பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Tuesday, January 30, 2018

தவாஃபுக்கு_உளூ_அவசியமா

#ஹஜ்_உம்ரா

#தவாஃபுக்கு_உளூ_அவசியமா?

#பதில்

ஹஜ்ஜிலும், உம்ராவிலும் கஅபாவை தவாஃப் செய்யும் போது உளூச் செய்ய வேண்டுமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.

ஷாஃபி, மாலிக் ஆகிய இமாம்கள் தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று கூறுகின்றனர். உளூவில்லாமல் தவாஃப் செய்தால் அது செல்லாது என்று இவர்கள் கூறுகின்றனர். அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் மாறுபட்ட இரு கருத்துக்களையும் கூறியதாக இரண்டு அறிவிப்புகள் உள்ளன. தவாஃப் செய்யும் போது உளூ அவசியம் இல்லை என்று அபூஹனீஃபா இமாம் கூறுகின்றார்கள்.

கஃபாவை தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதாக ஒரு ஹதீசும் இல்லை. தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று இருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகக் கட்டளையிட்டிருப்பார்கள். எனவே தவாஃபுக்கு உளூ கட்டாயம் இல்லை என்பதே சரியான கருத்தாகும்.

“முன்னோர்களான நல்லறிஞர்களில் மிக அதிகமானோரின் கருத்து இது தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து ஏராளமான நபித்தோழர்கள் ஹஜ்ஜும், உம்ராவும் செய்துள்ளனர். அப்படியிருந்தும் ஒரே ஒரு தோழருக்குக் கூட உளூச் செய்து விட்டு தவாஃப் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. இது அவசியமாக இருந்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டாயமாக விளக்கியிருப்பார்கள்” என்று இப்னு தைமிய்யா அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

தவாஃபுக்கு உளூ அவசியம் என்ற கருத்துடையவர்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் பலவீனமானவையாக அமைந்துள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்து விட்டு தவாஃப் செய்தார்கள்.

(புகாரி 1615, 1642)

இதைத் தமது கருத்தை நிலைநாட்டும் ஆதாரமாக எடுத்து வைக்கிறனர். இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்றாலும் இதிலிருந்து எடுத்து வைக்கும் வாதம் பலவீனமானதாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு காரியத்தைச் செய்தால் அந்தக் காரியம் கட்டாயக் கடமை என்ற பொருளைத் தராது. அவர்களின் காரியங்களில் கடமையானவைகளும் உள்ளன. விரும்பத்தக்கவைகளும் உள்ளன. அனுமதிக்கப்பட்டவைகளும் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒருவர் ஸலாம் கூறிய போது அவருக்குப் பதில் சொல்லாமல் தயம்மும் செய்த பின்னர் தான் பதில் ஸலாம் கூறியுள்ளார்கள்.

(புகாரி 337)

இதை ஆதாரமாக வைத்து ஸலாமுக்குப் பதில் கூற உளூ அவசியம் என்று முடிவு செய்ய முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த காரியங்களில் எவை குறித்து வலியுறுத்தி கட்டளை பிறப்பித்துள்ளார்களோ அவை மட்டும் தான் கட்டாயமானவையாகும்.

அவர்கள் கட்டளை பிறப்பிக்காமல் வணக்க வழிபாடுகள் தொடர்பான ஒன்றைச் செய்தால் அவை விரும்பத்தக்கவை என்று தான் கருத வேண்டும். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு தவாஃபுக்கு உளூ அவசியம் என்ற முடிவுக்கு வர முடியாது.

ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்ற போது அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “நீ தூய்மையாகும் வரை கஃபாவில் தவாஃப் செய்வதைத் தவிர ஹாஜிகள் செய்யும் அனைத்துக் காரியங்களையும் செய்” என்று கூறினார்கள்.

இது புகாரியில் 305, 1650 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவாஃபுக்கு உளூ அவசியம் என்ற கருத்துடையவர்கள் இதையும் தமது கருத்துக்குரிய ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

இந்த ஹதீஸிலும் இவர்களின் வாதத்தை நிரூபிக்கும் கருத்து இல்லை.

மாதவிடாய் நின்று தூய்மையாகும் வரை தவாஃப் செய்யக் கூடாது என்பது தான் இதிலிருந்து பெறப்படும் கருத்தாகும். உளூவுக்கும், இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

மாதவிடாய் நேரத்தில் தொழக் கூடாது என்பதைப் போல் தவாஃபும் செய்யக் கூடாது என்பது மட்டும் தான் இதிலிருந்து விளங்குகிறதே தவிர மாதவிடாய் அல்லாத போது பெண்கள் உளூச் செய்யாமல் தவாஃப் செய்யக் கூடாது என்ற கருத்தை இந்த ஹதீஸிலிருந்து பெற முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்து விட்டு தவாஃப் செய்ததால் அது விரும்பத்தக்கது என்று கூற முடியும்.

ஆயினும் தவாஃபுக்குப் பின் இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும் என்பதால் தவாஃபுக்கு முன்பே உளூச் செய்து கொள்வது நமது சிரமத்தைக் குறைக்கும். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னத்தைப் பேணிக் கொண்ட நன்மையும் கிடைக்கும்.

தவாஃபை_ஆரம்பிக்கும்போது_பிஸ்மில்லாஹி_அல்லாஹு_அக்பர்_என்று_கூறி_சுற்றை

#ஹஜ்_உம்ரா

#தவாஃபை_ஆரம்பிக்கும்போது_பிஸ்மில்லாஹி_அல்லாஹு_அக்பர்_என்று_கூறி_சுற்றை_ஆரம்பிக்க_வேண்டும்_என்பது சரியா?

#பதில்

பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாகத் தான் பைஹகீ எனும் நூலில் காணப்படுகின்றது. எனவே இது நபி வழியல்ல. தவாஃபின் போது ஹஜ்ருல் அஸ்வதுக்கு அருகில் வருகின்ற ஒவ்வொரு தடவையும் அதை நோக்கி சைகை செய்து தக்பீரும் சொல்வது தான் நபிவழியாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை தவாஃப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கொண்டு ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு “அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 1613

Monday, January 29, 2018

தவாஃபுல் குதூமில் சற்று வேகமாக சுற்றவேண்டிய

#ஹஜ்_உம்ரா

#ரமல்_3_சுற்றுகளில்_வேகமாக_சுற்றி_தவாஃப்_செய்வது_பெண்களுக்குமா?

தவாஃபுல் குதூமில் சற்று வேகமாக சுற்றவேண்டிய முதல் 3 சுற்றுக்களிலும் ‘ரமல்’ என்று சொல்லப்படும் புஜத்தை குலுக்கவேண்டும் என்று சொல்வது சரியா? 3 சுற்றுக்களில் வேகமாக சுற்றி தவாஃப் செய்வது பெண்களுக்குமா?

#பதில்

இது ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் பொதுவான சட்டம் தான். பெண்களுக்கு இதில் விதிவிலக்கு இந்திருக்குமானால் அதை அல்லாஹ்வும் அவனது தூதரும் விளக்கியிருப்பார்கள்.

உபரியான_தவாஃப்கள்_செய்யும்_போது_ஆண்கள்_வலது_புஜம

#ஹஜ்_உம்ரா

#உபரியான_தவாஃப்கள்_செய்யும்_போது_ஆண்கள்_வலது_புஜம்_தெரியுமாறு_இஹ்ராமின்_மேலாடையை_அணிந்து_கொள்ளனுமா?

#பதில்

நபி (ஸல்) அவர்கள் வலது தோள் புஜம் தெரியுமாறு இடது தோள் மீது போர்வையைப் போட்டுக் கொண்டு தவாஃப் செய்தார்கள்.

அறிவிப்பவர்: யஃலா பின் உமைய்யா

நூல்: திர்மிதி 787, அபூதாவூத் 1607

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் வலது புஜம் தெரியுமாறு ஆடையணிந்தது தவாஃபுல் குதூமில் மட்டும் தான். காரணம், ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலால் ஆகிவிடுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

(அபூதாவூத் 1708)

ஒவ்வொருவரும் தையல் ஆடைகளை அணிந்து கொள்ளலாம் என்றாகி விடுகின்றது. தவாஃபுல் விதாவிலும் இதுபோன்றே ஆடை அணிவதால், வலது புஜம் திறந்து இடது புஜத்தை மூடுவது தவாஃபுல் குதூமில் மட்டும் தான் என்பதைத் தெளிவாக விளங்கலாம். மற்ற உபரியான தவாஃபுகளில் இந்த முறை இருப்பதாக எந்த அறிவிப்பும் வரவில்லை.

தவாஃப்_ஸயீ_பாதியில்_நிறுத்தி_தொடரலாமா

#ஹஜ்_உம்ரா

#தவாஃப்_ஸயீ_பாதியில்_நிறுத்தி_தொடரலாமா?

தவாஃபின்போது உளூ அவசியமில்லை என்றாலும் அது சுன்னத் என்ற அடிப்படையில் உளூ செய்கிறோம். தவாஃபை முடிப்பதற்குள் உளூ முறிந்து அந்த சுன்னத்தைத் தொடர விரும்பினாலோ, அவசரமான இயற்கைத் தேவைகளினால் பாதியில் சென்றுவிட்டாலோ, ஒரே நேரத்தில் 7 சுற்றுக்களையும் சுற்ற இயலாமல் போனாலோ இடையில் களைப்பாறிவிட்டு பிறகு மீதி சுற்றுகளை அந்த பாதியிலிருந்தே தொடரலாமா? அதுபோல் ஸயீயிலும் பாதியில் நிறுத்தி தொடரலாமா?

#பதில்

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

அல்குர்ஆன் 2:286

இந்த வசனத்தின் அடிப்படையில் எவரையும் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை. இயற்கைத் தேவை அல்லது இயலாமை போன்ற காரணங்களால் தவாஃபை இடையில் முறித்து விட்டால், விடுபட்ட சுற்றிலிருந்து மீண்டும் தொடங்கிக் கொள்ளலாம்.

உபரியான தவாஃப் என்றால் சுற்றுக்களைத் தொடராமல் விட்டாலும் அதனால் பாதிப்பு இல்லை. ஆனால் உம்ரா, ஹஜ் ஆகியவற்றின் தவாஃபுகளைத் தொடராமல் விட்டால் அது முழுமையடையாது. எனவே விட்ட சுற்றிலிருந்து மீண்டும் சுற்றுக்களைத் தொடர்ந்து முழுமைப்படுத்த வேண்டும். ஸயீயிலும் இவ்வாறு தான்.

ஹஜ்ருல்_அஸ்வத்தை_நோக்கு_தக்பீர்_சொன்ன_பின்_துஆ_உண்டா

#ஹஜ்_உம்ரா

#ஹஜ்ருல்_அஸ்வத்தை_நோக்கு_தக்பீர்_சொன்ன_பின்_துஆ_உண்டா?

ஹஜ்ருல் அஸ்வதை தொட்டு முத்தமிட முடியாதபட்சத்தில், அதை நோக்கி கையை நீட்டி ‘அல்லாஹு அக்பர்’ என சொல்லும்போது சைகைக்காக நீட்டிய கையை முத்தமிட்டுக் கொள்ளலாமா? ஹஜ்ருல் அஸ்வதை நோக்கி கையை நீட்டி தக்பீர் சொல்லிய பிறகு ‘அல்லாஹும்ம ஈமானம் பிக, வ தஸ்தீகம் பிகிதாபிக….’ என்பதுபோல் ஆரம்பிக்கும் துஆக்களுக்கு ஆதாரம் உள்ளதா?

#பதில்

இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான், நபி (ஸல்) அவர்கள் அதைக் கையால் தொட்டு முத்தமிடுவதையும் வாயால் முத்தமிடுவதையும் கண்டேன்!” எனக் கூறினார்கள்.

நூல்: புகாரி 1611

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை தவாஃப் செய்தார்கள்; ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் சைகை செய்தார்கள்.

நூல்: புகாரி 1612, 1613, 5293

ஹஜ் அஸ்வதை கைகளால் தொட்டு, அந்தக் கையை முத்தமிடுவது, வாயால் முத்தமிடுவது போன்றவை தான் ஹதீஸ்களில் இடம்பெறுகின்றது. இதற்கு இயலாவிட்டால் அதை நோக்கி சைகை செய்வதற்கு ஆதாரம் உள்ளது.

சைகை செய்த கையை முத்தமிட்டதாக ஹதீஸ்களில் எந்த ஆதாரமும் இல்லை.

ஹஜ்ருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிடுவதற்காகவோ, அல்லது சைகை செய்வதற்காகவோ பிரத்தியேகமான பிரார்த்தனை எதுவும் ஹதீஸ்களில் இல்லை.

Thursday, January 25, 2018

ஹஜ்ருல்_அஸ்வத்தை_முத்தமிடும்_போது_தக்பீர்_கூற_வேண்டுமா

#ஹஜ்_உம்ரா

#ஹஜ்ருல்_அஸ்வத்தை_முத்தமிடும்_போது_தக்பீர்_கூற_வேண்டுமா?

#நேரடியாக_முத்தமிட_வாய்ப்பு_கிடைத்தால்_அப்போதும்_தக்பீர்_சொல்லித்_தான்_முத்தமிடவேண்டுமா? #சைகை_செய்வதற்கு_மட்டும்தான்_தக்பீரா? #இடது_அல்லது_வலது_எந்த_கையால்_வேண்டுமானாலும்_சைகை_செய்துக்_கொள்ளலாமா?

#பதில்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை தவாஃப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கொண்டு ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு “அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 1613

ஹஜ்ருல் அஸ்வதுக்கு வரும் போதெல்லாம் தக்பீர் சொல்ல வேண்டும். நேரடியாக முத்தமிட வாய்ப்புக் கிடைத்தாலும் ஹஜ்ருல் அஸ்வதுக்கு நேராக வரும் போது தக்பீர் சொல்வது நபிவழியாகும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (அங்க) சுத்தம் செய்யும்போதும், தலைவாரும்போதும், செருப்பணியும்போதும் தம்மால் இயன்ற தமது  காரியங்கள் அனைத்திலும் வலப் பக்கத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள்.

நூல்: புகாரி 426

நபி (ஸல்) அவர்கள் அனைத்து நல்ல காரியங்களையும் வலது கையால் செய்வதையே விரும்புவார்கள். எனவே வலது கையைக் கொண்டு சைகை செய்வதே சிறந்ததாகும்.

ருக்னுல்_யமானியை_தொட்டு_முத்தமிட_வேண்டுமா

#ஹஜ்_உம்ரா

#ருக்னுல்_யமானியை_தொட்டு_முத்தமிட_வேண்டுமா?

“ருக்னுல் யமானியை முத்தமிடக்கூடாது; கையால் தொட மட்டுமே செய்ய வேண்டும்’ என்பது சரியா? “ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொட்டு முத்தமிட வேண்டும் என்பது சரியா?

#பதில்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான்கு மூலைகளில் “யமானி’ எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 166, 1609

இந்த ஹதீஸில் முத்தமிட்டதாகக் கூறப்படவில்லை. தொடுவது மட்டும் தான் கூறப்படுகின்றது.

ருக்னுல் யமானியை முத்தமிட்டதாக நாம் தேடிய வரையில் எந்த ஹதீசும் இல்லை. ருக்னுல் யமானியை கையால் தொடுவது தான் நபிவழியாகும்.

தவாஃபுக்குப்_பிறகு_மாகாமு_இபுராஹீமில்_தொழுதுவிட்டு_துஆ

#ஹஜ்_உம்ரா

#தவாஃபுக்குப்_பிறகு_மாகாமு_இபுராஹீமில்_தொழுதுவிட்டு_துஆ_செய்வது_சுன்னத்தா?

தவாஃபுக்கு பிறகு “மகாமு இப்ராஹீமி’ல் தொழுதுவிட்டு துஆ செய்வது சுன்னத்தா? அல்லது துஆ செய்யாமல் நேரடியாக ஸயீ செய்ய செல்ல வேண்டுமா? “மகாமு இப்ராஹீமி’ல் எப்போது தொழுதாலும் துஆ செய்யவேண்டுமா?

#பதில்

மகாமு இப்ராஹீமில் நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்ததாக ஹதீஸ் எதுவும் காணப்படவில்லை. முஸ்லிம் (2137) அறிவிப்பவின்படி, அங்கு தொழுதுவிட்டு ஜம்ஜம் நீரைப் பருகுதல், தலைக்கு ஊற்றுதல், ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுதல் தவிர்த்து வேறெதுவும் வரவில்லை. எனவே இவற்றை முடித்துவிட்டு ஸஃபா மர்வாவில் ஸயீ செய்யச் செல்ல வேண்டும்.

ஜம்ஜம்_நீரை_அருந்தி_தலையிலும்_ஊற்றிக்_கொள்வது_சுன்னத்தா

#ஹஜ்_உம்ரா

#ஜம்ஜம்_நீரை_அருந்தி_தலையிலும்_ஊற்றிக்_கொள்வது_சுன்னத்தா?

மகாமு இப்ராஹீமில் 2 ரக்அத் தொழுகைக்கு பிறகு ஜம்ஜம் நீரை அருந்தி, தலையிலும் ஊற்றிக் கொள்வது சுன்னத்தா? பெண்கள் தலை முக்காட்டுக்கு மேல் சிறிது ஊற்றிக் கொள்ளலாமா?

#பதில்

நேரடியாகவோ, அல்லது முக்காடு வழியாகவோ தலையில் ஊற்றிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் ஜம்ஜம் நீரை நோக்கிச் சென்று அதைப் பருகினார்கள். அதைத் தமது தலையிலும் ஊற்றிக் கொண்டார்கள்.

(நூல்: அஹ்மத் 14707)

ஜம்ஜம்_நீர்_அருந்தும்_முன்போ_அல்லது_அருந்தி_முடித்த_பிறகோ_துஆ

#ஹஜ்_உம்ரா

#ஜம்ஜம்_நீர்_அருந்தும்_முன்போ_அல்லது_அருந்தி_முடித்த_பிறகோ_துஆ_செய்வது_சுன்னத்தா?
#பிரத்யேக_துஆ_எதுவும்_உள்ளதா?

#பதில்

இதற்கென எந்த பிரத்யேக துஆவும் இல்லை. மேலும் அந்த சமயத்தில் துஆச் செய்ததாகவும் நபிவழியில் ஆதாரம் இல்லை.

ஸஃபா_மர்வாவுக்கிடையில்_எப்படி_ஓட_வேண்டும்?

#ஹஜ்_உம்ரா

#ஸஃபா_மர்வாவுக்கிடையில்_எப்படி_ஓட_வேண்டும்?

ஸஃபா மர்வாவுக்கிடையில் உள்ள முதல் பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்திலிருந்து மறு பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடம் வரை ஆண்கள் மட்டும் சிறிது வேகமாக ஓடும்போது தோள்களை லேசாக குலுக்கவேண்டும் என்பது சரியா? சரியென்றால் எவ்வாறு குலுக்கவேண்டும்?

#பதில்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மர்வாவில் இறங்கி, பள்ளத்தாக்கின் நடுப் பகுதியில் கால் பதித்தபோது, அங்கிருந்து (தோள்களைக் குலுக்கியபடி) ஓடலானார்கள். பள்ளத்தாக்கின் நடுப் பகுதியைத் தாண்டியதும் (சாதாரணமாக) நடக்கலானார்கள். ஸஃபாவில் செய்ததைப் போன்றே மர்வாவிலும் செய்தார்கள். (நூல்: முஸ்லிம் 2137)

தோள்களைக் குலுக்க வேண்டும் என்றால் சற்று விரைந்து நடக்க வேண்டும் என்பது தான் அதன் பொருள். மற்றபடி பெண்களுக்கென்று இதில் தனிச் சட்டம் இல்லை.

பச்சை_விளக்கு_பொருத்தப்பட்ட_இடத்தில்_ஓத_வேண்டிய_துஆ_என்ன

#ஹஜ்_உம்ரா

#பச்சை_விளக்கு_பொருத்தப்பட்ட_இடத்தில்_ஓத_வேண்டிய_துஆ_என்ன?

பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்தில் ஆண்களும், பெண்களும் ‘ரப்பிக்ஃபிர் வர்ஹம், வதாவஜு அம்மா தஃலமு, இன்னக அன்தல் அஅஜ்ஜுல் அக்ரம்’ என்ற துஆ ஓதவேண்டும் என்பது ஆதாரமானதா?

#பதில்

#இல்லை.

உம்ரா_என்றால்_என்ன

#ஹஜ்_உம்ரா

#உம்ரா_என்றால்_என்ன?

இஹ்ராம் கட்டி
கஃபாவில் தவாஃப் செய்து
இரண்டு ரக்அத்கள் தொழுது
ஸஃபா மர்வாவுக்கிடையே ஏழு தடவை ஓடுவது ஆகியவையே உம்ராவாகும்.
அதன் பிறகு தலையை மழித்து அல்லது சிறிதளவு முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்.

உம்ரா முடித்து, தலையை மழித்து, அல்லது முடியைக் குறைத்து முடித்தவுடன் குர்பானி ஏதும் கொடுக்கத் தேவையில்லை.

ஹஜ்ஜுக்காக குறிப்பிட்ட நாட்களில் தான் இஹ்ராம் கட்ட வேண்டும். குறிப்பிட்ட நாட்களில் தான் அதை நிறைவேற்ற வேண்டும். உம்ராவுக்கென்று குறிப்பிட்ட நாட்கள் கிடையாது. எல்லா நாட்களிலும் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி அதை நிறைவேற்றலாம்.

தமத்துவ் அடிப்படையில் இஹ்ராம் கட்டி மக்காவில் தங்கியிருப்பவர்களும், மக்காவாசிகளும் ஹஜ்ஜுக்காக மக்காவிலேயே இஹ்ராம் கட்டலாம்.

ஆனால், இவர்கள் உம்ராவுக்காக மக்கா எல்லைக்கு வெளியே சென்று இஹ்ராம் கட்டிக் கொண்டு மக்காவுக்குள் நுழைய வேண்டும்.

Monday, January 22, 2018

ஸஜ்தா திலாவத்திற்கான விளக்கம் சொல்லவும்

ஸஜ்தா திலாவத்திற்கான விளக்கம் சொல்லவும்?

🌹பதில்:🌹

தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்கின்றோம். இதை ஸஜ்தா திலாவத் என்றழைக்கின்றோம்.

ஸஜ்தா வசனங்களை ஓதும் போதும் ஸஜ்தா செய்வது கட்டாயமில்லை. விரும்பினால் ஸஜ்தா செய்யலாம், ஸஜ்தா செய்யாமலும் நபியவர்கள் இருந்துள்ளதை ஹதீஸ்கள் மூலம் அறியாலாம்.

ஆதாரப்பூர்வமான செய்திகளின் அடிப்படையில் இந்த ஸஜ்தா திலாவத்திற்கான வசனங்கள் பின்வருவன அமைந்துள்ளன! 

🎋 "உமது ஆட்டை தனது ஆட்டுடன் சேர்க்க அவர் கேட்டதன் மூலம் உமக்கு அநீதிஇழைத்து விட்டார். உங்களில் கூட்டுச் சேர்வோரில் அதிகமானோர் ஒருவர் மற்றவர் மீதுஅநீதி இழைக்கின்றனர். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரைத் தவிர. அவர்கள்மிகவும் குறைவு தான்''  என்று தாவூத் கூறினார். அவரைச் சோதித்தோம் என்பதை தாவூத்விளங்கிக் கொண்டார்.  தமது இறைவனிடம் மன்னிப்புக் கேட்டார். பணிந்து விழுந்தார். திருந்தினார்.

(38:24-ஸாத்)

🎋 அல்லாஹ்வுக்கே ஸஜ்தா செய்து வணங்குங்கள்!

(53:62-நஜ்மு)

🎋 அவர்களுக்குக் குர்ஆன் ஓதிக்காட்டப்படும் போது ஸஜ்தா செய்வதில்லை.

(84:21 - இன்ஷிகாக்)

🎋 எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர்! ஸஜ்தாச் செய்வீராக! நெருங்குவீராக!

(96:19 - அலக்)

ஹதீஸின் அடிப்படையில் செயல்படுவதாக இருந்தால் மேற்கண்ட நான்கு அத்தியாயங்களின் போது மட்டும் ஸஜ்தா செய்வது தான் பேணுதலான செயலும் நபிவழியைப் பின்பற்றுவதும் ஆகும்.

🌻ஸஜ்தா திலவாத் துஆ!🌻

தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்கின்றோம். அப்போது ஓதுவதற்கென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வரும் துஆவைக் கற்றுத் தந்துள்ளார்கள்.

📝ஸஜத வஜ்ஹிய லில்லதீ கலகஹு வஷக்க ஸம்அஹு வபஸரஹு பி ஹவ்லிஹி வ குவ்வ(த்)திஹி.

பொருள் : என் முகத்தைப் படைத்து அதில் செவிப்புலனையும் பார்வைப்புலனையும் ஏற்படுத்தி, (தீயதை விட்டும்) அதைத் திருப்பி (நல்லவற்றில்) ஈடுபடுத்திய அல்லாஹ்வுக்காக என் முகம் ஸஜ்தா செய்கின்றது.

நூல்கள் : திர்மிதீ (529), நஸயீ (1117), அபூதாவூத் (1205), அஹ்மத் (22895)

🎋இந்த சஜ்தாவிற்குப் பின்னால் சலாம் கொடுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. எனவே சஜ்தா மட்டும் செய்து கொள்ள வேண்டும்.

🎋இந்த ஸஜ்தா விற்கு ஓளு மற்றும் தக்பீர் இரண்டுமே தேவை இல்லை.

🍁ஆதாரங்கள்:🍁

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தா செய்தார்கள்.  ஒரு முதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தா செய்தனர்.  அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ மண்ணையோ எடுத்து தமது நெற்றிக்குக் கொண்டு சென்று, "இவ்வாறு செய்வது எனக்குப் போதும்' என்று கூறினார். பின்னர் அவர் காஃபிராகக் கொல்லப் பட்டதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி),
நூல் : புகாரி 1067, 1070

இதே கருத்து புகாரியில் 1071, 4862, 4863 ஆகிய ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ளன.

ஸாத் அத்தியாயம் ஓதப்படும் போது ஸஜ்தா கட்டாயமில்லை.  (ஆனால்) நபி (ஸல்)அவர்கள் அந்த அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தா செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி 1069, 3422

அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நான் இஷா தொழுத போது, "இதஸ்ஸமாவுன் ஷக்கத்'என்ற அத்தியாயத்தை ஓதி (அதில் ஸஜ்தாவுடைய வசனம் வந்ததும்) ஸஜ்தா செய்தார்கள். இது பற்றி நான் அவர்களிடம் கேட்ட போது, "நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இதற்காக) நான் ஸஜ்தா செய்திருக்கின்றேன்.  (மறுமையில்) அவர்களைச் சந்திக்கின்ற வரை (மரணிக்கின்ற வரை) நான் அதை ஓதி ஸஜ்தா செய்து கொண்டு தான் இருப்பேன்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ராஃபிவு,
நூல் : புகாரி 766, 768, 1078

இதஸ்ஸமாவுன் ஷக்கத், இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க ஆகிய அத்தியாயங்களில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஸஜ்தா செய்தோம்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் 1010, 1011

நான் நபி (ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன்.  அப்போதுஅவர்கள் ஸஜ்தா செய்யவில்லை.

அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி),
நூல் : புகாரி 1072. 1073

எனவே நபிவழியைப் பின்பற்றி நற்கூலியைப் பெறுவோமாக!

🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵🎗🏵

Wednesday, January 17, 2018

ஜகாத் தர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்

*ஜகாத்*

*ஜகாத் தர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்*

*எம். ஷம்சுல்லுஹா*

*தர்மம் வழங்குவதன் சிறப்புகளையும் அதற்குக் கிடைக்கும் நன்மைகளையும் கடந்த இதழ்களில் பார்த்தோம். தர்மம் வழங்காதவர்கள் அடையும் தண்டனைகளைப் பற்றி குர்ஆனும் ஹதீசும் என்ன சொல்கின்றது என்பதை இப்போது பார்ப்போம்.*

*வள்ளலுக்கும் கஞ்சனுக்கும் உதாரணம்*

*கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்து வரை இரும்பாலான அங்கிகள் அணிந்த இரு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர் தர்மம் செய்யும் போதெல்லாம் அவருடைய அங்கி விரிந்து விரல்களை மறைத்துக் கால்களை மூடி, தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக் கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும் அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*அறிவிப்பவர்: அஹுரைரா (ரலி)*

*நூல்: புகாரி 1443, 1444, 5797*

*ஜகாத் கொடுக்காதவரின் தண்டனை*

*உலகில் ஒட்டகம் வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்றவில்லையாயின் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து, தனது கால்களால் அவனை மிதிக்கும். மேலும் அது போலவே உலகில் ஆடு வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்றவில்லை என்றால் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து தனது குளம்புகளால் அவனை மிதித்துத் தனது கொம்புகளால் அவனை முட்டும். மேலும் உங்களில் யாரும் கியாமத் நாளில் கத்திக் கொண்டிருக்கும் ஆட்டைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து, (அபயம் தேடிய வண்ணம்) முஹம்மதே என்று கூற, நான் அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரம் இல்லை என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக நான் அறிவித்து விட்டேன். மேலும் யாரும் (கியாமத் நாளில்) குரலெழுப்பிக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து, முஹம்மதே என்று கூற, நான் அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரம் இல்லை என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக நான் அறிவித்து விட்டேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்*

*அறிவிப்பவர்: அஹுரைரா (ரலி)*

*நூல்: புகாரி 1402*

*நிதி சேகரிப்பு! நெருப்பில் சஞ்சரிப்பு!*

*அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு ஈடாக தன் மகன்களையும், தனது மனைவியையும், தனது சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான். அவ்வாறில்லை! அது பெரும் நெருப்பாகும். அது தோலை உரிக்கும். பின்வாங்கிப் புறக்கணித்தவனையும், (செல்வத்தை) சேர்த்துப் பாதுகாத்தவனையும் அது அழைக்கும். (அல்குர்ஆன் 70:11-18)*
*குறை கூறி புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான். அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான். தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான். அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான். ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு. அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.*

*(அல்குர்ஆன் 104:1-9*

*செலவிடாதவர்கள் நஷ்டவாளிகள்*

*நான் நபி (ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். அப்போது அவர்கள் கஅபாவின் நிழலில் இருந்தவாறு, கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக அவர்கள் நஷ்டவாளிகள். கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக அவர்கள் நஷ்டவாளிகள் என்று சொல்லத் தொடங்கினார்கள். நான், என் நிலை என்ன? என் தொடர்பாக அவர்களுக்கு ஏதேனும் காட்டப்படுகின்றதா? என் நிலை என்னாவது? என்று சொல்லிக் கொண்டே அவர்கள் அருகில் அமர்ந்தேன். அப்போது நபியவர்கள், என்னால் பேசமாலிருக்க இயலவில்லை. அல்லாஹ் நாடிய ஏதோ ஒன்று என்னைச் சூழ்ந்து கொண்டது என்று கூறினார்கள். உடனே நான், என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், அதிகச் செல்வம் படைத்தவர்கள். ஆனால் (நல்வழியில் செலவிட்ட) சிலரைத் தவிர என்று கூறியவாறு இவ்வாறு இவ்வாறு இவ்வாறு கைகளால் சைகை செய்தார்கள்.*
*அறிவிப்பவர்: அபூதர் (ரலி)*

*நூல்: புகாரி 6638*

*சேர்த்து வைப்போருக்குப் போடப்படும் சூடு*

*நம்பிக்கை கொண்டோரே! மதகுருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு என்று எச்சரிப்பீராக! அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!(என்று கூறப்படும்)*

*அல்குர்ஆன் 9:34,35*

*இன்றைய பணமழை நாளைய பாம்பு மாலை*

*அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனது கழுத்தில் சுற்றிக் கொண்டு தனது இரு விஷப்பற்களால் அவனது தாடையைக் கொத்திக் கொண்டே, நான் தான் உனது செல்வம், நான் தான் உனது புதையல் என்று கூறும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.பின்னர், அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத் தனம் செய்வோர், அது தங்களுக்குச் சிறந்தது என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் என்ற (அல்குர்ஆன் 3:180) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள்.*

*அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)*

*நூல்: புகாரி 1403*

*ஏழைக்கு வழங்காத பொருள் எரிந்து போகும்*

*அந்தத் தோட்டத்துக்குரியோரைச் சோதித்தது போல் இவர்களையும் நாம் சோதித்தோம். காலையில் அதை அறுவடை செய்வோம் என்று அவர்கள் சத்தியம் செய்து கூறினர். இறைவன் நாடினால் (அறுவடை செய்வோம்) என்று அவர்கள் கூறவில்லை. எனவே அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது உமது இறைவனிட மிருந்து சுற்றி வளைக்கக் கூடியது அ(த்தோட்டத்)தைச் சுற்றி வளைத்தது. அது காரிருள் போல் ஆனது.*

*நீங்கள் அறுவடை செய்வதாக இருந்தால் உங்கள் விளை நிலத்துக்குச் செல்லுங்கள்! இன்று உங்களிடம் எந்த ஏழையும் நுழைந்து விட வேண்டாம் என்று அவர்கள் குறைந்த சப்தத்தில் பேசிக் கொண்டே காலையில் ஒருவரையொருவர் அழைக்கலானார்கள். தடுக்க ஆற்றலுடையோராகவே அவர்கள் சென்றார்கள். அழிக்கப்பட்ட அ(த்தோட்டத்)தைக் கண்ட போது, "நாம் வழி மாறி (வேறு இடம்) வந்து விட்டோம் என்றனர். இல்லை! நாம் (அனைத்தையும்) இழந்து விட்டோம்.*

*அவர்களில் நடுநிலையாக நடந்து கொண்டவர், நீங்கள் இறைவனைத் துதித்திருக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கூறவில்லையா? என்று கேட்டார். எங்கள் இறைவன் தூயவன். நாங்கள் அநீதி இழைத்து விட்டோம் என்றனர். அவர்களில் ஒருவர் மற்றவரிடம் குறை கூறியோராக முன்னோக்கினார்கள். எங்களுக்குக் கேடு ஏற்பட்டு விட்டதே! நாங்கள் வரம்பு மீறிவிட்டோமே! என்றனர். இதை விடச் சிறந்ததை எங்கள் இறைவன் எங்களுக்குப் பகரமாக்கித் தரக் கூடும். நாங்கள் எங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைப்பவர்கள் (என்றும் கூறினர்) இப்படித் தான் (நமது) வேதனை இருக்கும். மறுமையின் வேதனை மிகப் பெரியது. அவர்கள் அறிய வேண்டாமா?*

*(அல்குர்ஆன் 68:17-33)*

*பூகம்பத்தில் புதைந்த பொருளாதாரம்*

*காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமை மிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும். மமதை கொள்ளாதே! மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று அவனிடம் அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக!அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்). என்னிடம் உள்ள அறிவின் காரணமாகவே இது எனக்குத் தரப்பட்டுள்ளது என்று அவன் கூறினான். இவனை விட அதிக வலிமையும், ஆள் பலமும் கொண்ட பல தலைமுறையினரை இவனுக்கு முன்பு அல்லாஹ் அழித்திருக்கிறான் என்பதை இவன் அறியவில்லையா? அவர்களின் பாவங்கள் பற்றி இக்குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள்.தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான் என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர். உங்களுக்குக் கேடு தான். நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவருக்கு அல்லாஹ்வின் கூலி தான் சிறந்தது. பொறுமையாளர்கள் தவிர மற்றவர்களுக்கு அது வழங்கப்படாது என்று கல்வி வழங்கப்பட்டோர் கூறினர்.அவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன் உதவி பெறுபவனாகவும் இல்லை.*

*(அல்குர்ஆன்28:76-81)*

*குறிப்பு : 2004 ஜூன்;மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை*