்)யை வைத்து மற்றவர்களைத் தாக்க முடியும். அவ்வளவு பெரியது, கனமானது. இதற்குச் சான்றாக பின்வரும் செய்தி ஆதராமாக இடம் பெற்றுள்ளது.
உமர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் புகாரியில் விரிவாக இடம் பெற்றுள்ளது. அதில்
حدثنا موسى بن إسماعيل حدثنا أبو عوانة عن حصين عن عمرو بن ميمون قال رأيت عمر بن الخطاب رضي الله عنه قبل أن يصاب بأيام بالمدينة وقف على حذيفة بن اليمان وعثمان بن حنيف قال كيف فعلتما أتخافان أن تكونا قد حملتما الأرض ما لا تطيق قالا حملناها أمرا هي له مطيقة ما فيها كبير فضل قال انظرا أن تكونا حملتما الأرض ما لا تطيق قال قالا لا فقال عمر لئن سلمني الله لأدعن أرامل أهل العراق لا يحتجن إلى رجل بعدي أبدا قال فما أتت عليه إلا رابعة حتى أصيب قال إني لقائم ما بيني وبينه إلا عبد الله بن عباس غداة أصيب وكان إذا مر بين الصفين قال استووا حتى إذا لم ير فيهن خللا تقدم فكبر وربما قرأ سورة يوسف أو النحل أو نحو ذلك في الركعة الأولى حتى يجتمع الناس فما هو إلا أن كبر فسمعته يقول قتلني أو أكلني الكلب حين طعنه فطار العلج بسكين ذات طرفين لا يمر على أحد يمينا ولا شمالا إلا طعنه حتى طعن ثلاثة عشر رجلا مات منهم سبعة فلما رأى ذلك رجل من المسلمين طرح عليه برنسا فلما ظن العلج أنه مأخوذ نحر نفسه وتناول عمر يد عبد الرحمن بن عوف فقدمه فمن يلي عمر فقد رأى الذي أرى وأما نواحي المسجد فإنهم لا يدرون غير أنهم قد فقدوا صوت عمر وهم يقولون سبحان الله سبحان الله فصلى بهم عبد الرحمن صلاة خفيفة فلما انصرفوا قال يا ابن عباس انظر من قتلني فجال ساعة ثم جاء فقال غلام المغيرة قال الصنع قال نعم قال قاتله الله لقد أمرت به معروفا الحمد لله الذي لم يجعل ميتتي بيد رجل يدعي الإسلام قد كنت أنت وأبوك تحبان أن تكثر العلوج بالمدينة وكان العباس أكثرهم رقيقا فقال إن شئت فعلت أي إن شئت قتلنا قال كذبت بعد ما تكلموا بلسانكم وصلوا قبلتكم وحجوا حجكم فاحتمل إلى بيته فانطلقنا معه وكأن الناس لم تصبهم مصيبة قبل يومئذ فقائل يقول لا بأس وقائل يقول أخاف عليه فأتي بنبيذ فشربه فخرج من جوفه ثم أتي بلبن فشربه فخرج من جرحه فعلموا أنه ميت فدخلنا عليه وجاء الناس فجعلوا يثنون عليه وجاء رجل شاب فقال أبشر يا أمير المؤمنين ببشرى الله لك من صحبة رسول الله صلى الله عليه وسلم وقدم في الإسلام ما قد علمت ثم وليت فعدلت ثم شهادة قال وددت أن ذلك كفاف لا علي ولا لي فلما أدبر إذا إزاره يمس الأرض قال ردوا علي الغلام قال يا ابن أخي ارفع ثوبك فإنه أبقى لثوبك وأتقى لربك يا عبد الله بن عمر انظر ما علي من الدين فحسبوه فوجدوه ستة وثمانين ألفا أو نحوه قال إن وفى له مال آل عمر فأده من أموالهم وإلا فسل في بني عدي بن كعب فإن لم تف أموالهم فسل في قريش ولا تعدهم إلى غيرهم فأد عني هذا المال انطلق إلى عائشة أم المؤمنين فقل يقرأ عليك عمر السلام ولا تقل أمير المؤمنين فإني لست اليوم