பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Tuesday, April 13, 2021

துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்

*துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்❓*

*துன்பங்கள் வரும் வேளையில் ஒரு முஃமினுடைய உள்ளம் எப்படி இருக்க வேண்டும்❓*

என்பதற்கு நபிகளாரின் உதாரணம் அழகிய சான்றாகும். எல்லா மரங்களுக்கும் கோடை காலத்தில் இலை உதிர் காலம் உண்டு. அந்தக் காலத்தில், தன் இலைகளை உதிரச் செய்கின்றன. ஆனால் பேரீச்ச மரம் மட்டும் எந்தக் காலத்திலும் இலைகளை உதிரச் செய்வதில்லை. இதைப் போன்று தான் எவ்வளவு துன்பமான நேரம் வந்தாலும் துவண்டு விடாமல் மன உறுதியோடு அதை எதிர் கொள்ள வேண்டும்.

*இறை நம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர் பயிருக்கு ஒப்பானதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும் வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும்* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: கஅப் பின் மாலிக் (ரலி)
நூல்: *புகாரீ (5643)*

அல்லாஹ்வை நம்பியவன் அவனுக்கு எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் அந்த நேரத்தில் கவலை கொள்வான் ஆனால் அதனால் உள்ளம் தளர்ந்து தவறான முடிவை எடுக்க மாட்டான்.

*முஃமினுடைய காரியம் ஆச்சரியத்தை அளிக்கிறது. அவனுடைய அனைத்துக் காரியங்களும் நல்லதாகவே அமைகின்றன. இந்த நிலை முஃமினைத் தவிர வேறு எவருக்கும் கிடைப்பதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியான நிலை ஏற்பட்டால் அவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நன்மையாக அமைந்து விடுகிறது. அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் பொறுமையைக் கடைபிடிக்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையாக அமைகிறது* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷுஹைப் (ரலி)
நூல்: *முஸ்லிம் (5318)*

*நமக்கு ஏற்படும் சோதனைகள் நமது நன்மைக்கே* என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

*யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை சோதனைக்கு உள்ளாக்குகின்றான்* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: *புகாரீ (5645)*

மேலும் *நமக்கு ஏற்படும் ஒவ்வொரு துன்பமும் நமது பாவங்களை அழிக்கிறது* என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

*ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உட்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: *புகாரீ (5641)*

*இறைவனால் தேர்தெடுக்கப்பட்ட நபி (ஸல்) அவர்கள் கூட துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள்* என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றது போல் அல்லாஹ் கூலியையும் கொடுக்கிறான்.

நபி (ஸல்) அவர்கள் காய்ச்சல் கண்டு சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது அவர்களிடம் நான் சென்று அவர்களை(ப் பணிவோடு) தொட்டேன். அப்போது நான் *தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்ளே!* என்றேன். 

நபி (ஸல்) அவர்கள் *ஆம் உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று (நான் ஒருவனே அடைகிறேன்)’ என்றார்கள். நான் ‘(இத்துன்பத்தின் காரணமாக) உங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்குமா?* என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் *ஆம். ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும் அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக) மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை* என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரலி)
நூல்: *புகாரீ (5667)*

எனவே எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் இறைவனைப் பற்றி தவறாக நினைக்காமல் பொறுமை மேற்கொண்டு துன்பங்களை ஈமானிய வலிமையுடன் எதிர் கொண்டு இறையருளைப் பெறுவோமாக!
———————-

பர்ளு தொழுகையை மட்டும் தொழுதால் போதுமா?

💐நாம் ஐந்து வேளை தொழுகையை நிறைவேற்றும் போது அவசர வேலையின் காரணமாக பர்ளு தொழுகையை மட்டும் தொழுதால் போதுமா?

*இப்படித் தொழுதால் அந்தத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுமா?* விளக்கம் தரவும்.

நஜ்த் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் தலை பரட்டையாக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவருடைய குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. 

நபி (ஸல்) அவர்களின் அருகில் வந்ததும் *இஸ்லாத்தைப் பற்றி கேட்டார்*. அப்போது நபி (ஸல்) அவர்கள், *இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளை தொழுகைகள்* என்றார்கள். 

உடனே அவர், *அத்தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது* என் மீது கடமை உண்டா? என்றார். அதற்கு அவர்கள், *நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை* என்றார்கள்.

அடுத்து, *ரமலான் மாதம் நோன்பு* நோற்பதும் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், *அதைத் தவிர வேறு ஏதேனும்* (நோன்பு) என் மீது கடமை உண்டா? என்றார். அதற்கு அவர்கள், *நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை;* என்றார்கள்.

அவரிடம் நபி (ஸல்) அவர்கள் *ஸகாத்* பற்றியும் சொன்னார்கள். அதற்கு அவர், *அதைத் தவிர வேறு* (ஸகாத்) ஏதும் என் மீது கடமையா? என்றார். அதற்கு அவர்கள் *நீராக விரும்பிச் செய்தாலே தவிர வேறு தர்மங்கள் கடமை இல்லை* என்றார்கள். 

உடனே அம்மனிதர், *அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன், குறைக்கவும் மாட்டேன்* என்று கூறியவாறு திரும்பிச் சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், *இவர் கூறியதற்கு ஏற்ப நடந்து கொண்டால் வெற்றி அடைந்து விட்டார்* என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி)
நூல்: *புகாரி 46, 1891, 2678, 6956*

இந்த ஹதீஸில் *கடமையைத் தவிர வேறு எதையும் செய்ய மாட்டேன் என்று கூறிய ஒருவரை வெற்றியாளர்* என நபி (ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்து, *கடமையான வணக்கங்களை ஒருவர் நிறைவேற்றுவதே மறுமையில் வெற்றி பெறுவதற்குப் போதுமானது* என்பதை அறிய முடிகின்றது.

எனினும் கடமையான வணக்கங்களை நிறைவேற்றும் போது மனிதர்கள் என்ற முறையில் குறைபாடுகள் ஏற்படலாம். இந்தக் குறைபாடுகள் அல்லாஹ்விடத்தில் நம்மைக் குற்றவாளிகளாக ஆக்கி விடக் கூடாது. எனவே *கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளுக்கு ஒரு பரிகாரம் தேவைப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த வழியில் உபரியான வணக்கங்கள் புரிவது கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளை ஈடுசெய்வதாக* அமைந்துள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நிச்சயமாக ஓர் அடியான் *மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றித் தான் விசாரிக்கப்படுவான்*. அதை அவன் நிறைவாகச் செய்திருந்தால் (அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும்.) அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி *என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள்* என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: *நஸயீ 463*

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரை பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன். *நான் என் அடியான் மீது கடமையாக்கி இருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும். எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன்*. 

நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன். அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன். *முஃமினுடைய உயிரைக் கைப்பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை.*

 (ஏனெனில்) என் அடியான் மரணத்தை வெறுக்கிறான். நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: *புகாரி 6502*

*உபரியான வணக்கங்கள் புரிவது இறைவனிடம் நெருக்கத்தை அதிகப்படுத்தி நமது தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்வதற்கு வழி வகுக்கும்* என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.

கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளை உபரியான வணக்கங்கள் நீக்கி விடுவதுடன் இறைவனிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையாகவும் அமைந்துள்ளன.

எனவே கடமையான தொழுகைகளுடன் இயன்ற வரை உபரியான தொழுகைகளையும் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.
————————

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

ரமளானில் ஷைத்தான் விலங்கிடப்படுகிறானா❓

**ரமளானில் ஷைத்தான் விலங்கிடப்படுகிறானா❓
——————————————————
*ரமழான் மாதத்தில் சைத்தான் விலங்கிடபட்டு * விடுகிறான்... 

ஆனாலும் ஏனைய மாதங்களில் உள்ளது போலவே இப்போது 

*வஸ்வாஸ் வருகிறது எப்படி?*

*ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1899)

 
ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப் படுகின்றன.

*இதன் கருத்து என்ன?* 

ரமலான் மாதம் வந்து விட்டால் *அன்றைய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா? அல்லது ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா?* என்பன போன்ற சிந்தனை இந்த செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம். ஆனால் *அந்த ஹதீஸ்களின் கருத்து இவை அல்ல!*


*“ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன”* என்பதன் கருத்து, ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான்.

மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.


இந்த கருத்தை *முஸ்லிம் (1957வது) அறிவிப்பில் “ரமலான் வந்துவிட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன”* என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக் கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகிறது.

*ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்* என்றால் ஷைத்தான்கள் தங்கள் வேலைகளை *இம்மாதத்தில் சரிவர செய்ய முடியாது, ஷைத்தான்களின் செயல்களை முறியடிக்கக்கூடிய வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான்.*

*இம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள் அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல!* ஏனெனில் நபி (ஸல்) அவர்களே ரமலான் மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

*யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை* என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

*நூல்: புகாரீ 1903*


இந்த நபிமொழியில் நோன்புக் காலங்களில் ஷைத்தானின் வேலைகளும் இருக்க வாய்ப்பு உண்டு என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் *நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு வைத்துக் கொண்டு ஒரு நபித்தோழர் உடலுறவு கொண்டதும் (பார்க்க புகாரீ 1936) இக்கருத்தை உறுதி செய்கிறது.*
________

மக்களே! ஸகாத் யாருக்குரியது?*⁉️

🗣️*மக்களே! ஸகாத் யாருக்குரியது?*⁉️

💰 💰 💰 💰 💰 💰 💰 💰 💰

🗣️*மக்களே! இந்தத் பதிவில் ஸகாத்தைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள் யார்? என்பதை நாம் விரிவாகக் காண இருக்கின்றோம்.*❗

💰திருக்குர்ஆன் 9:60 வசனத்தில் ஸகாத் வழங்கப் படுவதற்குத் தகுதியானவர்களாக எட்டு வகையினரை அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

🗣️*அவர்கள்: 1. யாசிப்பவர்கள்.*❗ 

🗣️*2. ஏழைகள்.*❗ 

🗣️*3. ஸகாத்தை வசூல் செய்பவர்கள்.*❗ 

🗣️*4. உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள்.*❗ 

🗣️*5. அடிமைகளை விடுதலை செய்வதற்கு.*❗

🗣️*6. கடன் பட்டவர்கள்.*❗ 

🗣️*7. அல்லாஹ்வின் பாதையில் செலவிடுதல்.*❗

🗣️*8. நாடோடிகள். ஆகியோராவார்கள்.*❗

💰🗣️*யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை (களை விடுதலை செய்வதற்)கும், கடன் பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். 

🗣️*இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன் 

அல்குர்ஆன் 9:60

💰மேலும் நபியவர்களும் ஸகாத்தைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள் யார் என்பதைத் தெளிவுபடுத்தி யுள்ளார்கள். 

🗣️*இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 

💰நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு (ஆளுநராக) அனுப்பினார்கள். 

💰அப்போது அவரிடம், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; நான் அல்லாஹ்வின் தூதர் என்ற உறுதி மொழியின்பால் அவர்களை அழைப்பீராக! 

💰இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! 

💰இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதற்காக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி (1395)

💰செல்வந்தர்களிடம் பெற்று ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். 

💰ஏழைகள் என்றால் தேவையுடையவர்கள் என்று பொருளாகும். 

💰மேற்கண்ட 9:60 வசனத்தில் கூறப்பட்டவர்களில் அனைவருமே தேவையுடையவர்களாகத் தான் உள்ளனர். 

💰அதன் காரணமாகத் தான் நபியவர்கள் பொதுவாக செல்வந்தர்களிடம் பெற்று ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். 

🗣️*யாசிப்பவர்களுக்கும் ஏழைகளுக்கும் வித்தியாசம்*❗

💰மேற்கண்ட 9:60 வது வசனத்தில் யாசிப்பவர்கள் என்பதற்கு அரபியில் "ஃபுகரா'' என்ற சொல் இடம் பெற்றுள்ளது. 

💰இது "ஃபகீர்'' என்ற சொல்லின் பன்மையாகும். "ஃபகீர்'' என்ற சொல்லிற்கு தேவையுடையவன் என்பது நேரடிப் பொருளாகும். 

💰ஏழைகள் என்பதற்கு அரபி மூலத்தில் "மஸாகீன்'' என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இது "மிஸ்கீன்'' என்ற சொல்லின் பன்மையாகும்.

💰மிஸ்கீன் என்றால் யார் என்பதை நபியவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள். 

🗣️*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*❗ 

💰ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்கடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில், அவன் (தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு) தன்மானத்துடன் நடந்து கொள்வான். 

💰நீங்கள் விரும்பினால், "அவர்கள் மக்கடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்க மாட்டார்கள்'' எனும் (இந்த 2:273வது) இறை வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 

நூல்: புகாரி (4539)

🗣️*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*❗ 

💰ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில் அவன் தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள எந்தச் செல்வத்தையும் பெற்றிருக்க மாட்டான்; பிறரும் அவனது நிலையை அறிந்து தர்மம் செய்ய மாட்டார்கள், தானும் வலியச் சென்று கேட்கமாட்டான். 

💰(இத்தகையவனே உண்மையான ஏழையாவான்.)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 

நூல்: புகாரி (1479)

💰மேற்கண்ட ஹதீஸ்களில் ஏழை என்பதற்கு அரபி மூலத்தில் மிஸ்கீன் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. அதாவது மிஸ்கீன் என்பவன் தன்னுடைய வறுமை நிலையை யாரிடமும் வெளிப்படுத்தாமல், பிறரிடம் யாசகமாகக் கேட்பதற்கு வெட்கப்பட்டு, தன்மானத்துடன் வாழ்பவராவார். 

💰இவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஸகாத்தை வழங்குவது முஃமின்கள் மீது கடமையாகும்.

💰ஆனால் ஃபகீர் என்பவரும் வறுமை நிலையில் உள்ளவர் தான். ஆனால் இவர்கள் தங்களின் நிலையை வெளிப்படுத்தி உதவி கேட்பார்கள். 

💰அல்லது அவர்களின் வறிய நிலைமை வெளிப் படையாகத் தெரியும். 

💰ஒருவர் இந்நிலைக்கு உள்ளாகும் போது அவனது தனது நிலைமையை வெளிப்படுத்தி ஸகாத்தைப் பெறுவது மார்க்கத்தில் குற்றமாகாது.

🗣️*செல்வந்தன் என்றால் யார்?*⁉️

💰தன்னுடைய உழைப்பின் மூலம் தனது மற்றும் தன்னுடைய குடும்பத்தின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்பவர்கள் அனைவரும் செல்வந்தர் ஆவார்கள். 

💰இவர்கள் அனைவரும் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்கு அதிகமாக ஸகாத் நிறைவேற்ற வேண்டிய அளவிற்கு செல்வத்தைப் பெற்றிருந்தால் அவர்கள் கண்டிப்பாக அதனை நிறைவேற்ற வேண்டும்.

🗣️*செல்வந்தர்கள் ஸகாத் பெறுவது கூடாது*❗

🗣️*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*❗ 

💰செல்வந்தனுக்கும், தெளிவான அறிவுள்ள, ஊனமில்லாத திடகாத்திரமானவனுக்கும் ஸகாத்தைப் பெறுவது ஹலாலாகாது. 

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) 

நூல்: திர்மிதி (589)

💰இரண்டு மனிதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தர்மப் பொருளிலிருந்து கேட்டு வந்தனர். 

💰நபியவர்கள் அந்த இருவரின் மீதும் பார்வையை (மேலும் கீழுமாகப்) பார்த்தார்கள். 

💰அந்த இருவரையும் திடகாத்திரமானவர்களாகக் கண்டார்கள். பிறகு நீங்கள் இருவரும் விரும்பினால் உங்களுக்கு நான் வழங்குகிறேன். 

💰ஆனால் இதில் செல்வந்தருக்கும், சம்பாதிக்கும் வலிமை பெற்றவருக்கும் எந்த பாத்தியதையும் கிடையாது என்று கூறினார்கள்.

நூல்: அஹ்மத் (18001)

💰செல்வ நிலையில் உள்ளவர்கள் பின்வரும் ஐந்து நிலைகளில் இருந்தால் அவர்கள் ஸகாத் பொருளைப் பெற்று, பயன்படுத்திக் கொள்ளலாம்.

🗣️*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*❗ 

💰செல்வந்தனுக்கு ஸகாத்தைப் பெறுவது ஹலாலாகாது. ஐந்து நபர்களைத் தவிர. 

🗣️*1. அதனை வசூல் செய்யக் கூடியவர்கள்.*❗ 

🗣️*2. தன்னுடைய செல்வத்தைக் கொண்டு ஸகாத் பொருளை விலைக்கு வாங்கியவர்*❗ 

🗣️*3. கடன் பட்டவர்கள்*❗ 

🗣️*4. அல்லாஹ்வின் பாதையில் போரிடக் கூடியவர்கள்*❗ 

🗣️*5. ஸகாத்திலிருந்து ஒரு ஏழைக்கு தர்மமாக வழங்கப் படுகிறது; அவன் அதிலிருந்து ஒரு செல்வந்தருக்கு அன்பளிப்பாக வழங்குவது.*❗

அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) 

நூல்: அஹ்மத் (11555)

💰மேற்கண்ட ஹதீஸிலிருந்து செல்வந்தர்களாக உள்ளவர்கள் ஸகாத்தை வசூல் செய்கின்ற பொறுப்பில் இருந்தால் அவர்களுக்கு அதிலிருந்து வழங்கலாம் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. 

💰மேலும் ஸகாத்தாக உள்ள ஒரு பொருளை ஒரு செல்வந்தர் விலைக்கு வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

💰செல்வந்தராக உள்ள நிலையில் கடன்பட்டவர்கள் யார் என்பதை பற்றிய விபரம் பின்னால் வருகிறது.

💰மேலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடக் கூடியவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் அவர்களுக்கு ஸகாத்திலிருந்து வழங்குவது கூடும். 

💰9:60 வசனத்தில் ஸகாத்தை அல்லாஹ்வுடைய பாதையில் செலவிட வேண்டும் என்று வந்துள்ளது. 

💰அல்லாஹ்வுடைய பாதை என்பது இறைவனுடைய பாதையில் சத்தியக் கொள்கையை நிலை நாட்டு வதற்காகப் போரிடக் கூடியவர்கள் என்பது தான் விளக்கமாகும்.

💰சிலர் 9:60 வசனத்தில் கூறப்பட்டுள்ள அல்லாஹ்வுடைய பாதை எது என்பதைச் சரியாக விளங்காமல் அனைத்து நல்ல காரியங்களுக்குச் செலவிடுவதும் அல்லாஹ்வுடைய பாதை தான்;. 

💰எனவே நம்முடைய ஸகாத்தை பள்ளிவாசல் கட்டுவதற்கும், பணக்கார மாணவர்களும் சேர்ந்து பயிலும் மதரஸாக்களுக்கும், எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் பயன்படுத்தலாம் எனக் கூறுகின்றனர். 

💰இது அறியாமையாகும். 9:60 வசனத்தில் அல்லாஹ் 8 வகையினரைக் குறிப்பிடுகின்றான். 

💰இதில் 7 சாராருக்குக் கொடுத்தாலும் அல்லாஹ்வுடைய பாதையில் செலவிடுவது தான். 

💰இதில் இறைவன் அல்லாஹ்வுடைய பாதை என்று ஏன் தனியாகக் கூற வேண்டும். அல்லது அல்லாஹ்வுடைய பாதையில் ஸகாத்தைச் செலவிடுங்கள் என்று இறைவன் பொதுவாகக் கூறியிருக்கலாம். 

💰ஏன் 8 வகையாகப் பிரிக்க வேண்டும்.

💰இதிலிருந்தே மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்ட அல்லாஹ்வுடைய பாதை என்பது இறைவனுடைய பாதையில் சத்தியக் கொள்கையை நிலை நாட்டு வதற்காகப் போரிடுபவர்களை மட்டுமே குறிக்கும். 

💰அதைத் தான் மேற்கண்ட நபிமொழியும் தெளிவுபடுத்துகிறது. 

💰மேலும் மதரஸாக்களில் படிக்கின்ற ஏழை மாணவர்களுக்காக மட்டும் செலவிட வேண்டும் என்று குறிப்பிட்டு ஸகாத்தை வழங்குவதில் தவறில்லை. 

💰ஏழை ஒருவர் தனக்கு ஸகாத்திலிருந்து வழங்கப்பட்ட பொருளை செல்வந்தருக்கு அன்பளிப்பாக வழங்கினால் அந்த செல்வந்தர் அதனை பெற்றுக் கொள்ளலாம்.

💰நபியவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தர்மப் பொருள்களைப் பெறுவது ஹராமாகும். 

💰ஆனால் பரீரா (ரலி) அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட தர்மப் பொருளை நபியவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய போது நபியவர்கள் அதனைச் சாப்பிட்டுள்ளார்கள்.

💰நபி (ஸல்) அவர்களுக்கு இறைச்சி ச்காண்டு வரப்பட்டது. அப்போது நான் "இது பரீராவுக்கு தர்மம் செய்யப்பட்ட பொருள்'' என்றேன். 

💰அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இது பரீராவுக்கு தர்மமாகும்; நமக்கு அன்பளிப்பாகும்'' என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி (1493)

🗣️*கடன் பட்டவர்கள்*❗

💰ஒருவர் தன்னுடைய வறுமையின் காரணமாக கடன் வாங்கியிருந்தால் அவர் ஏழை என்பதில் வந்து விடுவார். 

💰அவருக்கு ஸகாத்திலிருந்து வழங்கி அவருடைய கடனை அடைப்பதற்கு உதவி செய்ய வேண்டும்.

💰மேலும் செல்வந்தர்கள் கடன்பட்டிருந்தாலும் அவர்களுடைய கடனை அடைப்பதற்காக ஸகாத்திலிருந்து வழங்கலாம் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். 

💰செல்வந்தர்கள் கடன் பட்டால் அவர்களுடைய செல்வத்திலிருந்து அடைக்க வேண்டியது தானே, எதற்காக அவர்களுக்கு ஸகாத்திலிருந்து வழங்க வேண்டும்? என்ற சந்தேகம் ஏற்படலாம்.

💰செல்வந்தர்கள் கடன் பட்டால் அவர்களுக்கு ஸகாத்திலிருந்து வழங்கலாம் என்பது செல்வந்தர்கள் தம்முடைய சுய தேவைக்காகப் பெற்ற கடன் அல்ல. 

💰மாறாகப் பொது விஷயத்திற்காக ஒன்றைப் பொறுப் பேற்கும் போது அதில் கடன் ஏற்பட்டால் அதைப் பொறுப்பேற்றவர் தன்னுடைய செல்வத்திலிருந்து தான் அடைக்க வேண்டும் என்பது கிடையாது. 

💰ஸகாத் பொருளைப் பெற்றும் அவர் அந்தக் கடனை அடைக்கலாம். 

💰இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். 

💰கபீஸா பின் முகாரிக் அல்ஹிலாலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

💰நான் (மற்றொருவர் செலுத்த வேண்டிய) ஓர் இழப்பீட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏதேனும் கேட்பதற்காகச் சென்றேன். 

💰அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தர்மப் பொருட்கள் நம்மிடம் வரும் வரை இங்கேயே இருங்கள். அதில் ஏதேனும் உங்களுக்குத் தரச் சொல்கிறோம்'' என்று கூறினார்கள். 

🗣️*பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:*❗

💰கபீஸா! மூன்று பேருக்கு மட்டுமே யாசிக்க அனுமதி உண்டு. ஒருவர் மற்றவரது ஈட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டவர். 

💰அவர் அத்தொகையை (உரியவரிடம் ஒப்படைப்பதற்காக அதைப்) பெறுகின்ற வரை யாசிக்கலாம். பிறகு (யாசிப்பதை) நிறுத்திக் கொள்ள வேண்டும். 

💰மற்றொருவர் (இயற்கைச்) சேதம் ஏற்பட்டு செல்வங்களை இழந்தவர். அவர் வாழ்க்கையின் அடிப்படையை' அல்லது வாழ்க்கையின் அவசியத் தேவையை' அடைந்து கொள்ளும் வரை யாசிக்கலாம். 

💰இன்னொருவர் வறுமைக்கு ஆட்பட்டவர். அவருடைய கூட்டத்தாரில் (அவரைப் பற்றி) விவரம் தெரிந்த மூவர் முன் வந்து, "இன்ன மனிதர் வறுமைக்கு ஆட்பட்டுள்ளார்'' என்று (சாட்சியம்) கூறுகின்றனர் என்றால், அவர் வாழ்க்கையின் அடிப்படையை' அல்லது வாழ்க்கையின் அவசியத் தேவையை' அடைகின்ற வரை யாசிப்பது அவருக்குச் செல்லும். 

💰கபீஸா! இவையன்றி மற்ற யாசகங்கள் யாவும் தடை செய்யப்பட்டவையே (ஹராம்) ஆகும். (இம்மூன்று காரணங்களின்றி ஒருவர் யாசித்துச் சாப்பிட்டால்) அவர் தடை செய்யப்பட்டதையே (ஹராம்) சாப்பிடுகிறார்.

நூல்: முஸ்லிம் 1730 (தமிழாக்கம் எண்: 1887)

💰மற்றவருக்காகப் பொறுப்பேற்ற ஒரு செல்வந்தர் அதனை நிறைவேற்றுவதற்காக தர்மப் பொருளை பெற்றுக் கொள்ளலாம் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம். 

💰🗣️*ஸகாத்தை வசூலிப்பவர்கள்*❗

💰உரியவர்களிடமிருந்து ஸகாத்தைப் பெற்று, அதைப் பாதுகாத்து, உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகப் பணியாற்றுகின்ற அனைவரும் ஸகாத்தை வசூலிப்பவர்களில் அடங்குவர். 

💰இவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் இவர்களுக்கு ஸகாத்திலிருந்து வழங்க வேண்டும்.

💰இதன் அடிப்படையில் தான் நற்காரியங்களுக்காக வசூல் செய்பவர்களுக்கு கமிஷன் வழங்கப்படுகிறது. 

💰சில சகோதரர்கள் கமிஷன் பெறுபவர்களை ஏதோ அநியாயமாகப் பறித்துச் சாப்பிடுபவர்களைப் போல் கருதுகின்றனர். இது தவறாகும். 

💰நற்காரியங்களுக்காகத் தன்னுடைய நேரங்களையும், காலங்களையும் செலவிட்டு அரும்பாடு பட்டு வசூல் செய்பவர்களுக்கு வழங்கினால் தான் நற்பணிகள் தொடர்ந்து நடைபெறும். 

💰அல்லாஹ்வே வழங்குமாறு கூறியிருப்பதினால் அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது நாம் விளங்கிக் கொள்ளலாம். 

💰ஸகாத்தை வசூல் செய்பவர்கள் எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்பட்டால் பெற்றுக் கொள்ளலாம்.

🗣️*அப்துல்லாஹ் பின் சஅதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:*❗

💰நான் உமர் (ரலி) அவர்கடம் அவர்களது ஆட்சிக் காலத்தின் போது சென்றேன். 

💰அப்போது அவர்கள் என்னிடம், "நீங்கள் மக்கள் (நலப்) பணிகள் சிலவற்றுக்குப் பொறுப்பேற்றிருப்பதாகவும், அதற்காக ஊதியம் தரப்பட்டால் அதை நீங்கள் வெறுப்பதாகவும் எனக்குத் தகவல் வந்ததே! (உண்மைதானா?)'' என்று கேட்டார்கள். 

💰அதற்கு நான் ஆம்' என்றேன். உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் எந்த நோக்கத்தில் இப்படிச் செய்கிறீர்கள்?'' என்று கேட்க, நான், "என்னிடம் பல குதிரைகளும் பல அடிமைகளும் உள்ளனர். 

💰நான் நல்ல நிலையில் தான் இருக்கிறேன். ஆகவே, என் ஊதியம் முஸ்லிம்களுக்கு தர்மமாக இருக்கட்டும் என்று நான் விரும்புகின்றேன்'' என்று பதிலத்தேன். 

💰உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அப்படிச் செய்யாதீர்கள். ஏனென்றால், நீங்கள் விரும்பியபடியே நானும் விரும்பி வந்தேன். 

💰அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு (மக்கள் நல நிதியிலிருந்து) நன்கொடை வழங்குவார்கள். நான், "என்னைவிட அதிகத் தேவை உடையோருக்கு இதைக் கொடுங்கள்'' என்று சொல்லி வந்தேன். 

💰இறுதியில் ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், (நன்கொடைப்) பொருள் ஒன்றை எனக்கு அத்த போது, நான், "என்னை விட அதிகத் தேவை உடையோருக்கு இதை வழங்குங்கள்'' என்று சொன்னேன். 

💰நபி (ஸல்) அவர்கள், "(முதலில்) இதை வாங்கி உங்களுக்கு உடைமையாக்கிக் கொள்ளுங்கள். பிறகு, (தேவைப்பட வில்லை யென்றால்,) தர்மம் செய்து விடுங்கள். 

💰இந்தச் செல்வத்திலிருந்து எது நீங்கள் எதிர் 
பார்க்காமலும் நீங்களாகக் கேட்காமலும் உங்களுக்கு வந்ததோ அதை (மறுக்காமல்) வாங்கிக் கொள்ளுங்கள். 

💰அப்படி எதுவும் வரவில்லை யென்றால் நீங்களாக அதைத் தேடிச் செல்லாதீர்கள்'' என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (7163)

💰வசூல் செய்பவர்கள் தம்மை வசூல் செய்வதற்கு யார் நியமித்தார்களோ அவர்களிடமிருந்து தான் பெற்றுக் கொள்ள வேண்டும். 

💰எவ்வித மோசடியும் செய்து விடக் கூடாது. ஸகாத் பொருளை உரியவர்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதற்காகப் பணியாற்றுபவர் அதனை முறையாகச் செய்தால் அவருக்கும் தர்மம் செய்த கூலி கிடைக்கும். 

🗣️*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*❗

💰முஸ்லிமான, நம்பிக்கைக்குரிய பாதுகாவலன், தான் ஏவப்பட்ட முறையில் முழுமையாக - நிறைவாக, நல்ல முறையில் மனப்பூர்வமாகத் தான் ஏவப்பட்டபடி, ஏவப்பட்டவருக்குத் தர்மம் செய்தால் அவனும் தர்மம் செய்தவர்களில் ஒருவனாவான்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)

நூல்: புகாரி (1438)

💰மேலும் வசூல் செய்பவர் தமக்கு முறையாக வழங்கப் பட்ட கூலிக்கு மேல் அதிலிருந்து எடுத்தால் அவர் மோசடியாளராவார்.

🗣️*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*❗ 

💰நாம் ஒருவரை ஒரு பணியைச் செய்வதற்காக நியமிக்கின்றோம். அவருக்கு அழகிய முறையில் கூலியும் வழங்கி விடுகின்றோம். 

💰அதற்கு பிறகு அவர் (அதிலிருந்து) எடுத்துக் கொள்வது மோசடியாகும்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி) 

நூல்: அபூதாவூத் (2554)

🗣️*அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:*❗

💰அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அஸ்த்' எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (ஸகாத்' வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். 

💰அந்த அதிகாரி தமது பணியை முடித்துக் கொண்டு நபியவர்கடம் திரும்பி வந்து, "அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பப்பாக வழங்கப்பட்டது'' என்று கூறினார்.

💰நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பப்பு வழங்கப் படுகிறதா இல்லையா என்று பாரும்!'' என்று கூறினார்கள்.

💰பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாலை தொழுகைக்குப் பிறகு எழுந்து நின்று, ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனை அவனுக்குரிய பண்புகளைக் கூறி போற்றிப் புகழ்ந்த பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: 

💰பின்னர், அந்த அதிகாரிக்கு என்ன ஆயிற்று? அவரை நாம் (ஸகாத் வசூலிக்க) அதிகாரியாக நியமித்தோம். அவரோ நம்மிடம் வந்து "இது உங்கள் அதிகாரத்திற்குட்பட்டது. 

💰இது எனக்கு அன்பப்பாக வழங்கப்பட்டது'' என்று கூறுகிறார். 

அவர் தம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பப்பு வழங்கப் படுகிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! 

💰(இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கல் யாரேனும் அந்த(ப் பொதுச்) சொத்திலிருந்து முறை கேடாக எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நால் தமது பிடரியில் சுமந்து கொண்டு நிச்சயம் வருவார். 

💰அது ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது பசுவாக இருந்தால் அது கத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; 

💰அது ஆடாக இருந்தால் அது கத்திக்கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்'' என்று கூறிவிட்டு "(இறைவா! உனது செய்தியை மக்கடம்) நான் சேர்த்துவிட்டேன்'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி (6636)

🗣️*உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள்!*❗

💰ஸகாத்தைப் பெற தகுதியானவர்களில் உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள் என்ற பிரிவினரும் அடங்குவார்கள். 

💰உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள் என்ற பிரிவினரில் முஸ்லிம் அல்லாதவர்களும், புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் அடங்குவர்.

உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள் என்று அல்லாஹ் கூறியதிலிருந்தே இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட வேண்டிய முஸ்லிம் அல்லாதவர்களும் அடங்குவார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

💰புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு ஸகாத் நிதியிலிருந்து வழங்கும் போது அவர்களின் உள்ளம் மேலும் இஸ்லாத்தின் பால் ஈர்ப்பு கொள்வதற்கு அது காரணமாக அமையும்.

🗣️*அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:*❗ 

💰நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பொருள் அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) நான்கு பேருக்கிடையே பங்கிட்டார்கள். 

💰மேலும் "இவர்களுடைய உள்ளங்களை நான் இணக்கமாக்குகிறேன்'' என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (4667)

🗣️*அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:*❗ 

💰ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) இரு மலைகளுக்கிடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை (நன்கொடையாகக்) கேட்டார். 

💰நபி (ஸல்) அவர்கள் அவற்றைக் கொடுத்தார்கள். அவர் தம் சமுதாயத்தாரிடம் சென்று, "என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். 

💰அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மத் அவர்கள் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்'' என்று கூறினார். 

நூல்: முஸ்லிம் 4275 (தமிழாக்கம் எண்: 4630)

🗣️*இப்னுஸ் ஸபீல் - நாடோடிகள்!*❗

💰நாடோடிகள் என்று தமிழாக்கம் செய்த இடத்தில் இப்னுஸ் ஸபீல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

💰இச்சொல்லின் நேரடிப் பொருள் பாதையின் மகன்' என்பதாகும்.

💰ஒருவனிடம் ஒரு செயல் அதிக அளவில் காணப்படும் போது அச்செயலுடன் மகன் என்பதைச் சேர்த்துக் கூறுவது அரபுகளின் வழக்கம்.

💰எப்போது பார்த்தாலும் போரில் பங்கெடுப்பவன் போரின் மகன்' என்று குறிப்பிடப்படுவது வழக்கம். எப்போது பார்த்தாலும் ஊர் ஊராகச் சென்று கொண்டிருப்பவன் பாதையின் மகன்' என்று குறிப்பிடப்படுவான்.

💰சாதாரணமாகப் பயணம் செய்பவர்கள் இச்சொல்லால் குறிக்கப்பட மாட்டார்கள். பயணமே வாழ்க்கையாக மாறியவர்கள் தான் இச்சொல்லால் குறிப்பிடப்படுவர். 

💰எனவே நாடோடிகள் என்பது இச்சொல்லுக்கு நெருக்கமான சொல் எனலாம்.

💰வீடு வாசல் ஏதுமில்லாமல் ஊர் ஊராகச் சுற்றக் கூடியவர்களுக்கு ஸகாத் நிதியை வழங்கி அவர்களை நிலையாக இருக்கச் செய்வதற்கு ஸகாத் நிதியைச் செலவிடலாம்.

💰இச் சொல்லுக்கு பிரயாணி, வழிப்போக்கன் என்று பலரும் பொருள் கொண்டுள்ளனர். 

💰பயணம் செய்வதே ஸகாத் பெறுவதற்கான தகுதியா எனக் கேட்டால் பயணத்தில் சென்று அனைத்தையும் இழந்து விட்டு சொந்த ஊருக்குச் செல்ல முடியாதவன் என்று இதற்கு விளக்கம் தருகிறார்கள்.

💰இவர்கள் வாதப் படி பயணிகள் என்ற அர்த்தம் மட்டுமே இச்சொல்லுக்கு உண்டு. 

💰அனைத்தையும் இழந்து சொந்த ஊர் செல்ல இயலாதவன் என்பது இச்சொல்லில் இல்லாத - கற்பனை செய்யப்பட்ட விளக்கமாகும்.

💰மேலும் சாதாரணப் பயணியைக் குறிக்க வேறு சொல் உள்ளது. பாதையின் மகன் என்பது எப்போது பார்த்தாலும் பயணத்தில் இருக்கும் நாடோடியையே குறிக்கும். 

💰நாடோடி என்று பொருள் கொண்டால் நாடோடியாக இருப்பதே ஸகாத் பெறுவதற்கான தகுதியாகும் என்பது ஏற்கத் தக்கதாகவும் உள்ளது.

💰பயணத்தில் சென்று அனைத்தையும் இழந்தவன் என்பவன் ஃபகீர் - தேவையுள்ளவன் என்ற வகையில் தானாக அடங்கி விடுவான். 

💰இத்தகையோரை உள்ளடக்கவே ஏழை என்றும் தேவையுள்ளவன் என்றும் இரண்டு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

💰🗣️*அடிமைகளை விடுதலை செய்வதற்கும் ஸகாத்திலிருந்து செலவிடலாம்.*❗ 

💰🗣️*ஆனால் தற்போது உலக நாடுகள் எதிலும் அடிமை முறை கிடையாது.*❗ 

💰🗣️*இஸ்லாம் கூறும் போதனைகள் அனைத்தும் அடிமைத் தளைகளை கட்டவிழ்க்கும் வண்ணமே அமைந்துள்ளன.*❗

Saturday, December 19, 2020

நபியின் பெயருடன் ஸலவாத் கூறுவது பற்றி?

*நபியின் பெயருடன் ஸலவாத் கூறுவது பற்றி* ❓

*நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரை உச்சரிக்கும் போது கட்டாயம் ஸலவாத் கூற வேண்டுமா❓*

நபியவர்களின் பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் உச்சரிப்பவரும், அதைக் கேட்பவரும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டும் என்ற கருத்து பரவலாக மக்களிடம் இருக்கின்றது. இந்தக் கருத்துக்கு பின்வரும் ஹதீஸ் தான் ஆதாரமாகக் கூறப்படுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

*ஒருவனிடம் என்னைப் பற்றிக் கூறப்பட்டு அவன் என் மீது ஸலவாத்துச் சொல்லவில்லையென்றால் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும். ஒருவன் ரமளான் மாதத்தை அடைந்து அவனது பாவங்கள் மன்னிக்கப்படாமல் அம்மாதம் கழிந்தால் அவனுடைய மூக்கும் மண்ணை கவ்வட்டும். ஒருவன் வயது முதிர்ந்த பெற்றோர்களைப் பெற்றும் அவனை அவர்கள் சொர்க்கத்திற்குள் கொண்டு செல்லவில்லையென்றால் அவனுடைய மூக்கும் மண்ணை கவ்வட்டும்.*

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : *திர்மிதீ 3468*

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

*ஒருவனிடம் என்னைப் பற்றி கூறப்பட்டு என் மீது அவன் ஸலவாத்துச் சொல்லவில்லையென்றால் அவனே கஞ்சனாவான்.*

அறிவிப்பவர் : அலீ பின் அபீ தாலிப் (ரலி)
நூல் : *திர்மிதீ 3469*

மேலுள்ள இரண்டு செய்திகளும் ஆதாரப்பூர்வமானவை. ஆனால் இந்த ஹதீஸ்களை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு முடிவெடுக்காமல் விரிவாக இதை ஆராய வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைக் கூறும் போதெல்லாம் ஸலவாத் கூற வேண்டும் என்ற கருத்துக்கு மாற்றமாக பல ஹதீஸ்கள் உள்ளன. அவற்றுக்கு முரண்படாத வகையில் தான் இதற்கு நாம் பொருள் கொள்ள வேண்டும்.

தமது பெயரை உச்சரிக்கும் வகையில் எத்தனையோ வாசகங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். இவற்றை நாம் கூறும் போது ஸலவாத்தையும் சேர்த்துக் கூற வேண்டும் என அவர்கள் நமக்கு கற்றுக் கொடுக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:

*இஸ்லாம்  ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது.*

1. *அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (நபி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது.*

2. *தொழுகையை நிலைநிறுத்துவது.*

3. *ஸகாத் வழங்குவது.*

4. *ஹஜ் செய்வது.*

5. *ரமளானில் நோன்பு நோற்பது.*

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : *புகாரி 8*

ஒருவர் முஸ்லிமாக வேண்டுமென்றால் அவர் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று மொழிவது கட்டாயம் என்று மேற்கண்ட செய்தி கூறுகிறது. இந்தக் கலிமாவை கற்றுக் கொடுத்த நபியவர்கள் முஹம்மது என்ற பெயரை உச்சரிக்கும் போது ஸலவாத்தைச் சேர்க்காமல் கூறுவதையே கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

நபியவர்களின் பெயரை உச்சரிக்கும் எல்லா தருணங்களிலும் தம் மீது ஸலவாத்துக் கூறுவது அவசியம் என்றால் அதை இங்கே நபியவர்கள் விட்டிருக்க மாட்டார்கள்.

நாம் கலிமா மொழியும் போதும், மற்றவருக்கு கலிமாவைச் சொல்லிக் கொடுக்கும் போதும் அன்ன முஹம்மதன் என்று தான் கூறுகிறோம். அன்ன முஹம்மதன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கூறுவதில்லை.

பாங்கு முடிந்த பிறகு நபியவர்களுக்காக நாம் கேட்க வேண்டிய பிரார்த்தனையில் முஹம்மது என்ற பெயரை மட்டுமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இங்கே ஸலவாத்தைச் சேர்க்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யார் பாங்கைக் கேட்கும் போது *அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஅவதித் தாம்மத்தி, வஸ்ஸலாத்தில் காயிமத்தி, ஆத்தி முஹம்மதனில் வசீலத்த, வல்ஃபளீலா. வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தா* என்று  பிரார்த்திக்கிறாரோ, அவருக்கு மறுமை நாளில் என் பரிந்துரை கிடைக்கும்.

துஆவின் பொருள்:

*(இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலை நிற்கும் தொழுகைக்கும் அதிபதியே! முஹம்மத் (நபி) அவர்களுக்கு உரித்தான உயரிடத்தையும் தனிச் சிறப்பையும் அவர்களுக்குத் தந்தருள்வாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்துள்ள உயர் அந்தஸ்திற்கு அவர்களை நீ அனுப்புவாயாக)*

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல் : *புகாரி 614*

இந்த துஆவில் ஆ(த்)தி முஹம்மதன் என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். ஆ(த்)தி முஹம்மதன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கற்றுத்தரவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

கப்ரில் ஒரு  இறைநம்பிக்கையாளர் எழுப்பி உட்கார வைக்கப்பட்டதும் அவரிடம் வானவர்கள் வருவார்கள்.  *அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் அவர்கள் அவனுடைய தூதராவார்கள்* என அவர் வானவர்களிடம் சாட்சியம் கூறுவார். *எவர் நம்பிக்கை கொள்கிறாரோ அவர்களை இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகின்றான்* (14:27) என இதைத் தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)
நூல் : *புகாரி 1369*

கப்ரில் விசாரிக்கப்படும் போது நல்லடியார் அன்ன முஹம்மதன் என்று கூறுவார் எனக் கூறப்பட்டுள்ளது. அன்ன முஹம்மதன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கூறுவதாகக் குறிப்பிடப்படவில்லை.

மேலும் நபியவர்களின் பெயரை உச்சரிக்கும் போதும், அதைச் செவியுறும் போதும் அவர்களின் மீது ஸலவாத்து கூற வேண்டும் என்ற நடைமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இருக்கவில்லை. இவ்வாறு செய்வது மார்க்கத்தில் இருக்குமேயானால் இதை நபியவர்களின் காலத்தில் நபித்தோழர்கள் புறக்கணித்து இருக்க மாட்டார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

முஹாஜிர்களும், அன்சாரிகளும் மதீனாவைச் சுற்றிலும் அகழ் தோண்டி மண்ணைத் தம் முதுகுகள் மீது சுமந்து, (வேறிடத்திற்குக்) கொண்டு செல்லத் தொடங்கினார்கள். அப்போது அவர்கள், *நாங்கள் உயிர் வாழும் காலமெல்லாம் அறப்போர் புரிந்து கொண்டிருப்போம் என்று முஹம்மத் அவர்களிடம் உறுதிமொழி கொடுத்திருக்கின்றோம்* என்று பாடலானார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், *இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை எதுவும் இல்லை. அன்சாரிகளுக்கும், முஹாஜிர்களுக்கும் உன் பரக்கத் எனும் அருளைக் கொடு* என்று (பாடலிலேயே) பதிலளித்தார்கள்.

நூல் : *புகாரி 2835*

பாயவூ முஹம்மதன் என்று மட்டுமே நபித்தோழர்கள் நபியவர்கள் முன்னிலையில் பாடியுள்ளனர்.

பாயவூ முஹம்மதன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று பாடவில்லை.

நபியவர்களும் அதைத் திருத்திக் கொடுக்கவில்லை. நபியவர்களின் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட நபித்தோழர் அபூபக்ர் அவர்கள் நபியவர்களின் பெயரைக் குறிப்பிடுகையில் ஸலவாத்துக் கூறவில்லை.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

(நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூபக்ர் (ரலி) அவர்கள் வெளியில் வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் மக்களிடம் (கோபமாகப்) பேசிக்கொண்டிருந்ததைக் கண்டதும் உமரை உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) மீண்டும் மறுக்கவே அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார்கள். உடனே மக்கள் உமர் (ரலி) பக்கமிருந்து அபூபக்ர் (ரலி) பக்கம் திரும்பிவிட்டனர். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் *உங்களில் யார் முஹம்மது அவர்களை வணங்கிக்கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்து விட்டார்கள். யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்; மரணிக்கவே மாட்டான். மேலும் அல்லாஹ் கூறுகிறான்: முஹம்மது தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் சென்று விட்டார்கள்;  அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி யாரேனும் கால் சுவடுகளின் வழியே திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்து விட முடியாது;  அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதி சீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்* (3:144) என்றார்கள்.

நூல் : புகாரி 1242

யாரேனும் முஹம்மதை வணங்கினால்….  என்று தான் அபூபக்ர் (ரலி) கூறினார்கள். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்தை வணங்கினால் என்று கூறவில்லை.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் நபியவர்களின் பெயரைக் குறிப்பிடும் போது ஸலவாத்துக் கூறவில்லை. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவறு என்று கூறவில்லை.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

*எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்? எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்* என்று என்னிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  *எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்?* என்று நான் கேட்டேன். அதற்கவர்கள், *என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும் போது  *முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக' என்று கூறுவாய்! என் மீது கோபமாய் இருந்தால், *இப்ராஹீம் அவர்களுடைய அதிபதி மீது சத்தியமாக* என்று கூறுவாய்* என்று சொன்னார்கள். நான், *அல்லாஹ்வின் மீதாணையாக! ஆம் (உண்மைதான்), அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களது பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன். (தங்கள் மீதன்று)* என்று கூறினேன்.

நூல் : *புகாரி 5228*

முஹம்மதின் இறைவன் என்று தான் ஆயிஷா (ரலி) கூறியுள்ளனர்.

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறைவன் என்று கூறவில்லை.

நபியவர்கள் காலத்தில் அவர்களின் பெயர் கூறப்பட்டால் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லும் வழக்கம் நபித்தோழர்களிடம் இருக்கவில்லை. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கண்டிக்கவில்லை என்பதற்கு மேலுள்ள செய்திகள் அனைத்தும் ஆதாரங்களாக உள்ளன. இன்னும் ஏராளமான ஆதாரங்கள் இதற்கு உள்ளன.

நபிமொழிகளை மொழிபெயர்க்கையில் நபியவர்களின் பெயர் வரும் போது (ஸல்) என்று மொழிபெயர்ப்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த வாசகம் அசலில் உள்ளதல்ல. நபி என்றும், அல்லாஹ்வின் தூதர் என்றும், முஹம்மது என்றும் மட்டுமே ஹதீஸ்களின் மூலத்தில் கூறப்பட்டுள்ள இடங்களில்  மொழிபெயர்ப்பாளர்கள் தாமாக (ஸல்) என்று சேர்த்து இது கட்டாயக் கடமை போல் ஆக்கிவிட்டார்கள்.

நபியவர்களின் பெயரைக் குறிப்பிடும் போது (ஸல்) என்று கூறும் வழக்கம் அண்மைக் காலத்தில் தான் அறிஞர்களிடம் ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறு எழுத வேண்டும் என்றோ, கூற வேண்டும் என்றோ மார்க்கம் நமக்குக் கட்டளையிடவில்லை.

அப்படியானால் நபிகள் (ஸல்) அவர்களைப் பற்றி நினைவூட்டப்பட்டால் அவர்கள் மீது ஸலாவத்துச் சொல்ல வேண்டும் என்ற கருத்தில் முன்பு நாம் எடுத்துக்காட்டிய இரு ஹதீஸ்களின் சரியான விளக்கம் எது என்ற கேள்வி எழுகிறது.

நபிகளின் பெயரைக் கூறும் போதெல்லாம் ஸலவாத் கூற வேண்டும் என்பது மேற்கண்ட இரு ஹதீஸ்களின் அர்த்தமில்லை. மாறாக எந்த இடத்தில் ஸலவாத் கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டி உள்ளார்களோ அந்த இடத்தில் அவர்களைப் பற்றிக் கூறப்படும் போது ஸலவாத் கூற வேண்டும் என்பதே இதன் சரியான பொருளாக இருக்க முடியும்.

தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் ஸலவாத் கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள். அதை நாம் செயல்படுத்தியும் வருகிறோம்.

இது ஸலவாத் கூறும் இடங்களில் ஒன்றாகும்.

அது போல் பாங்கு சொல்லி முடித்த பின் ஸலவாத் கூறுமாறு நபியவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என் மீது *ஸலவாத்* சொல்லுங்கள். ஏனெனில், என் மீது யார் ஒரு முறை *ஸலவாத்* சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள் புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் *வஸீலா* வைக் கேளுங்கள். *வஸீலா* என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்)  கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல் : *முஸ்லிம் 628*

பாங்கு கூறுபவர் அஷ்ஹது அன்ன முஹம்மதன் என்ற வாசகத்தை பாங்கில் கூறுவார். இவ்வாறு அவர் கூறும் போது நபியவர்களின் பெயரைக் கூறுவதால் அங்கே ஸலவாத்துச் சொல்ல வேண்டும் என்று நபியவர்கள் கூறவில்லை. பாங்கைச் செவியுறுபவர்கள் நபியவர்களின் பெயரைக் கேட்கும் போது நபியவர்கள் மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை.  மாறாக முஅத்தின் கூறுவதைப் போன்றே பாங்கைச் செவுயுறுபவரும் கூற வேண்டும் என்று கட்டளையிடுகிறார்கள். பாங்கு சொல்லி முடித்த பின்னர் ஸலவாத் கூற வேண்டும்.

நபிமார்களின் பெயரைக் கூறும் போது அலைஹிஸ்ஸலாம் என்று கூறுவதும்,

நபித்தோழர்களின் பெயரைக் கூறும் போது ரளியல்லாஹு அன்ஹு என்று கூறுவதும்,

மற்றவர்களுக்கு ரஹ்மதுல்லாஹி அலைஹி என்று கூறுவதும்

இது போன்றதாகும்.

அதாவது பிரார்த்தனை என்ற அடிப்படையில் இவ்வாறு கூறினால் தவறல்ல. இவ்வாறு கூறுவது மார்க்கத்தில் கட்டாயம் என்று கூறக் கூடாது.

ஒரு சபையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து பேசப்பட்டால் ஆயிரம் முறை பேசப்பட்டாலும் சபை முடிவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக ஸலவாத் எனும் துஆவை ஓதினால் அது போதுமானது.

ஒரு சபையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைக் கேட்டால் ஒரு தடவை ஸலவாத் கூறினால் போதுமானது என்பதைப் பின் வரும் ஹதீஸ்கள் தெளிவாகவும் குறிப்பிடுகின்றன.

*ஒரு கூட்டத்தினர் ஒரு சபையில் அமர்ந்து அதை விட்டுப் பிரிவதற்கு முன் அல்லாஹ்வை நினைவு கூராமலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறாமாலும் இருந்தால் அவர்கள் சொர்க்கம் சென்றாலும் இதனால் ஏற்பட்ட இழப்பை எண்ணி வருந்தாமல் இருக்க மாட்டார்கள்* என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்கள் : ஹாகிம் 10282

https://eagathuvam.com/நபியின்-பெயருடன்-ஸலவாத்/

Tuesday, November 3, 2020

கணவனின் தாய் விவாகரத்துச் செய் என்று சொன்னால் அதை ஏற்கலாமா

கணவனிடம் எந்தக் குறையும் சொல்ல முடியாதபடி நடக்கும் மனைவியை கணவனின் தாய் விவாகரத்துச் செய் என்று சொன்னால் அதை ஏற்கலாமா?

அபுதாஹிர்

பதில் :

நியாயமான காரணம் இல்லாமல் கணவன் மனைவியைப் பிரிப்பது இஸ்லாத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. இது ஷைத்தானுடைய செயல் என்றும், இறை மறுப்பாளர்களின் குணம் என்றும் மார்க்கம் கூறுகின்றது.

5032حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَاللَّفْظُ لِأَبِي كُرَيْبٍ قَالَا أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ إِبْلِيسَ يَضَعُ عَرْشَهُ عَلَى الْمَاءِ ثُمَّ يَبْعَثُ سَرَايَاهُ فَأَدْنَاهُمْ مِنْهُ مَنْزِلَةً أَعْظَمُهُمْ فِتْنَةً يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ فَعَلْتُ كَذَا وَكَذَا فَيَقُولُ مَا صَنَعْتَ شَيْئًا قَالَ ثُمَّ يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ مَا تَرَكْتُهُ حَتَّى فَرَّقْتُ بَيْنَهُ وَبَيْنَ امْرَأَتِهِ قَالَ فَيُدْنِيهِ مِنْهُ وَيَقُولُ نِعْمَ أَنْتَ قَالَ الْأَعْمَشُ أُرَاهُ قَالَ فَيَلْتَزِمُهُ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றவனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி) வந்து நான் இன்னின்னவாறு செய்தேன் என்று கூறுவான். அப்போது இப்லீஸ், (சொல்லிக் கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, நான் ஒரு மனிதனுக்கும், அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டு வைக்கவில்லை என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச் செய்து, நீதான் சரி என்று (பாராட்டிக்) கூறுவான்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம்

எனவே நியாயமின்றி கணவன் மனைவியைப் பிரிப்பது பெரும் குற்றமாகும். பாவமான காரியங்களைச் செய்யுமாறு பெற்றோர்கள் கூறினால் அதற்குப் பிள்ளைகள் கட்டுப்படக் கூடாது என மார்க்கம் கூறுகின்றது.

وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ (8) وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُدْخِلَنَّهُمْ فِي الصَّالِحِينَ (9)29

தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.

திருக்குர்ஆன் 29:8

உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.

திருக்குர்ஆன் 31:15

பெற்றோர்கள் தகுந்த காரணமின்றி மனைவியை தலாக் செய்யுமாறு கூறினால் மகன் அவர்களுக்குக் கட்டுப்பட்டு தம் மனைவியை தலாக் செய்யக் கூடாது. அது குற்றமாகும்.

திருமணத்தின் மூலம் பெண்கள் ஆண்களிடம் கடுமையான உடன்படிக்கை எடுத்துள்ளதாக அல்லாஹ் கூறுகிறான்.

{وَكَيْفَ تَأْخُذُونَهُ وَقَدْ أَفْضَى بَعْضُكُمْ إِلَى بَعْضٍ وَأَخَذْنَ مِنْكُمْ مِيثَاقًا غَلِيظًا (21)} [النساء: 21]

நீங்கள் ஒருவருடன் மற்றவர் கலந்து பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கை எடுத்துள்ள நிலையில் எப்படி அதை (மஹரை) நீங்கள் எடுத்துக் கொள்ள முடியும்?

திருக்குர்ஆன் 4:21

திருமணம் என்பது அவ்வளவு எளிதாக வெட்டி முறிக்கும் உறவு அல்ல என்பதை கடும் ஒப்பந்தம் என்ற சொல் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.

திருக்குர்ஆன் 4:19

தகாத நடத்தை இல்லாத வரை அவர்களுடன் இல்லறம் நடத்துங்கள் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் வழிகாட்டுகிறான்.

அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:35

தம்பதியர் பிரிந்து விடக் கூடிய நிலை ஏற்பட்டால் அதில் தலையிட்டு இணக்கம் ஏற்படுத்த குடும்பத்தினருக்கு அல்லாஹ் கட்டளயிடுகிறான். இதில் பெற்றோரும் அடங்குவார்கள்.

தம்பதிகள் இணைந்து வாழ்வதற்கு முயற்சியை மேற்கொள்ளக் கடமைப்பட்ட பெற்றோர் விவாகரத்து செய்ய வலியுறுத்துவது குற்றமாகும். அவர்களின் தவறான உத்தரவை நிறைவேற்றுவதும் குற்றமாகும்.

மேலும் யாருக்கும் அநீதி இழைக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். கணவனுக்குச் செய்யும் கடமையை மனைவி சரியாகச் செய்யும் போது அவளுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துவதுதான் திருமண ஒப்பந்த்த்தை நிறைவேற்றுவதாகும்

மனைவியிடம் விவாகரத்து செய்யும் அளவுக்கு காரணம் இல்லாத போது பெற்றோரோ, மற்றவரோ சொல்கிறார்கள் என்பதற்காக விவாக ரத்து செய்வது ஒப்பந்த மீறலாகும். அனீதி இழைப்பதாகும்.

மக்களுக்கு அநீதி இழைத்து நியாயமின்றி பூமியில் வரம்பு மீறுவோருக்கு எதிராகவே குற்றம் பிடிக்க வழி உண்டு. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

திருக்குர்ஆன் 42:42

அநீதி இழைத்து அல்லாஹ்வால் குற்றம் பிடிக்கும் நிலைக்கு ஆளாகிவிட வேண்டாம்.

பெற்றோர் சொல்லைக் கேட்டு மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்று கூறுவோர் பின்வரும் ஹதீஸை இதற்கு ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர்.

1110حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ أَنْبَأَنَا ابْنُ الْمُبَارَكِ أَنْبَأَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ ابْنِ عُمَرَ قَالَ كَانَتْ تَحْتِي امْرَأَةٌ أُحِبُّهَا وَكَانَ أَبِي يَكْرَهُهَا فَأَمَرَنِي أَبِي أَنْ أُطَلِّقَهَا فَأَبَيْتُ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ طَلِّقْ امْرَأَتَكَ رواه الترمذي

ஒரு பெண் எனக்கு மனைவியாக இருந்தாள். நான் அவளை நேசித்தேன். ஆனால் என் தந்தை (உமர்) அவளை வெறுத்தார். அவளை நான் தலாக் விட வேண்டும் என எனக்கு உத்தரவிட்டார். இதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை. நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இதைத் தெரிவித்த போது அவர்கள் அப்துல்லாஹ் பின் உமரே உனது மனைவியை நீ தலாக் செய்துவிடு என்றார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல் : திர்மிதீ

தக்க காரணம் இல்லாமல் விவாகரத்து செய்யக் கூடாது என்று சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தந்தை சொல்லி விட்டார் என்பதற்காக விவாகரத்து செய்யுமாறு கூறியிருக்க முடியாது. மார்க்கம் அனுமதித்த காரணம் தந்தையின் கோரிக்கையில் இருந்து அதை அறிந்த பின்னர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க முடியும். எந்த நியாயமான காரணமும் இல்லாமல் தந்தை சொல்லி விட்டார் என்பதற்காக ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள்.

இப்படித்தான் இந்த ஹதீஸைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்படி அறிவுரை சொல்லும் தாய் தனது மகளை மருமகன் பெற்றோர் சொல் கேட்டு விவாகரத்து செய்தால் அதை மனமுவந்து ஏற்பாரா? என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

Wednesday, October 28, 2020

மூன்று சிசுக்கள் இறந்துவிட்டால் தாய்க்கு சொர்க்கமா❓*

*மூன்று சிசுக்கள் இறந்துவிட்டால் தாய்க்கு சொர்க்கமா❓*

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து, 

*அல்லாஹ்வின் தூதரே! உங்கள் உரைகளை (பெண்கள் கேட்க முடியாதவாறு) ஆண்களே தட்டிச் சென்று விடுகின்றனர். ஆகவே நாங்கள் தங்களிடம் வந்து, அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக் கொடுத்ததிலிருந்து எங்களுக்கு நீங்கள் போதித்திட எங்களுக்கென ஒரு நாளை நிர்ணயித்து விடுங்கள்*!என்று கூறினார். 

நபி (ஸல்) அவர்கள், *இன்ன நாளில் இன்ன இடத்தில் நீங்கள் ஒன்று கூடுங்கள்* என்று சொன்னார்கள். அவ்வாறே பெண்கள் ஒன்று திரண்டனர். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்களிடம் சென்று, அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து போதித்தார்கள். 

பிறகு, *உங்களில் எந்தப் பெண் தனக்கு (மரணம் வரும்) முன்பாக தன் குழந்தைகளில் மூன்று பேரை இழந்து விடுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறி விடுவார்கள்* என்று கூறினார்கள். 

அப்போது அப்பெண்களில் ஒருவர் *அல்லாஹ்வின் தூதரே! இரண்டு குழந்தைகளை இழந்து விட்டாலும்* என்று கேட்டார். 

இதை அப்பெண் இரண்டு முறை திரும்பத் திரும்பக் கேட்க, *ஆம்! இரண்டு குழந்தைகளை இழந்து விட்டாலும் தான்* என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல்: *புகாரி 7310*

புகாரியின் 102 வது அறிவிப்பில் *பருவ வயதை அடையாத குழந்தைகளை..* என்று இடம் பெறுகின்றது. இந்த அறிவிப்புக்கள் ஆதாரப்பூர்வமானவை தான்.

*தான் மரணிப்பதற்கு முன் தனது குழந்தைகளை இழக்கும் பெண்ணுக்கு* என்று தான் மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. எனவே இது பிறந்த சிசுக்களையும் உள்ளடக்கும்.
———————————
*ஏகத்துவம்*