பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)
Showing posts with label Food. Show all posts
Showing posts with label Food. Show all posts

Wednesday, December 27, 2017

கசகசா_போதைப்_பொருளா


கசகசா_போதைப்_பொருளா?

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உணர்வில் இக்கட்டுரை எழுதப்பட்டது. இதற்கு மாற்றமான ஆதாரங்கள் இருந்தால் தெரிவிக்குமாறு அக்கட்டுரையில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. மாற்றுக் கருத்து வருகிறதா என்பதை அறிந்த பின் இக்கட்டுரையை இணைய தளத்தில் பதிவிடலாம் என்று கருதி இருந்தோம். இருபது மாதங்கள் கழிந்த பின்னும் இக்கட்டுரையின் ஆதாரங்களை மறுத்து யாரும் பதிவிடவில்லை. எனவே இக்கட்டுரையை நமது இணையதளத்தில் வெளியிடுகிறோம்.

(சவூதி அரேபியாவில் கசகசா தடை செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியா செல்லும் பயணிகள் கசகசாவைக் கொண்டு செல்ல வேண்டாம் என்று இந்திய அரசும் அறிவுறுத்துகிறது. கசகசா செடியில் இருந்து அபின் எடுக்கப்படுவதால் கசகசா ஒரு போதைப் பொருள் என்பதற்காக சவூதியில் தடை செய்யப்பட்டுள்ளதாக நம்பி தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட சில அமைப்புகள் கசகசா பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லி வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான புலனாய்வு வார இதழ் ஒன்றில் கசகசா போதைப் பொருள் கிடையாது என்றும், கசகசா செடியின் காயைக் கீறிவிடும் போது அதில் இருந்து வடியும் பாலில் இருந்து தான் அபின் தயாரிக்கப்பட்டாலும் கசகசாவில் போதை இல்லை என்று அக்கட்டுரையில் எழுதப்பட்டு இருந்தது. மேலும் கசகசா விதையைக் கொண்டு சென்று சவூதியில் யாரும் அதைப் பயிரிட்டு விடக் கூடாது என்பதற்காகவே சவூதியில் தடை செய்யப்பட்டதாகவும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டு இருந்தது.

இந்தக் காரணத்துக்காகத் தான் சவூதி அரசு தடை செய்திருக்கும் என்றால் கசகசாவைப் பயன்படுத்துவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாக ஆகாது. ஏனெனில் பனை, தென்னை மரங்களில் இருந்து தான் கள் இறக்கப்படுகிறது. இதனால் பதனீரோ, தேங்காயோ ஹராமாக ஆகாது. அந்த அடிப்படையில் கசகசாவில் போதை இல்லாமல் இருந்து அதை விதைத்து பயிர் செய்து அந்தச் செடியில் இருந்து போதைப் பொருள் தயாரிக்க வாய்ப்பு உண்டு என்பதற்காக சவூதி தடை செய்தால் அது மார்க்கத்தில் ஹராமாகாக ஆகாது. போதைப் பொருள் என்பதற்காக சவூதியில் தடை செய்து இருந்தால் அது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாக ஆகி விடும்.

எனவே இது குறித்த விபரத்தை கட்டுரையாக தருமாறு டாக்டர் கிஸார் அவர்களிடம் கேட்டுக் கொண்டோம். அவர் அதனடிப்படையில் இக்கட்டுரையை ஆக்கித் தந்துள்ளார். கசகசாவில் போதை உள்ளது என்பதற்கு தக்க ஆதாரம் இருப்பவர்கள்  அது குறித்து நமக்குத் தெரிவித்தால் அதையும் வெளியிடுவோம். எந்த ஆதாரமும் இல்லை என்பது உறுதியானால் கசகசா பயன்படுத்தக் கூடாது என்ற நமது முடிவை மாற்றிக் கொள்வோம்- ஆசிரியர்)

டாக்டர் த. முஹம்மது கிஸார்

பல நாடுகளில் கசகசா என்னும் பொப்பி விதை, உணவில் சுவை, மனம் கூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. சவூதி போன்ற நாடுகளில் இந்த விதை தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் கசகசா சேர்க்கப்பட்ட உணவை உண்டால் போதை வரும் வாய்ப்பு உண்டா என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுகிறது. இதைப் பற்றி ஆய்வியல் உலகம் பல மாறுபட்ட கருத்துகளைக் கொண்டாலும், இதை உட்கொண்டால் போதை ஏற்படுவது இல்லை என்று பல அறிவியல் உண்மைகள் கூறுகின்றன.