للمؤمنين أميرا وقل يستأذن عمر بن الخطاب أن يدفن مع صاحبيه فسلم واستأذن ثم دخل عليها فوجدها قاعدة تبكي فقال يقرأ عليك عمر بن الخطاب السلام ويستأذن أن يدفن مع صاحبيه فقالت كنت أريده لنفسي ولأوثرن به اليوم على نفسي فلما أقبل قيل هذا عبد الله بن عمر قد جاء قال ارفعوني فأسنده رجل إليه فقال ما لديك قال الذي تحب يا أمير المؤمنين أذنت قال الحمد لله ما كان من شيء أهم إلي من ذلك فإذا أنا قضيت فاحملوني ثم سلم فقل يستأذن عمر بن الخطاب فإن أذنت لي فأدخلوني وإن ردتني ردوني إلى مقابر المسلمين وجاءت أم المؤمنين حفصة والنساء تسير معها فلما رأيناها قمنا فولجت عليه فبكت عنده ساعة واستأذن الرجال فولجت داخلا لهم فسمعنا بكاءها من الداخل فقالوا أوص يا أمير المؤمنين استخلف قال ما أجد أحدا أحق بهذا الأمر من هؤلاء النفر أو الرهط الذين توفي رسول الله صلى الله عليه وسلم وهو عنهم راض فسمى عليا وعثمان والزبير وطلحة وسعدا وعبد الرحمن وقال يشهدكم عبد الله بن عمر وليس له من الأمر شيء كهيئة التعزية له فإن أصابت الإمرة سعدا فهو ذاك وإلا فليستعن به أيكم ما أمر فإني لم أعزله عن عجز ولا خيانة وقال أوصي الخليفة من بعدي بالمهاجرين الأولين أن يعرف لهم حقهم ويحفظ لهم حرمتهم وأوصيه بالأنصار خيرا الذين تبوءوا الدار والإيمان من قبلهم أن يقبل من محسنهم وأن يعفى عن مسيئهم وأوصيه بأهل الأمصار خيرا فإنهم ردء الإسلام وجباة المال وغيظ العدو وأن لا يؤخذ منهم إلا فضلهم عن رضاهم وأوصيه بالأعراب خيرا فإنهم أصل العرب ومادة الإسلام أن يؤخذ من حواشي أموالهم ويرد على فقرائهم وأوصيه بذمة الله وذمة رسوله صلى الله عليه وسلم أن يوفى لهم بعهدهم وأن يقاتل من ورائهم ولا يكلفوا إلا طاقتهم فلما قبض خرجنا به فانطلقنا نمشي فسلم عبد الله بن عمر قال يستأذن عمر بن الخطاب قالت أدخلوه فأدخل فوضع هنالك مع صاحبيه فلما فرغ من دفنه اجتمع هؤلاء الرهط فقال عبد الرحمن اجعلوا أمركم إلى ثلاثة منكم فقال الزبير قد جعلت أمري إلى علي فقال طلحة قد جعلت أمري إلى عثمان وقال سعد قد جعلت أمري إلى عبد الرحمن بن عوف فقال عبد الرحمن أيكما تبرأ من هذا الأمر فنجعله إليه والله عليه والإسلام لينظرن أفضلهم في نفسه فأسكت الشيخان فقال عبد الرحمن أفتجعلونه إلي والله علي أن لا آل عن أفضلكم قالا نعم فأخذ بيد أحدهما فقال لك قرابة من رسول الله صلى الله عليه وسلم والقدم في الإسلام ما قد علمت فالله عليك لئن أمرتك لتعدلن ولئن أمرت عثمان لتسمعن ولتطيعن ثم خلا بالآخر فقال له مثل ذلك فلما أخذ الميثاق قال ارفع يدك يا عثمان فبايعه فبايع له علي وولج أهل الدار فبايعوه
...உமர் (ரலி) அவர்கள் குத்தப்பட்ட நாளன்று அதிகாலை (தொழுகைக்காக) நான் (தொழுகை அணியில்) நின்று கொண்டிருக்கிறேன். எனக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் இடையில் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை. உமர் (ரலி) அவர்கள் (மக்களுக்குத் தொழுவிப்பதற்கு முன்) இரு தொழுகை அணிகளுக்கு இடையில் சென்றால் "சீராக நில்லுங்கள்'' என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அணிகளுக்குக்கிடையே சீர் குலைவு தென்படாத போதே முன் சென்று (தொழுகைக்காக) தக்பீர் (தஹ்ரீமா) கூறுவார்கள். சில சமயம் யூசுஃப் அத்தியாயம் அல்லது நஹ்ல் அத்தியாயம் அல்லது அது போன்ற (வேறோர் அத்தியாயத்)தை மக்கள் தொழுகைக்காக வந்து சேரும் வரையில் முதல் ரக்அத்தில் ஓதுவார்கள். (சம்பவ தினத்தன்று) அப்போது தான் தக்பீர் கூறியிருப்பார்கள். "என்னை நாய் கொன்று விட்டது... அல்லது தின்றுவிட்டது'' என்று கூறினார்கள். (அப்போது அபூலுஃலுஆ ஃபைரோஸ் என்பவன் பிச்சுவாக் கத்தியால் அவர்களைக் குத்தி விட்டிருந்தான்) உடனே இந்த இல்ஜ் (அரபியல்லாத அந்நிய மொழி பேசும் இறை மறுப்பாளன்) தனது பிச்சுவாக் கத்தியை எடுத்துக் கொண்டு தனது வலப்பக்கம், இடப்பக்கம் நிற்கும் எவரையும் விடாமல் குத்திக் கொண்டே விரைந்தோடலானான். முடிவாக பதிமூன்று ஆண்களை அவன் குத்தி விட்டிருந்தான். அதில் ஏழு பேர் இறந்து விட்டனர். இதைக் கண்ட (அங்கிருந்த) முஸ்லிம்களில் ஒருவர் தமது நீண்ட தொப்பியை (புர்னுஸ்) (கழற்றி) அவன் மீது விசி எறிந்தார். அந்த அந்நிய மொழிக்காரனான இறை மறுப்பாளன், தாம் பிடிபட்டுவிடுவோம் என்று எண்ணிய போது தன்னைத் தானே அறுத்துக் (கொண்டு தற்கொலை செய்து) கொண்டான்.
நூல்: புகாரி 3700 
முஸன்னஃப் இப்னு அபீ ஷைபாவின் அறிவிப்பில் அவனை பிடிப்பதற்காக நீண்ட தொப்பியை எறிந்தார் என்று இடம் பெற்றுள்ளது.
ஒருவரைத் தாக்கி பிடிக்கும் அளவுக்கு அந்த தொப்பி நீளமானதாகவும் கனமானதாகவும் இருந்துள்ளது. நம்மிடம் இருக்கும் நூல் தொப்பி குறிப்பிட்ட இடத்துக்குக் கூட போய் சேராது. கனமில்லாததால் இடையிலேயே விழுந்து விடும். எனவே ஹதீஸில் குறிப்பிடும் தொப்பியும் நடைமுறையில் இருக்கும் தொப்பியும் ஒன்றல்ல என்பதை விளங்கிக் கொள்ளலாம். புர்னுஸ் என்ற வார்த்தையில் இடம் பெறும் செய்தியை ஆதாரம் காட்டுவோர் அது போன்ற தொப்பியை முதலில் அணிந்து தொழுது காட்டட்டும்.
حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن ابن شهاب عن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم دخل عام الفتح وعلى رأسه المغفر فلما نزعه جاء رجل فقال إن ابن خطل متعلق بأستار الكعبة فقال اقتلوه
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது தலையில் இரும்புத் தொப்பியுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 1846, 3044, 4286, 5808
இந்த ஹதீஸை தொப்பி போடுவதற்கு ஆதாரம் காட்டுவோர் ராணுவ வீரர் போல் இரும்புத் தொப்பி போடுவது தான் சுன்னத் என்று கூற வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மக்காவை நோக்கி இணை வைப்பாளர்களிடம் போர் புரியச் சென்றார்கள். அதனால் அவர்கள் தலையில் இரும்பு கவசத் தொப்பி இருந்தது. போர்க் களங்கள் தவிர வேறு நேரங்களில் இருந்ததில்லை என்பதை கவனத்தில் கொள்க!
