பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 3, 2019

நன்மைகளை - 20

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*✍🏼...நன்மைகளை வாரி*
                          ⤵
         *வழங்கும் தொழுகை*

         *✍🏼...தொடர் [ 20 ]*

*☄தொழுகைக்காகக்*
               *காத்திருப்பதன்*
                    *சிறப்புகள் { 01 }*

*🏮🍂தொழுகையாளிகள் தொழுகைக்காகக் காத்திருக்கும் போது அதற்காக அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வாரி வழங்குகிறான். அல்லாஹ் எப்படிப்பட்ட கருணையாளன் என்பதற்கும், தொழுகை எவ்வளவு பெரிய நல்லமல் என்பதற்கும் இது மாபெரும் சான்றாகும்.*

*🏮🍂பள்ளிவாசலுக்கு முன்கூட்டியே சென்று தொழுகைக்காகக் காத்திருப்பதற்கும், அதுபோன்று ஒரு தொழுகையை முடித்து விட்டு மற்றொரு தொழுகைக்காகக் காத்திருப்பதற்கும் ஏராளமான நன்மைகளை அல்லாஹ் வாரி வழங்குகிறான். அது பற்றிய நபிமொழிகளைக் காண்போம்.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄தொழுகையை எதிர்பார்த்து*
     *தூங்கினாலும் நன்மையே!☄*

5869 - ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪاﻥ، ﺃﺧﺒﺮﻧﺎ ﻳﺰﻳﺪ ﺑﻦ ﺯﺭﻳﻊ، ﺃﺧﺒﺮﻧﺎ ﺣﻤﻴﺪ، *ﻗﺎﻝ: ﺳﺌﻞ ﺃﻧﺲ، ﻫﻞ اﺗﺨﺬ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺧﺎﺗﻤﺎ؟ ﻗﺎﻝ: ﺃﺧﺮ ﻟﻴﻠﺔ ﺻﻼﺓ اﻟﻌﺸﺎء ﺇﻟﻰ ﺷﻄﺮ اﻟﻠﻴﻞ، ﺛﻢ ﺃﻗﺒﻞ ﻋﻠﻴﻨﺎ ﺑﻮﺟﻬﻪ، ﻓﻜﺄﻧﻲ ﺃﻧﻈﺮ ﺇﻟﻰ ﻭﺑﻴﺺ ﺧﺎﺗﻤﻪ، ﻗﺎﻝ: «ﺇﻥ اﻟﻨﺎﺱ ﻗﺪ ﺻﻠﻮا ﻭﻧﺎﻣﻮا، ﻭﺇﻧﻜﻢ ﻟﻢ ﺗﺰاﻟﻮا ﻓﻲ ﺻﻼﺓ ﻣﺎ اﻧﺘﻈﺮﺗﻤﻮﻫﺎ*

_*🍃அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷாத் தொழுகையைப் பாதி இரவு வரை தாமதப்படுத்தினார்கள். (பின்னர் தொழுவித்தார்கள்.) பிறகு அவர்கள் எங்களை நோக்கித் திரும்பினார்கள். அவர்களுடைய மோதிரம் மின்னுவதை இப்போதும் நான் பார்ப்பது போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டார்கள். (ஆனால், நீங்கள் இவ்வளவு நேரம் காத்திருந்து தொழுதிருக்கிறீர்கள்.) நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வரை அந்தத் தொழுகையிலேயே உள்ளீர்கள். (அதுவரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்)'' என்று சொன்னார்கள்.*_

*📚நூல்: புகாரி (5869)📚*

*🏮🍂ஒரு தொழுகையை எதிர்பார்த்து நாம் தூங்கிவிட்டாலும் கூட இறைவன் தூங்கிய நேரம் முழுவதையும் தொழுகையாகவே பதிவு செய்கிறான் என்றால் தொழுகையாளிகளுக்கு இறைவன் வழங்கும் பாக்கியம் எப்படிப்பட்டது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.* இவற்றையெல்லாம் தெரிந்த பிறகும் அறவே தொழுகையைப் புறக்கணிக்கிறார்களே! அந்த மக்களின் துர்பாக்கியத்தை நாம் என்னவென்பது❓

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment