பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, March 13, 2014

இஷ்ராக் தொழுகை இஸ்லாத்தில் உண்டா?

இஷ்ராக் தொழுகை இஸ்லாத்தில் உண்டா?

கேள்வி
இஷ்ராக் தொழுகை இஸ்லாத்தில் உண்டா?
பதில் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தராத அனாச்சாரங்கள் வணக்கவழிபாடுகள் என்ற பெயரில் நம் சமுதாயத்தில் ஊடுருவி இருந்தது. ஹதீஸ் கலையை படிக்காத அல்லது படித்தும் அதனை செயல்படுத்தாத போலி லிம்கள் இந்த அனாச்சாரங்களுக்கு பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டினர்.
அல்லாஹ்வின் கிருபையால் தமிழகத்தில் ஏகத்துவம் வந்த பிறகு இந்த ஹதீஸ்களின் உண்மை நிலை மக்களுக்கு விளக்கப்பட்டு ஓரளவுக்கு இந்த அனாச்சாரங்கள் ஒழிந்துவிட்டது. இது போன்று பலவீனமான ஹதீஸ்களை அடிப்படையாக வைத்து இஷ்ராக் தொழுகை என்ற வணக்கத்தை மக்கள் செய்து வருகின்றனர்.

இஷ்ராக் என்றால் சூரிய உதயம் என்பது பொருள். சூரியன் உதித்த பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவது தனிச்சிறப்பு வாய்ந்தது என்று நம் சமுதாயத்தில் பலர் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்தத் தொழுகைக்கு இஷ்ராக் தொழுகை என்று சொல்லப்படுகின்றது.

இவ்வாறு தொழுதால் ஹஜ் உம்ரா செய்த நன்மை கிடைக்கும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸ்கள் அனைத்திலும் பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுகின்றன.
அபூ ழிலாலுடைய அறிவிப்பு
535حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ الْبَصْرِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا أَبُو ظِلَالٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى الْغَدَاةَ فِي جَمَاعَةٍ ثُمَّ قَعَدَ يَذْكُرُ اللَّهَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ كَانَتْ لَهُ كَأَجْرِ حَجَّةٍ وَعُمْرَةٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَامَّةٍ تَامَّةٍ تَامَّةٍ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ قَالَ وَسَأَلْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَعِيلَ عَنْ أَبِي ظِلَالٍ فَقَالَ هُوَ مُقَارِبُ الْحَدِيثِ قَالَ مُحَمَّدٌ وَاسْمُهُ هِلَالٌ رواه الترمذي
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒருவர் ஃபஜர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதுவிட்டு பிறகு அமர்ந்து அல்லாஹ்வை நினைவுகூறுகிறார். சூரியன் உதித்த பிறகு அவர் இரண்டு ரக்அத்கள் தொழுதால் ஹஜ்ஜும் உம்ராவும் செய்த நன்மையைப் போன்று அவருக்கு (நன்மை) கிடைக்கும்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : திர்மிதி (535)

இந்த செய்தியை அனஸ் (ரலிஅவர்களிடமிருந்து அபூ ழிலால் என்பவர் அறிவிக்கின்றார். இவர் பலவீனமானவர் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர். இமாம் யஹ்யா பின் முயீன் இமாம் நஸாயீ இமாம் யஃகூப் பின் சுஃப்யான் இமாம் இப்னு ஹிப்பான் இமாம் இப்னு அதீ இமாம் அபூதாவுத் மற்றும் ஹாகிம் ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர். எனவே இந்த செய்தி பலவீனம் என்பது உறுதியாகின்றது.
மூசா பின் அலீ என்பவரின் அறிவிப்பு

அபூ உமாமா (ரலிஅவர்கள் வழியாகவும் இதே செய்தி தப்ரானியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
المعجم الكبير للطبراني   باب الصاد
 ما أسند أبو أمامة லி  القاسم بن عبد الرحمن بن يزيد الشامي مولى معاوية
 حدثنا الحسين بن إسحاق التستري ، ثنا المغيرة بن عبد الرحمن الحراني ، ثنا عثمان بن عبد الرحمن ، عن موسى بن علي ، عن يحيى بن الحارث ، عن القاسم ، عن أبي أمامة رضي الله عنه ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : ' من صلى صلاة الغداة في جماعة ، ثم جلس يذكر الله حتى تطلع الشمس ، ثم قام فركع ركعتين ، انقلب بأجر حجة وعمرة ' *
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒருவர் ஃபஜர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதுவிட்டு பிறகு அமர்ந்து அல்லாஹ்வை நினைவுகூறுகிறார். சூரியன் உதித்த பிறகு அவர் எழுந்து இரண்டு ரக்அத்கள் தொழுதால் ஒரு ஹஜ் மற்றும் உம்ரா செய்த நன்மையுடன் அவர் திரும்புகிறார்.
அறிவிப்பவர் : அபூ உமாமா (ர­) அவர்கள்
நூல் : தப்ரானீ

இந்த செய்தியில் நான்காவது அறிவிப்பாளராக மூசா பின் அலீ என்பவர் இடம்பெறுகின்றார். இவர் யாரென்ற விபரம் தெரியவில்லை. இவருடைய நம்பகத்தன்மை அறியப்படவில்லை என்பதால் இவர் பலவீனமானவராவார்.

இவரிடமிருந்து உஸ்மான் பின் அப்திர் ரஹ்மான் என்பவர் அறிவிக்கின்றார். இவர் நம்பகத்தன்மை உறுதிசெய்யப்படாத நபர்களிடமிருந்தும் பலவீனமானவர்களிடமிருந்தும் ஹதீஸ்களை அறிவிக்கக்கூடியவர் என்று இமாம்கள் குறைகூறியுள்ளனர்.

மேற்கண்ட ஹதீஸை இவர் மூசா பின் அலீ என்பவரிடமிருந்து அறிவிப்பதால் மூசா பின் அலீ நம்பகத்தன்மை உறுதிசெய்யப்படாதவர் அல்லது பலவீனமானவர் என்பது மேலும் உறுதியாகின்றது.

மூசா பின் அலீ பின் ரபாஹ் என்ற பெயரில் நம்பகமான அறிவிப்பாளர் ஒருவர் இருக்கின்றார். மேலுள்ள செய்தியில் கூறப்படும் மூசா பின் அலீ என்பவர் இவராக இருக்குமோ என்ற ஐயம் ஏற்படுகின்றது. ஆனால் அறிஞர்களின் கூற்றை கவனித்தால் இவர் மூசா பின் அலீ பின் ரபாஹ் அல்ல என்பதை அறியலாம்.

இமாம் மிஸ்ஸி அவர்கள் உஸ்மான் பின் அப்திர் ரஹ்மானுடைய ஆசிரியர் பட்டியலில் மூசா பின் அலீ பின் ரபாஹை குறிப்பிடவில்லை. இவரிடமிருந்து உஸ்மான் அறிவித்திருந்தால் உஸ்மானுடைய ஆசிரியர் பட்டிய­ல் மூசா பின் அலீ பின் ரபாஹ் இடம்பெற்றிருப்பார். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை. அதேப் போன்று மூசா பின் அலீ பின் ரபாஹ் அவர்களின் மாணவர் பட்டிய­ல் உஸ்மான் பின் அப்திர் ரஹ்மான் இடம்பெறவில்லை.

எனவே இந்த செய்தியை உஸ்மான் என்பவர் மூசா பின் அலீ பின் ரபாஹிடமிருந்து அறிவிக்கவில்லை. இதேப் பெயர் கொண்ட நம்பகத்தன்மை உறுதிசெய்யப்படாத வேறு ஒரு மூசா பின் அலீயிடமிருந்து தான் அறிவித்துள்ளார் என்பது தெளிவாகின்றது. ஆகையால் இச்செய்தியும் பலவீனமாக உள்ளது.
அல்அஹ்வஸ் பின் ஹகீமுடைய அறிவிப்பு

உத்பா பின் அப்த் (ரலிஅவர்கள் வழியாகவும் இதுபோன்ற செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
معجم الصحابة لابن قانع   عتبة بن عبد السلمي  حديث : ‏1231‏
 حدثنا القاسم بن حماد الدلال ، نا إبراهيم بن إسحاق الضيني ، نا بشر بن عمارة ، عن الأحوص بن حكيم ، عن عبد الله بن غابر ، عن عتبة بن عبد قال : قال رسول الله صلى الله عليه وسلم : ' من صلى الفجر وجلس حتى تطلع الشمس وسبح تسبيحة الضحى , فإن له عدل حجة وعمرة ' *
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒருவர் ஃபஜர் தொழுதுவிட்டு சூரியன் உதிக்கும் வரை அமர்ந்திருந்து ளுஹாத் தொழுகையை நிறைவேற்றினால் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் நிகரான நன்மை அவருக்கு உண்டு.
அறிவிப்பவர் : உத்பா பின் அப்த் (ரலி)
நூல் : முஃஜமுஸ் ஸஹாபா

