பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Saturday, December 19, 2020

நபியின் பெயருடன் ஸலவாத் கூறுவது பற்றி?

*நபியின் பெயருடன் ஸலவாத் கூறுவது பற்றி* ❓

*நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரை உச்சரிக்கும் போது கட்டாயம் ஸலவாத் கூற வேண்டுமா❓*

நபியவர்களின் பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் உச்சரிப்பவரும், அதைக் கேட்பவரும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டும் என்ற கருத்து பரவலாக மக்களிடம் இருக்கின்றது. இந்தக் கருத்துக்கு பின்வரும் ஹதீஸ் தான் ஆதாரமாகக் கூறப்படுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

*ஒருவனிடம் என்னைப் பற்றிக் கூறப்பட்டு அவன் என் மீது ஸலவாத்துச் சொல்லவில்லையென்றால் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும். ஒருவன் ரமளான் மாதத்தை அடைந்து அவனது பாவங்கள் மன்னிக்கப்படாமல் அம்மாதம் கழிந்தால் அவனுடைய மூக்கும் மண்ணை கவ்வட்டும். ஒருவன் வயது முதிர்ந்த பெற்றோர்களைப் பெற்றும் அவனை அவர்கள் சொர்க்கத்திற்குள் கொண்டு செல்லவில்லையென்றால் அவனுடைய மூக்கும் மண்ணை கவ்வட்டும்.*

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : *திர்மிதீ 3468*

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

*ஒருவனிடம் என்னைப் பற்றி கூறப்பட்டு என் மீது அவன் ஸலவாத்துச் சொல்லவில்லையென்றால் அவனே கஞ்சனாவான்.*

அறிவிப்பவர் : அலீ பின் அபீ தாலிப் (ரலி)
நூல் : *திர்மிதீ 3469*

மேலுள்ள இரண்டு செய்திகளும் ஆதாரப்பூர்வமானவை. ஆனால் இந்த ஹதீஸ்களை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு முடிவெடுக்காமல் விரிவாக இதை ஆராய வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைக் கூறும் போதெல்லாம் ஸலவாத் கூற வேண்டும் என்ற கருத்துக்கு மாற்றமாக பல ஹதீஸ்கள் உள்ளன. அவற்றுக்கு முரண்படாத வகையில் தான் இதற்கு நாம் பொருள் கொள்ள வேண்டும்.

தமது பெயரை உச்சரிக்கும் வகையில் எத்தனையோ வாசகங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். இவற்றை நாம் கூறும் போது ஸலவாத்தையும் சேர்த்துக் கூற வேண்டும் என அவர்கள் நமக்கு கற்றுக் கொடுக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:

*இஸ்லாம்  ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது.*

1. *அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (நபி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது.*

2. *தொழுகையை நிலைநிறுத்துவது.*

3. *ஸகாத் வழங்குவது.*

4. *ஹஜ் செய்வது.*

5. *ரமளானில் நோன்பு நோற்பது.*

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : *புகாரி 8*

ஒருவர் முஸ்லிமாக வேண்டுமென்றால் அவர் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று மொழிவது கட்டாயம் என்று மேற்கண்ட செய்தி கூறுகிறது. இந்தக் கலிமாவை கற்றுக் கொடுத்த நபியவர்கள் முஹம்மது என்ற பெயரை உச்சரிக்கும் போது ஸலவாத்தைச் சேர்க்காமல் கூறுவதையே கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

நபியவர்களின் பெயரை உச்சரிக்கும் எல்லா தருணங்களிலும் தம் மீது ஸலவாத்துக் கூறுவது அவசியம் என்றால் அதை இங்கே நபியவர்கள் விட்டிருக்க மாட்டார்கள்.

நாம் கலிமா மொழியும் போதும், மற்றவருக்கு கலிமாவைச் சொல்லிக் கொடுக்கும் போதும் அன்ன முஹம்மதன் என்று தான் கூறுகிறோம். அன்ன முஹம்மதன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கூறுவதில்லை.

பாங்கு முடிந்த பிறகு நபியவர்களுக்காக நாம் கேட்க வேண்டிய பிரார்த்தனையில் முஹம்மது என்ற பெயரை மட்டுமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இங்கே ஸலவாத்தைச் சேர்க்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யார் பாங்கைக் கேட்கும் போது *அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஅவதித் தாம்மத்தி, வஸ்ஸலாத்தில் காயிமத்தி, ஆத்தி முஹம்மதனில் வசீலத்த, வல்ஃபளீலா. வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தா* என்று  பிரார்த்திக்கிறாரோ, அவருக்கு மறுமை நாளில் என் பரிந்துரை கிடைக்கும்.

துஆவின் பொருள்:

*(இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலை நிற்கும் தொழுகைக்கும் அதிபதியே! முஹம்மத் (நபி) அவர்களுக்கு உரித்தான உயரிடத்தையும் தனிச் சிறப்பையும் அவர்களுக்குத் தந்தருள்வாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்துள்ள உயர் அந்தஸ்திற்கு அவர்களை நீ அனுப்புவாயாக)*

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல் : *புகாரி 614*

இந்த துஆவில் ஆ(த்)தி முஹம்மதன் என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். ஆ(த்)தி முஹம்மதன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கற்றுத்தரவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

கப்ரில் ஒரு  இறைநம்பிக்கையாளர் எழுப்பி உட்கார வைக்கப்பட்டதும் அவரிடம் வானவர்கள் வருவார்கள்.  *அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் அவர்கள் அவனுடைய தூதராவார்கள்* என அவர் வானவர்களிடம் சாட்சியம் கூறுவார். *எவர் நம்பிக்கை கொள்கிறாரோ அவர்களை இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகின்றான்* (14:27) என இதைத் தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)
நூல் : *புகாரி 1369*

கப்ரில் விசாரிக்கப்படும் போது நல்லடியார் அன்ன முஹம்மதன் என்று கூறுவார் எனக் கூறப்பட்டுள்ளது. அன்ன முஹம்மதன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று கூறுவதாகக் குறிப்பிடப்படவில்லை.

மேலும் நபியவர்களின் பெயரை உச்சரிக்கும் போதும், அதைச் செவியுறும் போதும் அவர்களின் மீது ஸலவாத்து கூற வேண்டும் என்ற நடைமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இருக்கவில்லை. இவ்வாறு செய்வது மார்க்கத்தில் இருக்குமேயானால் இதை நபியவர்களின் காலத்தில் நபித்தோழர்கள் புறக்கணித்து இருக்க மாட்டார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

முஹாஜிர்களும், அன்சாரிகளும் மதீனாவைச் சுற்றிலும் அகழ் தோண்டி மண்ணைத் தம் முதுகுகள் மீது சுமந்து, (வேறிடத்திற்குக்) கொண்டு செல்லத் தொடங்கினார்கள். அப்போது அவர்கள், *நாங்கள் உயிர் வாழும் காலமெல்லாம் அறப்போர் புரிந்து கொண்டிருப்போம் என்று முஹம்மத் அவர்களிடம் உறுதிமொழி கொடுத்திருக்கின்றோம்* என்று பாடலானார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், *இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை எதுவும் இல்லை. அன்சாரிகளுக்கும், முஹாஜிர்களுக்கும் உன் பரக்கத் எனும் அருளைக் கொடு* என்று (பாடலிலேயே) பதிலளித்தார்கள்.

நூல் : *புகாரி 2835*

பாயவூ முஹம்மதன் என்று மட்டுமே நபித்தோழர்கள் நபியவர்கள் முன்னிலையில் பாடியுள்ளனர்.

பாயவூ முஹம்மதன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று பாடவில்லை.

நபியவர்களும் அதைத் திருத்திக் கொடுக்கவில்லை. நபியவர்களின் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட நபித்தோழர் அபூபக்ர் அவர்கள் நபியவர்களின் பெயரைக் குறிப்பிடுகையில் ஸலவாத்துக் கூறவில்லை.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

(நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூபக்ர் (ரலி) அவர்கள் வெளியில் வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் மக்களிடம் (கோபமாகப்) பேசிக்கொண்டிருந்ததைக் கண்டதும் உமரை உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) மீண்டும் மறுக்கவே அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார்கள். உடனே மக்கள் உமர் (ரலி) பக்கமிருந்து அபூபக்ர் (ரலி) பக்கம் திரும்பிவிட்டனர். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் *உங்களில் யார் முஹம்மது அவர்களை வணங்கிக்கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்து விட்டார்கள். யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்; மரணிக்கவே மாட்டான். மேலும் அல்லாஹ் கூறுகிறான்: முஹம்மது தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் சென்று விட்டார்கள்;  அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி யாரேனும் கால் சுவடுகளின் வழியே திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்து விட முடியாது;  அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதி சீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்* (3:144) என்றார்கள்.

நூல் : புகாரி 1242

யாரேனும் முஹம்மதை வணங்கினால்….  என்று தான் அபூபக்ர் (ரலி) கூறினார்கள். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்தை வணங்கினால் என்று கூறவில்லை.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் நபியவர்களின் பெயரைக் குறிப்பிடும் போது ஸலவாத்துக் கூறவில்லை. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவறு என்று கூறவில்லை.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

*எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்? எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்* என்று என்னிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  *எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்?* என்று நான் கேட்டேன். அதற்கவர்கள், *என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும் போது  *முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக' என்று கூறுவாய்! என் மீது கோபமாய் இருந்தால், *இப்ராஹீம் அவர்களுடைய அதிபதி மீது சத்தியமாக* என்று கூறுவாய்* என்று சொன்னார்கள். நான், *அல்லாஹ்வின் மீதாணையாக! ஆம் (உண்மைதான்), அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களது பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன். (தங்கள் மீதன்று)* என்று கூறினேன்.

நூல் : *புகாரி 5228*

முஹம்மதின் இறைவன் என்று தான் ஆயிஷா (ரலி) கூறியுள்ளனர்.

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறைவன் என்று கூறவில்லை.

நபியவர்கள் காலத்தில் அவர்களின் பெயர் கூறப்பட்டால் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லும் வழக்கம் நபித்தோழர்களிடம் இருக்கவில்லை. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கண்டிக்கவில்லை என்பதற்கு மேலுள்ள செய்திகள் அனைத்தும் ஆதாரங்களாக உள்ளன. இன்னும் ஏராளமான ஆதாரங்கள் இதற்கு உள்ளன.

நபிமொழிகளை மொழிபெயர்க்கையில் நபியவர்களின் பெயர் வரும் போது (ஸல்) என்று மொழிபெயர்ப்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த வாசகம் அசலில் உள்ளதல்ல. நபி என்றும், அல்லாஹ்வின் தூதர் என்றும், முஹம்மது என்றும் மட்டுமே ஹதீஸ்களின் மூலத்தில் கூறப்பட்டுள்ள இடங்களில்  மொழிபெயர்ப்பாளர்கள் தாமாக (ஸல்) என்று சேர்த்து இது கட்டாயக் கடமை போல் ஆக்கிவிட்டார்கள்.

நபியவர்களின் பெயரைக் குறிப்பிடும் போது (ஸல்) என்று கூறும் வழக்கம் அண்மைக் காலத்தில் தான் அறிஞர்களிடம் ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறு எழுத வேண்டும் என்றோ, கூற வேண்டும் என்றோ மார்க்கம் நமக்குக் கட்டளையிடவில்லை.

அப்படியானால் நபிகள் (ஸல்) அவர்களைப் பற்றி நினைவூட்டப்பட்டால் அவர்கள் மீது ஸலாவத்துச் சொல்ல வேண்டும் என்ற கருத்தில் முன்பு நாம் எடுத்துக்காட்டிய இரு ஹதீஸ்களின் சரியான விளக்கம் எது என்ற கேள்வி எழுகிறது.

நபிகளின் பெயரைக் கூறும் போதெல்லாம் ஸலவாத் கூற வேண்டும் என்பது மேற்கண்ட இரு ஹதீஸ்களின் அர்த்தமில்லை. மாறாக எந்த இடத்தில் ஸலவாத் கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டி உள்ளார்களோ அந்த இடத்தில் அவர்களைப் பற்றிக் கூறப்படும் போது ஸலவாத் கூற வேண்டும் என்பதே இதன் சரியான பொருளாக இருக்க முடியும்.

தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் ஸலவாத் கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டுள்ளார்கள். அதை நாம் செயல்படுத்தியும் வருகிறோம்.

இது ஸலவாத் கூறும் இடங்களில் ஒன்றாகும்.

அது போல் பாங்கு சொல்லி முடித்த பின் ஸலவாத் கூறுமாறு நபியவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என் மீது *ஸலவாத்* சொல்லுங்கள். ஏனெனில், என் மீது யார் ஒரு முறை *ஸலவாத்* சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள் புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் *வஸீலா* வைக் கேளுங்கள். *வஸீலா* என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்)  கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல் : *முஸ்லிம் 628*

பாங்கு கூறுபவர் அஷ்ஹது அன்ன முஹம்மதன் என்ற வாசகத்தை பாங்கில் கூறுவார். இவ்வாறு அவர் கூறும் போது நபியவர்களின் பெயரைக் கூறுவதால் அங்கே ஸலவாத்துச் சொல்ல வேண்டும் என்று நபியவர்கள் கூறவில்லை. பாங்கைச் செவியுறுபவர்கள் நபியவர்களின் பெயரைக் கேட்கும் போது நபியவர்கள் மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை.  மாறாக முஅத்தின் கூறுவதைப் போன்றே பாங்கைச் செவுயுறுபவரும் கூற வேண்டும் என்று கட்டளையிடுகிறார்கள். பாங்கு சொல்லி முடித்த பின்னர் ஸலவாத் கூற வேண்டும்.

நபிமார்களின் பெயரைக் கூறும் போது அலைஹிஸ்ஸலாம் என்று கூறுவதும்,

நபித்தோழர்களின் பெயரைக் கூறும் போது ரளியல்லாஹு அன்ஹு என்று கூறுவதும்,

மற்றவர்களுக்கு ரஹ்மதுல்லாஹி அலைஹி என்று கூறுவதும்

இது போன்றதாகும்.

அதாவது பிரார்த்தனை என்ற அடிப்படையில் இவ்வாறு கூறினால் தவறல்ல. இவ்வாறு கூறுவது மார்க்கத்தில் கட்டாயம் என்று கூறக் கூடாது.

ஒரு சபையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து பேசப்பட்டால் ஆயிரம் முறை பேசப்பட்டாலும் சபை முடிவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக ஸலவாத் எனும் துஆவை ஓதினால் அது போதுமானது.

ஒரு சபையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைக் கேட்டால் ஒரு தடவை ஸலவாத் கூறினால் போதுமானது என்பதைப் பின் வரும் ஹதீஸ்கள் தெளிவாகவும் குறிப்பிடுகின்றன.

*ஒரு கூட்டத்தினர் ஒரு சபையில் அமர்ந்து அதை விட்டுப் பிரிவதற்கு முன் அல்லாஹ்வை நினைவு கூராமலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறாமாலும் இருந்தால் அவர்கள் சொர்க்கம் சென்றாலும் இதனால் ஏற்பட்ட இழப்பை எண்ணி வருந்தாமல் இருக்க மாட்டார்கள்* என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்கள் : ஹாகிம் 10282

https://eagathuvam.com/நபியின்-பெயருடன்-ஸலவாத்/

Tuesday, November 3, 2020

கணவனின் தாய் விவாகரத்துச் செய் என்று சொன்னால் அதை ஏற்கலாமா

கணவனிடம் எந்தக் குறையும் சொல்ல முடியாதபடி நடக்கும் மனைவியை கணவனின் தாய் விவாகரத்துச் செய் என்று சொன்னால் அதை ஏற்கலாமா?

அபுதாஹிர்

பதில் :

நியாயமான காரணம் இல்லாமல் கணவன் மனைவியைப் பிரிப்பது இஸ்லாத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. இது ஷைத்தானுடைய செயல் என்றும், இறை மறுப்பாளர்களின் குணம் என்றும் மார்க்கம் கூறுகின்றது.

5032حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَاللَّفْظُ لِأَبِي كُرَيْبٍ قَالَا أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ إِبْلِيسَ يَضَعُ عَرْشَهُ عَلَى الْمَاءِ ثُمَّ يَبْعَثُ سَرَايَاهُ فَأَدْنَاهُمْ مِنْهُ مَنْزِلَةً أَعْظَمُهُمْ فِتْنَةً يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ فَعَلْتُ كَذَا وَكَذَا فَيَقُولُ مَا صَنَعْتَ شَيْئًا قَالَ ثُمَّ يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ مَا تَرَكْتُهُ حَتَّى فَرَّقْتُ بَيْنَهُ وَبَيْنَ امْرَأَتِهِ قَالَ فَيُدْنِيهِ مِنْهُ وَيَقُولُ نِعْمَ أَنْتَ قَالَ الْأَعْمَشُ أُرَاهُ قَالَ فَيَلْتَزِمُهُ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றவனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி) வந்து நான் இன்னின்னவாறு செய்தேன் என்று கூறுவான். அப்போது இப்லீஸ், (சொல்லிக் கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, நான் ஒரு மனிதனுக்கும், அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டு வைக்கவில்லை என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச் செய்து, நீதான் சரி என்று (பாராட்டிக்) கூறுவான்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம்

எனவே நியாயமின்றி கணவன் மனைவியைப் பிரிப்பது பெரும் குற்றமாகும். பாவமான காரியங்களைச் செய்யுமாறு பெற்றோர்கள் கூறினால் அதற்குப் பிள்ளைகள் கட்டுப்படக் கூடாது என மார்க்கம் கூறுகின்றது.

وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ (8) وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُدْخِلَنَّهُمْ فِي الصَّالِحِينَ (9)29

தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.

திருக்குர்ஆன் 29:8

உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.

திருக்குர்ஆன் 31:15

பெற்றோர்கள் தகுந்த காரணமின்றி மனைவியை தலாக் செய்யுமாறு கூறினால் மகன் அவர்களுக்குக் கட்டுப்பட்டு தம் மனைவியை தலாக் செய்யக் கூடாது. அது குற்றமாகும்.

திருமணத்தின் மூலம் பெண்கள் ஆண்களிடம் கடுமையான உடன்படிக்கை எடுத்துள்ளதாக அல்லாஹ் கூறுகிறான்.

{وَكَيْفَ تَأْخُذُونَهُ وَقَدْ أَفْضَى بَعْضُكُمْ إِلَى بَعْضٍ وَأَخَذْنَ مِنْكُمْ مِيثَاقًا غَلِيظًا (21)} [النساء: 21]

நீங்கள் ஒருவருடன் மற்றவர் கலந்து பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கை எடுத்துள்ள நிலையில் எப்படி அதை (மஹரை) நீங்கள் எடுத்துக் கொள்ள முடியும்?

திருக்குர்ஆன் 4:21

திருமணம் என்பது அவ்வளவு எளிதாக வெட்டி முறிக்கும் உறவு அல்ல என்பதை கடும் ஒப்பந்தம் என்ற சொல் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.

திருக்குர்ஆன் 4:19

தகாத நடத்தை இல்லாத வரை அவர்களுடன் இல்லறம் நடத்துங்கள் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் வழிகாட்டுகிறான்.

அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:35

தம்பதியர் பிரிந்து விடக் கூடிய நிலை ஏற்பட்டால் அதில் தலையிட்டு இணக்கம் ஏற்படுத்த குடும்பத்தினருக்கு அல்லாஹ் கட்டளயிடுகிறான். இதில் பெற்றோரும் அடங்குவார்கள்.

தம்பதிகள் இணைந்து வாழ்வதற்கு முயற்சியை மேற்கொள்ளக் கடமைப்பட்ட பெற்றோர் விவாகரத்து செய்ய வலியுறுத்துவது குற்றமாகும். அவர்களின் தவறான உத்தரவை நிறைவேற்றுவதும் குற்றமாகும்.

மேலும் யாருக்கும் அநீதி இழைக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். கணவனுக்குச் செய்யும் கடமையை மனைவி சரியாகச் செய்யும் போது அவளுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துவதுதான் திருமண ஒப்பந்த்த்தை நிறைவேற்றுவதாகும்

மனைவியிடம் விவாகரத்து செய்யும் அளவுக்கு காரணம் இல்லாத போது பெற்றோரோ, மற்றவரோ சொல்கிறார்கள் என்பதற்காக விவாக ரத்து செய்வது ஒப்பந்த மீறலாகும். அனீதி இழைப்பதாகும்.

மக்களுக்கு அநீதி இழைத்து நியாயமின்றி பூமியில் வரம்பு மீறுவோருக்கு எதிராகவே குற்றம் பிடிக்க வழி உண்டு. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

திருக்குர்ஆன் 42:42

அநீதி இழைத்து அல்லாஹ்வால் குற்றம் பிடிக்கும் நிலைக்கு ஆளாகிவிட வேண்டாம்.

பெற்றோர் சொல்லைக் கேட்டு மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்று கூறுவோர் பின்வரும் ஹதீஸை இதற்கு ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர்.

1110حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ أَنْبَأَنَا ابْنُ الْمُبَارَكِ أَنْبَأَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ ابْنِ عُمَرَ قَالَ كَانَتْ تَحْتِي امْرَأَةٌ أُحِبُّهَا وَكَانَ أَبِي يَكْرَهُهَا فَأَمَرَنِي أَبِي أَنْ أُطَلِّقَهَا فَأَبَيْتُ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ طَلِّقْ امْرَأَتَكَ رواه الترمذي

ஒரு பெண் எனக்கு மனைவியாக இருந்தாள். நான் அவளை நேசித்தேன். ஆனால் என் தந்தை (உமர்) அவளை வெறுத்தார். அவளை நான் தலாக் விட வேண்டும் என எனக்கு உத்தரவிட்டார். இதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை. நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இதைத் தெரிவித்த போது அவர்கள் அப்துல்லாஹ் பின் உமரே உனது மனைவியை நீ தலாக் செய்துவிடு என்றார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல் : திர்மிதீ

தக்க காரணம் இல்லாமல் விவாகரத்து செய்யக் கூடாது என்று சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தந்தை சொல்லி விட்டார் என்பதற்காக விவாகரத்து செய்யுமாறு கூறியிருக்க முடியாது. மார்க்கம் அனுமதித்த காரணம் தந்தையின் கோரிக்கையில் இருந்து அதை அறிந்த பின்னர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க முடியும். எந்த நியாயமான காரணமும் இல்லாமல் தந்தை சொல்லி விட்டார் என்பதற்காக ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள்.

இப்படித்தான் இந்த ஹதீஸைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்படி அறிவுரை சொல்லும் தாய் தனது மகளை மருமகன் பெற்றோர் சொல் கேட்டு விவாகரத்து செய்தால் அதை மனமுவந்து ஏற்பாரா? என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

Wednesday, October 28, 2020

மூன்று சிசுக்கள் இறந்துவிட்டால் தாய்க்கு சொர்க்கமா❓*

*மூன்று சிசுக்கள் இறந்துவிட்டால் தாய்க்கு சொர்க்கமா❓*

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து, 

*அல்லாஹ்வின் தூதரே! உங்கள் உரைகளை (பெண்கள் கேட்க முடியாதவாறு) ஆண்களே தட்டிச் சென்று விடுகின்றனர். ஆகவே நாங்கள் தங்களிடம் வந்து, அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக் கொடுத்ததிலிருந்து எங்களுக்கு நீங்கள் போதித்திட எங்களுக்கென ஒரு நாளை நிர்ணயித்து விடுங்கள்*!என்று கூறினார். 

நபி (ஸல்) அவர்கள், *இன்ன நாளில் இன்ன இடத்தில் நீங்கள் ஒன்று கூடுங்கள்* என்று சொன்னார்கள். அவ்வாறே பெண்கள் ஒன்று திரண்டனர். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்களிடம் சென்று, அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து போதித்தார்கள். 

பிறகு, *உங்களில் எந்தப் பெண் தனக்கு (மரணம் வரும்) முன்பாக தன் குழந்தைகளில் மூன்று பேரை இழந்து விடுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறி விடுவார்கள்* என்று கூறினார்கள். 

அப்போது அப்பெண்களில் ஒருவர் *அல்லாஹ்வின் தூதரே! இரண்டு குழந்தைகளை இழந்து விட்டாலும்* என்று கேட்டார். 

இதை அப்பெண் இரண்டு முறை திரும்பத் திரும்பக் கேட்க, *ஆம்! இரண்டு குழந்தைகளை இழந்து விட்டாலும் தான்* என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல்: *புகாரி 7310*

புகாரியின் 102 வது அறிவிப்பில் *பருவ வயதை அடையாத குழந்தைகளை..* என்று இடம் பெறுகின்றது. இந்த அறிவிப்புக்கள் ஆதாரப்பூர்வமானவை தான்.

*தான் மரணிப்பதற்கு முன் தனது குழந்தைகளை இழக்கும் பெண்ணுக்கு* என்று தான் மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. எனவே இது பிறந்த சிசுக்களையும் உள்ளடக்கும்.
———————————
*ஏகத்துவம்*

கணவன் பெயரை இனிஷியலாக பயன்படுத்தலாமா

*கணவன் பெயரை இனிஷியலாக பயன்படுத்தலாமா❓*

பெண்களின் திருமணத்துக்கு முன்னால் அவர்களின் *தந்தையர்களின் இன்ஷியலே அவர்களுடைய பெயர்களுக்கு முன்னால் பயன்படுத்தப்படும்*. 

திருமணம் ஆன பின் அவர்களுடைய *கணவனின் இன்ஷயல் அவர்களின் பெயர்களுக்கு முன்னால் போடப்படும்.* நவீன காலத்தில் இப்படி ஒரு நடைமுறை மக்களிடையே இருந்து வருகின்றது.

திருமணத்துக்குப் பிறகு கணவனின் இன்ஷியலைப் போடுவது கணவன் தந்தையாகி விடுகிறான் என்ற பொருளில் இல்லை. மாறாக அவளுக்கு அவனே முழு பொறுப்பாளியாக இருக்கின்றான் என்ற கருத்தில் இவ்வாறு போடப்படுகின்றது.

இந்த செயல்பாட்டில் மார்க்கத்திற்கு மாற்றமான எந்த அம்சமும் இடம் பெறவில்லை.

*ஆயிஷா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா ரலி அவர்களைப் பற்றி ஹதீஸ்களில் கூறப்படும் போது தந்தையின் பெயரைக் கூறாமல் நபியின் மனைவி என்றே குறிப்பிடட்டுள்ளனர்*. 

பார்க்க *புகாரி 103, 184, 248, 327, 328, 334, 382, 467, 513, 515, 833, 902,*

புகாரியில் ஆயிரம் ஹதீஸ்களில் மட்டும் தேடிப் பார்த்த வகையில் ஆயிஷா ரலி அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் எல்லா இடங்களிலும் தந்தையின் பெயர் கூறாமல் கண்வர் பெயரே கூறப்பட்டுள்ளது. 

இது போல் மைமூனா (ரலி) அவர்கள் சில இடங்களில் தந்தையின் பெயருடன் கூறப்பட்டாலும் 183, 249, 333, 337 ஆகிய ஹதீஸ்களில் நபியின் மனைவி என்றே கூறப்பட்டுள்ளனர். 

இது போல் பரவலாக இந்தப் பழக்கம் ஆரம்பம் முதலே இருந்து வருகிறது

*எனவே உலகத் தேவைக்காக இவ்வாறு செய்வது தவறல்ல.*

ஏகத்துவம்

பெண்கள் தலையில் பூ வைத்து கொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளதா❓*

*பெண்கள் தலையில் பூ வைத்து கொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளதா❓*

*பூ என்பது நறுமணப் பொருளாகவும் அலங்காரமாகவும் உள்ளது.*

பெண்கள் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

*பெண்கள் இஷாத் தொழுகைக்கு பள்ளிக்கு வரும்போது நறுமணம் பூசிக்கொண்டு வரக்கூடாது* என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

எனவே பூ வைத்துக் கொண்டு இரவில் பள்ளிக்கு வரக்கூடாது.

பள்ளி அல்லாத மற்ற இடங்களுக்கு பூ வைத்துக்கொண்டு செல்லலாம். *பூ அலங்காரமாக இருப்பதால் அந்நிய ஆண்களிடம் இதை வெளிப்படுத்துவது கூடாது*.

*பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்*. 

அவர்கள் மறைத்திருக்கும் *அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம்.*

நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

அல்குர்ஆன் (*24 : 31)*

எனவே *அந்நிய ஆண்கள் பார்க்கும் வகையில் வெளிப்படையாக பூ வைப்பது கூடாது.* 

மற்ற அலங்காரங்களை அந்நிய ஆண்களிடமிருந்து மறைப்பது போல் இதையும் மறைக்க வேண்டும்.

*ஏகத்துவம்*

பெண்கள் உயரமான கொண்டை போடலாமா* ❓

*பெண்கள் உயரமான கொண்டை போடலாமா* ❓

*மறுமை நாள் நெருங்கும் போது பெண்கள் மெல்லிய ஆடையணிவர் ; ஒட்டகத் திமில் போல் கூந்தல் போடுவர்* என ஹதீஸில் உள்ளது.
இதன் அடிப்படையில் தலைக்கு மேல் கூந்தலை உயர்த்திக் கட்டக் கூடாது என்று கூறுகின்றனர். 

*இது சரியா?*

இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை.

(*முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு, மக்களை அடிப்பார்கள்.*

(இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, *தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர்*. 

*அவர்களது தலை, மற்றும் கழுத்து, நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும்.*

*அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்; சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள்.* 

*சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும்* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: *முஸ்லிம் (4316)*

இதுதான் நீங்கள் குறிப்பிட்ட நபிமொழி. இதில் இடம் பெற்றிருக்கும் அவர்களது தலை,மற்றும் கழுத்து, நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும் என்ற வாசகத்தை வைத்துத் தான் நீங்கள் கேள்வியை எழுப்பியுள்ளீர்கள்.

இந்தப் *பெண்கள் பிறரைக் கவரும் வேலையில் ஈடுபடுவார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்*. எனவே தான் மறைக்க வேண்டிய உடலையும் தலை முடியையும் வெளிப்படுத்துகின்றனர்.

