பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, March 13, 2014

பித்அத் செய்யும் இமாமைப் பின்பற்றுவது எப்படி கூடும்?

பித்அத் செய்யும் இமாமைப் பின்பற்றுவது எப்படி கூடும்?
மிக விரைவில் உங்கள் மீது சில தலைவர்கள் தோன்றுவார்கள் (அவர்கள்தொழுகையைஅதனுடைய நேரத்தை விட்டும் பிற்படுத்துவார்கள்.அத்துடன் பித்அத்களையும்தோற்றுவிப்பார்கள்  (அப்போதுநான் எவ்வாறு செய்து கொள்ளவேண்டும் என்று இப்னுமஸூத் (ரலி) அவர்கள் கேட்டார்கள். உம்மு அப்தின் மகனே எவ்வாறு செய்து கொள்ளவேண்டும் என என்னிடம் கேட்கின்றாயாஅல்லாஹ்வுக்கு மாறு செய்தவருக்கு எவ்விதகட்டுப் படுதலும் கிடையாது என ரஸூல் (ஸல்அவர்கள் கூறினார்கள். ( இப்னு மாஜா,அஹ்மத், தபரானிஇந்த ஹதீஸ் பித்அத் செய்யும் இமாம் பற்றியதாகும்ஷிர்க் செய்யும் இமாம் பற்றியது அல்ல எனவே பித்அத் செய்யும் இமாம் பின்னால் தொழமுடியுமாஇந்த ஹதீஸ் சஹீஹனதா
ஆஸாத்
பதில்
நீங்கள் குறிப்பிடும் செய்தி அஹ்மதிலும் இப்னுமாஜாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
3601حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّا عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهُ سَيَلِي أَمْرَكُمْ مِنْ بَعْدِي رِجَالٌ يُطْفِئُونَ السُّنَّةَ وَيُحْدِثُونَ بِدْعَةً وَيُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ مَوَاقِيتِهَا قَالَ ابْنُ مَسْعُودٍ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ بِي إِذَا أَدْرَكْتُهُمْ قَالَ لَيْسَ يَا ابْنَ أُمِّ عَبْدٍ طَاعَةٌ لِمَنْ عَصَى اللَّهَ قَالَهَا ثَلَاثَ مَرَّاتٍ و سَمِعْت أَنَا مِنْ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ مِثْلَهُ رواه أحمد
எனக்குப் பிறகு சிலர் உங்களுக்குத் தலைவர்களாய் தோன்றுவார்கள்அவர்கள்நபிவழியை அழித்து பித்அத்தை தோற்றுவிப்பார்கள்தொழுகையை அதற்குரியநேரத்தை விட்டும் தாமதப்படுத்துவார்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள்கூறினார்கள்அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே நான் அவர்களை அடைந்தால்என்ன செய்வதுஎன்று கேட்டேன்அதற்கு அவர்கள் உம்மு அப்தின் மகனேஅல்லாஹ்வுக்கு மாறு செய்பவருக்கு கீழ்ப்படிதல் இல்லை என்று மூன்று முறைகூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல் : இப்னு மாஜா (3601)
இந்தச் செய்தியை மட்டும் மேலோட்டமாகப் பார்க்கும் போது பித்அத் செய்யும்இமாமைப் பின்பற்றக் கூடாது என்ற கருத்தை இது தருவது போல் தோன்றலாம்.
ஆனால் இது தொடர்பாக மேலதிக விபரத்துடன் உள்ள மற்ற செய்திகளையும்கவனத்தில் கொண்டால் இது அந்தக் கருத்தைத் தரவில்லை என்பதை அறியலாம்.
பின்னால் தோன்றும் கெட்ட தலைவர்கள் நபிவழியை அழிப்பார்கள்பித்அத்களைஉருவாக்குவார்கள்இவ்விஷயத்தில் இவர்களுக்குக் கட்டுப்பட்டு நாமும் நபிவழியைபுறக்கணித்துவிட்டு பித்அத்களை உருவாக்கக் கூடாது என்று இந்த ஹதீஸ்கூறுகின்றது.
தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழாமல் பிற்படுத்தித் தொழுவது நபிவழிக்குமாற்றமான பித்அத் ஆகும்இதை செய்யக் கூடாது என்று இந்தச் செய்தி கூறுகின்றது.
கடமையான தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் தொழாமல் இந்தத் தலைவர்களுடன்சேர்ந்து பிற்படுத்தித் தொழுவதையே இந்தச் செய்தியில் நபி (ஸல்அவர்கள்கண்டிக்கின்றார்கள்.
இதை அழகிய முறையில் தவிர்ப்பதற்கு நபி (ஸல்அவர்கள் ஒரு சிறந்த வழியை வேறுசெய்தியில் காட்டித் தந்துள்ளார்கள்.
தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழாமல் தாமதப்படுத்தும் தலைவர்கள்தோன்றினால் தொழுகையை சரியான நேரத்தில் தொழுதுவிட வேண்டும்இதுகடமையான தொழுகையாகும்பிறகு இந்தத் தலைவர்களுடன் சேர்ந்து தொழவேண்டும்இது உபரியான வணக்கமாகி விடும்இவ்வாறு நபி (ஸல்அவர்கள்கூறியுள்ளார்கள்.
1027حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ قَالَ ح و حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ قَالَا حَدَّثَنَا حَمَّادٌ عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ كَيْفَ أَنْتَ إِذَا كَانَتْ عَلَيْكَ أُمَرَاءُ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا أَوْ يُمِيتُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا قَالَ قُلْتُ فَمَا تَأْمُرُنِي قَالَ صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا فَإِنْ أَدْرَكْتَهَا مَعَهُمْ فَصَلِّ فَإِنَّهَا لَكَ نَافِلَةٌ وَلَمْ يَذْكُرْ خَلَفٌ عَنْ وَقْتِهَا رواه مسلم  
அபூதர் (ரலிஅவர்கள் கூறினார்கள் : 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் என்னிடம், "தொழுகையை அதன் உரிய நேரத்தை விட்டுத் தாமதப்படுத்துபவர்கள்அல்லது தொழுகையை அதன் உரிய நேரத்தில்நிறைவேற்றாமல் சாகடிப்பவர்கள் உங்களுக்குத் தலைவர்களாய் அமைந்தால் உங்களதுநிலை எப்படி இருக்கும்?'' என்று கேட்டார்கள்நான் "(அப்போதுநான் என்ன செய்யவேண்டும் என்று எனக்கு உத்தரவிடுகிறீர்கள்?'' என்று கேட்டேன்அதற்கு அவர்கள், "தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுது கொள்ளுங்கள்பிறகு அவர்களுடன்நீங்கள் தொழுகையை அடைந்து கொண்டால் அப்போதும் (அவர்களுடன் இணைந்து)தொழுது கொள்ளுங்கள்அது உங்களுக்குக் கூடுதலான (நஃபில்தொழுகையாகஅமையும்'' என்று கூறினார்கள்.
நூல் :முஸ்லிம் 1340
நீங்கள் எடுத்துக் காட்டும் ஹதீஸின் கருத்து என்ன என்பதை இந்த ஹதீஸ் தெள்வுபடுத்துகிறது. அதாவது பித் அத் செய்யும் தலைவர்கள் உரிய நேரத்தில் தொழாவிட்டால் நாம் அதில் ஒத்துழைக்காமல் உரிய நேரத்தில் தொழுது விடவேண்டும். ஆயினும் அவர்கள் தலமையில் தாமதமாக நடத்த்தப்படும் தொழுகையில் சேர்ந்து மீண்டும் தொழ வேண்டும். இது உபரியான தொழுகையாக ஆகி விடும் என்பது தான் இதன் கருத்து. அவர்களைப் பின்பற்றித் தொழக்கூடாது என்பது மார்க்கத்தின் சட்டமாக இருந்தால் அவர்களுடனும் சேர்ந்து தொழுங்கள் என நபியவர்கள் அனுமதி அளித்திருக்க மாட்டார்கள்.
ஆனால் இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றித் தொழக்கூடாது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

No comments:

Post a Comment