பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Sunday, August 31, 2025

சொர்க்கத்தில் நபியுடன் இருக்க சில வழிகள்

சொர்க்கத்தில் நபியுடன் இருக்க சில வழிகள் 

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

சொர்க்கம் எனும் உயர் இலக்கை நோக்கியே முஸ்லிம்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். பயணத்தின் நடுவே உலக ஆசைகள் அவர்களை அவ்வப்போது திசை திருப்பினாலும் சொர்க்கம் எனும் இலக்கை விட்டு விட, அதன் இன்பத்தை இழந்து விட எந்த முஸ்லிமும் தயாராக இல்லை.

பாவம் செய்யும் பாவிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஏனெனில் சொர்க்கத்தில் சிறிதளவு இடம் கிடைப்பதாயினும் அது அவ்வளவு எளிதல்ல.

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مَوْضِعُ سَوْطٍ فِي الجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (கிடைப்பது) உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி),
நூல் : புகாரி-3250 

சாட்டையின் இருப்பிற்கு சாண் அளவு இடமே போதும். சொர்க்கத்தில் அந்தளவு இடம் கிடைப்பது முழு உலகம் கிடைப்பதைக் காட்டிலும் சிறந்தது என்று நபிகளார் கூறுவதிலிருந்து, சொர்க்கம் நுழைவது எவ்வளவு சிரமம் என்பதையும் அதன் இன்பம் எவ்வளவு பெரிது என்பதையும் ஒரு சேர விளங்கலாம்.

சரி! ஒரு அடியானுக்கு சொர்க்கம் கிடைத்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு அதைத் தாண்டிய பெரும் இன்பம் ஒன்று இருக்க முடியுமா? வாய்ப்பில்லை என்று தானே உங்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் உங்கள் எண்ணம் தவறு. சொர்க்கம் செல்லும் நன்மக்களுக்கு அதில் பேரின்பமாக மற்றுமொரு பாக்கியத்தையும் இறைவன் வைத்திருக்கிறான். நபிமார்களுடன் சொர்க்கத்தில் இருக்கும் பாக்கியமே அது.

وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓٮِٕكَ مَعَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِيْنَ‌ ۚ وَحَسُنَ اُولٰٓٮِٕكَ رَفِيْقًا ؕ‏
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளுடனும் நல்லோருடனும் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.

(அல்குர்ஆன்: 4:69)

நபிமார்களுடன் சொர்க்கத்தில் இருப்பது எவ்வளவு பெரும் பாக்கியம் என்பதை இந்த வசனம் அழகாகத் தெளிவுபடுத்தி விட்டது. சொர்க்கத்தில் நபிமார்களை நண்பர்களாகப் பெறுவதை விடப் பெரும் பேறு வேறென்ன இருக்க முடியும்? நினைத்துப் பார்க்கும் போது உள்ளம் சிலிர்த்து விடுகின்றது.

நம்மைப் பொறுத்தவரை நாம் நமது நபி முஹம்மத் (ஸல்) அவர்களுடன் சொர்க்கத்தில் இருக்கவே விரும்புவோம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்களே அது போல.

ஏனெனில் நபிகள் நாயகம் கண்டிப்பாக உயர்ந்த அந்தஸ்திலேயே இருப்பார்கள். நாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருக்கும் வாய்ப்பைப் பெறும் போது பிற நபிமார்களுடன் இருக்கும் வாய்ப்பையும் ஒரு சேரப் பெற்று விடுகிறோம்.

இதன்படி, சொர்க்கத்தில் இருக்க வேண்டும் எனும் நம் உயர் இலக்கை, முஹம்மத் நபியுடன் சொர்க்கத்தில் இருக்க வேண்டும் எனும் அதிஉயர் இலக்காக மாற்றி, அதை நோக்கிச் செல்ல வேண்டும். அதற்கான சரியான பாதையை நபிகளார் காட்டித்தந்துள்ளார்கள். அந்த பாதையின் சில வழிமுறைகளைப் பற்றி இந்த உரையில் காண்போம். 

நபி நேசம்

நாம் யாரை நேசிக்கிறோமோ அவர்களுடன் தான் சொர்க்கத்தில் இருப்போம் என நபிகளார் நவின்றுள்ளார்கள்.

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ كَيْفَ تَرَى فِي رَجُلٍ أَحَبَّ قَوْمًا وَلَمَّا يَلْحَقْ بِهِمْ؟ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ»
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் (நன்)மக்களை நேசிக்கிறார். ஆனால், (செயல்பாட்டிலும் தகுதியிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. அவர் விஷயத்தில் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மனிதன் யார் மீது அன்பு கொண்டுள்ளானோ அவர்களுடன்தான் இருப்பான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல்: முஸ்லிம்-5143 

நபிகள் நாயகத்தை நேசித்தால் சொர்க்கத்தில் நபிகளாருடன் இருக்கும் மகத்தான வாய்ப்பைப் பெறலாம்.

நானும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் சென்றபோது பள்ளிவாசலின் முற்றத்தின் அருகில் ஒரு மனிதரைச் சந்தித்தோம். அவர், “அல்லாஹ்வின் தூதரே! மறுமை எப்போது வரும்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதற்காக நீ (முன்னேற்பாடாக) என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்துள்ளாய்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர் (பதிலளிக்காமல்) அடங்கிப் போனவரைப் போன்றிருந்தார். பிறகு, “அல்லாஹ்வின் தூதரே! அதற்காக நான் பெரிதாகத் தொழுகையையோ, நோன்பையோ, தானதர்மங்களையோ முன்னேற்பாடாகச் செய்துவைக்கவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ நேசித்தவர்களுடன் தான் (மறுமையில்) இருப்பாய்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல்: முஸ்லிம்-5142 

நபி மீதான நேசம் நம் உள்ளத்தில் எந்தளவு ஆழமாகப் பதிந்துள்ளது என்பதை நாம் ஒவ்வொருவரும் சோதித்துப் பார்க்க வேண்டும்.

நபி நேசம் என்பது வெறும் வாய்ச் சொல் அல்ல. அது வாழ்க்கை முறை.

நபியவர்கள் ஏவியதைச் செய்வதும் அவர்கள் தடுத்திட்டவற்றை விட்டும் முற்றாக விலகி நிற்பதுமே நபியின் மீதான நேசத்தை வெளிக் கொணரும் அடையாளங்களாகும். நபியவர்களின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றி மவ்லித், கத்தம் பாத்திஹா போன்றவைகளை ஓதுவது நபிநேசமல்ல. உளமாற நபியை நேசிப்பவர் நபியின் வழிகாட்டுதலைத் தம் வாழ்வில் பின்பற்றுவார்.

திருக்குர்ஆன் அதையே போதிக்கின்றது.

قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
“நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 3:31)

இரவுத் தொழுகை

நபியின் காலத்திலேயே நபித்தோழர்களில் சிலருக்கு இந்த ஆசை துளிர் விட்டிருக்கின்றது.

சொர்க்கத்தில் நபியுடன் இருக்க வேண்டும் என்ற அவர்களின் அவா, அதற்கான வழியைக் கேட்டுத் தெரிந்தே தீர்வது என நபியிடமே முறையிடவும் செய்திருக்கின்றது.

كُنْتُ أَبِيتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَيْتُهُ بِوَضُوئِهِ وَحَاجَتِهِ فَقَالَ لِي: «سَلْ» فَقُلْتُ: أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ. قَالَ: «أَوْ غَيْرَ ذَلِكَ» قُلْتُ: هُوَ ذَاكَ. قَالَ: «فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ»
ரபீஆ பின் கஅப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தேன். அவர்கள் (இரவுத் தொழுகைக்காக எழுந்தபோது) இயற்கைக் கடனை நிறைவேற்றிக் கொள்வதற்கும், உளூச் செய்து கொள்வதற்கும் தண்ணீர் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் “என்னிடம் (ஏதேனும்) கோருவீராக!’’ என்று என்னிடம் கூறினார்கள்.

உடனே நான், “சொர்க்கத்தில் நான் உங்களுடன் இருக்க வேண்டும் என்று கோருகிறேன்’’ என்றேன். அதற்கு “வேறு ஏதேனும் (கோருவீராக!)’’ என்றார்கள். நான் “(இல்லை) அதுதான்’’ என்றேன். அதற்கு அவர்கள், “அப்படியானால் உமது கோரிக்கை நிறைவேற அதிகமாகச் சஜ்தா செய்து எனக்கு உதவுவீராக!’’ என்று சொன்னார்கள்.

 நூல்: முஸ்லிம்-843 

ரபீஆ பின் கஅப் எனும் நபித்தோழரிடம் உமக்கு ஏதும் வேண்டுமா என்று நபிகளார் வினா எழுப்புகிறார்கள். நம்மிடம் யாரேனும் இவ்வாறு வினா எழுப்பினால், கொஞ்சம் பணம் கடனாக வேண்டும் என்றோ, இன்ன பொருள் இனாமாக வேண்டும் என்றோ கேட்போம்.

ஆனால் நபிகளாரால் என்ன வேண்டும் என்று கேட்கப்பட்ட ரபிஆ எனும் நபித்தோழரோ சொர்க்கத்தில் தங்களுடன் இருக்க வேண்டும். அதற்கான வழியை அறிய வேண்டும் என்கிறார். வேறு ஏதாவது கேளேன் என்று நபிகளார் மடைமாற்றினாலும் ‘இல்லை! அடியேன் தங்களுடன் சொர்க்கத்தில் இருக்க வேண்டும். அதுவே வேண்டும்; அது ஒன்றே வேண்டும்’ என்று கறாராகக் கேட்டு விடுகிறார்.

அதுதான் வேண்டும் என்றால் அதிகமாகத் தொழு. அது உன் கோரிக்கையை நிறைவேற்றித்தர எனக்கு உதவியாக இருக்கும் என்று நபிகளார் விடையளிக்கின்றார்கள்.

கடமையான தொழுகைகளில் பேணுதலாக இருப்பதுடன் இன்ன பிற சுன்னத் – நபிலான தொழுகைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தால் மறுமையில் நபியுடன் சொர்க்கத்தில் இருக்கும் உன்னத வாய்ப்பு வாய்க்கப் பெற்றவர்களாவோம். இதுவரை எப்படியோ? இனியாவது விழித்துக் கொள்வோமே!

அனாதைகளைப் பொறுப்பேற்பது

நபிகளாருடன் சொர்க்கத்தில் இருப்பதெல்லாம் சரி! பரந்து பட்ட, விசாலாமான வெளியிடையில் நபியவர்கள் ஓர் ஓரத்திலும் நாம் பிறிதொரு ஓரத்திலும் இருந்துவிட்டால் அதுவும் நபியுடன் இருப்பது தானே? அப்படி வாய்த்து விட்டால் என்னாவது? இது அவ்வளவு ஒன்றும் நெருக்கம் இல்லையே என்ற கேள்வி சிலருக்குக் குடைச்சல் கொடுக்கலாம்.

அத்தகைய சந்தேகப் பேர்வழிகளின் திருப்திக்கும் ஒரு வழியுண்டு. நபிகளார் அம்மக்களையும் கவனத்தில் கொண்டே பின்வரும் வழிமுறையை கற்றுத் தருகிறார்கள்.

عنْ سَهْلٍ، قَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«وَأَنَا وَكَافِلُ اليَتِيمِ فِي الجَنَّةِ هَكَذَا» وَأَشَارَ بِالسَّبَّابَةِ وَالوُسْطَى، وَفَرَّجَ بَيْنَهُمَا شَيْئًا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’’ என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும், நடு விரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளி விட்டு சைகை செய்தார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி)
நூல்: புகாரி-5304 

நடுவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்குமிடையில் உள்ள இடைவெளியின் அளவே நமக்கும் நபிக்குமான இடைவெளி என்றால் என்னவொரு நெருக்கம். இவ்வளவு அருகில் அமர்ந்து நபியைப் பார்ப்பதும் அவர்களுடன் அளவளாவுவதும் எத்தகைய பேரின்பம். ஆதரவற்ற அனாதைகளைப் பராமரிப்பது அந்தப் பேரின்பத்தை உறுதி செய்கிறது. நபியுடன் இத்தகைய நெருக்கத்தில் இருக்க விரும்புவோர் அனாதைகளை அரவணைக்க முற்பட வேண்டும்.

தந்தையை இழந்த பிள்ளைகளே அனாதைகள். அவர்கள் படும் அல்லல்களுக்கு எந்தக் குறையுமில்லை. மற்ற பிள்ளைகளைப் போன்று இவன் ஏதும் சேட்டை செய்துவிட்டால் அவனுக்காகக் குரல் கொடுப்போர் யாருமில்லை என்பதை அவனுக்கே உணர்த்தும் தொனியில் ‘அனாதைப் பயலே’ என்று திட்டுவதை பலரிடத்திலும் காணலாம். இது ஒருவகையிலான துன்புறுத்தலே ஆகும்.

அன்பு செலுத்தும் மற்ற தந்தையர்களைப் பார்க்கும் போது, நமக்குத் தோள் கொடுக்க, கட்டியணைக்க, கற்றுக் கொடுக்க, பொருள் வாங்கித் தந்து அரவணைக்கத் தந்தை இல்லையே என்ற ஏக்கம் அவன் வளர்ந்து பெரியவனாகும் வரை அவனை நெருடிக் கொண்டே இருக்கின்றது.

பெருநாள் போன்ற பண்டிகைக் காலங்களில் அவர்கள் படும் மனவேதனை மகா கொடியது. அத்தகைய அனாதைகளைக் கண்டுணர்ந்து அவர்களுக்கு அடைக்கலம் அளித்தால்  நபியுடன் நெருக்கமாக சொர்க்கத்தில் இருக்கும் பாக்கியம் கிட்டும்.

பெண்பிள்ளைகளைப் பராமரித்தல்

ஊரார் பிள்ளைகளை மட்டுமல்ல; தன் பிள்ளைகளைப் பராமரிப்பதும் சொர்க்கத்தில் நபியுடன் இருக்கும் வாய்ப்பைப் பெற்றுத்தரும். ஒரு நிபந்தனை. அவர்கள் பெண் குழந்தைகளாக இருக்க வேண்டும்.

 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مَنْ عَالَ جَارِيَتَيْنِ حَتَّى تَبْلُغَا، جَاءَ يَوْمَ الْقِيَامَةِ أَنَا وَهُوَ» وَضَمَّ أَصَابِعَهُ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இரு பெண் குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும் வரை பொறுப்பேற்று, கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்’’ என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம்-5127 

இரு பெண் குழந்தைகளைக் கருத்தாக மார்க்க போதனைகளைக் கற்றுக் கொடுத்து வளர்த்தால் அவர் இந்த அரிய வாய்ப்பை பெறுகிறார். பெண் குழந்தைகளைக் கருத்தாக வளர்த்து ஆளாக்குவது அவ்வளவு சுலபமல்ல. குயவனுக்கே உண்டான கவனமும், கரிசனமும் வேண்டும்.