இது தான் தொப்பி போடுவது சுன்னத் என்று சொல்பவர்களின் ஆதாரம். இந்த ஆதாரங்களில் நபி (ஸல்) அவர்கள் தொடர்புள்ளவைகளில் எந்த இடத்திலும் தொழுகையில் தொப்பி போட்டிருந்தார்கள் என்ற வாசகம் இடம் பெறவில்லை என்பதை கவனத்தில் கொள்க! அடுத்து அவர்கள் காட்டிய ஆதாரங்களில், தொப்பி என்று அவர்கள் மொழிபெயர்த்திருக்கும் அரபிச் சொல்லுக்கு நீண்ட தொப்பி என்றே பொருள் கொள்ள வேண்டும். மேலும் அவை அடுத்தவர்களைத் தாக்கும் அளவுக்குக் கனமானதாகவும் இருந்துள்ளது என்பதையும் நினைவில் வைக்கவும்.
தொப்பியைப் பற்றி அவர்கள் எடுத்துக் காட்டிய எந்தச் செய்தியிலும் தொப்பி அணிய வேண்டும் என்ற கட்டளையோ அல்லது அதை சிறப்பித்தோ வாசகங்கள் இடம் பெறவில்லை என்பதையும் கவனத்தில் கொள்க!
மேலும் இவர்கள் தமிழில் வெளியிட்ட தொழுகை ஷாஃபீ, தொழுகை ஹனஃபீ ஆகிய நூல்களில் தொழுகையின் பர்லுகள், வாஜிபுகள், சுன்னத்துகள் என்று குறிப்பிட்டவர்கள் தொப்பி அணிவது பர்லு என்றோ வாஜிபு என்றோ அல்லது சுன்னத் என்றோ குறிப்பிடவில்லை. இதிலிருந்து தொப்பி போடுவது சுன்னத் இல்லை என்பதை அவர்கள் நூலில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.
மேலும் எந்த மத்ஹப் நூல்களிலும் தொப்பி போடாமல் தொழுதால் தொழுகை கூடாது என்றோ, அல்லது தொப்பி போடாமல் தொழுபவர்களைப் பள்ளியில் அனுமதிக்கக் கூடாது என்றோ குறிப்பிடப்படவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
ஒரு பேச்சுக்கு இவர்கள் கூறுவது போல் நபி (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தார்கள் என்று ஏற்றுக் கொண்டாலும் அதை சுன்னத் என்று கூற முடியாது.
வணக்கவழிபாடுகளைப் பொருத்தவரை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் செய்தால் அது சுன்னத் ஆகிவிடும். ஏனெனில் அதைக் கற்றுத்தருவதற்குத் தான் அவர்கள் தூதராக அனுப்பப்பட்டார்கள். வணக்க வழிபாடுகள் சம்மந்தப்படாத விஷயங்களில் அவர்களின் கட்டளை இருந்தால் தான் அது சுன்னத ஆகும்.
உடை, உணவு மற்றும் ஊர் பழக்கங்களை மட்டும் வைத்து சுன்னத் என்று கூற முடியாது.
உதாரணமாக நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த அரபுலகத்தில் கோதுமை, பேரீச்சம் பழங்கள் உணவாக உட்கொள்ளப்பட்டது. நபி (ஸல்) அவர்களும் இவற்றை உணவாக உட்கொண்டார்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இவற்றை வைத்துக் கொண்டு, பேரீச்சம் பழம் உண்பதும், கோதுமையைச் சாப்பிடுவதும் சுன்னத் என்று கூற முடியாது. யாரும் கூறுவதும் கிடையாது. காரணம் இது அன்றைய அரபி மக்களின் உணவு பழக்கங்கள். எனவே இதை முன்மாதிரியாகக் கொள்வதில்லை.
அதே நேரத்தில் நோன்பு துறக்கும் போது பேரீச்சம் பழத்தைக் கொண்டு நோன்பு துறப்பது சுன்னத் என்று கூறுவோம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், "பேரீச்சம் பழத்தைக் கொண்டு நோன்பு துறங்கள்' என்று நேரடியாகக் கட்டளையிட்டிருப்பதால் அதை சுன்னத் என்று கூறுகிறோம். இதைப் போன்று தான் உடை விஷயத்திலும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
حدثنا يحيى قال حدثنا أبو معاوية عن الأعمش عن مسلم عن مسروق عن مغيرة بن شعبة قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر فقال يا مغيرة خذ الإداوة فأخذتها فانطلق رسول الله صلى الله عليه وسلم حتى توارى عني فقضى حاجته وعليه جبة شأمية فذهب ليخرج يده من كمها فضاقت فأخرج يده من أسفلها فصببت عليه فتوضأ وضوءه للصلاة ومسح على خفيه ثم صلى
நபி (ஸல்) அவர்கள் ஷாம் நாட்டுக் குளிராடையை அணிந்திருந்தார்கள். உளூச் செய்வதற்காக அதிலிருந்து தங்கள் கைகளை வெளியே எடுக்க முயன்றார்கள். அதன் கை இறுக்கமாக இருந்ததால் தமது கையை அந்த ஆடையின் கீழ்ப்புறமாக வெளியே எடுத்தார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ரலி)
நூல்: புகாரி 363
நபி (ஸல்) அவர்கள் இறுக்கமான ஆடையை அணிந்திருந்ததால் இவ்வாறு ஆடை அணிவது சுன்னத் என்று யாராவது கூறுவார்களா?
حدثنا سعيد بن أبي مريم حدثنا أبو غسان قال حدثني أبو حازم عن سهل بن سعد قال جاءت امرأة إلى النبي صلى الله عليه وسلم ببردة فقال سهل للقوم أتدرون ما البردة فقال القوم هي الشملة فقال سهل هي شملة منسوجة فيها حاشيتها فقالت يا رسول الله أكسوك هذه فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها فلبسها فرآها عليه رجل من الصحابة فقال يا رسول الله ما أحسن هذه فاكسنيها فقال نعم فلما قام النبي صلى الله عليه وسلم لامه أصحابه قالوا ما أحسنت حين رأيت النبي صلى الله عليه وسلم أخذها محتاجا إليها ثم سألته إياها وقد عرفت أنه لا يسأل شيئا فيمنعه فقال رجوت بركتها حين لبسها النبي صلى الله عليه وسلم لعلي أكفن فيها
மேலும் நபி (ஸல்) அவர்கள் கரை வைத்து நெய்யப்பட்ட சால்வையைக் கீழாடையாக (கைலியாக) அணிந்துள்ளார்கள். (புகாரி 6036)
எனவே கரை வைத்து நெய்யப்பட்ட கைலி அணிவது சுன்னத் என்று கூற முடியுமா? இப்படி ஏராளமான கேள்விகளைக் கேட்க முடியும்.
இவ்வாறு யாரும் சொல்லாத போது தொப்பி மட்டும் ஏன் சுன்னத் என்று கூறுகிறார்கள்? நபி (ஸல்) அவர்கள் எங்காவது தொப்பி போட வேண்டும் என்று கூறியிருக்கிறார்களா? அல்லது ஆர்வமூட்டியுள்ளார்களா? எங்கும் இவ்வாறு இல்லாத போது ஏன் அதை மட்டும் சுன்னத் என்று கூறி தொழ வருபவர்களையும் தடுக்க வேண்டும்?
மேலும் தொப்பி போடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருந்தாலும் அதைப் போடாமல் தொழுதால் தொழுகை கூடாது என்று கூறாதவரை அவற்றைக் கட்டாயப்படுத்த முடியாது. இதை விளங்குவதற்குப் பின்வரும் செய்தியைப் பாருங்கள்.
حدثنا قتيبة حدثنا بشر بن المفضل عن عبد الله بن عثمان بن خثيم عن سعيد بن جبير عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم البسوا من ثيابكم البياض فإنها من خير ثيابكم وكفنوا فيها موتاكم وفي الباب عن سمرة وابن عمر وعائشة قال أبو عيسى حديث ابن عباس حديث حسن صحيح وهو الذي يستحبه أهل العلم و قال ابن المبارك أحب إلي أن يكفن في ثيابه التي كان يصلي فيها و قال أحمد وإسحق أحب الثياب إلينا أن يكفن فيها البياض ويستحب حسن الكفن
"வெள்ளை நிற ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். இது தான் உங்கள் ஆடைகளிலேயே சிறந்ததாகும். மேலும் இறந்தவர்களுக்கும் இதை வைத்தே கஃபனிடுங்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி )
நூல்கள்: திர்மிதீ 915, அபூதாவூத் 3539, இப்னு மாஜா 1461, அஹ்மத் 2109
இந்த நபிமொழியில் நபி (ஸல்) அவர்கள் வெள்ளை நிற ஆடைகளை அணியுங்கள் என்று கட்டளையிட்டுள்ளதால் வேறு நிற ஆடைகளை அணியக் கூடாது என்றோ, இதை மட்டும் தான் அணிய வேண்டும் என்றோ யாரும் கூறுவதில்லை. வெள்ளை நிற ஆடையை அணிவது சிறந்தது என்று தான் கூறுவர்.
