பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Thursday, June 26, 2014

நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டுமா?

நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டுமா?

குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் இவ்விரண்டு மட்டுமே இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரம் என்பது நமது ஜமாத்தின் கொள்கை. நம்மைத் தவிர மற்ற அமைப்பினர்களும் பெரும்பாலான முஸ்லிம்களும் நபித்தோழர்களின் கூற்றுக்களும் மார்க்க ஆதாரங்கள் என்று நம்புகின்றனர்.
இதற்கு இவர்கள் ஆதாரம் என்று கருதிக்கொண்டு சில குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் கூறுகின்றனர். இவர்கள் எடுத்துக்காட்டும் ஹதீஸ்களில் சில பலவீனமாக உள்ளது. சில ஹதீஸ்கள் சரியாக இருந்தாலும் இவர்கள் எந்தக் கருத்தை கூறுகிறார்களோ அந்தக் கருத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் இருக்கின்றன.
இந்தக் கட்டுரையில் இவர்களின் தவறான கொள்கைக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்களைப் பற்றியும் அவற்றின் உண்மையான கருத்து எது என்பதைப் பற்றியும் அறிந்துகொள்ள இருக்கின்றோம்.
முஃமின்களின் பாதை
நேரவழி தனக்குத் தெளிவான பின் இத்தூதருக்கு மாறுசெய்து நம்பிக்கை கொண்டோரின் வழியல்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம். நரகத்திலும் அவரை நுழையச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது. 
(அல்குர்ஆன் 4:115)
நம்பிக்கை கொண்டோரின் வழியல்லாத வேறு வழியைப் பின்பற்றுபவன் நரகம் செல்வான் என்ற இந்த வசனத்தை எடுத்து வைத்து, இந்த வசனத்தில் நம்பிக்கை கொண்டோர்  என்று அல்லாஹ் நபித்தோழர்களைக் குறிப்பிடுகிறான். அவர்களின் வழி அல்லாத வேறு வழியை பின்பற்றக்கூடாது என்றும் கூறுகிறான். எனவே சஹாபாக்களின் வழியைப் பின்பற்றுவது அவசியம் என்று வாதிடுகின்றனர்.
முதலில் இந்த வசனத்தில் சஹாபாக்களின் வழியைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்லப்படவில்லை. முஃமின்களின் வழி என்று தான் சொல்லப்படுகின்றது. எனவே இவர்கள் இதிலிருந்து வாதம் வைப்பதாக இருந்தால் நபித்தோழர் உட்பட அவர்களுக்குப் பின்னால் வந்த இறைநம்பிக்கையாளர்கள் அனைவரையும் பின்பற்ற வேண்டும் என்று தான் கூற வேண்டும்.
குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்ற வேண்டிய ஒரு முஸ்லிம்  மற்ற முஸ்லிம்களைப் பின்பற்றினால் அவன் கடைப்பிடிப்பது எப்படி இஸ்லாமாக இருக்கும்? இதனால் இஸ்லாம் அல்லாஹ்வுடைய மார்க்கம் என்ற சிறப்பை இழந்து மனிதர்களின் கற்பனைக் கதையாகிவிடும். ஆனால் அல்லாஹ் இந்த மார்க்கத்திற்கு இந்த நிலை ஏற்படாமல் தூய்மையானதாகவே பாதுகாப்பான். எனவே இந்த வசனத்தில் இவர்கள் கூறுகின்ற கருத்து தவறானதும் மிக ஆபத்தானதுமாகும்.
மேலும் இஸ்லாமிய சமுதாயத்தில் பல வகையான கொள்கை முரண்பாடுகளால் முஸ்லிம்கள் பல கூட்டங்களாகப் பிரிந்துள்ளனர். இவர்கள் சொல்வதைப் போல் பிற முஸ்லிம்களைப் பின்பற்ற வேண்டும் என்றால் ஒரு முஸ்லிம் இந்தக் கூட்டங்களில் எந்தக் கூட்டத்தைப் பின்பற்ற வேண்டும்? எந்த முஃமினைப் பின்பற்ற வேண்டும்? 
இந்த வசனம் சஹாபாக்களின் வழியை நாம் பின்பற்ற வேண்டும் என்று கூறுவதாக சொல்பவர்கள் இந்த வசனம் நபித்தோழர்களுக்கு அருளப்படாமல் அவர்களுக்குப் பின்னால் வந்த மக்களுக்கு மட்டும் அருளப்பட்டதைப் போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.
முஃமின்களின் வழியைப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டளை நபித்தோழர்கள் உட்பட கியாமத் நாள் வரை வரும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரியது. இஸ்லாமிய வரலாற்றில் இந்தக் கட்டளை முதன் முதலில் நபித்தோழர்களுக்கே இடப்பட்டது.
நபித்தோழர்கள் முஃமின்களின் வழியைப் பின்பற்ற வேண்டும் என்றால் அவர்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எந்த முஃமினைப் பின்பற்றினார்கள்? நபித்தோழர்கள் குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களையும் தவிர வேறு எதையும் பின்பற்றவில்லை. எனவே இவர்கள் கூறும் கருத்தை இவ்வசனம் தரவில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்
முஃமின்களின் வழி எது?
இந்த வசனத்தை நன்கு கவனித்தால் அது கூற வரும் பொருளை எளிதாக விளங்கிக்கொள்ள முடியும்.
நேர்வழி தனக்குத் தெளிவான பின் இத்தூதருக்கு மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியல்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம். நரகத்திலும் அவரை நுழையச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது. 
(அல்குர்ஆன் 4:115)
இந்த வசனத்தில் நம்பிக்கை கொண்டோரின் வழியைப் பின்பற்ற வேண்டும் என்று நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களைப் பார்த்து அல்லாஹ் உத்தரவிடவில்லை. மாறாக இஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் காபிர் நம்பிக்கைக் கொண்டோரின் வழியில் செல்லாவிட்டால் நரகம் செல்வான் என்றுதான் கூறுகிறான்.
மேலும் இந்த வசனத்தில் அல்லாஹ் நம்பிக்கை கொண்டோரைப் பின்பற்ற வேண்டும் என்று கூறவில்லை. மாறாக நம்பிக்கை கொண்டோரின் வழியைப் பின்பற்றுமாறுதான் கூறுகிறான்.
பின்பற்றப்பட வேண்டியது முஃமின்களின் வழி என்பதும் காபிராக இருப்பவன் அந்த முஃமின்களின் வழியைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. முஃமின்கள் எந்த வழியில் சென்றதால் நம்பிக்கை கொண்டவர்களாக ஆனார்களோ, அதே வழியில் இவனும் சென்று முஃமினாக மாற வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டிய வழியே முஃமின்களின் வழி. அவ்வழியில் செல்பவனே முஃமினாக இருப்பான். இவ்விரண்டையும் விட்டுவிட்டு தன் விருப்பப்படி செல்பவன் காபிர் ஆவான். அது வழிகெட்ட யூத நஸ்ராக்களின்  வழியாகும்.
அல்ஹம்து சூராவில் நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்களின் வழியை எங்களுக்கு காட்டுவாயாக என்று பிரார்த்திக்குமாறு அல்லாஹ் நமக்கு கற்றுத்தருகிறான். எந்த வழியில் சென்றால் அல்லாஹ்வின் அருளைப் பெற முடியும் என்பதை அல்லாஹ் நமக்கு முன் சென்றவர்களுக்குக் காண்பித்தான். அதை அவர்கள் கடைப்பிடித்து அல்லாஹ்வின் அருளைப் பெற்றார்கள்.
அல்லாஹ் காட்டாத வழியை தாங்களாக யூதர்களும் கிரிஸ்தவர்களும் புதிதாக உருவாக்கினார்கள். எனவே அவர்கள் வழிகெட்டு அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள். இவர்களின் வழியை எங்களுக்கு காட்டாமல் உன் அருளைப் பெற்றவர்களின் வழியை எங்களுக்கும் காட்டுவாயாக என்று பிரார்த்தனை செய்யுமாறு அல்லாஹ் கூறுகிறான்.
எங்களுக்கு முன் சென்றவர்களுக்கு எவ்வாறு நீ நல்வழி காட்டி அவர்களுக்கு உன் அருளை வழங்கினாயோ அது போன்று எங்களையும் உன் வழியில் செலுத்தி உன் அருளை வழங்குவாயாக என்பதே இதன் விளக்கம். கடைப்பிடிப்பது அல்லாஹ் காட்டிய வழியே தவிர மனிதர்கள் உருவாக்கிய புதிய வழி அல்ல. புதிய வழியை உருவாக்கிய காரணத்தால் தான் யூத கிரிஸ்தவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.
இதேப் போன்று தான் முஃமின்களின் வழி அல்லாத வேறு வழியில் செல்லக்கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டாத மூன்றாவது ஒரு வழியைப் பின்பற்ற வேண்டும் என்று வாதிடுவது தவறு. அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழதான் முஃமின்களின் வழி. இதைத் தவிர்த்து முஃமின்களுக்கென்று தனி ஒரு வழி கிடையாது. அப்படியொரு வழியில் சென்றால் அவன் சரியான முஃமினாக இருக்க முடியாது.
முஃமின்களின் வழி என்றால் முஃமின்கள் புதிதாக உருவாக்கும் வழி என்பது தவறு. முஃமின்கள் செல்ல வேண்டிய வழி என்பதே சரியான பொருள். நம்பிக்கை கொண்டோர் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை குர்ஆனின் பல இடங்களில் தெளிவு படுத்தியுள்ளான். இதுவே முஃமின்களின் வழியாகும்.
அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது "செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
(அல்குர்ஆன் 24:51)
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். 
(அல்குர்ஆன் 33:36)
(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
அல்குர்ஆன் (4 : 65)
மேற்கூறப்பட்ட வசனங்கள் முஃமின்களின் வழி எது என்பதைத் தெளிவாக விளக்குகின்றன. எனவே முஃமின்கள் செல்ல வேண்டிய பாதையான குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்றே அல்லாஹ் கூறுகிறான்.
இவர்களின் வாதத்தை முழுமையாகத் தகர்க்கும் வகையில் உள்ள இந்த வசனத்தையே இவர்களின் வழிகெட்ட கொள்கைக்கு ஆதாரமாக காட்டுவது நமக்கு ஆச்சரியமாகவே உள்ளது.
நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழியைப் பின்பற்ற வேண்டுமா?
நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்பவர்கள் பின்வரும் நபிமொழியையும் ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்.
2600حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو السُّلَمِيِّ عَنْ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ قَالَ وَعَظَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا بَعْدَ صَلَاةِ الْغَدَاةِ مَوْعِظَةً بَلِيغَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ فَقَالَ رَجُلٌ إِنَّ هَذِهِ مَوْعِظَةُ مُوَدِّعٍ فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ أُوصِيكُمْ بِتَقْوَى اللَّهِ وَالسَّمْعِ وَالطَّاعَةِ وَإِنْ عَبْدٌ حَبَشِيٌّ فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ يَرَى اخْتِلَافًا كَثِيرًا وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ فَإِنَّهَا ضَلَالَةٌ فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ فَعَلَيْهِ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ رواه الترمذي
அபூ நஜீஹ் இர்பாள் பின் சாரியா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உருக்கமான உரையை ஆற்றினார்கள். அதைக் கேட்டால் உள்ளங்கள் நடுங்கும். கண்களில் கண்ணீர் வரும். நாங்கள் அல்லாஹ்வின் தூதரே இது பிரியக்கூடியவர் ஆற்றும் உரையைப் போன்று இருக்கின்றதே? எனவே எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள் என்று கேட்டோம். அப்போது அவர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சுவதையும் அபிசீனிய அடிமை உங்களுக்கு தலைவரானாலும் நீங்கள் செவியேற்று கட்டுப்படுவதையும் உங்களுக்கு நான் வலிறுத்துகிறேன். உங்களில் (எனக்குப் பின்பு) வாழ்பவர் அதிகமான வேறுபாடுகளை காண்பார். அப்போது நீங்கள் எனது வழியையும் நேர்வழிகாட்டப்பட்டு நேர்வழியில் செல்லும் ஆட்சியாளர்களின் வழியையும் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள். கடவாய் பற்களால் அதை (வலுவாக) பிடித்துக்கொள்ளுங்கள். புதுமையான விசயங்களை விட்டும் உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனென்றால் ஒவ்வொரு புதுமையும் வழிகேடாகும். 
நூல் : திர்மிதீ (2676) அபூதாவுத் (4607)
நேர்வழி பெற்ற ஆட்சியாளர்களின் வழியைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஆட்சி செய்த அபூபக்ர் (ரலி). உமர் (ரலி). உஸ்மான் (ரலி). அலீ (ரலி) ஆகிய நான்கு கலீபாக்களை மார்க்க விசயத்தில் பின்பற்ற வேண்டும் என்று கூறுகின்றனர்.
இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது என்றாலும் இவர்களின் வாதத்திற்கும் இந்தச் செய்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இவர்கள் கூறும் கருத்தை நிராகரிக்கும் வகையில் தான் இந்த நபிமொழி அமைந்துள்ளது.
இவர்கள் தங்கள் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் இவர்கள் குறிப்பிடுகின்ற நான்கு சஹாபாக்களை மட்டுமே பின்பற்ற வேண்டும். மற்ற யாரையும் பின்பற்றக்கூடாது. ஆனால் இவர்கள் இந்த நான்கு சஹாபாக்கள் அல்லாத மற்ற நபித்தோழர்களையும் ஏன் நபித்தோழர்களல்லாத தாபியீன்கள் இமாம்கள் ஊர் பெரியார்கள் என்று கணக்கு வழக்கில்லாமல் பின்பற்றுகின்றனர். பின்பற்ற வேண்டும் என்று கூறுகின்றனர்.
இதற்கு மேற்கண்ட செய்தி போதிய ஆதாரமாக ஆகாது என்றாலும் இதை ஆதாரமாக இவர்கள் குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் உள்ளது. குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற கருத்தைத் தகர்ப்பதற்கு இந்தச் செய்தி உதவும் என்று நம்புகின்றனர்.
இந்த நபிமொழியும் இவர்களின் வாதத்தை தவிடுபொடியாக்கக்கூடிய விதத்தில்தான் அமைந்துள்ளது. தங்களுக்குச் சாதகமான ஆதாரம் என்று நினைத்துக்கொண்டு தங்களுக்கு எதிரான ஆதாரத்தையே கூறியுள்ளனர்.
இந்த ஹதீஸில் இவர்கள் வைக்கும் வாதம் பல காரணங்களால் தவறாகும். அந்தக் காரணங்களை ஒவ்வொன்றாக அறிந்து கொள்வோம்.
நான்கு கலீபாக்களை மட்டுமா பின்பற்ற வேண்டும்?
இந்த ஹதீஸில் எனது வழிமுறையையும் நேர்வழிபெற்ற கலிபாக்களின் வழி முறையையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். நான்கு கலிபாக்களின் வழிமுறைகளை என்று கூறவில்லை.
குலபாய ராஷிதீன்கள் என்று கூறப்படுவது அபுபக்ர் (ரலி), உமர் (ரலி). உஸ்மான் (ரலி), அலி (ரலி) ஆகிய நால்வர் தான் என்று ஒரு வியாக்கியானத்தைக் கொடுக்கிறார்கள். அது தவறு, நேர்வழி பெற்ற கலீபாக்கள் என்போர் இந்த நால்வர் தான் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடவில்லை.
நபி (ஸல்) அவர்கள் தனக்குப் பிறகு 12 நேர்வழி பெற்ற ஆட்சியாளர்கள் தோன்றுவார்கள் என்றும் கூறினார்கள்.
7223 حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَبْدِ الْمَلِكِ سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَكُونُ اثْنَا عَشَرَ أَمِيرًا فَقَالَ كَلِمَةً لَمْ أَسْمَعْهَا فَقَالَ أَبِي إِنَّهُ قَالَ كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ رواه البخاري
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், "பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வருவார்கள்'' என்று சொல்ல நான் கேட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், நான் (சரிவரக்) கேட்காத ஒரு சொல்லையும் சொன்னார்கள். (அது என்னவென்று விசாரித்த போது) என் தந்தை (சமுரா-ரலி) அவர்கள்,  "அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் எனக் கூறினார்கள்.
நூல் : புகாரி (7223)
நபி (ஸல்) அவர்கள் உருவாக்கிய ஆட்சி அமைப்பின் அடிப்படையில் அந்தப் பன்னிரென்டு பேரும் ஆட்சி செய்வார்கள் என்று முஸ்லிமில் இடம்பெற்றுள்ள அறிவிப்பு கூறுகின்றது.
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், "பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் மக்களை ஆளும்வரை இந்த ஆட்சியமைப்பு நீடிக்கும்'' என்று சொல்லக் கேட்டேன்.
முஸ்லிம் (3719)
இந்த ஆட்சியாளர்களின் காலத்தில் இஸ்லாம் வலிமையோடும் பாதுகாப்போடும் இருக்கும் எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
            ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் என் தந்தை (சமுரா -ரலி) அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த மார்க்கம், பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள்வரை வலிமையானதாகவும் பாதுகாப்போடும் இருந்துவரும்'' என்று சொல்லக் கேட்டேன்.
முஸ்லிம் (3722)
எனவே நேர்வழிபெற்ற ஆட்சியாளர்களைப் பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிட்ட முதல் நான்கு கலீபாக்களை மட்டும் குறிக்காது. நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு வந்த 12 ஆட்சித் தலைவர்களையும் குறிக்கும்.
அந்த பன்னிருவரின் பெயர் பட்டியல் கூட இருக்கிறது.
அபுபக்கர் அடுத்து உமர், மூன்றாவது உஸ்மான், நான்காவது அலி, ஐந்தாவது அப்துல்லாஹ் இப்னு சுபைர், ஆறாவது அப்து மலிக் இப்னுல் மர்வான், ஏழாவது அல் வலிது இப்னு அப்துல் மலிக், எட்டாவது ஸுலைமான் பின் அப்துல் மலிக், ஒன்பதாவது உமர் பின் அப்துல் அஜீஸ், பத்தாவது யஸீது இப்னு அப்துல் மலிக், பதினொன்றாவது ஹிசான் இப்னு அப்துல் மலிக், பன்னிரெண்டாவது வலிது இப்னு யஸிது இப்னு அப்துல் மலிக்
முஆவியாவை விட்டு விடுவார்கள். முஆவியாவும் ஒரு வகையில் நல்லாட்சி செய்பவராகத்தான் இருந்தார். அவரைச் சேர்த்துக் கொண்டால் கடைசியாக உள்ள ஒரு நபரைக் கழித்துக் கொள்ள வேண்டும்.
இந்தப் பன்னிரெண்டு பேரில் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர், உமர் இப்னு அப்து அஜீஸ் முதல்  நான்கு கலிபாக்கள் இவர்களைத் தவிர்த்து பார்த்தால் மீதமுள்ள ஆறு பேரும் மார்க்கத்திற்கு மாற்றமான நிறைய தவறுகளைச் செய்திருக்கிறார்கள்.
இவர்களின் வாதப்படி இந்த 12 கலீபாக்களையும் மார்க்க விசயத்தில் பின்பற்ற வேண்டும் என்று கூற வேண்டும். ஆனால் இவர்கள் அவ்வாறு கூறுவதில்லை. முதல் நான்கு கலீபாக்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்கின்றனர்.
எனவே இவர்கள் கூற வரும் கருத்திற்கும் இவர்கள் காட்டும் செய்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம். நபி (ஸல்) அவர்கள் இந்த கலீபாக்களை பின்பற்றச் சொன்னது இவர்கள் சொன்ன அர்த்தத்தில் அல்ல. வேறு பொருளில் என்பதையும் உணர முடியும். அதன் விளக்கத்தை அறிந்துகொள்வோம்.
மார்க்க விசயத்தில் பின்பற்றக் கூடாது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உருக்கமான உரையை ஆற்றினார்கள். அதைக் கேட்டால் உள்ளங்கள் நடுங்கும். கண்களில் கண்ணீர் வரும். நாங்கள் அல்லாஹ்வின் தூதரே இது பிரியக்கூடியவர் ஆற்றும் உரையைப் போன்று இருக்கின்றதே? எனவே எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள் என்று கேட்டோம். அப்போது அவர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சுவதையும் அபிசீனிய அடிமை உங்களுக்கு தலைவரானாலும் நீங்கள் செவியேற்று கட்டுப்படுவதையும் உங்களுக்கு நான் வலிறுத்துகிறேன். உங்களில் (எனக்குப் பின்பு) வாழ்பவர் அதிகமான வேறுபாடுகளை காண்பார். அப்போது நீங்கள் எனது வழியையும் நேர்வழிகாட்டப்பட்டு நேர்வழியில் செல்லும் ஆட்சியாளர்களின் வழியையும் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள். கடவாய் பற்களால் அதை (வலுவாக) பிடித்துக்கொள்ளுங்கள். புதுமையான விசயங்களை விட்டும் உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனென்றால் ஒவ்வொரு புதுமையும் வழிகேடாகும். 
நூல் : திர்மிதீ (2676) அபூதாவுத் (4607)
நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் வழிமுறையைப் பற்றிப் பிடிக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது மார்க்க விசயத்தில் அவர்கள் என்ன சொன்னாலும் அதைக் கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் சொல்லவில்லை.
மார்க்க விசயத்தில் பின்பற்றுவதற்கு நபி (ஸல்) அவர்களின் வழி நமக்கு இருக்கின்றது. அந்த வழிகாட்டல் கியாமத் நாள் வரை முஸ்லிம்களுக்குக் கிடைக்கக்கூடியது. மார்க்க சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு இந்த சுன்னத்திலே இருக்கின்றது. எனவே தான் நபி (ஸல்) அவர்கள் என்னுடைய சுன்னத்தைப் பற்றிப்பிடியுங்கள் என்று முதலாவது குறிப்பிடுகிறார்கள். 
நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வருவார்கள். இவர்கள் சமுதாயத்தின் நன்மை கருதி எடுக்கும் உலக சம்பந்தமான முடிவுகளுக்கு மக்கள் கட்டுப்பட வேண்டும். சிறு சிறு பிரச்சனைகளை கையில் எடுத்துக்கொண்டு இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளம்பினால் நாட்டில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த முடியாது. சமுதாயத்தின் கட்டமைப்பும் பாதுகாப்பும் சீர் குலைந்து போய்விடும். எனவேதான் நபி (ஸல்) அவர்கள் மார்க்க விசயத்தில் தன்னைப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டளையுடன் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கும் கட்டுப்பட வேண்டும் என்றும் போதிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் குறிபிட்ட நான்கு சஹாபாக்களை மட்டும் சொல்லாமல் தனக்குப் பிறகு வரும் 12 கலீபாக்கள் குறித்தும் அவர்களின் வழியைக் கடைப்பிடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்கள். மார்க்க விசயத்தில் 12 கலீபாக்களையும் பின்பற்ற வேண்டும் என்று யாரும் சொல்வதில்லை.
மேலும் கறுப்பு நிற அடிமை உங்களுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டாலும் கட்டுப்பட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். கறுப்பு நிற அடிமையாக இருந்தாலும் மார்க்க விசயத்தில் கட்டுப்பட முடியுமா? இந்த வாசகம் நபி (ஸல்) அவர்களின் இந்த உத்தரவு மார்க்க விசயத்திற்கு பொருந்தாது என்பதைக் காட்டுகிறது.
நபி (ஸல்) அவர்கள் தனக்குப் பின்னால் நீங்கள் அதிகமான கருத்து வேறுபாடுகளைக் காண்பீர்கள் என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு வந்த அதிகமான குழப்பங்கள் ஆட்சி விசயத்தில்தான் ஏற்பட்டது. ஆட்சி விவாகரத்தில் எனக்குப் பின்னால் பிரச்சனைகள் வரும் அப்போது பிரச்சனைகளில் ஈடுபடாமல் இஸ்லாமிய ஆட்சித் தலைவருக்கு கட்டுப்படுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்வரும் அறிவிப்பு இந்தக் கருத்தை தெளிவாக எடுத்துரைக்கின்றது.
95أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ أَخْبَرَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ حَدَّثَنِي خَالِدُ بْنُ مَعْدَانَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو عَنْ عِرْبَاضِ بْنِ سَارِيَةَ قَالَ صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْفَجْرِ ثُمَّ وَعَظَنَا مَوْعِظَةً بَلِيغَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ فَقَالَ قَائِلٌ يَا رَسُولَ اللَّهِ كَأَنَّهَا مَوْعِظَةُ مُوَدِّعٍ فَأَوْصِنَا فَقَالَ أُوصِيكُمْ بِتَقْوَى اللَّهِ وَالسَّمْعِ وَالطَّاعَةِ وَإِنْ كَانَ عَبْدًا حَبَشِيًّا فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِي فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسَنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ وَإِيَّاكُمْ وَالْمُحْدَثَاتِ فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ و قَالَ أَبُو عَاصِمٍ مَرَّةً وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ فَإِنَّ كُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ رواه الدارمي
இறையச்சம் மற்றும் அபிசீனிய அடிமையானாலும் செவியுற்று கட்டுப்படுவது குறித்து உங்களுக்கு நான் வலியுறுத்துகிறேன். ஏனென்றால் எனக்குப் பின்னால் உங்களில் வாழ்பவர் அதிகமான கருத்து வேறுபாடுகளைக் காண்பார்.
நூல் : தாரமீ (95)
நபி (ஸல்) அவர்கள் இன்னொரு உதாரணத்தின் மூலம் ஆட்சியாளருக்குக் கட்டுப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள். பின்வரும் அறிவிப்பில் இதை அறியலாம்.
43حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ بِشْرِ بْنِ مَنْصُورٍ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ السَّوَّاقُ قَالَا حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ عَنْ ضَمْرَةَ بْنِ حَبِيبٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو السُّلَمِيِّ أَنَّهُ سَمِعَ الْعِرْبَاضَ بْنَ سَارِيَةَ يَقُولُ وَعَظَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَوْعِظَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذِهِ لَمَوْعِظَةُ مُوَدِّعٍ فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا قَالَ قَدْ تَرَكْتُكُمْ عَلَى الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا لَا يَزِيغُ عَنْهَا بَعْدِي إِلَّا هَالِكٌ مَنْ يَعِشْ مِنْكُمْ فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا فَعَلَيْكُمْ بِمَا عَرَفْتُمْ مِنْ سُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ وَعَلَيْكُمْ بِالطَّاعَةِ وَإِنْ عَبْدًا حَبَشِيًّا فَإِنَّمَا الْمُؤْمِنُ كَالْجَمَلِ الْأَنِفِ حَيْثُمَا قِيدَ انْقَادَ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ الصَّبَّاحِ الْمِسْمَعِيُّ حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو عَنْ الْعِرْبَاضِ بْنِ سارِيَةَ قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَوَعَظَنَا مَوْعِظَةً بَلِيغَةً فَذَكَرَ نَحْوَهُ رواه إبن ماجه
அபிசீனிய அடிமையானாலும் கட்டுப்படுங்கள். ஏனென்றால் இறைநம்பிக்கையாளன் கடிவாளம் இடப்பட்ட ஒட்டகத்தைப் போன்று இருப்பார். அந்த ஒட்டகம் இழுத்துச் செல்லப்பட்டால் அதற்குப் பணிந்து செல்கின்றது.                      நூல் : இப்னு மாஜா (43)
எங்கு இழுத்தாலும் அதற்குக் கட்டுப்பட்டுச் செல்லும் ஒட்டகத்தைப் போன்று இருக்க வேண்டும் என்ற உத்தரவு கண்டிப்பாக மார்க்க விசயத்தில் இருக்க முடியாது.
ஆட்சியாளர் மது குடிக்கவோ விபச்சாரம் செய்யவோ அல்லது மார்க்கத்திற்கு மாற்றமான காரியத்தைச் செய்யவோ சொன்னால் அப்போது அவர்களுக்குக் கட்டுப்பட முடியாது. மார்க்கம் வலியுறுத்திய தொழுகை போன்ற காரியங்களுக்குத் தடை விதித்தால் அதற்கும் கட்டுப்பட முடியாது. அதேபோன்று மார்க்கத்தில் இல்லாத ஒரு விசயத்தை மார்க்கம் என்று போதித்தால் இதுவும் மார்க்கத்திற்கு முரணான காரியம். இதற்கும் நாம் கட்டுப்படக் கூடாது.
எனவே நபி (ஸல்) அவர்கள் கலீபாக்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று கூறியது அவர்களை நாட்டின் தலைவராக ஏற்று நாட்டின் நலன் கருதி அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற அடிப்படையிலாகும். மேற்கண்ட  செய்தியின் வாசகங்களைக் கவனித்தால் இதை உறுதியாகப் புரிய முடியும்.
இந்தச் செய்தியில் புதுமையான விசயங்களை விட்டும் உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனென்றால் ஒவ்வொரு புதுமையும் வழிகேடாகும் என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை கவனிக்க வேண்டியதாகும்.
ஆட்சியாளர் தன் விருப்பப்படி சட்டமியற்றுவது அவர் பொறுப்பேற்றுக் கொண்ட நாட்டின் நலன் சம்பந்தமான விசயத்திற்கு மட்டும்தான். ஆட்சியாளராக இருந்தாலும் மார்க்கத்தில் இல்லாத விசயத்தை செய்யுமாறு கட்டளையிட முடியாது. அப்படி கட்டளையிட்டால் அது வழிகேடு. அது நரகத்திற்கு அழைத்துச் செல்லக்கூடியது. அதற்கு நாம் கட்டுப்படக்கூடாது என்ற போதனையை நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள்.
தான் விட்டுச் செல்லும் மார்க்கம் மிகத் தெளிவானது. யாரும் அந்த மார்க்கத்தில் இல்லாததைச் சேர்க்க வேண்டியதில்லை. மார்க்க விசயத்தில் யாரையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு எல்லாத் தெளிவுகளையும் கொண்டது என்பதை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு உணர்த்தினார்கள்.
43حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ بِشْرِ بْنِ مَنْصُورٍ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ السَّوَّاقُ قَالَا حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ عَنْ ضَمْرَةَ بْنِ حَبِيبٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو السُّلَمِيِّ أَنَّهُ سَمِعَ الْعِرْبَاضَ بْنَ سَارِيَةَ يَقُولُ وَعَظَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَوْعِظَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذِهِ لَمَوْعِظَةُ مُوَدِّعٍ فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا قَالَ قَدْ تَرَكْتُكُمْ عَلَى الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا لَا يَزِيغُ عَنْهَا بَعْدِي إِلَّا هَالِكٌ مَنْ يَعِشْ مِنْكُمْ فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا فَعَلَيْكُمْ بِمَا عَرَفْتُمْ مِنْ سُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ وَعَلَيْكُمْ بِالطَّاعَةِ وَإِنْ عَبْدًا حَبَشِيًّا فَإِنَّمَا الْمُؤْمِنُ كَالْجَمَلِ الْأَنِفِ حَيْثُمَا قِيدَ انْقَادَ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ الصَّبَّاحِ الْمِسْمَعِيُّ حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو عَنْ الْعِرْبَاضِ بْنِ سارِيَةَ قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَوَعَظَنَا مَوْعِظَةً بَلِيغَةً فَذَكَرَ نَحْوَهُ رواه إبن ماجه
வெண்மையான மார்க்கத்தில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன். அதன் இரவு கூட பகலைப் போன்றது அழிந்து போகக்கூடியவனைத் தவிர அந்த மார்க்கத்தை விட்டு வேறு யாரும் வழிகெட்டுப் போக மாட்டான்.
நூல் : இப்னு மாஜா (43)
மார்க்க விசயத்தில் நபி (ஸல்) அவர்கள் அல்லாத மற்றவர்களையும் பின்பற்ற வேண்டும் என்று சொல்பவர்கள் இந்த மார்க்கத்தில் முழுமையான தெளிவில்லை. பிறரைப் பின்பற்றும்போதுதான் தெளிவு கிடைக்கும் என்ற நபியின் கூற்றுக்கு முரணாகச் சொல்கிறார்கள்.
மார்க்க விசயத்தில் நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாரையும் பின்பற்றக்கூடாது என்று இந்த ஹதீஸ் தெள்ளத்தெளிவாக கூறிக்கொண்டிருக்கும் போது இதையே மார்க்க விசயத்தில் மற்றவர்களையும் பின்பற்றலாம் என்று ஆதாரம் காட்டினால் இவர்களின் அறிவுத்திறனை அறிந்துகொள்ள முடிகின்றது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட புதுக் குழப்பம்
நபித்தோழர்களானாலும் மார்க்க விசயத்தில் எவரையும் பின்பற்ற முடியாது என்று நாம் கூறும் போது நபித்தோழர்களும் மனிதர்கள் தான். அவர்கள் சில சந்தர்ப்பங்களில் மார்க்கத்திற்கு முரணாகவும் மார்க்கத்திற்கு மாற்றமான கருத்துக்களையும் கூறியிருக்கிறார்கள் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளை ஆதாரத்துடன் நாம் மக்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.
இந்த ஆதாரங்களில் ஒன்றுக்குக் கூட மாற்றுக் கருத்துடையோரால் பதிலளிக்க முடியவில்லை. எனவே அவர்கள் தற்போது புதிதாக வேறொரு பாணியில் நபித்தோழரைப் பின்பற்ற வேண்டும் என்று கூற வருகிறார்கள்.
நபிமொழிகளுக்கு நேரடியாக முரணில்லாத விஷயங்களில் நபித்தோழரைப் பின்பற்றலாம்,
நபித்தோழர்கள் எந்த விசயத்தில் மார்க்கத்திற்கு முரணாகக் கூறினார்களோ அந்த விசயத்தில் அவர்களைப் பின்பற்றக்கூடாது. இந்த நேரத்தில் மார்க்கத்தையே நாம் பின்பற்ற வேண்டும். நபித்தோழர்கள் ஒரு கருத்தைக் கூறி அதற்கு முரணாக மார்க்க ஆதாரங்களும் இல்லாவிட்டால் அப்போது மட்டும் நபித்தோழரின் கூற்றுக்களை ஆதாரமாக எடுக்க வேண்டும் என்கின்றனர்.
இவர்களின் இந்த இரட்டை நிலைக்கு குர்ஆன் ஹதீஸிலிருந்து எந்த ஆதாரத்தையும் காட்ட முடியாது. எதைப் பின்பற்ற வேண்டும், என்ற முக்கியமான இஸ்லாத்தின் அடிப்படையை நிறுவும் விசயத்தில் ஆதாரங்களைக் காட்டாமல் தங்களுடைய மனோ இச்சைப்படி எப்படி இவர்களால் துணிந்து தீர்ப்பளிக்க முடிகின்றது?
நபித்தோழர்கள் சில விசயங்களில் மார்க்கத்திற்கு முரணாக கருத்து தெரிவித்துள்ளார்கள் என்ற உண்மையை இவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர். தற்போது நம்முடைய கேள்வி என்னவென்றால் நபித்தோழர்களிடம் மார்க்கத்திற்கு முரணான கருத்துக்கள் தோன்ற முடியும் என்றால் மார்க்கத்தில் இல்லாத புதுமையான விசயங்கள் தோன்ற முடியாதா?
மார்க்கத்தில் இல்லாத விசயத்தை புதிதாக உருவாக்குவதை விட மார்க்கம் சொன்ன விசயத்திற்கு முரணாக கருத்துச் சொல்வது தான் மிகத் தவறானது. ஆபத்தானது. இப்படிப்பட்ட தவறுகளே நபித்தோழர்களிடம் வர முடியும் என்றால் அதை விட சிறிய தவறுகள் வர முடியாது என்று வாதிடுவது அறிவீனமாகும்.
நபித்தோழர்கள் முரணாகச் சொன்னால் பின்பற்றாதீர்கள். முரணில்லாமல் சொன்னால் பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் நமக்குக் கூறினானா? நேர்வழி பெற்ற கலீஃபாக்களைப் பின்பற்றுவது தொடர்பான இந்த ஹதீஸ் மார்க்கத்தில் இல்லாததை யார் சொன்னாலும் கேட்கக்கூடாது என்று தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
எனவே வஹீயை மட்டுமே முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும். வஹீ என்பது குர்ஆனும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் ஆகும். இதைத் தவிர வேறு எதையும் பின்பற்றக்கூடாது.

Saturday, June 14, 2014

குபா பள்ளிவாசலி ல் தொழுதால் உம்ரா செய்த நன்மை கிடைக்குமா ?

குபா பள்ளிவாசலி உம்ரா செய்த நன்மை கிடைக்குமா ?


298 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ أَبُو كُرَيْبٍ وَسُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ قَالَ حَدَّثَنَا أَبُو الْأَبْرَدِ مَوْلَى بَنِي خَطْمَةَ أَنَّهُ سَمِعَ أُسَيْدَ بْنَ ظُهَيْرٍ الْأَنْصَارِيَّ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصَّلَاةُ فِي مَسْجِدِ قُبَاءٍ كَعُمْرَةٍ قَالَ وَفِي الْبَاب عَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أُسَيْدٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَلَا نَعْرِفُ لِأُسَيْدِ بْنِ ظُهَيْرٍ شَيْئًا يَصِحُّ غَيْرَ هَذَا الْحَدِيثِ وَلَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ أَبِي أُسَامَةَ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ وَأَبُو الْأَبْرَدِ اسْمُهُ زِيَادٌ مَدِينِيٌّ رواه الترمذي
குபா பள்ளிவாச-ல் தொழுவது உம்ரா செய்வதைப் போன்றதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸைத் பின் லுஹைர் (ர-லி ), நூல் : திர்மிதீ (298)
இதே கருத்தில் இப்னுமாஜா (1401), பைஹகீ (பாகம் :5, பக்கம் : 248), ஹாகிம் (பாகம் :1, பக்கம் : 662), தப்ரானீ கபீர், பாகம்:1, பக்கம் : 210),ஸுனன் ஸு க்ரா- பைஹகீ (பாகம் :4, பக்கம் :423), முஸ்னத் அபீயஃலா, பாகம் :13, பக்கம் : 90), முஸன்னஃப் அபீ ஷைபா, பாகம் :2, பக்கம் :373) ஷ‚அபுல் ஈமான்- பைஹகீ, பாகம் :6, பக்கம் : 67) ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கருத்து இடம்பெறும் அனைத்து செய்திகளிலும் அபுல் அப்ரத் என்ற அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவர் என்று இந்தச் செய்தியை பதிவு செய்தவர்களில் ஒருவரான இமாம் ஹாகிம் அவர்கள் அந்தச் செய்தியின் இறுதியிலேயே குறிப்பிட்டுள்ளார்கள். இதைப் போன்று இமாம் தஹபீ அவர்கள் தீவானுல் லுஅஃபா (பாகம் :1, பக்கம் : 149) என்ற நூ-லி லும் இவர் யாரென அறியப்படாதவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
அபுல் அப்ரத் என்பவரை இப்னுஹிப்பான் அவர்கள் மட்டும் நம்பகமானவர் பட்டியி-லி ல் இடம்பெறச் செய்துள்ளார்கள். யாரென அறியப்படாதவர்களையும் நம்பகமானவர் பட்டியலி -ல் இடம்பெறச் செய்வது இப்னுஹிப்பான் அவர்களின் பழக்கமாகும். எனவே இமாம் இப்னுஹிப்பான் அவர்கள் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அதை மட்டும் வைத்து அவரை நம்பகமானவர் என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறுவதில்லை. எனவே இப்னுஹிப்பான் அவர்களின் இந்தக் கருத்து கணக்கில் கொள்ளத் தக்கதல்ல.
இந்தச் செய்தியை சிலர் ஆதாரப்பூர்வமானது என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதற்குக் காரணம் அபுல் அப்ரத் என்ற பெயரில் வேறு ஒரு நபர் இருந்துள்ளார்.
இன்னொருவரின் பெயர் அபுல் அப்ரத் அல்ஹாரிஸி இவருடைய உண்மையான பெயர் ஸியாத் என்பதாகும். இமாம் திர்மிதி அவர்களும் அபுல் அப்ரத் என்ற பெயரில் இருக்கும் இன்னொரு நபரை விளங்காமல் இச்செய்தியில் இடம்பெறும் யாரென தெரியாத அபுல் அப்ரத் என்பவரை யாரென அறியப்பட்ட அபுல் அப்ரத் அல்ஹாரிஸி என்று எண்ணிக் கொண்டார்கள்.      (துஹ்பத்துல் அஹ்வதீ, பாகம் :2, பக்கம் :236)
அபுல் அப்ரத் அல்ஹாரிஸி என்பவரின் பெயர் ஸியாத் ஆகும் என்ற கருத்தை இமாம் தாரகுத்னீ, அபூஅஹ்மத் ஹாகிம், அபூபிஷ்ர் அத்தூலாபீ ஆகியோர் உட்பட பலர் கூறியுள்ளனர். மேலும் (குபா பள்ளியின் சிறப்பு தொடர்பான செய்தியில் இடம்பெற்றிருக்கும்) அபூஅப்ரத் என்பவர் யாரென அறியப்படாதவர் என்ற கருத்தே அறியப்பட்ட செய்தியாகும். இவரை பெயர் அறியப்படாதவர் பட்டிய-லி லேயே ஹாகிம், இப்னு அபிஹாத்தம், இப்னுஹிப்பான் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இமாம் ஹாகிம் அவர்கள் இவரின் பெயர் மூஸா பின் சுலைம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். (துஹ்பத்துல் அஹ்வதீ, பாகம் : 2, பக்கம் :236)
எனவே இந்தச் செய்தி யாரென அறியப்படாதவர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இச்செய்தி பலவீனம் அடைகிறது.
இதே கருத்தில் ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ர-லி ) அவர்கள் வழியாகவும் ஒரு செய்தி இடம்பெற்றுள்ளது.
15414 حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عِيسَى حَدَّثَنِي مُجَمِّعُ بْنُ يَعْقُوبَ الْأَنْصَارِيُّ بِقُبَاءٍ قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْكَرْمَانِيِّ قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ بْنَ سَهْلِ بْنِ حُنَيْفٍ يَقُولُ قَالَ أَبِي قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ خَرَجَ حَتَّى يَأْتِيَ هَذَا الْمَسْجِدَ يَعْنِي مَسْجِدَ قُبَاءٍ فَيُصَلِّيَ فِيهِ كَانَ كَعَدْلِ عُمْرَةٍ حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا مُجَمِّعُ بْنُ يَعْقُوبَ الْأَنْصَارِيُّ عَنْ مُحَمَّدِ بْنِ سُلَيْمَانَ الْكَرْمَانِيِّ قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ بْنَ سَهْلِ بْنِ حُنَيْفٍ فَذَكَرَ مِثْلَهُ قَالَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ بَحْرٍ قَالَ حَدَّثَنَا حَاتِمٌ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الْكَرْمَانِيُّ فَذَكَرَ مَعْنَاهُ رواه احمد
யார் மஸ்ஜித் குபா என்ற பள்ளிக்காக சென்று அங்கு தொழுவாரோ அது உம்ராவிற்கு நிகரானதாக அமைந்துவிடும் என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
 அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி -), நூல் :அஹ்மத் (15414)
இதே கருத்தில் ஹாகிம் (பாகம்:3, பக்கம் : 13), இப்னு ஹிப்பான் (பாகம் :4, பக்கம் :507), ஷ‚அபுல் ஈமான் (பாகம் : 6, பக்கம் : 69) ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.
சில அறிவிப்புகளில் ஒருவர் மஸ்ஜித் குபா என்ற பள்ளிக்குச் சென்று நான்கு ரக்அத் தொழுதால் அது உம்ராவிற்கு நிகரானதாக அமைந்துவிடும் என்று இடம்பெற்றுள்ளது.
இச்செய்தியில் முஹம்மத் பின் சுலைமான் பின் கர்மானி என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரும் யாரென அறியப்படாதவராவார்.
முஹம்மத் பின் சுலைமான் பின் கர்மானி என்பவரல்லாமல் மூஸா பின் உபைத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரும் இவருக்குப் பின்னால்
இடம்பெற்ற யூசுஃப் பின் தஹ்மான் என்பவரும் இடம்பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவரே. (நூல்: தாரீக் இப்னு மயீன், பாகம் :1, பக்கம் :199, மீஸானுல் இஃதிதால், பாகம்:4, பக்கம் : 467 )
குபா பள்ளியின் சிறப்பைப் பற்றி கஅப் பின் உஜ்ரா (ர-லி ) அவர்கள் வழியாகவும் இடம்பெற்றுள்ளது.
المعجم الكبير (19/ 146)  319 - حدثنا إبراهيم بن دحيم الدمشقي حدثني أبي ثنا يحيى بن يزيد بن عبد الملك النوفلي عن أبيه عن سعد بن إسحاق بن كعب بن عجرة عن أبيه عن جده : أن رسول الله صلى الله عليه و سلم قال : ( من توضأ فأسبغ الوضوء ثم عمد إلى مسجد قباء لا يريد غيره ولم يحمله على الغدو إلا الصلاة في مسجد قباء فصلى فيه أربع ركعات يقرأ في كل ركعة بأم القرآن كان له مثل أجر المعتمر إلى بيت الله )
யார் உளூச் செய்து பின்னர் குபா பள்ளிவாசலுக்காகவே சென்று அது தவிர வேறு எந்த எண்ணமும் இல்லாமல் ஒவ்வொரு ரக்அத்திலும் உம்முல் குர்ஆன் (சூரத்துல் பாத்திஹா) ஓதி நான்கு ரக்அத் தொழுதால் இறையில்லம் (கஅபத்துல்லாஹ்வில்) உம்ரா செய்த நன்மையை பெற்றவரைப் போன்றவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : கஅப் பின் உஜ்ரா (ர-லி ), 
நூல் : தப்ரானி- கபீர் (பாகம் : 19, பக்கம் : 146)
இச்செய்தியில் யஹ்யா பின் யஸீத் பின் அப்துல் மாலி க் அந்நவ்ஃபலி  என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவராவார்.
(நூல் : அல்ஜர்ரஹ் வத்தஃதீல், பாகம் :9, பக்கம் : 279)
குபா பள்ளிவாசலி ல் தொழுதால் உம்ரா செய்த நன்மை கிடைக்கும் என்ற கருத்தில் வரும் செய்தி அனைத்தும் பலவீனமானதாக இடம்பெற்றுள்ளது. அதே நேரத்தில் எந்தப் பள்ளிக்குச் சென்றாலும் இரண்டு ரக்அத் தொழ வேண்டும் என்ற நபிவழியின் அடிப்படையில் தொழுது கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்.
 அறிவிப்பவர் : அபூகத்தாதா அஸ்ஸலமீ (ர-லி ), நூல் : புகாரி (444)
மேலும் நபி (ஸல்) அவர்கள் சனிக்கிழமை அன்று குபா பள்ளிவாசலுக்குச் சென்றுவருவார்கள் என்ற ஆதாரப்பூர்வமான செய்தி இடம்பெற்றுள்ளது.
அப்துல்லாஹ் பின் தீனார் அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்)
அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் குபா பள்ளிக்கு நடந்தும் வாகனத்திலும் வருவார்கள் என இப்னு உமர் (ர-லி ) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி -),  நூல் : புகாரி (1193)

பாத்திமா (ரலி) அவர்களுக்கு நபிகளார் சீதனம்

பாத்திமா (ரலி) அவர்களுக்கு நபிகளார் சீதனம் கொடுத்தார்களா

பாத்திமா (ரலி) அவர்களுக்கு நபிகளார் சீதனம் கொடுத்தார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளதாக கூறுகிறார்களே உண்மையா?
 
நபி (ஸல்) அவர்கள் பாத்திமா (ரலி) அவர்களுக்காக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட போர்வை ஒன்றையும் தண்ணீர் தோல்பை ஒன்றையும் இத்கிர் புல்லால் அடைக்கப்பட்ட தலையணை ஒன்றையும் தயார் செய்தார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி), நூல் : நஸாயீ (3331),இப்னுமாஜா (4142), அஹ்மத் (677)
இந்த செய்தியை அடிப்படையாக வைத்துதான் சிலர் பெண்வீட்டார் சீதனமாக பொருட்களை வழங்கலாம் என்று கூறுகிறார்கள். 

பொதுவாக ஒருவர் தான் விரும்பிய நபருக்கு மனம் விரும்பி அன்பளிப்பு வழங்குவது மார்க்கத்தில் அனுமதிக்கப்ட்டதுதான். இதன் அடிப்படையில் தன் மகளுக்கு தந்தை அன்பளிப்பு வழங்கினால் அதை தடைசெய்யமுடியாது. அதே நேரத்தில் வெளிப்படையில் அன்பளிப்பைப்போன்றும் உண்மையில் நிர்பந்தமாகவும் இருந்தால் அந்த அன்பளிப்பை வழங்குவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

தற்போது உள்ள நடைமுறையில் திருமணம் நடந்தால் கண்டிப்பாக பெண்ணுக்காக குறிப்பிட்ட பொருளை கொடுக்கவேண்டும் என்றும் இல்லையென்றால் திருமணத்திற்கு பிறகு மாமியாரால் குத்திக்காட்டுவதும். ஏன் திருமணத்தையே தடைசெய்வதும்தான் நாட்டின் நடப்பு.

திருமணம் என்றால் பெண்வீட்டில் சீதனம் தரவேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக நடைமுறையில் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. அன்பளிப்பு என்ற பெயரில் கொடுக்கப்பட்டவைதான் இன்று நிர்பந்தமாக வலுக்கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொண்டு கட்டாயமக்கப்பட்ட இந்த சீதன நடைமுறையை நீக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தன் மகளுக்கு கொடுத்தை வைத்துக் கொண்டு சீதனத்திற்கு ஆதாரமாக காட்டமுடியாது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் பொறுப்பில்தான் அலீ (ரலி) அவர்களும் இருந்தார்கள்.
அபூதாலிப் அவர்கள் ஏழ்மை நிலையில் இருந்ததால் அவர்களின் குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பை அவர்களின் உறவினர்கள் பகிர்ந்து எடுத்துக் கொண்டார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் ஜஅஃபர் (ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களையும் எடுத்துக் கொண்டார்கள். (நூல் : அல்இஸ்தீஆப்,பாகம் 1,: பக்கம் : 13) 

நபிமொழிகளை நாம் கவனித்துப் பார்த்தால் அலீ (ரலி) அவர்கள் நபிகளாரோடே இருந்துள்ளார்கள் என்ற உண்மையை விளங்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் பாத்திமா (ரலி)அவர்களுக்கு எப்படி பொறுப்பாளராக இருந்தார்களோ அதைப் போன்றே அலீ (ரலி) அவர்களுக்கும் பொறுப்பாளராக இருந்துள்ளார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் பெண்வீட்டு சார்பாக கொடுத்தார்கள் என்று கூறமுடியாது. இருவருக்கும் சேர்த்தே அவர்கள் பொறுப்பாளார் ஆவார்கள். எனவே இதை பெண்வீட்டு சீதனத்திற்கு ஆதாரமாக காட்ட முடியாது. மேலும் நபிகளார் கொடுத்த மூன்று பொருள்களும் அவர்களின் தேவைக்காக கொடுத்தார்கள். இன்று வழங்கும் சீதனப்பொருட்களுடன் நபிகளாரின் பொருட்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நபிகளார் வழங்கியது ஒரு பொருளாகவே எடுத்துக் கொள்ள முடியாது