கொஞ்சம் கவனம் சிதறினாலும் எக்குத்தப்பாகப் பிசகி விடும். அதன் பிறகு நாம் நினைத்த வடிவில் அதை (அவளை) மீண்டும் உருவாக்குவது கடும் சிரமம். அதுவும் சீர்கேடு நிறைந்த இக்கால கட்டத்தில் பெண் குழந்தைகள் மீது தனிக்கவனமும் கண்காணிப்பும் அவசியமான ஒன்று என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

பெண் குழந்தைகளை நல்லொழுக்கத்துடன் வளர்ப்பது பெரும் சவால். அதை வெற்றிகரமாக முடிப்போருக்கு இறைவன் தரும் பரிசு தான், சொர்க்கத்தில் நபிமார்களுடன், நபிகள் நாயகத்துடன் இருக்கும் மகோன்னதப் பரிசு.

நல்லொழுக்கம்

நான் சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான் என்பது பிள்ளைகள் குறித்துப் பல பெற்றோர் புலம்பும் உலகளாவியப் புலம்பல். இதற்கு என்ன காரணம்? பிள்ளைகளை அப்படிச் செய், இப்படிச் செய்யாதே என அதட்டும் பல பெற்றோர், பிள்ளைகளுக்குப் போதிக்கும் நன்னெறிகளைத் தாங்கள் பின்பற்றுவோராக இல்லை.

சொர்க்கத்தில் நபியுடன் இருக்க விரும்பினால் நபியின் குணத்திற்கு ஏற்ப நம்மை ஒழுக்கசீலராக மாற்றிக் கொள்ள முடியாவிட்டாலும் நல்லொழுக்கத்தைக் கடைபிடிக்கும் ஒழுக்கவாதியாக நம்மை நாம் கட்டமைத்துக் கொள்ள முன்வர வேண்டும்.

மறுமையில் சொர்க்கத்தில் நபிகளாரின் அவையில் நமக்கும் ஒரு இடம் வேண்டும் என விரும்பினால் நினைவில் கொள்ளுங்கள். ஒழுக்கவாதிகளுக்கே நபியின் அவையில் இடமுண்டு.

 عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ مِنْ أَحَبِّكُمْ إِلَيَّ وَأَقْرَبِكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ القِيَامَةِ أَحَاسِنَكُمْ أَخْلَاقًا
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எனக்கு விருப்பமானவரும், மறுமையின் சபையில் என்னிடம் நெருக்கத்திற்குரியவரும் யாரெனில் நல்ல பண்புகளைக் கொண்டவரே.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: திர்மிதீ-2018 (1941), அஹ்மத் 6447

மறுமையில் நபியின் அவையில், நபிக்கு நெருக்கத்தில் நமக்கான இடத்தைப் பிடிக்க இப்போது ஆகக் கூடிய முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வோம். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மட்டுமே கட்டுப்படுவோம். அல்லாஹ் அந்த வாய்ப்பை நம் அனைவருக்கும் நல்குவான்.

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

மாதவிடாய் பெண்கள் அல் குர்ஆனை தொடலாமா? ஓதலாமா?

மாதவிடாய் பெண்கள் அல் குர்ஆனை தொடலாமா? ஓதலாமா?

• அதிகமான கருத்து வேறுபாடு உள்ள கேள்விகளில் இதுவும் ஒன்று ஆகும்!

• ஹைலு, நிபாஸ் நிலையில் அல்லது குளிப்பு கடமை நிலையில் அல் குர்ஆனை ஓத கூடாது அல்லது தொட கூடாது என்பதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த ஆதாரமும் கிடையாது!

• ஆனால் சில செய்திகளில் மறைமுகமக கருத்து உள்ள ஹதீஸ்கள் உண்டு! ஆனால் அனைத்துமே மிகவும் பலகீனமான ஹதீஸ்கள் ஆகும்!

• மாதவிடாய் என்பதை இஸ்லாத்தில் ஹைலு என்று கூறுவார்கள்!

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்!

(அல்குர்ஆன் : 2:222)

• அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் ஹைலு என்பது அசுத்தமான நிலை என்றும் அவர்கள் முழுமையாக சுத்தமாகும் வரை அவளுடன் உடலுறவு கூடாது என்று  கூறி உள்ளான்!

• இன்னும் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் ஹைலு உள்ள ஒரு பெண் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்று நமக்கு தெளிவாக கூறி உள்ளார்கள் அதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்!

❤️ நோன்பு :

• ஹைளு நிபாஸ் உள்ள பெண்கள் எந்த வகையான நோன்பும் நோற்க கூடாது! இதனால் அவர்கள் மீது குற்றம் கிடையாது!

• ஆனால் விடுபட்ட பர்ளான நோன்புகளை தூய்மை அடைந்த பின்பு கட்டாயம் நோற்க வேண்டும்! சுன்னத் ஆன நோன்புகளை களா செய்ய வேண்டிய அவசியம் கிடையாது!

(நூல் : முஸ்லிம் : 560)

❤️ தொழுகை :

• தொழுகை பொறுத்த வரை நோன்பை போன்று தான் எந்த வகையான தொழுகையும் தொழ கூடாது!

• அதே போன்று விட்ட தொழுகைகளை களா செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது!

(நூல் : முஸ்லிம் : 560)

❤️ காபாவை வலம் வர கூடாது :

• ஆயிஷா (ரழி) அவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்றிருந்த போது அவர்களுக்கு மாதவிடாய்  ஏற்பட்டு விட்டது! அப்போது நபி (ஸல்) அவர்கள் தவாஃபைத் தவிர ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய்யுமாறு கூறினார்கள்.

(நூல் : புஹாரி : 305)

• ஹாஜிகள் மினா, அரபாவில் இருக்கும் போது திக்ர் செய்வர், துஆவில் ஈடுபடுவர், குர்ஆன் ஓதுவர் முடிந்த அளவுக்கு அனைத்து அமல்களையும் செய்வார்கள்! ஆனால் இது பற்றி எதையும் நபியவர்கள் தடுக்கவில்லை!

• இந்த அடிப்படையில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் குர்ஆனை ஓதுவதிலோ, தொடுவதிலோ மார்க்க ரீதியாக எந்தத் தடையும் இல்லை!

❤️ பள்ளி வாசலுக்கு செல்ல கூடாது :

• பள்ளிவாசலுக்கு செல்ல கூடாது பள்ளியினுல் தங்கவும் கூடாது!

(நூல் : அபூதாவூத் : 232)

❤️ உடலுறவு :

• மாதவிடாய் நிலையில் கணவன் மனைவி இருவரும் சேர கூடாது!

ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்!

(அல்குர்ஆன் : 2:222)

💟 மாதவிடாய் பெண்கள் அசுத்தமானவர்களா!?

• ஆரம்ப காலத்தில் யூதர்கள் மாதவிடாய் உள்ள பெண்களை அசுத்தமானவர்களாவே கருதினார்கள்!

• அவர்களை தொடுவதே பாவம் அவர்கள் உணவு சமைக்க கூடாது எந்த பொருளையும் தொட கூடாது என மாதவிடாய் காலங்களில் அவர்களை ஒதுக்கி தனியாக வைத்து விடுவார்கள்! ஆனால் இஸ்லாம் இதை முற்றிலும் ஒழித்து விட்டது!

• ஒரு முஸ்லீம் எப்போதும் அசுத்தம் அடைய மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்!

நபி (ஸல்) அவர்கள் ஹுதைபா (ரழி) அவர்களை சந்திக்கும் போது அவர்களை நோக்கி கைக்குழுக்குவதற்கு கையை நீட்டினார்கள்! உடனே குளிப்பு கடமையான நிலையில் உள்ளேன் என்றார் அப்போது நபி (ஸல்) அவர்கள் முஸ்லீம் அசுத்தம் ஆக மாட்டார் என்றார்கள்!

(நூல் : அபூதாவூத் : 230)

• இஸ்லாத்தில் மாதவிடாய் பெண்கள் திக்ர் செய்யலாம் துஆ செய்யலாம் அல் குர்ஆனை ஓதலாம் படிக்கலாம்! வெளியே செல்லலாம் - சமையல் செய்யலாம் - கணவன் உடன் ஒன்றாக உறங்கலாம்! இவை எல்லாம் அனுமதிக்கப்பட்ட ஒன்றே இஸ்லாத்தில்!

💜 உடலில் ஒரு சிறிய பகுதி மட்டுமே அசுத்தம் ஆகும் :

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃபில்) இருந்துகொண்டு, (அறையிலுள்ள) தொழுகை விரிப்பை எடு  என்று என்னிடம் சொன்னார்கள். அதற்கு நான் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றேன். அப்போது அவர்கள் மாதவிடாய் என்பது உனது கையில் (ஒட்டிக்கொண்டிருப்பது) இல்லை என்று கூறினார்கள்.

(நூல் : முஸ்லிம் : 502)

• மாதவிடாய் என்பது உடலில் உள்ள ஒரு பகுதி மட்டுமே அசுத்தம் ஆகும் இதனால் அவர்கள் முழுமையாக அசுத்தம் அடைய மாட்டார்கள்!

• மேலும் இந்த ஹதீஸை அடிப்படியாக வைத்து இமாம்கள் ஜனாஸாவை கூட மாதவிடாய் பெண்கள் குளிப்பாட்டலாம் என்று கூறி உள்ளார்கள்!

• இன்னும் நபி (ஸல்) அவர்கள் மாதவிடாய் உள்ள தனது மனைவியின் மடியில் படுத்து கொண்டு வழமையாக அல் குர்ஆ னை ஓதி உள்ளார்கள்!

ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள் :

'எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்'

(நூல் : புகாரி : 297)

💟 ஹைளுடைய காலத்தில் குர்ஆனை தொட கூடாதா? ஓத கூடாதா?

• மாதவிடாய் பெண்கள் அல்லது குளிப்பு கடமையில் உள்ள ஆண்கள் அல் குர்ஆனை ஓத கூடாது அல்லது தொட கூடாது என்பதற்க்கு ஸஹீஹான ஒரு ஆதாரம் கிடையாது!

இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

மாதவிடாய் பெண்கள் அல் குர்ஆனை ஓதலாம் அதற்கு எந்த ஆதாரப்பூர்வமான தடையும் கிடையாது!

(பத்வா மஜ்மூஃ : 2/387)

• ஸஹாபாக்களிடம் இதை பற்றி கேட்பட்ட போது அவர்கள் பதில் ஓதலாம் என்பதே ஆகும்!

முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களிடம் அப்துர்ரஹ்மான் பின் கனம் (ரழி) அவர்கள் மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆனை ஓதலாமா? என்று கேட்டபோது, ஆம் ஓதலாம். யார் அதனை தடுக்கின்றாரோ அவர் இந்த விடயம் குறித்து அறிவில்லாமல் அதனை செய்கிறார் என்றார்கள்

(நூல் : புகாரியின் விரிவுரை: இப்னு பத்தால் : 1/423)

💟 நேரடியாக தொட கூடாதா :

• மாதவிடாய் அல்லது குளிப்பு கடமையாக உள்ளவர்கள் அல் குர்ஆனை நேரடியாக தொடுவதை விட சில இமாம்கள் cloves அல்லது ஆடை மூலம் தொட்டு ஓதுவதை சிறந்தது என்று கூறி உள்ளார்கள்!

(இமாம் உதைமீன் (ரஹ்) : Fataawa Noor ‘ala ad-Darb : 123/27)

💟 அல் குர்ஆனை ஓத கூடாது என்பதற்கு வாதமும் பதிலும் :

• சூபியாக்கள் மற்றும் ஷாபிஈ மற்றும் ஹனபி மத்ஹப்பை பின் பற்ற கூடியவர்கள் குளிப்பு கடமையான நிலையில் அல் குர்ஆனை ஓதவோ அல்லது தொடவே கூடாது என்று கூறுகிறார்கள் இதற்கு ஆதாரமாக சில செய்திகளை காட்டுகிறார்கள் ஆனால் ஒரு செய்தி கூட சரியானது அல்ல! 

• குளிப்பு கடமையான நிலையில் அல்லது மாதவிடாய் நிலையில் அல் குர்ஆனை தொட கூடாது ஓத கூடாது என்பதற்கு அல் குர்ஆன் வசனத்தையும் சில ஹதீஸ்களை முன் வைக்கிறார்கள் அதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்!

• ஹதீஸ்களை பொறுத்த வரை சட்டம் அமல் எதுவாக இருந்தாலும் அதை செய்ய வேண்டும் அல்லது செய்ய கூடாது என்று கூற ஒரு ஸஹீஹான ஹதீஸ் ஆவது அல்லது ஆதாரம் ஆவது இருக்க வேண்டும்!

• லஹிப் - பலகீனமான ஹதீஸ்களை வைத்து மட்டுமே நாம் அமலோ அல்லது சட்டமோ பின் பற்ற கூடாது! இது ஹதீஸ் கலை சட்டங்களில் ஒன்று ஆகும்!

💜 முதல் வாதம் - பதில் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திலிருந்து வெளிவந்து எங்களுக்கு குர்ஆனைக் கற்றுத் தருவார்கள். எங்களுடன் இறைச்சியைச் சாப்பிடுபவர்கள். கடமையான குளிப்பைத் தவிர வேறு எதுவும் குர்ஆன் ஓதுவதை விட்டும் அவர்களைத் தடுக்காது.

(நூல் : அபூதாவூத் : 198)

• இந்த ஹதீசை முன் வைத்து குளிப்பு கடமையான நிலையில் ஓத கூடாது என்று கூறுகிறார்கள் ஆனால் இது மிகவும் பலகீனமான ஹதீஸ் ஆகும்!

• இந்தச் செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளர் வரிசையில் வரும் அப்துல்லாஹ் பின் சலமா என்பவர் மனனம் சக்தியில் கோளறு உள்ளது. இவருடைய மோசமான மனனத் தன்மை உள்ளவர் இவர் நிறைய பலகீனமான செய்திகளை அறிவித்து உள்ளார்! இந்த காரணத்தால் பல அறிஞர்கள் இவர் அறிவிக்கும் ஹதீஸ்களை ஏற்று கொள்ள கூடாது என்றே கூறி உள்ளார்கள்!

• இந்த கருத்தை இமாம்  ஹிப்பான் (ரஹ்), இமாம் ஹாகிம் (ரஹ்), இமாம் ஷாபிஈ (ரஹ்) ஆகிய இமாம்கள் விளக்கம் கூறி உள்ளார்கள்!

(நூல் : மீஸானுல் இஃதிதால்)

• எனவே இந்த ஹதீசை வைத்து அல் குர்ஆனை ஓத கூடாது என்று நாம் கூற முடியாது!

💜 இரண்டாவது வாதம் - பதில் :

தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.

(அல்குர்ஆன் : 56:79)

• தூய்மையானவர்கள் என்ற வசனத்தில் வரும் வார்த்தை வானவர்களையே குறிக்கும் என்று இப்னு அப்பாஸ் (ர­ழி) அவர்கள் கூறினார்கள்!

(நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம்: 4, பக்கம்: 299)

• இந்த அல் குர்ஆன் வசனத்தை மிக முக்கியமான ஆதாரமாக வைத்து குளிப்பு கடமையானவர்கள் - மாதவிடாய் பெண்கள் அல் குர்ஆனை தொடவே கூடாது என்று கூறுகிறார்கள் இதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்!

• முதலில் அல் குர்ஆன் முழுவதும் நபி (ஸல்) அவர்களுக்கு எழுத்து வடிவமாகவோ அல்லது கிதாப் போன்றோ அல்லாஹ் கொடுக்க வில்லை!

• ஜிப்ரயில் (அலை) அவர்கள் சொல்ல நபி (ஸல்) அவர்கள் அதை அப்படியே மனனம் செய்து கொள்ளுவார்கள்! இப்படி தான் முழு அல் குர்ஆனும் இறக்கியது!

• இரண்டாவது அல் குர்ஆன் நபி (ஸல்) அவர்கள் வாழ்த்த காலம் வரை ஒரு தொகுப்பாக எழுத வில்லை யாருமே! நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்பு அபூபக்கர் சித்திக் (ரழி) அவர்கள் காலத்தில் தான் அல் குர்ஆன் கிதாபாக ஒரு தொகுப்பாக உருவாக்கினார்கள்!

• அல் குர்ஆன் முழுவதும் எழுத்து வடிமாக அல்லாஹ் அருளாத போது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலம் வரை அல் குர்ஆன் ஒரு தொகுப்பாக இல்லாத போது அல் குர்ஆனை தொட கூடாது என்ற கேள்வியே நமக்கு தோன்றாது!

• மூன்றாவது தூய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் தொட மாட்டார்கள் என்று வசனத்தில் தூய்மையானவர்கள் என்றால் பலரும் மனிதர்கள் தான் என்று புரிந்து கொண்டு உள்ளார்கள் ஆனால் அல்லாஹ் இதே போன்று பல வசனங்களை குறிப்பிட்டு உள்ளான் அதை நாம் படித்தால் நமக்கே தெளிவாக விளக்கும்!

இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும். தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள். அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது.

(அல் குர்ஆன் : 56 : 77 & 79)

• இதில் உள்ள பாதுகாக்கப்பட்ட பதிவேடு என்பது
லவ்ஹுல் மஹ்ஃபூள் என்று பதிவேடையே குறிக்கும்!

• அதே போன்று பரிசுத்தமானவர்கள் என்ற வசனத்திற்கு அர்த்தம் மலக்கு மார்கள் தான் மனிதர்கள் அல்ல! அல்லாஹ் இதை பற்றி அல்லாஹ் மற்றொரு இடத்தில் கூறி உள்ளான்!
 ‏
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்
எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது
உயர்வாக்கப்பட்டது; பரிசுத்தமாக்கப்பட்டது (வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால் (லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.

(அல்குர்ஆன் : 80 : 11 & 16)

• இந்த வசனத்தில் தூய்மையானவர்கள் என்று அல்லாஹ் யாரை கூறி உள்ளான் பாதுகாக்கப்பட்ட பதிவேடு என்றால் என்ன என்று நமக்கு இந்த வசனத்தின் மூலம் நமக்கு தெளிவாகிறது!

💜 மூன்றாவது வாதம் - பதில் :

நபி (ஸல்) அவர்கள் ரோமாபுரியின் அரசர் ஹெர்குலிஸுக்கு இஸ்லாத்தின் பக்கம் வர ஒரு கடிதம் எழுதினார்கள் அதில் : 

‘ பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ’

என்று எழுதி விட்டு இஸ்லாத்தின் பக்கம் வர அழைப்பு கொடுத்தார்கள் பின்பு ; கிழே உள்ள அல் குர்ஆன் வசனத்தையும் எழுதி அனுப்பினார்கள் : 

(நபியே! அவர்களிடம்) “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள்

(அல்குர்ஆன் : 3:64)

(நூல் : புஹாரி : 2941)

• அசுத்தமானவர்கள் தொட கூடாது ஓத கூடாது என்று இருந்தால் ஏன் நபி (ஸல்) அவர்கள் மாற்று மதத்தை சேர்ந்த அரசருக்கு அல் குர்ஆன் வசனத்தை எழுதி அனுப்பினார்கள்?

💜 நான்காவது வாதம் - பதில் :

இப்னு உமர் ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள் :

மாதாந்த இயற்கை உபாதைக்குள்ளான பெண்களும் குளிப்புக்கடமையான ஆண்களும் குர்ஆனிலிருந்து எதையும் ஓத வேண்டாம்!

(நூல் : திர்மிதி)

• இது மிகவும் பலகீனமான ஹதீஸ் ஆகும்! இந்த ஹதீஸின் அனைத்து அறிவிப்பாளர் வரிசையும் பலவீனமாதே என இப்னுல் ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறி உள்ளார்கள்!

(நூல் : பத்ஹுல் பாரி : 1/409)

• இந்த ஹதீஸ் பொறுத்த வரை அனைத்து அறிஞர்களின் ஒட்டுமொத்த கருத்துப்படி பலவீனமான ஹதீஸ் ஆகும் என இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(பஃத்வா : 21/460)

• நவீன காலத்தில் அல்லாமா அல்பானி (ரஹ்) அவர்களும் இந்த ஹதீஸ் ‘முன்கர்’ என்ற தரத்திலுள்ள பலவீனமான ஹதீஸ் என கூறியுள்ளார்.

(நூல் : அல்இர்வா : 495)

💜 ஐந்தாவது வாதம் - பதில் :

நபி (ஸல்) அவர்கள் எமன் நாட்டவருக்கு எழுதிய கடிதத்தில் 'தூய்மையானவர்களைத் தவிர, மற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது' என்று குறிப்பிட்டார்கள்.

(நூல் : ஹாக்கிம், தாரகுத்னி) 

• மேலே உள்ள ஹதீஸ் ஹாக்கிம், தாரகுத்னி நூல்களில் வருகிறது. இந்த செய்தியில் ஸுவைத் பின் அபீஹாத்திம் என்பவர் அறிவிப்பாளராக வருகிறார்.

• இவர் பலகீனமான அறிவிப்பாளர். இவர் இடம்பெறும் ஹதீஸ்கள் அனைத்துமே பலகீனமாகும். ஹதீஸ்கலை அறிஞர்கள் அனைவருமே இவரையும் பலகீனமான அறிவிப்பாளர் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்

💟 அனைத்து மார்க்க அறிஞர்களின் கருத்து ஓதலாம் என்பதே :

• மாதவிடாய், நிபாஸ் உடைய பெண்கள் மற்றும் குளிப்பு கடமையானவர்கள் அல் குர்ஆனை தொட கூட என்று கூறும் அறிஞர்களை விட தொடலாம் ஓதலாம் என்று கூறும் அறிஞர்களே மிக அதிகம் ஆகும்!

1) இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கருத்து தொடலாம் ஓதலாம் என்பதாகும்!

(நூல் :  கலாநிதி ஜாஸிர் அவ்தா)

2) இமாம் நவவி (ரஹ்) அவர்கள் தனது அவர்கள் மாதவிடாய் உள்ளவர்கள் அல் குர்ஆனை ஓதலாம் தொடலாம் என்றே கூறி உள்ளார்கள்!

(நூல் : முஸ்லிம் ஹதீஸ் கிரந்தத்தின் விரிவுரை : 4/290)

• இது போன்று நிறைய மார்க்க அறிஞர்களின் கருத்துகள்  ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள், நவீன கால அறிஞர்கள் என பலரும் மாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதுவது கூடும் என்றே கூறி உள்ளார்கள்!

• அதே நேரத்தில் பெண்களை குர்ஆன் ஓதுவதை தடுக்கக் கூடிய மிகச் சரியான தெளிவான நேரடியான எந்த ஆதாரங்களும் அல் குர்ஆனிலும் ஸஹீஹான ஹதீஸ்களிலும் கிடையாது!

சொர்க்கத்தில் நபியுடன் இருக்க சில வழிகள்

சொர்க்கத்தில் நபியுடன் இருக்க சில வழிகள் 

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

சொர்க்கம் எனும் உயர் இலக்கை நோக்கியே முஸ்லிம்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். பயணத்தின் நடுவே உலக ஆசைகள் அவர்களை அவ்வப்போது திசை திருப்பினாலும் சொர்க்கம் எனும் இலக்கை விட்டு விட, அதன் இன்பத்தை இழந்து விட எந்த முஸ்லிமும் தயாராக இல்லை.

பாவம் செய்யும் பாவிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஏனெனில் சொர்க்கத்தில் சிறிதளவு இடம் கிடைப்பதாயினும் அது அவ்வளவு எளிதல்ல.

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مَوْضِعُ سَوْطٍ فِي الجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (கிடைப்பது) உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி),
நூல் : புகாரி-3250 

சாட்டையின் இருப்பிற்கு சாண் அளவு இடமே போதும். சொர்க்கத்தில் அந்தளவு இடம் கிடைப்பது முழு உலகம் கிடைப்பதைக் காட்டிலும் சிறந்தது என்று நபிகளார் கூறுவதிலிருந்து, சொர்க்கம் நுழைவது எவ்வளவு சிரமம் என்பதையும் அதன் இன்பம் எவ்வளவு பெரிது என்பதையும் ஒரு சேர விளங்கலாம்.

சரி! ஒரு அடியானுக்கு சொர்க்கம் கிடைத்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு அதைத் தாண்டிய பெரும் இன்பம் ஒன்று இருக்க முடியுமா? வாய்ப்பில்லை என்று தானே உங்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் உங்கள் எண்ணம் தவறு. சொர்க்கம் செல்லும் நன்மக்களுக்கு அதில் பேரின்பமாக மற்றுமொரு பாக்கியத்தையும் இறைவன் வைத்திருக்கிறான். நபிமார்களுடன் சொர்க்கத்தில் இருக்கும் பாக்கியமே அது.

وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓٮِٕكَ مَعَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِيْنَ‌ ۚ وَحَسُنَ اُولٰٓٮِٕكَ رَفِيْقًا ؕ‏
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளுடனும் நல்லோருடனும் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.

(அல்குர்ஆன்: 4:69)

நபிமார்களுடன் சொர்க்கத்தில் இருப்பது எவ்வளவு பெரும் பாக்கியம் என்பதை இந்த வசனம் அழகாகத் தெளிவுபடுத்தி விட்டது. சொர்க்கத்தில் நபிமார்களை நண்பர்களாகப் பெறுவதை விடப் பெரும் பேறு வேறென்ன இருக்க முடியும்? நினைத்துப் பார்க்கும் போது உள்ளம் சிலிர்த்து விடுகின்றது.

நம்மைப் பொறுத்தவரை நாம் நமது நபி முஹம்மத் (ஸல்) அவர்களுடன் சொர்க்கத்தில் இருக்கவே விரும்புவோம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்களே அது போல.

ஏனெனில் நபிகள் நாயகம் கண்டிப்பாக உயர்ந்த அந்தஸ்திலேயே இருப்பார்கள். நாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருக்கும் வாய்ப்பைப் பெறும் போது பிற நபிமார்களுடன் இருக்கும் வாய்ப்பையும் ஒரு சேரப் பெற்று விடுகிறோம்.

இதன்படி, சொர்க்கத்தில் இருக்க வேண்டும் எனும் நம் உயர் இலக்கை, முஹம்மத் நபியுடன் சொர்க்கத்தில் இருக்க வேண்டும் எனும் அதிஉயர் இலக்காக மாற்றி, அதை நோக்கிச் செல்ல வேண்டும். அதற்கான சரியான பாதையை நபிகளார் காட்டித்தந்துள்ளார்கள். அந்த பாதையின் சில வழிமுறைகளைப் பற்றி இந்த உரையில் காண்போம். 

நபி நேசம்

நாம் யாரை நேசிக்கிறோமோ அவர்களுடன் தான் சொர்க்கத்தில் இருப்போம் என நபிகளார் நவின்றுள்ளார்கள்.

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ كَيْفَ تَرَى فِي رَجُلٍ أَحَبَّ قَوْمًا وَلَمَّا يَلْحَقْ بِهِمْ؟ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ»
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் (நன்)மக்களை நேசிக்கிறார். ஆனால், (செயல்பாட்டிலும் தகுதியிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. அவர் விஷயத்தில் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மனிதன் யார் மீது அன்பு கொண்டுள்ளானோ அவர்களுடன்தான் இருப்பான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல்: முஸ்லிம்-5143 

நபிகள் நாயகத்தை நேசித்தால் சொர்க்கத்தில் நபிகளாருடன் இருக்கும் மகத்தான வாய்ப்பைப் பெறலாம்.

நானும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் சென்றபோது பள்ளிவாசலின் முற்றத்தின் அருகில் ஒரு மனிதரைச் சந்தித்தோம். அவர், “அல்லாஹ்வின் தூதரே! மறுமை எப்போது வரும்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதற்காக நீ (முன்னேற்பாடாக) என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்துள்ளாய்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர் (பதிலளிக்காமல்) அடங்கிப் போனவரைப் போன்றிருந்தார். பிறகு, “அல்லாஹ்வின் தூதரே! அதற்காக நான் பெரிதாகத் தொழுகையையோ, நோன்பையோ, தானதர்மங்களையோ முன்னேற்பாடாகச் செய்துவைக்கவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ நேசித்தவர்களுடன் தான் (மறுமையில்) இருப்பாய்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல்: முஸ்லிம்-5142 

நபி மீதான நேசம் நம் உள்ளத்தில் எந்தளவு ஆழமாகப் பதிந்துள்ளது என்பதை நாம் ஒவ்வொருவரும் சோதித்துப் பார்க்க வேண்டும்.

நபி நேசம் என்பது வெறும் வாய்ச் சொல் அல்ல. அது வாழ்க்கை முறை.

நபியவர்கள் ஏவியதைச் செய்வதும் அவர்கள் தடுத்திட்டவற்றை விட்டும் முற்றாக விலகி நிற்பதுமே நபியின் மீதான நேசத்தை வெளிக் கொணரும் அடையாளங்களாகும். நபியவர்களின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றி மவ்லித், கத்தம் பாத்திஹா போன்றவைகளை ஓதுவது நபிநேசமல்ல. உளமாற நபியை நேசிப்பவர் நபியின் வழிகாட்டுதலைத் தம் வாழ்வில் பின்பற்றுவார்.

திருக்குர்ஆன் அதையே போதிக்கின்றது.

قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
“நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 3:31)

இரவுத் தொழுகை

நபியின் காலத்திலேயே நபித்தோழர்களில் சிலருக்கு இந்த ஆசை துளிர் விட்டிருக்கின்றது.

சொர்க்கத்தில் நபியுடன் இருக்க வேண்டும் என்ற அவர்களின் அவா, அதற்கான வழியைக் கேட்டுத் தெரிந்தே தீர்வது என நபியிடமே முறையிடவும் செய்திருக்கின்றது.

كُنْتُ أَبِيتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَيْتُهُ بِوَضُوئِهِ وَحَاجَتِهِ فَقَالَ لِي: «سَلْ» فَقُلْتُ: أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ. قَالَ: «أَوْ غَيْرَ ذَلِكَ» قُلْتُ: هُوَ ذَاكَ. قَالَ: «فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ»
ரபீஆ பின் கஅப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தேன். அவர்கள் (இரவுத் தொழுகைக்காக எழுந்தபோது) இயற்கைக் கடனை நிறைவேற்றிக் கொள்வதற்கும், உளூச் செய்து கொள்வதற்கும் தண்ணீர் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் “என்னிடம் (ஏதேனும்) கோருவீராக!’’ என்று என்னிடம் கூறினார்கள்.

உடனே நான், “சொர்க்கத்தில் நான் உங்களுடன் இருக்க வேண்டும் என்று கோருகிறேன்’’ என்றேன். அதற்கு “வேறு ஏதேனும் (கோருவீராக!)’’ என்றார்கள். நான் “(இல்லை) அதுதான்’’ என்றேன். அதற்கு அவர்கள், “அப்படியானால் உமது கோரிக்கை நிறைவேற அதிகமாகச் சஜ்தா செய்து எனக்கு உதவுவீராக!’’ என்று சொன்னார்கள்.

 நூல்: முஸ்லிம்-843 

ரபீஆ பின் கஅப் எனும் நபித்தோழரிடம் உமக்கு ஏதும் வேண்டுமா என்று நபிகளார் வினா எழுப்புகிறார்கள். நம்மிடம் யாரேனும் இவ்வாறு வினா எழுப்பினால், கொஞ்சம் பணம் கடனாக வேண்டும் என்றோ, இன்ன பொருள் இனாமாக வேண்டும் என்றோ கேட்போம்.

ஆனால் நபிகளாரால் என்ன வேண்டும் என்று கேட்கப்பட்ட ரபிஆ எனும் நபித்தோழரோ சொர்க்கத்தில் தங்களுடன் இருக்க வேண்டும். அதற்கான வழியை அறிய வேண்டும் என்கிறார். வேறு ஏதாவது கேளேன் என்று நபிகளார் மடைமாற்றினாலும் ‘இல்லை! அடியேன் தங்களுடன் சொர்க்கத்தில் இருக்க வேண்டும். அதுவே வேண்டும்; அது ஒன்றே வேண்டும்’ என்று கறாராகக் கேட்டு விடுகிறார்.

அதுதான் வேண்டும் என்றால் அதிகமாகத் தொழு. அது உன் கோரிக்கையை நிறைவேற்றித்தர எனக்கு உதவியாக இருக்கும் என்று நபிகளார் விடையளிக்கின்றார்கள்.

கடமையான தொழுகைகளில் பேணுதலாக இருப்பதுடன் இன்ன பிற சுன்னத் – நபிலான தொழுகைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தால் மறுமையில் நபியுடன் சொர்க்கத்தில் இருக்கும் உன்னத வாய்ப்பு வாய்க்கப் பெற்றவர்களாவோம். இதுவரை எப்படியோ? இனியாவது விழித்துக் கொள்வோமே!

அனாதைகளைப் பொறுப்பேற்பது

நபிகளாருடன் சொர்க்கத்தில் இருப்பதெல்லாம் சரி! பரந்து பட்ட, விசாலாமான வெளியிடையில் நபியவர்கள் ஓர் ஓரத்திலும் நாம் பிறிதொரு ஓரத்திலும் இருந்துவிட்டால் அதுவும் நபியுடன் இருப்பது தானே? அப்படி வாய்த்து விட்டால் என்னாவது? இது அவ்வளவு ஒன்றும் நெருக்கம் இல்லையே என்ற கேள்வி சிலருக்குக் குடைச்சல் கொடுக்கலாம்.

அத்தகைய சந்தேகப் பேர்வழிகளின் திருப்திக்கும் ஒரு வழியுண்டு. நபிகளார் அம்மக்களையும் கவனத்தில் கொண்டே பின்வரும் வழிமுறையை கற்றுத் தருகிறார்கள்.

عنْ سَهْلٍ، قَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«وَأَنَا وَكَافِلُ اليَتِيمِ فِي الجَنَّةِ هَكَذَا» وَأَشَارَ بِالسَّبَّابَةِ وَالوُسْطَى، وَفَرَّجَ بَيْنَهُمَا شَيْئًا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’’ என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும், நடு விரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளி விட்டு சைகை செய்தார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி)
நூல்: புகாரி-5304 

நடுவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்குமிடையில் உள்ள இடைவெளியின் அளவே நமக்கும் நபிக்குமான இடைவெளி என்றால் என்னவொரு நெருக்கம். இவ்வளவு அருகில் அமர்ந்து நபியைப் பார்ப்பதும் அவர்களுடன் அளவளாவுவதும் எத்தகைய பேரின்பம். ஆதரவற்ற அனாதைகளைப் பராமரிப்பது அந்தப் பேரின்பத்தை உறுதி செய்கிறது. நபியுடன் இத்தகைய நெருக்கத்தில் இருக்க விரும்புவோர் அனாதைகளை அரவணைக்க முற்பட வேண்டும்.

தந்தையை இழந்த பிள்ளைகளே அனாதைகள். அவர்கள் படும் அல்லல்களுக்கு எந்தக் குறையுமில்லை. மற்ற பிள்ளைகளைப் போன்று இவன் ஏதும் சேட்டை செய்துவிட்டால் அவனுக்காகக் குரல் கொடுப்போர் யாருமில்லை என்பதை அவனுக்கே உணர்த்தும் தொனியில் ‘அனாதைப் பயலே’ என்று திட்டுவதை பலரிடத்திலும் காணலாம். இது ஒருவகையிலான துன்புறுத்தலே ஆகும்.

அன்பு செலுத்தும் மற்ற தந்தையர்களைப் பார்க்கும் போது, நமக்குத் தோள் கொடுக்க, கட்டியணைக்க, கற்றுக் கொடுக்க, பொருள் வாங்கித் தந்து அரவணைக்கத் தந்தை இல்லையே என்ற ஏக்கம் அவன் வளர்ந்து பெரியவனாகும் வரை அவனை நெருடிக் கொண்டே இருக்கின்றது.

பெருநாள் போன்ற பண்டிகைக் காலங்களில் அவர்கள் படும் மனவேதனை மகா கொடியது. அத்தகைய அனாதைகளைக் கண்டுணர்ந்து அவர்களுக்கு அடைக்கலம் அளித்தால்  நபியுடன் நெருக்கமாக சொர்க்கத்தில் இருக்கும் பாக்கியம் கிட்டும்.

பெண்பிள்ளைகளைப் பராமரித்தல்

ஊரார் பிள்ளைகளை மட்டுமல்ல; தன் பிள்ளைகளைப் பராமரிப்பதும் சொர்க்கத்தில் நபியுடன் இருக்கும் வாய்ப்பைப் பெற்றுத்தரும். ஒரு நிபந்தனை. அவர்கள் பெண் குழந்தைகளாக இருக்க வேண்டும்.

 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مَنْ عَالَ جَارِيَتَيْنِ حَتَّى تَبْلُغَا، جَاءَ يَوْمَ الْقِيَامَةِ أَنَا وَهُوَ» وَضَمَّ أَصَابِعَهُ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இரு பெண் குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும் வரை பொறுப்பேற்று, கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்’’ என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம்-5127 

இரு பெண் குழந்தைகளைக் கருத்தாக மார்க்க போதனைகளைக் கற்றுக் கொடுத்து வளர்த்தால் அவர் இந்த அரிய வாய்ப்பை பெறுகிறார். பெண் குழந்தைகளைக் கருத்தாக வளர்த்து ஆளாக்குவது அவ்வளவு சுலபமல்ல. குயவனுக்கே உண்டான கவனமும், கரிசனமும் வேண்டும்.

கொஞ்சம் கவனம் சிதறினாலும் எக்குத்தப்பாகப் பிசகி விடும். அதன் பிறகு நாம் நினைத்த வடிவில் அதை (அவளை) மீண்டும் உருவாக்குவது கடும் சிரமம். அதுவும் சீர்கேடு நிறைந்த இக்கால கட்டத்தில் பெண் குழந்தைகள் மீது தனிக்கவனமும் கண்காணிப்பும் அவசியமான ஒன்று என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

பெண் குழந்தைகளை நல்லொழுக்கத்துடன் வளர்ப்பது பெரும் சவால். அதை வெற்றிகரமாக முடிப்போருக்கு இறைவன் தரும் பரிசு தான், சொர்க்கத்தில் நபிமார்களுடன், நபிகள் நாயகத்துடன் இருக்கும் மகோன்னதப் பரிசு.

நல்லொழுக்கம்

நான் சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான் என்பது பிள்ளைகள் குறித்துப் பல பெற்றோர் புலம்பும் உலகளாவியப் புலம்பல். இதற்கு என்ன காரணம்? பிள்ளைகளை அப்படிச் செய், இப்படிச் செய்யாதே என அதட்டும் பல பெற்றோர், பிள்ளைகளுக்குப் போதிக்கும் நன்னெறிகளைத் தாங்கள் பின்பற்றுவோராக இல்லை.

சொர்க்கத்தில் நபியுடன் இருக்க விரும்பினால் நபியின் குணத்திற்கு ஏற்ப நம்மை ஒழுக்கசீலராக மாற்றிக் கொள்ள முடியாவிட்டாலும் நல்லொழுக்கத்தைக் கடைபிடிக்கும் ஒழுக்கவாதியாக நம்மை நாம் கட்டமைத்துக் கொள்ள முன்வர வேண்டும்.

மறுமையில் சொர்க்கத்தில் நபிகளாரின் அவையில் நமக்கும் ஒரு இடம் வேண்டும் என விரும்பினால் நினைவில் கொள்ளுங்கள். ஒழுக்கவாதிகளுக்கே நபியின் அவையில் இடமுண்டு.

 عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ مِنْ أَحَبِّكُمْ إِلَيَّ وَأَقْرَبِكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ القِيَامَةِ أَحَاسِنَكُمْ أَخْلَاقًا
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எனக்கு விருப்பமானவரும், மறுமையின் சபையில் என்னிடம் நெருக்கத்திற்குரியவரும் யாரெனில் நல்ல பண்புகளைக் கொண்டவரே.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: திர்மிதீ-2018 (1941), அஹ்மத் 6447

மறுமையில் நபியின் அவையில், நபிக்கு நெருக்கத்தில் நமக்கான இடத்தைப் பிடிக்க இப்போது ஆகக் கூடிய முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வோம். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மட்டுமே கட்டுப்படுவோம். அல்லாஹ் அந்த வாய்ப்பை நம் அனைவருக்கும் நல்குவான்.

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

பயனளிக்காத உறவுகள்

பயனளிக்காத உறவுகள்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!

திருக்குர்ஆனும் நபிமொழியும் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்பதை விளங்கி வைத்திருக்கின்ற ஒவ்வொருவரும் இந்த ஏகத்துவக் கொள்கையில் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். ஆனால் இவ்வாறு உறுதியாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றவர்களின் இறை நம்பிக்கையைப் பலவீனப்படுத்தி, ஆட்டம் காண ஷைத்தான் ஒரு குறுக்கு வழியைக் கையாள்கிறான். அந்தக் குறுக்கு வழியின் மூலம் வழிகெட்டு, வழிகேட்டின்பால் விழுவோரில் தீன்குலப் பெண்மணிகள் முதலிடம் வகின்றனர்.

இறை நம்பிக்கையில் உறுதியானவர்களின் உறுதியையும் ஆட்டம் காணச் செய்ய ஷைத்தான் நாடும் குறுக்கு வழி என்ன? அந்த நிலையை நாம் எவ்வாறு சரி செய்வது? என்பதைக் இந்த உரையில் காண்போம்.

உறவு முன்னால்! கொள்கை பின்னால்!

எத்தனையோ விஷயங்களில், எவ்வளவு நேரங்களில் அல்லாஹ்வுடைய கட்டளையையும் நபி (ஸல்) அவர்களுடைய வழிகாட்டுதலையும் உயிரினும் மேலாக மதிக்கும் கொள்கை உறுதி மிக்கவர்கள், தன்னுடைய சொந்த பந்தத்தில், குருதி உறவில் தன் உறுதியை இழந்து விடுவதை கண்கூடாகக் கண்டு வருகிறோம்.

தொடர்ந்து நபிவழியைப் பேணி வாழ்ந்தவர் தனது அண்ணனுடைய வரதட்சணை திருமணத்தில் கலந்து கொள்வதையும், தனது அண்ணன் மகனுடைய கத்னா எனும் சுன்னத் கல்யாணத்தில் (?) கலந்து கொள்வதையும், தனது அக்காள் மகள் காது குத்தில் கலந்து கொள்வதையும், தனது தம்பி மனைவியின் வளைகாப்பு வைபவத்தில் கலந்து கொள்வதையும், தனது தங்கையின் பூப்புனித நீராட்டு விழாவில் சீராட்டோடு கலந்து கொள்வதையும் குருதி உறவைக் காரணம் காட்டி ஈமானிய உறுதி குலையக் காரணமாவதை உதாரணமாகக் கூறலாம்.

ஏகத்துவத்தை பேசக்கூடிய எத்தனையோ கணவன்மார்கள் மேற்கூறியவையெல்லாம் தவறு, நபிவழிக்குப் புறம்பானது என்பதை பட்டும்படாமலோ, அழுத்தம் திருத்தமாகவோ சுட்டிக் காட்டினாலும் நம் தீன்குலப் பெண்மணிகள் ஏற்றுக் கொள்வதில்லை.

அவர்கள் எல்லாம் நம் நெருங்கிய உறவினர்கள் ஆயிற்றே! அவர்களது நிகழ்ச்சியில் நாம் எப்படி கலந்து கொள்ளாமல் இருக்க முடியும்? நாளை நமது வீட்டில் நடக்கும் நல்ல விஷயங்களுக்கு அவர்கள் வரவேண்டாமா? என்று அடுக்கடுக்கான சான்றுகளை எடுத்துரைத்து கணவன்மார்களை சரிகட்டி மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபட்டு, பாவமூட்டைகளை சுமந்து கொள்கின்றனர். ஏகத்துவக் கொள்கையில் உறுதியுடன் இருப்பவர்களை வழிகெடுக்கும் ஷைத்தானின் குறுக்கு வழிகள் இதுதான்.

இந்த உறவுகளால் பயன் என்ன?

இந்த உலக வாழ்க்கையை முற்றிலுமாகக் கருத்தில் கொண்டு இத்தகையோர் வழிகேட்டின் பக்கம் போகிறார்களே! இந்த உறவுகள் மறுமை நாளில் பயன் தருமா? உறவு முறையைக் காரணம் காட்டி வழிகெடுப்பவர்கள், குறிப்பாக பெண்கள் இதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஓட்டம் எடுக்கும் உறவுகள்

மறுமை நாளில் ஏற்பட இருக்கும் நிகழ்வுகளை அல்லாஹ் தன் திருமறையில் படம் பிடித்துக் காட்டுகின்றான். எந்த ஒரு மனிதனும் தனது தாயையோ, தனது தந்தையையோ, தனது சகோதர, சகோதரியையோ அந்த மறுமை நாளின் திடுக்கத்தின் பயத்தில் கண்டு கொள்ள மாட்டான்.

فَاِذَا جَآءَتِ الصَّآخَّةُ
يَوْمَ يَفِرُّالْمَرْءُ مِنْ اَخِيْهِۙ‏
وَاُمِّهٖ وَاَبِيْهِۙ‏
وَصَاحِبَتِهٖ وَبَنِيْهِؕ‏
அந்தச் சப்தம் ஏற்படும் அந்த நாளில் மனிதன் தனது சகோதரனையும், தனது தாயையும், தனது தந்தையையும், தனது மனைவியையும், தனது பிள்ளைகளையும் விட்டு ஓடுவான்.

(அல்குர்ஆன்: 80:33-36)

يٰۤاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمْ وَاخْشَوْا يَوْمًا لَّا يَجْزِىْ وَالِدٌ عَنْ وَّلَدِهٖ وَلَا مَوْلُوْدٌ هُوَ جَازٍ عَنْ وَّالِدِهٖ شَيْـــًٔا‌ ؕ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ‌ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيٰوةُ الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ‏
மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! தந்தை மகனைக் காக்க முடியாத, மகன் தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாளை அஞ்சுங்கள்! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம்! ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.

(அல்குர்ஆன்: 31:33)

எந்த மனைவி கூறியதால் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்தானோ அந்த மனைவியை கணவன் கண்டு கொள்ள மாட்டான். தனது கணவனை மனைவி கண்டு கொள்ள மாட்டாள். தனது தாய், தந்தை கூறியதால் தான் வரதட்சணை வாங்கித் திருமணம் செய்தேன் என்று தாய், தந்தை பேச்சைக் கேட்டு பெண் வீட்டாரிடத்தில் பிச்சை எடுத்த மகனை விட்டும் அவனது தாய், தந்தையர் ஓடி விடுவர்.

எந்த ஒரு ஆபத்து ஏற்பட்டாலும் மனிதனுக்கு முதலில் உதவுபவன் அவன் உடன் பிறந்த சகோதரனாகத் தான் இருப்பான். இதை தமிழில் தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்று கூறுவார்கள். ஆனால் அந்தச் சப்தம் ஏற்படும் போது மனிதனை விட்டு ஓடுபவர்களில் முதலாவதாக அல்லாஹ் சகோதரனைத் தான் குறிப்பிடுகின்றான்.
எந்தத் துன்பம் வந்தாலும் உயிர் காப்பான் தோழன் என்று கூறுவார்கள். ஆனால் அவனும் கூட எந்த உதவியும் செய்ய மாட்டான் என்று அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான்.

وَلَا يَسْـَٔـلُ حَمِيْمٌ حَمِيْمًا
எந்த நண்பனும் நண்பனை விசாரிக்க மாட்டான். (அல்குர்ஆன்: 70:10)

எந்த உறவுகளுக்காக மார்க்கத்திற்கு முரணாக நடந்தானோ அந்த உறவுகள் உதவி செய்யாமல் போவதுடன் அதற்கும் ஒருபடி மேலே போய் நம்மை மாட்டிவிட்டு, தான் தப்பித்துக் கொள்வதற்கு, எந்த உறவுகளையும் விற்பனை செய்வதற்குத் தயாராக இருக்கும் பரிதாபமான நிலை ஏற்படும்.

يُّبَصَّرُوْنَهُمْ‌ؕ يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِىْ مِنْ عَذَابِ يَوْمِٮِٕذٍۢ بِبَنِيْهِۙ‏
 وَ صَاحِبَتِهٖ وَاَخِيْهِۙ‏
 وَفَصِيْلَتِهِ الَّتِىْ تُــْٔوِيْهِۙ‏
وَمَنْ فِى الْاَرْضِ جَمِيْعًا ۙ ثُمَّ يُنْجِيْهِۙ
அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு ஈடாக தன் மகன்களையும், தனது மனைவியையும், தனது சகோதரனை யும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான்.

(அல்குர்ஆன்: 70:11-14)

தனது உறவுகள் பயனிக்கும் என்று நம்பி, இறைவனுக்கும் இறைவனுடைய தூதருக்கும் மாறு செய்யக்கூடியோர் மேற்கண்ட திருமறை வசனங்களை சிந்தித்துப் பார்க்கட்டும்.

எந்தக் குடும்பத்திற்காக, எந்தப் பிள்ளை குட்டிகளுக்காக, எந்த உறவினர்களுக்காக தனது வாழ்வை இவ்வுலகில் அர்ப்பணித்தானோ அவர்கள் அனைவரையும் ஈடாகக் கொடுத்தாவது தான் விடுதலையாக வேண்டும் என்று மனிதன் விரும்புவான் என்றால் நம்மை இறைவனது நெறியை விட்டும் இறைத்தூதர் வழியை விட்டும் திசை திருப்பும் இந்த உறவுமுறைகள் தேவை தானா? இது போன்று நம்மை விட்டுவிட்டு மறுமை நாளில் ஓடக்கூடிய, நமக்கு எதிராகத் திரும்பக் கூடிய இந்த பயனிக்காத உறவுகள் பேச்சைக் கேட்க வேண்டுமா என்ன?

யாரை நேசிப்பதாக இருந்தாலும் அந்த நேசம் அல்லாஹ்வுக்காக அவன் தூதருக்காக இருக்க வேண்டும்.

مَنْ أَحَبَّ لِلَّهِ، وَأَبْغَضَ لِلَّهِ، وَأَعْطَى لِلَّهِ، وَمَنَعَ لِلَّهِ فَقَدِ اسْتَكْمَلَ الْإِيمَانَ
‘யார் அல்லாஹ்வுக்காக நேசித்து, அல்லாஹ்வுக்காக வெறுத்து, அல்லாஹ்வுக்காகக் கொடுத்து, அல்லாஹ்வுக்காக வெறுத்தால் அவனது ஈமான் நிறைவு பெற்றுவிட்டது’ என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
நூல்: அபூதாவூத்-4681 (4061)

இந்தக் கருத்தை வலுவூட்டும் வண்ணம் நபிகளார் வேறு இடத்தில் இவ்வாறு கூறியுள்ளார்கள்:

ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ الإِيمَانِ: أَنْ يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَأَنْ يُحِبَّ المَرْءَ لاَ يُحِبُّهُ إِلَّا لِلَّهِ، وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார். (அவை:)

1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரியோராவது.
2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.
3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி-16 

ஈமானை நன்றாக அறிந்தவர்கள் எந்த நிலையிலும் அல்லாஹ்வின் கூற்றை விட, அவன் தூதர் காட்டிய வழியை விட உறவினர்களின் பேச்சுக்கு முதலிடம் கொடுக்க மாட்டார்கள். படைத்தவனின் கட்டளைக்கும் அவன் விரும்பும் வழிகாட்டுதலுக்குமே முதலிடம் கொடுப்பார்கள்.

நபிமார்களும் உறவுகளும்

அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களின் உறவினர்கள் கூட இறைக்கட்டளையின்படி நடக்காவிட்டால் அவர்கள் இறைத்தூதர்களின் உறவினர்கள் என்பதற்காக மறுமையில் வெற்றியடைய முடியாது.

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தையாக இருந்த ஆஸர், இறைத்தூதரின் தந்தை என்பதற்காக அவர் மறுமையில் வெற்றியடைந்து விட முடியாது. அவருக்காக பாவமன்னிப்புக் கூட கேட்க அல்லாஹ் அனுமதிக்கவில்லை.

قَدْ كَانَتْ لَـكُمْ اُسْوَةٌ حَسَنَةٌ فِىْۤ اِبْرٰهِيْمَ وَالَّذِيْنَ مَعَهٗ‌ۚ اِذْ قَالُوْا لِقَوْمِهِمْ اِنَّا بُرَءٰٓؤُا مِنْكُمْ وَمِمَّا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَآءُ اَبَدًا حَتّٰى تُؤْمِنُوْا بِاللّٰهِ وَحْدَهٗۤ اِلَّا قَوْلَ اِبْرٰهِيْمَ لِاَبِيْهِ لَاَسْتَغْفِرَنَّ لَـكَ وَمَاۤ اَمْلِكُ لَـكَ مِنَ اللّٰهِ مِنْ شَىْءٍ ‌ؕ رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَاِلَيْكَ اَنَـبْنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ‏
‘உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது’ என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. ‘உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை’ என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.

(அல்குர்ஆன்: 60:4)

 وَمَا كَانَ اسْتِغْفَارُ اِبْرٰهِيْمَ لِاَبِيْهِ اِلَّا عَنْ مَّوْعِدَةٍ وَّعَدَهَاۤ اِيَّاهُ‌ ۚ فَلَمَّا تَبَيَّنَ لَهٗۤ اَنَّهٗ عَدُوٌّ لِّلّٰهِ تَبَرَّاَ مِنْهُ‌ ؕ اِنَّ اِبْرٰهِيْمَ لَاَوَّاهٌ حَلِيْمٌ
இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே! அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர்.

(அல்குர்ஆன்: 9:114)

இதைப் போன்று நபி நூஹ் (அலை) மற்றும் லூத் (அலை) அவர்களின் மனைவிமார்கள் மார்க்கத்திற்கு முரணாக நடந்தனர். அவர்கள் இறைத்தூதரின் மனைவி என்பதால் அவர்கள் சொர்க்கம் போக முடியவில்லை. மாறாக நரகவாதிகள் என்று தெளிவாக அல்லாஹ் கூறியுள்ளான்.

 ضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّـلَّذِيْنَ كَفَرُوا امْرَاَتَ نُوْحٍ وَّ امْرَاَتَ لُوْطٍ‌ ؕ كَانَـتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَالِحَـيْنِ فَخَانَتٰهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللّٰهِ شَيْــًٔا وَّقِيْلَ ادْخُلَا النَّارَ مَعَ الدّٰخِلِيْنَ‏
நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. ‘இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!’ என்று கூறப்பட்டது.

(அல்குர்ஆன்: 66:10)

இதைப் போன்று நூஹ் (அலை) அவர்களின் மகன், இஸ்லாத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாததால் அவனையும் கடல் பேரலையால் மூழ்கடித்ததாக அல்லாஹ் கூறுகின்றான். அவர்களின் தந்தை, மகன் உறவு பயனளிக்கவில்லை.

حَتّٰۤى اِذَا جَآءَ اَمْرُنَا وَفَارَ التَّنُّوْرُۙ قُلْنَا احْمِلْ فِيْهَا مِنْ كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَاَهْلَكَ اِلَّا مَنْ سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ وَمَنْ اٰمَنَ‌ؕ وَمَاۤ اٰمَنَ مَعَهٗۤ اِلَّا قَلِيْلٌ

وَقَالَ ارْكَبُوْا فِيْهَا بِسْمِ اللّٰهِ مَجْرٖؔٮٰھَا وَمُرْسٰٮهَا ‌ؕ اِنَّ رَبِّىْ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ ‏

وَهِىَ تَجْرِىْ بِهِمْ فِىْ مَوْجٍ كَالْجِبَالِ وَنَادٰى نُوْحُ اۨبْنَهٗ وَكَانَ فِىْ مَعْزِلٍ يّٰبُنَىَّ ارْكَبْ مَّعَنَا وَلَا تَكُنْ مَّعَ الْكٰفِرِيْنَ
قَالَ سَاٰوِىْۤ اِلٰى جَبَلٍ يَّعْصِمُنِىْ مِنَ الْمَآءِ‌ؕ قَالَ لَا عَاصِمَ الْيَوْمَ مِنْ اَمْرِ اللّٰهِ اِلَّا مَنْ رَّحِمَ‌ۚ وَحَالَ بَيْنَهُمَا الْمَوْجُ فَكَانَ مِنَ الْمُغْرَقِيْنَ‏

நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கிய போது ‘ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக!’ என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர்.

‘இதில் ஏறிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும், நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’ என்று கூறினார்.

மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி ‘அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே!’ என்று நூஹ் கூறினார்.

‘ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்’ என்று அவன் கூறினான். ‘அல்லாஹ் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை’ என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான்.

(அல்குர்ஆன்: 11:40-43)

இவ்வுலகத்தின் அருட்கொடையாக வந்த நபிகளாரின் தந்தையும் தாயும் கூட இஸ்லாத்தை ஏற்காததால் அவர்களும் நரகவாதிகளாக ஆகிவிட்டார்கள். அவர்களின் உறவும் அல்லாஹ்விடத்தில் எந்தப் பயனையும் ஏற்படுத்தவில்லை.

 عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ
زَارَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْرَ أُمِّهِ، فَبَكَى وَأَبْكَى مَنْ حَوْلَهُ، فَقَالَ: «اسْتَأْذَنْتُ رَبِّي فِي أَنْ أَسْتَغْفِرَ لَهَا فَلَمْ يُؤْذَنْ لِي، وَاسْتَأْذَنْتُهُ فِي أَنْ أَزُورَ قَبْرَهَا فَأُذِنَ لِي، فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُ الْمَوْتَ»
நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத் தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், ‘நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத் தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்-1777 

عَنْ أَنَسٍ
أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللهِ، أَيْنَ أَبِي؟ قَالَ: «فِي النَّارِ»، فَلَمَّا قَفَّى دَعَاهُ، فَقَالَ: «إِنَّ أَبِي وَأَبَاكَ فِي النَّارِ»
ஒரு மனிதர், ‘அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (நரக) நெருப்பில்’ என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்ற போது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, ‘என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில் தான் (இருக்கிறார்கள்)’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம்-347

மார்க்கத்திற்கு முதலிடம் கொடுத்த நபிகளார்

மிகவும் அன்பிற்குரியவர்களாக நேசித்த தன் மகள் பாத்திமா (ரலி) அவர்கள் மார்க்கத்திற்கு முரணான காரியத்தைச் செய்த போது அன்பிற்குரிய மகளின் செயல் என்று அதை அங்கீகரிக்காமல் அதைக் கண்டிக்கும் வண்ணமாக அவர்களது வீட்டிற்குச் செல்லாமல் திரும்பி வந்துவிட்டார்கள்.

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
أَتَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْتَ فَاطِمَةَ، فَلَمْ يَدْخُلْ عَلَيْهَا، وَجَاءَ عَلِيٌّ، فَذَكَرَتْ لَهُ ذَلِكَ، فَذَكَرَهُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنِّي رَأَيْتُ عَلَى بَابِهَا سِتْرًا مَوْشِيًّا»، فَقَالَ: «مَا لِي وَلِلدُّنْيَا» فَأَتَاهَا عَلِيٌّ، فَذَكَرَ ذَلِكَ لَهَا، فَقَالَتْ: لِيَأْمُرْنِي فِيهِ بِمَا شَاءَ، قَالَ: «تُرْسِلُ بِهِ إِلَى فُلاَنٍ، أَهْلِ بَيْتٍ بِهِمْ حَاجَةٌ»
நபி (ஸல்) அவர்கள், (தமது மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்கள் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால், அவர்களிடம் செல்லவில்லை. அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் விஷயத்தைச் சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் சொல்ல, ‘நான் ஃபாத்திமாவின் வீட்டு வாசலில் பல வண்ணச் சித்திரங்கள் வரையப்பட்ட திரைச் சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும் இந்த (ஆடம்பரமான) உலகத்திற்கும் என்ன தொடர்பு?

(அதனால்தான் திரும்பி வந்துவிட்டேன்)’ என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் சென்று, நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், ‘அந்தத் திரைச் சீலையின் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள், தாம் விரும்புவதை எனக்குக் கட்டளையிடட்டும்’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அதை இன்னாரின் வீட்டாரிடம் அனுப்பி விடு. அவர்களுக்குத் தேவையுள்ளது’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரலி)
நூல்: புகாரி-2613 

எந்தச் சோதனை வந்தாலும் எதிர்த்து நின்று போராடக் கூடிய ஈமானிய வலிமை மிகுந்த ஏகத்துவவாதிகள் பலரும் உறவு முறை என்று வந்து விட்டால் அவர்களது ஈமானிய நிலை ஆட்டம் கண்டு விடுவதையும், அவர்கள் மிக உறுதியாக நின்றாலும் அவரது மனைவிமார்கள் அவர்களது மதியை மயக்கி ஈமானை மலுங்கடித்து விடச் செய்வதையும் காண்கிறோம். இந்த நிலை மாற வேண்டும் என்றால் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முன்மாதிரியை நம் வாழ்வில் எடுத்து நடக்க வேண்டும். தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்பார்கள். மார்க்க விஷயம் என்று வந்து விட்டால் நபியவர்கள் தானும் ஆடவில்லை, தன் சதையையும் ஆடவிடவில்லை.

சிறந்த தோழர்கள்

பயனளிக்காத இந்த உறவுக்காக மறுமை வாழ்க்கையைப் பாழாக்கி விடாதீர்கள். மறுமை வாழ்க்கைக்குப் பயனளிக்கும் மார்க்கக் கடமைகளுக்கு முதலிடம் கொடுங்கள். அல்லாஹ்வும் அவன் தூதரும் கூறிய கட்டளையை ஏற்று நடங்கள். அதற்கே முதலிடம் கொடுங்கள். மறுமை நாளில் சிறந்த தோழமை உங்களுக்குக் கிடைக்கும்.

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள்,

وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓٮِٕكَ مَعَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِيْنَ‌ ۚ وَحَسُنَ اُولٰٓٮِٕكَ رَفِيْقًا ؕ‏
உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.

(அல்குர்ஆன்: 4:69)

மறுமை நாள் ஏற்படும் போது வரும் சப்தத்தைக் கேட்டவுடன் நம்மை விட்டும் ஓட்டம் எடுக்கும் உறவுகள் ஒருபுறம் இருக்க, அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பவர்கள் மிக உயர்ந்த நபிமார்கள், உயிர் தியாகிகள், உண்மையாளர்கள், நல்லவர்கள் ஆகியோருடன் இருக்கும் நல்வாய்ப்பு கிட்டும். இந்த வாய்ப்பைப் பெறுவதற்கு முழு முயற்சியை நாம் எடுப்போம். அப்படிப்பட்டவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.!

வ ஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

மார்க்கக் கல்வியை மறைக்காதீர்!

மார்க்கக் கல்வியை மறைக்காதீர்!

அல்லாஹ் மார்க்க அறிஞர்களை அவர்களுக்கென்று பல தகுதிகளைக் கொடுத்து பல விதத்திலும் சிறப்புப்படுத்தியுள்ளான்.

 மக்களிடத்திலும் கூட உயரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் இம்மார்க்க அறிஞர்களே! 

பாமரர்களிலிருந்து படித்தவர்கள் வரையிலும் ஆலிம்களை புண்ணியவான்கள் எனக் கருதி அவர்களைக் கண்ணியப்படுத்துகின்ற காட்சியை நாம் காண்கின்றோம். இதற்கான காரணம் ஆலிம் என்பவர் மார்க்கம் படித்தவர், நம்மை விடவும் அதிகமாகத் தெரிந்தவர், தூய மார்க்கம் காட்டித் தந்த அனைத்து சட்டத்திட்டங்களையும் சரிவர நிறைவேற்றுபவர் என்றெல்லாம் கற்பனை கோட்டைகளைக் கட்டி போற்றி வருகின்றனர்.

ஆனால் இந்தக் கண்ணியத்திற்கு சொந்தக் காரர்களாக இருக்க வேண்டிய மார்க்க அறிஞர்களில் சில போலி ஆலிம்களோ மக்களின் இந்த நோக்கத்தை மண்ணில் போட்டு புதைக்கும் விதமாக நடந்து கொள்கின்றனர். தாம் கற்ற கல்வியையே வியாபாரமாக மாற்றிவிட்டனர். மக்களிடம் தனக்குக் கிடைத்த தகுதியை பயன்படுத்தியே அவர்களை ஏமாற்றிவருகின்றனர். இது போன்ற இழிவானவர்களால் உருவானது தான் மாதம் ஒரு மவ்லிது, கத்தம் பாத்திஹா, ஓதிப் பார்த்தல் போன்ற இணைவைப்புகள்.

அவ்லியாக்களிடம் பிரார்த்திப்பது இணை வைத்தல் என்று தெரிந்திருந்தும் கூட இந்த ஆலிம்கள் அதை மக்களிடம் எடுத்துச் சொல்வதில்லை. அந்தப் பாவச்செயலை நியாயப்படுத்துகின்றனர். மேலும் ஒரு வீட்டில் கத்தம் பாத்திஹா ஓதினால் வயிறு நிறைய சாப்பாடு, கை நிறைய பணம் என்று, இருந்த இடத்திலேயே சம்பாதிக்கலாம் என்பதால் இந்தத் தவறை சுட்டிக் காட்டும் இடத்தில் இருக்கும் ஆலிம்களே இத்தவறைச் செய்து தம் சுயமரியாதையை இழந்து வருகின்றனர்.

மக்களும், ஆலிம் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் கேள்வி கேட்காமல் கண்மூடித்தனமாக அவர்களைப் பின்பற்றிவருகின்றனர். ஆனால் இந்த ஆலிம்கள் மக்களின் இந்த அறியாமையைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி மார்க்கத்தை மறைத்து ராஜவாழ்க்கை வாழ்கின்றனர்.

யாரேனும் இவர்களிடத்தில் கேள்வி கேட்டால் இவன் ஆலிமையே எதிர்த்து பேசிவிட்டான், ஆலிம்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாதவன் என்று பிரச்சாரம் செய்து தாம் செய்யும் தவறை யாரும் கண்டுபிடிக்காத வகையில் மக்களை வாயடைக்கச் செய்கின்றனர்.

இவ்வாறு சுக போக வாழ்க்கையைத் தான் வாழவேண்டும் என்பதற்காக தவறான கொள்கையை மக்களிடத்தில் எடுத்து வைத்து, தெளிவான மார்க்கத்தை பிறருக்கு எடுத்துச் சொல்லாமல் மறைத்து வாழ்வோரை அல்லாஹ் எச்சரிக்கை செய்கின்றான்.

اِنَّ الَّذِيْنَ يَكْتُمُوْنَ مَآ اَنْزَلْنَا مِنَ الْبَيِّنٰتِ وَالْهُدٰى مِنْۢ بَعْدِ مَا بَيَّنّٰهُ لِلنَّاسِ فِى الْكِتٰبِۙ اُولٰٓٮِٕكَ يَلْعَنُهُمُ اللّٰهُ وَ يَلْعَنُهُمُ اللّٰعِنُوْنَۙ
اِلَّا الَّذِيْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَبَيَّـنُوْا فَاُولٰٓٮِٕكَ اَ تُوْبُ عَلَيْهِمْۚ وَاَنَا التَّوَّابُ الرَّحِيْمُ
மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான வேதத்தில் சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்: 2:159,160)

ஆனால் ஆலிம்களுக்கெல்லாம் மிகப்பெரும் ஆலிமாக இருந்த நபி (ஸல்) அவர்கள் மார்க்கத்தைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தார்கள் என்பதற்கும், இறுதி வரையிலும் சுயமரியாதையைப் பேணி வாழ்ந்தார்கள் என்பதற்கும் ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.

ஆனால் இந்தப் போலி ஆலிம்களோ காசுக்காக எதையும் செய்யத் தயார் என்று துணிந்து, தாம் கற்ற கல்வியை மண்ணில் போட்டுப் புதைத்து, சுயமரியாதையை இழந்து, பிறரிடம் கையேந்தும் காட்சியை நாம் பார்க்கின்றோம். இத்தகையோருக்கு நபிகளாரின் வாழ்வு ஒர் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சுய இலாபத்திற்காகக் கல்வியை மறைக்கக்கூடிய போலி ஆலிம்களை நாம் பார்த்தோம்.

மார்க்கம் தடுத்த ஒரு செயலை, தான் செய்யும் ஒரே காரணத்திற்காக அந்தத் தவறை மக்கள் மத்தியில் சுட்டிக்காட்டத் தவறும் சில மார்க்க அறிஞர்களும் இருக்கின்றனர்.

திருத்திக் கொள்ள முடியாத தவறு தன்னிடத்திலும் இருக்கும் போது அதனை மக்களுக்கு சுட்டிக்காட்டாமல் மார்க்கத்தின் மீது தனக்கிருக்கும் பொறுப்பை அவன் மறந்து அதை மக்கள் மன்றத்தில் சேர்க்காமல் விட்டு விடுகின்றனர்.

இவ்வாறு தனக்குச்  சாதகமானதை எடுத்துச் சொல்லியும் தனக்கு பாதகமானதை கண்டும் காணாமலும் விட்டுவிடுகின்றனர். இவ்வாறு மார்க்கச் சட்டங்களை மறைப்பது யூதர்களின் பண்பாகும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு யூத ஆணும் ஒரு யூதப் பெண்ணும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் இருவரும் மானக்கேடான செயல் (விபசாரம்) புரிந்து விட்டிருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுடைய  வேதத்தில் என்ன காணப்படுகிறது?’’ என்று கேட்டார்கள். அதற்கு அந்த (இடத்திலிருந்த) யூதர்கள், “எங்கள் அறிஞர்கள், முகத்தில் கரி பூசி, முழங்கால்களைப் பிடித்தபடி குனிந்து நிற்கச் செய்ய வேண்டும் என்ற தண்டனையை உருவாக்கியுள்ளனர்’’ என்று சொன்னார்கள்.

அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “தவ்ராத்தைக் கொண்டுவரும்படி அவர்களிடம் கூறுங்கள், அல்லாஹ்வின் தூதரே!’’ என்று கூறினார்கள். அவ்வாறே  ‘தவ்ராத்’ கொண்டு வரப்பட்ட போது, யூதர்களில் ஒருவர் கல்லெறி தண்டனை (‘ரஜ்ம்’) பற்றிய வசனத்தின் மீது தமது கையை வைத்தார். மேலும், அதற்கு முன் பின்னிருந்த வசனங்களை வாசித்துக் காட்டலானார். அப்போது அவரிடம் அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “உன் கையை எடு!’’ என்று சொன்னார்கள். அவர் தமது கையை எடுத்தபோது, அதில் கல்லெறி தண்டனை பற்றிய வசனம் அவரது கைக்குக் கீழே இருந்தது.

ஆகவே, கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அப்போது அவர்கள் இருவருக்கும் ‘பலாத்’ எனும் இடத்தில் வைத்து கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்த யூதர் அவள் மீது (கல்படாமல் தடுப்பதற்காகக்) கவிழ்ந்து படுத்துக் கொண்டதை நான் பார்த்தேன்.

நூல்: புகாரி-6819

இணை வைப்பின் வாசலை அடைத்த இஸ்லாம்

இணை வைப்பின் வாசலை அடைத்த இஸ்லாம்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

இறைவனால் மன்னிப்பு வழங்கப்படாத குற்றம் உலகில் உண்டென்றால் அது இணைவைப்பாகும். அல்லாஹ்வுடைய இடத்தில் வேறு யாரைக் கொண்டு வந்து நிறுத்தினாலும் அதை அல்லாஹ் அறவே வெறுக்கின்றான். மனிதர்கள் இறைவனுக்குச் சமமாக யாரையும் கருதுவதை அல்லாஹ் விரும்பவில்லை. மாறாகக் கடும் கோபம் கொள்கின்றான்.

ஆகையால் தான் இணை வைப்பிலேயே மரணித்தவர்களுக்கு இறைவன் நிரந்தர நரகைப் பரிசாக அளிக்கின்றான். இப்போது ஓர் புதிய நினைவலையாக இணைவைப்பிற்கான காரணிகளை இஸ்லாம் எப்படி தடை செய்கின்றது என்பதை இந்த உரையின் மூலம் அறிந்துக் கொள்வோம். 

எந்தெந்த வாசல் வழியாக வெல்லாம் இணைவைப்பு எனும் நச்சுக்கிருமி நுழைய முயலுமோ அத்தகைய வாசல்கள் யாவற்றையும் நச்சென இஸ்லாம் மூடி வைத்துள்ளது. எந்த வகையிலும் இணைவைப்பு மக்களிடம் நுழைந்து விடாமலிருக்க இஸ்லாம் பல பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது.

இணைவைப்பின் பக்கம் கொண்டு செல்லும் செயல் எதுவாக இருந்தாலும் அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற அடிப்படையில் இஸ்லாம் இணைவைப்பின் காரணிகளைத் தடை செய்துள்ளது. இஸ்லாம் தடை செய்திருக்கிற சில விஷயங்களை நுணுக்கமாக அணுகும் போது அதன் வழியாக இணைவைப்பு நுழைய வாய்ப்புண்டு என்பதாலேயே அவை தடுக்கப்பட்டுள்ளன என்பதை அறியலாம்.

எல்லையற்ற புகழ்மாலை

யாரையும் வரம்பு மீறிப் புகழக் கூடாது என்று இஸ்லாம் கட்டளை பிறப்பித்துள்ளது. இறைத்தூதர்களாகவே இருந்தாலும் வரம்புமீறிப் புகழ்வது பாவம் என்று மார்க்கம் எச்சரித்துள்ளது.

لاَ تُطْرُونِي، كَمَا أَطْرَتْ النَّصَارَى ابْنَ مَرْيَمَ، فَإِنَّمَا أَنَا عَبْدُهُ، فَقُولُوا عَبْدُ اللَّهِ، وَرَسُولُهُ
“நபி (ஸல்) அவர்கள், “கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) “அல்லாஹ்வின் அடியார்‘ என்றும் “அல்லாஹ்வின் தூதர்‘ என்றும் சொல்லுங்கள்‘ என்று கூறினார்கள்” என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி-3445 

இறைத்தூதர்களை வரம்பு மீறிப் புகழக் கூடாது என்ற தடையின் பின்னணியில் என்ன உள்ளது என்று பார்த்தால், அது இணைவைப்பிற்கு அழைத்துச் சென்று விடும் என்கிற அபாயம் தான் காரணம் என்பதைப் புரியலாம். முதலில் சாதாரணமாகப் புகழ ஆரம்பிப்பவர், பிறகு படிப்படியாக புகழ் சூட்டுவதை அதிகரிப்பார். முடிவில் இறைவனின் அந்தஸ்தை மனிதருக்கு வழங்கி புகழ ஆரம்பித்து விடுவார். நபிகள் நாயகம் காலத்திலேயே இது போன்று நடந்துள்ளது என்பதை வரலாற்றில் காண்கிறோம்.

لاَ تَقُولِي هَكَذَا وَقُولِي مَا كُنْتِ تَقُولِينَ
ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். -(இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் பின் தக்வான் -ரஹ்- அவர்களிடம்) “எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள்” (என்று ருபய்யிஉ கூறினார்கள்)- அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, “எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்” என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், “இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்” என்று கூறினார்கள்.

நூல்: புகாரி-4001 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மறைவானவற்றை அறிபவர் என்று சிறுமி புகழும் போது நபிகள் நாயகம் அதைக் கண்டித்து இவ்வாறு இனி கூறாதே என்று எச்சரிக்கின்றார்கள். வரம்பு மீறிப் புகழ ஆரம்பிக்கும் போது இப்படித்தான் இறைவனின் அந்தஸ்துகள் வழங்கப்பட்டு புகழ்பாடும் சூழல் ஏற்பட்டு விடும்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் காலத்தில் கிரகணம் ஏற்பட்ட போது நபியின் மகனது இறப்பிற்காகத் தான் கிரகணம் ஏற்பட்டுள்ளது என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். தனது மகனின் இறப்பிற்காக கிரகணம் ஏற்படுகின்றது என்று மக்கள் பேசிக் கொள்ளும் போது இந்தப் புகழ் தனக்குச் சேர்வதையும் நபிகள் நாயகம் கண்டித்தார்கள். தான் பெரும் சோகத்தில் இருந்த போதிலும் மக்களின் இந்தப் பேச்சு, புகழ்மாலை இணைவைப்பிற்கு அழைத்துச் சென்று விடும் என்பதை மக்களுக்கு உணர்த்த நபிகள் நாயகம் தவறவில்லை.

كَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ مَاتَ إِبْرَاهِيمُ، فَقَالَ النَّاسُ: كَسَفَتِ الشَّمْسُ لِمَوْتِ إِبْرَاهِيمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّمْسَ وَالقَمَرَ لاَ يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ فَصَلُّوا، وَادْعُوا اللَّهَ»
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அன்றைய தினத்தில் (நபி (ஸல்) அவர்களின் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) இறந்தார். இதையொட்டி மக்கள் “இப்ராஹீமின் இறப்புக்காகத்தான் கிரகணம் ஏற்பட்டது” என்று பேசிக்கொண்டனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும், எவரது பிறப்புக் காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, அவற்றை நீங்கள் கண்டால் (பிரகாசம் வரும்வரை) அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; தொழுங்கள்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஃகீரா (ரலி),
நூல்: புகாரி-1043 

இறைத்தூதர்களையே இவ்வாறு புகழக் கூடாது என்றால் மற்றவர்களைக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. இன்றைக்கு இறைவனுக்கு இணை கற்பிக்கும் பாவங்கள் பெரும்பாலும் எல்லை மீறிப் புகழ்வதினாலேயே ஏற்படுகின்றன.

மவ்லித், மீலாது என்ற பெயரில் படிக்கப்படும் பாடல்கள் அத்தனையும் நபிகள் நாயகத்தையும், மற்ற சாதாரண மனிதர்களையும் இறைவனுக்குச் சமமாக்கும் இணைவைப்பைத் தாங்கியே நிற்கின்றன.

எல்லை மீறிப் புகழ்வதே இத்தகைய இணைவைப்பிற்கு அழைத்து வந்தது என்பதை ஏனோ மக்கள் உணர்வதில்லை. இதனாலே இணைவைப்பின் வாசலான எல்லை மீறிப்புகழ்வதை இஸ்லாமிய மார்க்கம் தடுக்கின்றது.

எல்லை மீறிய மரியாதை

பெரியோர்களை மதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளை மரியாதை என்பது குறிப்பிட்ட வரம்புக்குள் நிற்க வேண்டும். வரம்பைத் தாண்டியதாய் அமைந்து விடக்கூடாது. மரியாதை என்பது அதன் வரம்பைத் தாண்டும் கட்டமானது நம்மை இணைவைப்பை நோக்கி இழுத்துச் செல்லும் அபாயகரமான கட்டம் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

எல்லை மீறிய மரியாதை என்பது இணைவைப்பின் ஓர் வாசலாக இருப்பதால் தான் மார்க்கம் இந்த வாசலையும் அடைத்து வைக்கின்றது. மரியாதை என்ற பெயரில் அளவு கடந்து போகக் கூடாது என்றும், அதுவும் இணைவைப்பின் பக்கம் நம்மை அறியாமல் கடத்தி விடும் என்றும் மார்க்கம் போதிக்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மக்கள் மரியாதை தர விரும்பி எழுந்து நிற்பார்கள். அதை நபிகள் நாயகம் வேண்டாமென தடுத்து விட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவர்களுக்குப் பின்னால் நாங்கள் (நின்றவாறே) தொழுதோம். அவர்கள் அமர்ந்தவாறே எங்களுக்குத் தொழுவித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தக்பீர் கூற, அதை அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்குக் கேட்கும் விதமாக  (உரத்த குரலில்) கூறிக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களைத் திரும்பிப் பார்த்தார்கள். அப்போது நாங்கள் நின்றவாறு தொழுது கொண்டிருந்தோம். உடனே எங்களையும் உட்கார்ந்து தொழுமாறு சைகை செய்தார்கள்.

உடனே நாங்கள் உட்கார்ந்தவாறே அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். அவர்கள் சலாம் கொடுத்(து தொழுகையை முடித்த)ததும், “நீங்கள் சிறிது நேரத்திற்கு முன் பாரசீகர்கள் மற்றும் ரோமர்களைப் போன்று நடந்து கொள்ளப் பார்த்தீர்கள். அவர்கள் தாம் தங்கள் மன்னர்கள் அமர்ந்திருக்கும் போது நின்றுகொண்டு இருப்பார்கள். நீங்கள் அவ்வாறு செய்யாதீர்கள்.

ائْتَمُّوا بِأَئِمَّتِكُمْ إِنْ صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا وَإِنْ صَلَّى قَاعِدًا فَصَلُّوا قُعُودًا
உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பவர்களை நீங்கள் பின்பற்றுங்கள். அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள். அவர் அமர்ந்து தொழுதால் நீங்களும் அமர்ந்தே தொழுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
நூல்: முஸ்லிம்-701 

நபிகள் நாயகம் இதைத் தடுக்கக் காரணம் இன்று எழுந்து நிற்பதில் ஆரம்பிப்பார்கள், பிறகு இன்னும் கொஞ்சம் மரியாதையை அதிகப்படுத்த சற்று குனிவார்கள், பிறகு தரையில் தலை படுமளவு குனியவும், அடுத்து குப்புறப்படுத்து காலில் விழவும் ஆரம்பித்து விடுவார்கள்.

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقْبِلُ وَمَا عَلَى الْأَرْضِ شَخْصٌ أَحَبَّ إِلَيْنَا مِنْهُ، فَمَا نَقُومُ لَهُ لِمَا نَعْلَمُ مِنْ كَرَاهِيَتِهِ لِذَلِكَ
உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. எனறாலும், அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: அஹ்மத்-12526 (12068)

எழுந்து நிற்பதைத் தடுத்த போதிலும் மக்கள் நபியின் காலில் விழ எத்தனித்தார்கள். அதற்காக நபியிடமே அனுமதி கோரினார்கள். நபிகள் நாயகத்திற்கு மரியாதை செய்யும் விதமாகக் காலில் விழலாமா என்று மக்கள் கேட்டபோது வன்மையாக அதைக் கண்டித்தார்கள்.

لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ المَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا
ஒருவர் இன்னொருவருக்கு ஸஜ்தா (காலில் விழுவது) செய்யும்படி கட்டளையிடுவதாக இருந்தால் கணவனுக்கு மனைவி ஸஜ்தா செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டிருப்பேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: திர்மிதீ-1159 (1079)

தனக்கு எழுந்து நிற்கக் கூடாது என்று நபிகள் நாயகம் தடை விதித்ததிலிருந்து யாரும் யாருக் காகவும் எழுந்து நின்று மரியாதை செய்தல் இஸ்லாத்தில் கூடாது என்பதை அறியலாம். மக்கள் தனக்கு எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்று விரும்புவர் நரகை அஞ்சிக் கொள்ளட்டும் என்று நபிகள் நாயகம் எச்சரித்துள்ளார்கள்.

مَنْ أَحَبَّ أَنْ يَمْثُلَ لَهُ الرِّجَالُ قِيَامًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ
“தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ, அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதை நான் செவியேற்றுள்ளேன் என்று முஆவியா (ரலி) சொன்னார்கள்.

நூல்: அபூதாவூத்-5229 (4552)

தனக்காக எழுந்து நிற்கவேண்டும் என்று முதலில் விரும்புவார். பிறகு தன் காலில் மக்கள் விழ வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார். அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர்.

நபியவர்களின் கண்டிப்பும், மக்களின் நடைமுறையும் இது இணைவைப்பின் வாசலே என்பதைச் சந்தேகமற உணர்த்திவிடுகின்றது. அதனாலேயே மார்க்கம் இதைத் தடுத்து, அணைபோட்டு வைத்துள்ளது.

நல்லோர்களின் உருவப்படம்

நல்லடியார்களின் உருவப் படங்களை வரைதலையும், அவர்களுக்குச் சிலை வடிப்பதையும் இஸ்லாம் அறவே தடை செய்கின்றது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை மனிதர்களிலேயே மிக மோசமானவர்கள் என்று மார்க்கம் வர்ணிக்கின்றது.

أَنَّ أُمَّ سَلَمَةَ، ذَكَرَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَنِيسَةً رَأَتْهَا بِأَرْضِ الحَبَشَةِ يُقَالُ لَهَا مَارِيَةُ، فَذَكَرَتْ لَهُ مَا رَأَتْ فِيهَا مِنَ الصُّوَرِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُولَئِكَ قَوْمٌ إِذَا مَاتَ فِيهِمُ العَبْدُ الصَّالِحُ، أَوِ الرَّجُلُ الصَّالِحُ، بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ، أُولَئِكَ شِرَارُ الخَلْقِ عِنْدَ اللَّهِ
அபிசீனிய நாட்டில் தாம் கண்ட “மரியா‘ என்றழைக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உம்மு சலமா அவர்கள் கூறினார்கள். அதில் தாம் கண்ட உருவப்படங்களைக் குறித்தும் உம்மு சலமா அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்கள் எத்தகைய மக்கள் எனில், அவர்களிடையே “நல்ல அடியார்‘ அல்லது “நல்ல மனிதர்‘ ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும் போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டி விடுவார்கள்; அதில் அந்த உருவங்களை வரைந்தும் விடுவார்கள். இத்தகையோர்தாம் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிகவும் மோசமானவர்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி-434 

நல்லடியார்களின் பெயரில் உருவப் படங்களை வரைவதும், சிலை வடிப்பதும் கண்டிப்பாக இணை வைப்பிற்கே அழைத்துச் செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அது எப்படி?

நல்லடியாரின் உருவப்படத்தை வீட்டிலோ சமாதியிலோ அமைத்திருப்பார்கள். முதல் தலைமுறை அவரை நல்லடியார் என்று கூறும். அடுத்த தலைமுறை அவரை மகான், அவ்லியா என்று வார்த்தைகளை மாற்றிக் கூறும். அப்படியே நான்காம் ஐந்தாம் தலைமுறை அவரைக் கடவுளாகவோ கடவுளின் குமாரராகவோ ஆக்கி விடும்.

நவீன உலகில் கடவுள்களின் எண்ணிக்கை  கணக்கிலடங்காமல் பெருகியிருக்க இது போன்ற உருவ வழிபாடு ஓர் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. கருப்பசாமி, முனியாண்டி, சுடலையப்பன், மாரியம்மன் இவர்கள் எல்லாம் எப்படிக் கடவுள்களாக ஆக்கப்பட்டார்கள்? இவர்கள் எல்லாம் அந்தந்த ஊரின் நல்ல மனிதர்களாக இருந்திருக்கலாம்.

நல்ல மனிதராயிற்றே என்று முதல் தலைமுறை அவர்களுக்குச் சிலை வடித்திருப்பார்கள். காலம் செல்லச் செல்ல அடுத்தடுத்த தலைமுறைகளால் அவர்கள் கடவுளர்களாக ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆக நல்ல மனிதர் என்று சொல்லி அவரின் உருவத்தை வரைதல், கற்சிலை வடித்தல் போன்றவை இணைவைப்பிற்கு அழைத்துச் செல்லும் அபாயகரமான காரணியாக இருக்கின்றது. அதனாலேயே இது மார்க்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.

நபிமார்களாக இருந்தாலும் அவர்களுடைய உருவச்சிலையை வடித்தலோ, வரைதலோ கூடாது என்று உறுதிபட மார்க்கம் தெரிவித்து விட்டது.

சமாதி கட்டுதல்

இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சமாதி எழுப்புதல் கூடாதென்று மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதும் இந்த வகையைச் சார்ந்ததே! மற்ற மனிதர்களை விட்டும் தனித்துத் தெரியும் வகையில் சமாதி எழுப்பி அதற்கு ஓர் நினைவாலயம் அமைத்து பெயர் பொறித்து விட்டால் போதும். அது யார்? ஏன்? என்று எந்தக் கேள்வியும் கேட்காமல் மக்கள் அந்த சமாதியைத் தொட்டுக் கும்பிட ஆரம்பித்து விடுவார்கள். முஸ்லிம்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

எல்லை மீறிய மரியாதை அளிப்பதற்கு இத்தகைய சமாதிகள் ஊக்கம் கொடுக்கின்றன. தூண்டுகின்றன. வெற்றுத் தரையாக இருக்கும் வரை மக்கள் அதைக் கண்டு கொள்ளமாட்டார்கள். அதுவே கட்டியெழுப்பபட்டதாக இருக்கும் எனில் அது பல இணைவைப்பு காரியங்கள் நடைபெறுவதற்கு உந்து சக்தியாக மாறிவிடுகின்றன.

யூத, கிறித்தவர்கள் நபிமார்களின் மண்ணறைகளைச் சமாதிகளாக கட்டியெழுப்பியதாலே இணை வைப்பில் விழுந்தார்கள் என்று நபிமொழி எச்சரிக்கின்றது.

لَعَنَ اللَّهُ اليَهُودَ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسْجِدًا قَالَتْ: وَلَوْلاَ ذَلِكَ لَأَبْرَزُوا قَبْرَهُ غَيْرَ أَنِّي أَخْشَى أَنْ يُتَّخَذَ مَسْجِدًا
நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்த போது, “யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்டுத்துவானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கி விட்டனர்” என்று கூறினார்கள்.

இந்த அச்சம் மட்டும் இல்லையாயின் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடத்தைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருந்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன். 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி-1330 

எனவே தான் இஸ்லாம் யாருடைய மண்ணறையின் மீதும் கட்டடம் எழுப்பக் கூடாது என்று மறுப்பு தெரிவிக்கின்றது.

نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُجَصَّصَ الْقَبْرُ، وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ، وَأَنْ يُبْنَى عَلَيْهِ
கப்றுகள் பூசப்படுவதையும், அதன் மீது உட்காருவதையும், அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் ரலி,
நூல்: முஸ்லிம்-1765 

மீறி எழுப்பப்பட்ட கட்டடத்தை ஆட்சியாளர்கள் தகர்க்க வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகின்றது.

قَالَ لِي عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ: أَلَا أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ «أَنْ لَا تَدَعَ تِمْثَالًا إِلَّا طَمَسْتَهُ وَلَا قَبْرًا مُشْرِفًا إِلَّا سَوَّيْتَهُ
அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!” என்று கூறினார்கள்.      

நூல்: முஸ்லிம்-1764 

மண்ணறையின் மீது சமாதி எழுப்புவதை இவ்வளவு காட்டமாக, கடுமையாகக் கண்டிப்பதற்கு காரணம் இது இணைவைப்பிற்கு அழைத்துச் செல்லும் என்பதே.

இணைவைப்பின் சாயல்

இப்படி எவையெல்லாம் இணை வைப்பின் காரணிகள் என்பதை இனம் கண்டு அவை அனைத்தையும் மார்க்கம் தடுக்கின்றது. இதுபோலவே எந்த ஒரு செயலிலும், வணக்கத்திலும் இணை வைப்பின் சாயல் ஏற்படுவதைக் கூட மார்க்கம் விரும்பவில்லை.

ஒரு செயல் அனுமதிக்கப்பட்ட தாகவே இருந்தாலும் அதில் இறைவனுக்கு நிகராக இன்னொருவரை ஆக்கும்படியான ஒப்பு இருந்தாலோ, அதன் சாயல் துளி தெரிந்தாலோ அதையும் மார்க்கம் தடை செய்து இணைவைப்பை எந்த வகையிலும் எட்டிப்பார்க்கவிடாமல் வேரறுக்கின்றது.

இதைப் பல ஹதீஸ்களிலிருந்து அறிய முடிகின்றது.

அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டதே. அவ்வாறு செய்த நேர்ச்சையை எங்கும் நிறைவேற்றலாம். ஆனால் பிறமத வழிபாட்டுத் தலங்களில் இறைவனுக்காகச் செய்த நேர்ச்சைகளை நிறைவேற்றக் கூடாது என்று மார்க்கம் தடை செய்கின்றது.

نَذَرَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ كَانَ فِيهَا وَثَنٌ مِنْ أَوْثَانِ الْجَاهِلِيَّةِ يُعْبَدُ؟» قَالُوا: لَا، قَالَ: «هَلْ كَانَ فِيهَا عِيدٌ مِنْ أَعْيَادِهِمْ؟»، قَالُوا: لَا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْفِ بِنَذْرِكَ، فَإِنَّهُ لَا وَفَاءَ لِنَذْرٍ فِي مَعْصِيَةِ اللَّهِ، وَلَا فِيمَا لَا يَمْلِكُ ابْنُ آدَمَ
புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று ஒருவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நேர்ச்சை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று நேர்ச்சை செய்திருக்கின்றேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதில் வணங்கப்படக் கூடிய அறியாமைக் கால சிலைகளில் ஏதேனும் ஒரு சிலை இருக்கின்றதா?” என்று (மக்களிடம்) கேட்டார்கள். அதற்கு (மக்கள்) இல்லை என்று பதிலளித்தார்கள்.

“அவர்களது திருவிழாக்களில் ஏதேனும் ஒரு திருவிழா அங்கு நடப்பதுண்டா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள். “நீ உன்னுடைய நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள். ஏனெனில் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதிலோ அல்லது ஆதமுடைய மகனுக்கு இயலாத காரியத்திலோ நேர்ச்சையை நிறைவேற்றுதல் இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக்(ரலி),
நூல்: அபூதாவூத்-3313 , அஹ்மத்-16012

இதற்கு என்ன காரணம் என்றால் பிறமத வழிபாட்டுத்தலங்களில் இறைவனுக்கான வணக்கத்தைச் செய்யும் போது வெளிப்பார்வையில் அல்லாஹ்வுக்காக என்பது அடிபட்டுப் போய் வேறு கடவுளுக்காக இது செய்யப்படுகிறது என்கிற தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.

இறைவனுக்காக ஒருவர் ஆட்டை அறுக்கிறார். அதைப் பொதுவெளியில் அறுத்தால் ஒன்றும் தெரியாது. அதையே கோயில் வளாகத்தில் போய் அறுத்தால் கோயில் கடவுளுக்காக அறுத்ததாகத் தான் மக்கள் நினைப்பார்கள்.

ஒரு முஸ்லிமின் செயல்பாட்டில், வணக்கத்தில் இணைவைப்பின் சாயல் கூட எட்டிப்பார்க்க கூடாது என்பதற்காகவே இந்தத் தடை என்பதை யாரும் எளிதில் புரியலாம்.

கப்ரை முன்னோக்கி தொழுதல்

அல்லாஹ்வுக்காகத் தொழும் ஒருவர் தனது தொழுகையை கப்ரை முன்னோக்கி அமைத்துக் கொள்ளும் போதும் இந்த இணைவைப்பின் ஒப்பு எட்டிப்பார்க்கின்றது.

தொழுபவர் அல்லாஹ்வுக்காகத் தான் தொழுகிறார் என்றாலும் ஒரு குறிப்பிட்ட கப்ரை முன்னோக்கி தொழுகையை அமைக்கும் போது கப்ரில் அடக்கம் செய்யப்பட்ட மனிதருக்காகத் தொழுகிறாரோ என்ற சந்தேகத்தை பார்வையாளனுக்கு ஏற்படுத்தி விடுகிறது. இதனால் மார்க்கம் இதையும் தடுக்கின்றது.

لَا تُصَلُّوا إِلَى الْقُبُورِ، وَلَا تَجْلِسُوا عَلَيْهَا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடக்கத் தலங்களை (கப்று) நோக்கித் தொழாதீர்கள்; அவற்றின் மீது உட்காராதீர்கள்.

அறிவிப்பவர்: அபூமர்ஸத் அல்ஃகனவீ (ரலி),
நூல்: முஸ்லிம்-1769 

சூரியன்

குறிப்பிட்ட நேரங்களில் அல்லாஹ்வுக்காகக் கூட தொழக்கூடாது என்று மார்க்கம் தடை செய்கின்றது. சூரியன் தோன்றி முழுமையாக வெளிப்படும் வரை, சூரியன் மறையத் துவங்கியதிலிருந்து முழுமையாக மறையும் வரை. இது போன்ற நேரங்களைத் தேர்ந்தெடுத்து தொழக்கூடாது என்று மார்க்கம் சொல்கின்றது.

 عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«إِذَا بَدَا حَاجِبُ الشَّمْسِ، فَأَخِّرُوا الصَّلَاةَ حَتَّى تَبْرُزَ، وَإِذَا غَابَ حَاجِبُ الشَّمْسِ، فَأَخِّرُوا الصَّلَاةَ حَتَّى تَغِيبَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியனின் ஒரு பகுதி (கிழக்கில்) தோன்றும்போது (தொழாதீர்கள்.) அது முழுமையாக வெளிப்படும்வரை தொழுவதைத் தாமதப்படுத்துங்கள்; சூரியனின் ஒரு பகுதி (மேற்கில்) மறையும்போது (தொழாதீர்கள்); அது முழுமையாக மறையும்வரை தொழுகையைத் தாமதப்படுத்துங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: முஸ்லிம்-1509 

சூரியனை வணங்கி வழி பட்டவர்கள் இந்த நேரத்தைத் தேர்வு செய்தே வழிபட்டார்கள். இன்றும் இவ்வாறு வணங்கும் சிலர் இருக்கிறார்கள். அல்லாஹ்வை மட்டுமே வணங்கும் முஸ்லிம்கள் இந்த நேரங்களில் தொழும்போது சூரியனை வணங்குவது போன்ற வெளித் தோற்றம் ஏற்படுகின்றது.

வெளித்தோற்றத்தில் கூட இணை வைப்பின் சாயல் தென்படக் கூடாது என்பதற்காகவே இந்த நேரங்களில் தொழத் தடை விதிக்கப்பட்டு உள்ளது என விளங்கலாம்.

இஸ்லாம் இணைவைப்பை ஒரு போதும் ஆதரிக்காது, இணை வைப்பின் சாயலைக் கூட இஸ்லாம் சகித்துக் கொள்ளாது என்பதே இவை நமக்கு போதிக்கும் பாடமாகும். எனவே இணை வைப்பின் சாயலை விட்டும் விலகி வாழும் நன் மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!!

மவ்லிது பட்ஜெட் மூன்று லட்சம்!!

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!!

மாநபி (ஸல்) மவ்­தையொட்டி இந்த (அல்ம­க்குல் முழஃப்ஃபர் அபூஸயீது கவ்கப்ரீ பின் ஸைனுத்தீன் அ­ய்யிப்னு புக்தகீன்) மன்னர் ஏற்பாடு செய்த விருந்து வைபவத்தில் ஒரு முறை பங்கேற்றவர்களில் ஒருவர் கூறுகிறார். ”அவ்விருந்தில் சமைக்கப் பட்ட ஐயாயிரம் ஆட்டுத் தலைகள், பத்தாயிரம் கோழிகள், ஒரு இலட்சம் வெண்ணெய் பலகாரங்கள் முப்பதாயிரம் ஹல்வா தட்டைகள் இருந்தன. அந்த விருந்தில் ஞானிகள் மற்றும் சூஃபிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கெல்லாம் மன்னர், பொன்னாடைகள் போர்த்திக் கவுரவித்தார். மேலும் அன்பளிப்பு களும் வழங்கினார். லுஹர் முதல் சுபுஹ் வரை சூஃபிகளுக்காவே மன்னர் தனியாக ஒரு இசையரங்கம் ஏற்பாடு செய்தார். அதில் பாடப்பட்ட பேரின்பப்பாடல் கேட்டு குதித்துக் களித்த சூஃபிகளுடன் சேர்ந்து மன்னரும் பக்திப் பரவசத்துடன் ஆடினார். ஆண்டு தோறும் மூன்று இலட்சம் ரூபாயை மன்னர் முழஃப்ஃபர் மாநபி (ஸல்) மவ்­துக்காகவே செலவிட்டார். (ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்­லித், பக்கம்: 13)

இதி­ருந்தே இந்த மவ்­துகள் தீனிக்காக உருவாக்கப்பட்டவைதான். இதற்கும் மார்க்கத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நபிக்கு வரவேற்பு பாடல், மவ்லிதுக்கு ஆதாரமா?

நபிக்கு வரவேற்பு பாடல், மவ்லிதுக்கு ஆதாரமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா சென்ற போது வரவேற்பு பாடல், மவ்லிதுக்கு ஆதாரமா?

பதில்

மவ்லிதுப் பாடல் ஏன் கூடாது நாம் சொல்கிறோம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதருக்கு நாம் வரவேற்பு கொடுக்கிறோம் என்றால் வசன நடையிலும் கொடுக்கலாம்; கவிதை நடையிலும் கொடுக்கலாம். இந்த அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வருவதில் மகிழ்ச்சி அடைந்த மதீனா மக்கள் அவர்களை வரவேற்று பாடினார்கள்.

இப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம் காலத்தில் வாழ்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நமது ஊருக்கு அவர்கள் வந்தால் அவர்களை வரவேற்று நாம் பாடலாம்.

மறுமையில் நன்மை கிடைக்கும் என்பதற்காக என்றோ யாரோ கொடுத்த வரவேற்பு பாடலை படித்தால் அது வணக்கம் என்ற நிலையில் வைக்கப்படுகிறது. ஒரு மனிதன் எழுதிய பாடலை திருக்குர்ஆன் போல் நன்மையை நாடி வணக்கமாகச் செய்வதாக இருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லித் தந்திருப்பார்கள்.

நீங்கள் சொன்ன அந்தப் பாடலையே எடுத்துக் கொள்வோம். அப்பாடலை வருடம் தோறும் ஒவ்வொருவரும் வீட்டில் பள்ளிவாசலில் வைத்து படியுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நபித்தோழர்கள் இப்படி படிக்கவும் இல்லை. அது வரலாற்று சம்பவம் தானே தவிர வணக்கம் அல்ல.

நாம் வணக்கமாக கருதிப் பாடும் பாடல் மார்க்க அறிவற்ற சிலரால் எழுதப்பட்டது. அதில் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் கருத்துக்கள் உள்ளன. அப்படி இல்லாவிட்டாலும் அனைத்தும் நல்ல கருத்து என்றாலும் அதை ஒரு நூலாக கருதி படிக்கலாமே தவிர அதற்கான சட்ங்குகளை ஏற்படுத்தி பயபக்தியுடன் ஓதுவது சரியா?

ஒரு மனிதனின் வார்த்தைகளை வணக்கமாகக் கருதி ஓதினால் அது பித்அத் ஆகும்.

அனைத்து வணக்க முறைகளையும் நமக்குக் கற்றுத் தருவதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பினான். அவர்களும் தமது பணியில் எந்தக் குறைவும் வைக்காமல் முழுமையாக நமக்குச் சொல்லித் தந்தார்கள். அவர்கள் உயிருடன் வாழும் போதே இம்மார்க்கத்தை இறைவன் முழுமைப்படுத்தி விட்டான்.

اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்.

(திருக்குர்ஆன்:5:3.)

صحيح مسلم
4590 – وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ جَمِيعًا عَنْ أَبِى عَامِرٍ قَالَ عَبْدٌ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِىُّ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ سَأَلْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ عَنْ رَجُلٍ لَهُ ثَلاَثَةُ مَسَاكِنَ فَأَوْصَى بِثُلُثِ كُلِّ مَسْكَنٍ مِنْهَا قَالَ يُجْمَعُ ذَلِكَ كُلُّهُ فِى مَسْكَنٍ وَاحِدٍ ثُمَّ قَالَ أَخْبَرَتْنِى عَائِشَةُ
أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ »

‘நமது கட்டளையில்லாமல் எந்தச் செயலையேனும் யாரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம்-3541 

صحيح مسلم
حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، وَعَبْدُ اللهِ بْنُ عَوْنٍ الْهِلَالِيُّ، جَمِيعًا عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ ابْنُ الصَّبَّاحِ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، حَدَّثَنَا أَبِي، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ»
எனது கட்டளையில்லாமல் யாரேனும் ஒரு வணக்கத்தைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம்-3540 

صحيح البخاري
2697 – حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ

‘இந்த மார்க்கத்தில் இல்லாததை யாரேனும் உண்டாக்கினால் அது ரத்துச் செய்யப்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி-2697

سنن النسائي
1578 – أَخْبَرَنَا عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ سُفْيَانَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ،
قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي خُطْبَتِهِ: يَحْمَدُ اللَّهَ وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ يَقُولُ: «مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ، إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ»، ثُمَّ يَقُولُ: «بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ»، وَكَانَ إِذَا ذَكَرَ السَّاعَةَ احْمَرَّتْ وَجْنَتَاهُ، وَعَلَا صَوْتُهُ، وَاشْتَدَّ غَضَبُهُ كَأَنَّهُ نَذِيرُ جَيْشٍ يَقُولُ: صَبَّحَكُمْ مَسَّاكُمْ، ثُمَّ قَالَ: «مَنْ تَرَكَ مَالًا فَلِأَهْلِهِ، وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيَاعًا فَإِلَيَّ أَوْ عَلَيَّ، وَأَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ»

‘(மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை பற்றி உங்களை நான் எச்சரிக்கிறேன். புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் (பித்அத்எனும்) அனாச்சாரமாகும். அனாச்சாரங்கள் அனைத்தும் வழிகேடாகும். வழிகேடுகள் யாவும் நரகத்தில் சேர்க்கும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: நஸாயீ-1578

Saturday, August 30, 2025