நபி (ஸல்) அவர்களின் நேரடி கட்டளையிருந்தும் இந்தக் கட்டளையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று இவர்கள் கூறுவதில்லை. தொப்பிக்கு இது போன்ற எந்தக் கட்டளையும் இல்லாத போது ஏன் இவ்வாறு கூறுகிறார்கள் என்று நமக்குப் புரியவில்லை. மேலும் தொப்பிக்கு இது போன்ற கட்டளையிருந்தாலும் கூட வெள்ளை நிற ஆடை எப்படி சிறப்புக்குரியது என்று கூறினோமோ அதைப் போன்று தான் கூடுதல் பட்சமாகச் சொல்ல முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
مختصر تاريخ دمشق - (1 / 285)
 وكان ربما نزع قلنسوته، فجعلها سرة بين يديه. وهو يصلي.
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் இருந்தால் சில நேரங்களில் தனது தொப்பியை கழற்றி அதை தனக்கு முன்னால் தடுப்பாக ஆக்கிக்கொள்வார்கள்.
இப்னு அஸாகிர்  (பாகம் : 1 பக்கம் : 285)
தொப்பி அணிய வேண்டும் என்று வாதிடுவோர் இந்த செய்தியையும் ஆதாரமாகக் கூறுகிறார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் இந்தச் செய்தி மிகவும் பலவீனமானதாகும். இதை ஆதாரமாகக் கூறும் போலி ஆண்மீகவாதிகள் கூட இதை மறுக்க மாட்டார்கள்.
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.
அல்குர்ஆன் 7:31
"இந்த வசனம் பள்ளிவாசலுக்கு அலங்காரத்துடன் வருமாறு கட்டளையிடுகிறது;. எனவே தொப்பி என்பதும் ஒரு அலங்காரம். ஆகவே தொப்பி அணிந்து வரவேண்டும்'' என்று சிலர் வாதிடுகின்றனர்.
இவர்களின் வாதம் முற்றிலும் பலவீனமானதாகும். தொப்பி ஒரு அலங்காரப் பொருளாக நடைமுறையில் பயன்படுத்தப்படுவதில்லை. இவர்கள் நிர்பந்தப்படுத்துவதால் தொப்பி அணிந்து பள்ளிக்குச் செல்கிறார்கள். தொழுது முடித்தவுடன் அதை மடித்து சட்டைப் பைக்குள் வைப்பவர்களே அதிகம். இதிலிருந்து இதை ஒரு அலங்காரப் பொருளாக இவர்கள் பயன்படுத்துவதில்லை என்பதையும் அலங்காரத்துக்கு எதிரானதாக தொப்பியைக் கருதுகிறார்கள் என்பதையும்  விளங்கலாம்.
மேலும் உண்மையில் அலங்காரமாக அழகாக இருக்கும் பல பொருட்களை இவர்கள் அணிந்து வருமாறு கட்டளையிடுவதில்லை. கண்ணாடி, கோட், சூட், டை போன்ற பொருட்கள் அலங்காரப் பொருட்களாக இன்று பயன்படுத்தப்படுகிறது. எனவே இவற்றையெல்லாம் அணிந்து வருவது சுன்னத் என்று சொல்வார்களா? இவற்றை சுன்னத் என்று சொன்னால் தொப்பியையும் சுன்னத் என்று சொல்லட்டும்.
இவ்வசனத்தில் இறைவனை வணங்க வரும் போது நல்ல ஆடைகளை அணிந்து தூய்மையாக வர வேண்டும் என்றும், அன்றைய காலத்தில் நடைமுறையில் இருந்த நிர்வாணமாக தவாஃப் செய்வது போன்ற காரியத்தையே தடை செய்கிறது. இவர்கள் கூறுவது போன்று தொப்பியை இந்த வசனம் கூறவில்லை.


No comments:

Post a Comment