கசகசா என்பது உணவுக்குச் சுவையூட்ட பயன்படும் ஒரு எண்ணெய் வித்தாகும். இதில் பல ஊட்டசத்துக்களும் உள்ளன. போதை தரும் அபின் உற்பத்தி ஆகும் செடியில் காய்ந்த பழத்தின் உள்ளே இருந்து இது பெறப்படுகிறது. போதை தரும் செடியில் இருந்து இந்த விதை பெறபட்டாலும், கசகசா விதையில் போதை தரும் குணம் இல்லை. இந்த மரத்தின் மற்ற பாகங்கள் தரும் எந்தப் பக்க விளைவுகளும், இந்த விதைக்குக் கிடையாது..

NUTRITION AND YOU என்ற இணையதளம் கசகசா பற்றி இப்படி வரையறை தருகிறது

"Nutty and pleasant in taste, poppy seeds are nutritious oilseeds used as condiment in cooking. They are the seeds obtained from the dry fruits (pods) of the poppy plant (opium poppy) and entirely free from any sinister side effects of other poppy plant products such as opium poppy."

கசகசாவின் மருத்துவ குணங்கள்

• கசகசாவிற்கு நோய்த் தடுப்பு, ஆரோக்கிய மேம்பாடு போன்ற பண்புகள் உள்ளன.

•கசகசாவிற்கு கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஆற்றலும் உண்டு. அதே சமயம்  உடலுக்கு நன்மை தரும் நல்ல கொலஸ்ட்ராலை கசகசா அதிகரிக்கச் செய்யும். காரணம் அதில் உள்ள oleic and linoleic acids. Oleic acid, a mono-unsaturated fatty acid, இது மாரடைப்பைத் தடுத்து, பக்கவாதத்தில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது

•இதில் உள்ள வெளிப்புற உறையில் அதிக அளவு நார்ச்சத்து (100 g raw seeds provide 19.5 g or 51% of recommended daily levels (RDA) of fibre ) உள்ளதால் மலச்சிக்கலைத் தடுக்க உதவுவதோடு, சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

•கசகசா விதை, தயாமின், பண்டோதேனிக் அமிலம், பைரிடாகஷின், ரைபோ பிளேவின், போலிக் அமிலம் போன்ற வைட்டமின்களுக்கு சிறந்த ஆதாரமாக உள்ளது.

•போதிய அளவில் இரும்பு, காப்பர், பொட்டாஷியம், மாங்கனீஸ், ஜின்க், மற்றும் மெக்னீசியம் உள்ளது.

•கசகசா விதையில் உள்ள ஒபியம் அல்கலாயிடுகளான மார்பின் (morphine), தெபைன்(thebaine),கொடின் (codeine), பபவரைன்(papaverine)  போன்றவை மனித உடலில் பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. நரம்பு எரிச்சலை நீக்கவும், வலியைக் குறைக்கவும்  பயன்படுவதோடு, இந்த வேதிப் பொருட்கள் பல இருமல் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கசகசா விதை, கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பானது.

இந்த மரத்தின் மற்ற பாகங்கள், பொதுவாக போதை தரக்கூடிய பொருட்களைக் கொண்டுள்ளது என்றாலும், அதை விரிவாக ஆராயும் பொது அதில், வலி நிவாரணியான மார்பின், தெபய்ன், கொடின் போன்ற மருந்துகள் தான் உள்ளன. இப்படி வலி நிவாரணம் மற்றும் மூளை நரம்பு மண்டலத்தில் வேலை செய்யும் இந்தப் பொருட்கள், போதைக்காக உட்கொள்ளப்படுகிறது என்பது உண்மையானாலும் கசகசா மட்டும் இதில் விதிவிலக்காக உள்ளது.

பல நாடுகள், தங்கள் நாட்டுக்குள் கசகசாவைக் கொண்டு வரத் தடை செய்யக் காரணம், கசகசா விதையை செடியில் இருந்து அறுவடை செய்யும் பொது மற்ற பாகங்களில் உள்ள போதை தரும் பொருளுடன் சேர்ந்து மாசுபடுவது ஒரு காரணம். பொதுவாக கசகசா விதை அறுவடை செய்த பின், உரிய முறையில் சுத்திகரிப்பு செய்யப்பட்டால் நூறு சதவீதம் சுத்தமாகி விடும்.

ஒபியம், பப்பி தாவரத்தின் விதை உட்பட எல்லா பாகங்களிலும், மருந்து மூலக்கூறான மார்பின் மற்றும் கொடின் போன்றவை இருப்பதால், இந்த விதையைச் சாப்பிட்டவர்களின் சிறுநீர் சோதனை முடிவிலும், போதைப்பொருள் (false) positive என்றே காட்டும்.

கசகசாவில், மார்பினே, மற்றும் கொடின் இருந்தும் அது ஏன் போதை தருவதில்லை என்றால் இந்த மருந்துகளின், செறிவு, கசகசா விதையில் போதை தராத அளவுக்கு மிக மிகக் குறைவு.

M. Thevis, G. Opfermann, and W Schanzerand  போன்ற விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு செய்து, அதன் முடிவை Journal of Analytical Toxicology என்ற இதழில் வெளியிட்டார்கள். அதில் வியாபரத்திற்காக விற்கப்படும் ஒரு கிராம் கசகாசாவில் இந்த மார்பின் அளவு 0.5 மைக்ரோகிராம் முதல் 10 மைக்ரோ கிராம்.  ஒரு கசகசா சேர்க்கப்பட்ட உணவில், ஒரு சில மைக்ரோகிராம் மார்பின் தான் இருக்கும்.

மருந்தாக விற்கப்படும் மார்பினில், வலி நிவாரணத்திற்காக ஒரு முறை எடுக்கப்படும் டோஸில் 5000 முதல் 30000  மைக்ரோகிராம் மார்பின் இருக்கும். எனவே, மார்பின் மருந்தின் விளைவு பெற, ஒரு மனிதன் 500 முதல் 60000 கிராம் கசகசா ஒரே முறையில் சாப்பிட்டால் தான் அந்த மருந்தின் விளைவு வரும். இந்த அளவுக்கு எந்த உணவிலும் கசகசா சேர்க்கவே முடியாது. இது கிட்டத்தட்ட 1 முதல் 130 பவுண்ட் கசகசா சாப்பிடுவதற்கு சமம். இவ்வளவு கசகசா ஒரே முறையில் சாப்பிடுவது சாத்தியமே இல்லை. கற்பனைக்கும் எட்டாதது. உணவில் தெளிக்கப்படும் கசகசா விதையால், மார்பினின் எந்த மருத்துவ சக்தியையும் தரமுடியாது என்னும் போது, போதை தர வாய்ப்பே இல்லை.

எனினும் போதையைக் கண்டறிய சிறுநீர் டெஸ்டுக்குச் செல்லும் விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் இந்த டெஸ்டுக்கு முந்திய தினம் கசகசாவைத் தவிர்ப்பது நல்லது. மருந்துக்காக மாத்திரை மற்றும் ஊசி மூலம் மார்பின் உட்கொள்ளும் பொது, மூளை நரம்பு மண்டலத்தில் வேலை செய்து, உடனடி வலி நிவாரணம் மற்றும் தூக்கத்தை தருகிறது. போதைக்காக அதிக அளவில் உட்கொள்ளும்போது போதை களிப்பு, போதைக்கு அடிமையாதல் உண்டாகிறது.

(மாற்றுக் கருத்துக்கள் உரிய ஆதாரங்களுடன் வரவேற்கப்படுகிறது

Monday, December 25, 2017

கிறிஸ்மஸ் விருந்து கூடுமா?

கிறிஸ்மஸ் விருந்து கூடுமா?

கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிறகு கிறிஸ்தவ நண்பர் ஒரு விருந்துக்கு அழைத்திருந்தார். அந்த விருந்தில் ஆல்கஹால் உள்ள பானத்தை யாரும் அருந்தவில்லை. அங்கு வழங்கப்பட்ட மற்ற உணவு வகைகள் ஹலாலா? ஹராமா?

எஸ்.நிஜாமுத்தீன்

பதில் :

இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட உணவுகளை பிறமதத்தினர் நமக்கு அளித்தால் அதை உண்பது தவறல்ல. எனினும் இஸ்லாம் தடை செய்த பொருட்களை அவர்கள் தந்தால் அவற்றை நாம் உண்ணக் கூடாது.

பன்றி இறைச்சியும், அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத பிராணியின் இறைச்சியும், தானாக செத்தவைகளும், இரத்தமும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக பூஜை செய்யப்பட்ட பொருட்களும் நமக்கு ஹராம் என்று குர்ஆன் கூறுகின்றது.

சிலைகளுக்கோ, அல்லாஹ் அல்லாத அவர்களின் கடவுள்களுக்குப் படைக்கப்பட்ட பொருட்களை பண்டிகைக் காலங்களிலோ, அல்லது மற்ற காலங்களிலோ தந்தால் அவற்றை உண்ணக் கூடாது.

وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرْ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ(121)6

அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றம்.

திருக்குர்ஆன் 6 : 121

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும், வலியச் செல்லாதவராகவும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 16:115

அறுக்கப்பட்டவை என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் அரபு மூலத்தில் உஹில்ல'' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். சிலைகளுக்கு முன்னால் மந்திரங்கள் சொல்லி பூஜிக்கப்பட்டவைகளையும், மந்திரங்கள் சொல்லி அறுக்கப்பட்டவைகளையும் இந்தச் சொல் எடுத்துக் கொள்ளும்.

எனவே பூஜை செய்து தரும் பொருட்கள், அல்லாஹ் அல்லாத பெயர் கூறி அறுக்கப்பட்டவை, மது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் இவற்றை அவர்கள் தரும் போது வாங்கக் கூடாது. மற்றவற்றைப் பெற்றுக் கொள்வதில் தவறேதும் இல்லை.

உங்கள் நண்பர் உங்களுக்கு அளித்த விருந்தில் இஸ்லாம் தடை செய்த மேற்கண்ட பொருட்கள் வழங்கப்பட்டிருந்தால் அது ஹராமாகும். இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட பொருளை அவர் வழங்கியிருந்தால் அது ஹலாலாகும். அதை உண்பது தவறல்ல.

உணவைப் பொருத்தவரை அது நமக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பதை நாம் கவனிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

உணவு ஹலாலாக இருந்தால் அதை நாம் உண்ணலாம்.

அது போல் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் உணவு ஹலாலாக இருப்பதுடன் விருந்து வழங்கப்படும் சபையும் மார்க்கத்துக்கு முரணானவை இடம் பெறாமல் இருக்க வேண்டும். மார்க்கத்துக்கு முரணான காரியங்கள் நடக்கும் சபைகளில் நாம் கலந்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

அங்கு வழங்கப்படும் உணவு ஹராம் என்பதற்காக அல்ல. மாறாக ஒரு தீமை நடக்கக் கண்டால் அதைப் புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக அதைப் புறக்கணிக்க வேண்டும்.

صحيح البخاري

2613 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ أَبُو جَعْفَرٍ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَتَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْتَ فَاطِمَةَ، فَلَمْ يَدْخُلْ عَلَيْهَا، وَجَاءَ عَلِيٌّ، فَذَكَرَتْ لَهُ ذَلِكَ، فَذَكَرَهُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنِّي رَأَيْتُ عَلَى بَابِهَا سِتْرًا مَوْشِيًّا»، فَقَالَ: «مَا لِي وَلِلدُّنْيَا» فَأَتَاهَا عَلِيٌّ، فَذَكَرَ ذَلِكَ لَهَا، فَقَالَتْ: لِيَأْمُرْنِي فِيهِ بِمَا شَاءَ، قَالَ: «تُرْسِلُ بِهِ إِلَى فُلاَنٍ، أَهْلِ بَيْتٍ بِهِمْ حَاجَةٌ»

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (தமது மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்து உள்ளே நுழையவில்லை. (திரும்பிப் போய் விட்டார்கள்.) (இதற்கிடையில் அங்கே) அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் விஷயத்தைச் சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் அது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ;நான் ஃபாத்திமாவின் வீட்டு வாசலில் பல வண்ணச் சித்திரங்கள் வரையப்பட்ட திரைச் சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும், இந்த (ஆடம்பரமான) உலகத்திற்கும் என்ன தொடர்பு? (அதனால் தான் திரும்பி வந்து விட்டேன்)'' என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் சென்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், அந்தத் திரைச் சீலையின் விஷயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தாம் விரும்புவதை எனக்குக் கட்டளையிடட்டும். (அதன்படியே நான் நடந்து கொள்கிறேன்)'' என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அதை இன்னாரின் வீட்டாரிடம் அனுப்பி விடு. அவர்களுக்குத் தேவையுள்ளது'' என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 2613

ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டில் நபிகள் நாயகம் கண்ட வண்ணத்திரை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதல்ல. தடை செய்யப்பட்டதாக இருந்தால் மற்றவருக்கு அதைக் கொடுக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி இருக்க மாட்டார்கள். ஆனாலும் அது ஆடம்பரமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தோன்றியுள்ளது. அதன் காரணமாக பெற்ற மகளின் இல்லத்துக்குள் நுழையாமல் திரும்பி விட்டார்கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டில் உள்ள உணவு ஹராம் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புறக்கணிக்கவில்லை. மாறாக ஆடம்பரம் என்று தோன்றிய காரணத்துக்காகத் தான் புறக்கணித்துள்ளனர். அப்படியானால் மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட காரியங்கள் நடக்கும் சபைக்கு நாம் எப்படிச் செல்லலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விஷயம் அளவுக்கு அதிகமான பகட்டாகத் தென்பட்டால் அதையும் புறக்கணிக்க வேண்டும் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.

திருக்குர்ஆன் 4:140

ஒரு சபையில் அல்லாஹ்வின் கட்டளை மீறப்படுகிறது. இதன் மூலம் அல்லாஹ்வின் வசனங்கள் கேலி செய்யப்படுகிறது என்றால் அந்தச் சபைகளில் நாம் அமரவே கூடாது. அவ்வாறு அமர்ந்தால் நாம் அவர்களைப் போல் இறைவனால் கருதப்படுவோம் என்ற எச்சரிக்கை காரணமாக சில நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க வேண்டும். அவர்கள் தரும் உணவு ஹராம் என்பதற்காக அல்ல.

صحيح مسلم

186 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ كِلاَهُمَا عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ – وَهَذَا حَدِيثُ أَبِى بَكْرٍ – قَالَ أَوَّلُ مَنْ بَدَأَ بِالْخُطْبَةِ يَوْمَ الْعِيدِ قَبْلَ الصَّلاَةِ مَرْوَانُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ الصَّلاَةُ قَبْلَ الْخُطْبَةِ. فَقَالَ قَدْ تُرِكَ مَا هُنَالِكَ. فَقَالَ أَبُو سَعِيدٍ أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الإِيمَانِ ».

உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அதைக் கையால் தடுக்கட்டும். அதற்கு இயலாவிட்டால் தனது நாவால் தடுக்கட்டும். அதற்கும் இயலாவிட்டால் தனது உள்ளத்தால் தடுக்கட்டும். (அதாவது அதை உள்ளத்தால் வெறுக்கட்டும்.) இது தான் ஈமானில் கடைசி நிலையாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல் : முஸ்லிம்

மனதால் வெறுப்பது அந்தச் சபையைப் புறக்கணிப்பதன் மூலம் தான் உறுதியாகும். அதில் கலந்து கொண்டாலோ,  அங்கு போய் சாப்பிட்டாலோ தீய காரியம் நடக்கும் போது செய்ய வேண்டிய குறந்தபட்ச எதிர்ப்பைக் கூட தெரிவிக்கவில்லை என்பதே பொருளாகும். சிறிதளவும் அவருக்கு ஈமான் இல்லை என்பது மேற்கண்ட நபிமொழியில் இருந்து தெரிகிறது.

உங்கள் கிறித்தவ நண்பர் அளித்த விருந்தில் மதுபானம் பரிமாறப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளீர்கள். அப்படியானால் அந்தச்  சபைக்கு நீங்கள் போகாமல் இருந்திருக்க வேண்டும். அப்படி போனதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடிக் கொள்ளுங்கள்!

Source : https://onlinepj.com/கிறிஸ்மஸ்-விருந்து-கூடும/12652

பித்அத்_நிகழ்ச்சி_நடக்கும்_வீட்டிலிருந்து_வரும்_உணவை_சாப்பிடலாமா

பித்அத்_நிகழ்ச்சி_நடக்கும்_வீட்டிலிருந்து_வரும்_உணவை_சாப்பிடலாமா?

வரதட்சணை மற்றும் பித்அத்தான திருமணங்கள் நடைபெறும் வீடுகளிலிருந்து நமது வீட்டிற்கு உணவு வந்தால் சாப்பிடலாம் என்கிறீர்கள்!  இதே அடிப்படையில் பெண் பிள்ளை சடங்கு, கத்னா, திருமண நாள், வளை காப்பு என பித்அத் செய்யும் வீடுகளிலிருந்து நமது வீட்டுக்கு வரும் உணவை (பூஜிக்கப்படாத நிலையில்) சாப்பிடலாமா? விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது எனும் போது அந்த உணவு வீட்டுக்கு வந்தாலும் சாப்பிடக் கூடாது என்று தானே கூற வேண்டும்?

#பதில்

#உணவு_ஹராமில்லை. #சபை_தான்_ஹராம். #எனவே_சாப்பிடலாம்

ஒரு உணவைச் சாப்பிடக் கூடாது என்று கூறுவதாக இருந்தால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ தான் கூற வேண்டும். அல்லாஹ்வோ, நபி (ஸல்) அவர்களோ ஹராமாக்காத ஒன்றை நாமாக ஹராம் என்று கூறுவது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடும் செயலாகும். இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

விருந்துக்கு அழைக்கப்படும் இடத்தில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடைபெற்றால் அந்த விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று நாம் கூறுகின்றோம். இது அந்த விருந்தில் வழங்கப்படும் உணவு ஹராம் என்பதற்காக அல்ல! அந்த நிகழ்ச்சி மார்க்கத்திற்கு முரணாக இருப்பதால் அங்கு செல்வது தடுக்கப்பட்டது என்ற அடிப்படையில் தான் இவ்வாறு கூறுகிறோம். இதையும் நாம் சுயமாகச் சொல்லவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியுள்ளார்கள்.

நான் உணவைத் தயார் செய்து நபி (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். என் வீட்டில் உருவப் படங்கள் இருந்ததைக் கண்டு திரும்பி விட்டார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: இப்னுமாஜா (3360)

தீமை நடக்கும் ஒரு இடத்திற்குச் செல்லக் கூடாது என்பதால் அங்கு வழங்கப்படும் உணவு ஹராமாகி விடாது. ஒரு இடத்தில் பன்றி இறைச்சி அல்லது பூஜை செய்யப்பட்ட உணவுகளைக் கொண்டு விருந்து வழங்கப்படுகின்றது என்றால் அந்த உணவே தடுக்கப்பட்ட உணவாகும்.

ஆனால் வரதட்சணை, கத்னா, வளைகாப்பு போன்ற தீமைகள் நடக்கும் இடங்களில் இது போன்ற ஹராமான உணவு வகைகள் வழங்கப் படுவதில்லை. இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் விருந்துக்கு அழைக்கப்பட்ட போது அங்கு உருவப்படங்கள் இருந்ததால் திரும்பிச் சென்றார்கள். இந்த அடிப்படையில் வரதட்சணை, சடங்கு, கத்னா போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லக் கூடாது; அங்கு நடக்கும் விருந்துகளில் கலந்து கொள்ளக் கூடாது என்கிறோம்.

ஆனால் அந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் வீடுகளிலிருந்து உணவுப் பொருள் வரும் போது அதை உண்ணக் கூடாது என்று கூறுவதாக இருந்தால் அதற்கு மார்க்கத்தில் தெளிவான ஆதாரம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அல்லாஹ் ஹலாலாக்கிய உணவை நாம் ஹராமாக்கிக் கொள்வது போன்றாகி விடும். எனவே தான் இந்த உணவுகளைச் சாப்பிடுவதற்குத் தடையில்லை என்று கூறுகிறோம்.

அதே சமயம், இது போன்ற உணவுகளைத் தருபவர்களிடம் குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியின் தீமை பற்றி மார்க்க அடிப்படையில் விளக்குவது நமது கடமையாகும்.

“பூஜையோ, புனஸ்காரமோ செய்த பின் சாதாரண பொருட்களும் புனிதப் பொருட்களாக மாறிவிடும்’ என்ற பிற மத மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப மவ்லிது, பாத்திஹா ஓதப்பட்ட பின் சாதாரண உணவும் “தபர்ருக்’ (பிரசாதம்) என்று கருதப்படுவதால் அவ்வாறான உணவுகள் ஹராமாகும். அந்த உணவுகளை வீட்டுக்குக் கொடுத்து விட்டாலும் உண்ணக்கூடாது.