பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, February 21, 2018

பெண்கள்_தலை_சீவும்போது_முடி_கழியும்_என்பதால்_தலைசீவுவது_கூடாதா

#ஹஜ்_உம்ரா

#பெண்கள்_தலை_சீவும்போது_முடி_கழியும்_என்பதால்_தலைசீவுவது_கூடாதா?

பெண்கள் தலை சீவும்போது முடி கழியும் என்பதால் பெண்கள் தலைசீவுவதும் கூடாது என்கிறார்கள். இது சரியா? ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டவுடன் இஹ்ராமைக் களைவதற்காக ‘உன் தலையை அவிழ்த்து சீவிக் கொண்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டு, உம்ராவை விட்டுவிடு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது, இஹ்ராமில் இருக்கும்போது தலையை அவிழ்த்து சீவக்கூடாது என்ற கருத்தையும் சொல்லுமா?

#பதில்

இஹ்ராமின் போது ஆண்களும், பெண்களும் செய்யக்கூடாத அல்லது தடை செய்யப்பட்ட காரியங்களை குர்ஆனும் ஹதீசும் தெளிவுபடுத்தி விட்டன. இதில் தலை வாருதல் இடம்பெறவில்லை. இதிலிருந்தே தலை வாருவதற்கு அனுமதியிருக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டி ருந்த நிலையில் அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் வந்தது. (அதனால் என்னால் முதலில் எண்ணியிருந்த உம்ராவை செய்ய முடியாமல் போய்விட்டது.) ஆகவே நான் நபி (ஸல்) அவர்கüடம் இது பற்றி முறையிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உம்ரா செய்வதை விட்டுவிடு! உனது தலைமுடியை அவிழ்த்து தலைவாரிக் கொள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்!” என்றார்கள். நானும் அவ்வாறே செய்து (ஹஜ்ஜை) முடித்தேன்.

நூல்: புகாரி 317

இந்த ஹதீஸ், இஹ்ராமின் போது ஆண்களோ, பெண்களோ தலை வாரிக்கொள்வதற்கு அனுமதியிருக்கின்றது என்பதை வலியுறுத்தும் ஹதீஸ் ஆகும். அத்துடன் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டாலும் அவர்கள் இஹ்ராமில் தான் இருக்கிறார்கள் என்பதையும் இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

தவாஃபைத் தவிர மற்ற வணக்கங்களைச் செய்யலாம் என்பது ஆயிஷா (ரலி) அவர்கள் இஹ்ராமில் இருக்கின்றார்கள் என்பதற்கு சரியான சான்றாகும்.

No comments:

Post a Comment