*ஒட்டகத்தின் முதுகில் முக்கோண வடிவத்தில் உயர்ந்து இருக்கும் பகுதிக்குத் தான் திமில் (அஸ்மினத்*) என்று கூறப்படும். தலையில் கூடுதலான பொருட்களை வைத்து ஒட்டகத் திமில்கள் போல் தலையை ஆக்கிக் கொள்பவர்களை இந்தச் செய்தி குறிப்பிடுகிறது என்று நபிமொழி விரிவுரையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஒரு சிலர், தலையில் திமில்களைப் போன்று கொண்டை வைப்பதைக் குறிக்கிறது என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

*முடியை வைத்தோ அல்லது வேறு பொருட்களை வைத்தோ ஒட்டகத் திமில்கள் போல் தலையை மாற்றிக் கொள்வதை இந்த நபிமொழி கண்டிக்கிறது* என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் இரண்டு கருத்துக்கும் இடமளிக்கும் வண்ணமே இந்த நபிமொழி இருக்கிறது. 

எனவே *அந்நிய ஆண்களை ஈர்க்கும் வண்ணம் தலையை கூடுதலான பொருட்களை வைத்து உயர்த்தி வலம் வருவது தவறாகும்*.

சாதாரணமாக தலையில் இருக்கும் முடியை வைத்துக் கொண்டை கட்டினால் ஒட்டகத் திமில் போல் உயரமாக இருக்காது.

எனவே இவற்றைத் தடை செய்ய முடியாது. மேலும் சாதாரணமாக கொண்டை போடுபவர்கள் தலையின் பின்புறமே போடுவார்கள். நபிமொழியில் தடை செய்யப்பட்டது, *ஒட்டகத் திமில்கள் போல் உள்ளதைத் தான். ஒட்டகத் திமில்கள் வானத்தை நோக்கி இருக்கும். இவ்வாறு வானத்தை நோக்கி இருக்கும் வண்ணம் ஒரு சிலர் உயரமாகக் கொண்டை போடுவதையே இது குறிக்கும்.*

*ஏகத்துவம்*

அல்லாஹ்* ⤵ *உருவமற்றவனா - 35

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥 ஆய்வுக் கட்டுரை [ 01 ] 🔥*

      *🔥 அல்லாஹ்*
                                   ⤵
                    *உருவமற்றவனா❓*

           *✍🏻...தொடர் [ 35 ]*

*☄இறைவனைக்*
             *காண முடியுமா❓[ 08 ]*

              *🏖 இறுதி பாகம் 🏖*

_இந்த இனிய இறை தரிசனத்தைக் கேட்டுப் பிரார்த்திக்கவும் வேண்டும்.  இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் ஒரு பிரார்த்தனையையும் கற்றுத் தந்திருக்கிறார்கள்._

_*🍃அம்மார் பின் யாஸிர் எங்களுக்குத் தொழுவித்தார்கள். மக்களில் ஒருவர், "நீங்கள் தொழுகையைச் சுருக்கி விட்டீர்கள்'' என்று அவரிடம் சொன்னார். "நான் இவ்வாறு சுருக்கித் தொழுதாலும் அல்லாஹ்வின் தூதரிடம் செவியுற்ற துஆக்களைக் கொண்டு அந்தத் தொழுகையில் துஆச் செய்தேன்'' என்று பதில் சொன்னார். அவர் எழுந்ததும் அவரை ஒருவர் பின்தொடர்ந்து அவரிடம் அந்த துஆ பற்றிக் கேட்டார். பிறகு வந்து அதை மக்களிடம் அறிவித்தார்.*_

_அல்லாஹும்ம பி இல்மிகல் கைப வ குத்ரத்திக அலல் கல்கி, அஹ்யினி மாஅலிம்தல் ஹயாத கைரன்லீ வதவஃப்பனீ இதா அலிம்தல் வஃபாத கைரன்லீ அல்லாஹும்ம வஅஸ்அலுக கஷ்யதக ஃபில் கைபி வஷ்ஷஹாததீ. வஅஸ்அலுக கலிமதல் ஹக்கி ஃபிர்ரிளா வல் களபி வஅஸ்அலுகல் கஸ்த ஃபிஃபக்ரி வல்கினா வஅஸ்அலுக நயீமன் லாயன்ஃபது அ வஅஸ்அலுக குர்ரதி அய்னின் லா தன்கதிவு வ அஸ்அலுகர் ரிளாஅ பஃதல் களாயி அ அஸ்அலுக பர்தல் ஈஷி பஃதல் மவ்தி அ அஸ்அலுக லத்தத்தன் நள்ரி இலா வஜ்ஹிக வஷ்ஷவ்க இலா லிகாயிக ஃபீ கைரி ளர்ராஅ முளிர்ரத்தின் வலா ஃபித்னதின் முளில்லதின் அல்லாஹும்ம ஸ(ழ)ய்யின்னா பி ஸீ(ழ)னதில் ஈமானி வஜ்அல்னா ஹுதாத்தன் முஹ்ததீன்_

_*பொருள்: மறைவானதை அறிகின்ற உன் ஞானத்தைக் கொண்டும், படைப்பின் மீதுள்ள உன் ஆற்றலைக் கொண்டும், (எனது) வாழ்வு நன்மை என்று நீ அறிந்திருக்கின்ற வரை என்னை வாழ வை! மரணம் எனக்கு நன்மை என்று நீ அறிந்தால் என்னை மரணிக்கச் செய்! அல்லாஹ்வே! மறைவிலும் நேரிலும் உன்னை அஞ்சுவதை உன்னிடம் கேட்கிறேன். திருப்தியிலும் கோபத்திலும் நேரிய வார்த்தையை உன்னிடம் நான் கேட்கிறேன். வறுமையிலும் செல்வத்திலும் நடுநிலையை உன்னிடம் நான் கேட்கிறேன். அழியாத அருட்கொடையை உன்னிடம் நான் கேட்கிறேன். அறுந்து விடாத கண் குளிர்ச்சியை உன்னிடம் நான் கேட்கிறேன். விதிக்குப் பின்னால் திருப்தியை உன்னிடம் நான் கேட்கிறேன். இறந்த பின்பு வாழ்க்கையின் இதத்தை உன்னிடம் நான் கேட்கிறேன்.*_

*இடர் அளிக்கக்கூடிய துன்பம் மற்றும் வழிகெடுக்கக் கூடிய குழப்பம் இல்லாத சூழலில் உன் திருமுகத்தைப் பார்க்கின்ற சுவையையும், உன்னைச் சந்திக்கின்ற ஆசையையும் உன்னிடம் நான் கேட்கின்றேன். அல்லாஹ்வே! ஈமானின் அழகைக் கொண்டு எங்களை அழகுபடுத்துவாயாக! எங்களை நேர்வழி பெற்ற வழிகாட்டிகளாக ஆக்கு!*

*🎙அறிவிப்பவர்:*
             *ஸாயிப் பின்*
                                *மாலிக்,*

   *📚 நூல்: நஸயீ 1288 📚*

*🏮🍂"இறைவனுக்கு உருவம் இல்லை; இறைவன் என்றால் சூனியம்'' என்று கூறி இறைவன் இல்லை என்பதை வேறு வார்த்தைகளில்* யார் கூறுகிறார்களோ அத்தகைய நிராகரிப்பாளர்களுக்கும் இணை கற்பிப்பவர்களுக்கும் *இறைவனைக் காணும் பேரின்பம் நிச்சயம் கிடைக்காது.*

*🏮🍂எனவே இணை வைக்காமல், நல்லமல்கள் செய்து, இந்தப் பிரார்த்தனையைப் புரிந்து அல்லாஹ்வின் திருமுகத்தைக் காண்கின்ற பேறும் பாக்கியமும் பெற்றவர்களாக ஆவோமாக!*


*🏮🍂அல்லாஹ் உருவமற்றவனா❓ என்ற இந்தத் தலைப்பில் இதுவரை நீங்கள் பார்த்த ஆதாரங்கள் அனைத்தும் குர்ஆன், ஹதீஸில் உள்ளவையாகும்.* இவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கின்றது என்று நிரூபிக்கும் ஆதாரங்கள். *இவை அனைத்திற்கும் எந்தவொரு விளக்கமும், வியாக்கியானமும் கூறாமல், திரிபு வாதம் செய்யாமல், திசை திருப்பாமல் ஒவ்வொரு முஸ்லிமும் நம்பியே ஆக வேண்டும். அவ்வாறு நம்பாதவர் இறை மறுப்பாளர் ஆவார்; நிரந்தர நரகத்தின் விறகாவார். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *தொடர் முடிந்தது*
                            ⤵⤵⤵
        
அல்ஹம்துலில்லாஹ்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா

*மாதவிடாய் பெண்கள், பயானுக்காக பள்ளியின் ஓரத்தில் இருக்கலாமா❓*

*மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா❓*

*பயான் நடக்கும் போது பள்ளியில் ஓரமாக இருந்து கொள்ளலாமா❓*

❌ *கூடாது* ❌

*மாதவிடாய் ஏற்பட்டுள்ள, குளிப்பு கடமையான எவருக்கும் பள்ளிவாசலை நான் அனுமதிக்க மாட்டேன்* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி), 
நூல்கள் : *அபூதாவூத் (201), இப்னுமாஜா (637)*

*மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் எங்களில் ஒருவரின் மடியில் தலையை வைத்து திருக்குர்ஆனை ஓதுவார்கள். எங்களில் ஒருவர் அவர்களில் தொழுகை விரிப்பை பள்ளிவாசலில் விரிப்பார், அவரே மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில்*.

அறிவிப்பவர் : மைமூனா (ரலி), 
நூல்கள் : *நஸயீ (382), அஹ்மத் (25582)*

*நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டு  (வெளியே உள்ள) தொழுகை விரிப்பை எடுத்து வருமாறு என்னிடம் கூறினார்கள். அதற்கு நான் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே என்றேன். அப்போது அவர்கள் அதை எடுத்துவா மாதவிடாய் என்பது உனது கையில்  (ஒட்டிக் கொண்டிருப்பது) இல்லை* என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), 
நூல்கள் : *முஸ்லிம் (503)*

*நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருக்கும் போது ஆயிஷா! அந்த துணியை எடுத்துத் தா! என்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மாதவிடாய் உனது கையிலில்லை* என்று கூறினார்கள். அதையடுத்து அந்தத் துணியை ஆயிஷா (ரலி) அவர்கள்  எடுத்துக் கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), 
நூல்கள் : முஸ்லிம் (504)

*மாதவிடாய் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லாமா?* என்பது தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ்கள் இவை. இவற்றை அடிப்படையாக கொண்டு தங்கள் கேள்விக்குரிய பதிலை நாம் காண முடியும்.

இவற்றில் முதலாவது ஹதீஸ் *நேரடியாக மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் பள்ளிவாசலுக்க செல்லக்கூடாது* என்று தெரிவிக்கிறது. என்றாலும் இந்த ஹதீஸ் தொடர்பாக ஹதீஸ் கலை வல்லுநர்கள் மாறுபட்ட கருத்துக்களை கூறியுள்ளார்கள். சிலர் ஆதாரப்பூர்வமானது என்றும் சிலர் பலவீனமானது என்றும் கூறியுள்ளனர்.

*மாதவிடாய் ஏற்பட்டுள்ள, குளிப்பு கடமையான எவருக்கும் பள்ளிவாசலை நான் அனுமதிக்க மாட்டேன்* என்ற இந்த செய்தி பல நூல்களில் இரு வேறு அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ளது.

சில நூல்களில் உம்மு ஸலமா (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது. சில நூல்களில் ஆயிஷா (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது. இதில் ஆயிஷா (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படுவதே சரியானதாகும் என்று அபூஹாத்திம் அவர்கள் *இலல்£ என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாக வரும் நூல்களில் அஃப்லத் பின கலீஃபா என்பவர் இடம் பெறுகிறார்.

“அப்லத் பின் கலீஃபா என்பவர் அவரிக்கும் இந்த செய்தியை (ஹதீஸ் கலை அறிஞர்கள்) பலவீனம் என்று கூறியுள்ளார்கள். மேலும் அஃப்லத் என்பவர் *மஜ்ஹூல் (யார் என அறியப்படாதவரின்) அறிவிப்பு* என்றும் கூறுகிறார்கள்” என கத்தாபி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். “பிரபலியமானவர் என்றாலும் நம்பகமானவர் என்று அறியப்படாதவர், இந்த செய்தி *பெய்யானதாகும்”* என்று இப்னு ஹஸ்ம் அவர்கள் கூறியுள்ளார்கள். (தஹ்தீபுத் தஹ்தீப்)

மேலும் இச்செய்தில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளர் *ஜஸ்ரா பின்த் திஜாஜா* என்பவரைப் பற்றி இமாம் புகாரி அவர்கள்  *இவரிடம் புதுமையான செய்திகள் உள்ளன* என்றும் “இவர் விசயத்தில் ஆட்சேபனை உள்ளது” என்று இமாம் பைஹகீ அவர்களும் குறை கூறியுள்ளார்கள். சிலர் இவரை நம்பகமானவர் என்றும் கூறியுள்ளனர்.

நேரடியாக தடை செய்யும் செய்தியில் சில விமர்சனங்கள் உள்ளதை மேற்கூறப்பட்ட செய்திகள் மூலம் காணமுடிகிறது. அதே நேரத்தில் பள்ளிவாசலுக்கு செல்லக்கூடாது என்று மறை முகமாக தெரிக்கும் ஆதாரப்பூர்மான ஹதீஸ்களும் நாம் குறிப்பிட்ட 2,3 வது செய்தியில் உள்ளன.
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டு  (வெளியே உள்ள) தொழுகை விரிப்பை எடுத்து வருமாறு என்னிடம் கூறினார்கள். அதற்கு நான் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே என்றேன். அப்போது அவர்கள் அதை எடுத்துவா மாதவிடாய் என்பது உனது கையில்  (ஒட்டிக் கொண்டிருப்பது) இல்லை என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), 
நூல்கள் : முஸ்லிம் (503)

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருக்கும் போது ஆயிஷா! அந்த துணியை எடுத்துத் தா! என்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மாதவிடாய் உனது கையிலில்லை என்று கூறினார்கள். அதையடுத்து அந்தத் துணியை ஆயிஷா (ரலி) அவர்கள்  எடுத்துக் கொடுத்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‎ýரைரா (ரலி), நூல்கள் : முஸ்லிம் (504)

இந்த ஹதீஸில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பள்ளிவாசலுக்கு தான் நுழைய தடையாக இருந்ததாக மாதவிடாய் குறிப்பிட்ட போது, பள்ளிவாசலுக்கு மாதவிடாய் பெண்கள் வருவது தடை இல்லை என்றிருந்தால் நபி (ஸல்) அவர்கள் தெளிவாக, *மாதவிடாய் பள்ளிவாசலுக்கு வருவதை விட்டும் தடை செய்யாது* என்று கூறியிருப்பார்கள்.ஆனால் அவர்கள் அவ்வாறு கூறவில்லை. 

மாறாக *உன் கையில் மாதவிடாய் இல்லை எனவே கையை நீட்டி பள்ளியில் நீ வைக்கலாம்* என்று கூறியுள்ளார்கள்.( நபி (ஸல்) அவர்கள் வீடு பள்ளியை ஒட்டியே இருந்தது) எனவே மாதவிடாய் பெண்கள் பள்ளியில் வரக்கூடாது என்பதை இதிலிருந்து விளங்கலாம். அடுத்து நாம் குறிப்பிட்ட 4 வது ஹதீஸிலும் இதை விளங்கலாம்.

*நபி (ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும் மாதவிடாய் பெண்களையும் (தொழும் திடலுக்குப்) புறப்படச் செய்யும்படி ஏவினார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தை விட்டு விலகியிருப்பவர்கள்*.

அறிவிப்பவர் : உம்மு அத்திய்யா (ரலி), 
நூல் : புகாரீ (974),

பெருநாள் திடலுக்கு மாதவிடாய் பெண்களை வரச் சொன்ன நபிகளார், அவர்கள் தொழுமிடத்தைவிட்டும் விலகியிருக்கவேண்டும் என்பதை உணர்த்தியுள்ளார்கள். தொழுமிடங்களில் முதன்மையான இடம் பள்ளிவாசல். சாதரணமாக உள்ள தொழும் இடத்திலேயே மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் விலகி இருக்க வேண்டுமானால் பள்ளிவாசலில் கண்டிப்பாக விலகி இருக்க வேண்டும் என்று தெளிவாக கூறலாம்.

அவசியமான நேரத்தில் பள்ளிவாசலில் மாதவிடாய் பெண்கள் சென்று வரலாம். என்பதற்கு பின்வரும் செய்தியை சிலர் ஆதாரம் காட்டுகின்றனர்.

மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் எங்களில் ஒருவரின் மடியில் தலையை வைத்து திருக்குர்ஆனை ஓதுவார்கள். எங்களில் ஒருவர் அவர்களில் தொழுகை விரிப்பை பள்ளிவாசலில் விரிப்பார், அவரே மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில்.

அறிவிப்பவர் : மைமூனா (ரலி), 
நூல்கள் : நஸயீ (382), அஹ்மத் (25582)

இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து சிலர் பள்ளிவாசலில் அவசியத் தேவை இருக்கும் போது செல்லாலாம் என்று கூறுகின்றனர். ஆனால் மற்ற ஹதீஸ்களில் பள்ளிவாசலுக்கு செல்லத் தடை இருப்பதால் இந்த ஹதீஸை அதற்கு முரண்படாவதவாறு புரிந்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களின் மனைவியர் தொழுகை விரிப்பை பள்ளியின் வெளியில் இருந்து கொண்டு பள்ளிவாசலுக்குள் விரிப்பார்கள் என்று கருத்துக் கொண்டால் இரண்டு விதமான ஹதீஸ்களும் முரண்படாமல் இருக்கும். இதைப் போன்றுதான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் ஹதீஸ‎ýம் உள்ளது என்பதை கவனிக்க.

*எனவே மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக்கூடாது. பயான் போன்றவைகளில் அவர்கள் பங்கெடுக்க வேண்டுமானால் பள்ளிவாசல் அல்லாத இடங்களிலேயே ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும்.*

 ஏகத்துவம்

மவ்லித் என்பதின் பொருள் என்ன?

மவ்லித் என்பதின் பொருள் என்ன?

மவ்­லிது எனும் அரபிச் சொல்லி­ன் அகராதிப் பொருள் ‘பிறந்த நேரம்’ அல்லது ‘பிறந்த இடம்’ என்பதாகும்.

(ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித், பக்கம்: 8)

ஆனால் பிற்காலத்தில் இஸ்லாத்தில் நபியவர்கள் காட்டாத பித்அத்தான, அனாச்சாரமான காரியங்களை உருவாக்கியவர்கள் நபியவர்களை இறைவனுக்கு நிகராக உயர்த்தி கடவுளாக சித்தரித்து படிக்கும் கேடு கெட்ட கவிதைகளுக்கு மவ்­லிது எனப் பெயரிட்டுவிட்டனர். இதற்கும் உண்மை இஸ்லாத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை.

சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார்?

அல்லாஹ் மவ்லூத் ஓதியதாக பொய்யர்கள் கூறுகின்றனர். ஆனால் தமிழகம் எங்கும் பரவலாக பாடப்படும் சுப்ஹான மவ்லி­தை எழுதியவர் யார் என்பது தெரியாது. இதோ அவர்களின் நூலிலேயே கூறப்பட்டிருப்பதைப் பாருங்க்.
மகுடமாய்த் திகழும் சுப்ஹான மவ்லி­தை கல்விக் கடல் கஸ்ஸாலி­ இமாம் (ரஹ்) அவர்களோ, அல் இமாமுல் கத்தீப் முஹம்மதுல் மதனி (ரஹ்) அவர்களோ இயற்றி யிருக்கலாம்என்று கூறப்படுகிறது. ‘இயற்றியவர் யார்?’ என்று திட்டவட்டமாக தெரியவில்லை.

(ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித், பக்கம்: 5)

மவ்லித் கூடாது என்பதற்கான ஆதாரங்கள் :

இஸ்லாம் என்பது அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் காட்டித் தந்தவைதான். மவ்­லித் என்பது அல்லாஹ்வோ, நபியவர்களோ காட்டித் தந்த ஒன்றல்ல. மார்க்கத்தில் ஒருவன் இணைவைக்காத, தவறில்லாத கவிதைகளை படித்தால் தவறில்லை என்ற அளவிற்குத்தான் மார்க்கம் கவிதைகளை மதிக்கின்றது.

ஆனால் மவ்­லித் என்ற அனாச்சாரத்தை உருவாக்கி அதை மார்க்கமாக்கியவர்கள் குர்ஆனில் நபிமார்களைப் பற்றி கூறப்பட்ட வசனங்களையும், நபியவர்களைப் பற்றி இறைவன் புகழ்ந்து கூறும் வசனங்களையும், இணைவைப்பில்லாமல் சில ஸஹாபாக்கள் பாடிய கவிதைகளையும் காட்டி இவர்கள் இட்டுக்கட்டிய மௌ­தை ஓதலாம் என பிரசுரங்களை வெளியிட்டுள்ளனர். கேடுகெட்ட கவிதைகளை (இவர்கள் பாணியில் மவ்­லித்) நபியவர்கள் மிகக் கடுமையாக கண்டித்துள்ளதை மறைத்து விடுகின்றனர்.

ஸஹாபாக்கள் கூறிய கவிதைகள் அவரவர் கூறிய கவிதை தானே தவிர இவர்களைப் போன்று எவனோ உருவாக்கியவற்றை அவர்கள் எழுதிவைத்துப் படிக்கவில்லை.

ஸஹாபாக்கள் போர்க்களங்களிலும், யதார்த்தமான நிலையில் இருக்கும் போது மட்டுமே சில கவிதைகளைக் கூறியுள்ளார்கள். இவர்களைப் போன்று வழிபாடாகச் செய்யவில்லை
ஆனால் இவர்களோ அதற்கென்று நாள் நேரங்களைக் குறித்து, கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து, தோரணங்கள் கட்டி வழிபாடாகச் செய்கின்றனர்.

ஸஹாபாக்கள் கூறும் போது நபியவர்கள் அதிலுள்ள தவறுகளைத் திருத்தியுள்ளார்கள். இவர்கள் எழுதியவற்றை எதையும் நபியவர்கள் திருத்தவில்லை.

திருமணத்திற்கும் விபச்சாரத்திற்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளதோ, அது போன்று ஸஹாபாக்கள் கூறிய கவிதைகளுக்கும், முறைகளுக்கும் இவர்கள் பாடும் கவிதைகளுக்கும், முறைகளுக்கும் வித்தியாசங்கள் உள்ளது.

விபச்சாரியோடு செய்வதைத்தானே மனைவியோடும் செய்கின்றான் என்று கூறி விபச்சாரத்தை எப்படி நியாயப் படுத்த முடியாதோ அது போன்றே ஸஹாபாக்கள் பாடிய கவிதைகளைக் காட்டி இவர்கள் ஓதும் மௌ­தை நியாயப் படுத்த முடியாது. அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

ஏகத்துவம்

மவ்லூத் உணவு சாப்பிடலாமா?*

*மவ்லூத் உணவு சாப்பிடலாமா?*

மவ்லூது ஹத்தம் ஃபாத்திஹா ஆகிய அநாச்சாரங்கள் அரேங்கற்றப்பட்டு தரப்படும் உணவு நம் வீட்டிற்கு வந்தாலும் அதை நாம் உண்ணக்கூடாது. மார்க்கத்திற்கு மாற்றமான சபையை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக இதை உண்ணக்கூடாது என்று நாம் கூறவில்லை.

மாறாக இவ்வாறு தரப்படும் உணவில் புனிதம் இருப்பதாகவும் மற்ற உணவைக் காட்டிலும் இந்த உணவுகளுக்கு தனிச்சிறப்பு இருப்பதாகவும் நம்பப்படுகின்றது.

மவ்­லூது, கந்தூரி, ஃபாத்திஹா போன்றவற்றிற்காக உணவு தயாரிப்பவர்கள் அந்த உணவு முழுவதுமே பரக்கத் நிறைந்தது என்று கருதியே தயாரிக்கின்றார்கள். முழு உணவையும் வைத்து மவ்­லிது ஓதாமல் சிறிதளவு எடுத்து வைத்து ஓதினாலும் முழு உணவையும் தபர்ரூக் என்றே குறிப்பிடுவார்கள். அதற்கென்று தனி மகத்துவம் இருப்பதாகவே நினைக்கின்றார்கள். மவ்லூது ஓதுபவர்கள் முழு உணவையும் எடுத்து வைத்து மவ்­லூது ஓதாவிட்டாலும் அதை நேர்ச்சையாக எண்ணியே தயாரிப்பதால் அதைச் சாப்பிடக் கூடாது.

ஒரு உணவில் இப்படிப்பட்ட தவறான நம்பிக்கை வைக்கப்படுமானால் அதை உண்பது தடுக்கப்பட்டுவிடுகின்றது. மீறி இந்த உணவை உண்டால் இதில் புனிதம் இருப்பதாக மூடர்கள் நினைப்பதை நாம் ஆதரித்ததாக ஆகிவிடும்.

இந்த உணவு உங்களுக்கு மட்டுமல்ல வேறு யாருக்கும் ஆகுமானதல்ல. இந்த உணவு பூஜை செய்யப்பட்ட பொருட்களின் அந்தஸ்த்தை எட்டிவிடுகின்றது.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வ­யச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 2:173

இந்த வசனத்தில் ‘அறுக்கப் பட்டவை’ என்று நாம் மொழி பெயர்த்துள்ள இடத்தில் அரபு மூலத்தில் ‘உஹில்ல’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். அதாவது அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் கூறப்பட்ட பொருட்களை உண்ணக் கூடாது என்பதையும் சேர்த்தே இந்த வசனம் கூறுகின்றது.

இந்த அடிப்படையில் சாமிக்குப் படைக்கப்பட்ட உணவுகள் மட்டுமின்றி, முஸ்­லிம்கள் என்ற பெயரில் அவ்­லியாக்களுக்காகப் படைக்கப்பட்ட உணவுகளையும் புனிதம் இருப்பதாக கருதப்படும் உணவுகளையும் உண்ணக் கூடாது என்று கூறி வருகிறோம்

திருமண (வலிமா)விருந்தின் அளவு என்ன?

திருமண  (வலிமா)
விருந்தின் அளவு என்ன?

திருமண விருந்திற்குரிய அளவு என்ன? இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்று நபியவர்கள் நிர்ணயித்துள்ளார்களா? நமக்கு வசதி இருந்தால் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் நாம் திருமண விருந்து அளிக்கலாமா?

நபியவர்கள் ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது யாரையும் விட்டு வைக்காத அளவிற்கு நூற்றுக்கணக்கானவர்களுக்குத் திருமண விருந்து அளித்ததாக ஹதீஸ்களில் வந்துள்ளதே! இதற்கான விளக்கம் என்ன?

திருமண விருந்து தொடர்பாக இப்படிப் பல்வேறு கேள்விகளை சகோதரர்கள் எழுப்பி வருவதைப் பார்க்கிறோம். அதற்கான விளக்கங்களை அளிப்பதற்காக இந்தக் கட்டுரை!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமண விருந்தின் உச்சக்கட்டம் என்பதற்கு எவ்வித அளவு கோலையும் நிர்ணயம் செய்யவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) எதற்கு உச்ச வரம்பை நிர்ணயிக்கவில்லையோ அதற்கு நாம் எந்த எல்லையையும் நிர்ணயிக்க முடியாது.

அதே நேரத்தில் திருமண விருந்தை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கு நபியவர்கள் தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள்.

திருமணத்திற்குப் பின் மணமகன் வழங்கும் விருந்து வலீமா எனப்படுகின்றது. இந்த விருந்து நபிவழியாகும்.

பெண் வீட்டார் விருந்தளிப்பதும் அவர்களிடம் விருந்து கேட்டுப் பெறுவதும் மறைமுகமான வரதட்சணையாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண் வீட்டார் விருந்து கொடுக்கும் பழக்கம் இருந்ததில்லை.

மணமகன் கட்டாயம் விருந்தளிக்க வேண்டுமென்பதோ, கடன் வாங்கியேனும் விருந்தளிக்க வேண்டுமென்பதோ இல்லை. தன் வசதிக்கேற்ப சாதாரண உணவை மிகச் சிலருக்கு வழங்கினாலும் இந்த சுன்னத் நிறைவேறிவிடும்.

நபியவர்கள் வழங்கிய அனைத்து திருமண விருந்துகளையும் மிக மிக எளிமையாகத் தான் வழங்கி நமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரீச்சம் பழம் ஆகியவற்றையே வலீமா விருந்தாக வழங்கினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 371, 2893

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்த போது இரண்டு முத்து (சுமார் 1 லிட்டர்) கோதுமையையே வலீமா விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: சபிய்யா (ரலி)

நூல்: புகாரி 5172

ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டைத் திருமண விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 5168, 5171, 7421

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்த வலீமா விருந்துகளில் இதுதான் பெரிய விருந்தாகும்.

ஒருவன் செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் திருமணம் என்ற காரியத்தில் விருந்தளிக்கும் போது நபியவர்களை முன்மாதிரியாகக் கொண்டு குறைந்த செலவில் விருந்தளிப்பது தான் மிகச் சிறந்ததாகும்.

நபியவர்கள் எதனை முன்மாதிரியாக வழிகாட்டிச் சென்றுள்ளார்களோ அதில்தான் இச்சமுதாயத்திற்கு நன்மை இருக்கிறது. எனவே அதைத் தான் நாம் மக்களுக்கு வழிகாட்ட வேண்டும், வலியுறுத்த வேண்டும் என்பதே நம்முடைய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடாகும்.

அதிகம் செல்வ வசதியுடையவர் திருமணம் அல்லாத காரியங்களில், மார்க்கத்தின் வரம்புகளை மீறாமல், வீண்விரையம் இல்லாமல் அதிகமானவர்களுக்கு விருந்தளித்தால் அதனை நாம் தவறு என்று கூறமாட்டோம்.

ஆனால் திருமண விருந்தில் நபியவர்கள் எளிமையைக் கடைப்பிடித்துள்ளதால் அதையே செல்வந்தரும், ஏழைகளும் கடைப்பிடித்து நபிவழியை நிலைநாட்ட வேண்டும் என்றே நாம் கூறுகிறோம்.

எவ்வளவு வசதியிருந்தாலும் செல்வந்தர்கள் எந்த விருந்தும் கொடுப்பதே கூடாது என்பது நமது நிலைப்பாடல்ல. மாறாக செல்வந்தராக இருந்தாலும் திருமண விருந்தில் எளிமையைக் கடைப்பிடித்து நபிவழியில் மிகச் சிறந்த முறையை சமுதாயத்தில் நிலைநாட்ட வேண்டும் என்பதே நம்முடைய ஆவல்.

ஸைனப் (ரலி) அவர்களின் திருமண விருந்து

நபியவர்கள் ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது மிகப் பெரிய அளவில் திருமண விருந்து அளிக்கப்பட்டதாகச் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஸைனப் (ரலி) அவர்களின் திருமணத்தின் போது நடந்த சம்பவங்களை நாம் தெளிவாக அறிந்து கொண்டால் அவர்களின் கருத்திற்கு அதில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

ஸைனப் (ரலி) அவர்களின் திருமணத்தின் போது இரண்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன.

நபியவர்கள் வலீமா விருந்தாக ஒரு ஆட்டை அறுத்து, அத்துடன் ரொட்டியையும் அளித்தார்கள்.உம்மு சுலைம் அவர்கள் நபியவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய “ஹைஸ்” என்ற பலகாரத்தின் மூலம் நபியவர்கள் செய்த அற்புதம்.

உம்மு சுலைம் நபியவர்களுக்காக மட்டும் சிறிதளவு அன்பளிப்பாக வழங்கிய “ஹைஸ்” என்ற பலகாரத்தில் இறைவனுடைய ஆற்றலினால் நபியவர்கள் நிகழ்த்திய அற்புதத்தில் தான் நூற்றுக்கணக்கான நபித்தோழர்கள் உணவருந்திருனார்கள். இது வலீமா விருந்து அல்ல. நபியவர்கள் கொடுத்த வலீமா விருந்து மிகவும் எளிமையாகத் தான் நடைபெற்றது.

நபியவர்கள் ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது மிக எளிமையாகத் தான் வலீமா விருந்த வைத்தார்கள் என்பதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.

ஸைனபைத் திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டை திருமண விருந்தாக அளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 5168, 5171, 7421

அதே நேரத்தில் நபியவர்கள், ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த நாளன்று மற்றொரு அற்புதம் நடக்கிறது. அதில் தான் முன்னூறுக்கும் அதிகமான ஸஹாபாக்கள் விருந்து சாப்பிட்டார்கள். அதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை) மணமுடித்து, தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள்.

அப்போது என் தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் “ஹைஸ்’ எனும் பலகாரத்தைச் செய்து, அதை ஒரு (கல்) பாத்திரத்தில் வைத்து, “அனஸே! இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று, இதை என் தாயார் உங்களுக்காகக் கொடுத்தனுப்பியுள்ளார். அவர் உங்களுக்கு சலாம் சொல்லச் சொன்னார்; அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்கு எங்களால் (முடிந்த) சிறிதளவு (அன்பளிப்பு) ஆகும் என்றும் கூறினார் எனச் சொல்” என்றார்கள்.

அவ்வாறே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டுசென்று, “என் தாயார் உங்களுக்கு சலாம் கூறுகிறார். அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்கு எங்களால் முடிந்த சிறிதளவு (அன்பளிப்பு) ஆகும் என்று கூறினார்” என்றேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதை (ஓரிடத்தில்) வை” என்று கூறிவிட்டு, “நீ சென்று எனக்காக இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் மற்றும் நீ சந்திப்பவர்களையும் அழைப்பாயாக!” என்று கூறி, சிலரது பெயரைக் குறிப்பிட்டார்கள். அவ்வாறே அவர்கள் பெயர் குறிப்பிட்டவர்களையும், நான் சந்தித்தவர்களையும் அழைத்தேன்.

-இதை அறிவிப்பவரான அபூஉஸ்மான் அல்ஜஅத் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “அவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு, “ஏறக்குறைய முன்னூறு பேர் இருந்தார்கள்” என அனஸ் (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.-

(தொடர்ந்து அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:) என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அனஸ்! அந்தப் பாத்திரத்தை எடு” என்றார்கள். அப்போது மக்கள் வந்து நுழைந்தனர். (வீட்டின்) திண்ணையும் அறையும் நிரம்பியது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பத்துப் பத்துப் பேராக வட்டமாக அமர்ந்து, ஒவ்வொருவரும் தமது கைக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து (எடுத்து) உண்ணட்டும்” என்றார்கள். அவ்வாறே அவர்கள் (பத்துப் பேர் வந்து) வயிறு நிரம்ப உண்டனர்.

ஒரு குழுவினர் சாப்பிட்டுவிட்டுச் சென்றதும் மற்றொரு குழுவினர் வந்தனர். இவ்வாறு அவர்கள் அனைவரும் உண்டனர்.

அப்போது, “அனஸ்! அந்தப் பாத்திரத்தைத் தூக்கு” என்றார்கள். நான் அந்தப் பாத்திரத்தைத் தூக்கியபோது, நான் அதைக் கீழே வைத்த நேரத்தில் அதிகமாக இருந்ததா, அல்லது தூக்கிய நேரத்தில் அதிகமாக இருந்ததா என எனக்குத் தெரியவில்லை.

நூல் முஸ்லிம் (2803)

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்துகொண்டபோது. (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஒரு கல் பாத்திரத்தில் “ஹைஸ்’ எனும் பலகாரத்தை வைத்து அதை (என்னிடம் கொடுத்து) நபி (ஸல்) அவர்களிடம் அன்பளிப்பாக அனுப்பிவைத்தார்கள்.

(அவ்வாறே நான் கொண்டுசென்று கொடுத்தேன்.)

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ சென்று, நீ சந்திக்கின்ற முஸ்லிம்களை எனக்காக அழை(த்து வா)” என்றார்கள். அவ்வாறே நான் சந்தித்தவர்களை அழைத்(து வந்)தேன்.

அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர். நபி (ஸல்) அவர்கள் தமது கையை அந்தப் பலகாரத்தின் மீது வைத்துப் பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ் நாடிய சில பிரார்த்தனையை அவர்கள் கூறினார்கள்.

நான் சந்தித்த அனைவரையும் ஒருவர் விடாமல் அழைத்தேன். அவர்கள் அனைவரும் (வந்து) வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டுச் சென்றனர்.

நூல்: முஸ்லிம் (2804)

நூற்றுக்கணக்கான ஸஹாபாக்கள் சாப்பிட்டது வலீமா விருந்தில் அல்ல. மாறாக நபியவர்கள் “ஹைஸ்” என்ற பலகாரத்தின் மூலம் நிகழ்த்திய அற்புதத்தில் தான்.

“ஹைஸ்” என்பது கெட்டியான பால், பேரீத்தம் பழம் மற்றும் நெய் மூலம் தயாரிக்கப்படும் உணவாகும்.

பல அறிவிப்புகளில் வலீமா விருந்து சம்பவமும், ஹைஸ் என்ற அற்புத உணவு விருந்து சம்பவமும் கலந்து வந்துள்ளதால் அதிகமானவர்கள் கலந்து கொண்டது வலீமா விருந்து தான் என்ற குழப்பம் ஏற்பட்டதற்கு காரணமாகும்.

நாம் இரண்டு நிகழ்வுகளையும் பிரித்து விளங்கிக் கொண்டால் எவ்வித குழப்பமும் இல்லை.

நபியவர்கள் அற்புதம் அல்லாத முறைகளில் இருந்து நமக்கு மார்க்கமாக வழிகாட்டியவை தான் நமக்கு முன்மாதிரியாகும்.

அது போன்று நபியவர்களுக்கு மட்டும் இறைவன் பிரத்யேகமாக வழங்கிய சட்டங்களையும் நாம் முன்மாதிரியாகக் கொள்ள முடியாது.

நபியவர்கள் அற்புதங்களாகச் செய்தவை மக்கள் தம்முடைய இறைநம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்காகத் தானே தவிர அதிலிருந்து நடைமுறை வாழ்க்க்கைக்குச் சட்டம் எடுப்பது கூடாது.

ஒரு வாதத்திற்கு அப்படி எடுக்கலாம் என்றால் நபியவர்கள் எப்படி ஒரு சிறிய அளவு உணவிலிருந்து நூற்றுக்கணக்கானவர்களுக்கு உணவளித்தார்களோ அது போன்று நாமும் சிறிய அளவிலிருந்து உணவளிக்க வேண்டும்.

அவ்வாறு நாம் செய்வது சாத்தியமா?

நான் அற்புதத்தின் போது இருந்த மக்களின் எண்ணிக்கையை மட்டும் எடுத்துக் கொள்வேன். உணவின் அளவை கவனத்தில் கொள்ளமாட்டேன் என்பது மடமைத்தனம் ஆகும்.

அற்புதம் என்பது இறைவனின் உதவியால் செய்வதாகும். அதில் இறைத்தூதர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. (அல்குர்ஆன் 13:38)

எனவே 300 பேருக்கு நபியவர்கள் உணவளித்தது இறைக்கட்டளைப்படி நபியவர்கள் செய்ததாகும். அல்லாஹ் இலட்சம் பேருக்கு உணவளிக்க வேண்டும் என்று அந்த அற்புதத்தின் போது கட்டளையிட்டிருந்தால் நபியவர்கள் இலட்சம் பேருக்கு அளித்திருப்பார்கள்.

நபியவர்கள் செய்த அற்புதங்களில் நாம் பின்பற்றுவதற்குரிய முன்மாதிரியை எடுப்பது கூடாது. அற்புதம் என்பது அதைக் காணும் மக்கள் நம்பிக்கை கொள்வதற்காகத் தான்.

அற்புதங்களிலிருந்து பின்பற்றுவதற்குரிய சட்டங்களை எடுத்தால்…

ஒரு கோப்பை பாலில் 70 பேருக்குப் புகட்ட வேண்டும். இது நம்மால் சாத்தியமா?

விரலிலிருந்து தண்ணீரை ஓடச் செய்து நூற்றுக்கணக்கானவர்கள் உளூச் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இது நம்மால் முடியுமா?

இப்படி நூற்றுக்கணக்கான கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

எனவே நபியவர்கள் ஒரு ஆடு அறுத்து விருந்து வைத்தது தான் வலீமா விருந்தாகும். அதில் தான் நமக்கு முன்மாதிரி உள்ளது.

எனவே நபியவர்கள் காட்டித் தந்த முறைப்படி நமது திருமணங்களையும், திருமண விருந்தையும் அமைத்துக் கொள்வோமாக! அல்லாஹ் அதற்கு அருள்புரிவானாக!

மனோ இச்சைகளை மார்க்கமாக்குவதிலிருந்தும் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக

ஏகத்துவம்

Thursday, September 24, 2020

நபியின் மாமனார் திருமண விருந்து கொடுத்தார்களா?

பெண்களுக்கான நபிவழி சட்டங்கள்மார்க்க கேள்வி பதில்

நபியின் மாமனார் திருமண விருந்து கொடுத்தார்களா?

வரதட்சனை வாங்குவது எவ்வாறு மார்க்கத்திற்கு முரணான காரியமோ அது போன்று பெண்வீட்டு விருந்தும் மார்க்கத்திற்கு முரணாண காரியமாகும்.

ஆண் பெண்ணுக்கு மனக்கொடை கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகின்றது. பெண்ணிடமிருந்து எதையும் வாங்கக் கூடாது என்ற தடை இந்த உத்தரவில் அடங்கியிருக்கின்றது.

இதே போன்று திருமணத்துக்கென்று வலீமா என்ற விருந்தை ஆண் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகின்றது. பெண் வீட்டு விருந்து கூடாது என்ற தடை இந்த உத்தரவில் அடங்கியிருக்கின்றது.

திருமணத்தில் பெண் வீட்டார் மீது எந்தச் செலவையும் இஸ்லாம் சுமத்தவில்லை. ஆனால் இன்றைக்கு சமுதாயத்தில் பெண்வீட்டார் மீது தேவையற்ற சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தச் சுமைகளை தங்களுடைய கடமைகளாக எண்ணிக் கொண்டு பெண் வீட்டினர் செய்து வருகின்றனர். இவற்றைச் செய்யாவிட்டால் சமுதாயத்தில் அது அவமானம் என்றோ மாப்பிள்ளை வீட்டார் கோபப்படுவார்கள் என்றோ கருதி சிரமத்துடன் செய்பவர்களும் இருக்கின்றார்கள். பெண்வீட்டு விருந்து என்பது இந்தச் சுமைகளில் ஒன்றாகும்.

மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரை விருந்தளிக்குமாறு நிர்பந்திக்காவிட்டாலும் பெண்வீட்டார் தாங்களாக விரும்பி விருந்தளிப்பதும் கூடாது. திருமணத்துக்காக பெண் வீட்டார் செலவு செய்வது நடைமுறையில் கட்டாயமாகி விட்டதால் தான் இவர்கள் இவ்விருந்தை விரும்பியோ விரும்பாமலோ நடத்துகிறார்கள்.

பொதுவாக எந்தப் பெண்வீட்டாரும் விரும்பி விருந்தளிக்க முன்வருவதில்லை.  இது போன்று கொடுக்காவிட்டால் தங்களது பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டில் உரிய மரியாதை கிடைக்காமல் போய்விடுமோ என்ற உள்ளச்சமே இவர்களைக் கொடுப்பதற்குத் தூண்டுகின்றது. இதில் ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம்.

இது போன்று விதிவிலக்காக ஒரு சிலர் விரும்பிக் கொடுப்பது பல தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்துவதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

வரதட்சணை வாங்காமல் திருமணம் முடிப்பதாகக் கூறிக் கொண்டு, இது போன்று தானே வரும் பெண்வீட்டு விருந்தை எண்ணத்தில் வைத்து, வசதியான பெண்களை மட்டுமே மணம் முடிக்கும் அவல நிலை உள்ளது.  சில ஊர்களில் வீடு, வாகனங்கள் என மறைமுக வரதட்சணையாக பெண் வீட்டார் கொடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தமும் உள்ளது. 

வசதி படைத்த பெண் வீட்டார் விரும்பிக் கொடுப்பதாகக் கூறி, டி.வி., பிரிட்ஜ், பைக் திருமண விருந்து என்று அள்ளி வழங்கி விடுகின்றார்கள்.  இது வசதியில்லாத பெண்களுக்கு ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்துவதையும் மறுக்க முடியாது.

உதாரணமாக ஒரே வீட்டில் ஒரு வசதியான பெண்ணும் ஏழைப் பெண்ணும் மணமுடிக்கப்பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம்.  வசதியான பெண் சீர் வரிசைகளைக் கொடுக்கும் போது ஏழைப்பெண்ணுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகின்றது.  அவளும் தன் வீட்டாரை நிர்பந்தித்து வட்டிக்கு வாங்கி சீர் வரிசைகளைச் செய்கிறாள்.

இது ஏதோ கற்பனையாகக் கூறப்பட்டதல்ல.  பல இடங்களில் இந்த நிலை இருப்பதைக் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.  இது போன்ற பல சங்கடங்கள் ஏற்படுவதால் பெண் வீட்டார் விரும்பி சீர் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

பெண்வீட்டு விருந்து என்ற தீய கலாச்சாரம் சமுதாயத்தில் நுழைந்து விட்டதால் இவ்விஷயத்தில் சுயவிருப்பத்தை பார்க்காமல் இந்த அநாச்சாரத்தை ஒழிப்பதற்காக இதைப் பெண்வீட்டார் கைவிட வேண்டும்.

இதை பொருட்படுத்தாமல் பெண் வீட்டு விருந்தை ஏற்படுத்தினால் சமுதாயத்தில் நுழைந்துவிட்ட இந்த பாவத்துக்கு உடந்தையான குற்றம்  ஏற்படும்.

இதே வாதத்தை வைத்து வரதட்சணையையும் நியாயப்படுத்ட முடியும். மாமனார் விரும்பி தருகிறார் என்ற காரணத்தைக் சொல்லித் தான் வரதட்சனையை இன்றும் சிலர் நியாயப்படுத்தி வருகின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்ப நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை

. அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி).

நூல் : அபூதாவுத் (3512)

பெண் வீட்டார் இத்தீமையைச் செய்யும் போது அதைக் கண்டித்து தடுத்து நிறுத்துவது மாப்பிள்ளையின் கடமையாகும். இதை அவர் கண்டிக்கத் தவறினால் அத்தீமையில் அவருக்கும் பங்குள்ளது என்ற அடிப்படையில் அத்திருமணத்தை நாம் புறக்கணித்தே ஆக வேண்டும்.

“உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். 

அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி).

நூல்: முஸ்லிம் 70

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் உம்மு ஹபீபா (ரலி) அவர்களுக்கும் திருமணம் நடந்த போது அபிசீனிய நாட்டு மன்னர் நஜ்ஜாஷி வலீமா விருந்து அளித்ததாக ஒரு செய்தி சில ஹதீஸ் நூற்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி ஹாகிம் தலாயிலுன் நுபுவ்வா மற்றும் தபகாத்துல் குப்பரா ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்தச் செய்தியை உம்மு ஹபீபா (ரலி) கூறியதாக இஸ்மாயீல் பின் அம்ர் என்பவர் அறிவிக்கின்றார். இவர் ஹிஜ்ரீ 130ல் மரணிக்கின்றார். உம்மு ஹபீபா (ரலி) ஹிஜ்ரீ42 ல் மரணிக்கின்றார்கள். எனவே இவர் உம்மு ஹபீபா (ரலி) அவர்களை இவர் சந்தித்திருக்க வாய்ப்பில்லை. இவ்விருவருக்கும் இடையே அறிவிப்பாளர் யாரோ விடுபட்டுள்ளார். விடுபட்ட அந்த நபர் யார்? அவர் நம்பகமானவரா? என்பது உறுதி செய்யவிடவில்லை.

மேலும் இந்தச் செய்தியில் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஸுஹைர் என்பவர் இடம் பெறுகின்றார். இவர் நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இதன் காரணத்தால் இந்த செய்தி பலவீனமானதாகும்.

இத்துடன் பெண்வீட்டு விருந்து கொடுப்பதற்கு இந்த செய்தி  எந்த வகையிலும் ஆதாரமாகது

நஜ்ஜாஷி மன்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சார்பில் உம்மு ஹபீபா (ரலி) அவர்களுக்கு நானூறு தீனார்களை மஹராக கொடுத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுக்க வேண்டிய வலீமாவை அவர்கள் சார்பில் நஜ்ஜாஷி கொடுத்தார் என்றே இந்த செய்தி கூறுகின்றது.

எனவே இந்தச் செய்தியின் மூலம் மணமகன் சார்பில் மணமகனுடைய நண்பர் வலீமா கொடுக்கலாம் என்று தான் கூற முடியும். நஜ்ஜாஷி மன்னருக்கும் உம்மு ஹபீபா (ரலி) அவர்களுக்கும் இடையே எந்த இரத்த பந்த உறவும் கிடையாது. எனவே இதை வைத்து பெண்வீட்டு விருந்து கொடுக்கலாம் என்று 
வாதிட முடியாது .            

ஏகத்துவம்.

Wednesday, September 23, 2020

ஷைத்தானின் சூழ்ச்சிகள்

ஷைத்தானின் சூழ்ச்சிகளை அறிந்துக் கொள்வோம்

ஷைத்தானின் சூழ்ச்சிகள்

இரு உலகத்தில் கண்களுக்கு தெரிந்த, தெரியாத அனைத்து படைப்புகளையும் அல்லாஹ் படைத்துள்ளான். நீர், தாவரம், வானம், பூமி, விலங்கு, சூரியன், சந்திரன், நெருப்பு, மலக்கு, மனிதன், ஜின், ஷைத்தான் அனைத்துயும் படைத்துள்ளான். அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

அனைத்தையும் படைத்தான்.

அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். அவன் ஒவ்வொரு பொருளுக்கும் பொறுப்பாளன்.

(அல்குர்ஆன் (39:62)

அனைத்தையும் படைத்து விட்டு மனிதனை சிறப்பித்துள்ளான்.

மனிதனை சிறப்பித்தான்.

நீர், தாவரம், வானம், பூமி, விலங்கு, சூரியன், சந்திரன், நெருப்பு, மலக்கு, மனிதன், ஜின், ஷைத்தான் அனைத்து படைப்பையும் படைத்து அதில் மனிதனை மட்டும் சிறப்பித்துள்ளான். விலங்குகள் மனிதனை விட பலத்தாலும். வேகத்தாலும் சிறந்ததாக இருந்தாலும் மனிதனை சிறப்பித்துள்ளான். மலக்குமார்கள் அல்லாஹ்வுடைய அனைத்து பணிகளையும் செய்தாலும் அவர்களை விட மனிதர்களை அல்லாஹ் சிறப்பித்துள்ளான்.

ஜின்கள் பலத்தால் சிறந்ததாக இருந்தாலும் மனிதர்களை சிறப்பித்துள்ளான். அதே போன்று தான் ஷைத்தான் மலக்குமார்களுக்கே தலைவராக இருந்தாலும் அந்த இனத்தை விட மனிதர்களை அல்லாஹ் சிறப்பித்துள்ளான். முதல் மனிதராகிய ஆதமை இறைவன் படைத்தவுடன் அவரது திறமையை வெளிப்படுத்திக் காட்டி அவருக்கு “ஸஜ்தா’ செய்யுமாறு வானவர்களுக்கு கட்டளையிட்டான்.

“”ஆதமுக்குப் பணியுங்கள்!” என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான்.

(அல்குர்ஆன் (2:34)

ஷைத்தான் பெருமையடித்தான், நெருப்பால் படைத்தாய்

ஆதமை படைத்து அவருக்கு பணியும் மாறு மலக்குமார்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்ட போது மலக்குமார்களின் தலைவனான ஷைத்தான் அல்லாஹ்விடத்தில் தன்னை நீ நெருப்பால் படைத்தாய் இந்த ஆதமை கருப்பு களிமண்ணால் படைத்து இருக்கிறாய். நான் அவனை விட சிறந்தவன் நான் எப்படி அவனுக்கு சிறை வணக்கம் செய்வோன் என்று பெருமையடித்தான்.

“”நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்” என்று அவன் கூறினான்.

(அல்குர்ஆன் (38:76)

“”சேற்றிலிருந்த கருப்புக் களிமண்ணால் வடிவமைக்கப்பட்டு நீ படைத்த மனிதனுக்கு நான் பணிபவனாக இல்லை” என்று அவன் கூறினான்.

(அல்குர்ஆன் (15:33)

விரட்டி அடிக்கப்பட்டான்

ஷைத்தான் அல்லாஹ்விற்கு எதிராக பெருமையடித்த காரணத்தினால் கண்ணியமிக்க இடத்தை விட்டும் இழிவு ஏற்பட்டவனாகவும், விரட்டியடிக்கப்பட்டவானகவும் வெளியேற்றப் பட்டான். மறுமையிலும் இழிந்தவனாக அல்லாஹ் கொண்டுவருவான்.

“”இங்கிருந்து நீ இறங்கி விடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு! நீ சிறுமையடைந்த வனாவாய்” என்று (இறைவன்) கூறினான்.

அல்குர்ஆன் (7:13)

“”இங்கிருந்து இழிவு படுத்தப்பட்ட வனாகவும், விரட்டப்பட்டவனாகவும் வெளியேறி விடு! (மனிதர்களாகிய) அவர்களிலும் (ஜின்களாகிய) உங்களிலும் உன்னைப் பின் பற்றுவோர் அனைவரையும் போட்டு நரகத்தை நிரப்புவேன்” என்று (இறைவன்) கூறினான்.(அல்குர்ஆன் (7:18)

அவகாசம் கேட்டான்

ஷைத்தானை கண்ணியமிக்க இடத்திலிருந்து வெளியேற்றி போது மறுமை நாள் வரை என்னை அழிக்க கூடாது என்று அல்லாஹ்விடத்தில் தன்னுடைய ஆணவத்தை அடக்கிக் கொண்டு அவகாசம் கேட்கிறான்.

“”அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!” என்று அவன் கேட்டான்.

அல்குர்ஆன் (7:14)

அவகாசம் கொடுக்கப்பட்டது

அல்லாஹ் தஆலா ஷைத்தானின் அடிப்படிதலை கண்டு அவனுடைய கூட்டாத்திற்கு உயிர் பிச்சை தருகிறான். மறுமையை நாள் வரை உன்னையும் உனது கூட்டாத்தாரையும் அழிக்க மாட்டோன் என்று உத்திர வாதம் தந்துள்ளான். இதுவரை ஷைத்தானின் இனம் அழியப்படவில்லை.

“நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய்” என்று (இறைவன்) கூறினான்.

(அல்குர்ஆன் (7:15)

வழிகெடுப்பேன்

இப்லீஸ் என்பது ஷைத்தான்களின் தந்தைப் பெயராகும். இவன் நெருப்பால் படைக்கப்பட்டான். ஜின் இனத்தை சார்ந்தவன். இப்லீசுக்கு சந்ததிகளும், சேனைகளும் உண்டு. மனித இனத்தை கண்ணுக்குத் தெரியாமல் இருந்து கொண்டு வழிகெடுப்பதே இவர்களின் முக்கிய பணியாகும்.

இப்லீஸின் சிம்மாசனம் நீரில் உண்டு. அவன் தன் படைகளை அனுப்பி, மனிதர்களை குழப்படையச் செய்கிறான். இப்பணியில் முன்னணியில் இருக்கும் ஷைத்தான்களுக்கே இப்லீஸிம் முதல் தர மரியாதை கிடைக்கும். அல்லாஹ் அவகாசம் அளித்த பிறகு நீ கருப்பு களிமண்ணால் படைத்த இந்த மனிதர்களில் சிலரை வழிக்கெடுப்பேன் என்று அல்லாஹ்விடத்தில் சவால் விட்டான்.

“”நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்”என்று கூறினான். “”பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்” (என்றும் கூறினான்).

(அல்குர்ஆன் (7:16,17)

ஒவ்வொரு மனிதனுடனும் ஷைத்தான் இருப்பான்

ஒவ்வொரு மனிதனுக்கும் வானவர் ஒருவரும் ஷைத்தான் ஒருவனும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வானவர் நல்லதையே எண்ணுமாறும் நல்லதையே செய்யுமாறும் மனிதனுக்குக் கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஷைத்தான் கெட்டதையே எண்ணுமாறும் கெட்டதையே செய்யுமாறும் மனிதனைத் தூண்டிக்கொண்டிருக்கிறான்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “”ஜின் இனத்தைச் சேர்ந்த கூட்டாளியொருவன் (ஷைத்தான்) தம்முடன் நியமனம் செய்யப்படாமல் உங்களில் எவரும் இல்லை” என்று கூறி னார்கள்.

அப்போது, “”தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?” என்று மக்கள் கேட்டனர்.

அதற்கு அவர்கள், “”என்னுடனும் தான். ஆயினும் அல்லாஹ், அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்துவிட்டான். ஆகவே, எனக்கு அவன் நல்லதையே கூறுவான்” என்று சொன்னார்கள்.

நூல் :முஸ்லிம் 5421

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம் தங்கியிருந்த நாளில்) ஓர் இரவில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் மீது எனக்கு ரோஷம் ஏற்பட்டது.

பிறகு அவர்கள் (திரும்பி)வந்து என் நடவடிக்கையைக் கண்டபோது, “”ஆயிஷா! உனக்கு என்ன நேர்ந்தது? ரோஷம் கொண்டு விட்டாயா?” என்று கேட்டார்கள்.

அதற்கு நான், “”என்னைப் போன்ற ஒருத்தி (பல துணைவியர் உள்ள) தங்களைப் போன்ற ஒருவர் மீது ரோஷம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?” என்று சொன்னேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “”உன் ஷைத்தான் உன்னிடம் வந்து விட்டானா?” என்று கேட்டார்கள்.

நான், “”அல்லாஹ்வின் தூதரே! என்னுடனும் ஷைத்தான் உள்ளானா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “ஆம்’ என்றார்கள். “”ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தான்) உள்ளானா?” என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் “ஆம்’ என்றார்கள்.

நான், “”தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “”ஆம். ஆயினும், என் இறைவன் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்துவிட்டான்” என்று சொன்னார்கள்.

நூல் : முஸ்லிம் 5422

ரத்தம் நாளங்களில் ஒடுகிறான்

ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசரில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “”அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!” என்றார்கள்.

என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர்.

நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, “”இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!” எனக் கூறினார்கள்.

அவ்விருவரும் “”சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “”நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்; உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள்.

நூல் : புகாரி : 2038

நல்லவர்களை வழிகெடுக்க முடியாது

அல்லாஹ் ஷைத்தானை வெளியேற்றிய பிறகு அல்லாஹ்விடத்தில் மனிதர்களை நான் வழிகெடுப்பேன் என்று சவால் விடுகிறான். ஆனால் இறை நம்பிக்கையாளர்களை என்னால் வழிகெடுக்க முடியாது என்று தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு சவால் விடுகிறான்.

“”என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார் களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்”என்று கூறினான்

அல்குர்ஆன் (15:39,40)

கொள்கை விட்டும் தடுப்பான்

ஷைத்தான் மனிதர்களை வழிகெடுப்பதெல்லாம் அடிப்படையான கொள்கை விஷயத்தில் தான். ஏனென்றால் கொள்கையை ஏற்றுக் கொண்டால் அந்த மனிதர் சொர்க்கம் சென்று விடுவார். முதலில் கொள்கையில் வழிகெடுக்க முயற்சிப்பான் அதில் தோல்வியடைந்தால் மற்ற விஷயத்தில் முயற்சி செய்வான், அடிப்படையான கொள்கை விஷயத்தில் மனிதனை வழிகெடுத்து விட்டால் அந்த மனிதன் சொர்க்கம் செல்ல மாட்டான்.

அதற்காக கொள்கை விஷயத்தில் வழிகெடுக்க முயற்சிப்பான். மனிதரிடத்தில் படைப்பினங்களை பற்றி சிந்தனை ஊட்டுவான், இந்த பைக், செல்போன், அழகிய கார், இது போன்ற பொருட்களை யார் படைத்தான் என்று சிந்தனை ஊட்டுவான், சிந்தனையை ஏற்படுத்திய பிறகு இவை அனைத்தும் மனிதன் தான் உருவாக்கினான் என்று சிந்தனையை ஏற்படுத்துவான்.

பிறகு இந்த இயற்கை, செடி, மரம், விலங்கினங்கள், மனிதனை யார் படைத்தான் என்று சிந்தனை ஏற்படுத்துவான். இந்த சிந்தனையை ஏற்படுத்திய பிறகு இவை அனைத்தையும் அல்லாஹ் தான் படைத்தான் என்று நம்புவான். அதை நம்பிய பிறகு அல்லாஹ்வை யார் படைத்து இருப்பார்கள் என்று சிந்தனையை ஏற்படுத்துவான் இப்படிப்பட்ட மோசமான சிந்தனை ஏற்படுத்தும் போது விரட்டி அடிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு தேட வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, “”இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?” என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், “”உன் இறைவனைப் படைத்தவர் யார்?”என்று கேட்கின்றான்.

இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் அடையும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) விலகிக்கொள்ளட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி : 3276

தொழுகையை விட்டு தடுப்பான்

நம்மிடத்தில் கொள்கை விஷயத்தில் ஷைத்தான் தோற்று விட்டால் பிறகு தொழுகை விஷயத்தில் நம்மை வழிகெடுக்க வழிவகுப்பான். இஸ்லாம் என்பது அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொண்ட பிறகு தொழுகையை கடைபிடிக்க வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் கூறியிருக்கிறார்கள். தொழுகையை கடைபிடித்தால் நம்முடைய சிறிய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். அதனால் தொழுகை வீணாக்குவதற்குகாக அதிகமான முயற்சிகளை செய்வான். தொழுகையை தடுப்பதற்கு என்ன என்ன தீமையான விஷயங்கள் இருக்கிறதே அவை அனைத்தையும் மனிதர்களிடத்தில் அழகாக அழங்கரித்து காட்டுவான். இதை நம்பி நல்ல அமல்களை விட்டு விடுகிறார்கள்.

மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?

அல்குர்ஆன் (5:91)

தூக்கத்தின் மூலம்

பஜருடைய பாங்கு சப்தத்தை நாம் கேட்கும் போது தூக்கத்திலிருந்து எழுந்திருக்காமல் சோம்பேறி தனமாக இருந்து கொண்டு பஜர் தொழுகைக்கு நாம் வரமால் தூக்கி விடுகிறோம். இப்படி தூக்கத்தை ஏற்படுத்தி நன்மையை செய்ய விடாமல் ஷைத்தான் நாடுகிறான். ஆனால் ஷைத்தானுக்கு நாம் கட்டுபடாமல் தூக்கத்திலிருந்து நாம் எழுந்திருத்து துஆவை ஒதி, உளு செய்து, தொழுதால் அன்றைய தினம் சுறுசுறுப்பவனாக அடைகிறான். ஆனால் நாம் பஜர் தொழுகையில் தொழாமல் இருந்தால் அன்றைய தினத்தில் சோம்போறிவுடையவனாக அடைகிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் உறங்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டுவிடுகிறான். ஒவ்வொரு முடிச்சின்போதும் “இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுக்க எஞ்சி) இருக்கிறது. ஆகவே, நீ உறங்கு’என்று கூறி (உங்களை விழிக்கவிடாமல் உறங்க வைத்து)விடுகிறான்.

நீங்கள் (அவனது கூற்றை ஏற்காமல்) கண்விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. நீங்கள் தொழுது விட்டால் முடிச்சுகள் முழுவதும் அவிழ்ந்துவிடுகிறது. நீங்கள் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் காலைப் பொழுதை அடைவீர்கள். இல்லையெனில் மனக்குழப்பத்துடனும், சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவீர்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் : புகாரி : 1142

காதில் சிறுநீர் விடுகிறான்

பஜருடைய பாங்கு சப்தத்தை கேட்கும் போது இன்னும் சிறிது நேரம் தூக்கலாம், இன்னும் சிறிது நேரம் தூக்கலாம் என்று ஷைத்தான் நமக்கு ஆசை வார்த்தைகளை நினைவு கூறும் போது அவன் ஓரே அடியாக தூக்கிவிடுகிறான். பஜர் தொழுகையை விட்டுவிடுகிறான். இப்படி ஆசை வார்த்தைக்கு கட்டுபடாமல் பாங்கு சப்தத்தை கேட்டவுடன் உடனே எழுந்தெரித்து பஜர் தொழுகையில் கலந்துக் கொள்ள வேண்டும்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் பொழுது விடியும் வரை (தொழுகைக்கு எழாமல்) உறங்கிக் கொண்டேயிருப்பது பற்றிக் கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “”அவரது காதில் ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்” என்று கூறினார்கள்.

நூல் : புகாரி : 1144

தொழுகையில் நிற்கும் போது

ஷைத்தான் தூக்கத்தின் மூலமாக நம்மை வழிக்கெடுக்க முயற்சிக்கும் போது அந்த செயலை நாம் முறியடித்து விட்டால் அவனுடைய முயற்சி வீணாகி விடுகிறது. பிறகு வேற வழிமுறைகளை கையாளுவான். அல்லாஹ்வின் அடியார்கள் தொழுகைக்கு வரும் போது தொழுகை முறியடிப்பதற்காக சில வழிமுறைகளை கடைபிடிப்பான். அடியார்கள் தொழுகைக்காக தக்பீர் கட்டும் போது பல சிந்தனைகளை நினைவு படுத்துவான்.

தொழுகையில் நிற்கும் போது இவரிடத்தில் இவ்வளவு ரூபாய் பணம் கொடுத்தேன் அதற்குறிய வட்டியை அவன் தருவானா இல்லையா என்று நினைத்து பார்ப்பான். ஆனால் தொழுகையில் கவனத்தை செலுத்தாமல் விட்டுவிடுகிறான். அல்லது நம்முடைய கடையில் வியபாரம் என்ன ஆகுமே என்று நினைத்து பார்ப்பான் இப்படி பல சிந்தனைகளை ஏற்படுத்தி நம்முடைய தொழுகையை வீணாக்க முயற்சி செய்வான். இப்படிப்பட்ட சிந்தனை நமக்கு வரும் போது உடனே சுதாரித்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமரிருப்பதற்காக ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடிவிடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பிவருகிறான்; இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான்.

இகாமத் முடிந்ததும் மீண்டும் வந்து தொழுபவரின் உள்ளத்தில் ஊடுருவி, “”இதை இதையெல்லாம் நினைத்துப்பார்” எனக் கூறி, அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டி அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை மறக்கடித்துவிடுகிறான். உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்கள் மூன்றா அல்லது நான்கா என்று தெரியாவிட்டால் (கடைசி) இருப்பில் இரண்டு சஜ்தாச் செய்துகொள்ளட்டும்.’’

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி : 1231

தொழுகையின் நடுவில் குறுக்கிடுதல்

தொழுகையில் இருக்கும் போது ஷைத்தான் பல சிந்தனைகளை ஏற்படுத்தும் போது அதனை நாம் முறியடித்தால் ஷைத்தானின் முயற்சி வீணாகி விடுகிறது. இந்த விஷயத்திலும் அவன் தோல்வியடையும் போது வேற வழிமுறைகளை கையாளுவான். நாம் தொழுகும் போது சிலர் குறுக்கே செல்வதின் மூலமாக நம்முடைய தொழுகை வீணாக்க முயற்சி செய்வான். குறுக்கே செல்லும் போது அவன் செல்ல விடாமல் அவர்களை தடுக்க வேண்டும், இப்படி செய்யும் போது அவனுடைய முயற்சிகள் வீணாகி விடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவன் தான் ஷைத்தான்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல் : புகாரி : 3274

தொழுகையில் திரும்பி பார்த்தல்

நமது தொழுகையில் திரும்பி பார்ப்பதின் மூலமாக நம்முடைய தொழுகையை வீணாக்குவதற்கு ஷைத்தான் சில வித்தைகளை கையாளுகிறான். நாம் தொழுதுக் கொண்டிருக்கும் போது நமக்கு முன்னால் சிலர் பேசிக்கொண்டும், விளையான்டு கொண்டும் இருப்பார்கள். அவர்களின் செயல்களை பார்ப்பதின் மூலமாக நம்முடைய தொழுகை வீணாகி விடுகிறது. நாம் தொழுவும் போது நமக்கு முன்னால் என்ன நடந்தாலும் அந்த செயல்களை கண்டுக்கொள்ளாமல் தொழ வேண்டும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் தொழுகையில் ஒருவர் திரும்பிப் பார்ப்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ”அது (திரும்பிப் பார்க்கும் அந்த நேரம்) உங்கள் தொழுகையிலிருந்து ஷைத்தான் திருட்டுத்தனமாகப் பறித்துக் கொள்வதாகும்” என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி : 3291

அல்லாஹ்வின் நினைவை மறக்க செய்வான்

தொழுகையில் அவனால் வழிகெடுக்க முடியவில்லையென்றால் தொழுகைக்கு வெளியே நல்ல அமல் செய்ய விடாமல் வழிகெடுக்க முயற்சிப்பான். தொழுகை முடித்த பிறகு சில திக்ருகளை ஓதும்மாறு கற்றுதந்துள்ளார்கள். ஆனால் நாம் தொழுகையை முடித்த பிறகு திக்ருகள் செய்யும் போது நம்மிடத்தில் சிலர் திக்ருகளை செய்ய விடாமல் பேசிக் கொண்டும், விளையாண்டு கொண்டும் இருப்பார்கள். ஏனென்றால் தொழுகைக்கு பின்னால் நாம் திக்ருகள் ஓதினால் நம்முடைய சிறிய பாவங்கள் கடல் நுறையளவு இருந்தாலும் அல்லாஹ் மன்னித்து விடுவான். அல்லாஹ் மனிதனை மன்னிப்பது ஷைத்தானுக்கு பிடிக்காமல் நல்ல அமல்களை செய்ய விடாமல் தடுப்பான். அந்த நேரத்தில் இந்த செயல் ஷைத்தானின் ஊசலாட்டம் என்று நினைத்து சுதாரித்துக் கொள்ள வேண்டும்.

மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?

அல்குர்ஆன் (5:91)

ஷைத்தான் அவர்களை மிகைத்து விட்டான். அல்லாஹ்வின் நினைவை அவர்களுக்கு மறக்கச் செய்தான். அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! ஷைத்தானின் கூட்டத்தினரே நஷ்டமடைந்தவர்கள்.

அல்குர்ஆன் (58: 19)

உபதேசத்தை கேட்பதை தடுப்பான்

நல்ல விஷயங்களை கேட்க விடாமல் நம்மை தடுப்பான். எத்தனையே ஊர்களில் இஸ்லாத்தை பற்றி அறிவதற்காக சில மார்க்க பிரசாரங்களை நடத்துகிறார்கள். பிரச்சாரத்தை கேட்காமல் சிலர் பேசிகொண்டு இருப்பார்கள். இப்படி உபதேசத்தை கேட்காமல் ஷைத்தான் அவர்களை தடுக்கிறான். அல்லது ஜீம்ஆ நாளில் இமாம் உரை நிகழ்த்தும் போது கையில் எதையாவது வைத்து விளையாண்டு கொண்டும், பிறரிடத்தில் பேசிக் கொண்டும் இருப்பார்கள்.

இவை அனைத்தும் ஷைத்தானின் வீர விளையாட்டுகளாகும். ஜீம்ஆவில் பேசாமல் இருந்தால் நம்முடைய சிறிய பாவங்கள் மன்னிக்கப்படும். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதை ஷைத்தான் விரும்ப மாட்டான். அதை நாம் முறியடித்தோம் என்றால் அவனுடைய முயற்சி வீணாகிவிடும். இமாம் ஜீம்ஆவில் உரை நிகழ்த்தும் போது நாம் யாரிடமும் பேசாமலும், விணான விளையாட்டில் ஈடுபடாமலும் இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஜுமுஆ நாளில் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிரிப்பவரிடம் நீ “மௌனமாக இரு!’ என்று கூறினாலும் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்.

அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி :934

அபூவாக்கித் (அல்ஹாரிஸ் பின் மாரிக் அல்லைஸீ(ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசரில் அமர்ந்துகொண்டிருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் (அலட்சியப்படுத்திவிட்டுச்) சென்றுவிட்டார். (பள்ளிக்குள் வந்த) அவ்விருவரும் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீற்றிருந்த அவை) முன்னால் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்த அவையில் ஒரு இடைவெளியைக் கண்ட போது அதில் அமர்ந்துகொண்டார்.

மற்றவரோ அவையினருக்குப் பின்னால் அமர்ந்துகொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பேச்சை) முடித்ததும் கூறினார்கள்:  இம்மூன்று பேர்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் (அருளின்) பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக் கொண்டான். மற்றவரோ வெட்கப்பட்டு(க்கொண்டு கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டுக்கொண்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றுவிட்டார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்திவிட்டான்.

நூல் : புகாரி : 66

பகைமையை ஏற்படுத்துவான்

நல்ல நண்பர்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்துவதற்காக பல முயற்சிகளை செய்வான். அதாவது நல்ல நண்பர்களுக்கு மத்தயில் ஒருவரோடு ஒருவரை மோதிவிட்டு வேடிக்கை பார்ப்பவன் தான் ஷைத்தான். ஏனென்றால் அல்லாஹ்வுக்காக ஒன்று சேர்ந்து அவனுக்காக பிரிந்த இரு நல்ல நண்பர்களை மறுமை நாளில் தன்னுடைய அர்ஷின் நிழலை தருகிறான். மறுமை நாளில் நிழல் கிடைக்க கூடாது என்பதற்காக இவ்வுலகத்தில் நல்ல நண்பர்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்தி, அல்லாஹ்வுக்காக நேசிக்க விடாமல் தடுத்து விடுகிறான்.

மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?

அல்குர்ஆன் (5:91)

(முஹம்மதே!) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.

அல்குர்ஆன் 17: 53

சுலைமான் பின் சுரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:  நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் (கோபத்தால்) சிவந்து விட்டது. அவருடைய தொண்டை நரம்பு புடைத்துக் கொண்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், “”எனக்கு ஒரு (பிரார்த் தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய் விடும்,

“ஷைத்தானிட மிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய் விடும்” என்று கூறினார்கள். ஆகவே, மக்கள் அந்த மனிதரிடம், “”நபி (ஸல்) அவர்கள், “ஷைத்தானிடமிருந்துஅல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரு’ என்று கூறினார்கள்” எனத் தெரிவித்தார்கள் அதற்கு அவர், “”எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டார்.

நூல் : புகாரி 3282

ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோருவது பைத்தியத்தைத் தெளியவைக்கத் தான் என்று தவறாக அவர் புரிந்து கொண்டதாலேயே இவ்வாறு கேட்டார். உண்மையில் கோபமும் ஷைத்தானின் தூண்டுதலாலேயே உண்டாகிறது. கோபத்திலிருந்து விடுபட, ஷைத்தானின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோர வேண்டும்.

தீய எண்ணத்தை ஏற்படுத்துவான்

ஸஃபிய்யா பின்த்து ஹுயை (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களிடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசி விட்டு திரும்பிச் செல்ல எழுந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னைத் திருப்பியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். உஸாமா பின் சைத் (ரலி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது (என அறிவிப்பாளர் கூறுகிறார்.)

அப்போது அன்சாரிகளில் இருவர் அந்த வழியாகச் சென்றார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், “”நிதானமாகச் செல்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான்” என்று சொன்னார்கள். இதைக் கேட்ட அவ்விருவரும், “”அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்?)” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “”ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான் …அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான்… என்று நான் அஞ்சினேன்” என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி : 3281

நபி ஸல் அவர்கள் யாரோ அன்னியப் பெண்ணைச் சந்திக்கிறார்கள் என்ற சந்தகேத்தை ஷைத்தான் உங்கள் உள்ளங்களில் ஏற்படுத்தி விடக் கூடாதே என்பதற்காகவே நான் அப்படிக் கூறினேன் என்று நபி ஸல் அவர்கள் விளக்கினார்கள்.

கொட்டாவி

கொட்டாவி என்னும் நெட்டுயிர்ப்பு சோம்பலக்கும் களைப்புக்கும் அடையாளமாகும். இப்படி மனிதன் உற்சாகம் குன்றி விடும் போது நல்ல காரியங்கள் பல தடைபடும். அளவுக்கு அதிகமாக உண்பது பருகுவதாலேயே இந்த தேக்க நிலை உருவாகிறது. எனவே இது ஷைத்தானின் தூண்டுதலால் நேரும் சோதனையாகும். அதிலும் அடக்கமின்றி ஹா என்று நெட்டுயிர்ப்பு போது மனிதன் தன் வலையில் சிக்கிவிட்டான் என ஆனந்தத்தில் சிரித்து மகிழ்கின்றான். எனவே கொட்டாவியை இயன்றவரை அடக்கிவிட வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவி விட்டால் தம்மால் முடிந்த வரை அவர் அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் “ஹா’ என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கின்றான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி : 3289

வறுமையை காட்டுகிறான், வெட்கக் கேடானதை தூண்டுவான்

நம்மிடத்தில் அதிகமான செல்வங்கள் இருந்து அதனை தர்மம் செய்யும் போது நாம் ஏழையாகிவிடுவோம் என்று ஷைத்தான் நமக்கு பயமுறுத்துவான். அந்த நேரத்தில் இந்த எண்ணத்தை ஷைத்தான் தான் ஏற்படுத்துகிறான் என்று எண்ணவேண்டும்.
இன்னும் வெட்ககோடான தீய எண்ணத்தையும் நமது உள்ளத்தில் ஏற்படுத்துவான். அரைகுறை ஆடையை உடுத்த வேண்டும் என்று ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்துவான்.

ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் (2:268)

இரவு நேரத்தில் ஷைத்தான் பரவுகிறான்

பகல் வெளிச்சம் முடிந்து இரவின் இருட்டு படரத் தொடங்கும் போது ஷைத்தான்களின் நடமாட்டம் அதிமகாகும். பரபரப்பாக அவர்கள் இயங்கத் தொடங்குவர். இந்த நேரத்தில் ஷைத்தான்களின் தீங்குகளிலிருந்து பாதுகாப்புத் தேடப் பயன்படுகின்ற குர்ஆன் வசனங்கள், மற்றும் துஆக்கள் வேண்டுதல்களை அறிந்தராத சிறுவர்கள் வெளியே திரிந்து கொண்டிருந்தால் ஷைத்தான்களால் அவர்களுக்குத் தீங்கு நேரலாம். அவரவர் போக வேண்டிய இடங்களுக்கு ஷைத்தான்கள் போய்ச் சேர்ந்த பிறகு அதாவது இரவில் சிறிது நேரம் கழிந்த பிறகு இந்த ஆபத்து நீங்கி விடும் என்பதால் அப்போது குழந்தைகளை வெளியே விடுவதால் பிரச்சினை இல்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “”இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் உங்கள் குழந்தைகளை (வெளியே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும்) பரவி விடுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (வெளியே செல்ல) விட்டு விடுங்கள்.

மேலும், (இரவு நேரத்தில்) உன் கதவை மூடிவிடு. (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல். (உறங்கச் செல்கையில்) உனது விளக்கை அணைத்து விடு.(அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் தண்ணீர்ப் பையைச் சுருக்கிட்டு மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உனது பாத்திரத்தை மூடி வை. (அதை முழுவதும் மூட இயலா விட்டாலும்) அதன் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்.

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நூல் : புகாரி 3280

கெட்ட கணவு

ஷைத்தான் பகலில் வழிகெடுப்பதை போன்று இரவிலும் வழிகெடுக்கிறான். பகலில் மனிதன் அதிகமான நன்மைகளை செய்கிறான். ஆனால் இரவில் அதிக நன்மை செய்யாமல் உரங்குகிறான். அந்த நேரத்திலும் அவர்களை வழிகெடுக்க வேண்டும் என்று ஷைத்தான் நினைக்கிறான். தூக்கும் போது நம்மை பயம் முறுத்தும் அளவுக்கு கெட்ட கணவை ஏற்படுத்துவான். இரவில் ஷைத்தானின் ஊதசலாதட்தை ஏற்படுத்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேட வேண்டும். தனது வலது புறத்தில் எச்சில் துப்ப வேண்டும்.

நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (அச்சுறுத்தும்) கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவனவாகும். உங்களில் எவரேனும் அச்சுறுத்தும் தீய கனவைக் கண்டால் அவர் தன் இடப் பக்கத்தில் எச்சில் துப்பட்டும்; அல்லாஹ் விடம் அக்கனவின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோரட்டும். ஏனெனில், (இப்படிச் செய்தால்) அது அவருக்குத் தீங்கு செய்ய முடியாது.

இதை கதாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 3292

இறையச்சமுடையவர்கள் சுதாரித்து கொள்வார்கள்

ஷைத்தானின் நம்முடைய நன்மைகளை அழிப்பதற்காக பல வழிகளை கையாலுவான். மனித இனத்தையே நரகத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று கங்கடம் கண்டிக் கொண்டு இருக்கிறான். ஆனால் மனித இனத்தின் அனைவரையும் வழிகெடுக்க முயற்சிக்கும் போது நல்லயடியார்கள் சுதாரித்துக்கொள்ளவார்கள். இந்த தீயச் செயல் ஷைத்தானின் ஏற்பாடாகும். இவைகளை விட்டு தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

(இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது அவர்கள் விழித்துக் கொள்வார்கள்.

அல்குர்ஆன் (7:201)

ஊசலாட்டம்

ஷைத்தான் இது போன்ற தீய காரியங்களை ஏற்படுத்தி தீமையை செய்யுமாறு நமக்கு ஏவுகிறான். நம்முடைய உள்ளத்தில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துவான். ஷைத்தான் ஊசலாட்டத்தை ஏற்படுத்தும் போது அந்தசெயல்களை நம்முடைய வாழ்க்கையில் கொண்டு வராத வரை அல்லாஹ் நம்மை தண்டிக்க மாட்டான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உம்மத்தினரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதன் படி செயல்படாதவரை அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாதவரை எனக்காக அல்லாஹ் மன்னித்து விட்டான்.

இதை அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல் : புகாரி : 2528

பாதுகாப்பு வழிமுறை

பகல் நேரத்தில் அதிகமான நன்மைகளை செய்கிறான். அதிகமான நன்மைகளை செய்வதை ஷைத்தான் விரும்ப மாட்டான். பகல் நேரத்தில் ஷைத்தானின் தீண்டல் அதிகமாக இருக்கும். அதனால் காலையிலிருந்து மாலைவரை ஷைத்தான் நம்மை தீண்டாமல் இருக்க வேண்டுமென்றால் நபி ஸல் அவர்கள் சிறிய துஆக்களை கற்றுத்தத்துள்ளார்கள். அந்த துஆவை நாம் ஒதினால் காலையிருந்து மாலை வரை ஷைத்தான் நம்மை தீண்டமுடியாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “”வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன்  லா இலாஹ இல்லல் லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல்- ஷய்இன் கதீர் என்று எவர் ஒரு நாளில் நூறு முறை சொல்கிறாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் பெற்றுக் கொடுப் பதா)கும்.

மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரது கணக்கி -ருந்து (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும், அவருடைய அந்த நாளில் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக அது அவருக்கிருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது; ஒருவர் இதை விட அதிகமான (தடவைகள் இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர.

அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி : 3293

பகல் நேரத்தில் ஷைத்தானின் தீண்டல் இருப்பதைப் போன்று இரவில் நேரத்திலும் ஷைத்தான் தீண்டுவான். இரவில் தூங்கும் போது ஷைத்தான் கெட்ட கணவை ஏற்படுத்தி பயமுறுத்துகிறான். இரவு நேரத்திலும் ஷைத்தானின் தீண்டல் இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் நபி ஸல் அவர்கள் சில ஆயத்துகளை கற்றுத்துள்ளார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ரமளானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே, நான் அவனைப் பிடித்துக் கொண்டேன்; “”உன்னை அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்” என்று கூறினேன்.

(அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சி யையும் விபரமாகச் சொல்கிறார்.) இறுதியில் அவன், “”நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள்.(அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்” என்று என்னிடம் சொன்னான். (இதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்ன போது,) “”அவன் பொய்யனாயிருந்தும், உங்களிடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான் தான்” என்று கூறினார்கள்.

நூல் : புகாரி : 3275

ஷைத்தானின் தீண்டலிருந்து நம்மை பாதுகாத்து மறுமையில் அனைவரும் வெற்றி பெற வேண்டும்.

பெண்கள் வெளியில் செல்லும் போது பேண வேண்டிய ஒழுங்குமுறைகள்

பெண்களுக்கான

நபிவழி சட்டங்கள்

பெண்கள் வெளியில் செல்லும் போது பேண வேண்டிய ஒழுங்குமுறைகள்

தேவைகளுக்காகப் பெண்கள் வெளியில் சென்றாலும் மார்க்கம் போதிக்கிற ஒழுங்கு முறைகளைப் பேணித்தான் செல்ல முடியும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதைப் பற்றி நபியவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள். ஆடையணிந்தும் நிர்வாணமாக இருக்கும் பெண்களைப் பற்றி நபியவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். இதைப் பல வகையில் இன்று பார்க்கிறோம். இருப்பினும் இதை மூன்றாகப் பிரித்து விளங்கலாம்.

மெல்லிய ஆடைகள், அதாவது உடல் முழுவதும் மறைத்து இருந்தாலும் காட்சியாக்கப்படும் நிலையில் உள்ள ஆடைகள், அரைகுறையாக மறைப்பது, அதாவது முன் கை, முகம், கால் பாதம் தவிர மறைய வேண்டிய மற்ற பகுதிகளில் சிலதை மறைத்து சிலதை வெளியில் தெரிகிற மாதிரி அணிகின்ற சேலை, குட்டைப் பாவாடை போன்ற ஆடைகள், இறுக்கமான ஆடைகளை அணிவது, அதாவது உடல் முழுவதும் கணத்த துணியால் மூடினாலும் இறுக்கமாக இருக்கும் பட்சத்தில் உடல் உறுப்புக்கள் தெரியும் அளவில் அணியப்படுகிற ஆடைகள். இவைகள் அனைத்தும் அந்நிய ஆண்களை ஈர்க்க்கும் தடைசெய்யப்பட்ட ஆடை முறைகளாகும்.

அதே போன்று வெளியில் செல்லும் போது பெண்களின் நடை பிறரை ஈர்க்கின்ற வகையில் இருக்கவே கூடாது. பிறரை ஈர்க்கும் வகையில் சாய்ந்து நெழிந்து நடப்பது தவறானது. அதனைத் தமிழில் தளுக்கி, மினுக்கி நடப்பது என்பார்கள். இதுபோன்ற நிலையில் பெண்கள் வெளியில் செல்வது கூடாது. இவற்றையெல்லாம் நபியவர்கள் கண்டிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: 

இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அவ்விரு பிரிவினரை நான் பார்த்ததில்லை. (முதலாம் பிரிவினர்) பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக் கொண்டு மக்களை அடி(த்து இம்சி)க்கும் கூட்டத்தார்.

(இரண்டாம் பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்தபடி (தளுக்கி குலுக்கி கர்வத்துடன்) நடந்து (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தம் பக்கம் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களின் தலை (முடி) சரிந்து நடக்கக்கூடிய கழுத்து நீண்ட ஒட்டகத்தைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) அதன் வாடையைக்கூட நுகரமாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு தொலைவிலிருந்து வீசிக் கொண்டிருக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5487

அதே போன்று வெளியில் செல்லும் போது பெண்களின் பேச்சுக்கள் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்பது போன்று இருக்க வேண்டும். பேச்சில் ஒரு மிரட்டல் தொணி இருக்க வேண்டும். கொஞ்சல், குழைவுத் தன்மை இருக்கவே கூடாது. பேச்சில் இழுவை இருக்கக் கூடாது. ஒரு பெண்ணின் பேச்சை பிற அந்நிய ஆண்கள் வெறுக்கத்தக்க வகையில் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ரசிக்கத்தக்க வகையில் இல்லாதிருக்க வேண்டும்.

நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்

(அல்குர்ஆன் 33:32)

ஏகத்துவம்.

பெண் குழந்தைகளை வெறுக்கக்கூடாது.

பெண்களுக்கான

நபிவழி சட்டங்கள்

பெண் குழந்தைகளை வெறுக்கக்கூடாது.

பொதுவாக பெண் குழந்தை பிறப்பதை அதிகமானவர்கள் வெறுக்கிறார்கள். சில ஊர்களில் பெண் குழந்தைகளை பிறந்த உடனே கொலை செய்துவிடுகிறார்கள். இறைவன் கொடுத்தது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வது தான் இறைநம்பிக்கையாளரின் பண்பு. இறைநிராகரிப்பாளர்கள் தான் பெண் குழந்தைகளை இழிவாகக் கருதிவந்தார்கள்.

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப்பட்டவனாக ஆகிவிடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.

அல்குர்ஆன் (16 : 58)

பெண் குழந்தைகளை கொலை செய்தவர்களுக்கு எதிரான சாட்சியாக மறுமை நாளில் அக்குழந்தைகள் இறைவனிடம் முறையிடும்.

என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது,

அல்குர்ஆன் (81 : 8)

பெண் குழந்தைகளை பெற்றவர்கள் பின்வரும் ஹதீஸ்களை மனதில் நிறுத்திக்கொண்டால் பெண் குழந்தையை பெற்றதற்காக ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும்வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்”என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : முஸ்லிம் (5127)

ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், “”இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்’‘ எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (1418)

“யார் இந்தப் பெண் குழந்தைகளில் ஒன்றுக்குப் பொறுப்பேற்று நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள்’‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (5995)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கு பருவமடையாத மூன்று குழந்தைகள் மரணித்துவிட்டால் அவர் அக்குழந்தைகளின் மீது காட்டிய இரக்கத்தின் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்.’
அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி 1381

ஏகத்துவம்.