பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Tuesday, June 27, 2017

பிறையைப் பார்க்க வேண்டும்

பிறையைப் பார்க்க வேண்டும் என்பதற்கு கண்ணால் பார்க்க வேண்டும் என்பது பொருளல்ல. சிந்திக்க வேண்டும் என்பதுதான் பொருள் என்று சிலர் வாதிடுவது சரியா?

பதில்

பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பார்க்க முடியாத அளவுக்கு மேகமாக இருந்தால் முந்தைய மாதத்தை 30 நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் வழிகாட்டியுள்ளனர்.

மார்க்க அறிவும் அரபு மொழி அறிவும் இல்லாத ஒரு கூட்டம் பிறையைப் பார்த்து நோன்பு நோற்கக்கூடாது. விஞ்ஞான முறையில் கணித்து நாட்களை முடிவு செய்ய வேண்டும் என வாதிட்டு மக்களை வழிகெடுத்து வருகின்றனர்.

பிறையைப் பார்க்க வேண்டும் என்று வரும் ஹதீஸ்களில் ருஃயத் எனும் சொல்லோ அதில் இருந்து பிறந்த சொற்களோ பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு பார்த்தல் என்று பொருள் செய்யக் கூடாது. சிந்தித்தல் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் எனவும் கண்ணால் என்ற சொல் சேர்ந்தால்தான் இச்சொல்லுக்கு பார்த்தல் என்று பொருள் செய்ய வேண்டும் எனவும் இந்த அறிவீனர்கள் ஆதாரமின்றி உளரி வருகின்றனர்.

இது குறித்து முன்னரே நாம் விளக்கியுள்ளதை தற்போது எடுத்துக் காட்டுகிறோம்.

ருஃயத் என்பதற்கு பார்த்தல் என்கிற அர்த்தம் மட்டும் கிடையாது; அறிவால் அறிதல், புரிந்து கொள்ளுதல் எனப் பல அர்த்தங்கள் உள்ளன; அகராதிப்படியும் உள்ளன; குர்ஆனிலேயே கூட ஏராளமான வசனங்களில் அறிதல் என்கிற பொருளில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி, பிறை பார்த்து முடிவு செய்யுங்கள் என்றால் கண்ணால்தான் பார்க்க வேண்டும் என்ற அர்த்தமில்லை, அறிவால் சிந்தித்து புரிந்து கொள்வதைத் தான் குறிக்கும் என்று வியாக்கியானம் கொடுக்கின்றனர்.

இந்த வியாக்கியானம் புதிதல்ல. பல வருடங்களுக்கு முன்பும் இதே வறட்டு வாதத்தை இவர்கள் வைத்து, அதிலுள்ள அபத்தங்களுக்கு தெளிவான முறையில் நம்மால் விளக்கமும் கொடுக்கப்பட்டன.

ஆனால் வேடிக்கை என்னவென்றால் அன்று ருஃயத் என்கிற வார்த்தைக்கு சிந்தித்து அறிதல் என்று பொருள் செய்ய வேண்டும் என்பதை நிலைநாட்ட அவர்கள் வேறொரு வாதத்தை வைத்திருந்தார்கள்!

அதாவது பார்த்தல் என்கிற வார்த்தையுடன் (ருஃயத்) “கண்ணால்” என்கிற சொல் (ஐன்) என்பது சேர வேண்டும், அப்படிச் சேர்ந்தால் தான் கண்ணால் பார்த்தல் என்று பொருள் வரும். வெறுமனே ருஃயத் என்றால் சிந்தித்தல் என்றுதான் அர்த்தம் வைக்க வேண்டும் என்பது தான் அன்றைக்கு இவர்களது வாதமாக இருந்தது.

இந்த மடமைத் தனத்திற்கு அன்றைக்கே கீழ்க்கண்டவாறு மறுப்பு கொடுக்கப்பட்டது.

ரஃயல் ஐன் என்ற வார்த்தை வந்தால்தான் புறக்கண்ணால் பார்த்ததாக அர்த்தம் வருமாம். அதாவது ரஃய் என்றால் பார்த்தல் என்பது பொருள். ஐன் என்றால் கண் என்பது பொருள். பார்த்தல் என்பதுடன் கண்னைச் சேர்த்து கண்ணால் பார்த்தல் என்று ஆதாரம் உண்டா எனக் கேட்கின்றனர்.

சாப்பிட வேண்டும் என்றாலும் வாயால் சாப்பிட வேண்டும் என்றாலும் ஒரே அர்த்தம்தான். அதுபோல் பார்த்தல் என்றாலும் கண்ணால் பார்த்தல் என்றாலும் ஒரே அர்த்தம்தான்.

ஆனால் எந்த மொழியாக இருந்தாலும் பார்த்தல் என்பதற்கு கண்ணால் பார்த்தல் என்றுதான் பொருள் செய்ய வேண்டும். அந்த அர்த்தம் பொருந்தாத இடத்தில் மட்டும்தான் வேறு பொருத்தமான அர்த்தம் செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ரஃயல் ஐன் என்ற வார்த்தை இருந்தால்தான் கண்ணால் பார்த்தல் என்று அர்த்தம் செய்வார்களாம்.

அல்லாஹவைக் காட்டு என்று மூஸா நபி சமுதாயம் கேட்ட போது வெறும் ரஃய் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. (அல்குர்அன் 2:55)

கண்ணுக்குக் காட்டு என்று அர்த்தம் செய்வார்களா? கருத்துக்குக் காட்டு என்று அர்த்தம் செய்வார்களா?

இது போல் நூற்றுக் கணக்கான வசனங்களில் ஐன் என்ற வார்த்தை சேராமல் தான் ரஃய் என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அதற்கு கண்களால் பார்த்தல் என்று பொருள் இல்லை என்று சொல்வார்களா?

இந்தக் கேள்விக்கு விடை சொல்ல இயலாத இந்தக் கூட்டம், மீண்டும் அதே ருஃயத் என்பதை எடுத்துக் கொண்டு, வேறு என்ன வகையில் வியாக்கியானம் கொடுப்பது என்று இத்தனை வருடங்கள் தலையைப் பிய்த்து மேலே நாம் சுட்டிக்காட்டிய இந்த வாதத்தைக் கண்டுபிடித்துள்ளது.

இது குறித்து விளக்கமாகவே பார்ப்போம்.

لسان العرب – (ج 14 / ص 291) (رأي ) الرُّؤيَة بالعَيْن تَتَعدَّى إلى مفعول واحد وبمعنى العِلْم تتعدَّى إلى مفعولين يقال رأَى زيداً عالماً ورَأَى رَأْياً ورُؤْيَةً ورَاءَةً مثل راعَة وقال ابن سيده الرُّؤيَةُ النَّظَرُ بالعَيْن والقَلْب

ருஃயத் என்பது கண்ணால் காண்பது என்ற பொருளில் வந்தால் அதற்கு ஒரு மஃப்வூல் (ஷீதீழீமீநீt) தான் வரும். ”அறிதல்” என்ற பொருளில் வரும்போது அதற்கு இரண்டு மஃப்வூல் (ஷீதீழீமீநீt) வரும். நூல் லிஸானுல் அரப் பாகம் 14 பக்கம் 291

உதாரணம்

رأيت محمدا

முகம்மதைப் பார்த்தேன்

رأيت محمدا عالما

முகம்மதை ஆலிமாகப் பார்த்தேன்

முதலாவது உதாரணத்தில் பார்த்தல் என்பதற்கு முகம்மத் என்ற ஒரு ஆப்ஜெக்ட்டு தான் வந்துள்ளது.

ஒரு ஆப்ஜக்ட் வந்தால் கண்ணால் காண்பது என்பதைத் தவிர வேறு பொருள் கொடுக்க முடியாது.

இரண்டாவது உதாரணத்தில் ”பார்த்தல்” என்ற செயலுக்கு 1. முகம்மத் 2. ஆலிம் என்ற இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளது.

இவ்வாறு இரண்டு ஆப்ஜெக்ட் வந்தால்தான் அறிதல் என்ற பொருள் வரும். சில நேரங்களில் அரிதாக இரண்டு ஆப்ஜெக்ட் வரும் போது கண்ணால் பார்த்தல் என்ற பொருளும் வரலாம்.

ஆனால் ”பார்த்தல்” என்ற சொல்லுக்கு ஒரு ஆப்ஜெக்ட் வந்தால் கண்டிப்பாக அது கண்ணால் பார்த்தல் என்ற பொருளை மட்டும்தான் கொடுக்கும்.

பிறை பார்த்தல் என்பதில் ”பார்த்தல்” என்ற செயலுக்கு ஒரு ஆப்ஜெக்ட்தான் வந்துள்ளது. எனவே இதற்கு கண்ணால் காண்பதைத் தவிர வேறு பொருள் கொடுக்க முடியாது.

பிறையை பார்த்து நோன்பு வையுங்கள். பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் முப்பாதாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

என்கிற ஹதீஸில் ”பார்த்தல்” என்பதற்கு ”பிறை” என்ற ஒரு ஆப்ஜக்ட்டு தான் வந்துள்ளது.

”பிறை என்பது, “சந்திரனில் தோன்றும் முதல் ஒளி வடிவம் ஆகும்”. எனவே இங்கே கண்ணால் காணுதல் என்ற பொருளை மட்டும்தான் கொடுக்க முடியும். அறிதல் என்ற பொருளைக் கொடுப்பது மார்க்கத்தின் அடிப்படையிலும், அரபி மொழி அகராதி அடிப்படையிலும் தவறானதாகும்.

திருமறைக்குர்ஆனில் ”பார்த்தல்” என்ற வினைச்சொல் அதிகமாக இரண்டு ஆப்ஜெக்டுகளைக் கொண்டுதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆப்ஜக்டுகள் வரும் போது அறிதல் என்ற பொருள்தான் பெரும்பாலும் வரும்.

யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? (அல்குர்ஆன் 105 : 1)

மேற்கண்ட வசனத்தில் யானையைப் பார்க்கவில்லையா? என்று மட்டும் அல்லாஹ் கூறியிருந்தால் அது கண்ணால் பார்ப்பதை மட்டும்தான் குறிக்கும்.

ஆனால் மேற்கண்ட வசனத்தில் ”பார்த்தல்” என்ற வினைச்சொல்லுக்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளது.

1. யானைப்படையை (பார்த்தல்)

2. எப்படி அழித்தான் என்ற செயலைப் (பார்த்தல்).

எனவே இங்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளதால் இங்கு ருஃயத் என்பதின் பொருள் அறிதல் என்பதாகும்.

வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்ற (அற்பமான)வர்களைப் படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவில்லையா? அல்குர்ஆன் 17 : 99

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ்வைப் பார்க்கவில்லையா? என்று மட்டும் வந்தால் அது கண்ணால் பார்த்தல் என்ற பொருளை மட்டும்தான் தரும்.

ஆனால் மேற்கண்ட வசனத்தில் பார்த்தல் என்ற வினைச் சொல்லுக்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளது.

1. அல்லாஹ்வைப் (பார்த்தல்)

2. அவனுடைய படைப்பாற்றலைப் (பார்த்தல்)

இங்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளதால் இதற்கு அறிதல் என்ற பொருள்தான் கொடுக்க வேண்டும்.

மரணத்திற்கு அஞ்சி தமது ஊர்களை விட்டு வெளியேறியோரை நீர் அறியவில்லையா? (அல்குர்ஆன் 2 : 243)

மேற்கண்ட வசனத்தில் ஊர்களை விட்டு வெளியேறியோரை பார்க்கவில்லையா? என்று மட்டும் வந்தால் கண்ணால் பார்த்தல் என்று பொருள் மட்டும்தான் வரும்.

ஆனால் மேற்கண்ட வசனத்தில் ”பார்த்தல்” என்ற வினைச்சொல்லுக்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளது.

1. ஊரை விட்டு வெளியோரைப் (பார்த்தல்)

2. மரணத்திற்கு அஞ்சுவதை (பார்த்தல்)

இங்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளதால் இங்கு அறிதல் என்ற பொருள்தான் கொடுக்க வேண்டும்.

ஆது, தூண்களையுடைய இரம் சமுதாயங்களை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா?

அல்குர்ஆன் 89 : 6, 7

மேற்கண்ட வசனத்தில் ”பார்த்தல்” என்ற வினைச் சொல்லுக்கு இரண்டு ஆப்ஜக்டுகள் வந்துள்ளது.

1. ஆது, இரம் சமுதாயத்தைப் (பார்த்தல்)

2. அவர்களை எப்படி ஆக்கினான் என்பதை (பார்த்தல்)

எனவே இங்கு அறிதல் என்ற பொருள்தான் கொடுக்க வேண்டும்.

அதே சமயம், கீழ்க்காணும் வசனங்களைப் பாருங்கள்..

அவ்வாறில்லை! நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தைக் காண்பீர்கள்.

அல்குர்ஆன் 102 : 5,6

மேற்கண்ட வசனத்தில் பார்த்தல் என்ற வினைச் சொல்லுக்கு ஒரு ஆப்ஜெக்ட்டு தான் வந்துள்ளது எனவே இது கண்ணால் காண்பதை மட்டும்தான் குறிக்கும்.

மொத்தத்தில் ”பார்த்தல்” என்ற வினைச் சொல்லிற்கு ஒரு ஆப்ஜெக்ட் வந்தால் அதற்கு கண்ணால் பார்த்தல் என்ற பொருள் மட்டும்தான் வரும். வேறு பொருள் வராது.

இரண்டு ஆப்ஜெக்ட் வரும்போதுதான் அங்கே அறிதல் என்ற பொருள் வரும். திருமறைக்குர்ஆனில் அறிதல் என்ற பொருள் கொள்வதற்கு சான்றாக அவர்கள் எடுத்துக் காட்டும் வசனங்கள் அனைத்தும் இரண்டு ஆப்ஜெக்ட்டாக வரக்கூடியவைதான்.

பிறைபார்த்தல் பற்றிய ஹதீஸ்களில் ”பார்த்தல்” என்ற வினைச் சொல்லிற்கு ”பிறை” என்ற ஒரு ஆப்ஜக்ட்டு தான் வந்துள்ளது. எனவே இது கண்ணால் காண்பதை மட்டும்தான் குறிக்கும்.

குர்ஆனில் கண்ணால் காணுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட சில இடங்கள்.

நட்சத்திரத்தைப் பார்த்தார் (6 : 76)

சந்திரனைப் பார்த்தார் (6 : 77)

சூரியனைப் பார்த்தார் (6 : 78)

ஆதாரத்தைப் பார்த்தார் (11 : 70)

சட்டையைப் பார்த்தார் (12 : 28)

இணைக் கடவுள்களைப் பார்த்தல் (16 : 86)

நரகத்தைப் பார்த்தல் (16 : 83, 20 : 10)

கூட்டுப் படையைப் பார்த்தல் (33 : 22)

இறை அத்தாட்சியில் மிகப் பெரியதைப் பார்த்தல் (53 : 18)

தெளிவான அடிவானத்தில் கண்டார் (81 : 23)

இப்படி பார்த்தல் என்ற ரீதியில் ஆய்வு செய்தால் கண்ணால் பார்த்தல் என்பதற்கு ஏராளமான ஆதாரங்களை குர்ஆனில் காணமுடியும்

ஆக, இவர்களது இந்த வாதமும் தவிடு பொடியாகிப்போனது !

பிறையை பார்த்தல் – என்பது கண்ணால் பார்த்தலைத் தான் குறிக்கும் என்பது தெள்ளத் தெளிவாக நிரூபணம் ஆகி விட்ட நிலையில் பிறையைக் கணக்கிடலாம், விஞ்ஞான ரீதியாகச் சிந்திக்கலாம் என்பன போன்ற வாதங்கள் அனைத்தும் விழுந்து நொறுங்கி விட்டன.

,

பெருநாள் தொழுகையின் சட்டங்கள்

*பெருநாள் தொழுகையின் சட்டங்கள்*📑📑📑📑

ஷவ்வால் பிறை ஒன்றிலும் துல்ஹஜ் பிறை 10 அன்று இஸ்லாமியர்களின் பெருநாளாக நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். அன்றைய தினம் சிறப்புத் தொழுகையை இரண்டு ரக்அத்கள் நிறைவேற்றுமாறும் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

*தொழுகை நேரம்*⏱⏱

சூரியன் உதித்த பின்னர் இத்தொழுகைகள் நிறைவேற்ற வேண்டும். அதிக கால தாமதம் செய்யக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன்முதலில் தொழுகையைத் துவக்குவார்கள்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள் : புகாரீ (956), முஸ்லிம் (1472?)

இன்றைய தினத்தில் நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம் . அதன் பின் அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கின்றாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார் என்று அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டதை நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர் : பரா (ரலி), நூல்கள் : புகாரீ (951),முஸ்லிம் (3627)

*திடலில் தொழுகை*🕌🕌🙅‍♂🙅‍♂

இரு பெருநாள் தொழுகையையும் திடலில்தான் தொழவேண்டும். மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம் என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், (புகாரீ 1190) பெருநாள் தொழுகையை திடலில் தொழுதுள்ளதால் திடலில் தொழுவதின் முக்கியதுவத்தை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். எனவே இரு பெருநான் தொழுகைகளையும் திடலியே தொழ வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன்முதலில் தொழுகையைத் துவக்குவார்கள்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள் : புகாரீ (956), முஸ்லிம் (1472)

*பெருநாள் தொழுகையில் பெண்கள்*🙋🏻🙋🏻

பெருநாள் தொழுகையில் பெண்கள் கண்டிப்பாக கலந்து கொள்ளவேண்டும். மேலும் தொழுகை கடமையில்லாத மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் திடலுக்கு வரவேண்டும். தொழுகையைத் தவிர மற்ற நல்ல காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்குப்) போகச் சொல்லுமாறு நாங்கள் கட்டையிடப்பட்டோம். அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிகள் தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும். தொழும் இடத்தை விட்டு மாதவிடாய் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்ளவதற்கு மேலாடை இல்லை எனில் என்ன செய்வது? என்றார். அதற்கு அவளுடைய தோழி தனது (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள் : புகாரீ (351), முஸ்லிம் (1475)

*ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்*🚦🚥🛣🛣

பெருநாளுக்கு செல்லும் போது ஒரு வழியிலும் திரும்பும் போது மற்றொரு வழியிலும் திரும்பும் வகையில் திடலுக்கு செல்வதை அமைத்து கொள்வது நபி வழியாகும்.

பெருநாள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : புகாரீ (986),

*தொழுகைக்கு முன் சாப்பிடுதல்*🍇🍉🍯🥘

நோன்பு பெருநாள் தொழுகைக்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டுவிட்டு தொழச் செல்வார்கள்.

சில பேரித்தம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்படமாட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல்கள் : புகாரீ (953), திர்மிதீ (498), இப்னுமாஜா (1744), அஹ்மத் (11820)

நோன்பு பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி), நூல் : இப்னுகுஸைமா (1426)

*சுன்னத்துகள்*

இரு பெருநாள் தொழுகைகளுக்கு முன் பின் சுன்னத்துகள் கிடையாது. நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைக்கு முன்னரும் பின்னரும் எந்த தொழுகையையும் தொழுததில்லை.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (திடலுக்கு) சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும் பின்னும் எதையும் தொழவில்லை.

அறிவிப்பவர் : இப்னுஅப்பாஸ் (ரலி), நூல்கள் : புகாரீ (1431), முஸ்லிம் (1476)

*பாங்கும் இகாமத்தும்*

இரு பெருநாள் தொழுகைக்கும் மற்றத் தொழுகைகளைப் போல் பாங்கும் இகாமத்தும் கிடையாது.

ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை பாங்கும் இகாமத்தும் இல்லாமல் இருபெருநாள் தொழுகையை நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுள்ளேன்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி), நூல்கள் : முஸ்லிம் (1470?) திர்மிதீ (489), அபூதாவூத் (969), அஹ்மத் (19931)

*தொழும் முறை*🎤🎤

மற்றத் தொழுகையைப் போல் இத்தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுவேண்டும். எனினும் முதல் ரக்அத்தில் ஸனா (அல்லாஹும்ம பாயித் பைனீ… என்ற அல்லது வஜ்ஜஹத்து வஜ்ஹிய லில்லதீ… என்ற துஆவை) ஓதிய பின்னர் அல்லாஹு அக்பர் என்று ஏழு தடவை இமாம் கூறுவார். பின்பற்றித் தொழுபவர்களும் ஏழு தடவை சப்தமின்றி கூறவேண்டும். பின்னர் ஸுரத்துல் பாத்திஹா மற்றும் துணை சூராக்கள் ஓதி ருகூவு மற்றும் மற்ற தொழுகையில் செய்வதைப் போன்று ஏனைய காரியங்களைச் செய்வார். பின்னர் இரண்டாம் ரக்அத்திற்கு எழுந்தவுடன் ஸுரத்துல் பாத்திஹா ஓதுவதற்கு முன்னர் இமாம் ஐந்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூறுவார். பின்பற்றித் தொழுபவர்களும் சப்தமின்றி ஐந்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூறவேண்டும். பின்னர் மற்றத் தொழுகைகளைப் போல் ஸுரத்துல் பாத்திஹா மற்றும் துணை சூராக்களை ஓதி தொழுகையை முடிப்பார். கூடுதல் தக்பீர் கூறும் போது தக்பீர்களுக்கு இடையில் ஓதுவதற்கு எந்த துஆவையும் நபி (ஸல்) கற்றுத்தரவில்லை. எனவே இடையில் எந்த துஆவும் ஓதக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (திடலுக்கு) சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும் பின்னும் எதையும் தொழவில்லை.

அறிவிப்பவர் : இப்னுஅப்பாஸ் (ரலி), நூல்கள் : புகாரீ (1431), முஸ்லிம் (1476)

நபி (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் மொத்தம் 12 தக்பீர்கள் பெருநாள் தொழுகையில் சொல்வார்கள். அதற்கு முன்னும் பின்னும் வேறு எதையும் தொழுததில்லை.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல்கள் : அஹ்மத் (6401), இப்னுமாஜா (1268)

நபி (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறுவார்கள். இவற்றை கிராத்திற்கு முன்பு கூறுவார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல்கள் : அபூதாவூத் (971), தாரகுத்னீ பாகம் : 2, பக்கம் 48, பைஹகீ (5968

*சுத்ரா (தடுப்பு)*🥅🥅

இரு பெருநாள் தொழுகையிலும் திடலில் தொழும்போது இமாமிற்கு முன்னால் எதையாவது தடுப்பாக வைத்துக் கொள்ளவேண்டும்.

நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஒரு ஈட்டி நாட்டப்படும். நபி (ஸல்) அவர்கள் (அதை நோக்கித் தொழுவார்கள்)

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல்கள் : புகாரீ 9972), முஸ்லிம் (773)

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்காக) தொழும் திடலுக்கு புறப்படுவார்கள். அவர்களுக்கு முன்பு கைத்தடி எடுத்துச் செல்லப்படுத் தொழும் இடத்தில் அவர்களுக்கு முன்னால் நாட்டப்படும். அதை நோக்கித் தொழுவார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல்கள் : புகாரி (973), முஸ்லிம் (774)

*மிம்பர்*

வெள்ளிக்கிழமை ஜுமுஆவில் எப்படி மிம்பரில் இமாம் பயான் நிகழ்த்துவாரோ அதைப் போன்று இரு பெருநாள்களிலும் மிம்பரில் உரை நிகழ்த்துதல் இல்லை. தரையில் நின்றுதான் சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும். இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந்தால் உத்தரவிடுவாôகள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள்.

மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானுடன் நோன்புப் பெருநாள் தொழுகையையோ ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையோ தொழச் செல்லும்வரை மக்கள் இவ்வாறே கடைப்பிடித்து வந்தனர். (மர்வான் ஆட்சியில் ஒரு நாள்) நாங்கள் தொழும் திடலுக்கு வந்த போது கஸீர் பின் ஸல்த் என்பார் உருவாக்கிய மேடை ஒன்று அங்கே திடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் தொழுவதற்கு முன்பே அதில் ஏற முன்றார். நான் அவரது ஆடையை பிடித்து கீழே இழுத்தேன்.

அவர் என்னை இழுத்தர். முடிவில் அவர் மேடையில் ஏறித் தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்தாலானார். அப்போது நான் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் (நபி வழியை) மாற்றிவிட்டீர்கள் என்று கூறினேன்.

அதற்கு மர்வான் நீ விளங்கி வைத்திருக்கும் நடைமுறை மலையேறிவிட்டது என்றார். நான் விளங்காத (இந்த புதிய) நடைமுறையை விட நான் விளங்கிய வைத்துள்ள நடைமுறை அல்லாஹ்வின் மீது ஆணையாக மிகச் சிறந்ததாகும் என நான் கூறினேன்.

அதற்கு மர்வான், மக்கள் தொழகைக்குப் பிறகு இருப்பதில்லை, எனவே நான் தொழுகைக்கு முன்பே உரையை அமைத்துக் கொண்டேன் என்று கூறினார்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள் : புகாரீ (956), முஸ்லிம் (1472?)

அபூதாவூத் (963), இப்னுமாஜா (1265), அஹ்மத் (10651) ஆகிய நூல்களின் அறிவிப்பில் மர்வானே! நீ சுன்னத்திற்கு மாற்றம் செய்துவிட்டீர்! பெருநாள் தினத்தில் மிம்பரை கொண்டுவந்துள்ளீர், இதற்கு முன்னர் இவ்வாறு கொண்டுவரப்படவில்லை… என்று இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று ஒரு உரையை நிகழ்த்தினார்கள் என்பதற்கே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. மேலும் மிம்பர் இல்லை எனும் போது இரண்டு குத்பாக்கள் இல்லை என்பதையும் தெளிவாக விளங்கலாம்.

*தக்பீரும் பிரார்த்தனையும்*

இரு பெருநாள்களிலும அல்லாஹ்வை பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும், மேலும் திடலில் தமது தேவைகளை வல்ல இறைவனிடம் முறையிட்டு கேட்க வேண்டும். திடலில் கேட்கும் துஆவிற்கு முக்கியத்துவமும் மகத்துவம் உள்ளது.

பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்யவேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள், ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.

அறிவிப்பவர் : உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள் : புகாரீ (971),முஸ்லிம் (1474)

அல்லாஹு அக்பர் என்று கூறுவதுதான் தக்பீர் ஆகும். பெருநாளைக்கு என நபி (ஸல்) அவர்கள் தனியான எந்த தக்பீரையும கற்றுத்தரவில்லை. அதற்கு ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை. மேலும் குறிப்பிட்ட வேளைகளில் சொல்லவேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை. எனவே அல்லாஹு அக்பர் என்றே கூற வேண்டும். தக்பீர்களை சப்தமிட்டு கூறக்கக் கூடாது.

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (அல்குர்ஆன் 7:205)