பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, July 11, 2019

நன்மைகளை - 49

_*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*_

_*✍🏼...நன்மைகளை வாரி*_
                          ⤵
         _*வழங்கும் தொழுகை*_

         _*✍🏼...தொடர் [ 49 ]*_

*☄சூரத்துல் ஃபாத்திஹா*
           *ஓதுவதன் சிறப்புகள் [ 02 ]*

*🍃நன்மைகளை வாரி*
           *வழங்கும் அற்புத ஒளி🍃*

حَدَّثَنَا حَسَنُ بْنُ  الرَّبِيعِ، وَأَحْمَدُ بْنُ جَوَّاسٍ الْحَنَفِيُّ، قَالاَ حَدَّثَنَا  أَبُو الأَحْوَصِ، عَنْ عَمَّارِ بْنِ رُزَيْقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ  عِيسَى، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، _*عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ بَيْنَمَا  جِبْرِيلُ قَاعِدٌ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم سَمِعَ نَقِيضًا  مِنْ فَوْقِهِ فَرَفَعَ رَأْسَهُ فَقَالَ هَذَا بَابٌ مِنَ السَّمَاءِ  فُتِحَ الْيَوْمَ لَمْ يُفْتَحْ قَطُّ إِلاَّ الْيَوْمَ فَنَزَلَ مِنْهُ  مَلَكٌ فَقَالَ هَذَا مَلَكٌ نَزَلَ إِلَى الأَرْضِ لَمْ يَنْزِلْ قَطُّ  إِلاَّ الْيَوْمَ فَسَلَّمَ وَقَالَ أَبْشِرْ بِنُورَيْنِ أُوتِيتَهُمَا  لَمْ يُؤْتَهُمَا نَبِيٌّ قَبْلَكَ فَاتِحَةُ الْكِتَابِ وَخَوَاتِيمُ  سُورَةِ الْبَقَرَةِ لَنْ تَقْرَأَ بِحَرْفٍ مِنْهُمَا إِلاَّ أُعْطِيتَهُ*_

*இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:*

_*🍃நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அமர்ந்திருந்த போது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கேட்டார் அவர். அப்போது வானத்தை அண்ணாந்து பார்த்த ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இதோ, வானில் இதுவரை திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. (அதன் சப்தமே இப்போது கேட்டது.)'' என்று கூறினார்கள். அந்தக் கதவு வழியாக ஒரு வானவர் இறங்கி (நபியவர்களிடம்) வந்தார். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் "இதோ இந்த வானவர் இப்போதுதான் பூமிக்கு இறங்கி வந்திருக்கிறார். இதற்கு முன் எப்போதும் அவர் பூமிக்கு இறங்கியதேயில்லை'' என்று கூறினார்கள்.*_

_*அவ்வானவர் சலாம் கூறிவிட்டு, "உங்களுக்கு முன் எந்த இறைத் தூதருக்கும் வழங்கப் பெற்றிராத இரு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப் பெற்றுள்ள நற்செய்தியைப் பெறுங்கள். "அல்ஃபாத்திஹா' அத்தியாயமும் "அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை. அவற்றிலுள்ள (பிரார்த்தனை வரிகளில்) எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல் இருப்பதில்லை'' என்று கூறினார்.*_

*📚நூல்: முஸ்லிம் 1472📚*

*🏮🍂அல்ஹம்து சூராவின் எந்த வரிகளை ஓதினாலும் அதில் உள்ளவை நமக்கு வழங்கப்படும்.*

*🏮🍂இது எப்படிப்பட்ட பாக்கியம் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தப் பாக்கியங்கள் அனைத்திற்கும் சொந்தக்காரர்கள் தொழுகையாளிகள் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. ஏனெனில் அவர்கள் தான் ஒவ்வொரு ரக்அத்துகளிலும் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதுகின்றனர்.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*🍃மலக்குமார்களின் ஆமீன்🍃*

ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻳﻮﺳﻒ، ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ ﻣﺎﻟﻚ، ﻋﻦ اﺑﻦ ﺷﻬﺎﺏ، ﻋﻦ ﺳﻌﻴﺪ ﺑﻦ اﻟﻤﺴﻴﺐ، ﻭﺃﺑﻲ ﺳﻠﻤﺔ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ، ﺃﻧﻬﻤﺎ ﺃﺧﺒﺮاﻩ، _*ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ: ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: " ﺇﺫا ﺃﻣﻦ اﻹﻣﺎﻡ، ﻓﺄﻣﻨﻮا، ﻓﺈﻧﻪ ﻣﻦ ﻭاﻓﻖ ﺗﺄﻣﻴﻨﻪ ﺗﺄﻣﻴﻦ اﻟﻤﻼﺋﻜﺔ ﻏﻔﺮ ﻟﻪ ﻣﺎ ﺗﻘﺪﻡ ﻣﻦ ﺫﻧﺒﻪ - ﻭﻗﺎﻝ اﺑﻦ ﺷﻬﺎﺏ - ﻭﻛﺎﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ: ﺁﻣﻴﻦ "*_

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுவிப்பவர் (இமாம்), ஆமீன் கூறும் போது நீங்களும் ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்) என்று கூறுங்கள். ஏனெனில், எவர் ஆமீன் கூறு(ம் நேரமா)வது வாவனவர்கள் ஆமீன் கூறுகின்ற (நேரத்)துடன் ஒத்தமைந்து விடுகின்றதோ அவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.*_

*🎙அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)*

*📚நூல்: புகாரி 780📚*

*🏮🍂இமாம் ஜமாஅத்துடன் தொழுபவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தின் காரணமாக முன்பாவங்கள் மன்னிக்கப்படும் பாக்கியத்தைத் பெறுகிறார்கள்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment