பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Tuesday, September 16, 2014

சஜ்தா திலாவத் முறை எப்படி ???

கேள்வி:

        சஜ்தா  திலாவத் என்று  சொல்லப்படும்  குரானில்  உள்ள  நாலு  வசனங்களுக்கு  எப்படி  சஜ்தா  திலாவத் செய்ய  வேண்டும்  ?  உளூ  வேண்டுமா  ? தக்பீர்  சொல்ல  வேண்டுமா  ? இரண்டு  சஜ்தக்கள்  செய்ய  வேண்டுமா  ?
ரசூல்  ஸல்  அவர்கள்  சொல்லி  தந்த  துவாவை  மற்றும்  சொல்ல  வேண்டுமா  அல்லது  ஸுப்ஹன  ரப்பியல்  ஆளா சொல்லலாமா  ? மேலும்  மகிழ்ச்சியின்  போது  செய்யும்  சஜ்தாக்கு  சட்டம்  என்ன ? மேலே உள்ள  கேள்விகளின்  அடிபடையில்(உளூ , எதனை முறை சஜ்தா, துவா )  இந்த  மகிழ்ச்சி  சஜ்டவுக்கும்  விளக்கவும்.

==> அப்துல் அலீம் -- அய்யம்பேட்டை .

தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்கின்றோம்.  இதை ஸஜ்தா திலாவத் என்றழைக்கின்றோம்.
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு (53வது) அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தாச் செய்தார்கள்.  ஒரு முதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர்.  அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ மண்ணையோ எடுத்து தமது நெற்றிக்குக் கொண்டு சென்றுஇவ்வாறு செய்வது எனக்குப் போதும் என்று கூறினார்.  பின்னர் அவர் காஃபிராகக் கொல்லப் பட்டதை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல் : புகாரி 1067, 1070
இதே கருத்து புகாரியில் 1071, 4862, 4863 ஆகிய ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ளன.
ஸாத் (38வது) அத்தியாயம் ஓதப்படும் போது ஸஜ்தா கட்டாயமில்லை.  (ஆனால்) நபி (ஸல்) அவர்கள் அந்த அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தா செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)நூல் : புகாரி 1069, 3422
அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நான் இஷா தொழுத போது, "இதஸ்ஸமாவுன் ஷக்கத்என்ற அத்தியாயத்தை ஓதி (அதில் ஸஜ்தாவுடைய வசனம் வந்ததும்) ஸஜ்தா செய்தார்கள். இது பற்றி நான் அவர்களிடம் கேட்ட போது, "நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இதற்காக) நான் ஸஜ்தா செய்திருக்கின்றேன்.  (மறுமையில்) அவர்களைச் சந்திக்கின்ற வரை (மரணிக்கின்ற வரை) நான் அதை ஓதி ஸஜ்தா செய்து கொண்டு தான் இருப்பேன்என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ராஃபிவு,
நூல் : புகாரீ 766, 768, 1078
இதஸ்ஸமாவுன் ஷக்கத்இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க ஆகிய அத்தியாயங்களில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஜ்தா செய்தோம்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் 905, 906
மேற்கண்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் நஜ்மு (53வது அத்தியாயம்)ஸாத் (38வது அத்தியாயம்)இன்ஷிகாக்(84வது அத்தியாயம்)அலக் (96வது அத்தியாயம்) ஆகிய நான்கு அத்தியாயங்களை ஓதும் போது அதிலுள்ள ஸஜ்தா வசனங்களுக்காக நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்துள்ளார்கள் என்பதை அறிய முடிகின்றது.
இந்த ஸஜ்தா வசனங்களை ஓதும் போதும் ஸஜ்தா செய்வது கட்டாயமில்லை விரும்பினால் ஓதிக் கொள்ளலாம் என்பதற்குக் கீழ்கண்ட ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.
நான் நபி (ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன்.  அப்போது அவர்கள் ஸஜ்தா செய்யவில்லை.
அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி),
நூல் : புகாரீ 1072. 1073
ஒருவர் குர்ஆனில் உள்ள வசனங்களில் ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிள்ள எந்த வசனத்தை ஓதினாலும் விரும்பினால் அவ்வசனத்திற்காக ஸஜ்தா செய்து கொள்ளலாம்.
ஆதமின் மைந்தன் ஸஜ்தா (செய்யுமாறு கட்டளையுள்ள) வசனத்தை ஓதி ஸஜ்தா செய்தால் ஷைத்தான் அழுதவாறே அந்தோ எனக்கு வந்த நாசமே! ஆதமின் மைந்தன் ஸஜ்தா செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் ஸஜ்தா செய்து விட்டான். அவனுக்கு செர்க்கம் கிடைக்கப் போகிறது. ஆனால் (ஆதி மனிதர் ஆதமுக்கு) ஸஜ்தா செய்யுமாறு எனக்கு கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்து விட்டேன். எனவே எனக்கு நரகம் தான் என்று கூறியபடி விலகிச் செல்கிறான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல்கள் : முஸ்லிம் (133), இப்னுமாஜா (1042), அஹ்மத் (9336)
ஸஜ்தா திலவாத் துஆ
தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்கின்றோம்.அப்போது ஓதுவதற்கென நபி (ஸல்) அவர்கள் பின்வரும் துஆவை கற்றுத்தந்துள்ளார்கள்.
ஸஜத வஜ்ஹிய லில்லதீ கலகஹு வஷக்க ஸம்அஹு வபஸரஹு பி ஹவ்லிஹி வ குவ்வ(த்)திஹி.
பொருள் : என் முகத்தைப் படைத்து அதில் செவிப்புலனையும் பார்வைப்புலனையும் ஏற்படுத்தி, (தீயதை விட்டும்) அதைத் திருப்பி (நல்லவற்றில்) ஈடுபடுத்திய அல்லாஹ்வுக்காக என் முகம் ஸஜ்தா செய்கின்றது.
நூல்கள் : திர்மிதீ (529), நஸயீ (1117), அபூதாவூத் (1205), அஹ்மத் (22895)
வழமையாக தொழுகையில் சஜ்தாவில் ஓதும் சுப்ஹான ரப்பியல் அஃலா என்பதை ஓதினாலும் குற்றமில்லை. இந்த சஜ்தாவிற்கு உளூ அவசியமில்லை. தக்பீர் கூற வேண்டியதில்லை. இந்த நான்கு இடங்கள் வரும் போது ஒரு முறை சஜ்தா செய்தால் போதும். இரண்டு முறை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இந்த சஜ்தாவை இரண்டு முறை செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் நமக்கு உத்தரவிடவில்லை.

மகிழ்ச்சி ஏற்பட்ட நேரத்தில் சஜ்தா செய்யலாமா?
மகிழ்ச்சி ஏற்பட்ட நேரத்தில் சஜ்தா செய்வதும் தவறல்ல. இறைவனுக்கு நன்றி செலுத்தி பணியும் வகையில் இவ்வாறு செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.
மூசா நபியவர்கள் செய்த அற்புதத்தை பார்த்துவிட்டு சூனியக்காரர்கள் அல்லாஹ்வை நம்பிக்கைக்கொண்டு உடனே சஜ்தாவில் விழுந்தார்கள்.
{فَأُلْقِيَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوا آمَنَّا بِرَبِّ هَارُونَ وَمُوسَى (70)20
"உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்'' (என்றும் கூறினோம்.) உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்து, "மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்'' என்றனர்.
அல்குா்ஆன் (20 – 70)
கஅப் பின் மாலிக் என்ற நபித்தோழர் தபூக் போர்களத்தில் கலந்துகொள்ளாத காரணத்தால் 50 நாட்கள் நபி (ஸல்) அவரிடம் யாரும் பேசக்கூடாது என தடைசெய்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களிடமிருந்து அழைப்பு வந்தவுடன் சந்தோஷத்தில் சஜ்தாவில் விழுந்தார்கள். மகிழ்சி காரணமாக சஜ்தா செய்யும் வழக்கம் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்களிடம் இருந்துள்ளது என்பதை இதன் மூலம் புரிய முடிகின்றது.
4418حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبِ بْنِ مَالِكٍ وَكَانَ قَائِدَ كَعْبٍ مِنْ بَنِيهِ حِينَ عَمِيَ قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ يُحَدِّثُ فَلَمَّا صَلَّيْتُ صَلَاةَ الْفَجْرِ صُبْحَ خَمْسِينَ لَيْلَةً وَأَنَا عَلَى ظَهْرِ بَيْتٍ مِنْ بُيُوتِنَا فَبَيْنَا أَنَا جَالِسٌ عَلَى الْحَالِ الَّتِي ذَكَرَ اللَّهُ قَدْ ضَاقَتْ عَلَيَّ نَفْسِي وَضَاقَتْ عَلَيَّ الْأَرْضُ بِمَا رَحُبَتْ سَمِعْتُ صَوْتَ صَارِخٍ أَوْفَى عَلَى جَبَلِ سَلْعٍ بِأَعْلَى صَوْتِهِ يَا كَعْبُ بْنَ مَالِكٍ أَبْشِرْ قَالَ فَخَرَرْتُ سَاجِدًا وَعَرَفْتُ أَنْ قَدْ جَاءَ فَرَجٌ وَآذَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَوْبَةِ اللَّهِ عَلَيْنَا حِينَ صَلَّى صَلَاةَ الْفَجْرِ رواه البخاري
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
எங்களிடம் பேசக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்த நாளிலிருந்து ஐம்பது நாட்கள் எங்களுக்குப் பூர்த்தியாயின. நான் ஐம்பதாம் நாளின் ஃபஜ்ருத் தொழுகையை எங்கள் வீடுகளில் ஒன்றின் மாடியில் நிறைவேற்றிவிட்டு அல்லாஹ் (எங்கள் மூவரையும் குறித்து 9:118ஆவது வசனத்தில்) குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருந்தேன். (அதாவது:) "பூமி இத்தனை விரிவாய் இருந்தும் என்னைப் பொருத்த வரையில் அது குறுகிநான் உயிர் வாழ்வதே மிகக் கஷ்டமாயிருந்தது. அப்போது, "சல்உமலை மீதேறி பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவர் உரத்த குரலில்,  "கஅப் பின் மாலிக்கே! நற்செய்தி பெற்றுக்கொள்க!'' என்று கூறினார். உடனே நான் சஜ்தாவில் விழுந்தேன். சந்தோஷம்  வந்துவிட்டது என்று நான் அறிந்து கொண்டேன்.
நுால் – புகாரி (4418)
*********************பதிலளித்தவர் அப்பாஸ் அலி*************************

Saturday, September 13, 2014

மனிதன் மீது ஜின் மேலாடுமா?

மனிதன் மீது ஜின் மேலாடுமா?

 1996 ஆம் ஆண்டு அல்ஜன்னத்தில் பீஜே அளித்த பதிலை ஹஃபீழ் அனுப்பி வைத்துள்ளார். அவருக்கு நன்றிகள்.
 மனிதன் மீது ஜின் மேலாடுமா?
 மதீனாவில் ஒரு பெண்ணுக்குப் பேய் பிடித்து விட்டது. உடனே மதீனா யுனிவர்சிடியில் உள்ள ஆலிமை அழைக்க வந்தனர். முஸ்லிமான ஜின் அந்தப் பெண்ணைப் பிடித்துள்ளதை அவர் கண்டுபிடித்தார். நீ ஒரு முஸ்லிம். இன்னொரு முஸ்லிமுக்கு நோவினை செய்யலாமா? என்று அவர் கேட்டார். அதற்கு அவளைப் பிடித்திருந்த ஜின், “பாத்ரூமில் குளிக்கும் போது என் மேல் இவள் வெந்நீரை ஊற்றினாள்” என்று என்று பதிலளித்தது. ’நீ இருப்பது தெரியாமல் தானே அவள் வெந்நீரை ஊற்றினாள்’என்று அந்த ஆலிம் விளக்கினார். அதற்கு அந்த ஜின், “நபி (ஸல்) அவர்கள் பதிரூமில் ஓத வேண்டும் என்று கூறியதை அவள் ஓதியிருந்தால் நான் அங்கிருந்து வெளியேறி இருப்பேன்” என்றது. தெரியாமல் நடந்து விட்டது; நீ போய் விடு என்று அந்த ஆலிம் கூறியதும் ஜின் ஓடிவிட்டது. இந்தச் சம்பவத்தை உமர் அலி (இலங்கை) என்பவர் யாஸீன் விளக்கவுரை என்ற ஒலி நாடாவில் பேசி உள்ளார். இவ்வாறு நடக்க குர்ஆன் ஹதீஸ்படி சாத்தியம் உள்ளதா?
 ஹயாதுல்லாஹ், அல்கோபார்.

பாத்ரூமுக்குச் செல்லும் போது கெட்ட ஷைத்தான்களை விட்டும் பாதுகாப்புத் தேடுமாறு நபி (ஸல்) நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். முஃமினான நல்ல ஜின்கள் பாத்ரூமில் இருக்க முடியாது என்பது இதிலிருந்து தெரிகின்றது. எனவே நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்ததை அவள் ஓதியிருந்தால் நான் ஓடியிருப்பேன் என்று முஃமினான ஜின் கூறியிருக்க முடியாது. சவூதி அரேபியாவின் பத்திரிகைகள் சிலவற்றில் இந்தக் கதை இடம் பெற்றிருந்தாலும், உமர் அலி என்ற மவ்லவி இதைக் கூறி இருந்தாலும் இது இட்டுக்கட்டப்பட்ட பொய் என்பதில் சந்தேகமில்லை.

ஜின்கள் என்றொரு படைப்பு உள்ளதாகக் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளன. அதை நம்பியாக வேண்டும். ஆனால் ஒரு படைப்பு இன்னொரு படைப்புக்குள் நுழைந்து ஊடுறுவும் என்பதற்கோ, கூடுவிட்டுக் கூடு பாயும் என்பதற்கோ எந்தவிதமான ஆதாரமும் இல்லை. மாறாக இதை மறுக்கக் கூடிய வகையில் ஆதாரங்கள் உள்ளன.

அவர் மீது ஒரு மலக்கு (வானவர்) இறக்கப்பட வேண்டாமா? என்று இவர்கள் கூறுகின்றனர். மலக்கை நாம் இறக்கியிருந்தால் காரியம் முடிக்கப்பட்டிருக்கும். பின்னர் அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டிருக்காது. நம் தூதரை மலக்காகவே நாம் அனுப்புவதாக இருந்தாலும் அவரையும் நாம் மனிதராகவே ஆக்கியிருப்போம். அவர்கள் (இப்பொழுது) குழம்பிக் கொள்வது போல் (அப்பொழுதும்) குழப்பத்தை நாம் ஏற்படுத்தியிருப்போம். (அல்குர்ஆன்: 6:8-9)
முதலில் இந்த வசனம் என்ன கூறுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். “அவர் மீது மலக்கு இறக்கப்பட வேண்டும்” என்றால் அவருக்குப் பக்க பலமாக அவருக்குத் துணையாக மலக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது இதன் பொருளா? அல்லது அவருக்குள்ளேயே ஒரு மலக்கு அனுப்பப்பட்டு மனிதராக இருந்தும் அதே நேரத்தில் மலக்காகவும் அவர் இருக்க வேண்டும் என்பது அதன் பொருளா?
மலக்குகள் என்ற படைப்பு இருப்பதை அந்த மக்கள் நம்பினார்கள். அவர்கள் கண்களால் காண முடியாதவர்கள் என்றும் அவர்கள் நம்பினார்கள். மேலும் நபி (ஸல்) அவர்களுடன் மலக்குகள் இருக்கத் தான் செய்தனர். எனவே அந்த மக்கள் இதை எதிர்பார்க்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதராக இருக்கும் அதே நேரத்தில் மலக்காகவும் இருக்க வேண்டும்.
ஒரு மலக்கு, “அவர் மீது” (அவருடன் அன்று) இறக்கப்பட்டு இரண்டறக் கலந்துவிட வேண்டும். சில சமயம் இவரிடமிருந்து மனிதப் பண்புகள் வெளிப்பட வேண்டும் என்பதைத் தான் அவர்கள் எதிர்பார்த்தனர்.
 இதைத் தான் இறைவன் மறுக்கிறான். அவரை மலக்காகவே நாம் ஆக்கியிருந்தாலும் அவரையும் மனிதராகவே ஆக்கியிருப்போம் என்ற வாசகம் இதை உறுதிப்படுத்துகின்றது.
 ஒவ்வொரு படைப்பும் தனித் தனியான தன்மைகளைக் கொண்டவை. ஒரு படைப்பு இன்னொரு படைப்புக்குள் ஊடுறுவ முடியாது. மனிதனை ஜின் பிடிக்கிறது என்றால் மனிதனாகவும், ஜின்னாகவும் அவன் மாறி விடுகிறான், அல்லது சில நேரம் மனிதனாகவும் சில நேரம் ஜின்னாகவும் ஆகிறான் என்ற கருத்து அதற்குள் அடங்கியுள்ளது.. அல்லாஹ்வின் படைப்பில் இத்தகைய குழப்பத்துக்கு இடமில்லை.
 நாம் எடுத்துக் காட்டியதில் ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் இந்த ஆதாரங்கள் திருப்தியளிக்காவிட்டாலும் - ஜின்கள் மனிதனுக்குள் ஊடுறுவும் என்று கூறுபவர்கள் அதற்கான சான்றுகளைக் குர்ஆனிலிருந்தும் ஹதீஸ்களிலிருந்தும் எடுத்துக் காட்டக் கடமைப்பட்டுள்ளனர்.

அல் ஜன்னத் 1996 ஜுன், ஜுலை

ஜின்களைக் காண முடியுமா?

ஜின்களைக் காண முடியுமா


இந்த இனத்தவர் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் என்பதால் மனிதர்களின் கண்களுக்குத் தென்பட மாட்டார்கள். கண்களுக்குத் தென்பட மாட்டார்கள் என்ற விஷயத்தில் இந்தப் படைப்பு வானவர்களைப் போன்றது எனலாம்.
 ஜின் இனத்தைச் சார்ந்த ஷைத்தானும் அவனது கூட்டத்தாரும் மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் இவர்களைப் பார்க்க முடியாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
 ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பி விட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம்.
அல்குர்ஆன் (7 : 27)
 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதிய போது குர்ஆனைக் கேட்பதற்காக அவர்களைச் சுற்றி ஜின்கள் அமர்ந்திருந்தனர். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் சுயமாக அறிந்து கொள்ள முடியவில்லை. அல்லாஹ் அவர்களுக்கு வஹியின் மூலம் இதை அறிவித்துக் கொடுத்த பின்பே இதை நபியவர்கள் அறிந்து கொண்டார்கள்.
 ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று "நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம்' எனக் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது'' என (முஹம்மதே!) கூறுவீராக!
அல்குர்ஆன் (72 : 1)

இறைவனுடைய உதவியின்றி சுயமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாலேயே அறிந்து கொள்ள முடியாது என்றால் வேறு எவராலும் நிச்சயமாக ஜின்களைப் பார்க்கவே முடியாது. இதை நாம் விளங்கிக் கொண்டால் ஜின்களின் பெயரால் நடக்கும் பித்தலாட்டங்களில் நாம் விழுந்து விட மாட்டோம்.

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்??

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூட


பதில் :
3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ جُنْحُ اللَّيْلِ أَوْ أَمْسَيْتُمْ فَكُفُّوا صِبْيَانَكُمْ فَإِنَّ الشَّيَاطِينَ تَنْتَشِرُ حِينَئِذٍ فَإِذَا ذَهَبَتْ سَاعَةٌ مِنْ اللَّيْلِ فَخَلُّوهُمْ وَأَغْلِقُوا الْأَبْوَابَ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَفْتَحُ بَابًا مُغْلَقًا رواه البخاري            
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இரவின் முற்பகுதி வந்து விட்டால் -அல்லது நீங்கள் மாலை நேரத்தை அடைந்தால்- உங்கள் குழந்தைகளை (வெளியே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில்,அப்போது ஷைத்தான்கள் (வெளியே) பரவுகின்றன. இரவில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (சுதந்திரமாக வெளியே செல்ல) விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைப் பூட்டி விடுங்கள். அப்போதுஅல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள்ஏனெனில்ஷைத்தான் மூடப்பட்ட கதவைத் திறக்க மாட்டான்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல் புகாரி 3304
மேற்கண்ட செய்தியைப் பற்றி விளக்கம் கேட்டிருந்தீர்கள்.
மனிதர்களுக்கு இடஞ்சல் ஏற்படுத்தக் கூடியவைகளை ஷைத்தான் எனக் குறிப்பிடும் வழக்கம் அரபு மக்களிடையே இருந்துள்ளது. இது பற்றி ஏற்கனவே விரிவாக விளக்கம் தரப்பட்டிருக்கின்றது. பார்க்க
விஷ ஜந்துக்களைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஷைத்தான்கள் என்று இந்த ஹதீஸில் குறிப்பிட்டுள்ளார்கள் என்பது சரியான கருத்தாகத் தெரிகின்றது.
இருள் பரவத் தொடங்கும் போது சிறுவர்களை வெளியே விட வேண்டாம் என்றும் இரவில் சிறிது நேரம் கழிந்த பிறகு வெளியில் விடலாம் என்றும் கூறப்படுகிறது. ஆங்காங்கே சுற்றித் திரியும் விஷ ஜந்துக்கள் இரவில் ஓய்வெடுப்பதற்காக இந்த நேரத்தில் தான் தனது இருப்பிடத்தை நோக்கி விரைகின்றன. மாலை நேரம் வந்து விட்டால் பறைவைகள் உட்பட எல்லா உயிரினங்களும் தனது இருப்பிடத்தை நோக்கிச் செல்வதை நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம்.
சிறுவர்கள் விபரம் அற்றவர்கள் என்பதால் அவர்கள் கவனக் குறைவாக இந்த விஷப் பிராணிகளை மிதித்து விட்டால் அல்லது வவ்வால் போன்றவை மோதி விட்டால் அதனால் பெரும்பாதிப்பு ஏற்பட்டுவிடும். எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வெளியே விட வேண்டாம் என்கிறார்கள்.
மேலும் இந்த ஹதீஸில் இந்தத் தடையுடன் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தருகிறார்கள். அவற்றைப் பார்க்கும் போது இந்த இடத்தில் ஷைத்தான் என்பது விஷ ஜந்துக்கள் போன்றவை தான் என்று புரிந்து கொள்ளும் வகையில் உள்ளன.
இரவில் உறங்கும் போது கதவுகளைப் பூட்டி விட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு ஷைத்தான் பூட்டப்பட்ட கதவைத் திறக்க மாட்டான் என்றும் கூறுகிறார்கள். இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள ஷைத்தான் என்பது விஷ ஜந்துக்கள் தான் என்பதை இது தெளிவாக விளக்குகிறது.
ஏனெனில் ஷைத்தான் மனதில் ஊடுருவி கெட்ட எண்ணங்களை ஏற்படுத்த வல்லவன். கதவைப் பூட்டி விடுவதால் அவனுடைய வருகையை யாராலும் தடுத்துவிட முடியாது. மாலை மயங்கும் போது கதவைப் பூட்டிவிட்டால் தனது இருப்பிடத்துக்கு திரும்பும் விஷ ஜந்துக்களும் இடைஞ்சல் தரும் பிராணிகளும் உள்ளே வராது என்பது தான் இதன் கருத்தாக இருக்க முடியும்.
முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஒரு அறிவிப்பு இந்தக் கருத்தை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
3755حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ أَخْبَرَنَا اللَّيْثُ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ غَطُّوا الْإِنَاءَ وَأَوْكُوا السِّقَاءَ وَأَغْلِقُوا الْبَابَ وَأَطْفِئُوا السِّرَاجَ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَحُلُّ سِقَاءً وَلَا يَفْتَحُ بَابًا وَلَا يَكْشِفُ إِنَاءً فَإِنْ لَمْ يَجِدْ أَحَدُكُمْ إِلَّا أَنْ يَعْرُضَ عَلَى إِنَائِهِ عُودًا وَيَذْكُرَ اسْمَ اللَّهِ فَلْيَفْعَلْ فَإِنَّ الْفُوَيْسِقَةَ تُضْرِمُ عَلَى أَهْلِ الْبَيْتِ بَيْتَهُمْ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பாத்திரங்களை மூடி வையுங்கள்தண்ணீர் தோல் பையின் வாயைச் சுருக்கிட்டுக் கட்டி விடுங்கள்கதவைத் தாழிட்டு விடுங்கள்விளக்கை அணைத்து விடுங்கள்;ஏனெனில்ஷைத்தான் (சுருக்கிட்டு மூடிவைக்கப்பட்ட) எந்தப் பையையும் அவிழ்ப்பதில்லைமூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை; (மூடி வைக்கப்பட்ட) எந்தப் பாத்திரத்தையும் திறப்பதில்லை. உங்களில் ஒருவர் தமது பாத்திரத்தின் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது அல்லாஹ்வின் பெயர் சொல்லி மூடிவைக்க முடியுமானால் அவ்வாறே அவர் செய்து கொள்ளட்டும். ஏனென்றால்எலி (விளக்கின் திரியை இழுத்துச் சென்று) வீட்டாரோடு சேர்த்து வீட்டை எரித்து விடும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம் (4099)
ஷைத்தான் எந்த பையையும் அவிழ்க்க மாட்டான். மூடப்பட்ட எந்தக் கதவையும் பாத்திரத்தையும் திறக்க மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். எனவே நபிகல் நாயக்ம் (ஸல்) அவர்கள் கெடுதல் தரும் பிராணிகளைத் தான் ஷைத்தான்கள் என்று கூறியுள்ளார்கள். எலியின் அபாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்திருப்பதும் நமது விளக்கத்தை மேலும் வலுவூட்டுகிறது.
ஷைத்தான் உள்ளங்களையும் ஊடுறுவுபவன் என்ற கருத்துக்கு முரண்படக் கூடாது என்பதற்காகவும் தீய சக்திகளை ஷைத்தான் எனக் கூறுவ்தற்கு ஆதாரம் உள்ளதாலும் நாம் இப்படி புரிந்து கொள்வதே முரண்பாடில்லாததாக அமையும்.
மேலும் இன்றைக்கு விஞ்ஞானம் கண்டுபிடிக்காத எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. நமக்குத் தெரியாத இன்னும் பல வகையான பாதிப்புகள் இந்த நேரத்தில் ஏற்படலாம். இது எதிர்காலத்தில் கண்டு பிடிக்கப்படலாம்.