பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, November 4, 2020

கணவனின் தாய் விவாகரத்துச் செய் என்று சொன்னால் அதை ஏற்கலாமா

கணவனிடம் எந்தக் குறையும் சொல்ல முடியாதபடி நடக்கும் மனைவியை கணவனின் தாய் விவாகரத்துச் செய் என்று சொன்னால் அதை ஏற்கலாமா?

அபுதாஹிர்

பதில் :

நியாயமான காரணம் இல்லாமல் கணவன் மனைவியைப் பிரிப்பது இஸ்லாத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. இது ஷைத்தானுடைய செயல் என்றும், இறை மறுப்பாளர்களின் குணம் என்றும் மார்க்கம் கூறுகின்றது.

5032حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَاللَّفْظُ لِأَبِي كُرَيْبٍ قَالَا أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ إِبْلِيسَ يَضَعُ عَرْشَهُ عَلَى الْمَاءِ ثُمَّ يَبْعَثُ سَرَايَاهُ فَأَدْنَاهُمْ مِنْهُ مَنْزِلَةً أَعْظَمُهُمْ فِتْنَةً يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ فَعَلْتُ كَذَا وَكَذَا فَيَقُولُ مَا صَنَعْتَ شَيْئًا قَالَ ثُمَّ يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ مَا تَرَكْتُهُ حَتَّى فَرَّقْتُ بَيْنَهُ وَبَيْنَ امْرَأَتِهِ قَالَ فَيُدْنِيهِ مِنْهُ وَيَقُولُ نِعْمَ أَنْتَ قَالَ الْأَعْمَشُ أُرَاهُ قَالَ فَيَلْتَزِمُهُ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றவனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி) வந்து நான் இன்னின்னவாறு செய்தேன் என்று கூறுவான். அப்போது இப்லீஸ், (சொல்லிக் கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, நான் ஒரு மனிதனுக்கும், அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டு வைக்கவில்லை என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச் செய்து, நீதான் சரி என்று (பாராட்டிக்) கூறுவான்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம்

எனவே நியாயமின்றி கணவன் மனைவியைப் பிரிப்பது பெரும் குற்றமாகும். பாவமான காரியங்களைச் செய்யுமாறு பெற்றோர்கள் கூறினால் அதற்குப் பிள்ளைகள் கட்டுப்படக் கூடாது என மார்க்கம் கூறுகின்றது.

وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ (8) وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُدْخِلَنَّهُمْ فِي الصَّالِحِينَ (9)29

தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.

திருக்குர்ஆன் 29:8

உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.

திருக்குர்ஆன் 31:15

பெற்றோர்கள் தகுந்த காரணமின்றி மனைவியை தலாக் செய்யுமாறு கூறினால் மகன் அவர்களுக்குக் கட்டுப்பட்டு தம் மனைவியை தலாக் செய்யக் கூடாது. அது குற்றமாகும்.

திருமணத்தின் மூலம் பெண்கள் ஆண்களிடம் கடுமையான உடன்படிக்கை எடுத்துள்ளதாக அல்லாஹ் கூறுகிறான்.

{وَكَيْفَ تَأْخُذُونَهُ وَقَدْ أَفْضَى بَعْضُكُمْ إِلَى بَعْضٍ وَأَخَذْنَ مِنْكُمْ مِيثَاقًا غَلِيظًا (21)} [النساء: 21]

நீங்கள் ஒருவருடன் மற்றவர் கலந்து பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கை எடுத்துள்ள நிலையில் எப்படி அதை (மஹரை) நீங்கள் எடுத்துக் கொள்ள முடியும்?

திருக்குர்ஆன் 4:21

திருமணம் என்பது அவ்வளவு எளிதாக வெட்டி முறிக்கும் உறவு அல்ல என்பதை கடும் ஒப்பந்தம் என்ற சொல் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.

திருக்குர்ஆன் 4:19

தகாத நடத்தை இல்லாத வரை அவர்களுடன் இல்லறம் நடத்துங்கள் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் வழிகாட்டுகிறான்.

அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:35

தம்பதியர் பிரிந்து விடக் கூடிய நிலை ஏற்பட்டால் அதில் தலையிட்டு இணக்கம் ஏற்படுத்த குடும்பத்தினருக்கு அல்லாஹ் கட்டளயிடுகிறான். இதில் பெற்றோரும் அடங்குவார்கள்.

தம்பதிகள் இணைந்து வாழ்வதற்கு முயற்சியை மேற்கொள்ளக் கடமைப்பட்ட பெற்றோர் விவாகரத்து செய்ய வலியுறுத்துவது குற்றமாகும். அவர்களின் தவறான உத்தரவை நிறைவேற்றுவதும் குற்றமாகும்.

மேலும் யாருக்கும் அநீதி இழைக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். கணவனுக்குச் செய்யும் கடமையை மனைவி சரியாகச் செய்யும் போது அவளுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துவதுதான் திருமண ஒப்பந்த்த்தை நிறைவேற்றுவதாகும்

மனைவியிடம் விவாகரத்து செய்யும் அளவுக்கு காரணம் இல்லாத போது பெற்றோரோ, மற்றவரோ சொல்கிறார்கள் என்பதற்காக விவாக ரத்து செய்வது ஒப்பந்த மீறலாகும். அனீதி இழைப்பதாகும்.

மக்களுக்கு அநீதி இழைத்து நியாயமின்றி பூமியில் வரம்பு மீறுவோருக்கு எதிராகவே குற்றம் பிடிக்க வழி உண்டு. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

திருக்குர்ஆன் 42:42

அநீதி இழைத்து அல்லாஹ்வால் குற்றம் பிடிக்கும் நிலைக்கு ஆளாகிவிட வேண்டாம்.

பெற்றோர் சொல்லைக் கேட்டு மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்று கூறுவோர் பின்வரும் ஹதீஸை இதற்கு ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர்.

1110حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ أَنْبَأَنَا ابْنُ الْمُبَارَكِ أَنْبَأَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ ابْنِ عُمَرَ قَالَ كَانَتْ تَحْتِي امْرَأَةٌ أُحِبُّهَا وَكَانَ أَبِي يَكْرَهُهَا فَأَمَرَنِي أَبِي أَنْ أُطَلِّقَهَا فَأَبَيْتُ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ طَلِّقْ امْرَأَتَكَ رواه الترمذي

ஒரு பெண் எனக்கு மனைவியாக இருந்தாள். நான் அவளை நேசித்தேன். ஆனால் என் தந்தை (உமர்) அவளை வெறுத்தார். அவளை நான் தலாக் விட வேண்டும் என எனக்கு உத்தரவிட்டார். இதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை. நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இதைத் தெரிவித்த போது அவர்கள் அப்துல்லாஹ் பின் உமரே உனது மனைவியை நீ தலாக் செய்துவிடு என்றார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல் : திர்மிதீ

தக்க காரணம் இல்லாமல் விவாகரத்து செய்யக் கூடாது என்று சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தந்தை சொல்லி விட்டார் என்பதற்காக விவாகரத்து செய்யுமாறு கூறியிருக்க முடியாது. மார்க்கம் அனுமதித்த காரணம் தந்தையின் கோரிக்கையில் இருந்து அதை அறிந்த பின்னர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க முடியும். எந்த நியாயமான காரணமும் இல்லாமல் தந்தை சொல்லி விட்டார் என்பதற்காக ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள்.

இப்படித்தான் இந்த ஹதீஸைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்படி அறிவுரை சொல்லும் தாய் தனது மகளை மருமகன் பெற்றோர் சொல் கேட்டு விவாகரத்து செய்தால் அதை மனமுவந்து ஏற்பாரா? என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

Thursday, October 29, 2020

மூன்று சிசுக்கள் இறந்துவிட்டால் தாய்க்கு சொர்க்கமா❓*

*மூன்று சிசுக்கள் இறந்துவிட்டால் தாய்க்கு சொர்க்கமா❓*

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து, 

*அல்லாஹ்வின் தூதரே! உங்கள் உரைகளை (பெண்கள் கேட்க முடியாதவாறு) ஆண்களே தட்டிச் சென்று விடுகின்றனர். ஆகவே நாங்கள் தங்களிடம் வந்து, அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக் கொடுத்ததிலிருந்து எங்களுக்கு நீங்கள் போதித்திட எங்களுக்கென ஒரு நாளை நிர்ணயித்து விடுங்கள்*!என்று கூறினார். 

நபி (ஸல்) அவர்கள், *இன்ன நாளில் இன்ன இடத்தில் நீங்கள் ஒன்று கூடுங்கள்* என்று சொன்னார்கள். அவ்வாறே பெண்கள் ஒன்று திரண்டனர். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்களிடம் சென்று, அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து போதித்தார்கள். 

பிறகு, *உங்களில் எந்தப் பெண் தனக்கு (மரணம் வரும்) முன்பாக தன் குழந்தைகளில் மூன்று பேரை இழந்து விடுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறி விடுவார்கள்* என்று கூறினார்கள். 

அப்போது அப்பெண்களில் ஒருவர் *அல்லாஹ்வின் தூதரே! இரண்டு குழந்தைகளை இழந்து விட்டாலும்* என்று கேட்டார். 

இதை அப்பெண் இரண்டு முறை திரும்பத் திரும்பக் கேட்க, *ஆம்! இரண்டு குழந்தைகளை இழந்து விட்டாலும் தான்* என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல்: *புகாரி 7310*

புகாரியின் 102 வது அறிவிப்பில் *பருவ வயதை அடையாத குழந்தைகளை..* என்று இடம் பெறுகின்றது. இந்த அறிவிப்புக்கள் ஆதாரப்பூர்வமானவை தான்.

*தான் மரணிப்பதற்கு முன் தனது குழந்தைகளை இழக்கும் பெண்ணுக்கு* என்று தான் மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. எனவே இது பிறந்த சிசுக்களையும் உள்ளடக்கும்.
———————————
*ஏகத்துவம்*

கணவன் பெயரை இனிஷியலாக பயன்படுத்தலாமா

*கணவன் பெயரை இனிஷியலாக பயன்படுத்தலாமா❓*

பெண்களின் திருமணத்துக்கு முன்னால் அவர்களின் *தந்தையர்களின் இன்ஷியலே அவர்களுடைய பெயர்களுக்கு முன்னால் பயன்படுத்தப்படும்*. 

திருமணம் ஆன பின் அவர்களுடைய *கணவனின் இன்ஷயல் அவர்களின் பெயர்களுக்கு முன்னால் போடப்படும்.* நவீன காலத்தில் இப்படி ஒரு நடைமுறை மக்களிடையே இருந்து வருகின்றது.

திருமணத்துக்குப் பிறகு கணவனின் இன்ஷியலைப் போடுவது கணவன் தந்தையாகி விடுகிறான் என்ற பொருளில் இல்லை. மாறாக அவளுக்கு அவனே முழு பொறுப்பாளியாக இருக்கின்றான் என்ற கருத்தில் இவ்வாறு போடப்படுகின்றது.

இந்த செயல்பாட்டில் மார்க்கத்திற்கு மாற்றமான எந்த அம்சமும் இடம் பெறவில்லை.

*ஆயிஷா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா ரலி அவர்களைப் பற்றி ஹதீஸ்களில் கூறப்படும் போது தந்தையின் பெயரைக் கூறாமல் நபியின் மனைவி என்றே குறிப்பிடட்டுள்ளனர்*. 

பார்க்க *புகாரி 103, 184, 248, 327, 328, 334, 382, 467, 513, 515, 833, 902,*

புகாரியில் ஆயிரம் ஹதீஸ்களில் மட்டும் தேடிப் பார்த்த வகையில் ஆயிஷா ரலி அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் எல்லா இடங்களிலும் தந்தையின் பெயர் கூறாமல் கண்வர் பெயரே கூறப்பட்டுள்ளது. 

இது போல் மைமூனா (ரலி) அவர்கள் சில இடங்களில் தந்தையின் பெயருடன் கூறப்பட்டாலும் 183, 249, 333, 337 ஆகிய ஹதீஸ்களில் நபியின் மனைவி என்றே கூறப்பட்டுள்ளனர். 

இது போல் பரவலாக இந்தப் பழக்கம் ஆரம்பம் முதலே இருந்து வருகிறது

*எனவே உலகத் தேவைக்காக இவ்வாறு செய்வது தவறல்ல.*

ஏகத்துவம்

பெண்கள் தலையில் பூ வைத்து கொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளதா❓*

*பெண்கள் தலையில் பூ வைத்து கொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளதா❓*

*பூ என்பது நறுமணப் பொருளாகவும் அலங்காரமாகவும் உள்ளது.*

பெண்கள் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

*பெண்கள் இஷாத் தொழுகைக்கு பள்ளிக்கு வரும்போது நறுமணம் பூசிக்கொண்டு வரக்கூடாது* என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

எனவே பூ வைத்துக் கொண்டு இரவில் பள்ளிக்கு வரக்கூடாது.

பள்ளி அல்லாத மற்ற இடங்களுக்கு பூ வைத்துக்கொண்டு செல்லலாம். *பூ அலங்காரமாக இருப்பதால் அந்நிய ஆண்களிடம் இதை வெளிப்படுத்துவது கூடாது*.

*பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்*. 

அவர்கள் மறைத்திருக்கும் *அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம்.*

நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

அல்குர்ஆன் (*24 : 31)*

எனவே *அந்நிய ஆண்கள் பார்க்கும் வகையில் வெளிப்படையாக பூ வைப்பது கூடாது.* 

மற்ற அலங்காரங்களை அந்நிய ஆண்களிடமிருந்து மறைப்பது போல் இதையும் மறைக்க வேண்டும்.

*ஏகத்துவம்*

பெண்கள் உயரமான கொண்டை போடலாமா* ❓

*பெண்கள் உயரமான கொண்டை போடலாமா* ❓

*மறுமை நாள் நெருங்கும் போது பெண்கள் மெல்லிய ஆடையணிவர் ; ஒட்டகத் திமில் போல் கூந்தல் போடுவர்* என ஹதீஸில் உள்ளது.
இதன் அடிப்படையில் தலைக்கு மேல் கூந்தலை உயர்த்திக் கட்டக் கூடாது என்று கூறுகின்றனர். 

*இது சரியா?*

இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை.

(*முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு, மக்களை அடிப்பார்கள்.*

(இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, *தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர்*. 

*அவர்களது தலை, மற்றும் கழுத்து, நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும்.*

*அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்; சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள்.* 

*சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும்* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: *முஸ்லிம் (4316)*

இதுதான் நீங்கள் குறிப்பிட்ட நபிமொழி. இதில் இடம் பெற்றிருக்கும் அவர்களது தலை,மற்றும் கழுத்து, நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும் என்ற வாசகத்தை வைத்துத் தான் நீங்கள் கேள்வியை எழுப்பியுள்ளீர்கள்.

இந்தப் *பெண்கள் பிறரைக் கவரும் வேலையில் ஈடுபடுவார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்*. எனவே தான் மறைக்க வேண்டிய உடலையும் தலை முடியையும் வெளிப்படுத்துகின்றனர்.

*ஒட்டகத்தின் முதுகில் முக்கோண வடிவத்தில் உயர்ந்து இருக்கும் பகுதிக்குத் தான் திமில் (அஸ்மினத்*) என்று கூறப்படும். தலையில் கூடுதலான பொருட்களை வைத்து ஒட்டகத் திமில்கள் போல் தலையை ஆக்கிக் கொள்பவர்களை இந்தச் செய்தி குறிப்பிடுகிறது என்று நபிமொழி விரிவுரையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஒரு சிலர், தலையில் திமில்களைப் போன்று கொண்டை வைப்பதைக் குறிக்கிறது என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

*முடியை வைத்தோ அல்லது வேறு பொருட்களை வைத்தோ ஒட்டகத் திமில்கள் போல் தலையை மாற்றிக் கொள்வதை இந்த நபிமொழி கண்டிக்கிறது* என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் இரண்டு கருத்துக்கும் இடமளிக்கும் வண்ணமே இந்த நபிமொழி இருக்கிறது. 

எனவே *அந்நிய ஆண்களை ஈர்க்கும் வண்ணம் தலையை கூடுதலான பொருட்களை வைத்து உயர்த்தி வலம் வருவது தவறாகும்*.

சாதாரணமாக தலையில் இருக்கும் முடியை வைத்துக் கொண்டை கட்டினால் ஒட்டகத் திமில் போல் உயரமாக இருக்காது.

எனவே இவற்றைத் தடை செய்ய முடியாது. மேலும் சாதாரணமாக கொண்டை போடுபவர்கள் தலையின் பின்புறமே போடுவார்கள். நபிமொழியில் தடை செய்யப்பட்டது, *ஒட்டகத் திமில்கள் போல் உள்ளதைத் தான். ஒட்டகத் திமில்கள் வானத்தை நோக்கி இருக்கும். இவ்வாறு வானத்தை நோக்கி இருக்கும் வண்ணம் ஒரு சிலர் உயரமாகக் கொண்டை போடுவதையே இது குறிக்கும்.*

*ஏகத்துவம்*

அல்லாஹ்* ⤵ *உருவமற்றவனா - 35

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥 ஆய்வுக் கட்டுரை [ 01 ] 🔥*

      *🔥 அல்லாஹ்*
                                   ⤵
                    *உருவமற்றவனா❓*

           *✍🏻...தொடர் [ 35 ]*

*☄இறைவனைக்*
             *காண முடியுமா❓[ 08 ]*

              *🏖 இறுதி பாகம் 🏖*

_இந்த இனிய இறை தரிசனத்தைக் கேட்டுப் பிரார்த்திக்கவும் வேண்டும்.  இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் ஒரு பிரார்த்தனையையும் கற்றுத் தந்திருக்கிறார்கள்._

_*🍃அம்மார் பின் யாஸிர் எங்களுக்குத் தொழுவித்தார்கள். மக்களில் ஒருவர், "நீங்கள் தொழுகையைச் சுருக்கி விட்டீர்கள்'' என்று அவரிடம் சொன்னார். "நான் இவ்வாறு சுருக்கித் தொழுதாலும் அல்லாஹ்வின் தூதரிடம் செவியுற்ற துஆக்களைக் கொண்டு அந்தத் தொழுகையில் துஆச் செய்தேன்'' என்று பதில் சொன்னார். அவர் எழுந்ததும் அவரை ஒருவர் பின்தொடர்ந்து அவரிடம் அந்த துஆ பற்றிக் கேட்டார். பிறகு வந்து அதை மக்களிடம் அறிவித்தார்.*_

_அல்லாஹும்ம பி இல்மிகல் கைப வ குத்ரத்திக அலல் கல்கி, அஹ்யினி மாஅலிம்தல் ஹயாத கைரன்லீ வதவஃப்பனீ இதா அலிம்தல் வஃபாத கைரன்லீ அல்லாஹும்ம வஅஸ்அலுக கஷ்யதக ஃபில் கைபி வஷ்ஷஹாததீ. வஅஸ்அலுக கலிமதல் ஹக்கி ஃபிர்ரிளா வல் களபி வஅஸ்அலுகல் கஸ்த ஃபிஃபக்ரி வல்கினா வஅஸ்அலுக நயீமன் லாயன்ஃபது அ வஅஸ்அலுக குர்ரதி அய்னின் லா தன்கதிவு வ அஸ்அலுகர் ரிளாஅ பஃதல் களாயி அ அஸ்அலுக பர்தல் ஈஷி பஃதல் மவ்தி அ அஸ்அலுக லத்தத்தன் நள்ரி இலா வஜ்ஹிக வஷ்ஷவ்க இலா லிகாயிக ஃபீ கைரி ளர்ராஅ முளிர்ரத்தின் வலா ஃபித்னதின் முளில்லதின் அல்லாஹும்ம ஸ(ழ)ய்யின்னா பி ஸீ(ழ)னதில் ஈமானி வஜ்அல்னா ஹுதாத்தன் முஹ்ததீன்_

_*பொருள்: மறைவானதை அறிகின்ற உன் ஞானத்தைக் கொண்டும், படைப்பின் மீதுள்ள உன் ஆற்றலைக் கொண்டும், (எனது) வாழ்வு நன்மை என்று நீ அறிந்திருக்கின்ற வரை என்னை வாழ வை! மரணம் எனக்கு நன்மை என்று நீ அறிந்தால் என்னை மரணிக்கச் செய்! அல்லாஹ்வே! மறைவிலும் நேரிலும் உன்னை அஞ்சுவதை உன்னிடம் கேட்கிறேன். திருப்தியிலும் கோபத்திலும் நேரிய வார்த்தையை உன்னிடம் நான் கேட்கிறேன். வறுமையிலும் செல்வத்திலும் நடுநிலையை உன்னிடம் நான் கேட்கிறேன். அழியாத அருட்கொடையை உன்னிடம் நான் கேட்கிறேன். அறுந்து விடாத கண் குளிர்ச்சியை உன்னிடம் நான் கேட்கிறேன். விதிக்குப் பின்னால் திருப்தியை உன்னிடம் நான் கேட்கிறேன். இறந்த பின்பு வாழ்க்கையின் இதத்தை உன்னிடம் நான் கேட்கிறேன்.*_

*இடர் அளிக்கக்கூடிய துன்பம் மற்றும் வழிகெடுக்கக் கூடிய குழப்பம் இல்லாத சூழலில் உன் திருமுகத்தைப் பார்க்கின்ற சுவையையும், உன்னைச் சந்திக்கின்ற ஆசையையும் உன்னிடம் நான் கேட்கின்றேன். அல்லாஹ்வே! ஈமானின் அழகைக் கொண்டு எங்களை அழகுபடுத்துவாயாக! எங்களை நேர்வழி பெற்ற வழிகாட்டிகளாக ஆக்கு!*

*🎙அறிவிப்பவர்:*
             *ஸாயிப் பின்*
                                *மாலிக்,*

   *📚 நூல்: நஸயீ 1288 📚*

*🏮🍂"இறைவனுக்கு உருவம் இல்லை; இறைவன் என்றால் சூனியம்'' என்று கூறி இறைவன் இல்லை என்பதை வேறு வார்த்தைகளில்* யார் கூறுகிறார்களோ அத்தகைய நிராகரிப்பாளர்களுக்கும் இணை கற்பிப்பவர்களுக்கும் *இறைவனைக் காணும் பேரின்பம் நிச்சயம் கிடைக்காது.*

*🏮🍂எனவே இணை வைக்காமல், நல்லமல்கள் செய்து, இந்தப் பிரார்த்தனையைப் புரிந்து அல்லாஹ்வின் திருமுகத்தைக் காண்கின்ற பேறும் பாக்கியமும் பெற்றவர்களாக ஆவோமாக!*


*🏮🍂அல்லாஹ் உருவமற்றவனா❓ என்ற இந்தத் தலைப்பில் இதுவரை நீங்கள் பார்த்த ஆதாரங்கள் அனைத்தும் குர்ஆன், ஹதீஸில் உள்ளவையாகும்.* இவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கின்றது என்று நிரூபிக்கும் ஆதாரங்கள். *இவை அனைத்திற்கும் எந்தவொரு விளக்கமும், வியாக்கியானமும் கூறாமல், திரிபு வாதம் செய்யாமல், திசை திருப்பாமல் ஒவ்வொரு முஸ்லிமும் நம்பியே ஆக வேண்டும். அவ்வாறு நம்பாதவர் இறை மறுப்பாளர் ஆவார்; நிரந்தர நரகத்தின் விறகாவார். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *தொடர் முடிந்தது*
                            ⤵⤵⤵
        
அல்ஹம்துலில்லாஹ்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா

*மாதவிடாய் பெண்கள், பயானுக்காக பள்ளியின் ஓரத்தில் இருக்கலாமா❓*

*மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா❓*

*பயான் நடக்கும் போது பள்ளியில் ஓரமாக இருந்து கொள்ளலாமா❓*

❌ *கூடாது* ❌

*மாதவிடாய் ஏற்பட்டுள்ள, குளிப்பு கடமையான எவருக்கும் பள்ளிவாசலை நான் அனுமதிக்க மாட்டேன்* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி), 
நூல்கள் : *அபூதாவூத் (201), இப்னுமாஜா (637)*

*மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் எங்களில் ஒருவரின் மடியில் தலையை வைத்து திருக்குர்ஆனை ஓதுவார்கள். எங்களில் ஒருவர் அவர்களில் தொழுகை விரிப்பை பள்ளிவாசலில் விரிப்பார், அவரே மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில்*.

அறிவிப்பவர் : மைமூனா (ரலி), 
நூல்கள் : *நஸயீ (382), அஹ்மத் (25582)*

*நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டு  (வெளியே உள்ள) தொழுகை விரிப்பை எடுத்து வருமாறு என்னிடம் கூறினார்கள். அதற்கு நான் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே என்றேன். அப்போது அவர்கள் அதை எடுத்துவா மாதவிடாய் என்பது உனது கையில்  (ஒட்டிக் கொண்டிருப்பது) இல்லை* என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), 
நூல்கள் : *முஸ்லிம் (503)*

*நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருக்கும் போது ஆயிஷா! அந்த துணியை எடுத்துத் தா! என்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மாதவிடாய் உனது கையிலில்லை* என்று கூறினார்கள். அதையடுத்து அந்தத் துணியை ஆயிஷா (ரலி) அவர்கள்  எடுத்துக் கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), 
நூல்கள் : முஸ்லிம் (504)

*மாதவிடாய் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லாமா?* என்பது தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ்கள் இவை. இவற்றை அடிப்படையாக கொண்டு தங்கள் கேள்விக்குரிய பதிலை நாம் காண முடியும்.

இவற்றில் முதலாவது ஹதீஸ் *நேரடியாக மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் பள்ளிவாசலுக்க செல்லக்கூடாது* என்று தெரிவிக்கிறது. என்றாலும் இந்த ஹதீஸ் தொடர்பாக ஹதீஸ் கலை வல்லுநர்கள் மாறுபட்ட கருத்துக்களை கூறியுள்ளார்கள். சிலர் ஆதாரப்பூர்வமானது என்றும் சிலர் பலவீனமானது என்றும் கூறியுள்ளனர்.

*மாதவிடாய் ஏற்பட்டுள்ள, குளிப்பு கடமையான எவருக்கும் பள்ளிவாசலை நான் அனுமதிக்க மாட்டேன்* என்ற இந்த செய்தி பல நூல்களில் இரு வேறு அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ளது.

சில நூல்களில் உம்மு ஸலமா (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது. சில நூல்களில் ஆயிஷா (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது. இதில் ஆயிஷா (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படுவதே சரியானதாகும் என்று அபூஹாத்திம் அவர்கள் *இலல்£ என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாக வரும் நூல்களில் அஃப்லத் பின கலீஃபா என்பவர் இடம் பெறுகிறார்.

“அப்லத் பின் கலீஃபா என்பவர் அவரிக்கும் இந்த செய்தியை (ஹதீஸ் கலை அறிஞர்கள்) பலவீனம் என்று கூறியுள்ளார்கள். மேலும் அஃப்லத் என்பவர் *மஜ்ஹூல் (யார் என அறியப்படாதவரின்) அறிவிப்பு* என்றும் கூறுகிறார்கள்” என கத்தாபி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். “பிரபலியமானவர் என்றாலும் நம்பகமானவர் என்று அறியப்படாதவர், இந்த செய்தி *பெய்யானதாகும்”* என்று இப்னு ஹஸ்ம் அவர்கள் கூறியுள்ளார்கள். (தஹ்தீபுத் தஹ்தீப்)

மேலும் இச்செய்தில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளர் *ஜஸ்ரா பின்த் திஜாஜா* என்பவரைப் பற்றி இமாம் புகாரி அவர்கள்  *இவரிடம் புதுமையான செய்திகள் உள்ளன* என்றும் “இவர் விசயத்தில் ஆட்சேபனை உள்ளது” என்று இமாம் பைஹகீ அவர்களும் குறை கூறியுள்ளார்கள். சிலர் இவரை நம்பகமானவர் என்றும் கூறியுள்ளனர்.

நேரடியாக தடை செய்யும் செய்தியில் சில விமர்சனங்கள் உள்ளதை மேற்கூறப்பட்ட செய்திகள் மூலம் காணமுடிகிறது. அதே நேரத்தில் பள்ளிவாசலுக்கு செல்லக்கூடாது என்று மறை முகமாக தெரிக்கும் ஆதாரப்பூர்மான ஹதீஸ்களும் நாம் குறிப்பிட்ட 2,3 வது செய்தியில் உள்ளன.
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டு  (வெளியே உள்ள) தொழுகை விரிப்பை எடுத்து வருமாறு என்னிடம் கூறினார்கள். அதற்கு நான் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே என்றேன். அப்போது அவர்கள் அதை எடுத்துவா மாதவிடாய் என்பது உனது கையில்  (ஒட்டிக் கொண்டிருப்பது) இல்லை என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), 
நூல்கள் : முஸ்லிம் (503)

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருக்கும் போது ஆயிஷா! அந்த துணியை எடுத்துத் தா! என்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மாதவிடாய் உனது கையிலில்லை என்று கூறினார்கள். அதையடுத்து அந்தத் துணியை ஆயிஷா (ரலி) அவர்கள்  எடுத்துக் கொடுத்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‎ýரைரா (ரலி), நூல்கள் : முஸ்லிம் (504)

இந்த ஹதீஸில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பள்ளிவாசலுக்கு தான் நுழைய தடையாக இருந்ததாக மாதவிடாய் குறிப்பிட்ட போது, பள்ளிவாசலுக்கு மாதவிடாய் பெண்கள் வருவது தடை இல்லை என்றிருந்தால் நபி (ஸல்) அவர்கள் தெளிவாக, *மாதவிடாய் பள்ளிவாசலுக்கு வருவதை விட்டும் தடை செய்யாது* என்று கூறியிருப்பார்கள்.ஆனால் அவர்கள் அவ்வாறு கூறவில்லை. 

மாறாக *உன் கையில் மாதவிடாய் இல்லை எனவே கையை நீட்டி பள்ளியில் நீ வைக்கலாம்* என்று கூறியுள்ளார்கள்.( நபி (ஸல்) அவர்கள் வீடு பள்ளியை ஒட்டியே இருந்தது) எனவே மாதவிடாய் பெண்கள் பள்ளியில் வரக்கூடாது என்பதை இதிலிருந்து விளங்கலாம். அடுத்து நாம் குறிப்பிட்ட 4 வது ஹதீஸிலும் இதை விளங்கலாம்.

*நபி (ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும் மாதவிடாய் பெண்களையும் (தொழும் திடலுக்குப்) புறப்படச் செய்யும்படி ஏவினார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தை விட்டு விலகியிருப்பவர்கள்*.

அறிவிப்பவர் : உம்மு அத்திய்யா (ரலி), 
நூல் : புகாரீ (974),

பெருநாள் திடலுக்கு மாதவிடாய் பெண்களை வரச் சொன்ன நபிகளார், அவர்கள் தொழுமிடத்தைவிட்டும் விலகியிருக்கவேண்டும் என்பதை உணர்த்தியுள்ளார்கள். தொழுமிடங்களில் முதன்மையான இடம் பள்ளிவாசல். சாதரணமாக உள்ள தொழும் இடத்திலேயே மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் விலகி இருக்க வேண்டுமானால் பள்ளிவாசலில் கண்டிப்பாக விலகி இருக்க வேண்டும் என்று தெளிவாக கூறலாம்.

அவசியமான நேரத்தில் பள்ளிவாசலில் மாதவிடாய் பெண்கள் சென்று வரலாம். என்பதற்கு பின்வரும் செய்தியை சிலர் ஆதாரம் காட்டுகின்றனர்.

மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் எங்களில் ஒருவரின் மடியில் தலையை வைத்து திருக்குர்ஆனை ஓதுவார்கள். எங்களில் ஒருவர் அவர்களில் தொழுகை விரிப்பை பள்ளிவாசலில் விரிப்பார், அவரே மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில்.

அறிவிப்பவர் : மைமூனா (ரலி), 
நூல்கள் : நஸயீ (382), அஹ்மத் (25582)

இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து சிலர் பள்ளிவாசலில் அவசியத் தேவை இருக்கும் போது செல்லாலாம் என்று கூறுகின்றனர். ஆனால் மற்ற ஹதீஸ்களில் பள்ளிவாசலுக்கு செல்லத் தடை இருப்பதால் இந்த ஹதீஸை அதற்கு முரண்படாவதவாறு புரிந்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களின் மனைவியர் தொழுகை விரிப்பை பள்ளியின் வெளியில் இருந்து கொண்டு பள்ளிவாசலுக்குள் விரிப்பார்கள் என்று கருத்துக் கொண்டால் இரண்டு விதமான ஹதீஸ்களும் முரண்படாமல் இருக்கும். இதைப் போன்றுதான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் ஹதீஸ‎ýம் உள்ளது என்பதை கவனிக்க.

*எனவே மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக்கூடாது. பயான் போன்றவைகளில் அவர்கள் பங்கெடுக்க வேண்டுமானால் பள்ளிவாசல் அல்லாத இடங்களிலேயே ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும்.*

 ஏகத்துவம்