இதில் அல்அஹ்வஸ் பின் ஹகீம் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று இமாம் அஹ்மது பின் ஹம்பள் அலீ பின் மதீனீ மற்றும் யஹ்யா பின் மயீன் இமாம் அபூஹாதிம் இமாம் நஸாயீ இமாம் இப்னு ஹஜர் இமாம் தஹபீ மற்றும் முஹம்மது பின் அவ்ஃப் ஆகிய அறிஞர்கள் கூறியுள்ளனர். இவர் வலுமையானவர் இல்லை என்று யஃகூப் பின் சுஃப்யான் மற்றும் ஜவ்ஸஜானி ஆகிய இரு அறிஞர்களும் கூறியுள்ளனர். எனவே இந்த அறிவிப்பும் பலவீனமாக இருக்கின்றது.

இதேப் போன்று இப்னு உமர் (ரலிஅவர்கள் அறிவித்ததாக ஒரு அறிவிப்பு இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் தொகுத்த அல்மஜ்ரூஹீன் என்ற நூ­ல் இடம்பெற்றுள்ளது.

முந்தைய செய்தியில் இடம்பெற்ற பலவீனமான அறிவிப்பாளர் அல்அஹ்வஸ் பின் ஹகீம் இதிலும் இடம்பெற்றுள்ளார்.
ஃபள்ல் பின் முவஃப்பக் என்பவரின் அறிவிப்பு

இப்னு உமர் (ரலிஅவர்கள் வழியாக பின்வரும் செய்தி தப்ரானியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
المعجم الأوسط للطبراني   باب العين
حدثنا محمد بن عبد الله الحضرمي قال : ثنا محمد بن عمر الهياجي قال : نا الفضل بن موفق قال : نا مالك بن مغول ، عن نافع ، عن ابن عمر قال : كان رسول الله صلى الله عليه وسلم ' إذا صلى الفجر لم يقم من مجلسه حتى تمكنه الصلاة ' ، وقال : ' من صلى الصبح ، ثم جلس في مجلسه حتى تمكنه الصلاة ، كانت بمنزلة عمرة وحجة متقبلتين ' ' لم يرو هذا الحديث عن مالك بن مغول إلا الفضل بن موفق '

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜர் தொழுதுவிட்டால் (சூரியன் உதித்த பிறகு) தொழும் வரை தான் அமர்ந்த இடத்தி­ருந்து எழமாட்டார்கள். மேலும் அவர்கள் ஒருவர் ஃபஜர் தொழுதுவிட்டு தன் இருப்பிடத்திலேயே அமர்ந்து பிறகு தொழுதால் அத்தொழுகை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாகவும் உம்ராவாகவும் ஆகிவிடுகின்றது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

 
நூல் : தப்ரானி 


இந்த செய்தியில் நான்காவது அறிவிப்பாளராக ஃபள்ல் பின் முவஃப்பக் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்றும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிக்கக்கூடியவர் என்றும் இமாம் அபூஹாதம் குறைகூறியுள்ளார். இவரிடம் பலவீனம் இருப்பதாக இமாம் இப்னு ஹஜர் அவர்களும் தெரிவித்துள்ளார்கள். ஆகவே இந்த அறிவிப்பும் பலவீனமாக இருக்கின்றது.

தய்யிப் பின் சல்மான் என்பவரின் அறிவிப்பு

ஆயிஷா (ரலிஅவர்கள் அறிவித்ததாக இதே செய்தி தப்ரானியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
المعجم الأوسط للطبراني   باب العين
حدثنا محمد بن محمد التمار قال : نا شيبان بن فروخ قال : نا الطيب بن سلمان قال : سمعت عمرة ، تقول : سمعت عائشة ، تقول : قال رسول الله صلى الله عليه وسلم : ' من صلى الغداة ، وقعد في مصلاه حتى تطلع الشمس ، ثم صلى أربع ركعات غفر الله له ذنوبه ' *
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒருவர் ஃபஜர் தொழுகையை தொழுதுவிட்டு சூரியன் உதிக்கும் வரை தான் தொழுத இடத்திலேயே அமர்ந்து பிறகு நான்கு ரக்அத்கள் தொழுதால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : தப்ரானி

இதில் தய்யிப் பின் சல்மான் என்பவர் இடம்பெருகிறார். தய்யிப் பின் சல்மான் பலவீனமானவர் என்று இமாம் தாரகுத்னீ அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இவர் நம்பகமானவர் என்று ஏற்கத் தகுந்த எந்த அறிஞரும் சான்றளிக்கவில்லை. எனவே இந்த அறிவிப்பும் பலவீனமாக இருக்கின்றது.
சரியான செய்திகள்

நபி (ஸல்) அவர்கள் சூரியன் உதிக்கும் வரை பள்ளியில் அமர்ந்திருப்பார்கள் என்றும் சூரியன் உதித்தப் பிறகு எழுந்து சென்றுவிடுவார்கள் என்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழி கூறுகின்றது.
4286 حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ قُلْتُ لِجَابِرِ بْنِ سَمُرَةَ أَكُنْتَ تُجَالِسُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَعَمْ كَثِيرًا كَانَ لَا يَقُومُ مِنْ مُصَلَّاهُ الَّذِي يُصَلِّي فِيهِ الصُّبْحَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَإِذَا طَلَعَتْ قَامَ وَكَانُوا يَتَحَدَّثُونَ فَيَأْخُذُونَ فِي أَمْرِ الْجَاهِلِيَّةِ فَيَضْحَكُونَ وَيَتَبَسَّمُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه مسلم
சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், ''நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''ஆம்அதிகமாகவே (அமர்ந்திருக்கிறேன்). அவர்கள் சுப்ஹுத் தொழுகையை முடித்தபின் சூரியன் உதயமாவதற்குமுன் தாம் தொழுத இடத்திலிருந்து எழுந்திருக்கமாட்டார்கள். சூரியன் உதயமான பின்பே (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலத்தில் நடந்த விஷயங்கள் பற்றிப் பேசிச் சிரித்துக்கொண்டிருப்பார்கள். (அதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்ன கைத்துக்கொண்டிருப்பார்கள்'' என்று கூறினார்கள்.
முஸ்லிம் (4641)

சூரியன் உதித்தப் பிறகு தொழுவதால் ஹஜ்ஜும் உம்ராவும் செய்த நன்மை கிடைக்குமானால் இந்த வாய்ப்பை நபி (ஸல்) அவர்கள் தவறவிட்டிருக்கமாட்டார்கள். எனவே இஷ்ராக் தொழுகை என்ற வணக்கத்தை இஸ்லாம் காட்டித்தரவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

அதே நேரத்தில் ஒருவர் சூரியன் உதித்த பிறகு உபரியாக தொழ நாடினால் இதற்கு மார்க்கத்தில் தடை ஏதும் இல்லை. மற்ற நேரங்களில் உபரியான வணக்கங்களை தொழுதால் என்ன நன்மை கிடைக்குமோ அதே நன்மையே சூரியன் உதித்த பிறகு நிறைவேற்றப்படும் தொழுகைக்கும் கிடைக்கும். இந்நேரத்தில் தொழப்படும் தொழுகைக்கு பிரத்யேகமாக எந்த சிறப்பும் இல்லை. மாறாக தொழுவதற்கு அனுமதி மட்டுமே இருக்கின்றது.
586حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ صَالِحٍ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ الْجُنْدَعِيُّ أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا صَلَاةَ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ وَلَا صَلَاةَ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغِيبَ الشَّمْسُ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
சுப்ஹுத் தொழுகைக்குப் பின்னாலிருந்து சூரியன் (முழுமையாக) உதிக்கும் வரை எந்தத் தொழுகையும் இல்லை. அஸ்ர் தொழுகைக்குப் பின்னாலிருந்து சூரியன் (முழுமையாக) மறைவும் வரை எந்தத் தொழுகையும் இல்லை.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல் : புகாரி (586)

சூரியன் முழுமையாக உதிக்கும் வரை எந்தத் தொழுகையும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே சூரியன் உதித்துவிட்டால் இதற்குப் பிறகு உபரியான தொழுகைகளை தொழுதுகொள்ள அனுமதியுள்ளது என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது. 

No comments:

Post a Comment