பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, March 23, 2017

நான்கு கேள்விகளுக்கு பதிலளிக்காதவரை மறுமையில்?

நான்கு கேள்விகளுக்கு பதிலளிக்காதவரை மறுமையில் நமது கால்கள் நகராது என்று சொல்லப்படும் செய்தி ஆதாரப்பூர்வமான செய்தி தானா?
விசாரிக்கப்படும் நான்கு விஷயங்கள்(?):
நபி (ஸல்) அவர்களைப் பற்றி ஏதாவது ஒரு செய்தியை யாராவது கூறினால் அதைக் கூறியவர் நம்பகமானவரா? அல்லது பலவீனமானவரா என்று அவசியம் ஆராய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறாத செய்திகள் அவர்களின் பெயரால் பரப்பப்பட்டு அதை மக்கள் நம்பிவிடக்கூடாது என்பதற்காக இந்த ஆராய்ச்சி அவசியமானதாகும்.
சில பலவீனமான ஹதீஸ்களை மக்கள் சரியான செய்திகள் என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட ஹதீஸ்களில் பின்வரும் செய்தியும் ஒன்றாகும்.
2341حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَخْبَرَنَا الْأَسْوَدُ بْنُ عَامِرٍ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنْ الْأَعْمَشِ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جُرَيْجٍ عَنْ أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ وَعَنْ عِلْمِهِ فِيمَ فَعَلَ وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ وَعَنْ جِسْمِهِ فِيمَ أَبْلَاهُ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَسَعِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جُرَيْجٍ هُوَ بَصْرِيٌّ وَهُوَ مَوْلَى أَبِي بَرْزَةَ وَأَبُو بَرْزَةَ اسْمُهُ نَضْلَةُ بْنُ عُبَيْدٍ رواه الترمذي
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மறுமையில் அடியான் தன்னுடைய வாழ்நாளை எவ்வாறு கழித்தான்? அவனுடைய கல்வியை கொண்டு என்ன செய்தான்? செல்வத்தை எப்படி சம்பாதித்தான்? எவ்வழியில் செலவு செய்தான்? அவனுடைய உடலை எவ்வழியில் பயன்படுத்தினான்? ஆகிய கேள்விகளுக்கு அவன் பதிலளிக்காமல் அவனுடைய பாதங்கள் நகராது.
அறிவிப்பவர் : அபூ பர்ஸா (ரலி)
நூல் : திர்மிதீ (2341)
இது சரியான செய்தி என்று மக்கள் பரவலாக அறிந்து வைத்துள்ளனர். ஆனால் இந்தச் செய்திக்குரிய அனைத்து அறிவிப்பாளர் தொடர்களையும் கவனித்தால் அந்த அனைத்து வழிகளும் பலவீனமானவையாக அமைந்துள்ளன. சரியான ஒரு அறிவிப்பாளர் தொடர் கூட இந்தச் செய்திக்கு இல்லை. 
மேற்கண்ட அறிவிப்பில் அபூபக்ர் பின் அய்யாஷ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் சரியான நினைவாற்றலைப் பெற்றிருக்கவில்லை என்பதால் அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
உஸ்மான் பின் சயீத் அபூ ஹாதிம் முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் நுமைர் ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இவர் புத்தகத்திலிருந்து அறிவித்தால் மட்டுமே அது சரியான அறிவிப்பு என்று இப்னு ஹஜர் கூறியுள்ளார்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 12 பக்கம் 34)
இவர் மேற்கண்ட ஹதீஸை புத்தகத்திலிருந்து அறிவிக்கவில்லை.  எனவே இது பலவீனமான செய்தியாகும். இதுவல்லாத இன்னும் சில வழிகளில் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாக உள்ளது.
அறிவிப்பு 2
2340حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ حَدَّثَنَا حُصَيْنُ بْنُ نُمَيْرٍ أَبُو مِحْصَنٍ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ قَيْسٍ الرَّحَبِيُّ حَدَّثَنَا عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ ابْنِ مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَزُولُ قَدَمُ ابْنِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عِنْدِ رَبِّهِ حَتَّى يُسْأَلَ عَنْ خَمْسٍ عَنْ عُمُرِهِ فِيمَ أَفْنَاهُ وَعَنْ شَبَابِهِ فِيمَ أَبْلَاهُ وَمَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ وَمَاذَا عَمِلَ فِيمَا عَلِمَ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ ابْنِ مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا مِنْ حَدِيثِ الْحُسَيْنِ بْنِ قَيْسٍ وَحُسَيْنُ بْنُ قَيْسٍ يُضَعَّفُ فِي الْحَدِيثِ مِنْ قِبَلِ حِفْظِهِ وَفِي الْبَاب عَنْ أَبِي بَرْزَةَ وَأَبِي سَعِيدٍ رواه الترمذي
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக வரும் இந்த அறிவிப்பு திர்மிதியில் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் ஹ‚சைன் பின் கைஸ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதீ அவர்களே இந்த செய்திக்கு கீழ் இதில் இடம்பெறும் ஹ‚சைன் பின் கைஸ் பலவீனமானவர் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இவர் விடப்பட வேண்டியவர் என அஹ்மது கூறியுள்ளார். இவர் எதற்கும் தகுதியானவர் இல்லை என யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார். இவருடைய செய்தியை எழுதவும் கூடாது என்று புகாரி கூறியுள்ளார். அலீ பின் மதீனீ அபூ சுர்ஆ அபூ ஹாதிம் ஆகியோர் இவரை பலவீனமானர் என்று குறைகூறியுள்ளனர்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 2 பக்கம் 364)
எனவே இதுவும் பலவீனமான செய்தியாகும்.
அறிவிப்பு 3
538أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ عَنْ سُفْيَانَ عَنْ لَيْثٍ عَنْ عَدِيِّ بْنِ عَدِيٍّ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الصُّنَابِحِيِّ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ لَا تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ أَرْبَعٍ عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ وَعَنْ جَسَدِهِ فِيمَا أَبْلَاهُ وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَا وَضَعَهُ وَعَنْ عِلْمِهِ مَاذَا عَمِلَ فِيهِ رواه الدارمي
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாக வரும் இந்த அறிவிப்பு தாரமியில் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் லைஸ் என்பார் இடம்பெற்றுள்ளார். இவரும் நினைவாற்றல் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர் ஆவார். இவர் அறிவித்த ஹதீஸ்களில் எது சரியானது? எது தவறானது? என்பதைக் கண்டறிய முடியாத அளவுக்கு குழப்பம் இருப்பதால் இவரை அறிஞர்கள் விட்டுவிட்டனர் என இப்னு ஹஜர் கூறியுள்ளார்.
யஹ்யா பின் மயீன், அபூ ஹாதிம், அபூ சுர்ஆ ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இவருடைய செய்தியை எழுதிக்கொள்ளலாம். ஆனால் ஆதாரமாக கொள்ள முடியாது என இப்னு அதீ கூறியுள்ளார். இவர் ஹதீஸில் குழம்பி அறிவிப்பவர் என அஹ்மது பின் ஹம்பள் கூறியுள்ளார்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 8 பக்கம் 465)
எனவே இதுவும் பலவீனமான அறிவிப்பாகும்.
அறிவிப்பு 4
المدخل إلى السنن الكبرى للبيهقي - (1 / 390)
386 - أخبرنا علي بن أحمد بن عبدان ، أبنا سليمان بن أحمد الطبراني ، ثنا المفضل بن محمد الجندي ، ثنا صامت بن معاذ ، ثنا عبد المجيد بن عبد العزيز بن أبي رواد ، ثنا الثوري ، عن صفوان بن سليم ، عن عدي بن عدي ، عن الصنابحي ، عن معاذ بن جبل ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : لا تزول قدما عبد يوم القيامة حتى يسأل عن أربع خصال ، عن عمره فيما أفناه ، وشبابة فيما أبلاه ، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه ، وعن علمه ماذا عمل فيه
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாக வரும் இந்த அறிவிப்பு பைஹகி அவர்களின் அல்மத்கல் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் அப்துல் மஜீத் பின் அப்தில் அஸீஸ் என்பார் இடம்பெற்றுள்ளார். இவர் வலுமையானவர் இல்லை என அபூஹாதிம் கூறியுள்ளார். இவர் தவறிழைப்பவர் என இப்னு ஹஜர் கூறியுள்ளார். இவரை ஆதாரமாகக் கொள்ள முடியாது என தாரகுத்னீ கூறியுள்ளார்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 6 பக்கம் 381)
எனவே இதுவும் பலவீனமான அறிவிப்பாகும்.
