பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, September 13, 2014

ஜின்களுக்குத் தனி உலகம் உண்டா

ஜின்களுக்குத் தனி உலகம் உண்டா?
பதில்
ஜின்களுக்கு என்று தனியொரு உலகம் இருப்பதாகச் சிலர் கூறி வருகின்றனர்குர்ஆன்ஹதீஸ் அடிப்படையில் சிந்தித்தால் இது தவறான கருத்து என்பதை அறியலாம்.
ஜின்கள் மனிதர்கள் வாழும் பூமியில் தான் வசிக்கின்றனகுறிப்பாக ஓடைகள் மற்றும்மலைக் கணவாய்களில் தங்கி இருக்கின்றன.
மனித ஜின் கூட்டமேவானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள்சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்லமாட்டீர்கள்.
அல்குர்ஆன் (55 : 33)
பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்லுங்கள் என ஜின்களைப் பார்த்துக் கூறுவதாகஇருந்தால் ஜின்கள் இந்தப் பூமியில் வசித்தாலே இவ்வாறு கூற முடியும்.
மேலும் பின்வரும் செய்திகளும் ஜின்கள் பூமியில் இருக்கின்றன என்று கூறுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்என்னிடம் "நஸீபீன்'என்னுமிடத்தைச் சேர்ந்த ஜின்களின் குழு ஒன்று வந்ததுஅவை நல்லஜின்களாயிருந்தனஅவை என்னிடம் உணவு தரும்படி கேட்டனநான், "அவை எந்தஎலும்பையும் எந்த கெட்டிச் சாணத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப்பெற்றுக் கொள்ள வேண்டும்'' என்று அல்லாஹ்விடம் அவற்றுக்காகப்பிரார்த்தித்தேன்.''என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிநூல் : புகாரி (3860)
அபுத்தய்யாஹ் (ரஹ்அவர்கள் கூறுகிறார்கள் : வயோதிகராக இருந்த அப்துர் ரஹ்மான்பின் கம்பஷ் (ரலிஅவர்களிடம் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் காலத்தைஅடைந்தவராஎன்று கேட்டேன்அதற்கு அவர்கள் ஆம் என்று கூறினார்கள்.ஷைத்தான்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களை நெருங்கிய போது நபியவர்கள்என்ன செய்தார்கள் என்று நான் கேட்டேன்அதற்கு அவர் அந்த இரவில் ஷைத்தான்கள்ஓடைகளிலிருந்தும் மலைக் கணவாய்களிலிருந்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களை நோக்கி விரைந்தன.
நூல் : அஹ்மத் (14914)

No comments:

Post a Comment