பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Wednesday, July 10, 2019

நன்மைகளை - 48

_*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*_

_*✍🏼...நன்மைகளை வாரி*_
                          ⤵
         _*வழங்கும் தொழுகை*_

         _*✍🏼...தொடர் [ 48 ]*_

*☄சூரத்துல் ஃபாத்திஹா*
          *ஓதுவதன் சிறப்புகள் [ 01 ]*

*🏮🍂தொழுகையாளிகள் ஒவ்வொரு ரக்அத்திலும் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதுகின்ற பாக்கியத்தைப் பெறுகின்றார்கள்.*

*சூரத்துல் ஃபாத்திஹா தொழுகைக்கு மிகவும் அவசியமானதாகும்.*

_*عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، يَبْلُغُ بِهِ  النَّبِيَّ صلى الله عليه وسلم ‏"‏ لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ ‏"*_

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனின் தோற்றுவாய் (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை.*_

*🎙அறிவிப்பவர்:  உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)*

*📚நூல்: முஸ்லிம் 651📚*

*🏮🍂தொழுகையில் ஓதவேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட சூரத்துல் ஃபாத்திஹாவிற்கு ஏராளமான சிறப்புகளை நபியவர்கள் கூறியுள்ளார்கள்.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄மகத்தான குர்ஆன்☄*

*சூரத்துல் ஃபாத்திஹாவிற்கு பல்வேறு பெயர்களை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.*

*🏮🍂மகத்தான குர்ஆன் என்பதும், திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் என்பதும்  அல்ஹம்து சூராவிற்குரிய பெயர்களில் உள்ளதாகும்.*

*அல்லாஹ் தனது திருமறைக் குர்ஆனில் அல்ஹம்து சூராவை மிகவும் சிறப்பித்துக் கூறுகின்றான்.*

_*وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِّنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ*_

_*🍃(முஹம்மதே!) திரும்பத் திரும்ப ஓதப்படும் (வசனங்கள்) ஏழையும் மகத்தான குர்ஆனையும் உமக்கு வழங்கினோம்.*_

*📖அல்குர்ஆன் 15:87📖*

ﺣﺪﺛﻨﺎ ﻣﺴﺪﺩ، ﺣﺪﺛﻨﺎ ﻳﺤﻴﻰ، ﻋﻦ ﺷﻌﺒﺔ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﻲ ﺧﺒﻴﺐ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ، ﻋﻦ ﺣﻔﺺ ﺑﻦ ﻋﺎﺻﻢ، _*ﻋﻦ ﺃﺑﻲ ﺳﻌﻴﺪ ﺑﻦ اﻟﻤﻌﻠﻰ، ﻗﺎﻝ: ﻛﻨﺖ ﺃﺻﻠﻲ ﻓﻲ اﻟﻤﺴﺠﺪ، ﻓﺪﻋﺎﻧﻲ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻠﻢ ﺃﺟﺒﻪ، ﻓﻘﻠﺖ: ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ، ﺇﻧﻲ ﻛﻨﺖ ﺃﺻﻠﻲ، ﻓﻘﺎﻝ: " ﺃﻟﻢ ﻳﻘﻞ اﻟﻠﻪ: {اﺳﺘﺠﻴﺒﻮا ﻟﻠﻪ ﻭﻟﻠﺮﺳﻮﻝ ﺇﺫا ﺩﻋﺎﻛﻢ ﻟﻤﺎ ﻳﺤﻴﻴﻜﻢ} [اﻷﻧﻔﺎﻝ: 24]. ﺛﻢ ﻗﺎﻝ ﻟﻲ: «ﻷﻋﻠﻤﻨﻚ ﺳﻮﺭﺓ ﻫﻲ ﺃﻋﻈﻢ اﻟﺴﻮﺭ ﻓﻲ اﻟﻘﺮﺁﻥ، ﻗﺒﻞ ﺃﻥ ﺗﺨﺮﺝ ﻣﻦ اﻟﻤﺴﺠﺪ». ﺛﻢ ﺃﺧﺬ ﺑﻴﺪﻱ، ﻓﻠﻤﺎ ﺃﺭاﺩ ﺃﻥ ﻳﺨﺮﺝ، ﻗﻠﺖ ﻟﻪ: «ﺃﻟﻢ ﺗﻘﻞ ﻷﻋﻠﻤﻨﻚ ﺳﻮﺭﺓ ﻫﻲ ﺃﻋﻈﻢ ﺳﻮﺭﺓ ﻓﻲ اﻟﻘﺮﺁﻥ»، ﻗﺎﻝ: {اﻟﺤﻤﺪ ﻟﻠﻪ ﺭﺏ اﻟﻌﺎﻟﻤﻴﻦ} [اﻟﻔﺎﺗﺤﺔ: 2] «ﻫﻲ اﻟﺴﺒﻊ اﻟﻤﺜﺎﻧﻲ، ﻭاﻟﻘﺮﺁﻥ اﻟﻌﻈﻴﻢ اﻟﺬﻱ ﺃﻭﺗﻴﺘﻪ*_

_*🍃அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் (தொழுது முடித்த பின்), "அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்த போது) நான் தொழுது கொண்டிருந்தேன்'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம், இறைத்தூதர் உங்களை அழைக்கும் போது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள் என்று (8:24ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா?'' என்று கேட்டார்கள். பிறகு என்னிடம், "குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நீ பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன்'' என்று சொன்னார்கள். பிறகு என் கையைப் பிடித்துக் கொண்டார்கள்.*

_*அவர்கள் வெளியே செல்ல முனைந்த போது நான் அவர்களிடம், "நீங்கள் குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவ மிக்க ஓர் அத்தியாயத்தை நான் உனக்குக் கற்றுத் தருகிறேன்' என்று சொல்லவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அது அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்' (என்று தொடங்கும் அல்ஃபாத்திஹா' அத்தியாயம்) தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஸ்ஸப்உல் மஸானீ) ஆகும். எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆன் ஆகும் என்று சொன்னார்கள்.*_

*📚நூல்: புகாரி 4474📚*

*🏮🍂அல்லாஹ்வாலும், அல்லாஹ்வின் தூதராலும் மிகவும் சிறப்பித்துக் கூறப்பட்ட அல்ஹம்து அத்தியாயத்தை ஓதும் பாக்கியம் ஒவ்வொரு ரக்அத்துகளிலும் தொழுகையாளிகளுக்குக் கிடைக்கிறது.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                            ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment