பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, March 23, 2017

மிஃஹ்ராஜ் பயணத்தின் போது நரகத்தில் அதிகமாகப் பெண்கள்???

மிஃஹ்ராஜ் பயணத்தின் போது நரகத்தில் அதிகமாகப் பெண்கள் நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டப்படுகிறது. அதிலே ஒரு பெண்ணுக்கு நரக நெருப்பு வாய் வழியாகச் செலுத்தப்பட்டு வெந்து கொண்டிருக்கின்ற குடலை இழுத்துக் கொண்டு மலத்துவாரம் வழியாக வெளியே வருகிறது. தலை வெடித்து மூளையில் நுழைந்து சிதறி சின்னாபின்னமாக வெளியே வருகிறது.
உடனே நபி (ஸல்) அவர்கள், தன்னை அழைத்து வந்த ஜிப்ரயீல் (அலை) அவர்களிடத்திலே கேட்கிறார்கள். அவர்கள் பதில் சொல்கிறார்கள். நபியே இந்தப் பெண் உலகில் விபச்சாரம் செய்தவள் அல்ல! வட்டி வாங்கியோ அல்லது கொடுத்தவளோ அல்ல! புறம் பேசியவளல்ல! ஜக்காத் கொடுக்காதவள் அல்ல! பிறரை இழிவுபடுத்தியவள் அல்ல! நபியே இந்தப் பெண் உலகில் அல்லாஹ் மறைக்கச் சொன்னபடி தலைமுடியை மறைக்ககாதவள் ஆவாள் என்றார்கள்.
இவ்வாறு நபிமொழி உள்ளதா?
பர்ஹானா, கோவை
الكبائر - الذهبي - (1 / 172)
 و قال علي بن أبي طالب رضي الله عنه : [ دخلت على النبي صلى الله عليه و سلم أنا و فاطمة رضي الله عنها و وجدناه يبكي بكاء شديدا فقلت له : فداك أبي و أمي يارسول الله ما الذي أبكاك ؟ قال : يا علي ليلة أسري بي إلى السماء رأيت نساء من أمتي يعذبن بأنواع العذاب فبكيت لما رأيت من شدة عذابهن و رأيت امرأة معلقةبشعرها يغلي دماغها و رأيت امرأة معلقة بلسانها و الحميم يصب في حلقها و رأيت امرأة قد شدت رجلاها إلى ثدييها و يداها إلى ناصيتها و رأيت امرأة معلقة بثدييهاو رأيت امرأة رأسها رأس خنزير و بدنها بدن حمار عليها ألف ألف لون من العذاب و رأيت امرأة على صورة الكلب و النار تدخل من فيها و تخرج من دبرها والملائكة يضربون رأسها بمقامع من نار
 فقامت فاطمة رضي الله عنها و قالت : حبيبي و قرة عيني ما كان أعمال هؤلاء حتى وضع عليهن العذاب ؟ فقال صلى الله عليه و سلم : يا بنية أما المعلقة بشعرهافإنها كانت لا تغطي شعرها من الرجال و أما التي كانت معلقة بلسانها فإنها كانت تؤذي زوجها و أما المعلقة بثدييها فإنها كانت تفسد فراش زوجها و أما التي تشدرجلاها إلى ثدييها و يداها إلى ناصيتها و قد سلط عليها الحيات و العقارب فإنها كانت لا تنظف بدنها من الجنابة و الحيض و تستهزىء بالصلاة و أما التي رأسها رأسخنزير و بدنها بدن حمار فإنها كانت نمامة كذابة و أما التي على صورة الكلب و النار تدخل من فيها و تخرج من دبرها فإنها كانت منانة حسادة (
தாங்கள் குறிப்பிட்ட கருத்தில் மேற்குறிப்பிட்ட  செய்தி தஹபீ அவர்களின் அல்கபாயிர் என்ற நூலில் அறிவிப்பாளர் வரிசையில்லாமல் அலீ (ரலி) அவர்களும், பாத்திமா (ரலி) அவர்களும் நபிகளார் இடத்தில் இருந்தபோது நபிகளார் இவ்வாறு கூறினார்கள் என்று இடம் பெற்றுள்ளது.
இதற்கு முழுமையான அறிவிப்பாளர் வரிசை கிடையாது. இது நபிகளார் மீது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியாகும்.

No comments:

Post a Comment