பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, December 23, 2017

சூடான_உணவு_சாப்பிடலாமா

சூடான_உணவு_சாப்பிடலாமா?

#சாப்பிடலாம்

உணவுப் பொருட்களை சூடான நிலையில் உண்ணக்கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. இந்தக் கருத்தில் வரும் அனைத்து செய்திகளும் பலவீனமாகவே இருக்கின்றன.

1958 حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ قُرَّةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ أَنَّهَا كَانَتْ إِذَا أُتِيَتْ بِثَرِيدٍ أَمَرَتْ بِهِ فَغُطِّيَ حَتَّى يَذْهَبَ فَوْرَةُ دُخَانِهِ وَتَقُولُ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ هُوَ أَعْظَمُ لِلْبَرَكَة روا ه الدارمي

அஸ்மா (ரலி) அவர்களிடம் தக்கடி கொண்டு வரப்பட்டால் அதன் ஆவி அடங்கும் வரை மூடி வைக்குமாறு உத்தரவிடுவார்கள். மேலும் அவர்கள் இவ்வாறு உண்ணுவது அதிக பரகத்தைப் பெற்றுத் தரும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உர்வா

நூல் : தாரமீ (1958)

இந்த அறிவிப்பில் குர்ரத் பின் அப்துர்ரஹ்மான் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று யஹ்யா பின் மயீன், அபூ சுர்ஆ, நஸாயீ, அபூஹாதிம் ஆகியோர் கூறியுள்ளனர்.

இதே செய்தி அஹ்மதில் பின்வருமாறு பதிவாகியுள்ளது.

25720 حَدَّثَنَا حَسَنٌ قَالَ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ قَالَ حَدَّثَنَا عُقَيْلُ بْنُ خَالِدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ أَنَّهَا كَانَتْ إِذَا ثَرَدَتْ غَطَّتْهُ شَيْئًا حَتَّى يَذْهَبَ فَوْرُهُ ثُمَّ تَقُولُ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّهُ أَعْظَمُ لِلْبَرَكَةِ حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ عَنْ عُقَيْلٍ و حَدَّثَنَا عَتَّابٌ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ قَالَ أَنْبَأَنَا ابْنُ لَهِيعَةَ قَالَ حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ أَنَّهَا كَانَتْ إِذَا ثَرَدَتْ غَطَّتْهُ فَذَكَرَ مِثْلَهُ رواه أحمد

இந்த அறிவிப்பில் இப்னு லஹீஆ என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் கூறியுள்ளனர். இவர் பலவீனமானவர் என்று இமாம் நஸாயீ, இமாம் யஹ்யா பின் மயீன், அபூஹாதிம், யஹ்யா பின் சயீத், அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ, இமாம் இப்னு ஹஜர், இமாம் ஹைஸமீ ஆகியோர் கூறியுள்ளனர்.

இது குறித்த மற்றொரு செய்தி தப்ரானியில் பின்வருமாறு பதிவாகியுள்ளது.

المعجم الصغير لسليمان الطبراني – (2 / 144)

934 – حدثنا محمد بن يعقوب بن إسحاق أبو الحسين حدثنا هشام بن عمار حدثنا عبد الله بن يزيد البكري حدثنا محمد بن يعقوب بن محمد بن طحلاء المديني حدثنا بلال بن أبي هريرة عن أبي هريرة قال أن النبي صلى الله عليه و سلم أتى بصفحة تفور فرفع يده منها فقال اللهم لا تطعمنا نارا إن الله لم يطعمنا نارا لم يروه عن بلال بن أبي هريرة إلا يعقوب بن محمد ولا عنه إلا عبد الله بن يزيد تفرد به هشام وبلال قليل الرواية عن أبيه

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உணவுத் தட்டு கொண்டுவரப்பட்டது. அதில் ஆவி வெளியேறிக்கொண்டிருந்தது. அதில் கையை வைக்காமல் எடுத்து விட்டார்கள். அப்போது அவர்கள் இறைவா நெருப்பை எங்களுக்கு உண்ணக் கொடுத்து விடாதே என்று பிரார்த்தித்துவிட்டு அல்லாஹ் நமக்கு நெருப்பை உண்ணக் கொடுக்கவில்லை என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : தப்ரானீ (934)

இந்த செய்தியில் அப்துல்லாஹ் பின் யஸீத் அல்பக்ரீ என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று இமாம் அபூஹாதிம் அவர்களும் இமாம் ஹைஸமீ அவர்களும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

இது குறித்த இன்னொரு அறிவிப்பு அல்முஸ்தத்ரக் நூலில் பதிவாகியுள்ளது.

المستدرك على الصحيحين للنيسابوري – (4 / 132)

7125 – أخبرناه أبو إسحاق إبراهيم بن محمد بن حاتم الفقيه البخاري بنيسابور ثنا صالح بن محمد بن عبيد الله بن العزرمي حدثني أبي عن عطاء عن جابر رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه و سلم : ابردوا الطعام الحار فإن الطعام الحار غير ذي بركة

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

சூடான உணவைக் குளிர வையுங்கள். ஏனென்றால் சூடான உணவு பரகத் இல்லாத உணவாகும்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : ஹாகிம் (7125)

இந்தச் செய்தியில் முஹம்மது பின் உபைதுல்லாஹ் அல்அஸ்ரமீ என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று வகீஉ, அஹ்மது பின் ஹம்பள், யஹ்யா பின் மயீன், அபூஹாதிம், நஸாயீ, ஹாகிம் ஆகியோர் கூறியுள்ளனர்.

இது குறித்து மற்றொரு ஹதீஸ் ஹில்யதுல் அவ்லியா என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

حلية الأولياء – يوسف بن أسباط

حديث : ‏12396‏16726

حدثنا إبراهيم بن محمد ، ثنا محمد بن المسيب ، ثنا عبد الله بن خبيق ، ثنا يوسف بن أسباط ، عن العرزمي ، عن صفوان بن سليم ، عن أنس بن مالك ، قال : ” كان رسول الله صلى الله عليه وسلم يكره الكي والطعام الحار , ويقول : ” عليكم بالبارد فإنه ذو بركة ألا وإن الحار لا بركة فيه , وكانت له مكحلة يكتحل منها عند النوم ثلاثا ثلاثا ” غريب من حديث صفوان لم نكتبه إلا من حديث يوسف *

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மருத்துவத்திற்காக) சூடுபோடுவதையும், சூடான உணவையும் வெறுப்பவர்களாக இருந்தார்கள். மேலும் அவர்கள் ”’’குளிர்ந்த உணவையே உண்ணுங்கள். ஏனென்றால் அதில் தான் பரகத் உள்ளது. அறிந்து கொள்ளுங்கள் சூடான உணவில் பரகத் இல்லை’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : ஹில்யதுல் அவ்லியா

இந்தச் செய்தியிலும் முஹம்மது பின் உபைதுல்லாஹ் அஸ்ரமீ இடம் பெற்றுள்ளார். எனவே இதுவும் பலவீனமான செய்தியாகும்.

மற்றொரு ஹதீஸ் ஷுஅபுல் ஈமான் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

شعب الإيمان للبيهقي – التاسع والثلاثون من شعب الإيمان

أكل اللحم – حديث : ‏5636‏

أخبرنا أبو عبد الرحمن السلمي ، أنا عبد الله بن محمد بن علي ، ثنا علي بن سعيد العسكري ، ثنا العباس بن أبي طالب ، ثنا أبو المسيب سلم بن سلام الواسطي ، عن إسماعيل بن عياش ، عن أبي بكر بن أبي مريم الغساني ، عن ضمرة بن حبيب ، عن صهيب قال : ” نهى رسول الله صلى الله عليه وسلم ، عن أكل الطعام الحار ، حتى يسكن ” *

சூடான உணவு ஆறும் வரை அதை உண்ணக்கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.

அறிவிப்பவர் : சுஹைப் (ரலி)

நூல் : பைஹகீ (5636)

இந்த செய்தியில் அபூபக்ர் பின் அபீ மர்யம் என்பவரும் சலாம் பின் சல்லாம் என்பவரும் அபூ அப்திர் ரஹ்மான் சுலமீ என்பவரும் இடம்பெற்றுள்ளனர். இம்மூவரும் பலவீனமானவர்கள் ஆவர்.

எனவே சூடான உணவை உண்ணக்கூடாது என்று கூறும் எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை.

பொதுவாக உணவுப் பொருட்கள் சூடாக இருந்தால் தான் அதை மக்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். காபி டீ போன்ற பானங்களைச் சூடில்லாமல் யாரும் குடிப்பதில்லை. எனவே மேற்கண்ட பலவீனமான ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டு மக்கள் விரும்பாத விஷயத்தை வலியுறுத்தக் கூடாது.

No comments:

Post a Comment