அறிவிப்பு 5
المعجم الأوسط - (5 / 74)
 4710 - حدثنا عبد الرحمن بن معاوية العتبي قال حدثنا زهير بن عباد الرؤاسي قال حدثنا عبد الله بن حكيم ابو بكر الداهري عن محمد بن سعيد الشامي عن إسماعيل بن عبيد الله عن ام الدرداء عن ابي الدرداء قال قال رسول الله صلى الله عليه و سلم لن يزول قدما عبد يوم القيامة حتى يسأل عن أربع عن شبابه فيما ابلاه وعن عمره فيما افناه وعن ماله من اين اكتسبه وفيما أنفقه لا يروى هذا الحديث عن أبي الدرداء إلا بهذا الإسناد
அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாக வரும் இந்த அறிவிப்பு தப்ரானியின் அல்முஃஜமுல் அவ்ஸத் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் முஹம்மது பின் சயீத் என்பார் இடம்பெற்றுள்ளார். இவர் ஹதீஸில் இட்டுக்கட்டும் பெரும் பொய்யர் என நஸாயீ கூறியுள்ளார். இவருடைய அறிவிப்பு கண்டுகொள்ளாமல் விடப்பட வேண்டும் என புகாரி கூறியுள்ளார். இவர் வேண்டுமென்றே இட்டுக்கட்டுபவர் என அஹ்மது கூறியுள்ளார். மற்றும் பல அறிஞர்கள் இவரை கடுமையான முறையில் விமர்சனம் செய்துள்ளனர்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 9 பக்கம் 184)
 எனவே இந்த அறிவிப்பும் பலவீனமானதாகும்.
அறிவிப்பு 6
المعجم الكبير - (11 / 102)
 11177 - حدثنا الهيثم بن خلف الدوري ثنا أحمد بن محمد بن يزيد بن سليم مولى بني هاشم حدثني حسين بن الحسن الأشقر ثنا هشيم بن بشير عن أبي هاشم عن مجاهد عن ابن عباس رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه و سلم : لا تزول قدما عبد يوم القيامة حتى يسأل عن أربع عن عمره فيما أفناه وعن جسده فيما أبلاه وعن ماله فيما أنفقه ومن أين كسبه وعن حبنا أهل البيت
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக வரும் இந்த அறிவிப்பு தப்ரானியில் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் ஹ‚சைன் பின் ஹசன் என்பார் இடம்பெற்றுள்ளார். அபூ சுர்ஆ இவர் செய்திகளை தவறாக அறிவிப்பவர் என்று கூறியுள்ளார். புகாரி அவர்கள் இவர் விசயத்தில் ஐயம் உள்ளது என்று கூறியுள்ளார். இவர் வலுமையானவர் இல்லை என அபூஹாதிம் கூறியுள்ளார். தஹபி அவர்கள் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 2 பக்கம் 335)
 எனவே இந்த அறிவிப்பும் பலவீனமானதாகும்.
அறிவிப்பு : 7
الجهاد لابن أبي عاصم - (1 / 326)
 حدثنا محمد بن هارون يعرف بأبي نشيط قال حدثنا عبد القدوس بن الحجاج عن عبد الرحمن بن يزيد بن تميم عن الزهري عن عبد الرحمن بن غنم عن معاذ بن جبل قال قال رسول الله صلى الله عليه و سلم ( والذي نفسي بيده ما تغبرت قدما عبد قط ولا وجهه في شيء أفضل عند الله بعد الصلاة المفروضة من الجهاد في سبيل الله عز و جل )
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாக வரும் இந்த அறிவிப்பு இப்னு அபீ ஆஸிம் அவர்கள் தொகுத்த அல்ஜிஹாத் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. இதில் அப்துர் ரஹ்மான் பின் யசீத் பின் தமீம் என்பார் இடம்பெற்றுள்ளார். யஹ்யா பின் மயீன், இப்னு அதீ, இப்னு ஹஜர், அபூஹாதிம், அபூ சுர்ஆ, புகாரி, நஸாயீ, அபூதாவுத் ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 6 பக்கம் 295)
எனவே இதுவும் பலவீனமான அறிவிப்பாகும்.  இந்த செய்திக்குரிய அனைத்து வழிகளும் பலவீனமானதாக இருப்பதால் இதை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று நாம் கூறக்கூடாது.

No comments:

Post a Comment