பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, September 13, 2014

ஷைத்தான் குர்ஆனைக் கற்றுக் கொடுப்பானா

ஷைத்தான் குர்ஆனைக் கற்றுக் கொடுப்பா�


ஷைத்தான் எந்த நபித்தோழருக்கு ஆயதுல் குர்ஸியைக் கற்றுக் கொடுத்தான்?

ஷைத்தான் ஆயத்துல் குர்ஸீயைக் கற்றுக் கொடுத்த நபித்தோழர் அபூஹுரைரா (லி)ஆவார்.
அபூஹுரைரா (லிஅவர்கள் கூறுகிறார்கள்.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் ரமளானின் (ஃபித்ராஸகாத்தைப் பாதுகாக்கும்பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள்அப்போது யாரோ ஒருவன்  என்னிடம் வந்துஅந்த (ஸகாத்உணவுப் பொருளை அள்ளலானான்உடனே அவனை நான் பிடித்து, "உன்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்'என்று சொன்னேன்என்று கூறிவிட்டுஅந்த நிகழ்ச்சியை முழுமையாகக்குறிப்பிட்டார்கள்.- (இறுதியில்திருட வந்தஅவன், "நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது"ஆயத்துல் குர்ஸீ'யை ஓதுங்கள்! (அவ்வாறு செய்தால்,) விடியும் வரை அல்லாஹ்வின்தரப்பிலிருந்து (உங்களைப் பாதுகாக்கின்றகாவலர் (வானவர்ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்எந்த ஷைத்தானும் உங்களை நெருங்கமாட்டான்'' என்று கூறினான். (இதை நான் நபி (ஸல்அவர்களிடம் தெரிவித்தேன்). அப்போது நபியவர்கள், "அவன்பெரும் பொய்யனாயிருப்பினும் அவன் உம்மிடம் உண்மையைத்தான்சொல்லியிருக்கின்றான்; (உம்மிடம் வந்தஅவன்தான் ஷைத்தான்'' என்று கூறியதாகவும்சொன்னார்கள்.
அறிவிப்பவர் : முஹம்மத் பின் சீரீன் (ரஹ்)நூல் : புகாரி 5010
இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட ஷைத்தான் என்பவன்மனித சமுதாயத்தை வழிகெடுப்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ள உண்மையான ஷைத்தான் அல்லதீயமனிதனைத் தான் இங்கு ஷைத்தான் என்று கூறப்படுகிறது.
திருக்குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ ஷைத்தான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டால்அதை நேரடிப் பொருளில்தான் புரிந்து கொள்ள வேண்டும்நேரடிப் பொருளில் புரிந்துகொள்வது திருக்குர்ஆனின் மற்ற வசனங்களுக்கோ மற்ற ஹதீஸ்களுக்கோஇஸ்லாத்தின் அடிப்படைக்கோ முரணாக இருந்தால் அப்போது ஷைத்தான் என்ற சொல்கெட்ட மனிதன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று புரிந்து கொள்ளவேண்டும்.
மனிதர்களின் கண்களுக்குத் தென்படாமல் வாழும் நிலையை ஷைத்தான்களுக்குஅல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்வந்தவன் ஷைத்தானாக இருந்தால் அவனைஅபூஹுரைரா (ரலிஅவர்களால் பார்த்திருக்க முடியாது.
ஆனால் அபூஹுரைரா (ரலிஅவர்கள் அவனைப் பார்த்ததோடு மட்டுமல்லாமல்அவனைத் தன் கைகளால் பிடித்தும் கொள்கிறார்கள்வந்தவன் உண்மையானஷைத்தானாக இருக்கவில்லைகெட்ட மனிதனாகவே இருந்தான் என்பதை இதன் மூலம்அறியலாம்.
மேலும்  மனிதர்கள் யாரும் பார்க்க முடியாத வகையில் ஷைத்தானால் வர இயலும்இதுதான் ஷைத்தான்களின் எதார்த்த தன்மையும் கூடஅபூஹுரைரா (ரலிஅவர்களிடம்வந்தவன் உண்மையான ஷைத்தானாக இருந்தால் அவன் அபூஹுரைரா (ரலி)அவர்களின் கண்களுக்குத் தெரியாமல் வந்து திருடிச் சென்றிருப்பான்.
ஆனால் அவனால் அவ்வாறு செய்ய இயலவில்லைதிருட வந்தவன்அபூஹுரைராவிடம் மாட்டிக் கொண்டு கெஞ்சுவதிலிருந்து அவன் கெட்ட மனிதன் தான்என்பதைச் சந்தேகமற அறியலாம்.
ஷைத்தான்களின் உணவு முறையும் மனிதர்களின் உணவு முறையும் முற்றிலும்வேறுபட்டதாகும்கால்நடைகளின் சாணங்களும் எலும்புகளும் கரிக்கட்டைகளும் தான்ஜின்களின் உணவு என்று ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.
அபூஹுரைரா (ரலிஅவர்களிடம் வந்தவன் முன்பு கூறிய பொருட்களை திருடுவதற்காகவரவில்லைமனிதர்களின் உணவாக இருக்கக்கூடிய பொருட்களைத் திருடுவதற்காகவேவந்துள்ளான்வந்தவன் மனிதன் தான் என்பதை இக்கருத்து மேலும் வலுவூட்டுகிறது.
கெட்ட செயலை செய்பவர்களையும் கெட்ட குணமுள்ளவர்களையும் ஷைத்தான் என்றுகுறிப்பிடும் வழக்கம் இருந்துள்ளது என்பதற்கு குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் ஏராளமான சான்றுகள் உள்ள.
நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்''எனக் கூறுகின்றனர்தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது "நாங்கள்உங்களைச் சேர்ந்தவர்களேநாங்கள் (அவர்களைகேலி செய்வோரே'' எனக்கூறுகின்றனர்.
அல்குர்ஆன் (2 : 14)
கெட்ட மனிதர்களை ஷைத்தான்கள் என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில்குறிப்பிட்டுள்ளான்.
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் கூறினார்கள் : நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போதுஉங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள்அவர்(விலகிக் கொள்ளமறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள்அவர் (மீண்டும் விலக)மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் )டுங்கள்ஏனெனில்அவன் தான்ஷைத்தான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (3275)
தொழுது கொண்டிருக்கும் போது குறுக்கே செல்லும் மனிதர்களை ஷைத்தான்கள் என்றுஇந்தச் செய்தியில் நபிகளார் குறிப்பிடுகிறார்கள்.
அபூஹுரைரா (ரலிஅவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் சொல்லப்பட்ட ஷைத்தான் என்றவார்த்தையும் இது போன்றே நேரடிப்பொருளில் பயன்படுத்தப்படாமல் கெட்டவன் என்றபொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதுதிருடவந்தவனை பொய்யன் என்று நபி (ஸல்)அவர்கள் குறிப்பிட்டிருப்பது இதையே உணர்த்துகிறது.
ஸகாத் பொருளைத் திருடுவதற்காக வந்தவன் அபூஹுரைரா (ரலிஅவர்களை ஏமாற்றிதிருட்டு வேளையில் ஈடுபட்டதால் அவனை ஷைத்தான் என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்ஆனால் உண்மையில் அவன் மனிதனாகத் தான் இருந்தான்.

No comments:

Post a Comment