பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)
Showing posts with label Wrong Belief. Show all posts
Showing posts with label Wrong Belief. Show all posts

Friday, December 24, 2010

தப்லீகின் தஃலீம் தொகுப்பு 1993 மே

தப்லீகின் தஃலீம் தொகுப்பு 1993 மே
 1993 மே அல்ஜன்னத் இதழில் எழுதப்பட்ட ஒரு தொடர் - தேவையான திருத்தங்களுடன்
ஒரு ஹதீதுக் கலை நிபுணர் குர்ஆன் வசனங்களுக்கோ நபிமொழிகளுக்கோ தவறான விளக்கம் கொடுப்பவராக அல்லது கொடுக்கப்பட்ட தவறான விளக்கங்களை பாராட்டுபவராக இருக்க மாட்டார். ஸகரிய்யா சாகிப் தன் தஃலீம் தொகுப்பு நூலில் பல இடங்களில் தவறான விளக்கங்களைக் கொடுத்திருப்பதுடன் வேறு பலர் கொடுத்த தவறான விளங்கங்களைப் பாராட்டவும் செய்கிறார். தெளிவான சான்றுகளையும் சிக்கலானவைகளாக சித்தரிக்கின்றார்.
தஃலீம் தொகுப்பு திக்ரின் சிறப்புகள் அத்தியாயம் பக்கம் 783 ஐப் புரட்டுங்கள்.
ஈமான் கொண்டவர்களே அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். மேலும் உண்மையாளர்களுடன் இருங்கள் என்ற (9:119) இறை வசனத்தை எழுதிவிட்டு அடுத்து தொடர்கிறார்.
நீங்கள் அல்லாஹ்வுடன் இருங்கள். அது உங்களுக்கு முடியவில்லையானால் அல்லாஹ்வுடன் இருப்பவர்களுடன் இருங்கள் என்று சூஃபியாக்கள் கூறுகின்றனர்.
இந்த விபரீதமான பொருளை இவர்  கொடுக்கும் இவரது அசட்டுத் துணிச்சலை என்னவென்று கூறுவது? இவர் விளங்கியிருக்கின்ற விளக்கம் தவறானது மட்டுமல்ல. வழிகேட்டுக்கு நேராக இட்டுச் செல்லும் பொருளாகும் என்பதை இங்கு காண்போம்.
இந்த வசனத்திற்கு முந்தைய வசனத்தைப் படியுங்கள். தபூக் யுத்தத்தில் பங்கு கொள்ள நபித் தோழர்கள் திரளாகப் புறப்பட்டார்கள். நயவஞ்சகர்கள் வழமை போல் இந்த யுத்தத்திற்குப் புறப்படவில்லை . திரும்பி வந்த நபி ஸல் அவர்களிடம் நயவஞ்சகர்கள் நல்லவர்களைப் போல் பாசாங்கு செய்து பொய்க் காரணம் கூறி நபிகளாரிடமிருந்து விடை பெற்றுச் சென்றார்கள். அந்த யுத்தத்திற்கு மூன்று உண்மைத் தோழர்கள்  புறப்படவில்லை. கலந்து கொள்ளாமைக்குத் தகுந்த காரணமும் இல்லை. திரும்பி வந்த நபியவர்களிடம் இம்மூவரும் உண்மையைச் சொல்லி விட்டார்கள். தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டார்கள். இம்மூவரும் நபியவர்களால் தண்டிக்கப்பட்டார்கள். ஐம்பது தினங்களுக்குப் பின்னர் இவர்களை மன்னித்து விட்டதாக இறைவன் (9:118) வசனத்தை இறக்கினான்.  உண்மையே உரைத்த இத்தோழர்கள் இறை மன்னிப்பை அடைந்தார்கள். பொய்க் காரணம் கூறிய நயவஞ்சகர்கள் இறை மன்னிப்பென்ற பாக்கியத்தை இழந்தார்கள் (இச்சம்பவத்தை விரிவாக புகாரி உள்பட பல்வேறு ஹதீது நூல்களில் காணலாம். ஸகரிய்யா ஸாகிபும் இந்த முழு சம்பவத்தை தனது தஃலீம் தொகுப்பில் ஸஹாபாக்களின் வரலாறுகள் என்ற தலைப்பில் ஒன்பதாவது சம்பவமாக  இடம் பெறச் செய்திருக்கிறார்) இம்மூவருக்கும் வழங்கப்பட்ட இறை மன்னிப்பு தொடர்பான வசனத்திற்கு பின்னரே 9:119 வசனம் அமைந்துள்ளது.
இதிலிருந்து நாம் விளங்குவது என்ன?
இந்த மூவரைப் போல் நாமும் இறைவனை அஞ்ச வேண்டும். அவர்கள் உண்மை பேசி இறையருளுக்குரியவர்களாக திகழ்ந்ததைப்  போல் நாமும் வாழ வேண்டும். இதுவே இந்த வசனம் நமக்குத் தரும் போதனையாகும். ஆனால் இந்த வசனத்தின் கருத்தை வேறு எங்கோ இவர் கொண்டு சொல்கிறார் திசை திருப்புகிறார்.
இறைவனை அஞ்சுங்கள் என்றால் இறைவனுடன் இருங்கள் என்று பொருளாம். உண்மையாளர்களுடன் இருங்கள் என்றால் இறைவனுடன் இருக்க முடியாத நிலையில் இறைவனுடன் இருப்பவர்களுடனாவது இருங்கள் என்று பொருளாம்.
நபித் தோழரோ, நபித்தோழர்களிடம் பாடம் பெற்ற மேதைகளோ ,நபிமொழித் தொகுப்புகளைத் தந்த மூதறிஞர்களோ இந்த வினோத விளக்கத்தைத் தந்ததாக இவர் குறிப்பிடவும் இல்லை. எந்த நூலையும் இவர் மேற்கோள் காட்டவும் இல்லை. மாறாக சூஃபியாக்கள் என்போர் தாம் இவ்வாறு விளக்கம் சொன்னதாக கூறுகிறார்.
முறைகேடான விளக்கங்களை சூஃபியாக்கள் என்போர் தலைகளில் கட்டிவிடுவது இவரது வாடிக்கை.
அத்தோடு விட்டாரா? 482 ஆம் பக்கத்தில் இதே 9:119 வசனத்தை எழுதிவிட்டு தொடர்ந்து எழுதுகிறார்.
இவ்விடத்தில் உண்மையாளர்கள் என்பது ஞானிகளாகிய சூஃபியாக்களையே குறிக்கின்றது.
இவர்களுக்கு ஸஹாபாக்களின் மீது என்ன கோபம்?
தாபியீன்கள், தபாஉத்தாபிஈன்கள் மீது என்ன வெறுப்பு?
இவர்களையெல்லாம் இந்த வசனத்தின் உண்மையாளர்கள் என்பது குறிக்காதாம்.
இவர் போற்றும் சூஃபியாக்களைத் தான் குறிக்குமாம். இந்த சூஃபியாக்களின் மாண்புகளை (?) இவர் விவரிக்கும் வாசகங்களைப் படியுங்கள் (பக்கம் 482
கண்ணியம் வாய்ந்தவரென்று  நீ கருதும் ஒரு பெரியவரைச் சந்தித்தால் அவருக்கு ஊழியம் செய்வாயாக. அவரிடம் இறந்த மனிதனைப்  போன்று ஆகிவிடு. அவர், தான் விரும்பியபடி உன்னைப் பயன்படுத்திக் கொள்ளட்டும். உன்னுடைய  விருப்பப்படி நீ செயல்படாதே. அவர் இடும் உத்தரவுகளை உடனே நிறைவேற்று . அவர் தடுப்பதை விட்டும் விலகிக் கொள். அவர் தொழில் செய்யும் படி கூறினால் தொழில் செய். அவர் உட்காரும்படிக் கூறினால் உட்காருவாயாக ..
இவை இவரது மணிவாசகங்கள் (?)
நமக்கென்று சுயவிருப்பம் ஏதும் கூடாதாம். தொழில் செய்யலாகாதாம். அவர் விருப்பத்திற்கு நம்மைப் பயன்படுத்துவாராம். அந்த பெரியாருக்கு இவ்வாறு பணிவதால் தான். பிணம் போல் ஆவதால் தான் இறைவனது தொடர்பை நாம் அடைய முடியுமாம். இவர் தான் ஞானியாம். பூரண குருவாம்.
ஆனால் தனக்குப் பிடித்தமில்லாதவருடன் வாழுமாறு நபியவர்கள் ஒரு பெண்ணிடம் கூறிய போது இது உங்கள் கட்டளையா? என்று அப்பெண் மணி நபி ஸல் அவர்களிடம் வினவினார். (இல்லை அவருக்காக) நான் சிபாரிசு தான் செய்கிறேன் என்று நபி ஸல் கூறவும் அல்லாஹ்வின் தூதரே அவர் எனக்குத் தேவையில்லை என்று அப்பெண் மறுத்து விட்டார். இச்செய்தி புகாரியில் பதிவாகியுள்ளது. இச்செய்தி இவருக்குத் தெரியாதா?
நபி ஸல் அவர்களே ஒரு பெண்ணின் சுயவிருப்பத்திற்கு வழிவிட்டிருக்கிறார்கள். நபியவர்களின் கால்தூசிக் கூட தகுதியுற்றவர்களின் சுயவிருப்பத்திற்கு நாம் பலியாக வேண்டும் என்று கூறும் இவரது தப்லீக் எத்திவைப்பது எதனை? நபிவழியையா? மனிதர்களை அடிமைப்படுத்தத் துடிக்கும் கும்பல்களின் தீயவழியையா?
இறைவனுடன் நமக்குத் தொடர்பை ஏற்படுத்தும் அதி அற்புத ஞானிகளாம் சூஃபியாக்கள்.
எந்த சூஃபியாக்கள்?
1.)மிம்பரில் ஏறி நிர்வாண கோலத்தில் சொற்பொழிவுவாற்றிய சூபிகளையா
2.பலபெரியார்கள் முன்பு காற்று விட்டுவிட்டு இன்னொரு வரைக் ட்டி இவர்தான் காற்று ட்டார் என்று பழிசொல்லி தலைகுனியச் செய்வார்களே அந்த சூபியாக்களையா
3.பெண்களையும், சிறுவர்களையும் தகாத செயல்களுக்கு அழைத்தார்களே அந்த சூபியாக்களையா
4.முக்கடவுள் நம்பிக்கையுடையோரும் சத்தியவான்களே என்று கூறிய இப்னு அரபி போன்ற சூபியாக்களையா
5.இறைவன் என்னை உருவாக்க நான் அவனை உருவாக்கினேன் என்று கூறுவார்கள் என்று கூறிய அப்துல் கரீம் அல்ஜியலீ என்பவனையா?
 6.காளைக் கன்றை வணங்கிய கூட்டத்தார் அல்லாஹ்வைத் தான் வணங்கினார்கள். ஏனெனில் எல்லாம் அல்லாஹ் தான் என்று கூறிய இப்னு அரபி கும்பலையா?.
7.மகனை அறுப்பதாக கனவு கண்ட இப்ராஹீம் நபி அலை ஆட்டை அறுக்காமல் மகனையே அறுக்க ஆயத்தமானது தவறு என்று கூறிய இப்னு அரபீ என்பவனையா?
நாங்கள் கடலில் மூழ்கி விட்டோம் ஆனால் இறைத் தூதர்கள் கரைகளில் தான் நிற்கிறார்கள் என்று கூறினார்களே அந்த சூபிக்களையா?
யூசுப் நபி அலை அவர்களை கிணற்றில் வீசி தந்தையிடமிருந்து பிரித்த சகோதார்கள் இந்த மாபாதகச் செயல்களை இறைவனின் கட்டளைப் படி வஹீயின் அடிப்படையில் தான் செய்தனர் என்று இட்டுக்கட்டிய கேடுகெட்ட சூபிகளையா?.
10.அய்யூப் நபி அலை அகநோயில் சிக்கினார்கள். இறைத் தொடர்பிலிருந்து விலகினார்கள். இறைவனல்லாதாருடன் தொடர்பு வைத்தார்கள் என்று கூறிய  அப்துல் அஸீஸ் தப்பாக் என்ற சூஃபியையா?
சூஃபியாக்கள் என்பர் நபிமார்களேயல்லர். சஹாபாக்களுமல்லர் தாபியீன்களுமல்லர், இமாம்களுமல்லர், இறைநேசச் செல்வர்களுமல்லர் . மாறாக நபிமார்களையும் நல்லடியார்களையும் மட்டம் தட்டி கேடு கெட்டவர்களை நல்லடியார்கள் என்று காட்டியவர்கள் தான் சூபியாக்கள்.
அந்த வழிகேடர்களுடன் நாமும் இணைய வேண்டும் என்று ஜகரிய்யா சாகிப் கட்டளையிடுகிறார்.
            இனியேனும் இவரது தஃலீம் நூலைப் பள்ளிகளில் படிப்பதை இந்தச் சமுதாயம் நிறுத்துமா?


தப்லீகின் தஃலீம் தொகுப்பு- 1993 மார்ச்


தப்லீகின் தஃலீம் தொகுப்பு- 1993 மார்ச்
 
1993 அல்ஜன்னத் மார்ச் இதழில் வெளியிடப்பட்ட ஒரு தொடர் தேவையான திருத்தங்களுடன்          
மக்களை திசை திருப்பக் கூடியவர்களை அவர்களின் எழுத்துக்களே அடையாளம் காட்டிவிடும். மேலும் சில சான்றுகளைப் பாருங்கள்.
நான்கு இமாம்களிடத்தில் கருத்து வேறுபாடு இல்லாத எந்த சிறு மஸ்அலாவும் இல்லை.
அமல்களின் சிறப்பு பக்கம் 377
தராவீஹ் தொழுகை சுன்னத் என்பதாக இமாம்கள் அனைவரும் ஏகோபித்துக் கூறியுள்ளனர்.
அமல்களின் சிறப்பு: 317
 ஆயுளில் ஒரு தடவை ஸலவாத் சொல்வது பர்லு என்பதாக எல்லா மத்ஹபுகளுடைய மார்க்க அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர்.
அமல்களின் சிறப்பு: 342
ஸஹர் சாப்பிடுவது முஸ்தஹப் என்பது இமாம்களின் ஏகோபித்த முடிவாகும்.
அமல்களின் சிறப்பு 352
இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு இல்லாத எந்த ஒரு சிறு சட்டமும் கிடையாது என்று ஒரு இடத்தில் கூறிவிட்டு இமாம்கள் ஏகோபித்து ஒத்த கருத்துக்கு வந்ததாக பல  இடங்களில் பட்டியலிடுகிறார்.
முன்னுக்குப் பின் முரணாக எழுதுவதால் தான் இவரை ஷைகுல்  ஹதீஸ் என்று கூறுகிறார்கள் போலும் திருக்குர்ஆனுக்கும் நபிவழிக்கும் முரணாக இவர் விடுகின்ற பொய்களை இன்னும் கேளுங்கள்.
தொழும் போது உங்களுக்கு உலக நினைவுகள் எவையேனும் வருமா? என்று ஒரு பெரியாரிடம் கேட்கப்பட்ட போது தொழும் போதும் எனக்கு உலக நினைவுகள் வருவதில்லை தொழுது முடித்த பின்பும் வருவதில்லை என்று கூறினார்.
அமல்களின் சிறப்புகள் பக்கம் 147
தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் உலக நினைவுகள் வராத ஒருவர் இருக்க முடியுமா? இவ்வாறு இருப்பது சாத்தியமே இல்லை என்று இந்த ஹதீஸை கலை மேதைக்கு தெரியாதா?
நபி ஸல் அவர்கள்  மரணித்த பின்பு யார் ஆட்சித் தலைவராக வருவது என்ற விவகாரத்தில் நபித் தோழர்கள் விவாதம் செய்தார்கள் என்ற செய்தி இவருக்குத் தெரியாதா?
பசியில் வாடிய அபூஹுரைரா பசியைப் போக்கிட எதிரிகள் விட்டுச் சென்ற பொருட்களை அள்ளினார்கள் என்ற செய்தி இவருக்குத் தெரியாதா?
பஹ்ரைன் நாட்டிலிருந்து வந்த பொருட்களில் தங்களுக்குப் பங்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக பள்ளியை நோக்கி நபித் தோழர்கள் வந்தததும் நபி ஸல் அவர்களின் சிறிய தந்தை அப்பாஸ் ரலி அவர்கள் எனக்கு அதிக அளவு வேண்டும் என்று  கேட்டதும் இவருக்குத் தெரியாதா?
ஏன் நபி ஸல் அவர்கள் கூட நான் தூங்கவும் செய்கிறேன். தொழவும் செய்கிறேன். பெண்களை மணமுடித்திருக்கிறேன். நோன்பு நோற்கவும் செய்கிறேன். சிலவேளை நோன்பை விட்டு விடவும் செய்கிறேன் என்று கூறியது கூட இவருக்குத் தெரியவில்லையா?
இவர்களுக்கெல்லாம் உலக நினைவு இருந்திருக்கிறது. உலக நினைவற்று இருப்பது எந்த மனிதனருக்கும் சாத்தியமானது இல்லை என்று ஷைகுல் ஹதீஸƒக்கு தெரியாமல் போனது ஏன்? ஹதீஸ்களில் ஈடுபாடு உள்ள இவருக்கு நிச்சயம் இவையெல்லாம் தெரியாமலிருக்க முடியாது. உலக நினைவற்று இருப்பது அறவே சாத்தியமில்லை என்று நபியவர்கள் கூறியதும் அவருக்குத் தெரியும்.
தெரிந்து கொண்டே தான் இவ்வாறு எழுதியுள்ளார். பெரியார்கள் மீது பக்தி முற்றிப் போய் வேண்டுமென்றே தான் இவ்வாறு அவர் எழுதியுள்ளார். நாம் கற்பனையாக இதைக் கூறவில்லை. இவ்வாறு அவர் தருகின்ற வாக்கு மூலத்தை வைத்தே இவ்வாறு கூறுகிறோம். இதோ அவரது வாக்கு மூலம்.
நபி ஸல் அவர்கள் உபதேசிக்கும் போது அங்கு கூடியிருக்கும் சமயம் ஏற்படுகின்ற உருக்கமும், கவலையும் வீட்டுக்கு வந்ததும் அகன்று விடுகின்றது. மனைவி மக்களுடன் கலந்து சிரித்துப் பேசி  உலகப் பேச்சுக்களில் சிந்தனை சென்று விடுகின்றது. நபி ஸல் அவர்களிடம் இருக்கும் போது ஒரு நிலை . அங்கிருந்து அகன்றதும் இன்னொரு நிலை. இது நயவஞ்சகத்தின் சாயலோ என்ற அச்சம் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களுக்கும், ஹன்லழா ரலி அவர்களுக்கும் ஏற்பட்டது. இருவரும் நபி ஸல் அவர்களிடம் விளக்கம் கேட்கச் சென்றார்கள். இதனைச் செவியுற்ற நபி ஸல் உலக நினைவற்ற வாழ்வது சாத்தியமல்ல என்ற கருத்தை அவ்விரு தோழர்களுக்கும் உணர்த்தினார்கள்.
இந்த சம்பவத்தை 902, 903 பக்கங்களில் கூறுகிறார் .
அது மட்டுமில்லை. இதைத் தொடர்ந்து அவர் கூறுவதையும் கேளுங்கள்.
மனிதனுக்கு அவனுக்குரிய அவசியத் தேவைகள் இருக்கின்றன. அவற்றைப் பூர்த்தி செய்வதும் அவசியமாகும். சாப்பிடுதல், குடித்தல், மனைவி மக்களைப் பராமரித்தல் போன்றவை கட்டாயத் தேவைகளாகும். எனவே மறுமைமையைப் பற்றிய சிந்தனை சிற்சில நேரங்களில் தான் இருக்க முடியும். எல்லா நேரங்களிலும் இவ்வாறு இருப்பது முடியாது. அவ்வாறு இருக்க  வேண்டுமென விரும்புவதும் சரியில்லை. மறுமையைப் பற்றிய சிந்தனையிலேயே மூழ்கி இருப்பது மலக்குகளுடைய நிலையாகும். ஏனெனில் அவர்களுக்கு மனைவி மக்களின் சிந்தனையோ உலகவாழ்வின் பிரச்சனைகளோ எதுவும் கிடையாது. மாறாக மனிதர்களுக்கு மனிதத் தேவைகள் இருப்பதால் மலக்குகளைப் போன்று ஒரே சிந்தனையில் இருக்க முடியாது.
அமல்களின் சிறப்புகள் பக்கம் 904
இவ்வாறெல்லாம் எழுதியவர் எப்படி அந்தப் பெரியாரைப் பற்றி உலக சிந்தனையற்றவர் என்று வர்ணித்தார்?
இந்த நபித்தோழர்களை விட இந்தப் பெரியார் உயர்ந்து விட்டாரா? மலக்காக ஆகி விட்டாரா? சாத்தியமற்ற ஒரு தன்மைக்கு உரிமை கொண்டாடியவரை - பொய்யரை - பெரியார் என்று ஸகரிய்யா சாஹிப் சிறப்புப்படுத்திக் கூறுகிறார் என்றால் இவர் நபித் தோழர்களை விட அந்தப் பெரியார் உயர்ந்தவர் என்று சொல்ல வருகிறாரா?
உலக நினைவே வராத அந்தப் பெரியார் சம்பவத்தைத் தொடர்ந்து ஸகரியா சாஹிப் கூறுவதைப் பார்க்கும் போது குழப்பத்தின் மறுவடிவமாகவோ அவர் இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகின்றது.
இப்படிப்பட்ட சம்பவங்களை நாம் சந்தேகங்கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் முதலாவதாக இந்தச் சம்பவங்களெல்லாம்  சரியான ஆதாரங்களுடன் அதிகமான அறிவிப்புத் தொடர்களுடன் கூறப்பட்டுள்ளன. நாம் இவற்றை சந்தேகிப்போமானால் சரித்திரம் முழுவதுமே நம்பிக்கையற்றதாக ஆகிவிடும்.
அமல்களின் சிறப்பு பக்கம் 147
பெரியார் சம்பவத்தை எவ்வளவு தைரியமாக நியாயப்படுத்துகிறார். இதைச் சந்தேகித்தால் சரித்திரம் முழுவதையுமே சந்தேகிக்க வேண்டி வரும்.
சரி இதை சந்தேகிக்காமல் ஏற்றுக் கொண்டால் நாம் மேலே எடுத்துக் காட்டிய அத்தனை செய்திகளும் சந்தேகத்திற்குரியதாகி விடுமே. ஸகரியா சாஹிபையும் சந்தேகிக்க வேண்டி வருமே? அதற்கு என்ன பதில்? இந்தச் சம்பவத்தை அவரே சந்தேகித்துத் தானே இது மலக்ககளின் தன்மை என்கிறார். அப்படியானால் சரித்தரம் முழுவதையும் சந்தேகித்தவர் ஸகரியா சாஹிப் தானே.
இது அதிகமான அறிவிப்புத் தொடருடன் அறிவிக்கப்பட்டுள்ளதாம். இது ஆதாரப்பூர்வமான சம்பவமாம். பூச்சுற்றுகிறார் ஸகரியா ஸாஹிப்.
இந்தப் பெரியார் யார் என்ற விபரம் இல்லை. அவர் வாழ்ந்த ஆண்டு இல்லை. அவர் பிறந்த வளர்ந்த மரணித்த ஊர் கூறப்படவில்லை. அவரது திருநாமமும் இல்லை. அது ஆதாரப்பூர்வமானதாம். ஆதாரப்பூர்வமானது என்பதற்கே இலக்கணம் தெரியாதவர்.
அவரது ஆதரவாளர்களாவது அந்த ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடர்களை வெளியிடுவார்களா?
பக்கங்களை நிரப்ப வேண்டும். தலையணை அளவுக்கு பெரிய புத்தகமாக வர வேண்டும். எழுத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதையோ குழப்பமாக இருப்பதையோ பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அந்த வகையில் ஸகரியா சாஹிபுக்கு நிச்சயம் முதலிடம் உண்டு.
ஸகரியா ஸாஹிப் பக்தர்களிடம் நாம் கேட்பது ஒன்று தான். 147 ஆம் பக்கத்தில் அவர் செய்யும் போதனை சரியா. அல்லது 904 ஆம் பக்கத்தில் செய்யும் போதனை சரியா? இதை மட்டும் அவர்கள் விளக்கட்டும்.