பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, September 13, 2014

ஷைத்தானுக்கு உள்ள ஆதிக்கம் என்ன?

ஷைத்தானுக்கு உள்ள ஆதிக்கம் என்ன?


 ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் பைத்தியம் பிடித்த ஒரு குழந்தையை கொண்டு வந்து காட்டினார். அக்குழந்தையைத் தமது கையில் எடுத்த நபி (ஸல்) அவர்கள்'அல்லாஹ்வின் விரோதியே! வெளியே செல்! அல்லாஹ்வின் விரோதியே வெளியே செல்! நான் அல்லாஹ்வுடைய தூதர்!என்று கூறினார்கள். குழந்தை குணமடைந்தது.(அஹ்மது, ஹாகிம், பைஹகீ)
 'மாலையும் இரவும் சந்திக்கும்) அந்தி நேரத்தில் உங்கள் குழந்தைகளை வீட்டினுள் வைத்திருங்கள்,அது ஷைத்தான் வெளிவரும் சமயம் ஆகும்நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி),நூல்: முஸ்லிம்).'
பாலைவனங்களிலும் குகைகளிலும் தனித்திருப்பது தடுக்கப்பட்டுள்ளது ஏனெனில் அங்கு ஷைத்தான் இருப்பான்நபிமொழி.(மனிதர்கள் மலம்ஜலம்கழிக்க ஒதுங்குகின்ற) இந்த பேரீத்தமரங்கள் அடர்ந்த காடுகள்(ஜின்,ஷைத்தான்கள் அடிக்கடி) வந்து போகும் பகுதிகளாகும்.எனவே உங்களில் ஒருவர்(அப்படிப்பட்ட) கழிப்பிடத்திற்கு வரும்போதுஅவர்,'அவூது பில்லாஹி மினல் குபுஸி வல்கபாயிஸிஎன்று கூறுவாராக! என அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூது 6)'
ஆதமுடைய மக்களிடம் ஷைத்தானுக்கு ஓர் ஆதிக்கம் உண்டு. அது போலவே வானவருக்கும் ஒர் ஆதிக்கம் உண்டுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி)நூல்: திர்மிதி)
இந்த ஹதீஸ்கள் ஆதரப்பூர்வமானதா? இதன் அடிப்படையில் ஷைத்தான் மனிதன் மீது மேலாடுவான் என்று எடுத்துக் கொள்ளமா?
அப்துல் அலீம் அய்யம்பேட்டை
பதில் :
இந்த ஹதீஸ்கள் சரியானவையா என்பதை அறிவதற்கு முன்னால் இன்னொரு முக்கியமான விஷயத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
ஷைத்தான் என்றால் யார்? அவனுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் என்ன? ஷைத்தான் என்று கூறப்படும் அனைத்து ஹதீஸ்களிலும் ஷைத்தான் என்று தான் புரிந்து கொள்ள வேண்டுமா? இதை புரிந்து கொண்டால தான் மேற்கணட் ஹதீஸ்களையும் இந்தக் கருத்தில் அமைந்த மற்ற ஹதீஸ்களையும் சரியான முறையில் விளங்கிக் கொள்ள முடியும்.
 ஜின் இனத்தைச் சார்ந்தவன் தான் ஷைத்தான். ஷைத்தான் நபி (ஸல்) அவர்கள் உட்பட எல்லோரிடமும் இருக்கிறான். இதற்கு நல்லவர்களோ சஹபாக்களோ விதிவிலக்கில்லை.
ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் உள்ள ஷைத்தான் மட்டும் நபியவர்களுக்குக் கட்டுப்பட்டு விட்டான். இவன் மற்ற அனைவரிடமும் இருந்து கொண்டு கெட்ட எண்ணங்களை ஏற்படுத்துவான். நல்லவர்கள் இவன் கூறுவதைப் புறக்கணித்து விடுவார்கள். தீயவர்கள் செயல்படுத்துவார்கள் என்பது ஷைத்தானைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம்..
إِنَّ الَّذِينَ اتَّقَوْا إِذَا مَسَّهُمْ طَائِفٌ مِنْ الشَّيْطَانِ تَذَكَّرُوا فَإِذَا هُمْ مُبْصِرُونَ(201)7
(இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது அவர்கள் விழித்துக் கொள்வார்கள்.
அல்குர்ஆன் (7 : 201)
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம் தங்கியிருந்த நாளில்) ஓர் இரவில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் மீது எனக்கு ரோஷம் ஏற்பட்டது. பிறகு அவர்கள் (திரும்பி) வந்து என் நடவடிக்கையைக் கண்ட போது, "ஆயிஷா! உனக்கு என்ன நேர்ந்ததுரோஷம் கொண்டு விட்டாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு நான், "என்னைப் போன்ற ஒருத்தி (பல துணைவியர் உள்ள) தங்களைப் போன்ற ஒருவர் மீது ரோஷம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?'' என்று சொன்னேன்.அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் ஷைத்தான் உன்னிடம் வந்து விட்டானா?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னுடனும் ஷைத்தான் உள்ளானா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்என்றார்கள். "ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தான்) உள்ளானா?'' என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் "ஆம்என்றார்கள். நான், "தங்களுடனுமாஅல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம். ஆயினும்என் இறைவன் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்து விட்டான்'' என்று சொன்னார்கள்.
நூல் : முஸ்லிம் (5422)
எல்லோரிடமும் ஷைத்தான் இருக்கிறான் என்ற இந்த உண்மையைப் பலர் புரிந்து கொள்ளாத காரணத்தால் சிலருக்கு உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ பாதிப்புகள் ஏற்படும் போது அவர்களிடத்தில் மட்டும் ஷைத்தான் வந்துவிட்டதாக தவறாக நம்புகிறார்கள்.
ஷைத்தான் ஒருவரிடத்தில் இருப்பதால் அவருக்கு பாரதூரமான பாதிப்புகள் ஏற்படும் என்ற நம்பிக்கை உண்மையானால் மனிதர்கள் அனைவருக்கும் அப்படி பாரதூரமான பாதிப்புகள் ஏற்பட வேண்டும். ஏனென்றால் ஷைத்தான் அனைவரிடமும் இருக்கிறான்.
ஆனால் இவ்வாறு அனைவருக்கும் பைத்தியமோ மோசமான நோய்களோ உளறல்களோ ஏற்படுவதில்லை. குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் இது போன்ற பலவீனங்கள் ஏற்படுகிறது. இறைவனுடைய நாட்டத்தால் இந்த பலவீனங்கள் ஏற்படுகிறதே தவிர ஷைத்தானால் ஏற்படுவதில்லை என்பதை இதன் மூலம் அறியலாம்.
3281حَدَّثَنِي مَحْمُودُ بْنُ غَيْلَانَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ عَنْ صَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعْتَكِفًا فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلًا فَحَدَّثْتُهُ ثُمَّ قُمْتُ فَانْقَلَبْتُ فَقَامَ مَعِي لِيَقْلِبَنِي وَكَانَ مَسْكَنُهَا فِي دَارِ أُسَامَةَ بْنِ زَيْدٍ فَمَرَّ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَلَمَّا رَأَيَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْرَعَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رِسْلِكُمَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ فَقَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا سُوءًا أَوْ قَالَ شَيْئًا رواه البخاري
ஸஃபிய்யா பின்த்து ஹுயை (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்கüடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசி விட்டு திரும்பிச் செல்ல எழுந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னைத் திருப்பியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். - உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது- (என அறிவிப்பாளர் கூறுகிறார்.) அப்போது அன்சாரிகளில் இருவர் அந்த வழியாகச் சென்றார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள். உடனேநபி (ஸல்) அவர்கள், "நிதானமாகச் செல்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான்'' என்று சொன்னார்கள். இதைக் கேட்ட அவ்விருவரும், "அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்?)'' என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், "ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான்  ...அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான்... என்று நான் அஞ்சினேன்'' என்று சொன்னார்கள்.
புகாரி (3281)
ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். எனவே ஷைத்தான் நமது உடலில் இரண்டறக் கலந்துள்ளான் என்பதை இதன் மூலம் உணர முடிகிறது.
அடுத்து உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தைப் போட்டு விடுவான் என்று அஞ்சுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உடலில் இரண்டறக் கலந்துள்ள ஷைத்தானால் உள்ளத்தில் தீய எண்ணங்களை மட்டுமே ஏற்படுத்த முடியும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
ளஷைத்தான் நமது உடலுடன் கலந்திருந்தாலும் தீய எண்ணங்களை மட்டுமே அவனால் ஏற்படுத்த முடியுமே தவிர கை கால்களை முடக்குவதோ நோய்களை ஏற்படுத்துவதோ பைத்தியமாக்குவதோ ஷைத்தானால் முடியாத காரியம்.
 ஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்
ஷைத்தானை விரட்டுவதாகக் கூறி சம்பாதிக்க நினைப்பவர்களும் மக்களை ஏமாற்றுபவர்களும் ஷைத்தானால் மனிதனுக்கு ஏற்படும் இடஞ்சல்களை விவரிக்கும் சில ஹதீஸ்களை மக்களிடம் சொல்கிறார்கள்.
ஷைத்தானால் மனிதனுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுவதால் மனிதனை விட்டும் ஷைத்தானை நாங்கள் விரட்டுகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறதுஎன்று கேள்வி கேட்டு பாமர மக்களை வழிகெடுக்கிறார்கள்.
இவர்கள் தங்களின் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் ஷைத்தானை விரட்டிய பிறகு இவர்கள் யாரிடமிருந்து ஷைத்தானை விரட்டினார்களோ அவர்களுக்கு ஹதீஸ்களில் சொல்லப்பட்ட இடஞ்சல்கள் ஏற்படாது என்ற உத்தரவாதத்தைத் தர முடியுமா?
தொழுகையில் கவனம் திரும்புவது கொட்டாவி விடுவது சுப்ஹ‚ தொழாமல் உறங்குவது இவையெல்லாம் ஷைத்தானால் ஏற்படுவதாக ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளது.
அப்படியென்றால் இவர்கள் யாரிடமிருந்து ஷைத்தானை விரட்டினார்களோ அவர்களுக்குத் தொழுகையில் கவனம் திரும்பாதாஅவர்களுக்கு இனி கொட்டாவியே வராதாஅவர்கள் சுப்ஹ‚ தொழுகையை விடாமல் கடைப்பிடிப்பார்களாஷைத்தானை விரட்டிய பிறகு இவர்களுக்குத் தவறான எண்ணங்களே ஏற்படாதாஇந்த அடிப்படையில் சிந்தித்துப் பார்த்தாலே ஷைத்தானை விரட்டுவதாக இவர்கள் கூறுவது வடிகட்டியப் பொய் என்பதை அறியலாம்.
 அனைவரிடமிருந்தும் ஷைத்தானை விரட்டுவார்களா?
 ஷைத்தான் நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் தவறான எண்ணங்களை ஏற்படுத்துகிறான். அப்படியென்றால் ஷைத்தானை விரட்டுவதாக கூறும் போலி ஆண்மீகவாதிகள் அனைத்து மக்களுக்கும் ஓதிப்பார்த்து அவர்களிடமிருந்து ஷைத்தானை விரட்டுவார்களா?
நபிமார்களுக்கு ஷைத்தான் இடஞ்சல் தந்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது. இன்றைக்கு இவர்களுக்கு ஷைத்தானை விரட்டத் தெரிந்த யுக்தி நபிமார்களுக்கு ஏன் தெரியவில்லை என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இவ்வாறே மனிதர்களிலும்ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம்.
அல்குர்ஆன் (6 : 112)
(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும்தூதரானாலும் அவர் ஓதும் போது ஷைத்தான் அவரது ஓதுதலில் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை.
அல்குர்ஆன் (22 : 52)
 ஷைத்தான் வலையில் விழுந்தவர்கள் ஷைத்தானை விரட்டுகிறார்களா?

 ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமாஇட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.
அல்குர்ஆன் (26 : 221)
ஷைத்தானை விரட்டுவதாகக் கூறுபவர்கள் மார்க்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாக இட்டுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகையவர்களிடத்தில் தான் ஷைத்தான் இருக்கிறான்.
ஷைத்தானின் வலையில் சிக்கியவர்கள் மற்றவர்களிடமிருந்து ஷைத்தானை விரட்டுவதாக நினைப்பது எவ்வளவு அறிவீனம் என்பதைப் பொதுமக்கள் சிந்திக்க வேண்டும். ஏமாற்றுபவர்களின் சதியில் சிக்கி தங்கள் பொருளையும் அறிவையும் இழந்துவிட வேண்டாம்.
ஷைத்தானால் ஏற்படும் தீங்கு
தவறான எண்ணங்களை ஏற்படுத்தி தீய காரியங்களின் பால் அழைப்பதும் நன்மையான காரியங்களைப் புறக்கணிக்குமாறு ஏவுவதும் தான் ஷைத்தானால் செய்ய முடியும். அவன் ஏற்படுத்திய எண்ணத்திற்கு கட்டுப்படுபவர்கள் தீமையைச் செய்து விடுகிறார்கள். அவனது ஆசை வார்த்தைக்கு மயங்காதவர்கள் நன்மையின் பால் விரைகிறார்கள்.
மனிதன் தான் ஷைத்தானிற்கு கட்டுப்பட்டு தவறிழைக்கிறானே தவிர ஷைத்தான் யாரையும் வலுக்கட்டாயமாக அவர்கள் விரும்பாமல் தீமைக்கு அழைத்துச் செல்வதில்லை. அது போன்று நல்ல விஷயங்களை வெறுப்பிற்குரியதாக நமக்குக் காட்டுவானே தவிர நன்மையான காரியங்களைச் செய்யவிடாமல் ஷைத்தான் யாரிடத்திலும் சண்டைக்கு வர மாட்டான்.  இதை நாம் நமது வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அனுபவித்து வருகிறோம்.
தீய எண்ணங்களை ஏற்படுத்துவதும் தவறான வழிகளைக் காட்டுவதும் தான் ஷைத்தானுடைய வேலை என்பதைப் பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
"அவர்களை வழி கெடுப்பேன்அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்;அவர்களுக்குக் கட்டளையிடுவேன்அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.
அல்குர்ஆன் (4 : 119)
அவன் தீமையையும்வெட்கக் கேடானதையும்நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதையும் உங்களுக்குத் தூண்டுகிறான்.
அல்குர்ஆன் (2 : 169)
அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.
அல்குர்ஆன் (114 : 5)
அதிகபட்சமாக ஷைத்தானால் கணவனைப் பற்றி மனைவியிடத்திலும் மனைவியைப் பற்றி கணவனிடத்திலும் தவறான எண்ணங்களை ஏற்படுத்தி இருவரையும் பிரிக்கும் வேûயைத் தான் செய்ய முடியும். இதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இப்லீஸ்தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து "நான் இன்னின்னவாறு செய்தேன்'' என்று கூறுவான்.
அப்போது இப்லீஸ், "(சொல்லிலிக்கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை''என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, "நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை'' என்று கூறுவான். அப்போது இப்லீஸ்அவனை அருகில் வரச் செய்து, "நீதான் சரி(யான ஆள்)'' என்று (பாராட்டிக்) கூறுவான்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் (5419)
வேறெதுவும் செய்ய முடியாது?
ஒருவரை பைத்தியமாக மாற்றுவது உடல் உறுப்புக்களைச் செயலிழக்கச் செய்து முடக்கிப் போடுவது போன்ற பாரதூரமான வேலைகளை ஷைத்தானால் செய்ய இயலாது. ஆனால் இவற்றையெல்லாம் ஷைத்தானால் செய்ய முடியும் என்று கூறித் தான் ஷைத்தானை விரட்டுகிறோம் என்று கூறுபவர்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
 ஷைத்தானால் மனிதனுக்கு ஏற்படும் தீமை தவறான வழியைக் காட்டுவதைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதை பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
"அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறி விட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்! உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்! நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர். முன்னர் என்னை (இறைவனுக்கு) இணையாக்கியதை மறுக்கிறேன்'' என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு
அல்குர்ஆன் (14 : 22)
"எனது அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை'' (என்றும் இறைவன் ஷைத்தானிடம் கூறினான்.) உமது இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன்.
அல்குர்ஆன் (17 : 65)
அவனுக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் இல்லை.
அல்குர்ஆன் (34 : 21)
குர்ஆன் கூறும் இந்த அடிப்படையை மனதில் வைத்துக் கொண்டால் பில்லி சூனியம் ஏவல் போன்ற பல்வேறு மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம். பில்லி சூனியம் ஏவல் போன்ற காரியங்கள் ஷைத்தானின் உதவியால் நடப்பதாகப் பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். மேற்கண்ட வசனங்கள் இந்த நம்பிக்கையைத் தகர்த்து எரிகிறது.
 தீங்கை ஏற்படுத்துவது இறைவனின் அதிகாரம்
 நன்மையை ஏற்படுத்துவது இறைவனுடைய அதிகாரமாக இருப்பது போல் தீமைகளை ஏற்படுத்துவதும் இறைவனுக்கு மட்டும் உரிய அதிகாரமாகும். இதில் நபிமார்கள் உட்பட எப்படிப்பட்ட மகானிற்கும் எள்ளளவு கூட ஆற்றல் இல்லை என்கிற போது ஷைத்தானிற்கு இந்த ஆற்றல் இருப்பதாக நினைப்பது தவறாகும்.
"அல்லாஹ் உங்களுக்குத் தீமையை நாடினால் அல்லது நன்மையை நாடினால் அல்லாஹ்விடமிருந்து (தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவன் யார்?'' என்று கேட்பீராக! அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் (48 : 11)
தீமைகளை ஏற்படுத்துவதும் அல்லாஹ்வின் செயலே என்று திருக்குர்ஆன் கூருகிறது.
"அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும்தீமையும் செய்யச் சக்தியற்றவற்றை வணங்குகிறீர்களா?'' என்று கேட்பீராக! அல்லாஹ்வே செவியுறுபவன்அறிந்தவன்.
அல்குர்ஆன் (5 : 76)
அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும்தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!
அல்குர்ஆன் (10 : 106)
இந்த விபரங்களை நன்கு மனதில் பதிவு செய்து கொண்டு நிங்கள் சுட்டிக்காட்டும் ஹதீஸ்களை அணுக வேண்டும். மேற்கண்ட ஆதாரங்களுக்கு முரணாக இல்லாத வகையில் அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் குறிப்பிட்ட ஹதீஸ்களைப் பற்றிய விளக்கம்
முர்ரா பின் வஹப் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் தன் குழந்தையுடன் வந்தார். அக்குழந்தைக்கு பைத்தியம் பிடித்திருந்தது. அல்லாஹ்வின் எதிரியே வெளியேறிவிடு. நான் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அக்குழந்தை குனமடைந்தது.
அஹ்மது (16890)
இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது ஷைத்தானால் பைத்தியத்தை ஏற்படுத்த முடியும் என்பது போல் தெரிகின்றது.
ஷைத்தானுக்கு தீய எண்ணத்தை ஏற்படுத்துவதைத் தவிர வேறு அதிகாரம் வழங்கப்படவில்லை. தீங்கை ஏற்படுத்தும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது என்பதை முன்பே குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நிரூபித்திருக்கின்றோம்.
ஷைத்தானுக்கு பைத்தியம் ஏற்படுத்தும் ஆற்றல் உள்ளது என்று நம்புவது குர்ஆன் வசனங்களுக்கும் ஹதீஸ்களுக்கும் எதிரான நம்பிக்கையாகும். எனவே இந்த ஹதீஸை அதன் நேரடிப் பொருளில் விளங்கினால் குர்ஆனுடனும் ஹதீஸ்களுடனும் மோதவேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும்.
பின்வரும் அடிப்படையை புரிந்து கொண்டால் மற்ற ஆதாரங்களுக்கு முரணில்லாத வகையில் இந்த ஹதீஸை விளங்கிக் கொள்ள முடியும்.
ஷைத்தானுடன் தொடர்பு படுத்திக் கூறும் வழக்கம்
கெட்ட காரியங்களையும் வெறுப்பிற்குரிய விஷயங்களையும் ஷைத்தானுடன் தொடர்புபடுத்திக் கூறும் வழக்கம் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் அரபுமொழியிலும் உள்ளது.
நம்பிக்கை கொண்டோரே! மதுசூதாட்டம்பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள் ஆகியவை அருவருப்பானதும்ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!
அல்குர்ஆன் (5 : 90)
மது அருந்துவது சூதாடுவது பலிபீடங்களை உருவாக்குவது குறிபார்ப்பதற்கு அம்புகளை பயன்படுத்துவது இவையனைத்தும் கெட்ட மனிதர்களின் செயல்பாடுகளாகும். ஆனால் இவற்றை அல்லாஹ் ஷைத்தானின் செயல்களாக மேற்கண்ட வசனத்தில் கூறுகிறான்.
"நாம் அப்பாறையில் ஒதுங்கிய போது கவனித்தீராநான் மீனை மறந்து விட்டேன். அதை உம்மிடம் கூறுவதை விட்டும் ஷைத்தான் என்னை மறக்கச் செய்து விட்டான். அது கடலில் தனது பாதையை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது'' என்று (ஊழியர்) கூறினார்.
அல்குர்ஆன் (18 : 63)
மறதி உட்பட எல்லா தீமைகளும் இறைவன் புறத்திலிருந்து தான் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. என்றாலும் கெட்ட விஷயங்களை அல்லாஹ்வுடன் சேர்க்கக் கூடாது என்ற மரியாதைக்காகவே மறதியை ஷைத்தான் ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது
அய்யூப் (அலை) அவர்கள் தனக்கு நோய் ஏற்பட்டிருக்கின்றது என்பதை தெரிவிக்க ஷைத்தான் என்னைத் தீண்டிவிட்டான் என்ற வார்த்தையை கூறியிருக்கிறார்கள்.
நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும்,துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போதுஉமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்).
அல்குர்ஆன் (38 : 41)
நோயை ஏற்படுத்துவது அல்லாஹ்விற்கு மட்டும் உரிய ஆற்றலாக இருந்தாலும் வெறுக்கத்தக்க விஷயங்களை அல்லாஹ்வுடன் சேர்க்கக் கூடாது என்ற மரியாதை நிமித்தமாகவே நோயை ஷைத்தான் ஏற்படுத்தியதாக அய்யூப் (அலை) அவர்கள் கூறினார்கள்.
குர்ஆனில் வேறொரு இடத்தில் அய்யூப் (அலை) அவர்கள் செய்த இதே பிரார்த்தனையை அல்லாஹ் விவரிக்கிறான்.
"எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்'' என அய்யூப் தமது இறைவனை அழைத்த போதுஅவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.
அல்குர்ஆன் (21 : 83.84)
38:41 வது வசனத்தின் சரியான பொருள் என்ன என்பதை இந்த வசனம் தெளிவாக விவரிக்கிறது. 21:83 இந்த வசனத்தில் ஷைத்தானைப் பற்றி எதுவும் பேசப்படவில்லை. எனக்குத் துன்பம் நேர்ந்துவிட்டது என்றே அய்யூப் (அலை) அவர்கள் கூறியதாக உள்ளது.
தனக்கு துன்பம் ஏற்பட்டுவிட்டது என்பதைத் தான் அய்யூப் (அலை) அவர்கள் ஷைத்தான் வேதனையாலும்துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று குறிப்பிடுகிறார்கள். நோயை ஷைத்தான் என்று குறிப்பிடும் வழக்கம் இருந்துள்ளது என்பதற்கு அய்யூப் (அலை) அவர்களின் இக்கூற்று மிகச் சிறந்த சான்றாக உள்ளது.
 இஸ்லாமிய நம்பிக்கைப்படி பைத்தியங்கள் எந்தத் தீமை செய்தாலும் அவர்கள் பாவிகளாக மாட்டார்கள். ஷைத்தானின் வேலை அனைவரையும் பாவிகளாக்குவது தான்.
பைத்தியமாக்கப்படுவதால் ஷைத்தானுக்கு நட்டமே தவிர லாபம் இல்லை. எனவே ஷைத்தான் யாரையும் பைத்தியமாக்கும் அதிகாரத்தை பெறவில்லை. அது அவனது அலுவலும் இல்லை.
கெட்ட குணம் மற்றும் கெட்ட செயல் உள்ளவர்களுக்கு ஷைத்தான் என்று கூறப்படும்
நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்''எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது "நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் (2 : 14)
கெட்ட மனிதர்களை ஷைத்தான்கள் என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில்அவன் தான் ஷைத்தான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (3275)
 (ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "அல்அர்ஜ்'எனுமிடத்தில்  பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதை விடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலிலி)
நூல் : முஸ்லிம் (4548)
தொழுபவரின் குறுக்கே செல்பவரையும் கவிதை பாடித்திரிபவரையும் ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இங்கு சொல்லப்பட்டுள்ள ஷைத்தான் என்ற வார்த்தையை அதன் நேரடிப் பொருளில் விளங்க மாட்டோம்.
நேரடிப் பொருளில் விளங்கினால் தொழுபவரின் குறுக்கே செல்பவரையும் கவிதை பாடுபவரையும் ஷைத்தான் என்று கூற வேண்டிய நிலை வரும்.  இவர்களிடம் கெட்ட செயல் உள்ளது என்ற அடைப்படையில் தான் இவர்களை ஷைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று எல்லோரும் புரிந்துகொள்கிறோம்.
ஒட்டகத் தொழுவத்தில் தொழுவது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத் தொழுவத்தில் தொழாதீர்கள். ஏனென்றால் ஒட்டகங்கள் ஷைத்தான்களாகும் என்று கூறினார்கள். ஆடுகளை கட்டுமிடத்தில் தொழுவது பற்றி கேட்கப்பட்ட போது அங்கே நீங்கள் தொழுகலாம். ஏனென்றால் அவை பரகத்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)
நூல் : அபூதாவுத் (156)
ஒட்டகங்கள் ஆடுகளைப் போன்று அமைதியாக இருக்கும் பிராணி இல்லை. தொழுது கொண்டிருக்கும் போது தொழுகையாளியின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் இடஞ்சல்களைத் தரும் பிராணி என்பதால் நபியவர்கள் ஒட்டகங்களை ஷைத்தான்கள் என்று கூறியுள்ளார்கள்.
எனவே நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின் எதிரி என்று கூறப்பட்டிருக்கும் வார்த்தை ஷைத்தானைக் குறித்தாலும் அதன் மூலம் நாடப்படுவது ஷைத்தான் அல்ல. மறாக பைத்தியம் என்ற நோயாகும்.
3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ جُنْحُ اللَّيْلِ أَوْ أَمْسَيْتُمْ فَكُفُّوا صِبْيَانَكُمْ فَإِنَّ الشَّيَاطِينَ تَنْتَشِرُ حِينَئِذٍ فَإِذَا ذَهَبَتْ سَاعَةٌ مِنْ اللَّيْلِ فَخَلُّوهُمْ وَأَغْلِقُوا الْأَبْوَابَ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَفْتَحُ بَابًا مُغْلَقًا رواه البخاري                              
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இரவின் முற்பகுதி வந்து விட்டால் -அல்லது நீங்கள் மாலை நேரத்தை அடைந்தால்- உங்கள் குழந்தைகளை (வெüயே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில்,அப்போது ஷைத்தான்கள் (வெüயே) பரவுகின்றன. இரவில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (சுதந்திரமாக வெüயே செல்ல) விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைப் பூட்டி விடுங்கள். அப்போதுஅல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள்ஏனெனில்ஷைத்தான் மூடப்பட்ட கதவைத் திறக்க மாட்டான்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
புகாரி (3304)
மேற்கண்ட செய்தியைப் பற்றியும் விளக்கம் கேட்டிருந்தீர்கள். இதற்கும் நாம் முன்பு கூறிய விளக்கமே பொருந்தும். விஷ ஜந்துக்களைத் தான் நபி (ஸல்) அவர்கள் ஷைத்தான்கள் என்று இந்த ஹதீஸில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இருள் பரவத் தொடங்கும் போது சிறுவர்களை வெளியே விட வேண்டாம் என்றும் இரவில் சிறிது நேரம் கழிந்த பிறகு வெளியில் விடலாம் என்றும் கூறப்படுகிறது. ஆங்காங்கே சுற்றத் திரியும் விஷ ஜந்துக்கள் இரவில் ஓய்வெடுப்பதற்காக இந்த நேரத்தில் தான் தனது இருப்பிடத்தை நோக்கி விரைகின்றன. மாலை நேரம் வந்து விட்டால் பறைவைகள் உட்பட எல்லா உயிரினங்களும் தனது இருப்பிடத்தை நோக்கிச் செல்வதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம்.
சிறுவர்கள் விபரம் அற்றவர்கள் என்பதால் அவர்கள் கவனக்குறைவாக இந்த விஷப் பிராணிகளை மிதித்து விட்டால் அதனால் பெரும்பாதிப்பு ஏற்பட்டுவிடும். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வெளியே விடவேண்டாம் என்கிறார்கள்.
மேலும் இந்த ஹதீஸில் இந்தத் தடையுடன் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தருகிறார்கள்.
இரவில் உறங்கும் போது கதவுகளை பூட்டி விட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு ஷைத்தான் பூட்டப்பட்ட கதவை திறக்க மாட்டான் என்றும் கூறுகிறார்கள். இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள ஷைத்தான் என்பது விஷ ஜந்துக்கள் தான் என்பதை இது தெளிவாக விளக்குகிறது.
ஷைத்தான் மனதில் ஊடுருவி கெட்ட எண்ணங்களை ஏற்படுத்த வல்லவன். கதவை பூட்டிவிடுவதால் அவனுடைய வருகையை யாராலும் தடுத்துவிட முடியாது. இரவில் கதவை பூட்டிவிட்டால் வீட்டிற்குள் பாம்பு பள்ளி எலி போன்ற இடஞ்சல் தரும் பிராணிகள் உள்ளே வராது என்பது தான் இதன் கருத்து.
முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஒரு அறிவிப்பு இந்தக் கருத்தை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
3755حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ أَخْبَرَنَا اللَّيْثُ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ غَطُّوا الْإِنَاءَ وَأَوْكُوا السِّقَاءَ وَأَغْلِقُوا الْبَابَ وَأَطْفِئُوا السِّرَاجَ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَحُلُّ سِقَاءً وَلَا يَفْتَحُ بَابًا وَلَا يَكْشِفُ إِنَاءً فَإِنْ لَمْ يَجِدْ أَحَدُكُمْ إِلَّا أَنْ يَعْرُضَ عَلَى إِنَائِهِ عُودًا وَيَذْكُرَ اسْمَ اللَّهِ فَلْيَفْعَلْ فَإِنَّ الْفُوَيْسِقَةَ تُضْرِمُ عَلَى أَهْلِ الْبَيْتِ بَيْتَهُمْ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பாத்திரங்களை மூடிவையுங்கள்தண்ணீர் தோல் பையின் வாயைச் சுருக்கிட்டுக் கட்டி விடுங்கள்கதவைத் தாழிட்டுவிடுங்கள்விளக்கை அணைத்துவிடுங்கள்ஏனெனில்,ஷைத்தான் (சுருக்கிட்டு மூடிவைக்கப்பட்ட) எந்தப் பையையும் அவிழ்ப்பதில்லை;மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை; (மூடிவைக்கப்பட்ட) எந்தப் பாத்திரத்தையும் திறப்பதில்லை உங்களில் ஒருவர் தமது பாத்திரத்தின் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது அல்லாஹ்வின் பெயர் சொல்லி மூடிவைக்க முடியுமானால் அவ்வாறே அவர் செய்து கொள்ளட்டும். ஏனென்றால்எலி(விளக்கின் திரியை இழுத்துச் சென்று) வீட்டாரோடு சேர்த்து வீட்டை எரித்துவிடும்.
இதை ஜாபிர் (ரலிலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம் (4099)
ஷைத்தான் எந்த பையையும் அவிழ்க்கமாட்டான். மூடப்பட்ட எந்தக் கதவையும் பாத்திரத்தையும் திறக்க மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் கெடுதல் தரும் பிராணிகளைத் தான் ஷைத்தான்கள் என்று கூறியுள்ளார்கள். எலியின் அபாயத்தை நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்திருப்பதும் நமது விளக்கத்தை மேலும் வலுவூட்டுகிறது.
பாலைவனங்களிலும் குகைகளிலும் தனித்திருப்பது தடுக்கப்பட்டிருக்கின்றது ஏனெனில் அங்கு ஷைத்தான் இருப்பான் என்று ஒரு நபிமொழி இருப்பதாக நீங்கள் கூறியுள்ளீர்கள்.
நீங்கள் கூறியவாறு நபிமொழியை நம்மால் பார்க்க முடியவில்லை. ஆனால் இந்தக் கருத்துப்பட திர்மிதியில் ஒரு நபிமொழி பதிவுசெய்யப்பட்டுள்ளது.
حَدَّثَنَا إِسْحَقُ بْنُ مُوسَى الْأَنْصَارِيُّ حَدَّثَنَا مَعْنٌ حَدَّثَنَا مَالِكٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الرَّاكِبُ شَيْطَانٌ وَالرَّاكِبَانِ شَيْطَانَانِ وَالثَّلَاثَةُ رَكْبٌ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ رواه الترمذي
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பயணிக்கும் ஒருவர் ஷைத்தான் ஆவார். பயணிக்கும் இருவர் ஷைத்தான் ஆவார்கள். மூன்று நபர்களே பயணிகளாவார்கள்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : திர்மிதி (1597)
தனியாகவோ இருவர் மட்டுமோ பயணம் செய்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்கிறார்கள். அவ்வாறு பயணம் செய்பவர்களை ஷைத்தான் என்றும் கூறுகிறார்கள்.
தனியாக பயணம் செய்யும் போது காட்டு விலங்குகளால் தாக்கப்படலாம். தீடிரென ஒரு ஆபத்து நேர்ந்தால் அதை நம்மால் சமாளிக்க முடியுôமல் போய்விடும். இதுபோன்ற பல காரணங்களால் தான் இவ்வாறு பயணம் செய்ய வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
நீங்கள் குறிப்பிட்ட செய்தியும் இதேக் கருத்தைத் தான் தருகிறது. பாவைனத்திலும் குகைளிலும் தனியாக இருந்தால் அது கண்டிப்பாக ஆபத்தான சூழ்நிலை தான். எந்த நேரத்திலும் நம் உயிருக்கு பேராபத்து ஏற்படலாம். காட்டு விலங்குகளால் விஷ ஜந்துக்களால் ஏற்படலாம். கொள்ளையர்களால் தாக்கப்படலாம்.
மேலும் ஷைத்தான் எல்லா இடங்களிலும் எல்லோருடனும் இருக்கும் போது பாலைவனத்தையும் குகைகளையும் குறிப்பிட்டு அங்கே ஷைத்தான் இருக்கின்றான் என்று கூறுவதென்றால் அங்கே மனிதனுக்கு ஏற்படும் ஆபத்துகளைத் தான் ஷைத்தான்கள் என்று கூறப்பட்டுள்ளது என்பதை சந்தேகமற அறியலாம்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَا حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ النَّضْرِ بْنِ أَنَسٍ عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ هَذِهِ الْحُشُوشَ مُحْتَضَرَةٌ فَإِذَا دَخَلَ أَحَدُكُمْ فَلْيَقُلْ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ رواه إبن ماجه
இந்த கழிப்பிடங்கள் (ஷைத்தான்கள்) வருகைதரும் இடமாக உள்ளது. ஆகவே உங்களில் ஒருவர் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது, "இறைவா! (அருவருக்கத் தக்க செயல்கள்இழிவான எண்ணங்கள் ஆகியற்றைத் தூண்டும்) ஆண் பெண் ஷைத்தானி(ன் தீங்கிலி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்''என்று கூறிக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : ஸைது பின் அர்கம் (ரலி)
நூல் : இப்னு மாஜா (292)
மேற்கண்ட ஹதீஸின் விளக்கத்தை கேட்டுள்ளீர்கள். இந்த ஹதீஸில் கழிப்பிடங்கள் ஷைத்தான்கள் வருகை தரும் இடங்கள் என்றும் அவற்றின் தீங்கிலிருந்து பாதுகாப்புத் தேட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாம் முன்பு கூறிய அடிப்படைகளுக்கும் விளக்கங்களுக்கும் மாற்றமான எந்த அம்சமும் இந்த ஹதீஸில் இல்லை.
ஷைத்தான்களால் தீங்கு ஏற்படாது என்று நாம் கூறவில்லை. மாறாக தீய எண்ணத்தை ஏற்படுத்தும் தீங்கை மட்டுமே ஷைத்தான்களால் செய்ய முடியும் என்றே கூறுகிறோம்.
ஆங்காகங்கே அரசாங்கத்தால் கட்டப்பட்டிருக்கும் கழிவறைக்குள் சென்று பார்த்தால் இந்த ஹதீஸ் கூறும் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை என்பதை அறியலாம்.
மலம் ஜலம் கழிப்பதற்காகவே கழிவறை பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் அந்த கழிவறைக்குள் சென்றவர்கள் ஆபாசமான படங்களையும் அசிங்கமான வரிகளையும் மாநகராட்சி கழிவறைக்குள் எழுதி வைத்திருக்கின்றனர். இன்னும் இந்த மாநாகராட்சி கழிவறைகள் விபச்சாரத்திற்கும் ஓரினைச் சேர்க்கைக்கும் கேந்திரமாக பயன்படுகிறது.
கழிவறையில் ஷைத்தான் ஏற்படுத்திய தவறான எண்ணங்களால் இவ்வளவு அசிங்கம் நடக்கின்றது. இதனால் தான் என்னவோ நபி (ஸல்) அவர்கள் கழிவறைக்குச் செல்லும் போது ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடுமாறு நமக்கு கூறியிருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஆதமுடைய மக்களிடம் ஷைத்தானுக்கு ஒரு ஆதிக்கம் உண்டு. வானவருக்கும் ஒரு ஆதிக்கம் உண்டு. தீய எண்ணத்தை ஏற்படுத்துவதும் உண்மையை மறுத்துவிடுமாறு கூறுவதுமே ஷைத்தானின் ஆதிக்கம். நல்ல எண்ணத்தை ஏற்படுத்துவதும் சத்தியத்தை உண்மைப்படுத்துமாறு கூறுவதுமே வானவரின் ஆதிக்கம்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : திர்மிதி (2914)
இந்த ஹதீஸின் விளக்கத்தையும் கேட்டிருந்தீர்கள். இச்செய்தியில் மூன்றாவது அறிவிப்பாளராக இடம்பெறும் அதாஉ பின் சாயிப் என்பவர் பலவீனமானவர் ஆவார்.
இவர் நினைவாற்றல் பாதிக்கப்பட்டவராவார். இவர் மேற்கண்ட செய்தியை நல்ல நினைவாற்றல் இருக்கையில் அறிவித்தாரா அல்லது நினைவாற்றல் பாதிக்கப்பட்ட பிறகு அறிவித்தாரா என்று தெரியவில்லை. எனவே இதை ஆதாரப்பூர்வமானது என்று கூறமுடியாது.

இத்துடன் நாம் கூறிய விளக்கத்துக்கு மாற்றமான எந்த கருத்தையும் இந்த ஹதீஸ் கூறவில்லை. மாறாக ஷைத்தானுக்கு தீய எண்ணத்தை ஏற்படுத்தும் ஒரு ஆற்றல் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று நாம் கூறிய கருத்தையே இதுவும் கூறுகின்றது

No comments:

Post a Comment