பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 3, 2019

நன்மைகளை - 30

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*✍🏼...நன்மைகளை வாரி*
                          ⤵
         *வழங்கும் தொழுகை*

         *✍🏼...தொடர் [ 30 ]*

*☄ஜமாஅத் தொழுகை { 04 }*

*☄நோயுற்ற நிலையிலும்*
          *ஜமாஅத்தை பேணுதல்☄*

ﺣﺪﺛﻨﺎ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﻳﻮﻧﺲ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺯاﺋﺪﺓ، ﻋﻦ ﻣﻮﺳﻰ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﺎﺋﺸﺔ، *ﻋﻦ ﻋﺒﻴﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻋﺘﺒﺔ، ﻗﺎﻝ: ﺩﺧﻠﺖ ﻋﻠﻰ ﻋﺎﺋﺸﺔ ﻓﻘﻠﺖ: ﺃﻻ ﺗﺤﺪﺛﻴﻨﻲ -[139]- ﻋﻦ ﻣﺮﺽ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ؟ ﻗﺎﻟﺖ: ﺑﻠﻰ، ﺛﻘﻞ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻘﺎﻝ: «ﺃﺻﻠﻰ اﻟﻨﺎﺱ؟» ﻗﻠﻨﺎ: ﻻ، ﻫﻢ ﻳﻨﺘﻈﺮﻭﻧﻚ، ﻗﺎﻝ: «ﺿﻌﻮا ﻟﻲ ﻣﺎء ﻓﻲ اﻟﻤﺨﻀﺐ». ﻗﺎﻟﺖ: ﻓﻔﻌﻠﻨﺎ، ﻓﺎﻏﺘﺴﻞ، ﻓﺬﻫﺐ ﻟﻴﻨﻮء ﻓﺄﻏﻤﻲ ﻋﻠﻴﻪ، ﺛﻢ ﺃﻓﺎﻕ، ﻓﻘﺎﻝ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﺃﺻﻠﻰ اﻟﻨﺎﺱ؟» ﻗﻠﻨﺎ: ﻻ، ﻫﻢ ﻳﻨﺘﻈﺮﻭﻧﻚ ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ، ﻗﺎﻝ: «ﺿﻌﻮا ﻟﻲ ﻣﺎء ﻓﻲ اﻟﻤﺨﻀﺐ» ﻗﺎﻟﺖ: ﻓﻘﻌﺪ ﻓﺎﻏﺘﺴﻞ، ﺛﻢ ﺫﻫﺐ ﻟﻴﻨﻮء ﻓﺄﻏﻤﻲ ﻋﻠﻴﻪ، ﺛﻢ ﺃﻓﺎﻕ، ﻓﻘﺎﻝ: «ﺃﺻﻠﻰ اﻟﻨﺎﺱ؟» ﻗﻠﻨﺎ: ﻻ، ﻫﻢ ﻳﻨﺘﻈﺮﻭﻧﻚ ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ، ﻓﻘﺎﻝ: «ﺿﻌﻮا ﻟﻲ ﻣﺎء ﻓﻲ اﻟﻤﺨﻀﺐ»، ﻓﻘﻌﺪ، ﻓﺎﻏﺘﺴﻞ، ﺛﻢ ﺫﻫﺐ ﻟﻴﻨﻮء ﻓﺄﻏﻤﻲ ﻋﻠﻴﻪ، ﺛﻢ ﺃﻓﺎﻕ ﻓﻘﺎﻝ: «ﺃﺻﻠﻰ اﻟﻨﺎﺱ؟» ﻓﻘﻠﻨﺎ: ﻻ، ﻫﻢ ﻳﻨﺘﻈﺮﻭﻧﻚ ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ، ﻭاﻟﻨﺎﺱ ﻋﻜﻮﻑ ﻓﻲ اﻟﻤﺴﺠﺪ، ﻳﻨﺘﻈﺮﻭﻥ اﻟﻨﺒﻲ ﻋﻠﻴﻪ اﻟﺴﻼﻡ ﻟﺼﻼﺓ اﻟﻌﺸﺎء اﻵﺧﺮﺓ، ﻓﺄﺭﺳﻞ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺇﻟﻰ ﺃﺑﻲ ﺑﻜﺮ ﺑﺄﻥ ﻳﺼﻠﻲ ﺑﺎﻟﻨﺎﺱ، ﻓﺄﺗﺎﻩ اﻟﺮﺳﻮﻝ ﻓﻘﺎﻝ: ﺇﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﺄﻣﺮﻙ ﺃﻥ ﺗﺼﻠﻲ ﺑﺎﻟﻨﺎﺱ، ﻓﻘﺎﻝ ﺃﺑﻮ ﺑﻜﺮ - ﻭﻛﺎﻥ ﺭﺟﻼ ﺭﻗﻴﻘﺎ -: ﻳﺎ ﻋﻤﺮ ﺻﻞ ﺑﺎﻟﻨﺎﺱ، ﻓﻘﺎﻝ ﻟﻪ ﻋﻤﺮ: ﺃﻧﺖ ﺃﺣﻖ ﺑﺬﻟﻚ، ﻓﺼﻠﻰ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﺗﻠﻚ اﻷﻳﺎﻡ، ﺛﻢ ﺇﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭﺟﺪ ﻣﻦ ﻧﻔﺴﻪ ﺧﻔﺔ، ﻓﺨﺮﺝ ﺑﻴﻦ ﺭﺟﻠﻴﻦ ﺃﺣﺪﻫﻤﺎ اﻟﻌﺒﺎﺱ ﻟﺼﻼﺓ اﻟﻈﻬﺮ ﻭﺃﺑﻮ ﺑﻜﺮ ﻳﺼﻠﻲ ﺑﺎﻟﻨﺎﺱ، ﻓﻠﻤﺎ ﺭﺁﻩ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﺫﻫﺐ ﻟﻴﺘﺄﺧﺮ، ﻓﺄﻭﻣﺄ ﺇﻟﻴﻪ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﺄﻥ ﻻ ﻳﺘﺄﺧﺮ، ﻗﺎﻝ: ﺃﺟﻠﺴﺎﻧﻲ ﺇﻟﻰ ﺟﻨﺒﻪ، ﻓﺄﺟﻠﺴﺎﻩ ﺇﻟﻰ ﺟﻨﺐ ﺃﺑﻲ ﺑﻜﺮ، ﻗﺎﻝ: ﻓﺠﻌﻞ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﻳﺼﻠﻲ ﻭﻫﻮ ﻳﺄﺗﻢ ﺑﺼﻼﺓ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻭاﻟﻨﺎﺱ ﺑﺼﻼﺓ ﺃﺑﻲ ﺑﻜﺮ، ﻭاﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻋﺪ، ﻗﺎﻝ ﻋﺒﻴﺪ اﻟﻠﻪ: ﻓﺪﺧﻠﺖ ﻋﻠﻰ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻋﺒﺎﺱ ﻓﻘﻠﺖ ﻟﻪ: ﺃﻻ ﺃﻋﺮﺽ ﻋﻠﻴﻚ ﻣﺎ ﺣﺪﺛﺘﻨﻲ ﻋﺎﺋﺸﺔ ﻋﻦ ﻣﺮﺽ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻗﺎﻝ: ﻫﺎﺕ، ﻓﻌﺮﺿﺖ ﻋﻠﻴﻪ ﺣﺪﻳﺜﻬﺎ، ﻓﻤﺎ ﺃﻧﻜﺮ ﻣﻨﻪ ﺷﻴﺌﺎ ﻏﻴﺮ ﺃﻧﻪ ﻗﺎﻝ: ﺃﺳﻤﺖ ﻟﻚ اﻟﺮﺟﻞ اﻟﺬﻱ ﻛﺎﻥ ﻣﻊ اﻟﻌﺒﺎﺱ ﻗﻠﺖ: ﻻ، ﻗﺎﻝ: ﻫﻮ ﻋﻠﻲ ﺑﻦ ﺃﺑﻲ ﻃﺎﻟﺐ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ*

*🎙உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:*

_*🍃நான் ஆயிஷா (ரலி) அவர்கüடம் சென்று, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்திமக் காலத்தில்) நோய்வாய்ப்பட்டிருந்தது பற்றி எனக்கு நீங்கள் கூறக் கூடாதா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம் (கூறுகிறேன்). நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையானபோது, "மக்கள் தொழுதுவிட்டனரா❓'' என்று கேட்டார்கள். நாங்கள், "இல்லை, அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்று கூறினோம். அப்போது தண்ணீர் தொட்டியில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம். அவர்கள் (அதில்) குளித்துவிட்டு எழ முயன்றார்கள். அப்போது (எழ முடியாமல்) மயக்கமுற்றுவிட்டார்கள்.*_

_*பின்னர் அவர்கüன் மயக்கம் தெüந்தபோது, "மக்கள் தொழுதுவிட்டனரா❓'' என்று கேட்டார்கள். நாங்கள், "இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், அல்லாஹ்வின் தூதரே!'' என்று சொன்னோம். அப்போது "தண்ணீர் தொட்டியில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள்'' என்றார்கள். (அவ்வாறே நாங்கள் வைத்தபோது) அவர்கள் உட்கார்ந்து குüத்தார்கள். பிறகு அவர்கள் எழ முற்பட்டபோது (எழ முடியாமல்) மயக்கமுற்றுவிட்டார்கள்.*_

_*பின்னர் மயக்கம் தெளிந்தபோது, "மக்கள் தொழுதுவிட்டனரா❓'' என்று (மீண்டும்) கேட்டார்கள். நாங்கள் "இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்'' என்று கூறினோம். அப்போது "தண்ணீர் தொட்டியில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள்'' என்று கூறினார்கள். (நாங்கள் தண்ணீர் வைத்தோம்.) அவர்கள் உட்கார்ந்து குüத்தார்கள். பிறகு அவர்கள் எழ முற்பட்டபோது (எழ முடியாமல் மீண்டும்) மயக்கமுற்றுவிட்டார்கள்.*_

_*🍃பின்னர் அவர்கள் மயக்கம் தெளிந்தபோது (அப்போதும்,) "மக்கள் தொழுதுவிட்டனரா❓'' என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், "இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அல்லாஹ்வின் தூதரே!'' என்றோம். அப்போது மக்கள் இஷாத் தொழுகைக்காக நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்தபடி பள்ளிவாசலில் வீற்றிருந்தனர். ஆகவே நபி (ஸல்) அவர்கள் (தூதர் ஒருவரை) அனுப்பி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறினார்கள். அந்தத் தூதுவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உங்களைப் பணிக்கிறார்கள்'' என்று கூறினர்.*_

*அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் - அன்னார் (அதிகமாகத் துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடையவர் - "உமரே! நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று (உமர் அவர்களிடம்) கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "இதற்கு நீங்கள்தாம் என்னைவிட தகுதியுடையவர்'' என்று அபூபக்ர் (ரலி)* *அவர்களிடம் கூறிவிட்டார்கள்.* *ஆகவே அபூபக்ர்*
*(ரலி) அவர்கள் (நபியவர்கள் நோயுற்றிருந்த) அந்த நாட்களில் (மக்களுக்கு இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள். பின்னர் (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் தமது நோய் சுற்றுக் குறைந்திருக்கக் கண்டபோது இரண்டு பேரிடையே (அவர்களைக் கைத்தாங்கலாக்கிக் கொண்டு) லுஹ்ர் தொழுகைக்காகப் புறப்பட்டு வந்தார்கள். அந்த இரண்டு பேரில் அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒருவராவார். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் பின் வாங்கிட முயன்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் பின் வாங்க வேண்டாமென அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்தார்கள். (தம்மை அழைத்து வந்த இருவரிடமும்) "என்னை அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் உட்கார வையுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பக்கவாட்டில் அமர்த்தினர். அப்போது மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழத் துவங்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் உட்கார்ந்து தொழுதுகொண்டிருந்த நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள்.*

*📚நூல்: புகாரி (687)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment