பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, March 23, 2017

சிறந்த பெண்மணி யார் என்று நபிமொழி ?

சிறந்த பெண்மணி யார் என்று நபிகளாரிடம் கேட்ட போது, எந்தப் பெண் ஆண்களைப் பார்த்திருக்க மாட்டாளோ, எந்த ஆண்களும் இந்தப் பெண்ணைப் பார்த்திருக்க மாட்டார்களோ அந்தப் பெண்ணே சிறந்த பெண் என்று நபிகளார் கூறினார்கள் என்று நபிமொழி இருக்கிறதா?
யூசுஃப், சென்னை.
!இந்தக் கருத்தில் சில செய்திகள் இடம்பெற்றுள்ளன. அவை அனைத்தும் பலவீனமானதாகும்.
حلية الأولياء 430 - (2 / 41)
حَدَّثَنا إبراهيم بن أحمد بن أبي حصين حَدَّثَنا جدي أَبُو حَصِينٍ حَدَّثَنا يحيى الحماني حَدَّثَنا قيس عن عَبْد الله بن عُمَران عن علي ابن زيد عن سعيد بن المسيب عن علي أنهقال لفاطمة ما خير للنساء قالت لا يرين الرجال ولا يرونهن فذكر ذلك للنبي صلى الله عليه وسلم فقال إنما فاطمة بضعة مني.
அலி (ரலி) அவர்கள் பாத்திமா (ரலி) அவர்களிடம் பெண்ணுக்கு எது சிறந்தது? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆண்களை அவர் பார்க்க மாட்டார், ஆண்களும் அவரை பாத்திருக்க மாட்டார்கள் என்றார்கள். இதை நபி (ஸல்) அவர்களிடம் அலீ (ரலி) கேட்ட போது (அக்கருத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில்) பாத்திமா என் சதைத் துண்டாவார் என்று கூறினார்கள்.
அறிவிப்பர் ஸயீத் பின் முஸய்யப்,
நூல் ஹில்யத்துல் அவ்லியா, பாகம் 2, பக்கம் 41)
இந்தச் செய்தியில் இடம்பெறும் அலீ பின் ஸைத் என்பவர் பலவீனமாவராவார்.
تقريب التهذيب - (2 / 401)
4734- علي ابن زيد ابن عبدالله ابن زهير ابن عبدالله ابن جدعان التيمي البصري أصله حجازي وهو المعروف بعلي ابن زيد ابن جدعان ينسب أبوه إلى جد جدهضعيف من الرابعة مات سنة إحدى وثلاثين وقيل قبلها بخ م 4
அலீ பின் ஸைத் என்பவர் பலவீனமாவராவார்.
நூல்: தக்ரீபுத் தஹ்தீப், பாகம்: 2, பக்கம்: 401
مجمع الزوائد ومنبع الفوائد . محقق - (6 / 444)
وفيه يحيى الحماني وهو ضعيف.
மேலும் இச்செய்தியில் இடம் பெறும் யஹ்யா அல்ஹிமானீ என்பவரும் பலவீனமானவராவார்.
(மஜ்மவுஸ் ஸவாயித், பாகம்:6, பக்கம் :444)
வேறு அறிவிப்பாளர் வரிசையிலும் இதே போன்ற செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
حلية الأولياء 430 - (2 / 40)
حَدَّثَنا عَبْد الله بن محمد بن عثمان الواسطي حَدَّثَنا يعقوب بن إبراهيم بن عباد ابن العوام حَدَّثَنا عَمْرو بن عون حَدَّثَنا هشيم حَدَّثَنا يونس عن الحسن عن أنس قال قالرسول الله صلى الله عليه وسلم ما خير للنساء فلم ندر ما نقول فسار علي إلى فاطمة فأخبرها بذلك فقالت فهلا قلت له خير لهن أن لا يرين الرجال ولا يرونهن فرجعفأخبره بذلك فقال له من علمك هذا قال فاطمة قال إنها بضعة مني.
இந்தச் செய்தியில் இடம் பெறும் யஃகூப் பின் இப்ராஹீம் என்பவர் யார்? இவரின் நம்பகத்தன்மை எத்தகையது? என்பது பற்றிய விவரங்கள் இல்லை. எனவே இவர் யாரென அறியப்படாதவர் என்ற நிலையில் உள்ளவர். இவருடைய செய்திகள் ஆதாரமாகாது.
இதே செய்தி பஸ்ஸார் என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.
مسند البزار 18 مجلد كاملا - (2 / 159)
526- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ الْكُوفِيُّ ، قَالَ : حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ ، قَالَ : حَدَّثَنَا قَيْسٌ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عِمْرَانَ ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ، عَنْ عَلِيٍّرَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّهُ كَانَ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : أَيُّ شَيْءٍ خَيْرٌ لِلْمَرْأَةِ ؟ فَسَكَتُوا ، فَلَمَّا رَجَعْتُ قُلْتُ لِفَاطِمَةَ : أَيُّ شَيْءٍ خَيْرٌ لِلنِّسَاءِ ؟ قَالَتْ : أَلاَّ يَرَاهُنَّالرِّجَالُ ، فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : إِنَّمَا فَاطِمَةُ بِضْعَةٌ مِنِّي رَضِيَ اللَّهُ عَنْهَاوَهَذَا الْحَدِيثُ لاَ نَعْلَمُ لَهُ إِسْنَادًا عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ ، إِلاَّ هَذَا الإِسْنَادَ.
இந்தச் செய்தியிலும் அலீ பின் ஸைத் என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். மேலும் இந்தச் செய்தியைப் பற்றி ஹைஸமீ அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
مجمع الزوائد ومنبع الفوائد . محقق - (9 / 138)
15200- وعن علي أنه كان عند رسول الله صلى الله عليه وسلم فقال: "أي شيء خير للمرأة؟". فسكتوا، فلما رجعت قلت لفاطمةأي شيء خير للنساء؟ قالتلا يراهنالرجالفذكرت ذلك للنبي صلى الله عليه وسلم فقال:
"إنما فاطمة بضعة مني - رضي الله عنها - ". رواه البزار وفيه من لم أعرفه.
இந்தச் செய்தியை பஸ்ஸார் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். நான் அறியாதவர்கள் இதில் இடம்பெற்றுள்ளார்கள். (மஜ்மவுஸ் ஸவாயித், பாகம்:9, பக்கம்: 138)

No comments:

Post a Comment