பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)
Showing posts with label General. Show all posts
Showing posts with label General. Show all posts

Tuesday, October 22, 2019

பொறுமையின் எல்லை என்ன

*பண்பாடுகள்*

*பொறுமையின் எல்லை என்ன?*

*இஸ்லாத்தில் எந்த அளவு பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்?*

*பதில்*

*பொறுமை என்பது இரு வகைப்படும்.*

*ஒன்று அல்லாஹ் நமக்குத் தரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது. நூறு சதவிகிதம் இதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். துன்பத்தை முறையிட்டாலும் அழுதாலும் அல்லாஹவை விமர்சிக்காமல் இருந்தால் நாம் பொறுமையைக் கடைபிடித்தவர்களாவோம்.*

*நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அழுதுள்ளனர்.*

*ஆனால் மனிதர்கள் நமக்கு அநியாயம் செய்யும் போது பொறுமை காக்க வேண்டுமென்பது கட்டாயம் அல்ல.*

*நாம் விரும்பினால் பதில் நடவடிக்கையில் இறங்கலாம். விரும்பினால் மன்னிக்கலாம். மன்னிப்பதே சிறந்தது.*

*பினவரும் வசனங்களை வாசிக்கவும்*

*உங்களிடம் வரம்பு மீறியோரிடம் அவர்கள் வரம்பு மீறியது போன்ற அதே அளவு நீங்களும் வரம்பு மீறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (தன்னை) அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!*

*திருக்குர்ஆன் 2:194*

*போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்” என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன்.*

*திருக்குர்ஆன்22:39*

*இதுவே (அல்லாஹ்வின் கட்டளை.) யாரேனும் தாம் துன்புறுத்தப்பட்டது போல் (அதற்குக் காரணமானவர்களைத்) துன்புறுத்தும் போது அதற்காக அவர் மீது மீண்டும் அநீதி இழைக்கப்பட்டால் அல்லாஹ் அவருக்கு உதவுவான். அல்லாஹ் மன்னிப்பவன்; பிழை பொறுப்பவன்.*

*திருக்குர்ஆன்22:60*

*அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கிறான்.*

*திருக்குர்ஆன்4:148*

*தீமையின் கூலி அது போன்ற தீமையே. மன்னித்து சமாதானமாகச் செல்வோருக்கு அவரது கூலி அல்லாஹ்விடம் உள்ளது. அவன் அநீதி இழைத்தோரை விரும்ப மாட்டான்.. தமக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர் யார் உதவி பெறுகிறாரோ அவருக்கு எதிராக எந்த வழியும் இல்லை.மக்களுக்கு அநீதி இழைத்து நியாயமின்றி பூமியில் வரம்பு மீறுவோருக்கு எதிராகவே குற்றம் பிடிக்க வழி உண்டு. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. யார் பொறுமையை மேற்கொண்டு மன்னிக்கிறாரோ அது உறுதிமிக்க காரியங்களில் ஒன்றாகும்.*

*திருக்குர்ஆன்42:40-43*

*உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்” என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். “அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்” என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.*

*திருக்குர்ஆன்24:22*


Monday, September 23, 2019

இரத்தம் குத்தி எடுத்தல

*இரத்தம் குத்தி எடுத்தல் என்றால் என்ன?*

ஃபாத்திமா

பதில்

இது பண்டைய அரபுகளிடம் இருந்த ஒரு மருத்துவ முறையாகும். எல்லா நோய்களுக்கும் கெட்ட இரத்தம் தான் காரணம் என்று அவர்கள் கருதி வந்தனர். எனவே உடலில் இருந்து சிறிதளவு இரத்தத்தை நாம் வெளியேற்றும் போது புதிதாக நல்ல இரத்தம் உடனே உற்பத்தியாகி விடும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று அந்த மக்கள் நம்பினார்கள்.

உயிருக்கு ஆபத்தில்லாத வகையில் இரத்தத்தை வெளியேற்றும் கலை அறிந்த வைத்தியர்கள் மூலம் இதைச் செய்வார்கள். மனிதர்களின் கழுத்தில் குறிப்பிட்ட இரண்டு நரம்புகள் உள்ளன. அதைச் சரியாகக் கண்டு பிடித்து அதில் சிறு குழாயை எடுத்துக் கொள்வார்கள். அதில் ஒரு புறம் ஊசித் துவாரம் போல் சிறிய ஓட்டை இருக்கும். மறு புறம் பெரிய துவாரம் இருக்கும். ஊசித் துவாரம் கொண்ட முனையை அந்த நரம்பில் செலுத்தி மறு முணையை வாயில் வைத்து உறிஞ்சி இரத்தத்தை வெளியேற்றுவார்கள். இவ்வாறு செய்த பின் உடலில் பல நோய்கள் நீங்குவதாக அவர்கள் நம்பினார்கள்.

இந்த வழக்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும் இருந்ததால் அவர்களும் இது போன்ற சிகிச்சையை தமக்காக செய்து கொண்டார்கள். ஆனால் இதற்கும் மார்க்கத்துக்கும் சம்மந்தம் இல்லை.

*இது வஹியின் அடிப்படையில் செய்த ஒன்றல்ல.* நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதாராக ஆவதற்கு முன்பே இந்த வழக்கம் இருந்ததால் இது இறைவன் புறத்திலிருந்து வந்த வழிகாட்டுதல் அல்ல. *மனிதர்கள் தமது அனுபவ அறிவைக் கொண்டு கண்டறிந்த மருத்துவம் தவிர வேறில்லை.* இதை நாம் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை.

அந்த முறையில் நன்மை இருப்பதாக நமக்குத் தெரிந்தால் அதைக் கடைபிடிக்கலாம். இல்லாவிட்டால் விட்டு விடலாம். அன்றைக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டால் அதில் சாம்பலைப் பூசி இரத்த ஓட்டத்தை நிறுத்துவார்கள். இவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஹதுப் போரில் வெட்டப்பட்ட போது செய்யப்பட்டது. இது அன்றைய மருத்துவ முறை என்ற அடிப்படையில் செய்யப்பட்டதே தவிர மார்க்க அடிப்படையில் செய்யப்பட்டதல்ல. அது போன்றது தான் இரத்தம் குத்தி எடுத்தல் என்பதும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமை உணவையே சாப்பிட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இறைத்தூதர் என்ற முறையில் தான் இவ்வாறு சாப்பிட்டார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

இறைத் தூதராக ஆவதற்கு முன்பும் அவர்கள் இவ்வுணவையே சாப்பிட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்காத எதிரிகளும் கூட இதையே சாப்பிட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் ஊரில் இருந்த வழக்கப்படி கோதுமையைச் சாப்பிட்டார்களே தவிர வஹீயின் அடிப்படையில் அல்ல என்பதை இதிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமையைச் சாப்பிட்டார்கள் என்பதற்காக நாமும் அதை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று நாம் கருதுவதில்லை. அவ்வாறு கருதுவதும் கூடாது.

அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது பயணம் செய்ததால் நாமும் ஒட்டகத்தில் பயணம் செய்வது சுன்னத் என்று கூற முடியாது.

அவர்கள் அணிந்த ஆடை வகைகளைத் தான் நாமும் அணிய வேண்டும் என்று கூற முடியாது.

அவர்களுக்கு உஹத் போரில் காயம் ஏற்பட்ட போது சாம்பலைப் பூசி இரத்தக் கசிவை நிறுத்தினார்கள். அது போல் தான் நாமும் செய்ய வேண்டும் என்று கூறக் கூடாது.

ஏனெனில் அவை யாவும் இறைத்தூதர் என்ற அடிப்படையில் அவர்கள் செய்தவை அல்ல. அவர்கள் காலத்திலும், ஊரிலும் கிடைத்த வசதிகளுக்கேற்ப வாழ்ந்தாக வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்தவையாகும்.

இந்த வேறுபாட்டை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவும் விளக்கியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரீச்சை மரத்தைப் பயிரிட்டு தொழில் செய்து வந்த மதீனாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்யாதிருக்கலாமே? என்று கூறினார்கள். மதீனாவின் தோழர்கள் உடனே இவ்வழக்கத்தை விட்டு விட்டனர். ஆனால் இதன் பின்னர் முன்பை விட மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் பேரீச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நபித் தோழர்கள் நினைவுபடுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ``உங்கள் உலக விஷயங்களை நீங்களே நன்கு அறிந்தவர்கள் எனக் குறிப்பிட்டார்கள்.

நூல் : முஸ்லிம் 4358

மற்றொரு அறிவிப்பில் நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதைக் கடைப்பிடியுங்கள்! என் சொந்தக் கருத்தைக் கூறினால் நானும் மனிதன் தான் என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல் : முஸ்லிம் 4357

மற்றொரு அறிவிப்பில் நான் எனது கருத்தைத் தான் கூறினேன். அதற்காக என்னைப் பிடித்து விடாதீர்கள்! எனினும் அல்லாஹ்வின் சார்பாக நான் ஒரு கருத்தைக் கூறினால் அதைக் கடைப்பிடியுங்கள்! ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் நான் பொய் சொல்ல மாட்டேன் என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல் : முஸ்லிம் 4356

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருந்தும், அவர்களுக்கு வஹீ எனும் இறைச்செய்தி தொடர்ந்து வந்திருந்தும் கூட அவர்களின் நடவடிக்கைகளே இரண்டு வகைகளாகப் பார்க்கப்படுகின்றது.

மனிதர் என்ற முறையில் அவர்கள் செய்தவை.

இறைவனின் செய்தியைப் பெற்று தூதர் என்ற அடிப்படையில் செய்தவை.

இதில் முதல் வகையான அவர்களின் நடவடிக்கைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியமில்லை. இரண்டாவது வகையான அவர்களின் நடவடிக்கைகளைத் தான் பின்பற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம். காரணம் இவை தான் வஹீயின் அடிப்படையில் அமைந்தவ

*ஹிஜாமா ஒரு சுன்னா என்ற அடிப்படையில் வரும் அனைத்து செய்திகளும் பலகீனமானவையே*

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ سَعْدٍ الإِسْكَافِ، عَنِ الأَصْبَغِ بْنِ نُبَاتَةَ، عَنْ عَلِيٍّ، قَالَ نَزَلَ جِبْرِيلُ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ بِحِجَامَةِ الأَخْدَعَيْنِ وَالْكَاهِلِ

It was narrated that ‘Ali said:
*“Jibra’il came down to the Prophet (Peace be upon him) with (the recommendation of) cupping* in the two veins at the side of the neck and the base of the neck.”

ஏகத்துவம்

Sunday, March 3, 2019

ஏழாம் நாளில் தான் அகீகா கொடுக்க வேண்டுமா?

ஏழாம் நாளில் தான் அகீகா கொடுக்க வேண்டுமா?

அகீகா ஏழாம் நாள் கொடுக்க முடியவில்லையானால் 14, அல்லது 21 ஆம் நாட்களில் அல்லது வேறு நாட்களில் கொடுக்கலாமா? இது தொடர்பாக நபிமொழிகள் உள்ளதா?

ஏழாம் நாளில் தான் அகீகா கொடுக்க வேண்டும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளது.

سنن أبي داود
2838 – حدَّثنا ابنُ المُثنَّى، حدَّثنا ابنُ أبي عَديٍّ، عن سعيدٍ، عن قتادةَ، عن الحسنِ عن سمرةَ بن جُندب، أن رسولَ الله – صلَّى الله عليه وسلم – قال: "كلُّ غلامٍ رَهينةٌ بعقيقتِه: تُذبَح عنه يومَ سابعِه، ويُحلَقُ، ويُسمَّى"

ஒவ்வொரு குழந்தையும் அகீகாவுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. குழந்தையின் சார்பில் ஏழாம் நாளில் ஆட்டை அறுக்க வேண்டும். அன்று முடியை மழித்து பெயர் சூட்ட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,.

அறிவிப்பவர் : சமுரா (ரலி)

நூல்கள் : அபூதாவூத், திர்மிதி, நஸாயீ, இப்னுமாஜா, அஹ்மத்

ஏழாம் நாளில் தான் அகீகா கொடுக்க வேண்டும் என்றால் ஏழாம் நாளில் தான் பெயர் வைக்க வேண்டுமா? ஏழாம் நாள் கடந்தால் பெயர் வைக்கக் கூடாதா? ஏழாம் நாள் கடந்தால் தலைமுடியை மழிக்கக் கூடாதா? என்ற சந்தேகம் எழலாம்.

இந்த மூன்று காரியங்களில் அகீகா மட்டும் தான் வணக்கம் சம்மந்தப்பட்டதாக உள்ளது. எனவே வனக்கத்தை மார்க்கம் குறிப்பிட்ட நாளில் தான் செய்ய வேண்டும்.

மற்ற இரு காரியங்களையும் ஏழாம் நாளில் செய்தால் தான் அது நபி வழியைப் பின்பற்றிய நன்மை கிடைக்கும். பெயர் சூட்டுவது அனைவருக்கும் அவசியமான ஒன்று. அந்த அவசியம் கருதி மற்ற நாட்களிலும் பெயர் வைக்கலாம். முடியைக் களைவதும் அவசியமான ஒன்று. அதை ஏழாம் நாள் தவற விட்டால் மற்ற நாட்களில் செய்யலாம். ஆனால் ஏழாம் நாளில் செய்த சுன்னத் என்ற நன்மை கிடைக்காது.

குழந்தை பிறந்த ஏழாம் நாள் அகீகா கொடுப்பதற்கே ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன. 14,21 ஆம் நாட்களில் கொடுப்பதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாக சிலர் காட்டுகின்றனர்.

المعجم الصغير للطبراني

723 – حَدَّثَنَا عَيَّاشُ بْنُ مُحَمَّدٍ الْجَوْهَرِيُّ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ الْخَفَّافُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ قَالَ: «الْعَقِيقَةُ تُذْبَحُ لِسَبْعٍ , أَوْ أَرْبَعَ عَشْرَةَ , أَوْ أَحَدَ وَعِشْرِينَ» لَمْ يَرْوِهِ عَنْ قَتَادَةَ إِلَّا إِسْمَاعِيلُ تَفَرَّدَ بِهِ الْخَفَّافُ

அகீகாவிற்காக ஏழாம் நாள், பதிநான்காம் நாள், இருபத்தி ஒன்றாம் நாள் (ஆடு) அறுக்கப்பட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

நூல்கள் : தப்ரானீ-அவ்ஸத், தப்ரானீ-ஸகீர், பைஹகீ

இது ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல. இச்செய்தியில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் இஸ்மாயீல் பின் முஸ்லிம் என்பவர் பலவீனமானவராவார்.

تهذيب الكمال في أسماء الرجال

(483) – ت ق: إِسْمَاعِيل بن مسلم مكي، أَبُو إِسْحَاق البَصْرِيّ

وَقَال عَمْرو بْن علي : كان يحيى وعبد الرحمن لا يحدثان عن إِسْمَاعِيل المكي وَقَال صالح بْن أَحْمَد بْن حنبل ، عَنْ علي ابن المديني: سمعت يحيى، يعني القطان – وسئل عن إِسْمَاعِيل بْن مسلم المكي، قيل لَهُ: كيف كَانَ فِي أول أمره؟ قال: لم يزل مخلطا، قال: يحَدَّثَنَا بالحديث الواحد على ثلاثة ضروب.

وَقَال محمد بن جعفر ابن الإمام (1) . عن إِسْحَاق بْن أَبي إسرائيل: سمعت سفيان يقول: – وذكر إِسْمَاعِيل بْن مسلم – فَقَالَ: كَانَ يخطئ فِي الْحَدِيث، جعل يحدث فيخطئ، أسأله عن الْحَدِيث، من حديث عَمْرو بْن دينار، فلا يدري إن كَانَ علمه أيضا لما سمع منه الْحَدِيث كما رأيته، فما كَانَ يدري شيئا.

وَقَال أَبُو طالب: قال أَحْمَد بْن حنبل: إِسْمَاعِيل بْن مسلم المكي منكر الْحَدِيث. وَقَال عَبد اللَّهِ بْن أَحْمَد بْن حنبل : سمعت أبي يقول: إِسْمَاعِيل بْن مسلم المكي ما روى عن الحسن فِي القراءات، فأما إذا جاء إِلَى مثل عَمْرو بْن دينار، وأسند عنه بأحاديث مناكير، ليس أراه بشيءٍ – فكأنه ضعفه – ويسند عن الحسن عن سَمُرَة بأحاديث مناكير.

وَقَال عَباس الدُّورِيُّ ، عن يَحْيَى بْن مَعِين: إِسْمَاعِيل بْن مسلم المكي ليس بشيءٍ. وكذلك قال عثمان بْن سَعِيد الدارمي  ، وأبو يَعْلَى الموصلي ، عن يَحْيَى وَقَال مُحَمَّد بْن أَحْمَدَ بْن البراء وأبو الْعَبَّاس القرشي ، عن علي ابن المديني: إِسْمَاعِيل بْن مسلم المكي لا يكتب حديثه.

وَقَال عَمْرو بْن علي : إِسْمَاعِيل المكي يحدث عنه أهل الكوفة: الأعمش وإسماعيل بْن أَبي خَالِد، وجماعة ، وكَانَ ضعيفا فِي الْحَدِيث، يهم فيه، وكَانَ صدوقا يكثر الغلط، يحدث عنه من لا ينظر فِي الرجال. وَقَال إِبْرَاهِيم بْن يعقوب السعدي  : إِسْمَاعِيل بْن مسلم واهي (الْحَدِيث) جدا وَقَال أَبُو زُرْعَة  : وهو بصري سكن مكة، ضعيف الْحَدِيث.

وَقَال أيضا  : سَأَلتُ أبي عن إِسْمَاعِيل بْن مسلم العبدي، فَقَالَ: هُوَ ضعيف الْحَدِيث مختلط ، قلت لَهُ: هُوَ أحب إليك أو عَمْرو بْن عُبَيد؟ فَقَالَ: جميعا ضعيفان، وإسماعيل هُوَ ضعيف الحديث، ليس بمتروك، ييكتب حديثه.

تركه  يحيى وابن المهدي، وتركه ابن المبارك، وربما ذكره

وَقَال النَّسَائي  : إِسْمَاعِيل بْن مسلم يروي عن الزُّهْرِيّ. متروك الْحَدِيث. وَقَال فِي موضع آخر: ليس بثقة

இவர் ஒரே ஹதீஸை எங்களிடம் மூன்று முறைகளில் அறிவிப்பார் என்று கத்தான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இவர் எந்த மதிப்பும் அற்றவர் என்று இப்னு மயீன் அவர்கள் கூறியுள்ளார்கள். இவருடைய ஹதீஸ்களை எழுதக்கூடாது என்று இப்னுல் மதீனீ குறிப்பிட்டுள்ளார்கள். இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் அதிகமாக தவறாக அறிவிப்பவர் என்று பல்லாஸ் குறிப்பிடுள்ளார்கள். இவர் முற்றிலும் பலவீனமானவர் என்று ஜவ்ஸஜானீ குறிப்பிட்டுள்ளார்கள். இவரை யஹ்யா, இப்னு மஹ்தீ ஆகியோர் (பொய்யர் என்பதால்) விட்டு விட்டார்கள் என்று இமாம் புகாரி கூறியுள்ளார்கள். இவர் ஹதீஸ் கலையில் விடப்பட்டவர் என்று இமாம் நஸாயீ கூறியுள்ளளார்கள். இவருடைய ஹதீஸ்கள் பாதுகாப்பானவை அல்ல என்று இப்னு அதீ அவர்கள் கூறியுள்ளார்கள். இவர் பிரபலமானவர்களிடமிருந்து மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவிப்பவர், அறிவிப்பாளர் வரிசையை மாற்றும் பலவீனமானவர் என்று இப்னு ஹிப்பான் அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல் : தஹ்தீபுல் கமால்

எனவே ஆதாரப்பூர்வமான செய்தியின் அடிப்படையில் ஏழாம் நாள் மட்டுமே அகீகா கொடுக்க வேண்டும்.

அந்த நாளில் கொடுக்க வசதியில்லாமல் போனால் கடன் வாங்கிக் கொடுக்க வேண்டியதில்லை. இது கட்டாயமான வணக்கம் அல்ல. வசதி உள்ளவர்கள் செய்ய வேண்டிய சிறந்த வணக்கமாகும்.

வசதியில்லாதவர்கள் இதற்காக சிரத்தை எடுத்து விடக் கூடாது என்பதற்காக ஏழாம் நாளில் கொடுக்க வசதி இருந்தால் கொடுங்கள். இல்லாவிட்டால் வேறு நாளில் கொடுக்க அதிக சிரமம் எடுக்காதீர்கள் என்று எளிமையான வழியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளனர்.

இறைவா எனக்கு நீ வசதியைத் தந்து இருந்தால் அகீகா கொடுத்து இருப்பேன் என்று உளமாற நினைக்கும் போது அந்த எண்ணத்துக்காக அகீகா கொடுத்த கூலியைக் கொடுக்கும் அளவுக்கு அல்லாஹ் கருணையாளன் என்பதை மனதில் கொள்ள வேண்டும்

Wednesday, February 13, 2019

கூட்டு துஆ கூடாது

கூட்டு துஆ கூடாது

கடமையான தொழுகைகளுக்குப் பிறகும் இன்னும் பல சந்தர்ப்பங்களிலும் ஒருவர் துஆ ஓத மற்றவர்கள் ஆமீன் கூறும் வழக்கம் உள்ளது. இது கூட்டு துஆ என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த வழிமுறைக்கு திருக்குர்ஆனிலும், நபிவழியிலும் எந்த ஆதாரமும் இல்லை.

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்.

திருக்குர்ஆன் 7:55

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்.

திருக்குர்ஆன் 7:205

இவ்வசனங்கள் இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்ற வழிமுறையைக் கற்றுத் தருகின்றன.

ஒரு அதிகாரியிடம், அமைச்சரிடம் நமது கோரிக்கைகளை எழுப்புவது என்றால் அதற்கென சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

நமது கோரிக்கையைக் கேட்கும் போது அடுக்கு மொழியில் வசனம் பேசினால், அல்லது ராகம் போட்டு கோரிக்கையை எழுப்பினால் கோரிக்கை எவ்வளவு நியாயமானது என்றாலும் அந்த அதிகாரி ஏற்க மாட்டார். அல்லது கடுமையான சப்தத்தில் கோரிக்கையை எழுப்பினாலும் கோரிக்கை நிராகரிக்கப்படும்.

மனிதனிடம் கோரிக்கை வைக்கும் போது காட்டப்படும் பணிவை விட ஆயிரமாயிரம் மடங்கு அதிகமாக அல்லாஹ்விடம் பணிவைக் காட்ட வேண்டும். அதைத் தான் அல்லாஹ் இங்கே கூறுகிறான்.

பணிவுடன் உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பது முதலாவது ஒழுங்கு. அல்லாஹ்விடம் கேட்கும் போது ராகம் போட்டோ, அடுக்கு மொழியிலோ கேட்டால் அங்கே பணிவு எடுபட்டுப் போய் விடும்.

பெரும்பாலான பள்ளிவாசல்களில் இப்படித் தான் பணிவு இல்லாமல் யாரிடம் கேட்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் சடங்காகப் பிரார்த்தனை செய்கின்றனர்.

மேலும் இரகசியமாகப் பிரார்த்திப்பது பிரார்த்தனையின் ஒழுங்காக இங்கே குறிப்பிடப்படுகிறது.

இதிலிருந்து கூட்டாக சப்தமிட்டுக் கேட்பது முறையான பிரார்த்தனை இல்லை என்பது தெரிய வரும்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனித் தேவைகள் உள்ளன. அவரவர் தத்தமது தேவையை தமது மொழியில் பணிவுடனும், ரகசியமாகவும் கேட்பதே பிரார்த்தனையின் முக்கிய ஒழுங்காகும்.

இறைவன் எவ்வாறு பிரார்த்திக்குமாறு நமக்குக் கட்டளையிடுகிறானோ, அவ்வாறு செய்யப்படும் பிரார்த்தனையைத் தான் ஏற்றுக் கொள்வான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இறைவனை எவ்வாறு நினைவு கூர வேண்டும் என்ற ஒழுங்கும் இங்கே கூறப்படுகிறது. முதலில், பணிவுடனும், அச்சத்துடனும் இறைவனை நினைவு கூர வேண்டும். இரண்டாவது, நாவால் மட்டும் இறைவனின் பெயரைக் கூறாமல் உள்ளத்திலும் நினைவு கூர வேண்டும். மூன்றாவதாக, உரத்த சப்தமின்றி நினைவு கூர வேண்டும்.

இன்றைக்கு தமிழக முஸ்லிம்களில் பலர் ராத்திபு என்ற பெயரிலும், ஹல்கா' என்ற பெயரிலும் பெரும் கூச்சலுடனும், ஆட்டம் பாட்டத்துடனும் அல்லாஹ்வை நினைவு கூர்வதாக நினைத்துக் கொண்டு பாவத்தைச் சுமந்து வருகின்றனர்.

கூட்டு துஆ கூடாது என்பது குறித்து கூடுதலாக அறிய திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் 192, 180 ஆகிய குறிப்புக்களைப் பார்க்கவும்.

பிரார்த்தனையே வணக்கம்

ஏகத்துவம் ஜூலை 2006

பிரார்த்தனையே வணக்கம்

குர்ஷித் பானு

ஆசிரியை, அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமியக் கல்வியகம்

இறைவன் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்துவாய்ப்புகளையும் கொடுத்து உள்ளான். இவ்வாறு அனைத்து வசதி வாய்ப்புகளையும்மனிதனுக்கு ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் இறைவன் அந்த மனிதனிடம் கூறுவதுஒன்றே ஒன்று தான். "நீ என்னை மட்டுமே வணங்க வேண்டும்; எனக்கு எதையும்இணையாக்காதே” என்பது தான் அது!

இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்றுதான்பிரார்த்தனை!

"பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்”என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, "என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும்பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்’ என்று உங்கள் இறைவன்கூறுகிறான்” என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல்: திர்மிதீ 3372

எனவே இந்தப் பிரார்த்தனை என்ற வணக்கத்தை இறைவனுக்கு மட்டுமே செய்யவேண்டும். இறைவன் அல்லாத வேறு எவரிடமும் நம்முடைய தேவைகளைக் கேட்கக்கூடாது.

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் "நான் அருகில் இருக்கிறேன்.பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த் தனைக்குப் பதிலளிக்கிறேன்.எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால்அவர்கள் நேர் வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக!) (அல்குர்ஆன் 2:186)

பிரார்த்தனையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்

பணிவோடு பிரார்த்திக்க வேண்டும்

பிரார்த்தனை செய்யும் போது, அனைத்து ஆற்றல்களையும் உள்ளடக்கியிருக்கும் சர்வவல்லமை படைத்தவனின் முன்னிலையில் நாம் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன்அடக்கத்தோடும், பணிவோடும் பிரார்த்திக்க வேண்டும்.

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்புமீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55)

அவர் (ஸக்கரிய்யா) தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார்.

(அல்குர்ஆன் 19:3)

உறுதியான நம்பிக்கையுடன் கேட்க வேண்டும்

பிரார்த்தனை செய்யும் போது "இறைவன் கட்டாயம் தருவான், அவனால் தர முடியும்”என்ற உறுதியான நம்பிக்கையுடன் பிரார்த்திக்க வேண்டும்.

அச்சத்துடனும், நம்பிக்கை யுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்!அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.

(அல்குர்ஆன் 7:56)

வலியுறுத்திக் கேட்க வேண்டும்

இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்போது, "நீ விரும்பினால் தா! இல்லையென்றால்தர வேண்டாம்” என்பது போன்று கேட்கக்கூடாது. மாறாக, "இதை நீ தந்து தான் ஆகவேண்டும்;உன்னால் தான் தர முடியும்; வேறு யாராலும் தர முடியாது” என்றுவலியுறுத்திக் கேட்க வேண்டும்.

"நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே! நீ நினைத்தால்எனக்கு வழங்கு! என்று சொல்ல வேண்டாம். வலியுறுத்திக் கேட்பது இறைவனைநிர்ப்பந்திக்காது. ஏனெனில் அவனை நிர்ப்பந்திப்பவர் யாருமில்லை” என்று நபியவர்கள்கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 6338

பாவமானதைக் கேட்கக் கூடாது

பிரார்த்தனை செய்யும் போது இறைவனால் தடை செய்யப் பட்டுள்ளதைக்கேட்கக்கூடாது. உதாரணமாக ஒருவன் திருடப் போகும் போது, "இறைவா, நான் திருடப்போகின்றேன். எனக்கு நிறைவாகப் பொருட்கள் கிடைக்கச் செய்” என்பது போல்பிரார்த்திக்கக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"நான் பிரார்த்தித்தேன்; ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை” என்று (மனிதன்)கூறுகின்றான்.உறவைத் துண்டிக்கும் விஷயத்திலும், பாவமானவற்றிலும் பிரார்த்தனைசெய்தால் அது அந்த அடியாருக்குப் பதிலளிக்கப்படாது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 2735

அவசரப்படக்கூடாது

பிரார்த்தனை செய்யும் போது அவசரப்படக் கூடாது. பலமுறை திரும்பத் திரும்பக் கேட்கவேண்டும். ஓரிரு முறை மட்டும் கேட்டு விட்டு, நான் பிரார்த்தித்தேன், எனக்குக்கிடைக்கவில்லை என்று கூறி பிரார்த்திப்பதையே விட்டு விடக் கூடாது. இத்தகையஎண்ணத்துடன் பிரார்த்தனை செய்தால் அது ஏற்கப்படாது.

"நான் பிரார்த்தித்தேன்; ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லைஎன்று கூறி நீங்கள்அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6340

நிராசை அடையக் கூடாது

சிலர் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் கேட்கும் அந்தக் காரியம்நிறைவேறவில்லை என்றால் அல்லாஹ்வின் அருளில்நிராசை அடைந்து விடுவார்கள்.அல்லாஹ்வின் அருள் விசாலமானது. எனவே அவனது அருளில் நிராசையடையக்கூடாது.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில்நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ்மன்னிப்பான்.அவன் மன்னிப்பவன்;நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்)தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும்கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்கமாட்டார்கள். (அல்குர்ஆன் 12:87)

உணவும் உடையும் ஹலாலாக இருத்தல்

பிரார்த்தனை செய்யக் கூடியவனின்உணவும், உடையும், பானமும் ஹலாலானமுறையில் இருக்க வேண்டும். பிறரை ஏமாற்றியோ அல்லது மோசடி செய்தோ,அடுத்தவர்களின் பொருளை அபகரித்தோ அல்லது வட்டிப் பணத்திலோவாங்கிய உணவுமற்றும் உடைகளைப் பயன்படுத்திக் கொண்டு ஒருவன் பிரார்த்தித்தால் அந்தப்பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். அல்லாஹ் நபிமார்களுக்கு எதை ஏவினானோ அதையேமுஃமின்களுக்கும் ஏவுகின்றான்என்று கூறி விட்டு,

தூதர்களே! நல்ல பொருள் களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள். (ஸாலிஹான)நல்லமல்களைச் செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன்.

(அல் குர்ஆன் 23:51)

நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ள வற்றிலிருந்து தூய்மையானவற்றையே உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாகஇருப்பின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.

(அல்குர்ஆன் 2:172)

ஆகிய வசனங்களை ஓதிக் காட்டினார்கள். பின்பு ஒரு மனிதரைப் பற்றிகுறிப்பிட்டார்கள். "அவனோ நீண்ட தூரம் பயணத்தில் இருக்கின்றான். அவனுடைய தலை புழுதிபடிந்துபரட்டையாக இருக்கின்றது. அவன் வானத்தின் பால் கைகளை உயர்த்தி, எனதுஇறைவனே! எனது இறைவனே! என்று அழைக்கின்றான். அவனது ஆடை, அவனதுஉணவு, அவனது குடிப்பு ஆகிய அனைத்தும் ஹராமாக இருக்கின்றது. அவனே ஹராமில்மூழ்கி விட்டான். இந்த நிலையில் அவனது துஆ எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?”என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1844

இந்த ஒழுங்கு முறைகள் அனைத்தையும் ஒருவர் கடைப்பிடித்து, பிரார்த்தனைசெய்கிறார். இருந்தும் அவரது பிரார்த்தனை அங்கீகரிக்கப்படவில்லை என்றால்அதனால் அவர் நம்பிக்கை இழந்து விடக் கூடாது. தமது பிரார்த்தனையை இறைவன்ஏற்றுக் கொள்ளவில்லை என்று எண்ணி விடக் கூடாது.

இறைவன் தன் அடியார்கள் மீது மிகவும் கருணையுள்ளவன். அந்த அடியான் வெளித்தோற்றத்தை வைத்துக் கொண்டு அவனுடைய அறியாமையினால் தனக்குத் தீங்கு தரக்கூடியதைக் கேட்பான். உதாரணமாக, தனக்கு நிறையசெல்வம் வேண்டும் என்றுபிரார்த்தனை செய்வான். ஆனால் அந்தச் செல்வம் அவனை இறை நிராகரிப்புக்குஇழுத்துச் செல்லும் என்றிருந்தால் அதைக் கொடுக்காமல் அதைவிடச் சிறந்ததைஇறைவன் கொடுப்பான். ஒருவன் தனக்கு ஏற்படவுள்ள ஆபத்தை உணராமல் தனதுதேவையைக் கேட்கின்றான். அனைத்தையும் அறிந்த இறைவன் அதைக் கொடுப்பதற்குப்பதிலாக அவனுக்கு வரவிருக்கும் ஆபத்தை நீக்குகின்றான். அதுவும் இல்லையெனில்அவன் கேட்டதைக் கொடுக்காமல் அதற்குப் பகரமாக மறுமையில் அவனதுநிலையைஉயர்த்துவான்.

"உறவைத் துண்டிக்காமலும் பாவமானகாரியத்தில் அல்லாமலும் எந்த ஒருபிரார்த்தனையை ஒரு முஸ்லிம் செய்தாலும் அவரது அந்தப் பிரார்த்தனைக்குவிரைவாகப் பதில் அளிக்கப்படும். அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒருசேமிப்பாக ஆக்குகின்றான். அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்கவாறு அவனதுபாவத்தை அழிக்கின்றான். இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில்அல்லாஹ் பதிலளிக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "நாங்கள்அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு"அல்லாஹ் அதிகமாக்குவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: அஹ்மத் 11150

ஓர் அடியான் தன்னிடம் பிரார்த்தனை செய்யும் போது அவனை வெறுங் கையுடன்அனுப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகின்றான்.

"உங்களுடைய இறைவன் சங்கையானவன்.அவனுடைய அடியார் தனது கையை அவன்பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளையும் வெறுமனே அனுப்புவதற்குவெட்கப்படுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸல்மான் (ரலி)

நூல்: இப்னு மாஜா 3911

பாவமானதையும், உறவைத் துண்டிக்கும் விதத்திலும் இல்லாத எல்லா துஆக்களும்ஒப்புக் கொள்ளப்படும்என்றாலும் சில குறிப்பிட்ட நேரங்களில் செய்யப்படும்பிரார்த்தனைகள் மற்ற நேரங்களில் செய்யப்படும் பிரார்த்தனைகளை விட அதிகமதிகம்ஏற்றுக் கொள்ளப்படும். எனவே அந்தச் சந்தர்ப்பங்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

பதிலளிக்கப்படும் துஆக்கள்

கடமையான தொழுகைக்குப் பின்..

கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற்றிய பின் கேட்கப்படும் துஆஏற்றுக் கொள்ளப்படும்.

"எந்தப் பிரார்த்தனை செவியேற்கப்படும்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது.அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இரவில் கடைசியிலும் கடமை யாக்கப்பட்டதொழுகைக்குப் பின்னரும் கேட்கும் பிரார்த்தனை ஆகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

நூல்: திர்மிதீ 3499

ஸஜ்தாவின் போது…

ஓர் அடியான் அல்லாஹ்விடம் மிக நெருக்கமாக இருக்கும் நேரம் ஸஜ்தாவாகும்.எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகின்றது.

"ஸஜ்தாவில் இருக்கும் நிலையில் ஓர் அடியான் தன்னுடைய இறைவனைநெருங்குகின்றான். எனவே ஸஜ்தாவில்துஆவை அதிகப்படுத்துங்கள்” என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 482

இரவின் கடைசி நேரத்தில்…

இரவின் கடைசிப் பகுதியில் செய்யும் துஆவும் பதிலளிக்கப்படும் துஆக்களில் ஒன்று.எனவே அந்த நேரத்திலும் அதிகமாகப் பிரார்த்திக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவை மூன்றாகப் பிரித்து, கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்திற்கு தினமும்இறங்குகின்றான். "என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் ஏற்கின்றேன்.என்னிடம் யாரேனும் கேட்டால் நான் அதை ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும்மன்னிப்பு கேட்டால் நான் மன்னிக்கிறேன்” என்று கூறுகின்றான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6321

மறைமுகமான பிரார்த்தனை

நாம் யார் மீது அதிகப் பிரியம் வைத்திருக்கிறோமோ அவர்களுக்காகப் பிரார்த்தனைசெய்ய வேண்டும் என்று நினைப்போம். அப்போது அவர்கள் முன்னிலையிலேயேபிரார்த்திப்பதை விட அவர்களுக்குத் தெரியாமல் மறைமுகமாகப் பிரார்த்திக்கும் போதுஅது கட்டாயம் ஏற்றுக் கொள்ளப்படும்.

நான் ஷாமுக்கு வந்து அபூ தல்ஹாவிடம், அவரது வீட்டிற்குச் சென்றேன். அவரை நான்காணவில்லை. உம்மு தல்ஹாவை நான் கண்டேன். அப்போது அவர், "இந்த வருடம்நீங்கள் ஹஜ் செய்ய நாடுகின்றீரா?” என்று கேட்டார். அதற்கு நான், ஆம் என்றேன்.அப்போது அவர், "நீங்கள் எங்களது நன்மைக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றுகூறிவிட்டு, பின்வருமாறு கூறினார்.

"ஒரு முஃமினான மனிதர் தன்னுடைய சகோதரனுக்காக மறைமுகமாகப் பிரார்த்தித்தால்அவருக்கென்று சாட்டப்பட்டுள்ள மலக்கு பதிலளிக்கின்றார். அவர் தன்னுடையசகோதரரின்நன்மைக்குப் பிரார்த்தனை செய்யும் போதெல்லாம் அவருக்காக சாட்டப்பட்ட மலக்கு, "ஆமீன், உங்களுக்கும் அவ்வாறே ஆகட்டும்’ என்று கூறுவார்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

நூல் முஸ்லிம் 2733

தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ

தந்தை தன் பிள்ளைகளுக்காகச் செய்யும் துஆவும் அதிகமாக ஒப்புக்கொள்ளப்படும்.இன்றுள்ள பிள்ளைகள் பெற்றோரை ஒரு தொல்லை எனக் கருதி சரியாகக்கவனிக்காமல் விட்டு விடுகின்றார்கள். ஆனால் பிள்ளைகள் கவனிக்கா விட்டாலும்பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள்.தங்கள் பிள்ளைகள் நல்ல முறையில் கவனித்தால் இன்னும் அதிகமாகவேஅவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். எனவே பிள்ளைகள் பெற்றோரிடத்தில்நல்ல முறையில் நடந்து கொண்டு பெற்றோரின் துஆவைப் பெற வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்தச்சந்தேகமும் இல்லை.

1. அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. 2. பிரயாணியின் பிரார்த்தனை. 3. தந்தைதனது மகனுக்காகச் செய்யும் பிரார்த்தனை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: இப்னுமாஜா 3908

நோன்பாளி நோன்பு துறக்கும் போது…

ஒரு அடியான் நோன்பு நோற்று, தனக்கு அனுமதிக்கப்பட்ட உணவு, பானம்அனைத்தும்தன் அருகில் இருந்தாலும் தனது இறைவனின் கட்டளைக்கு அஞ்சி, பசி, தாகம்,உணர்ச்சிகள் போன்றவற்றை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறான். இந்த அடியான்நோன்பு துறக்கும் போது கேட்கும்பிரார்த்தனையை இறைவன் அங்கீகரிக்கின்றான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:மூன்று பேரின் பிரார்த்தனை மறுக்கப்படாது. நீதியானஅரசன், நோன்பாளி நோன்பு துறக்கும் போது கேட்கும் பிரார்த்தனை, பாதிக்கப்பட்டவர்செய்யும் பிரார்த்தனை. அதை அல்லாஹ் புழுதிகளை விட்டும் உயர்த்துவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: இப்னுமாஜா 175

பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில்…

"பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது”என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: அபூதாவூத் 521

போர்க்களத்தில்…

"பாங்கின் போதும், சிலர் சிலருடன் மோதும் போர்க் களத்திலும் பிரார்த்தனைகள்மறுக்கப் படுவதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)

நூல்: அபூதாவூத் 2540

ஜும்ஆ நாளில்…

"வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம்தொழுகையில் நின்று அல்லாஹ் விடம் எதையேனும் கேட்டால் அதை அல்லாஹ்அவருக்குக் கொடுக்காமல் இருப்பதில்லை” என்று அபுல்காஸிம் (நபி-ஸல்) அவர்கள்கூறினார்கள். அந்த நேரம் மிகக் குறைவானது என்பதைத் தமது கையால் சைகை செய்துகாட்டினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6400

பிரயாணத்தின் போது…

பிரயாணம் என்பது ஒரு சிரமமான காரியம். நபி (ஸல்) அவர்கள், பிரயாணத்தை நரகவேதனையின் ஒரு பகுதி என்று கூறியுள்ளார்கள். எனவேஇந்தப் பிரயாணத்தின் போதுகேட்கப்படும் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும்.

மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்தச்சந்தேகமும் இல்லை.

1. அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. 2. நோன்பாளி நோன்பு துறக்கும் போதுசெய்யும் பிரார்த்தனை. 3. பிரயாணியின் பிரார்த்தனை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: இப்னுமாஜா 3909

எனவே நாம் பிரார்த்தனை செய்யும்போது, நம்மைப் படைத்த ஏகனாகியஅல்லாஹ்விடத்தில் மட்டுமே முறையிட்டு, அவனுடன் யாரையும் கூட்டாக்காமல்,பிரார்த்தனையின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளைக் கடைப்பிடித்துபிரார்த்திப்போமாக!

எல்லா நேரத்திலும், எல்லா நிலைகளிலும் வல்ல நாயனை மட்டுமேவணங்கக்கூடியவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக!